Advertisement

ஆராதனை 1 ~ குட்டி டீசர் 

திருநெல்வேலி மாவட்டத்தின் அந்த புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியின் வளாகத்தினுள் செவிப்பொறி மூலம் கைபேசியில் பாடல்களை ரசித்து கேட்டபடி வேடிக்கை பார்த்தபடி விகிர்தன் மரத்தடி திண்டில் அமர்ந்திருந்தான்.

விகிர்தனை மேலும் கீழும் பார்த்த மாணவன், “புதுசா? எந்த டிப்பார்ட்மென்ட்?” என்று மிரட்டலாக கேட்க.

விகிர்தன் புன்னகையுடன், “புதுசுனு தான் நினைக்கிறேன்” என்றான்.

“டேய் என்னடா ராங்காவே பேசுற?”

———————————————————

ரஞ்சினியின் கையை பற்றிய அவளது தோழி பார்வையை சுழற்றியபடி, “ஓகே.. ஓகே.. ரிலாக்ஸ் ரஞ்சி” என்றாள்.

ரஞ்சினி, “அவனே வந்து கெஞ்சினாலும் இனி அவன் எனக்கு வேண்டாம்.. ஆனா அவனை சும்மா விட மாட்டேன்.. அந்த முசுட்டு முசோலினியையும் தான்..” என்றாள்.

———————————————————

“சாரி மச்சி.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றபடி விகிர்தனின் நண்பன் ஸ்ரீனிவாஸ் வந்தான்.

ஒரு பக்க செவிப்பொறியை மட்டும் கழற்றியபடி, “நீ சீக்கிரம் வந்தால் தான் அதிசயம்” என்றபடி விகிர்தன் எழ, இருவரும் அவ்விடத்தை விட்டு கிளம்பினர்.

“அது சரி.. அப்படி என்ன பாட்டு கேட்டுட்டு இருக்கிற?” என்று கேட்டபடி திருப்பத்தில் திரும்பிய ஸ்ரீனிவாஸ் எதிரில் வந்த நபரை இடிக்காமல் இருக்க விகிர்தனை இடித்து நின்றான். அவன் இடித்த வேகத்தில் விகிர்தன் கையில் இருந்த கைபேசி கீழே விழ, செவிப்பொறியின் இணைப்பு அறுந்து பாடல் ஒலிபரப்பி மூலம் வெளியே கேட்டது.

“நீ கட்டும் சேல மடிப்பில நா
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி” என்று பாடிய கைபேசியை எடுத்து பாட்டை அணைத்தபடி நிமிர்ந்த விகிர்தன் தன்னை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்த பெண்ணை குறும்பு புன்னகையுடன் பார்த்து,
“அடியே சூடான மழையே
கொடைக்குள் நனைஞ்சுக்கலாமா” என்று மெல்லிய குரலில் பாடினான்.

அந்த பெண் இன்னும் அதிகமாக முறைக்க, “அடேய்!” என்று அலறிய ஸ்ரீனிவாஸ் அந்த பெண்ணைப் பார்த்து, “சாரி.. அவன் உங்களைப் பார்த்து பாடலை” என்று சொல்லி முடிப்பதற்குள்,

விகிர்தன் அந்த பெண்ணைப் பார்த்தபடியே, “இல்லை மச்சி.. என்னோட செல் இவங்களைப் பார்த்து பாடலை ஆனா நான் இவங்களைப் பார்த்து தான் பாடினேன்” என்றான்.

————————————————–

“ஆமா புஷ்பா புருஷா, அந்த கண்ணகியைப் பார்த்து எதுக்கு இவ்ளோ டென்ஷன்?” என்று கேட்டான்.

பதற்றத்துடன் சுற்றிப் பார்த்த ஸ்ரீனிவாஸ், “அடேய்! எதுக்குடா இப்போ இப்படி சொன்ன?” என்று மெல்லிய குரலில் அலறினான்.

“சீனிக்கு இன்னொரு பேரு சர்க்கரை தானே மச்சி” என்று கேட்டு கண்சிமிட்டினான்.

கையெடுத்து கும்பிட்டபடி, “ப்ளீஸ் மச்சி.. காலேஜ் வெளியே வேணா அந்த பெயரைச் சொல்லி கூப்பிடு” என்று அழுதுவிடும் குரலில் கெஞ்சினான். 

“முயற்சி செய்றேன்” என்றவன், “ஆமா அந்த காந்தக் கண்ணழகி பேரு என்ன?” என்று கேட்டான்.

“ஆரவி.. நம்ம டிப்பார்ட்மென்ட் தான்.. உன்னோட வாலுதனத்தை அங்க காட்டாம இருந்தா உனக்கு புண்ணியமா போகும்” 

“எனக்கு புண்ணியம் எல்லாம் வேணாம்”

Advertisement