என்னும் எத்தனை வலிகளைத்தான் நான் தாங்க வேண்டும்? அந்த கேவலமானவனுக்கு மகனாகப் பிறந்த பாவமா இது? என்று மனதோடு வலியால் துடித்தவன் கண்கள் கலங்கி அவன் அப்படியே நின்றுவிட, த்ரூவின் நெற்றி உடைந்து ரத்தம் கசியத் தொடங்கியது.

அதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த அனைவரும் பார்த்து பயந்து போய் இருவரையும் விலக்கி நிற்க வைக்க முயல, அதில் மதியின் கோபம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

திமிர்க்கொண்டு நின்றவனைத் தடுக்க இயலாது, பல மாணவர்கள் ஒன்னாறாகச் சேர்ந்து அவனைத் தள்ளி நிற்க வைக்க, அதில் கீழே தடுமாறி விழுந்த மதியின் கையிலிருந்தும் ரத்தம் கசியத் தொடங்கியது.

கையில் சுருக்கென்று தைத்த வலியில் ஒரு நிமிடம் அமைதியான மதி, கையைத் தூக்கிப் பார்க்க, உள்ளங்கையில் ஏதோ பாட்டில் கிழிந்து அதில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

அந்த ரத்தத்தைப் பார்த்தவன் நிமிர்ந்து த்ரூவை பார்க்க, அவன் தலையிலிருந்து ரத்தம் வழிந்து அவன் கண்ணீரில் கலந்து வடிந்து கொண்டிருந்தது.

வினோ மதி கண்டுபிடித் திடுவானோ என்று பயத்தில் சிறிது அளவே போதையை கலந்து வைத்திருந்தான். அதையும் மதி முழுதாக பிடிக்காத தால் அவன் போதை சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருந்தது.

த்ரூவ் ரத்தம் வடிய அசையாது இவனையே முகம் கசங்கப் பார்த்து கொண்டிருந்தான்; அவன் பார்வை மதியை உலுக்க

இப்படி ஒரு நிலையில் த்ரூவை இது வரை அவன் கண்டிருக்கவில்லை.

அவனைப் பார்க்க பார்க்க தலை வெடிப்பது போல இருக்க சிறிது நிலையாக யோசிக்க தொடங்கி இருந்தான்.

அவன் செய்வது அவனுக்கே ஏதோ ஒன்று தவறாகத் தோன்ற, தலையை உலுக்கி தெளிவாகத் யோசிக்க முயன்றான்

சுற்றிப் பார்த்து அருகில் இருந்த டேபிளில் இருந்த தண்ணீரைத் தலையில் ஊற்றத்

அவ்வாறு செய்தும் அவனால் தெளிவாக யோசிக்க முடியாமல் போக,

அருகில் இருந்த ஜூஸ் பாட்டில் ஒன்று கண்ணில் பட, அதை எடுத்து ஒரே மடக்கில் கீழே பாதி வாயில் மீதி என்று ஊற்றி குடித்து முடித்தான்.

அப்போதுதான் ஓரளவு மூளை வேலை செய்வது போல நன்றாக இருந்தது. அதன் பின் நடந்த அனைத்தையும் யோசித்து பார்த்தான்.

“நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டுப் பேசினேன், எனக்கு என்ன ஆச்சு?” என்று யோசித்தவனுக்கு தலைவலி அதிகமாக, தலையைப் பிடித்தபடி நிமிர்ந்து பார்த்தான்.

த்ரூவ் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். முகம் கசங்கி கண்கள் கலங்கி நின்றவனைப் பார்த்து மனம் வலிக்க, எழுந்து அவன் இடம் மதி செல்லப் போக,

“பிரனாவ் பிரனாவ்… உன்னை வார்டன் வரச் சொன்னாங்க, உங்க வீட்டுல யாருக்கோ உடம்பு சரியில்லையாம்!”

மூச்சு வாங்க ஓடி வந்த சரண் ஓடி வந்து சொன்னதை கேட்ட த்ரூவ், “ம்மா…” என்று பயந்தவனாக ஆஸ்டலை நோக்கி ஓடினான்.

அவன் பதட்டத்தைப் பார்த்த மதி அவன் பின்னாலேயே சென்றான்.

ரத்தம் வழிய வந்து நின்றவனைப் பார்த்த வார்டன், “பிரனாவ், வாட் இஸ் திஸ் பிளட்….. வருதுடா என்ன ஆச்சி ? இப்படி ஓடி வந்திருக்க?”

என்று அவர் பேசியது எதுவும் அவன் காதில் விழவில்லை. “சார், வீட்டுல யாருக்கு என்னாச்சுன்னு சரத் வந்து சொன்னான்.”

“அது உங்க தாத்தாவுக்கு ஷார்ட் அட்டாக்னு ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம், உன்னை உடனே வரச் சொன்னாங்க.”

அம்மாவுக்கு ஒன்றும் இல்லை என்று சந்தோஷப்படவா, இல்லை அம்மாவுக்குப் பாதுகாப்பாக இருந்த தாத்தாவுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று கலங்குவதா என்று புரியாத நிலையில்

அவன் அறை சென்று துரித கதியில் ஊருக்கு கிளம்பினான்.

த்ரூவ் பின்னாடியே வந்த மதி, வார்டன் சொன்னதை கேட்டவன் அவரிடம் சென்று, “சார், நானும் அவன் கூட கிளம்புறேன் சார்,” என்று சொல்லிவிட்டு அவனுடன் காரில் சென்றான்.

நேராக காரில் விமான நிலையம் சென்று கோண்டிருக்க செல்லும் வழியில் மதி புறமே திரும்பாமல் கல் போல அமர்ந்து வந்தவனைப் பார்க்க பயமாக இருந்தாளும்

மதி எச்சிலை கூட்டி விழுங்கியவனாக, அவன் கையோடு எடுத்து வந்த முதல் உதவிப் பெட்டியில் இருந்த பஞ்சை வைத்து அவன் முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்தான்.

வழியில் கத்துவான், தள்ளிவிடுவான், திட்டுவான் என்று எதிர்பார்த்த மதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது; நீ என்ன வேண்டுமோ செய்துகொள் என்பது போலத்தான் அமர்ந்திருந்தான் த்ரூவ்.

“பெரிய தப்பு பண்ணிட்டன் போலயே,” என்று காற்றை இழுத்து வாய் வழியே விட்டவன், த்ரூவின் காயத்தைச் சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டினான்.

அதன் பின் அவனுக்கும் கையில் மருந்து வைத்து கட்டியவன் அதன் பின் எதுவும் பேசவில்லை. பின் இருவருமாக இணைந்து திருச்சி மருத்துவமனைக்குச் சென்றனர்.

ஆனால் இவர்கள் அங்கு செல்வதற்கு முன் உயிரை விட்டிருந்தார் த்ருவின் தாத்தா.

அங்கு த்ருவின் தாத்தாவின் அறையைத் தேடி இருவரும் அங்கே சென்றிருந்த நேரத்தில், அமுதா த்ருவின் அம்மா அந்த அறையில் கீழே விழுந்து…

“உங்களை நம்பி வந்த என்ன இப்படித் தனியா இந்த நரகத்துல விட்டுட்டுப் போயிட்டீங்களே… மாமா….

நான் தனியா என்ன மாமா பண்ணுவேன்? என் பையன், அவன் வாழ்க்கை என்ன ஆகும்? நான் என்ன பண்ணத் தெரியலையே…” என்று அழுதவரைப் பார்க்க மதிக்கே ஒரு மாதிரி தான் இருந்தது.

அமுதாவையும் தாத்தாவையும் மாற்றி மாற்றிப் பார்த்த த்ரூவ், சமாதானம் படுத்த அவன் அம்மா அருகே பயந்து பயந்து தான் சென்றான்.

மூன்று வருடமாகிறது; அவன் அம்மாவைப் பார்த்துப் பேசி இந்த பிரிவில் ஆவது தன்னைப்பற்றி யோசித்திருப்பாரா? அதுவும் இன்றி அழும் போது ‘என் பையன் தனியா என்ன பண்ணுவான்’ என்று அவர் அழுதது வேறு சற்று தைரியம் தந்திருக்க…

“அம்மா…” என்று அழைத்துகொண்டே அவர் கையைத் தான் பிடித்திருந்தான்.

“அ… கிட்ட வராத, என் கிட்ட வராத, என்ன விட்டுடு…” என்று த்ருவை பார்த்துப் பயந்தவர் கத்தியபடி பின்னோக்கிச் சென்று, செவிறோடு செவிறாக ஒடுங்கி, அவர் தொடையில் முகம் புதைத்து கத்திக்கொண்டே இருக்க,

த்ரூவ் அதில் பயந்து “நா… வரல ம்மா… நா வரல… பயப்படாதீங்க… நான் கிட்ட வரலமா” என்று அந்த அறையை விட்டே சென்றுவிட்டான்.

அமுதா கத்துவதை பார்த்துப் பயந்து போன மதி அருகில் சென்று ஒரு நர்ஸை அழைத்துக்கொண்டு வர,

அவர் சென்று ஒரு ஊசியை எடுத்து வந்து அவருக்குப் போட்டுவிட்டு “கொஞ்சம் நேரத்துல சரி ஆகிடுவாங்க” என்று விட்டுச் சென்றுவிட்டார்.

“ என்ன இவுங்க பாட்டுக்கு வந்து ஊசி போட்டிட்டு போய்டாங்க அப்போ இவுங்க எப்பவும் இப்படி தான் இருப்பாங்களா ?”

என்று யோசித்து கோண்டிருக்கும் போதே அவர் கத்தல் நின்று அமைதியாகி விட

வெளியே சென்ற த்ரூவ், தலையில் கட்டு போட்டுக்கொண்டு மீண்டும் வந்தவன் முகம் சிவந்து இறுகிப் போய் இருந்தது.

அவன் அழுதிருப்பது தெழிவாக மதிக்குத் தெரிய, அவன் அருகே சென்று அவன் கையைப்பிடித்துக் கொண்டான் ஆறுதலாக.

மதி கையைப்பிடித்த அடுத்த நிமிடம், அந்த கையை உதறிவிட்டவன் பார்வையாலயே அவனைத் தள்ளி நிறுத்திவிட்டான்.

இனி யாரும் எனக்கு வேண்டாம் என்று நினைத்துவிட்டான் போல; அம்மா, நண்பன் பாசம் என்று அனைத்தையும் கலட்டி ஓரமாக வைத்தவன் அவன் கடமையைச் செய்யத் தயாரானான்.

தாத்தாவுக்கு ஒரு நல்ல பேரனாக சடங்குகளை முடித்தவன், தூரத்தில் இருந்து தன் அன்னைக்குக் காவலனாக இன்று வரை நிற்கின்றான்.

தாத்தா பார்த்துக்கொண்டிருந்த ஹோம் அப்பலயன்ஸ் பிஸினஸை கையில் எடுத்தவன், அதைத் தமிழ்நாடு தாண்டிப் பெரிய அளவில் கொண்டு சென்றான்.

அதன் பின் அந்த ஒரு பிஸினஸுடன் மட்டும் நிறுத்தாமல், அதனுடன் அவன் அம்மா பெயரில் பல பிஸினஸ் என்று இப்போது தமிழ்நாட்டின் அடையாளமாக தனியாக இந்த நிலைக்கு வந்திருக்கிறான்.

அன்று தாத்தா இறுதிச் சடங்கு அன்று மதியைப் பார்த்தவன் தான்; அதன் பின் பல முறை பார்க்க வந்தவனைத் திருப்பி அனுப்பிவிட்டான்.

அடுத்து மேல் படிப்புக்காக அவனைத் தனியாக லண்டன் அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டான். பின் என்ன ஆனது என்று எதுவும் தெரியவில்லை; ஐந்து வருடம் முன் மீண்டும் இங்கு வந்தவன் இவனுக்குப் போட்டியாகப் பல பிரச்சனை செய்து கொண்டிருக்கிறான்.

அதுவும் அந்த வினோ அவனோடு சேர்ந்து, அந்த ஐந்து வருடம் எங்கே சென்றான், என்ன ஆனான் என்று எதுவும் இப்போது வரை இவனுக்குத் தெரியாது.

மதியை பற்றி நினைத்தவன் கை தானாக நெற்றியில் இருந்த அந்த வடுவை வருட.

“என்னடா மதி பண்ணிட்டு இருக்க? நீ போற போக்கே சரியில்லையே….” என்று இவன் புலம்பும் அதே நேரம்

மதி இங்கு அவன் அப்பார்ட்மெண்டில், அவன் கையில் இருந்த வடுவைப் பார்த்தபடி,

“நீ எப்பவுமே எனக்குப் புரியாத புதிர் தாண்டா….” என்று பெருமூச்சு ஒன்றை விட்டவன், தலையைத் கொதியபடி, கலுத்துத் தடவ, அங்கே அவன் போட்டிருந்த செயின் ‘என்னை மறந்திட்டியா?’ என்பது போல கையில் படவும்,

அதில் தொங்கிக் கொண்டிருந்த மோதிரத்தை எடுத்துப் பார்த்தவன், கண்களை இறுக மூடி,

“நீ எங்கடி இருக்க…. ஏன் தான் நீங்க ரெண்டு பேரும் இப்படி என்ன வச்சு செய்றீங்களோ….” என்று தொப் என்று படுக்கையில் விழுந்தவனுக்குத் தூக்கம் வந்தாள் தானே. அது தான் தள்ளி நின்று இவனை பார்த்து நக்கலாக சிரித்து

“நீ பார்த்து வச்சிருக்க வேலைகளுக்கு இது இல்லை என்னும் நிறையக் க்யூல (queue) வெயிடிங்ல இருக்கு டி, அதெல்லாம் பார்க்காம நான் எப்படி உன் கிட்ட வருவேன்?”