Advertisement

யாரும் எதிர் பார்க்காத தருணத்தில் அதிரடியாக தாலியை கட்டி முடித்தான் ஆதி..

அவன் மூன்று முடிச்சிடும் வேளையில், அஞ்சலியின் விழி நோக்க, அதில் சிப்பி முத்துக்களாய் இரண்டு துளி நீர் அவன் கையில் பட, முதல் முறை வாழ்வில் குற்ற உணர்வே அவனை சூழ பெற்றவன், அந்த நொடி முதல் அவளை நேர்பட சந்திப்பதை தவிர்க்கவே செய்தான்.

கழுத்தில் தாலி கட்டி அவளை மனைவியாக்கியதில், ஊரார் வாய்களில் பூட்டு போட்டது போல யாரும் பேசாமல் இருக்க, எதிர்ப்பு என்பது பேச்சிலும் கூட எழவில்லை.

“பொண்ணுக்கு சம்மதம், பையனும் விருப்பப்படுறான், அஞ்சலிக்கு உறவுன்னு யாரும் இல்லை. அவளை கவனிச்சிக்குற தாயம்மாளுக்கும் இதுல உடன் பாடு தான் போல. இதுக்கு அப்பறம் நாம என்னப்பா பேச முடியும்”.

“இந்த மாசம் கோவிலை பூட்டி வெச்சிட்டு, அடுத்த மாசம் ஒரு பொண்ணை வெச்சி பூஜை பண்ணி திறந்துக்கலாம்” என்ற படி கூட்டமும் இருந்த இடம் தெரியாமல் கலைந்து சென்றனர்.

தாயம்மாளும் கூட, அவர்கள் அங்கு நிற்பது சரி இல்லை என்று அவர்களை அவர்கள் தங்கி இருந்த அந்த அரண்மனை வீட்டிற்கே அனுப்பி வைத்து விட்டு, எதற்கோ அவசரமாக தன் வீடு நோக்கி ஓடினார் அவர்.

மஞ்சள் மனம் மாறா தாலியும், தூங்கி எழுந்ததில் கலைந்த கேசமும், நடந்த அனைத்திலும் வாடிய முகமும், இரவு உடையில் ஒரு மண பெண்ணும், அவளின் தோற்றங்களும் கண்டு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை வெற்றிக்கும், சூர்யாவிற்கு.

“தூக்க கலக்கத்துல கொஞ்சமும் அலங்காரம் கூட இல்லாம தாலி கட்டிக்கிட்ட பொண்ணு இவள் தான்டா இருப்பா. அதோ இருக்கான் பாரு அதிசய மாப்பிள்ளை. பொண்ணு கிட்ட சம்மதம் கூட கேக்காம தாலி கட்டிட்டான், இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ” நல்லவன் போல புலம்பினான் வெற்றி.

அவனின் தலையில் ஒரு அடி போட்ட சூர்யா, “கூட இருக்கவன் எங்கன்னு தெரியல. மாடு மாதிரி தூங்கிட்டு. இவ்ளோ பிரச்சனை நடக்குற அப்போ வேடிக்கை பார்த்துட்டு இப்போ வாய் பேசுறியா? கொய்யால வாயில பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன். மூடிக்கிட்டு நில்லு” மிரட்டவே செய்தான்.

“ஆத்தி, சரியான கொலைகாரனுகளா இருப்பானுங்க போலயே. நாம வேடிக்கை பார்த்ததுக்கே இப்டி கோவ படுறானே. இது அத்தனைக்கும் நாம தான் காரணம்னு தெரிஞ்ச நம்மளை கொன்னுடுவான் போலவே. எதுக்கு வம்பு. நாம பேசாம இருப்போம்” அமைதியானான் வெற்றி.

வீட்டிற்குள் வந்ததில் இருந்து எதையும் பேசவில்லை அஞ்சலியும், ஆதியும். தரையில் அமர்ந்தவள் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓட துவங்க,

அங்கு இருந்த நாற்காலியில் பின் புறமாக தலை சாய்த்த ஆதி, எவ்வளவு முயன்றும் அஞ்சலியை நோக்கி வீச பட்ட வார்த்தைகளை அவனால் மறக்கவே முடியவில்லை.

அஞ்சலிக்காக தான் ஆதி இங்கு வந்து இருக்கிறான், அதுவும் கல்லூரியில் இருந்தே விரும்புகிறான் என்பதை கேட்டதும் அஞ்சலிக்கு அதிர்ச்சியில் உறைய,

ஆதிக்கு கூட அதிர்ச்சி தான். ஆனால் வெற்றி ஏன் அப்படி கூறுகிறான் என்பதை புரிந்ததால் அவன் அமைதி காக்க.

அவனின் அமைதியாக முகத்தை பார்த்த அஞ்சலிக்கு மேலும் பயம் வர, மிரண்டு போய் அவனையே பார்த்து கொண்டு இருக்க,

அதை கவனித்த ஆதி , “ஒன்றும் இல்லை. இது பொய் தான். நான் பார்த்து கொள்கிறேன்” கண் செய்கையால் நம்பிக்கை அளித்தான் அவளுக்கு.

அந்த நேரம் பார்த்து நாட்டாமை மனைவி அஞ்சலியை தாக்க முயற்சிக்க, அதை தடுத்த ஆதியின்  மேலும் அஞ்சலி மேலும் தான் ஊர் மக்களின் மொத்த கோவமும் திரும்பியது.

“எங்க நாட்டாமை பொண்டாட்டி மேலயே கை வெக்கிரிய?” என்று நாட்டாமையின் அல்லக்கைகள் துள்ளிய நேரம், அவர்களை அமைதியாக்கிய நாட்டாமை,

“அப்போ நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்க? அப்டி தானே” என்றவர் பார்வையில் இன்னும் சந்தேகம் இருக்கவே செய்தது.

“அட என்னங்க ஐயா நீங்க. அதான் தெளிவா சொல்லிட்டாங்க இல்ல. அப்புறமும் இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க? என்றான் கூட்டத்தில் ஒருவன்.

“அட என்னப்பா. நெருப்பு இல்லாமலா புகைஞ்சு இருக்கும். இந்த பொண்ணு சம்மதம் சொல்லாமலா இந்த பசங்க இவ்ளோ தூரம் வந்து இருப்பாங்க. அந்த பொண்ணு கிட்ட விவரத்தை விசாரிங்கபா” என்றான் கூட்டத்தில் இன்னொருத்தன்.

“இன்னும் என்னப்பா கேக்க சொல்லுற. அதான் ஊர் மொத்தம் சுத்தி அசிங்கம் பண்ணிட்டாளே. இன்னுமா அவளை கேக்கணும்” அஞ்சலிக்கு பேசவும் வாய்ப்பு கொடுக்காமல் வசை பாடினார் கூட்டத்தினர்.

அதிலும் ஒருவன்,

“அட என்னய்யா நீங்க, அவுங்க பெரிய வீட்டு பசங்களாச்சே, அப்டி இப்டி தான் இருப்பாங்க. இவ தானே ஒழுக்கமா நடந்து இருக்கனும். அது சரி நம்ப ஊர் பொண்ணா இருந்தா அதெல்லாம் இவ கிட்ட எதிர்பார்க்கலாம். எந்த ஊருனே தெரியல, என்ன குலமோ, என்ன ஜாதியோ. இத்தனை நாள் சாமி ஐயாவுக்காக நாம எதையும் கேக்கல.

அவர் போன அப்பறம் இவ இப்டி எல்லாம் ஆட்டம் போடுவான்னு நாம என்ன கனவா கண்டோம். எல்லாம் சாமி ஐயாவை சொல்லணும். நல்லதுன்னு நெனச்சி செஞ்சாரு. இப்போ இவ இப்டி பண்ணிட்டா” முடிக்கும் போதே மனம் உடைந்து மண்ணில் விழுந்தாள் அஞ்சலி.

இத்தனை நாள் தான் பிறந்த நேரம் சரி இல்லை, தன்னால் தான் தன் தாய் இறந்து போனார் என்றும், தந்தையும் கூட சில காலம் தன்னுடன்  இருந்து விட்டு இறந்து  விட்டார். தனக்கு ராசி இல்லை என்ற எண்ணம் அஞ்சலி மனதில் பல முறை எழுந்தே இருந்தது.

ஆனால் “அது தவறு, அப்டி யோசிக்க கூடாது” என்று இத்தனை காலம் கிருஷ்ணசாமி அவள் மனதை தேற்றி வைத்து இருக்க, இன்று, “தன் ராசி தான் காரணமோ” என்ற எண்ணம் மறுபடியும் அவளுள் எழ ஆரம்பித்து.

அதில் மனம் உடைந்தவள், நிற்கவும் திராணி இன்றி மண்ணில் விழ, அவளை ஆதரவாய் தாயம்மாள் பற்றி ஆறுதல் சொல்ல. எதிர் பாரா அத்தருணத்தில் தான் அவளின் கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டான் ஆதி.

அவனின் இந்த சிந்தை ஓட்டத்தை கலைத்தது தாயம்மாள் தான். வீட்டில் இருந்து காலை உணவை தயார் படுத்தி கொண்டு வந்தவர், அத்துடன் அஞ்சலிக்கு மாற்று உடையும், அவளின் சில பல சாமானும் ஒரு பையில் கொண்டு வந்தவர்.

“தம்பி, நீங்க ரொம்ப நேரம் இங்க தங்குறது நல்லது இல்ல. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் இங்க இருந்து கிளம்புங்க” அறிவுரை கூற.

“ஆமாம்டா, நாம இங்க இருக்க வேணாம். உடமே கிளம்புறது தான் நல்லது. ஊர் சரி இல்லை. அதுவும் நாம இங்க இருக்கறது ரொம்பவே ஆபத்து தான்” என்றான் சூர்யா, இவ்வளவு கலவரத்தில் தன் பாக்கெட்டில் இருக்கும் பென்டிரைவ் இருக்கிறதா இல்லையா என்று உறுதி படுத்தி கொண்டு,

அவர்களின் பேச்சாலும் கூட அசையாமல் அமர்ந்து இருந்தனர் அஞ்சலியும், ஆதியும். இருவரின் மனதின் ஓட்டம் அங்கு இருக்கும் யாருமே புரிய வில்லை.

“டேய், நாம திங்ஸ் எல்லாம் எடுத்து வைப்போம்  வா. இவங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு அசைய மாட்டாங்க. நாமளே எல்லாத்தையும் எடுத்து வைப்போம்” என்ற சூர்யா, வெற்றியோடு அனைத்தையும் எடுத்து கொண்டு முற்றத்தில் வந்து நின்றான்.

அதற்குள் தாயம்மாள் அஞ்சலியிடம் பேச்சு குடுத்து, கொஞ்சம் பேசி கொண்டு இருக்க, பேசும் அஞ்சலியின் குரலில் நினைவிற்கு வந்தான் ஆதி.

“சரிடா, எழுந்துரு, கமிஷனர் கூட போன் பண்ணாரு. சீக்கிரம் இங்க இருந்து கிளம்ப சொன்னாரு” அவசர படுத்தினான் சூர்யா.

சரி என்று மூவரும் தங்கள் கார் நோக்கி நடக்க, வீட்டு வாசல் வரை வந்த அஞ்சலிக்கு,  தான் என்ன செய்ய வேண்டும் என்பது புரியவே இல்லை.

“தாலி கட்டியதால் அவனுடன் செல்ல வேண்டுமா, கட்டாயத்தில் கட்டிய தாலியாதலால் ஆதி வாழ்க்கையை விட்டு தானே ஒதுங்கி செல்ல வேண்டுமா” என்பது அவளுக்கு புரியவே இல்லை.

கார் வரை சென்ற ஆதி, எதோ நினைத்து திரும்பி பார்க்க,

வாசலில் கைகளை பிசைந்து கொண்டு, முகத்தில் குழப்பமும், வாட்டமும் ஒன்று சேர, விழியை நிலத்தில் பதித்த படி நின்று கொண்டு இருந்தாள் அஞ்சலி.

அவளை நெருங்கியவன், “என்ன யோசிக்குறே. எதாவது எடுக்கணுமா? சீக்கிரம் எடுத்துட்டு வா” என்றான் பொறுமையாக.

இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள், அப்போதும் விழி உயர்த்தாமல்.

பின்ன, வா என்றான் தன் வலது கையை அவளிடம் நீட்டி அவளை அழைத்த வண்ணம்.

அவனின் இந்த செய்கையில் திகைத்தவள், “என்ன செய்வது?” என்று விழி விழித்து நிற்கும் போது.

“என்னை பிடிக்கலையா? என் கூட வர விருப்பம் இல்லையா? ” என்றான் அப்போதும் நிதானம் மாறாமல்.

பதறி கொண்டு, “அப்டி எல்லாம் இல்லை” என்றாள் அஞ்சலி.

“அப்போ கிளப்பு. நேரம் ஆகுது” என்றவன் கைகள் அப்போதும் அவளுக்காக காற்றில் காத்திருந்தது.

அவனின் அந்த வலிய கரத்திற்குள் தன் பிஞ்சு கைகளை சிறை படுத்த, அதை ஆதரவாய் அவன் பற்றி கொண்டு, “இனி இதை விடும் எண்ணம் எனக்கு இல்லை” என்பது அவனின் அழுத்தத்தில் உணர்த்த,

பல நாள் அவள் இழந்த அந்த பாதுகாப்பு உணர்வை, தன் கை அழுத்தத்தில் அவளுக்கு ஆதி உணர்த்த, வெம்பி இருந்த மனம் இப்போது நெகிழ்ச்சியில் நிறைந்தே போனது.

கை பற்றியவன் அவளை காரின் அருகில் அழைத்து வர, அதற்குள் காரின் பின் கதவை திறந்த வெற்றி,

“நீங்க ரெண்டு பேரும் பின்னாடி ஏறிக்கோங்க, நானும் சூர்யாவும் முன்னாடி உக்காந்துக்குறோம்” என்றவன் இருவரும் ஏறும் வரை  காத்திருந்து, பின் கதவை அடைத்து தன் முன் இருக்கையில் அமர்ந்தும் கொண்டான்.

அவனின் இந்த செயலில் உள்ளம் மகிழ்ந்து போனான் சூர்யா. வெற்றிக்கு எப்போதும் பின் சீட்டில் ஒற்றை ஆளாக அமர்வது தான் பிடிக்கும். முன் இருக்கையில் வசதி இருக்காது. கால் இடிக்கும். கை வைக்க இடம் இல்லை என்று ஏதேதோ காரணம் சொல்லி பின் இருக்கையில் தான் அமருவான். அப்டி பட்டவனின் இந்த நடவடிக்கை சூர்யாவை ஈர்க்கவே செய்தது.

ஆனால் அதை எதையும் கவனிக்கும் நிலையில் ஆதியும் இல்லை, அஞ்சலியும் இல்லை.

“வேறு வழி இல்லாம, தாலி கட்டிட்டதால நம்மளை கூட கூட்டிகிட்டு போறாரோ. இல்லை உண்மையிலேயே வெற்றி அண்ணா சொன்ன மாதிரி நம்ப மேல… ” என்ற எண்ணம் தோன்றும் போதே,

“ச்சி ச்சி. கண்டதையும் யோசிச்சி மனச குழப்ப வேணாம். நேரம் கிடைக்கும் போது நாமளே கேட்டுக்கலாம்” என்றவள் அமைதியாக,

ஆதியோ, இந்த திடீர் திருமணத்தை வீட்டில் எப்படி சொல்வது என்ற குழப்பத்தில் தான் இருந்தான்.

“தாத்தா, அம்மா கிட்ட கூட சொல்லிடலாம். ஆனா,அந்த வீம்புக்கார பெரிய மனுஷன் கிட்ட எப்படி சொல்ல முடியும். சொன்னாலும் அவர் புரிஞ்சிக்க மாட்டாரு.

நம்ப அந்தஸ்து இல்ல. ஜாதி இல்லன்னு பேசுவாரே. என்ன பண்ணலாம்” என்று யோசனையில் அவன் இருந்தான்.

முன் இருக்கையில் அமர்ந்து வண்டியை செலுத்திய சூர்யாவின் விழிகள், பாதையை விட பின்னால் இருக்கும் இருவர் மேல் தான் அதிகம் இருந்தது.

பின் இருக்கையில் முடிந்த வரை தள்ளி அமர்ந்த இருவரும், பிணைத்து இருந்த தாங்கள் கைகளை மட்டும் பிரிக்கவே இல்லை. கைகள் இரண்டும் இணைந்து இருக்க, அவர்களின் முக போக்கை வைத்து மன போக்கை யூகிக்க முயற்சித்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மறுபுறம் வெற்றிக்கு, “கால் இடிக்குது, கை வெக்க முடியல. என்னடா சீட் இது” என்றவன் கடுகடுத்தலும், இங்கீதம் கருதி அமைதியாகவே வந்தான்.

இதை அனைத்தையும் கவனித்த சூர்யா, ஊர் எல்லையை தாண்டியதை உறுதி படுத்தியவன், அனைத்திற்கும் தீர்வு காண, ஒரு இடத்தில் வண்டியையும் நிறுத்தினான், திடீரென.

அதில் மூவருமே சூர்யாவை பார்க்க, “அவனோ எறங்குங்கடா மொதல்ல” என்றவன் அஞ்சலியை வண்டியிலேயே இருக்க சொல்லி விட்டான்,

இருவருமே இறங்கி அவன் முன் நிற்க,

“என்ன பண்ணி இருக்கனு உனக்கு புரியுதா ஆதி. இதனால எத்தனை பிரச்சனை வரும் தெரியுமா? அது இல்லாம இந்த பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிச்சியா இல்லையா? இப்டி கழுத்துல தாலி ஏறுன பொண்ணை யார் கட்டிப்பாங்கன்னு யோசிச்சியா?

பார்த்தல, அந்த ஊர்ல ஒருத்தனும் இந்த  பொண்ணுக்கு ஆதரவா பேசல. இவள பேசவும் விடாம அவனுகளே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டானுங்க. இதுல இன்னொரு ஊர்காரன் எப்படி இவளை நம்புவான். என்ன தான் முடிவுல இருக்க நீ” வெடித்தான் சூர்யா.

அவனின் கேள்வியின் நியாயம் புரிந்த ஆதி, இறுதியாய் வாயை திறக்கவும் செய்தான்.

“வேற என்னடா பண்ண சொல்லுறே. தெரிஞ்சோ தெரியாமலோ என்னால அந்த பொண்ணோட பேருக்கு களங்கம் வந்துடுச்சி. எங்களுக்குள்ள ஒன்னுமே இல்ல தான். ஆனா அத யார் கிட்ட சொல்ல முடியும்.

பார்த்தல ஊரே கூடி அந்த பொண்ணு தப்பு பண்ணிட்டா. பிளான் பண்ணி பண்ணிட்டா. இனி அவ இந்த ஊர்ல இருக்க  கூடாது. ஊருக்கே கலங்கம். பூஜை பண்ணது தீட்டு ஆயிடுச்சி. அதனால பரிகாரம் பண்ணனும்னு எவ்வளவு பேசுனாங்க.

இது எல்லாமே என்னால தானேடா. ஒரு  பொண்ணை அப்டி விட்டிட்டு வர மனசு  வரலடா. அதான் மனைவியா கவுரவமா  கூட்டிட்டு போகணும்னு முடிவு பண்ணி தாலி  காட்டுனேன்.

அந்த பொண்ணு மனசுல என்ன இருக்கோ  எனக்கு தெரியாது.  ஆனா நான் தெளிவா  யோசிச்சி தான் தாலியை காட்டுனேன். இனி இவ மட்டும் தான் என்னோட வாழ்க்கைனு முடிவு பண்ணி தான் அவளை தொட்டு தாலி காட்டுனேன்.

அதுக்காக அவ என் கூடவே தான் வாழனும்னு அவளை கட்டாய படுத்த  மாட்டேன். இந்த பிரச்சனை கொஞ்சம்  அடங்குற வரைக்கும் நம்ப கூட நம்ப  ஊருல இருக்கட்டும். அதுக்கு அப்பறம் அவளோட முடிவு எதுவோ அத ஏத்துக்க நான் தயார்.

ஆனா இந்த  ஜென்மத்துல அவ தான் என்னோட மனைவி. அவ மட்டும் தான்  என்னோட மனைவி”.

அழுத்தம் திருத்தமாக முடித்தான் ஆதி.

ஆதி அவ்வளவு சுலபமாக முடிவுகளை எடுக்கமாட்டான். சின்ன விஷயம் என்றாள்  கூட பல முறை யோசிக்கும் அவன், இத்தனை பெரிய விஷயம் செய்து விட்டானே என்பது தான் இருவருக்கும்  ஆச்சர்யமாகவும், அடுத்து என்ன என்பதை நினைக்கும் போது கவலையாகவும் இருக்க தான் அவனிடம் கேள்வி கேட்டான் சூர்யா.

அவனின் பதிலே அவனின் திடமான  முடிவை எடுத்து உரைக்க. இனி வருவதையும்  ஆதி சமாளித்து கொள்வான் என்பதை உறுதியாக நம்பினார்கள் இருவருமே.

ஆனாலும் எதோ விடு பட்டத்தை போல சூர்யா உணர, யோசனையில் நின்று இருந்தவனை நெருங்கிய வெற்றி, அவனின் தோல் மேல் கை போட்டு கொண்டு,

“இன்னும் என்னடா யோசனை உனக்கு. எந்த ஊருக்கு எங்கள மறுபடியு டூர் கூட்டிட்டு போய் எங்கள பலி கொடுக்கலாம்னு யோசிக்குறியா. அடுத்து எதாவது காங்ஸ்டர், இல்லாட்டி டான் இருக்க ஊருக்கு கூட்டிட்டு போக போறியா? ” என்றான் நக்கலாக.

தன் தோள் மேல் இருக்கும் அவனின் கையை தட்டி விட்டு விட்டு, “அது இல்லடா, எல்லாமே சரி தான். ஆனா ஆதி எப்படிடா அஞ்சலி இருக்க அந்த ரூமுக்கு போனான். அதான் எனக்கு புரியல. உனக்கு எதாவது தெரியுமா?” என்றான் சூர்யா யோசனையுடன்.

“ஆத்தி என்ன நம்ப பக்கம் திருப்பிட்டாங்க. இந்த போலீஸ் பயலுக்கு நான் தான் அவன் மச்சானை குடிக்க வெச்சேன்னு தெரிஞ்சா இங்கயே என்ன தீத்து கட்டிடுவானே” நினைத்தவன் சூர்யாவை விட்டு பம்பிய படி, பாதுகாப்பிற்கு எங்கு பதுங்குவது என்று யோசிக்க,

அப்போது காரில் இருந்து இறங்கிய அஞ்சலி பட, உடனே  அஞ்சலி அருகில் சென்று நின்று விட.

“என்னடா நான் கேள்வி கேக்குறேன். நீ போய் அவ பக்கத்துல நிக்குற” என்றான் சூர்யா சந்தேகமாய்.

“அவன் பம்பாம வேற என்ன பண்ணுவான். இப்போ நடந்த எல்லா பிரச்னைக்கும் அந்த நாய் தான் காரணம்” என்றான் ஆதி.

“என்னடா சொல்லுற? என்ன நடந்தது?” என்றான் சூர்யா பதட்டமாக.

அன்று இரவு வெற்றி போதைக்கு மயங்கி, ஆதியை குடிக்க வைத்து, பின் அவன் தவறுதலாக அஞ்சலி இருக்கும் அந்த அறைக்கு சென்று விட. அடுத்த நாள் காலையில் நடந்த அனைத்தையும் அவன் கூறி முடிக்க.

அஞ்சலி பின் பம்பிய வெற்றியின் காதை பிடித்து அவனை இழுத்தான் சூர்யா.

“குடி பழக்கத்தை விட்டுடுன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன். இப்போ பாரு உன்னால என்ன நடந்துடுச்சினு” என்றான் ஒரு கையில் வெற்றியின் காதை பிடித்து கொண்டு, மறுகையில் அவனின் தலையில் நான்கு கொட்டும் வைத்தான்.

“டேய் விடுடா என்ன. ராத்திரி அவன்  சந்தோசமா இருந்துட்டு, தாலியும் கட்டிட்டு இப்போ என்ன அடிச்சா என்னடா அர்த்தம். எதோ அவனோட மனசுல இருக்க ஆசைய நான் நிறைவேத்தி வெச்சி இருக்கேன்னு சந்தோச படுங்கடா” என்றான் அப்போதும் திமிராக.

“இவனை”, என்று மற்ற இருவரும் அவனை துரத்த, பிடித்து வெளுத்து கட்ட, பின் சில பல அரட்டைகள் என்று அவை அனைத்தையும் பார்த்த அஞ்சலியுமே கொஞ்சம் கவலை மறந்து முகத்தில் மலர்ச்சியுடன் தான் நின்று கொண்டு இருந்தாள்.

அதை கவனித்த மூவருக்கும் ஒரு நிம்மதி வர, அதே சமயம் ஆதியை பார்த்த இருவரும்.

“இப்போ என்னடா பண்ண போறே? அஞ்சலியை எங்க தங்க வைக்க போறே? வீட்டுக்கு கூட்டிட்டு போகுறது கஷ்டம். உங்க அப்பா அது இதுன்னு கொஞ்சம் ஓவரா பண்ணுவாரு. புது இடத்துலயும் இவள தங்க வைக்க முடியாது. அடுத்து என்னடா? வினவினர் இருவரும்.

“அடுத்து என்னனு சொல்லுறேன். வண்டியில ஏறுங்க” என்றவன் அடுத்த பேச்சுக்கு காத்திருக்காமல் வண்டியில் அமர்ந்து கொள்ள.

அவனின் பதிலை எதிர்த்து பார்த்த மற்ற மூவரும் வண்டியில் ஏற, வண்டியும் அவ்விடத்தை விட்டு கிளம்பியது.

Advertisement