Advertisement

அத்தியாயம் -16(2)

“ஏன் அமரா இப்படி நடக்கிற? ஆராகிட்ட கொஞ்சம் ஹார்ஷாதான் பேசிட்ட நீ” என்றார் சாரங்கன்.

“மனசுல எதுவும் வச்சுகிட்டு நான் பேசுறது இல்லை. அது அவளுக்கும் தெரியும். நாம கண்டிக்கும் போது அவனை காப்பாத்துறாளா அவ? ஒண்ணு அங்கேயே அவங்ககிட்ட பேசியிருக்கணும். இல்லை நாம அவனை கேட்கும் போது விட்ருக்கணும். அவ மாறணும்னா இப்படி கண்டிப்பா பேசணும்தான். என்னை அவ தப்பா எல்லாம் எடுக்க மாட்டா. நீங்க கண்டுக்காதீங்க” என சொல்ல அதற்கு மேல் ஏன் சாரங்கன் வாய் திறக்க போகிறார்.

ஆராவின் அறைக்கு அபு வரும் போது அவன் கண்ட காட்சி அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. புடவையை முழுவதும் கலைந்தவளுக்கு காலையில் அபு புடவையில் பின் செய்திருந்ததை மட்டும் கழட்ட முடியவில்லை. இவனை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“இனிமே இப்படி செய்ய மாட்டேன்னு சொல்ல மாட்டேன், அப்படி செய்யாத அளவுக்கு நீதான் நடத்துக்கணும். சின்ன விஷயத்தை கூட ஹேண்டில் பண்ண முடியலைன்னா என்ன அர்த்தம்? ஆப்போசிட்ல உள்ளவங்களுக்கு சரியான பதில் கொடுக்க கத்துக்க” என சொல்லிக் கொண்டே பின்னை கழட்டி விட்டான்.

அவள் அமைதியாக இருக்க, “நான் போனா அப்படியே போய்டுவேன்னு நினைச்சியா? எப்படி நினைக்கலாம் நீ ன்னு கேட்டு நானும் சண்டை போடவா?” எனக் கேட்டான்.

“சரி போ” என்றாள்.

இன்னும் முழுதும் அவள் சமாதானம் ஆகவில்லை என புரிந்தவன் கதவை அடைத்து விட்டு வந்து அவளை அணைத்துக் கொண்டு, “சாரி” என்றான்.

அவனது அணைப்பிற்குள் இருந்தவள் நெளிய, “என்னடி?” எனக் கேட்டான்.

“என்ன செய்ற நீ? விடு அபூ” என சொன்னவளின் குரல் பேதமாக இருந்தது.

“ஒண்ணும் செய்யல நான், ஜஸ்ட் ஹக்தான் பண்ணியிருக்கேன்” என்றவன் தங்கள் இருவரையும் ஆராய எப்போதும் போலான சாதாரண அணைப்புதான்.

“என்னடி?” என மீண்டும் அவன் கேட்க அவளோ முறைத்தாள்.

அவளது புடவை அவளிடமிருந்து எப்போதோ அகன்றிருந்தது. “தள்ளுடா…” என்றவள் அவனை தன்னிடமிருந்து விலக்க முயல, இன்னும் இறுக அணைத்துக் கொண்டவன், “ஏன் பிடிக்கலையா உனக்கு?” எனக் கேட்டான்.

அவள் எதுவும் சொல்லாமல் அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க, “விட முடியலை ஆரா உன்னை. விடணுமா?” எனக் கேட்டான்.

அபுவை அவளாலும் விலக்க முடியவில்லை. ஆனால் வெளிச்சம் நிறைந்த பகல் பொழுது கூச்சத்தை கொடுத்தது. இரண்டும் கெட்டான் மன நிலையில் இருந்தவள் “இது பகல் அபூ” என எதிர்பார்ப்பும் பயமும் வெட்கமும் கலந்த குரலில் மென்மையாக சொன்னாள்.

ஆராவின் அகத்தின் அழகு முகத்தில் அப்படியே தெரிந்தது. அவனது உணர்வில் கலந்த உயிரில் உறைந்த அந்த கள்ளமில்லா முகத்தை அத்தனை நெருக்கத்தில் பார்த்தவனின் தலைக்கு பித்து ஏற ஆரம்பித்தது.

அவள் முகத்தை பற்றி முத்தங்களாக கொடுத்தவன், முகத்தை கையில் தாங்கிக் கொண்டே, “உனக்கு தெரியுமா ஆரா? எனக்காக எதை வேணும்னாலும் வேணாம் சொல்வ நீ. எம்மேல எவ்ளோ லவ்னு உனக்கே தெரியலை. நான்தான் தெரிஞ்சுக்க விடாம பண்ணிட்டேன். அப்பவே இப்படிலாம் உனக்கு கொடுத்திருந்தா…” என்றவன் மீண்டும் முத்தங்கள் இட்டு விலகி “உனக்கு தெரிஞ்சிருக்கும்” என்றான்.

“என்ன உளறிட்டு இருக்க? ஃப்ரெண்ட்ஸா இருக்கும் போது கிஸ் பண்ணுவாங்களா? அப்படி ஏதாவது செஞ்சிருந்த ரெண்டு அடிதான் போட்ருப்பேன். நீ உன் ரூம் போ” என்றாள்.

“இதுக்கு மேலேயும் ரெண்டு பேரும் தனி தனி ரூம்ல இருக்கணுமா?” தன் அணைப்பிலேயே அவளை வைத்துக்கொண்டு கேட்டான்.

“தேவையில்லதான். உன் ரூமுக்கு நான் வந்தா அத்தை மாமா எல்லாம் என்ன நினைப்பாங்க அபூ? அச்சோ… எப்படி என்ன சொல்லி நான் அங்க ஷிஃப்ட் ஆகுறது?” சங்கடமாக கேட்டாள்.

“உன் மூளை எப்படித்தான் இப்படிலாம் யோசிக்குமோ? உன் திங்க்ஸ் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அங்க மாத்திக்கலாம்” என்றவன் விலகி ஏசி ரிமோட் எடுத்து குளிரின் அளவை அதிகப் படுத்தினான்.

“அபூ என்ன பிளான் பண்ற? இப்ப வேணாம்” என்றவள் படுக்கையில் அமர்ந்து கம்பளி எடுத்து தன் மேல் போர்த்திக் கொண்டாள்.

ஜன்னல் கதவுகளை அடைத்து ஸ்கிரீன் எல்லாம் இழுத்து விட்டவன் அவளை பார்த்து சிரித்துக்கொண்டே அவனது சட்டையின் பட்டன்களை விடுவிக்க, “அபூ வேணாம், இடையில அத்தை கூப்பிட்டா என்ன செய்றது? திஸ் இஸ் நாட் த கரெக்ட் டைம்” என்றாள்.

சாக்குகள் சொன்னாலும் ஆராவின் ஆசையை எதிர்பார்ப்பை அபுவால் உணர்ந்து கொள்ள முடிந்தது. கழட்டிய சட்டையை தோளில் போட்டவன் கைபேசி எடுத்து ‘ரெண்டு பேரும் டயர்ட், தூங்க போறோம், எழுப்பி விட்ராத ம்மா’ என அம்மாவுக்கு செய்தி அனுப்பி வைத்தான்.

 “மெசேஜ் பண்ணிட்டேன், நாமளா போற வரை அம்மா கூப்பிட மாட்டாங்க” என ஆராவுக்கு தகவல் சொன்னான்.

அதிர்ந்து போனவள் தலையணையை அவன் மீது விசிறியடித்து, “அறிவிருக்கா அபூ? இத போய் மெசேஜ் பண்ணுனியா?” என கத்தினாள்.

சத்தமாக சிரித்த அபு என்ன செய்தி அனுப்பினான் என்பதை சொல்லி, “அறிவுக்கொழுந்துடி நீ” என்றான்.

அசடு வழிய சிரித்த ஆரா அபுவையே பார்த்துக் கொண்டிருக்க அவனும் இவளை பார்க்க ஒரு சமயத்தில் அவனை எதிர்கொள்ள முடியாமல் தலையை திருப்பிக் கொண்டாள். அவளது பின் புறம் வந்தமர்ந்து கொண்டவன் அவளை சுற்றியிருந்த கம்பளியை உருவி தூரமாக எறிந்தான். க்ளிப்பில் அடங்கியிருந்த கூந்தலுக்கு விடுதலை கொடுத்தான்.

தன் மார்பில் அவளது முதுகு படர சாய்த்துக் கொண்டவன் அவளது முகத்தை லேசாக திருப்பி நெற்றியில் முத்தமிட்டான்.

“அபூ… ஷிவரிங்கா ஃபீல் பண்றேன்” என்ற ஆராவின் மூடியிருந்த விழிகள் வழி கண்ணீர் வழிந்தது.

அவளது கண்ணீரை துடைத்து கன்னங்களை வருடிக் கொடுத்தவன் வருடலை நிறுத்தாமல், “என்ன ஓடுது உன் மனசுல, என்ன நினைக்கிற ஆரா நீ?” எனக் கெட்டான்.

“சரியா சொல்ல தெரியலை அபூ. எப்படி இருக்கும், என்னால டாலரேட் செய்ய முடியுமா? உன்னை சேட்டிஸ்ஃபை பண்ணுவேனான்னு நிறைய தோணுது. நீ என்னை வேற விதமான ஃபீலிங்ஸ்ல இப்படி அணைச்சிருக்கிறதே எப்படியோ ஃபீல் பண்ண வைக்குதே. நிஜமா நான் ஓகேதானே? நான் ஃபிட்தானே?” எனக் கேட்ட ஆரா மீண்டும் அழுதாள்.

அவளை பாதி திருப்பி குழந்தையை மடியில் வைத்துக்கொள்வது போல வைத்துக் கொண்டவன், “சென்ட் பெர்சண்ட் நீ நல்லாகிட்ட. புதுசா ஒண்ணு செய்யும் போது ஃபர்ஸ்ட் டைம் கொஞ்சம் பயமா இருக்கும், டவுட்ஸ் வரும், தயக்கமா இருக்கும், இப்படி ஆகுமோ அப்படி இருக்குமோன்னு இமாஜினேஷன் தாறுமாறா ஓடும். அதைத்தான் நீ கோ த்ரூ பண்ணிட்டு இருக்க” என சொல்ல, ஆமோபதிப்பது போல தலையாட்டியவள் கண்களை மட்டும் திறக்கவே இல்லை.

தன் மார்போடு அவளை கட்டியணைத்துக் கொண்டவன் “ரிலாக்ஸ் ஆரா ரிலாக்ஸ்…” என மென்மையாக சொல்ல, நடுங்கும் கரங்களில் ஒன்றை அவன் தோளில் வைத்து பிடித்துக்கொண்டவள் மற்றொரு கரத்தால் அவனது முதுகை பற்றிக் கொண்டாள்.

அவளது கன்னத்தோடு கன்னம் பதித்து கண்களை மூடிக் கொண்டான். அந்த நிலையிலிருந்து அசையவே இல்லை அவன். நிசப்தம் அடர்ந்து போயிருந்தது அங்கே.

“இந்த சைலன்ச பிரேக் பண்ணு அபூ. இட்ஸ் ஹாரிஃபையிங்! என்றாள்.

“நல்லா ஆழ்ந்து கேளு ஆரா. நம்ம மூச்சு சத்தமும் ஹார்ட் பீட்ஸும் உனக்கு கேட்கும். கேட்குதா?”

புலன்களை கூர்மையாக்கினாள். அவனின் இதயத் துடிப்பு பதட்டமின்றி லயத்தோடு ஒலித்ததை கேட்டாள். அவள் முகத்தில் அவனது சூடான மூச்சுக் காற்று மோதுவதை உணர்ந்தாள். அவனுடன் நெருக்கமான நிலையில் இருப்பது சிலிர்ப்பை உண்டாக்கியது. எச்சில் கூட்டி விழுங்கியவளின் இமைகளுக்குள் கரு விழி அசைந்து கொண்டிருந்தது.

“எதையும் கண்டபடி யோசனை பண்ணக்கூடாது, குழம்ப கூடாது. இது நம்ம காதலோட இன்னொரு விதமான வெளிப்பாடு. நமக்குள்ள இருக்க அட்ராக்ஷனோட எக்ஸ்டென்ஷன். எது பிடிக்கும் பிடிக்காது, எது வேணும் வேணாம்னு ஒளிவு மறைவில்லாம ஷேர் பண்ணு. நானும் அப்படித்தான் இருப்பேன். அப்புறம் என்ன கேட்ட… சேட்டிஸ்ஃபை பண்ணுவியான்னு டவுட்… உன் நிம்மதியான ஸ்மைல் விட வேற எதுவும் என்னை சேட்டிஸ்ஃபை பண்ணிடுமா ஆரா?” எனக் கேட்டான்.

ஆராவின் முகத்தில் அமைதியான முறுவல் அரும்பியது.

“உன் அபூ இல்லயா நான்?” என அவன் கேட்க ஆம் என சிறிதாக தலையசைத்தாள்.

அவனது அணைப்பும் பேச்சும் அத்தனை இதத்தையும் தைரியத்தையும் அவளுக்கு கொடுத்தது.

ஆராவின் மனம் சமன் பட்டு திடமாகியது. மெல்ல இமைகள் திறந்தாள். அவளது இமை முடிகளின் ஸ்பரிசத்தை உணர்ந்த அபுவும் கண்களை திறக்க அவனை பார்த்து சோபையாக புன்னகை செய்தாள் ஆரா.

“ஓகேவா நீ?” என்ற அவனது கேள்விக்கு ஆம் என தலையசைத்தாள்.

“நான் சொல்றதை செய்வியா?” எனக் கேட்டவனை ஆமோதிப்பாக பார்த்தாள்.

“கிஸ் மீ” என அவளை கிறங்க வைக்கும் குரலில் அவன் சொல்ல, அவனது தோளில் வைத்திருந்த கையை அவனது பின்னந் தலைக்கு இடம் மாற்றினாள்.

ஆராவை பிடித்திருந்த தன் பிடியில் அழுத்தம் கொடுத்தான் அபு. காதல் மயக்கத்தோடு அவனுக்கு ஆத்மார்த்தமாக முத்தமிட்டாள்.

ஆராவின் முடி இழைகளுக்குள் விரல்கள் கொண்டு அலைந்தான் அபு. முற்றிலும் அபுவின் பிடிக்குள் வந்து விட்டவள் அவனை தவிர அனைத்தையும் மறந்து போனாள்.

தன் கட்டுப்பாட்டில் அவளிருந்தாலும் அவளது கட்டுப்பாட்டில் அவனிருப்பது போன்ற பிரம்மையை அவளுக்கு கொடுத்தான். அவளை அவனுணர்வது போன்றே அவளையும் அவனை உணரச் செய்தான்.

வெட்கம், மறுப்பு, தயக்கம், தடங்கல் என எதுவுமில்லை.

ஏகாந்தமான காட்டில் தடைகளின்றி தன் வழியில் ஓடும் சிற்றோடை போல மிகவும் அழகாக முடிந்திருந்தது அவர்களின் முதல் காதல் கவிதை.

அறையை முழுதாக இருள் சூழ்ந்திருந்தது. ஆராவின் மேல் கை போட்டுக் கொண்டே தூங்கிப் போயிருந்தான் அபு. அவனை நெருங்கி அவனது தோள், கழுத்து, காது மடல், நெற்றி என முத்தமிட்டவள் உதடுகளில் முத்தம் வைத்து, “யூ ஆர் த பெஸ்ட் திங்க் தட் ஹேப்பண்ட் டு மீ இன் மை லைஃப்!” (என் வாழ்க்கையில் எனக்கு நடந்த மிகவும் சிறப்பான விஷயம் நீ எனக்கு கிடைத்ததுதான்) என்றாள்.

கண்கள் திறவாமலேயே “வீ ஆர் பார்ன் ஃபார் ஈச் அதர்” (ஒருவர் மற்றவருக்காகவே பிறந்துள்ளோம்) என்றவன் லேசாக சிரித்து அவளை தன்னோடு சுற்றி வளைத்து கொண்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement