அத்தியாயம் – 14-1

அதே போல், ஜெயந்தி, வசந்தி இருவரின் திருமணத்தின் போது சபாபதி மாமா கேட்ட பெரிய தொகையை கொடுத்து அக்காவிற்கு உதவிக்கரம் நீட்டினார் விஜயா. அது மட்டுமில்லாமல் வர் சார்பாக இருவருக்கும் அஞ்சு லட்சம் பெருமானம் கொண்ட தங்க நெக்லெஸ் செட் வாங்கிக் கொடுத்தார். ஜெயந்தியின் பிள்ளை சித்து பிறந்த போது சித்தி பாட்டியாக ஒரு லட்சம் பணம் கொடுத்தார் விஜயா. தாய் மாமனாக தங்க செயின், மோதிரம் பரிசளித்திருந்தான் ஷண்முகம். வசந்திக்கு தான் எதுவும் செய்ய இன்னும் வேளை வரவில்லை. சிந்துவிற்கு வெளி நாட்டு மாப்பிள்ளை என்பதால் பண உதவியோடு திருமணத்தின் போது அவளுக்குப் பிடித்த வைர செட் பரிசளித்தார் விஜயா. 

மகள்களைக் காட்டி காட்டி சின்ன நாத்தனாரிடமிருந்து பெரிய நாத்தனார் கரந்ததைப் பார்த்து, அவருடைய மூத்த மகன் பிரகாஷின் திருமணத்தின் போது அவனின் மனைவிக்கு தங்க நெக்லெஸ் செட் பரிசளித்த விஜயாவிடம்,”இனி உங்ககிட்டே இருக்கறது எல்லாம் நம்ம வீட்டு மருமகளுக்கு தான் விஜயா அண்ணி…ஷண்முகத்தோட பெண்ஜாதிக்குத் தனியா எடுத்து வைச்சிடுங்க..மிச்சம் இருக்கறது சத்யன் பொண்டாட்டிக்கு.” என்று விஜயாவின் மருமகளோட அவருடைய இளைய மருமகளுக்கும் அடி போட்டு வைத்தார்.

மீனா எண்ணியது போல் விஜயாவின் பணத்தையோ நகைகளையோ அபகரிக்க வேண்டுமென்று மகாவின் கணவர் சபாபதி நினைத்ததில்லை. பண நெருக்கடி ஏற்படும் போது விஜயாவின் அண்ணன் கிரிக்குத் தெரிவித்து விட்டு தான் அந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்திருக்கிறார். அதை திருப்பியும் கொடுத்திருக்கிறார். அதே போல் கிரியும் அவரிடம் சொல்லி விட்டு தான் ஆத்திர அவசரத்திற்கு தங்கையின் கணக்கிலிருந்து பணம் எடுத்திருக்கிறார். ஷண்முகத்திற்கு பதினெட்டு வயதானதுமே இருவரும் அவனுக்குத் தெரிவிக்காமல் எதையும் செய்ததில்லை. என்ன, ஏது என்று நுணுக்கமாக அவன் கேட்க மாட்டானென்றாலும் அவனிடம் இருவருமே கணக்கை ஒப்பித்து விடுவார்கள். சிந்துவின் திருமணத்தின் போது விஜயாவின் கணக்கிலிருந்து பெரிய தொகையை எடுத்த போது அதைத் திருப்பி விடுவதாக ஷண்முகத்திற்கு சொல்லியிருந்தார். ஆனால் இன்று வரை அவரால் அதைத் திருப்பித் தர முடியவில்லை. 

விஜயாவும் மகாவும் எத்தனை நெருக்கமாக பழகினாலும், எத்தனை கவனமாக விஜயாவை இவர்கள் கவனித்துக் கொண்டாலும் மகா வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையை மாற்ற முடியாதென்பதால் எந்தக் காலத்திலும் அவர் வெளியாள் தான் என்று சபாபதிக்குத் தெரியும். எனவே, ஆரம்பத்திலிருந்து விஜயா சம்மந்தப்பட்ட விஷயங்கள் அனைத்திலும் கிரியைக் கேட்டு தான் செயல்பட்டிருக்கிறார். அதுவும் பண விஷயத்தில் ஒன்றிற்கு இரண்டு முறை தகவல் கொடுத்து விடுவார். ஏனென்றால் விஜயாவின் ஜீவனாம்சத் தொகை மிகப் பெரிய தொகை.

அந்தத் தொகையை ஜீவனாம்சமாக கந்தவேலிடம் கேட்ட போது அவரின் அம்மா,’காலம் பூரா அவளைப் பூ போல பார்த்துக்கிட்டாலும் இவ்வளவு செலவாகாது..உலத்திலே நடக்காததா நடந்து போச்சு? இவளுக்குப் பிடிக்கலைன்னா இவ வேற வீட்லே இருக்கட்டும் அவ வேற வீட்லே இருக்கட்டும்..இரண்டு பேரை ஆள உன்கிட்டே சக்தி இருக்கு..எதுக்கு பணத்தை விரயம் செய்யற..நீ இருக்கற வரை தானே அவளை ஆதரிக்கணும்..மாசா மாசம் ஒரு தொகை கொடுக்கறதா சொல்லிடு..அதுக்கு ஒத்துக்கலைன்னா விவாகரத்து கொடுக்காத..அவளை வைச்சுப் பார்த்துக்க அவ அப்பனுக்கு பவுசு கிடையாது..கொஞ்ச நாள் பொறுத்துக்க..நாய் மாதிரி நம்ம வீட்டு வாசல்லே வந்து நிப்பா.” என்று மருமகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை அநியாயமாக கிடைக்க விடாமல் செய்தார்.

நாளை நமக்கு  என்ன வைத்திருக்கிறது என்று யாருக்குமே தெரியாது. இன்று நம்மிடம் இருப்பதை வைத்து நம்முடைய நாளையைப் பாதுகாக்க முயற்சி செய்வது தான் புத்திசாலித்தனம் என்பது விஜயாவின் தந்தையின் கருத்து. எனவே தான் கந்தவேலின் மாதா மாதம் ஜீவனாம்சத்திற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் போய் விட்டால் அவரது காலத்திற்கு பின் காசிற்காக கந்தவேலின் காலடியில் மகள் விழ நேரிடும் என்பதால், கடைசி முயற்சியாக,’என் மகளோட வாழ்க்கையே போயிடுச்சு..தெரிஞ்சே அதை அழிச்சிட்டு இப்போ வேற வாழ்க்கை, நீங்க விரும்பின வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கப் போகுது..பெத்த பிள்ளையைக் கூட கிட்டே சேர்க்காம பைத்தியமா இருக்கா என் மக..அவ மனசை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியுமான்னு தெரியலை..அப்படி கொண்டு வர எத்தனை செலவாகும்னு தெரியலை..அவ நல்லபடியா ஆனா தான் உங்க மகனுக்கு அம்மா கிடைப்பா..உங்க சம்மந்தமே வேணாம்னு தான் விவாகரத்து கேட்கறா..முழுசாக் கொடுத்து விட்டு முடிச்சு விட்டிடுங்க..ஒதுங்கிப் போக நினைக்கறவளோட எதுக்கு தொடர்புலே இருக்கணும்னு நினைக்கறீங்க..மாசா மாசம் உங்க பணத்தை எதிர்பார்க்க வைச்சு அவ வாழ்க்கையை நரகமாக்காதீங்க.’ என்று கந்தவேலிடமே நேரடியாக முறையிட்டார். 

மகனுடன் தொடர்பில் இருக்க தான் கந்தவேல் அது போலொரு ஏற்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருந்தார். இப்போது அது மிகவும் சுய நலமாகத் தெரிய, வேறு வழியில்லாமல் மகனுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ள முடிவு செய்தவர், அவரைப் பற்றி தெரிந்து கொள்ள மகனுக்கு அவா இருந்தால் அவனே தேடி வருவானென்று நம்பிக்கை வைத்து, மிகப் பெரிய தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து விட்டு விஜயாவின் வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக ஒதுங்கிக் கொண்டு விட்டார். விஜயாவின் தந்தை உயிரோடு இருந்தவரை அவர் தான் அந்தப் பணத்தை நிர்வாகம் செய்தது. அதன் பின் சபாபதி, கிரி இருவரும் சேர்ந்து அதை நிர்வாகம் செய்து வருகிறார்கள். 

பெரியப்பா, மாமாவின் குடும்பங்களுக்கு அவனுடைய அம்மா அவர்களின் தனிப்பட்ட விஜயா வங்கி என்று ஷண்முகத்திற்குத் தெரியும். விஜயா வங்கி விவகாரத்தில் அவன் தலையிட்டதில்லை. அவன் அருகிலிருந்து செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் செய்து வருவதால் எப்போதும் தலையிடுவதாக இல்லை. மேலும் அவனது தேவைகளை அரசாங்கம் கவனித்துக் கொள்வதால் பெரிய பணத் தேவை எதுவும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. அவசரத் தேவைக்காக அம்மாவின் வங்கிக் கணக்கிலிருந்து அவர்கள் பணம் எடுக்கும் போது அவனிடம் தகவல் கொடுத்தாலும் அதைக் கண்டு கொள்ள மாட்டான்.

பணக் கணக்கில் பாஸ்ஸானால் பாசக் கணக்கில் ஃபெய்லாகி விடுவோமென்ற பொது அறிவு இருந்ததால் தான் அந்த விஷயத்தைப் பற்றி சிந்துவின் திருமணத்தின் போது விஜயா அவனிடம் பேச முற்பட்ட போது கூட,’பெரியப்பா ஏற்கனவே என்கிட்டே பேசிட்டார்..எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை..அவர் கேட்கற தொகைக்கு கையொப்பம் போட்டுக் கொடுங்க..இன்னும் வேணும்னாலும் நான் கொடுக்கறேன்.’ என்று முடித்து விட்டான்.

ஜெயந்தி, வசந்தி இருவரின் திருமணத்தை விட சிந்துவின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. மூன்று பெண்களுக்கும் ஒரே போல் சீர் செய்தாலும் திருமணம மண்டபம், சாப்பாடு, வரவேற்பு நிகழ்ச்சி, பரிசுப் பொருள்கள் என்று மற்ற ஏற்பாடுகள் வேற அளவில், அதாவது மாப்பிள்ளை விக்னேஷின் தகுதிக்கு ஏற்ப இருந்தது. அதில் மூத்த மாப்பிள்ளை இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது என்னவோ உண்மை தான். மாப்பிள்ளைகளை விட மகள்களுக்கு என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலும் வசந்திக்கு ஏகப்பட்ட எரிச்சல் ஏற்பட்டது. ஏற்கனவே குழந்தை இல்லை என்று தாழ்வு மனப்பான்மையில் எந்தக் குடும்ப நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிப் போனவள் தங்கையின் திருமணத்தின் போது கணவனோடு சேர்ந்து பெற்றவர்களை ஆட்டிப் படைத்தாள்.

புது மாப்பிள்ளை விக்னேஷை விட வெங்கடேஷிற்கு தான் அதிக கவனிப்பும் மரியாதையும் இருந்தது. அதைப் பார்த்து ஜெயந்தியின் கணவன் ரங்க நாதனும் முறுக்கிக் கொள்ள, விஜயாவின் கணக்கிலிருந்து பெரிய தொகையை எடுத்து மூத்த மகள்கள் இருவருக்கும் சமமாக ரொக்கப் பணம் கொடுத்து, அவர்களைச் சமாதானம் செய்து, மாப்பிள்ளைகளைச் சரிகட்டி கடைசி மகளின் திருமணத்தைக் கலவரமில்லாமல் நடத்தி முடித்தார் சபாபதி. எப்படியோ பெரிய பிரச்சனை எழாமல் சிந்துவின் கல்யாணத்தை நல்லபடியாக முடித்து விட்ட நிம்மதியில் இருந்தவருக்கு சிந்துவின் கர்ப்பம் சந்தோஷத்தோடு புதுப் பிரச்சனையையும் இழுத்து விட்டது. சிந்துவின் பிரசவம் முடிந்தது தாய் நாட்டிற்கு திரும்பியதும் அந்தப் பிரச்சனையைப் பார்த்துக் கொள்ளலாமென்று அவர் திட்டம் போட, விதி வேறு திட்டம் போட்டு வைத்திருந்தது அவருக்குத் தெரியவில்லை.

****************

Most Gurudwaras kku local name irukkum, like Golden Temple in Amritsar is also known as Sri Harmandar Sahib or Sri Darbar Sahib. Patiala la irukkara famous gurudwara Sri Dhuk Nivaran Sahib. இந்தப் பெயர்லே வேற இரண்டு மூணு இடத்திலே gurudwara irukku. ஆனா patiala irukkara gurudwara is famous and special as its associated with the ninth Sikh Guru, Guru Tegh Bahadur

*******************

Gurdwara Dukh Nivaran Sahib is situated in what used to be the village of Lehal, now part of Patiala city.

According to local tradition, supported by an old handwritten document preserved in the Gurudwara, one Bhag Ram, a jhivar of Lehal, waited upon ninth guru of Sikhs Guru Tegh Bahadur during his sojourn at Saifabad (now Bahadurgarh), and made the request that he might be pleased to visit and bless his village so that its inhabitants could be rid of a serious and mysterious sickness which had been their bane for a long time.

The Guru visited Lehal on Magh sudi 5, 1728 Bikram/24 January 1672 and stayed under a banyan tree by the side of a pond. The sickness in the village subsided. The site where Guru Tegh Bahadur had sat came to be known as Dukh Nivaran, literally meaning eradicator of suffering. Devotees have faith in the healing qualities of water in the sarovar attached to the shrine.

Source : wikipedia