Advertisement

                                                                      29

உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்,

எனக்கொரு பாடம் கேட்டு கொண்டேன்.

பருவமென்பதே பாடமல்லவா,

பார்வையென்பதே பள்ளியல்லவா?

ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்

இரவும் வந்தது நிலவும் வந்தது!”

     அவன் மார்பில் சாய்ந்தபடி நெடுநேரமாய் வருங்காலக் கனவுகளில் மூழ்கி இருந்தவளை,

     “மானும்மா!” என்று அழைத்து மெல்லத் தட்டிவன்,

     “நல்லா படுத்துக்கோடா. இப்படியே உட்கார்ந்திருந்தா வலி எடுக்கும்” என்று சொல்லி அவளைப் படுக்க வைக்க முயல,

     “ம்!” என்று அவள் சிறு பிள்ளையாய் சிணுங்கினாள்.

     “என்னடா?” என்று அவன் புரியாமல் கேட்க, அவள் மீண்டும்,

     “ம்ம்!” என்று சிணுங்கினாள் எதற்கோ அடம் பிடிப்பது போல்.

     இம்முறை அவளின் சிணுங்கலுக்கான அர்த்தம் அவனுக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும்,

     “ப்ச்! என்ன வேணும்டா சொன்னாதானே புரியும்?!” என்று புரிந்தும் புரியாதது போலவே கேட்க,

     ‘மரமண்டை மரமண்டை! டியூப்லைட்டு டியூப்லைட்டு!’ என்று மெலிதாய் முணுமுணுத்தவளைப் பார்த்துச் சிரிப்பை அடக்கியபடியே,

     “படுத்துத் தூங்கு மானுமா! காலையில சீக்கிரம் எழுந்து ஹாஸ்பிட்டல் கிளம்பணும்” என்றான்.

     “ம்! ம்! அவ்ளோதானா?! தூங்கித்தான் ஆகணுமா?!” என்று சிணுங்கியபடி அவள் சோகமாய்க் கேட்க,

     “ஆமாம்!” என்றவனை,

     “போயா! நீ ஸ்வீட் குலோப்ஜாமூன்லாம் இல்லை! பிட்டர் பாவக்காய்!” என்றுவிட்டு அவள் படுத்துக் கொள்ள, அவனும் சிரித்தபடி அவளருகே படுத்துக் கொண்டான்.

     “ப்ச் வேற எதுவும் வேணாம்! அட்லீஸ்ட் ஒரு முத்தா! முத்தா கூடவா குடுக்கக் கூடாது! சரியான கஞ்சு!” என்று அவள் முனகிக் கொண்டே படுத்திருக்க,

     “இன்னும் என்ன முனகல்?!” என்றான் மிரட்டலாக.

     “உலகத்துலேயே இப்படி ஒரு மொதொராத்திரி யாருக்குமே நடந்திருக்காதுய்யா! யாருக்குமே நடந்திருக்காது!” என்று அவள் மீண்டும் புலம்ப,

     “இப்ப நீ தூங்கப் போறியா இல்லை, வாயிலயே போடவா!” என்று அவன் கேட்க,

     “ம்! வாயிலேயே போடுங்க!” என்று அவள் தன் உதட்டை அவன் முகத்தின் அருகே கொண்டு வந்து சுவைத்துக் கொள் என்பது போல் பார்க்க, அவனும்தான் பாவம் என்ன செய்வான்.

      இவளின் செல்ல இம்சைகளால் அவன்தான் படாத பாடு பட்டான்!

      “சும்மா இருக்கிறவனை சீண்டிப் பார்க்காம பேசாம படு மானும்மா!” என்றுவிட்டு அவன் திரும்பிப் படுக்க முனைய,

     “ம்! வேணா வேணா! இப்படியே படுத்துக்கோங்க. நான் எதுவும் தொல்லை பண்ணலை!” என்று கண்மூடிப் படுத்துக் கொண்டவளை, ஆசையுடன் அவன் ரசிக்க, சட்டெனக் கண்திறந்தவள்,

     “ஒரே ஒரு முத்தா ப்ளீஸ்!” என்று கொஞ்ச, அதற்குமேலும் அவனால் மறுக்க முடியுமா என்ன?

     அவளைக் கண்ட நாள் முதலாய் அவனைத் தன்னுள் கட்டி இழுத்த அவளின் மான்விழிகளை நெருங்கியவன், இத்தனை நாட்களாய் கட்டி வைத்திருந்த ஆசையைக் கட்டவிழ்க்கும் விதமாய், மென்மையாய் அவளின் மான்விழியில் தன் இதழோற்றினான் இருவரின் ஆசையும் நிறைவேறும் விதமாய்.

     அவனின் முதல் முத்தம், தான் எப்போதும் மையிட்டு ரசிக்கும் தன் கண்களுக்கே கிடைத்ததில், அவள் அவனது மானும்மா என்ற அழைப்பிற்கான காரணத்தை ஓரளவு கணித்துவிட,

     “இதுக்குத்தான் மானும்மான்னு கூப்பிட்டீங்களா?!” என்றாள் அவன் முத்தத்தில் மூழ்கிய குரலில்.

     “ம்! என்னோட மான்விழி!” என்று அவனும் மெல்லிய குரலில் மொழிய, தன் அருகே இருந்த அவன் முகத்தைத் தன் கைகளால் ஆசையாய் வருடியவள், மெல்ல அவள் முகத்தருகே அவன் முகத்தைக் கொண்டு வந்து முகத்தோடு முகம் உரசினாள்.

     அவளின் தீண்டல், அவனுள் தீமூட்ட, “மானும்மா சொன்னாக் கேளு வேணாம்! நாளைக்கு டாக்டரைப் பார்த்துட்டு” என்று அவன் சொல்லச் சொல்ல, அவனை மேலும் ஏதும் பேசவிடாமல் அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டவள், அவனைத் தன்னோடு இறுக சேர்த்தணைத்துக் கொண்டாள்,

     “எனக்கு ஒண்ணும் ஆகாது தீரா! நான் உங்களோட ரொம்ப காலம் சந்தோஷமா வாழ்வேன்!” என்றபடி.

     அவளுக்குத் தன்னால் அவன் சின்னதாய்க் கூட எந்த ஏமாற்றத்தையும் சந்திக்கக் கூடாது என்ற எண்ணம், ஆனால் வரும்காலங்களில்?!

     அவளின் வார்த்தைகள் அவனுக்குள்ளும் தைரியத்தைக் கொடுத்தாலும், அவளின் உடல்நிலையை எண்ணி பொறுமையைக் கடை பிடித்தவன், அவள் மனம் நோகா வண்ணம்,

     “என் செல்லம் இல்ல சொன்னா கேட்கணும்!” என்றான் மெல்ல அவளிடமிருந்து விலக முயன்றபடி.

    அவனது விலகல் அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், அவன் தன்மேல் கொண்ட அக்கறையை எண்ணி உருகித்தான் போனாள்.

    மெல்ல அவனை விடுவித்தவள், “உ உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையே?!” என்று அவள் தயங்கித் தயங்கிக் கேட்க,

     “ச்சே! இதுல என்னடா வருத்தம் இருக்கு! என்னைக்கு இருந்தாலும் என் பட்டுக்குட்டி எனக்குத்தான்!” என்று மீண்டும் அவள் கண்களில் முத்தம் பதித்தவன்,

      “நாளைக்கு டாக்டர் மட்டும் எந்தப் பிரச்சனையும் இல்லன்னு சொல்லட்டும். அப்புறம் பாரு” என்று அவன் கண்ணடிக்க,

     “ம்!” என்று வெட்கத்துடன் தன் கைகள் கொண்டு கண்மூடிக் கொண்டவள், அவன் வாய்விட்டுச் சிரிப்பதைக் கேட்டு, கைகளை விலக்கி,

     “என்ன என்ன இப்போ சிரிப்பு?!” என்று முறைக்க,

     “இல்ல, இவ்ளோ நேரம் என்னை இறுக்க ஓட்டிகிட்டு இருந்த பொண்ணா இவன்னு நினைச்சு சிரிச்சேன்” என்றான் அவனும் சீண்டலாய்.

     “ப்ச்! போங்க தீரா!” என்று அவள் சிணுங்க, அப்போதுதான் அவன் கவனித்தான் அவள் என்றுமில்லாது இன்று புதிதாய் தீரா என்று கூப்பிடுவதை.

     “அதென்ன என்னிக்குமில்லாம புதுசா தீரான்னு கூப்பிடுற?!” என்றான் அவள் கன்னங்களில் கோலமிட்டபடியே.

     “அது ஒரு பெரிய கதை!” என்று அவள் ஆரம்பிக்க,

     “அப்போ வேணாம் இன்னொரு நாள் சொல்லலாம் படுத்துத் தூங்கு” என்றான் அவளை வெறுப்பேற்றும் விதமாய்.

     “ப்ச் அதெல்லாம் இல்ல இப்போவேதான் சொல்லுவேன்” என்றவள் நாணிக் கோணி,

     “அது, அது வந்து உங்க பேர் ரொம்ப வருஷம் முன்னாடி இருந்தே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா என்னோட பர்ஸ்ட் லவ் உங்க பேர் கொண்ட ஒருத்தர் மேலதான்” என்று அவள் சொல்ல, ஆசையாய் அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தவன், பட்டென்று தன் கையை விலக்கிக் கொண்டான் கோப விழிகளுடன்.

     அவனின் கோபம் அவளுக்கு அடக்க முடியாத சிரிப்பைக் கொடுக்க, இன்னும் சற்று விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்தவள்,

     “அவரைப் பார்த்த நாள்ல இருந்து, உங்களைப் பார்க்குற நாள் வரைக்கும் அவர் நியாபகம் என் மனசுல இருந்து நீங்கவே இல்லைத் தெரியுமா?!” என்று மேலும் அவள் அவனைச் சீண்ட, முறைப்புடன் அவளிடமிருந்து மொத்தமாய் விலகினான் மித்ரன்.

     “என்னப்பா நீங்க, நான் எவ்ளோ ஆசை ஆசையா என்னோட காதல் கதையைச் சொல்றேன். இப்படி உர்ருன்னு மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டா எனக்கு எப்படி கதை சொல்ற பீலிங் வரும்!” என்று அவள் மேலும் மேலும் வெறுப்பேற்ற,

     பற்களைக் கடித்தபடி, “சொல்லு” என்றான் இறுக்கமாய் முகத்தை வைத்துக் கொண்டு.

     “அப்போ எனக்கு பதினெட்டு வயசு இருக்கும். நான் காலேஜ் பர்ஸ்ட் இயர் பண்ணிட்டு இருந்தேன். அப்போல இருந்துதான் என்னால கொஞ்சம் கொஞ்சமா இந்த வியாதியால நார்மலா இயங்க முடியாம போச்சு! அதனால பெங்களூர்ல இருக்க ஒரு ஹாஸ்பிட்டல்ல இதுக்காக சிகிச்சை இருக்குன்னு அங்க என்னைக் கூட்டிட்டுப் போனாங்க! அப்போதான் அவரை முதன் முதல்ல பார்த்தேன். நான் பயிற்சிக்காக அங்க இருக்க பயற்சிக் கூடத்தில் நடந்துட்டு இருந்தேன். அப்போ அவர் ரொம்ப வேகமா என்னைக் கடந்து போனார். அவரோட நடை, உடை, ஸ்டைல் எல்லாமே நொடியில என்னை அவர் பக்கம் இழுத்துடுச்சு!” என்று அவள் சொல்லிக் கொண்டே போக,

     “போதும் படுத்துத் தூங்கு” என்று கடினமான குரலில் சொன்னவன், சட்டென திரும்பிப் படுத்துக் கொள்ள, இவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை!

     மெல்ல வாயைப் பொத்திக் கொண்டுச் சத்தம் வராமல் சிரித்தவள்,

     “ப்ச் என்னங்க நீங்க? பாதியில சொல்லி விட்ட எனக்குத் தூக்கம் வராது!” என்று அவனை வலுக்கட்டாயமாய் தன் புறம் திரும்பிப் படுக்கச் சொல்லி அவன் சட்டையைப் பிடித்து இழுக்க,

     “வேணாம் மானும்மா! என்னை டென்ஷன் பண்ணாம தூங்கு” என்றான் திரும்பாமலேயே.

     “ம்! ம்! அப்போ நான் ராத்திரி முழுக்க தூங்காமத்தான் முழிச்சிருப்பேன். அவர் ஞாபகத்திலேயே” என்று அவள் சொல்ல படக்கென அவள் புறம் திரும்பிப் படுத்தான்.

     அவனின் செயல் ஒவ்வொன்றும் அவளுக்கு அடக்க முடியாத சிரிப்பையே வரவழைக்க, சிரமப் பட்டு அடக்கி கொண்டவள், மீண்டும் ஆரம்பித்தாள்.

     “அவர் உங்களை மாதிரி வெறும் பிசியோ தெரபிஸ்ட் எல்லாம் இல்லை! நரம்பியல் மருத்துவர்! ரொம்பப் படிச்சவர்!” என்றாள் சிலாகித்து. அவள் பாவனையில செம காண்டானவன்,

     “மரியாதையா படுத்துத் தூங்கு மானு” என்று மீண்டும் திரும்பிப் படுக்க முயல,

     “ம்ம்! என்ன தீரா நீங்க?!” என்று கொஞ்சியபடி அவனைத் திரும்ப விடாமல் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டவள்,

     “அப்புறம் நான் அவரை தினமும் பார்ப்பேனா. ஆனா ஓடிப் போய் அவர்கிட்ட பேசணும்னு நினைக்கிறதுக்குள்ள அவர் வேகமா என்னைக் கடந்து போயிடுவார்.” என்று சோகம் போல் அவள் சொல்ல, இவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

     “வேணாம் மானும்மா போதும். எனக்குத் தூக்கம் வருது!” என்று அவனும் எவ்வளவோ பொறுமையாய் சொல்ல, இவள் விட்டால்தானே,

     “ப்ச் இன்னும் கொஞ்சம்தான்” என்றவள்,

     “ஆனா அன்னிக்கு எப்படியாவது அவர்கிட்ட பேசியே ஆகணும்னு அவர் வர்ற வழியில முன்னாடியே போய் நின்னுகிட்டேன்” என்றவள், ஓரக்கண்ணில் அவன் முகம் பார்க்க அவன் முகத்தில் ஈயாடவில்லை! (அடியே  பர்ஸ்ட் நைட் அன்னிக்கு ஒருத்தனை இப்படியா காண்டு ஏத்துவ?!)

     “நான் போய் அங்கேயே நின்னுட்டு இருந்தேனா?! அப்புறம் கொஞ்ச நேரத்துல நான் நினைச்ச மாதிரியே அவர் அந்த வழியா வந்தார். அவரைப் பார்த்ததும்,

      “சார்! சார்! ன்னு நான் கூப்பிட, அவர் சட்டுன்னு நின்னு,

     “என்ன பேபி? என்ன வேணும்?! ன்னு கேட்டார்.”

     அவரை மாதிரியே அவரோட வாய்ஸ் கூட செம்ம ஸ்வீட் தெரியுமா?!” என்று அவனை ஓரக்கண்ணால் பார்க்க, அவன் முகம் சிவந்து போயிருந்ததை கவனித்தாள். ஆனாலும் அதை ரசித்தபடியே,

     “சும்மாவே நான் அவரை பயங்கரமா சைட் அடிப்பேன்! இப்போ பக்கத்துல இருக்கவும், அவரை ரசிச்சுக்கிட்டே,

     “தினமும் உங்களை இந்த வழியா போகும் போது பார்ப்பேன். உங்ககிட்ட பேசணும்னு ஆசையா இருந்தது! அதான் கூப்ட்டேன்னு சொல்லிட்டு, உங்க பேர் என்னன்னு கேட்டேன்!”

     “சங்கமித்ரன்!” ன்னு அவர் சொன்ன பேர் அப்படியே என் மனசுல ஒட்டிக்கிச்சு” என்றவள், அதோடு விடவில்லை.

     “அப்புறம் சட்டுன்னு அவர்கிட்ட, “உ உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சான்னும் கேட்டுட்டேன்” என்று சொல்லி நிறுத்த, அவன் படு பயங்கரமாய் அவளை முறைத்தான்.

     “உடனே அவரும், “ஏன் கேட்கறீங்க பேபி?!” ன்னு கொஞ்சலா கேட்க”

     “இல்ல கல்யாணம் ஆகலைன்னா என்னை கல்யாணம் கட்டிகிறீங்களா?!” ன்னு நானும் பட்டுன்னு கேட்டுட்டேன்.” என்றாள் அன்றைய நினைவுகளில் மூழ்கிச் சிரித்தபடி.

     ஆனால் இதை எல்லாம் கேட்டிருந்தவனுக்கோ, அவளைத் திட்டவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது மரண இம்சையாய் இருந்தது.

     “போதும்! உன் காதல் கதையை கொஞ்சம் நிறுத்திட்டு தூங்குறியா? எனக்கு பயங்கரமாத் தூக்கம் வருது!” என்று மித்ரன் கண்மூடிக் கொள்ள, அவன் இமைகளைத் தன் இரு விரல்களால் பிரித்து,

     “ப்ச்! இன்னும் ஒரே ஒரு சீன்தான்!” என்றவள்,

     “நான் அவர்கிட்ட அப்படிக் கேட்டேனா? அப்படிக் கேட்டதும் அவர் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டார்.”

     “நான் அவரை பயந்துகிட்டே ஏன் இப்படி சிரிக்கிறார்ன்னு பார்க்க,”

     “கண்டிப்பா கல்யாணம் கட்டிக்கலாம் பேபி! ஆனா எனக்கு இல்லை, என் பையனுக்கு!” ன்னு அவர் சிரிச்சுச்கிட்டே சொல்ல, என் முகத்துல ஈயாடலை!”

     “எ என்ன உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?!” ன்னு நான் வாய்பிளக்க,”

     “ஹஹா என் பையனுக்கே கல்யாணம் ஆகுற வயசு ஆகிடுச்சு பேபி” ன்னு என் கன்னத்துல தட்டிட்டு, அவரோட கைகடிகாரத்தைப் பார்த்து,”

     “இட்ஸ் கேட்டிங் லேட் பேபி, நான் வரட்டுமான்னு” சொல்லி, அங்கிருந்து வேகமா போயிட்டார்.”

     இத்தனை நேரம் அவள் சொல்வதை கோபமும் எரிச்சலும் போட்டியிடக் கேட்டுக் கொண்டிருந்தவன், பக்கென வாய்விட்டுச் சிரித்து விட்டான்.

     “போயும் போயும் தாத்தாவை லவ் பண்ணி இருக்கியே மானும்மா!” என்றான் சிரிப்பை அடக்க முடியாமல்.

     அவன் சிரிப்பு மையுவிற்கு கோபத்தைக் கொடுக்க,

     “போங்க அவர் தாத்தாவா இருந்தாலும் செம்ம தெரியுமா?! சுப்பர் ஸ்டாரை அறுபது வயசுலயும் நிறைய பேர் ரசிக்கலை?!” என்று அவள் சப்பைக் கட்டு கட்ட,

     அவன் அதையெல்லாம் காதிலேயே வாங்காமல், “இந்த நாளை, ஐ மீன் இந்த காலம் கடந்த காதல் காவியத்தை என்னோட முதல் ராத்திரி நாட்குறிப்புல பத்திரமா எழுதி வைச்சுக்கறேன் மானும்மா! அப்போதான் நம்ம பிள்ளைங்களுக்கு இந்த தெய்வீகமான காதல் கதையைச் சொல்ல முடியும்!” என்று சிரிப்பும் நக்கலும் கலந்து சொல்ல,

     “ப்ச்! நிறுத்துங்க போதும் நிறுத்துங்க!” என்று அவன் வாயைத் தன் கைக் கொண்டு மூட, அவன் அப்போதும் விடாமல்,

     “இதுல அந்தப் பேரை வேற நியாபகம் வச்சுக்கிட்டு நீ என்னை தீரான்னு கூப்பிடுற?!” என்று சிரித்தவன்,

     “கூப்பிடு கூப்பிடு! எப்போவுமே பர்ஸ்ட் லவ்தான் பெஸ்ட் லவ்,” என்று கலாய்த்தவன்,

     “இப்போ அந்த தாத்தா இருப்பாரா போயிருப்பாரா?!” என்று சீரியஸாகக் கேட்க, அவன் தலை வைத்துப் படுத்திருந்த தலையணையை உருவியவள், அவனை,

     “சிரிக்காதீங்க சிரிக்காதீங்க” என்று மொத்தத் துவங்க, அவள் கையில் இருந்த தலையணையை ஒரே பிடியில் தள்ளி விட்டவன் அவள் இதழ்களைக் களவாடி அவளின் செல்லக் கோபத்தை ஒரே நொடியில் காற்றில் பறக்க வைத்தான்…

     (என்னக் கொடுமைடா இது! கல்யாணம் ஆகி மொதோ ராத்திரியாச்சேன்னு ஆசை ஆசையா ரொமாண்டிக் சீன் இருக்கும்னு நினைச்சுப் படிக்க வந்தா ரெண்டும் சேர்ந்து காமெடி எபி ஆக்கிடுச்சுங்களே! என் ரீடர்ஸ் பாவம் சோகமா உங்க ரொமான்ஸ்காக வையிட்டிங்! சீக்கிரம் சட்டு புட்டுன்னு உங்க தாத்தா காலத்துக் காதலையெல்லாம் மறந்துட்டு ட்ரேன்டிங்ல இருக்க உங்க லவ் ஸ்டோரிக்கு வாங்க பசங்களா. இல்லாட்டி ரீடர்ஸ் கட்டையைத் தூக்கிட்டு வந்தாலும் வந்துடுவாங்க! சோ அடுத்த ரொமாண்டிக் எபி வரவரைக்கும் மீ எஸ்கேப்….)   

                                -மான்விழி மயங்குவாள்…

 

    

 

 

    

     

    

Advertisement