Advertisement

 வருவாயோ அன்பே..! ஒன்பது..

 காலேஜில் தோழிகளுக்கு அவள் திருமணம் செய்து இருப்பது தெரிய வேண்டாம் என்பதனால் முத்து கட்டிய தாலியை சீதா வெளியே தெரியாமல் ஃபுல் நெக் டாப் உடுத்தி மறைத்து இன்றும் காலேஜுக்கு போனாள்..

சீதா யார் கண்ணையும் கவராமல் நேர்த்தியாகத்தான் உடை அணிவாள்.. அந்த வகையில் யசோதாவின் பேச்சை தட்ட மாட்டாள்..

 ஆனால் சீதா இன்றும் நேற்று உடுத்திய அதே மாடலில் வேறு உடை இன்று உடுத்தி வந்திருப்பதை பார்த்து தோழிகள் எல்லாம் நக்கல் செய்தார்கள்..

சீதா ஒரு உடை உடுத்தினால் அதே உடையை மீண்டும் உடுத்த மாதக்கணக்குகள் எடுக்கும்.. அப்படி எண்ணிக்கை அற்ற உடைகளை வைத்திருக்கிறாள்..

 அப்படிப்பட்ட சீதா இன்று கலர் மற்றும் வேறு ஆனால் ஒரே வகையைச் சேர்ந்த உடையை உடுத்தி வந்திருப்பதை பார்த்து தோழிகளுக்கு ஆச்சரியம்..

 அவள் அவர்களை நெருங்கி வந்ததும் அனைவரும் அவளை சற்று நேரம் உத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

“ ஹேய்.. என்னடி எல்லாரும் அப்படியே வச்ச கண்ணு வாங்காமல் என்னை உத்து பார்த்துட்டு இருக்கீங்க?.. முன்ன பின்ன என்னை பார்த்தது இல்லையா என்ன?.. “

“ ஆமா எங்களுக்கு இந்த சீதா புதுசா தான் தெரியுது.. வந்தது எங்க சீதா வா என்று கன்ஃபார்ம் பண்றதுக்காக உத்து பார்க்கிறோம்.. உன்ன பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியுமே அது ஏன் இன்னைக்கு அதே மாடல் டிரஸ் போட்டுட்டு வந்து இருக்க?..”

“ ஹேய் இது எனக்கு பிடிச்சிருக்கு போட்டு இருக்கேன்.. அப்புறம் வெயில்ல வெளியே திரிந்து ஸ்கின் எல்லாம் தூசி பட்டு ரொம்ப டேமேஜ் ஆகுது.. எல்லாத்துக்குமே கவர் பண்ற மாதிரி ஃபுல் நெக் டாப் போட்டு இருக்கேன்.. என்னடி உங்களுக்கு இப்ப பிரச்சினை?.. “

“ சீதா ரீல் சுத்தாத.. எங்களுக்கு உன்ன பத்தி நல்லாவே தெரியும்.. என்னதான் தலைகீழ நின்னாலும் இப்படி ஒரே மாதிரி உடுப்பு போடுற ஆள் நீ இல்லை.. ஏதோ ஒன்னு இருக்கு கண்டுபிடிக்காம விடமாட்டோம்.. ” என்று தோழிகளெல்லாம் சந்தேக கண்ணோடு கோரசாக கத்தினார்கள்..

“ ஏய் லூசுங்களா ஒரு மண்ணும் இல்லடி.. நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காதீங்க.. எங்க இன்னும் கரணை காணல?..”

“ அதோ பாருடி காலேஜ் ரோமியோ நீ கேக்குறதுகாகவே லேட் பண்ணின மாதிரி இதோ வந்துட்டான்..”

 அவர்கள் பேச்சுக்கு அழகாக சிரித்து விட்டு “ ஹாய் லட்சு.. வாவ் சூப்பர் லுக்கிங் வெரி பியூட்டி.. ” என்றான் கரண்..

“ அப்படி சொல்லு கரண்.. இவளுகளுக்கு நல்லா புரியிற மாதிரி சொல்லு.. எனக்கு இந்த டிரஸ் ரொம்ப புடிச்சிருக்கு.. இதே மாடல்ல இன்னைக்கு பர்சேஸ் பண்றதுக்கு ஈவினிங் பிளான் பண்ணி இருக்கேன்..” என்றாள் சீதா..

“ சூப்பர் லட்சு.. உனக்கு எப்படி டிரஸ் போட்டாலும் நீ ஸ்மார்ட்டா அழகா இருப்ப.. இவங்க பேச்சை கேட்காமல் உனக்கு புடிச்ச மாதிரி டிரஸ் பண்ணு அதுதான் அழகு.. ” என்று அவள் தோளில் தட்டி விட்டு அங்கிருந்து வெளியேறி சென்று விட்டான்..

 அவனுடன் சேர்ந்து மற்றவர்களும் சென்று விட்டார்கள்..

‘ அப்பாடா.. இந்த ரெண்டு நாளைக்கே கண்ண கட்டுதே .. இன்னும் இந்த மூணு மாசத்துக்கு எப்படி இந்த கல்யாணம் நடந்த விஷயத்தையும் தாலியும் மறைச்சு இதுகளுக்கு மத்தியில இருக்க போறேனோ..! தெரியல..’ என்று அவள் கஷ்டத்தை புலம்பி விட்டு அவளும் எக்ஸாம் ஹால் சென்று விட்டாள்..

 முத்துராமன் வீட்டில் அவன் நேரம் தாழ்த்தி வீட்டுக்கு வந்ததால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்..

 அவனது கைபேசி அழைத்துக் கொண்டே இருந்தது..

 அந்த அலைபேசி சத்தம் அவனுக்கு எங்கேயோ தூரத்தில் கேட்பது போன்று இருந்தது..

 கொஞ்சம் கொஞ்சமாக அந்த சத்தம் அருகில் கேட்கவும் தூக்கத்தை பொருட்படுத்தாமல் கடமை அழைக்கவும் எழுந்து அமர்ந்தான்..

 நேரத்தை பார்த்தால் காலை 7:30 ஆகிவிட்டது..

 உடல் அசதி ஒரு பக்கம் மன கவலை ஒரு பக்கம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் எழுந்து வெளியே சென்று கிணற்றில் தண்ணீர் எடுத்து குளித்துவிட்டு வீட்டிற்குள் வந்தான்..

 அப்போது அவன் தங்கை யமுனா அவளால் முடிந்த சிறு சிறு வேலைகளை செய்து வைத்து பள்ளிக்கு தயாராகி காத்திருந்தாள்..

 ஒரு நாளும் அவள் வேலை செய்ய வேண்டும் என நினைத்ததே இல்லை முத்து..

 உணவு சமைக்க தெரியாது அதனால் அதை மட்டும் செய்து வைக்கவில்லை..

 மத்த வேலைகளையும் செய்து அவளுக்கும் கணேசுக்கும் தேனீர் தயாரித்து இருவரும் குடித்துவிட்டு அவன் வருகைக்காக காத்திருந்தார்கள்..

 சிறிதாக இருந்த சமையல் அறைக்குள் சென்று பார்த்தான்.. அனைத்தும் சுத்தமாக இருந்தது..

“ என்ன பாப்பா நீ.. படிக்கிற புள்ள இதெல்லாம் நீ பண்ணனுமா?.. நான் எழும்பி பண்ணி இருப்பேன்.. பார் கையில எல்லாம் கறி அப்பினா ஸ்கூலுக்கு போற புள்ள ஏதாவது நாலு பேர் பார்த்து கேலி பேசுவாங்க.. இதுதான் பாப்பா கடைசியும் முதலுமா இருக்கணும்.. படிக்கிற வயசுல நீ வீட்ல வேலை செய்றது.. உன்னோட சிந்தனை எப்பவும் படிப்பில் தான் இருக்கணும்.. இந்த வேலை எல்லாம் எப்பவுமே நான் பார்த்துப்பேன்.. பெண்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம். அவங்க யாரோட கையையும் எதிர்பார்த்து இருக்காம அவங்களே அவங்களை பார்த்துக்கொள்ளும் திறமையோடும் அறிவோடும் இருக்கணும்..” என்று கூறி அவளது தலையை தடவி விட்டு சமையலறை சென்று நேற்று நண்பனை வாங்கி வந்து வைக்க சொன்ன தோசை மாவில் தோசை சுட்டு யமுனாவுக்கும் தந்தைக்கும் கொடுத்து அவனும் காலை உணவை முடித்துக் கொண்டான்..

 அவன் தினமும் காலையில் மாலையில் பள்ளி மாணவர்களை சவாரி ஏற்றி செல்வான்.. அதனால் இன்றும் பெற்றோர் மாறி மாறி அவன் ஊருக்கு வந்தது தெரிந்து அவனுக்கு அழைப்பு விடுத்து கொண்டே இருந்தார்கள்..

 பெண்கள் மற்றும் குழந்தைகளை அவனை நம்பி அனுப்பி வைப்பார்கள்..

 உடல் அலுப்பாக இருந்ததால் பள்ளி சவாரியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சற்று நேரம் நன்றாக உறங்கி விட்டு மதிய உணவையும் சமைத்து வைத்துவிட்டு மீண்டும் ஆட்டோ ஸ்டாண்ட் செல்வதாக முடிவு எடுத்திருந்தான்…

 அதன் படியே அவனது அன்றைய நாள் ஆரம்பித்தது..

 அத்தையும் தாயும் வீட்டுக்கு வந்ததை அறிந்த விஐபி வேகமாக யசோதா வீட்டுக்கு வந்து சேர்ந்தான்..

 மகன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டான் என பூரிப்போடு ஜோசியரிடம் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சென்ற மீரா ஜோசியர் சொன்னதைக் கேட்டு மிகவும் சோர்ந்த முகத்தோடு வீடு வந்து சேர்ந்தார்..

 அத்தையும் தாயும் கவலை அப்பிய முகத்தோடு இருப்பதை பார்த்து விஐபி என்னமோ ஏதோ சற்று மன கிளேசத்துடன் வீட்டுக்குள் வந்து சேர்ந்தான்..

மீரா ஆசையாக வீட்டுக்கு வரும் மகனிடம் இந்த திருமணம் நடக்காது என்பதை தன்னால் கூற முடியாது என்று யசோதாவிடம் பக்குவமாக கூற சொன்னார்..

“ என்னம்மா எப்ப கல்யாணத்துக்கு நாள் குறிச்சி கொடுத்து இருக்காங்க?.. என்ன ரெண்டு பேரும் முகத்த சோகமா வச்சு என்ன டென்ஷன் படுத்தி அதுக்கு பிறகு கலாய்க்க பார்க்கறீங்களா?.. ” என்றான்..

“ அப்படி எல்லாம் இல்ல விஜய்.. அந்த பொண்ணோட ஜாதகம் உன்னோட ஜாதகமும் திருமணத்துக்கான எந்த பொருத்தமும் இல்லை என்று ஜோசியர் சொல்லிட்டார்.. அப்புறம் எப்படி நாங்க அடுத்த கட்டத்தை பற்றி பேசுறது.. அது தான் சீக்கிரமாவே வந்துட்டோம்.. உன்னோட விருப்பத்தை அறிந்திருந்த படியால் இதுக்கு மாற்று பரிகாரம் ஏதாவது இருக்கான்னு கேட்டு பார்த்தோம் ஜோசியர் இந்த பொருந்தாத ஜாதகத்துக்கு பரிகாரம் பண்ணி திருமணம் பண்ணி வச்சாலும் அந்த திருமணம் நிலைக்காதுன்னு சொல்லிட்டார்…அப்புறம் நாங்க என்னதான் பண்ண முடியும்.. ” என்றார் யசோதா..

 உடனடியாக மீராவின் கைபேசியில் இருந்து தரகர்க்கு அழைப்பு விடுத்து வேகமாக வீட்டுக்கு வரும்படி கூறிவிட்டு வைத்தான் விஐபி…

 என்னவோ ஏதோ என்று அடித்து பிடித்து வீட்டிற்கு அவர் வரவும்

“ வாங்க சார்.. எனக்கு இப்பவே நீங்க எங்க அம்மாவுக்கு கொடுத்த ஜாதகம் சரியா கண்மணியோடதுதானான்னு தெரிஞ்சாகணும்.. அது கண்மணியோடதா இருக்காதுன்னு எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. அதை நீங்கதான் இப்ப கிளியர் பண்ணனும்.. நான் சொல்ற படி செய்ங்க.. ” என்று கூறினான்..

அவனுக்கு ஜாதகம் பிழைத்து போன கோபம். மற்றும் கவலையில் அவரை ஒரு வழியாக்கி விட்டான் விஐபி..

 சரி என்று தலையாட்டி விட்டு என்ன சொல்லப் போகிறானோ என்று அவனது முகத்தையே பார்த்திருந்தார்..

“ கண்மணியோட அம்மாக்கு இப்பவே அழைப்பு விடுங்க.. அவங்க எடுத்ததும். என்கிட்ட இன்னும் ரெண்டு கண்மணி எனும் பெயரில் ஜாதகம் இருக்கு.. அதில் எது உங்க பொண்ணோடதுன்னு சரியா தெரியலம்மா உங்க பொண்ணு பிறந்த நேரம் திகதி ஆண்டு சரியா சொல்லுங்கன்னு கேட்டு கன்பார்ம் பண்ணிக்கோங்க.. அப்புறம் அடுத்த கட்டம் என்னன்னு நான் பார்த்துகிறேன்..” என்று கூறிவிட்டு தரகர் அழைத்ததை பார்த்துக் கொண்டிருந்தான்..

 அந்த பக்கம் கண்மணியின் அம்மா அழைப்பை எடுத்ததும் அவன் சொன்னது போன்று தரகர் கேட்டார்..

 அவரும் தரகர் கையில் இருந்த அதே ஜாதகத்தில் உள்ளது போல் அவள் பிறந்த நேரம் ஆண்டு மாதம் திகதி என சரியாகவே கூறினார்..

“ அப்புறம் அண்ணே.. இன்னொரு முக்கியமான விஷயம்.. கண்மணி அப்பா இப்ப உயிரோட இல்லன்ற விஷயத்தை சொல்லி எங்களோட தற்போதைய நிலையும் சொல்லி மாப்பிள்ளை தேடுங்க.. என்னால என் பொண்ணுக்கு என்ன செய்ய முடியுமோ அதை நான் உங்ககிட்ட முன்னமே சொல்லிட்டேன்.. அதுக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளை பாருங்க.. பெரிய இடத்தில் இருந்து வந்து பொண்ணு பார்க்கிறேன் என்று சிலர் வந்து பார்த்து பொண்ணு குணம் அழகும் எல்லாம் சரியா இருக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போய் பிறகு ஆயிரம் குறை சொல்லி அதை சரி செய்ய சீர்வரிசை அதிகம் கேட்பாங்க .. அவ்வளவு சீர்வரிசை செய்வதற்கு என்கிட்ட இல்ல.. தயவு செய்து பெரிய இடமா கொண்டு வந்துடாதீங்க.. அப்படியும் மீறி பெரிய இடம் வந்தா நானே வந்ததும் வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பிடுவேன்.. நான் அப்படி பண்ற அளவுக்கு நீங்க வைக்காதீங்க.. சரி அண்ணா நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் நல்ல மாப்பிள்ளையா சீக்கிரமா பார்த்து சொல்லுங்க.. “ என்று கூறி அவர் வைத்துவிட்டார்..

கண்மணியின் தாய் சொன்ன பெரிய இடம் வேண்டாம். என்ற வார்த்தையும் விஐபியை வெகுவாக தாக்கியது.. ஆனாலும் முதல் ஜாதகப் பிரச்சினையை பார்த்துவிட்டு அது சரியானதும் இதை பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்..

அப்படின்னா ஜாதகம் எங்கும் மாற்றப்படவில்லை.. ஆனால் எப்படி ஜாதகம் பிழையாகும்?.. அதற்கு வாய்ப்பே இல்லை.. என நினைத்து குழம்பி போனான் விஐபி..

 அவன் இவ்வளவு நம்பிக்கையாக நினைப்பதற்கு ஒரே காரணம் அவர்களது திருமணம் இறைவன் போட்ட முடிச்சு.. அதை யாராலும் பிரிக்க முடியாது.. அப்படி இருக்கும் பொழுது ஏன் இப்படி ஒரு சோதனை?.. அதற்கு மாற்று வழி கண்டுபிடித்து கட்டாயம் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. அவள்தான் அவனுக்கானவள்.. என தீர்மானித்து விட்டு அந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அவன் சென்று விட்டான்..

மீரா அவனை அழைக்க அழைக்க நிற்காமல் வேகமாகவே சென்று விட்டான்..

எந்த உண்மை அவனுக்கு தெரியக்கூடாது என நினைத்து இருவரும் மறைத்தார்களோ அந்த உண்மையை தெரிந்து கொள்ளவே அவன் தேடிச்செல்கிறான்..

 ரோட்டோரம் இருந்து கிளி ஜோசியம் பார்ப்பவர் முதல் பெரிய ஜோசியர் வரை அனைவரும் இந்த ஜாதகத்தை பார்த்தால் உடனடியாக அதில் இருப்பதை கூறிவிடுவார்கள்..

அப்படி இருக்கும் போது அவனை எப்படி தடுத்து நிறுத்துவது என தெரியாமல் இருவரும் அடுத்த காரில் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள்..

 மகன் உண்மை அறிந்தால் தாங்க மாட்டான்.. உடைந்து போவான் என நினைத்தார் மீரா.. ஆனால் மகன் அவளை திருமணம் செய்து கொள்ள இந்த எல்லைக்கு போவான் என தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்..

மீரா ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லை ஆனால் அவன் கூறியது போன்று ஆயிரம் தான் நல்லவர்களாக இருந்தாலும் மகன் என வரும்பொழுது தாயாக மட்டும் தான் அவர் யோசிப்பார்..

 மீராவும் யசோதாவும் எவ்வளவு வேகமாக சென்றாலும் வி ஐ பி யை பிடிக்க முடியவில்லை.. அவன் யோசியர் வீட்டுக்கே சென்று விட்டான்..

 உள்ளே சென்றவன் அவன் பின்னே தாயும் அத்தையும் வருவதை தெரிந்து கொண்டு அவர்கள் வருகைக்காக காத்திருந்தான்..

அவர்களும் உள்ளே வந்து சேர்ந்தார்கள்..

“ இப்ப சொல்லுங்க சாமி இந்த பொண்ணு ஜாதகத்துக்கும் என்னோட ஜாதகத்துக்கும் என்ன பிரச்சனை?.. ஏன் திருமணத்திற்கு பொருத்தம் இல்லை?.. என்ன உண்மைன்னு நீங்களே சொன்னா பிரச்சினை இல்லை.. இல்லன்னா இந்த ஊர்ல ஒரு ஜோசியர் விடாம இந்த ரெண்டு ஜாதகத்தையும் கொண்டு போய் காட்டுவேன்.. “ என்றான்..

 அவன் இவ்வளவு சொல்லியும் அவர் மீரா மற்றும் யசோதாவின் முகத்தை தான் பார்த்திருந்தாரே தவிர அவன் கேட்டதுக்கு பதிலே சொல்லவில்லை..

“ என்ன சாமி அவங்கள பாக்குறீங்க?.. அவங்களும் எனக்கு உண்மை சொல்லலை.. நீங்களும் அவங்க சொல்லிக் கொடுத்த மாதிரி அமைதியாவே இருக்கீங்க… உண்மை என்னன்னு சொல்ல போறீங்களா?.. இல்லையா?..”

“ இனி எதையும் மறைக்க வேணாம்.. என்ன உள்ளதோ உள்ளபடி சொல்லிடுங்க.. எல்லாமே விஜய் க்கு தெரியனும்… நானும் சொன்னா தாங்க மாட்டான்னு தான் பார்த்தேன்.. அவனுக்கு தெரியக்கூடாதுனு மறைக்க நினைக்கலை.. ” என்றார் மீரா..

“ சாரி விஜய் இதை நான் சொல்லித்தான் ஆகணும்.. இந்த பொண்ணு கண்மணியோட ஜாதகத்துல ஆயுள் காலம் ரொம்ப பலவீனமா இருக்கு.. இத்தனை வருஷம் இந்த பொண்ணு வாழ்ந்துடுச்சு.. ஆனா இனியும் எத்தனை வருஷம் வாழும் என்று சொல்ல தெரியல.. மண்ணில் பிறந்த எல்லாரும் ஒரு நாள் இறக்கத்தான் போறோம்.. ஆனால் இந்த பொண்ணு ரொம்ப சின்ன வயசுலயே இந்த வாழ்க்கையை முடிக்கப் போகுது.. அது இன்னும் மூன்று மாதம் ஆறு மாசம் இல்லன்னா ஒரு வருஷம் அஞ்சு வருஷமா கூட இருக்கலாம்.. இந்த பொண்ணுக்கு உடல் அளவில்ல எந்த தீராத நோயும் இல்ல.. ஆனா ஜாதகத்தை பொறுத்தவரைக்கும் ஆயுள் காலம் ரொம்பவே குறைவு.. நீங்க வாழ வேண்டிய வாயசு பையன்.. இப்படி ஒரு தோசம் இருக்குன்னு தெரிஞ்சே அந்த பொண்ணை நீங்க திருமணம் செய்து கொண்டால் உங்களுடைய எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிடும்.. அதற்காகத்தான் பார்த்துட்டு ஜாதகம் பொருந்தலைன்னு சொல்லி அனுப்பிவிட்டேன்.. ” என்றார் யோசியர்..

 அவர் சொன்னதைக் கேட்டு ஒரு சில நிமிடங்கள் தான் அவன் அமைதியாக இருந்தான் என்று சொல்ல வேண்டும்..

“ அப்புறம் சாமி எந்த பிரச்சனையும் இல்ல கல்யாணத்துக்கு நாள் குறித்து தருவீங்களா?.. ” என்று கேட்டானே பார்க்கலாம்..

 மீராவோ விஜய் அப்படி கேட்டதை பார்த்ததுமே தீவிரமாக அவன் முடிவெடுத்து விட்டான். கட்டினால் அவளை தான் கட்ட வேண்டும் என்று அது தாய்க்கு புரிந்தபடியால் அவரும் தடுத்து எதுவும் பேசாமல் நடப்பது நடக்கட்டும் அவரது மகன் வாழ்க்கை சந்தோசமாக இருந்தால் போதும் என்று நினைத்து “ திருமணத்திற்கு முன்பு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?..” என ஜோசியரிடம் கேட்டார்..

“ ஆயுள் கூடுவதற்கு பரிகாரம் என்று என்னம்மா இருக்கு.. ஒன்னே ஒன்னு தான் சொல்ல முடியும்.. ஒரு நேரம் இந்த பொண்ணோட ஜாதக பலனை மாங்கல்ய பலம் முறியடிக்கலாம்.. வேணும் என்றால் அதை மட்டும் முயற்சி செய்து பாருங்க.. உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்து சரியான முகூர்த்தம் குறித்து தாரேன்.. அந்த முகூர்த்தத்தில் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அந்த முகூர்த்த நேரத்துக்குள் தாலி கட்டுறதுக்குரிய ஏற்ப்பாட்டை பாருங்க.. தடைகள் தாமதங்கள் வரலாம்.. ஆனா அதையெல்லாம் சமாளிச்சு அந்த சரியான நேரத்துக்குள்ள தாலி கட்ட வேண்டியது உங்களுடைய கெட்டித்தனம்.. ” என்று கூறி அவர்கள் இருவருக்கும் பொருத்தமான முகூர்த்தத்தை குறித்துக் கொடுத்தார்..

 அதன்பின் அவருக்கு தட்சணை வைத்து விட்டு மூவரும் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்..

 ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த காரில் மூவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..

 ஹால் சோபாவில் அமர்ந்த மகன் முகத்தில் எந்த ஒரு சஞ்சலமோ தடுமாற்றமோ எதுவும் இல்லை..

 அப்படி என்றால் அவளின் ஆயுள் காலம் குறைவு என்பதை பற்றி அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம்..

 என்னதான் இருந்தாலும் அவள் தான் மனைவி என்பதில் உறுதியாக இருக்கிறான் என நன்கு தெரிந்து கொண்ட மீரா அதனை தடுத்து எதுவும் பேசாமல் அவன் வழியிலேயே விட்டுவிட்டார்..

 காலேஜ் முடிந்து அவள் சொன்னது போன்று அவளுக்கு தாலி வெளியே தெரியாத அளவு ஃபுல் நெக் டாப்பை பர்சேஸ் பண்ணி கொண்டு தாமதமாக வீடு வந்து சேர்ந்தாள் சீதா..

 இன்றைய நாள் முழுவதும் விஐபி யின் பாடலோடு கண்மணிக்கு அமோகமாக சென்றது என்று சொல்லும் படி இல்லை.. கையில் ஊசி குத்திய வலியை பொருட்படுத்தாமல் வேலையில் ஈடுபட்டு விட்டாள்..

 இப்படி ஒரு தோஷம் கண்மணிக்கு இருப்பதை எக்காலம் கொண்டும் அவளுக்கு தெரியப்படுத்த விரும்ப மாட்டான் விஐபி..

 அதையும் மீறி எப்படி கண்மணியின் தாயிடம் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க போகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை..

Advertisement