Advertisement

உணவு முடித்து, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, “சரி ஊரைச் சுற்றுவோம்” என்று மூவரும் கிளம்ப,

ரோட்டு பாதைக் கடந்து, இருபுறமும் பச்சைக் கம்பளத்தில் காட்சியளித்த வயலைப் பார்த்ததும் அதில் இறங்கி விட்டான் வெற்றி. மற்ற இருவரும் கூட அவ்வழி இறங்கி அங்கு இங்கு என்று அமர்ந்து பொறுமையாக சுற்றி கொண்டு இருந்தனர்.

தூரத்தில் ஒரு தென்னை மரத்தின் அடியில், யாரோ ஒருவர் பயிருக்கு தண்ணி பாய்ச்சிக் கொண்டு இருபதை கண்ட ஆதி,

“டேய். அந்த தென்னை மரத்துல இளநீர் நெறைய தொங்குதுடா. அந்த பெரியவர அறுத்து தர சொல்லுவோம் வாங்கடா” என்று அழைக்க.

“ஏது, அறுத்து தர சொல்லி கேக்க போறியா? உன் கழுத்தை அறுத்துடுவாங்கடி. எதோ உன் தோட்டத்துல காய்ச்ச இளநீர் பாரு ஐயா கேட்ட உடனே குடுத்துடுவாங்க. வந்த ஊர்ல செருப்படி வாங்காதடா” என்றான் வெற்றி, வயல்களின் முன் அமர்ந்து வித வித போஸில் போட்டோ எடுத்த படி.

“ஆமாடா. இந்த ஊர் வேற சரியான காட்டுமிராண்டிகள் இருக்க ஊர் போல. எதுக்கு எடுத்தாலும் கத்தி, கம்புனு தான் பேசுறானுங்க. எதுக்கு வம்பு. சும்மா இருடா” என்றான் சூர்யா எச்சரித்த தோணியில்.

“ஏது காட்டுமிராண்டிகளா!!! அப்போ உடனே இங்க இருந்து கிளம்பலாம்டா. இவனுங்கள நம்ப முடியாது” என்றான் வெற்றி, சற்று அவசர குரலில்.

“டேய். இப்போ எதுக்கு பதறுற. காட்டுமிராண்டினா என்னனு தெரியுமா உனக்கு. சொந்தமா வீடு கட்டிக்க கூட அறிவு வளர்ச்சி இல்லாம, காட்டையே வீடாக்கி வாழ்ந்த மனிதர்கள் தான் காட்டிமிராண்டிகள்னு சொல்லுறாங்க.

நாகரிகம் வளர்ந்து வந்த காலத்துல, கொஞ்சம் கொஞ்சமா மனுஷனோட அறிவும் வளர்ந்து வந்துச்சாம். அப்போ கல், மண் வெச்சி வீடு கட்டுற அளவுக்கு மனிதன் அறிவு வளர்றதுக்கு முன்னாடி, அவுங்க காட்டுல மரத்தோட மேல வாழ்ந்துட்டு வந்தாங்க. அதனால தான் அவுங்களுக்கு அந்த பேர்” என்றான் ஆதி விளக்கமாக.

“ஓ…இதெல்லாம் எப்படிடா உனக்கு தெரிஞ்சுது. நானும் உன் கூட தானே படிச்சேன்” இல்லாத தாடியைத் தடவிய படி வெற்றி கேட்க,

“நாங்க படிச்சோம். ஆனா நீ படிக்கவா ஸ்கூல் வந்த. ஊர் சுத்துறதுக்கு தானே வந்தே. அப்புறம் எப்படி உனக்கு இதெல்லாம் தெரியும்” என்றான் சூர்யா நக்கலாக.

“இந்த நக்கல், விக்கல் எல்லாம் இங்க வேணாம். இந்தா ஒரு போட்டோ எடு” என்ற படி சூர்யா கையில் தன் போனைத் திணித்தவன், போஸ் தருகிறேன் என்று கண்ட சேஷ்டைகள் செய்து கொண்டு இருந்தான்.

எதையோ நினைத்துக் கொண்டு நடந்தவன் பாதங்கள், அந்த தென்னை மரத்தை அடைய, அங்கு வேலை செய்து கொண்டு இருப்பவரிடம்,

“ஐயா, இந்த இளநீர் எல்லாம் எங்க கிடைக்கும். தண்ணி தவிக்குது ரோட்டுலயு கடைங்க எதுவும் இல்ல” என்றான் ஆதி.

செய்யும் வேலையை விட்டு விட்டு, நிமிர்ந்தாள் அவள். எதோ பழைய மண் படிந்த அழுக்கு சட்டையும், தலை பாகை போல் தலையைச் சுற்றி இருக்கும் துண்டும், இடுப்பில் சொருகி இருக்கும் பாவாடையும்,

தூரத்தில் இருந்து பார்க்க யாரோ ஒரு ஆண் என்றே நினைத்துக் கொண்டான் ஆதி.

அவளைப் பார்த்த உற்சாகத்தில், “ஏய் திருடி, இங்க என்ன பண்ணுரே. இது யார் தோப்பு. இங்க என்ன திருட வந்தே” என்றான் சிரித்த படி.

“ஹையோ. நான் திருட எல்லாம் வரல. இது தாயம்மாள் பாட்டியோட நிலம். தாத்தாக்கு உடம்பு கொஞ்சம் சரி இல்ல. வயல்ல பாத்திய திருப்பி விட சொன்னாங்க. அதான் நான் பண்றேன்” என்றாள் கொஞ்சம் பயந்து, பதறி.

“ஹை. ரிலாக்ஸ். நான் சும்மா தான் சொன்னேன். ஆமா வேற யாரும் ஆம்பளைங்க இல்லையா. நீ வந்து பண்ணுரே” என்றான் ஆதி.

“தாத்தா பாட்டிக்கு சொந்தம்னு யாரும் இல்ல. ஒரு மகன் இருக்காரு. அவரு பொண்டாட்டி பிள்ளைங்களோட சென்னைல இருக்காரு. ஏதாச்சும் விசேஷம், ஊர் திருவிழானா தான் வருவாரு. அதான் நானே பண்றேன்” என்றாள் விட்ட வேலையைத் தொடர எத்தனித்த படி.

பேச்சை முடித்து விட்டு, அவள் தன் வேலையைத் தொடர,

 “இப்போ எப்படி பேச்சை ஆரம்பிக்குறது” என்று யோசித்தவன்.

“ஆமா. அன்னைக்கு அந்த கமிஷனர் வீட்டுல எதுக்கு திருட வந்தே. அங்க மாட்டி இருந்தா என்ன ஆகி இருக்கும்?” என்றான் உண்மையான அக்கறையுடன்.

“அது, எங்க ஊர் வாண்டுகளோட நான் விளையாடிகிட்டு இருந்தேன். அதுங்க தான் தைரியம் இருந்த கமிஷனர் வீட்டுல இருந்து மாங்காய் திருடிட்டு வா பாப்போம்னு சவால் விட்டாங்க. அதான் அங்க போனேன்” என்றாள் சிறுபிள்ளை போல் உதட்டை பிதுங்கிய படி.

அதில் அவளை ரசித்தவனுக்கு, அவளின் இதழை ஸ்பரிசிக்க எண்ணம் வர, அந்த எண்ணத்தில் மண்ணை அள்ளி போடும் படி வந்தனர் வெற்றியும், சூர்யாவும்.

“ஹை! அஞ்சு. நீ இங்க தான் இருக்கியா? இங்க என்ன பண்றே? சரிவா எல்லாரும் ஒரு போட்டோ எடுப்போம்” என்றவன்,

“டேய் ஆதி. எங்க மூணு பேரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுடா. அண்ணாஸ் வித் சிஸ்டர்னு போட போறேன்” என்றவன் ஆதி கையில் போனைத் திணிக்க.

“எடுத்து தொலையுறேன்” என்ற கடுப்பில் சிலபல போட்டாக்களை எடுத்தான் ஆதி.

பின் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு, அஞ்சலியை வேலை செய்ய விடாமல் தடுத்து விட்டு,

“வாயேன் அஞ்சலி, அப்டியே உங்க ஊரை சுத்தி காட்டேன்” என்றான் சூர்யா சாதாரணமாக.

அஞ்சலியும் சரி என்று, நெல் வயல் தாண்டி, வாழைத் தோப்புக்களை கடந்து, கரும்புக் காட்டை தாண்டி முடிப்பதற்குள் அனைவருமே சோர்ந்து விட்டனர்.

“அஞ்சலி, முடியல. கொஞ்சம் ரெஸ்ட். எங்கேயாவது உக்காந்துட்டு அப்பறம் போகலாமா” என்றவர்களை அங்கு இருந்த தென்னை தோப்பிற்கு எதிரே இருக்கும் கிணற்றின் அருகே இருக்கும் காலி இடத்தில் அமர வைத்தாள் அஞ்சலி.

அவளும் சேர்ந்து அவர்களோடு அமர்ந்து கொள்ள,

“என்னமா. ஊர் சின்னதா இருக்கும்னு பார்த்தா. சுத்த சுத்த வளந்துக்கிட்டே போகுது. நீ எப்படி இவ்ளோ தூரம் நடந்தே வர. ஒரு நாளைக்கே நாக்கு தள்ளுது எங்களுக்கு” என்றான் சூர்யா இளைப்பாறிய படி.

“நான் இங்கயே தானேணா வாழுறேன். எனக்கு பழகி போச்சு” என்றாள் அஞ்சலி

“அது கிணறாமா. தண்ணி இருக்கும்ல. வாங்கடா தண்ணி குடிப்போம்” என்று மூவரும் எழுந்து செல்ல.

“ஹையோ அண்ணா. இது சாதாரண கிணறு இல்ல” பதறினாள் அஞ்சலி.

“பின்ன தங்க கிணறா” நக்கலடித்தான் வெற்றி.

“இல்ல அண்ணா. பேய் கிணறு. பொதுவா கிணறு கிட்ட கத்துனா ஒரு எக்கோ தானே கேட்கும். இந்த கிணத்துகிட்ட பேசுனா ரெண்டு எக்கோவா கேட்கும்” என்றாள் அப்பாவியாய்.

“ஏது ரெண்டு எக்கோவா. என்னமா. வெளியூர் காரங்க, எத சொன்னாலும் நம்புவாங்கனு உன் இஷ்டத்துக்கு அடுச்சி விடுறியா?” என்றான் வெற்றி நக்கலாக.

“ஹையோ. நீங்க வேணா பேசி பாருங்க. உங்களுக்கே புரியும்” என்றாள் திடமாக.

பேய் என்று வேறு கூறி இருக்க, வெற்றி அப்டியே பின் வாங்கி கொண்டு,

“டேய் சூர்யா. நீ ட்ரை பண்ணு” என்றான் பயத்தை வெளியே காட்டி கொள்ளாதவன் போல.

“இவனை எல்லாம்….” என்று எண்ணிய சூர்யா, கிணற்றின் அருகில் சென்று,

“வெற்றி ஒரு சைக்கோ” என்று கத்தினான் சூர்யா.

அஞ்சலி கூறியது போல் கிணற்றில் இருந்து “வெற்றி ஒரு சைக்கோ” என்று இரண்டு முறை ஒலி வந்தது.

வெற்றியைப் பார்த்து சிரித்த சூர்யா, “பார்த்தியாடா கிணறு கூட உண்மைய தான் பேசுது. அதுக்கு கூட உன்னை பத்தி தெரிஞ்சிபோச்சு போல” என்ற படி அவன் சிரிக்க.

ஆதியும், அஞ்சலியும் கூட சேர்ந்து சிரிக்க, அதில் கடுப்பான வெற்றி.

“ஓ ஹோ.. என்னையவே கலாக்குறியா?” என்று எண்ணியவன்.

கிணற்றின் அருகில் வந்து நின்று,

“சூர்யா, உள்ள ஒரு கத்தி மிதக்குதுடா” என்றான் அவனின் போலீஸ் மூளையை உணர்ந்து.

அவசரத்தில் கத்தி மிதக்காது, மூழ்க தான் செய்யும் என்பதை கூட மறந்த அவசர போலீஸ் மூளை,

“எங்கடா?” என்ற படி கிணற்றின் அருகில் வர.

அதை தனக்கு சாதகமாகியவன், “இதோ இங்க தான்டா” என்று சூர்யா சுதாரிக்கும் முன் அவனை உள்ளே தள்ளிவிட முயற்சிக்க.

கடைசி நிமிடத்தில் சுதாரித்த சூர்யா, வெற்றியையும் தன்னோடு இழுத்து கொண்டு கிணற்றின் உள்ளே குதித்தான் சூர்யா.

கிணற்றில் விழுந்ததும்,

“டேய் கொரங்கே. என் ஐபோன் போச்சு. இப்டி தண்ணியில தள்ளி விட்டுட்டியே” என்ற படி வெற்றி குறை பட்டு கொள்ள.

“யாருப்பா தள்ளி விட்டது. தன் வினை தன்னை சுடும் கேள்வி பட்டது இல்லையா. அதான் இது” என்று கூறி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ள,

அதை பார்த்து வெளியே நின்று சிரித்த அஞ்சலியின் அப்பாவி தனமான அழகில் சொக்கி தான் போனான் ஆதி.

அவனின் பார்வைத் தன் மேல் படுவதை உணர்த்த அஞ்சலி அவனைப் பார்த்து, “என்ன?” என்பதை போல் வினவ.

“ஒன்னும் இல்லை. தண்ணி தவிக்குதுனு சொன்னேன். நீ எதுவுமே பண்ணலியே” என்றான் முகத்தை பாவமாக வைத்து கொண்டு.

அதுவா, என்றவள் எதிரே இருக்கும் தென்னை தோப்பை நெருங்கி நடக்க முயல,

வழியில் இருந்த கல் தடுக்கி அவள் நிலை தடுமாற, தடுமாற்றம் வலு பெற கீழே விழ போனவளைப் பிடிக்க எண்ணி ஆதி முற்பட்ட,

அதற்குள் அவள் நிலை தடுமாறி விழ போக, அவளை இடையோடு பற்றிய படி, தன்னோடு சேர்த்து அணைத்தான் ஆதி.

அவனின் இந்த திடீர் தீண்டலில் பூவாய் மலர்ந்தால் அஞ்சலி. அவளின் மலர்ச்சி முகத்தில் அப்பட்டமாய் தெரிய திக்கித் திணறி தன்னை நிலைப் படுத்தி கொண்டவள், அவனை விட்டு பிரிந்து நின்றவள், தன்னை ஒருமுறை சரி பார்த்து கொண்டு,

தன்னை மொத்தமாய் தீண்டி விட்டு, ஒன்றும் நடக்காதது போல் நிற்கும் அவனைப் எப்படி எதிர்த்து கொள்வது என்பது புரியாமல் கைகளைப் பிசைந்த படி, விழி தாழ்த்தி தரையில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தவளை காண காண சிரிப்பும், ரசனையும் முட்டிக்கண்டு கொண்டு வந்தது ஆதிக்கு.

அவளின் அந்த படபடப்பை ரசித்தவன், மேலும் பேச்சைத் தொடர விரும்பி,

“ஆமாம் அந்த மாந்தோப்புல மட்டும் தான் திருடுற பழக்கமா இல்லை இந்த தென்னை தோப்புல கூட மரம் ஏறி திருடுவியா? என்றான் கண்களில் குறும்பு மின்ன.

அதில் அஞ்சலியின் ஈகோ தாக்க பட,

“ஹலோ அது எதோ விளையாட்டுக்கு பசங்க சொன்னாங்கனு பண்ணது. அவ்ளோதான். இதே வேலையாவா திரிவாங்க” என்றாள் குடைமிளகாய் போல கோவத்தில் சிவந்த மூக்கும், கன்னத்தோடும்.

ஒப்பனை இல்லாமல் கோவத்தில் சிவக்கும் அவளின் கன்னம், கோவைப்பழமாய் அவன் கண்ணிற்கு தெரிய. அதை அப்போதே கடிக்க வேண்டும் என்று தான் தோன்றியது ஆண் மகனிற்கு.

“சரி சரி கோவப் படாத. திருடிக்கு என்னமா கோவம் வருது” என்றான் அவளை மேலும் வம்பிழுக்கும் விதமாக.

“உங்களை..” என்றவள் கண் சுருக்கி, உதடு சுழித்து அவனை மிரட்ட, அவனோ மிரண்டே விட்டான் மங்கை அவள் குறும்பிலும், அழகிலும்.

கிணற்று நீரில் சிறிது நேரம் கவலை மறந்து, இங்கு வந்த வேலை மறந்து ஆட்டம் போட்ட சூர்யாவும், வெற்றியும் தொப்பலாக நனைந்து வெளியே வர,

அஞ்சலியை நெருங்கிய வெற்றி,

“தங்கச்சி இந்த அன்பு அண்ணன் உனக்காக ஒரு பரிசு எடுத்துட்டு வந்து இருக்கேன்மா. இந்த அண்ணனோட பரிசை வேணாம்னு சொல்லாம எடுத்துக்கோமா” சிவாஜி பாணியில் அதிகமாவே நடிக்க, எதோ வில்லங்கத்தை இழுக்க போகிறான் என்பது மட்டும் தெரிந்தது ஆதிக்கு.

“என்னாதுணா?” என்றாள் அஞ்சலையும் ஆர்வமாக.

“உன்கையை நீட்டி, கண்ணை மூடுமா” என்றான் வெற்றி.

அஞ்சலியும் அப்படியே செய்ய, அவள் உள்ளங்கையில் சிறு மீன் ஒன்றை வைத்து விட்டு,

“இப்போ கண்ணை திறந்து பாருமா” என்றான் வெற்றி.

கண்ணை திறந்தவள் கையில் மீனை கண்டதும், கூச்சலிட்டு, அருவெறுத்த முகத்துடன், கையில் இருந்த மீனை தரையில் போட்டவள்,

மீனை விட அதிகமாகே துள்ள ஆரம்பித்து இருந்தாள். துள்ளும் அவளின் முகத்தின் படபடப்பும், உடலின் நடக்கமுமே எதோ சரி இல்லை என்பதை உணர்த்த,

அவளைத் தோள் தொட்டு அமைதியாக்கிய சூர்யா,

“என்ன ஆச்சு அஞ்சலி. சாதாரண மீன் தான் அது” என்றான்

“எனக்கு நான்-வேஜ் பிடிக்காதுண்ணா. அதுவும் இப்டி அதுங்களை கொடுமை பண்ணி கொல்லுறதா பாக்கவே கொஞ்சம் பயம் எனக்கு” என்றாள் படபடத்த படி.

“சாரிமா எங்களுக்கு தெரியாது. மன்னிச்சிடு” என்று வெற்றி கூறவும்,

“நீங்க சுத்தி பார்த்துட்டு வாங்கணா. நான் வீட்டுக்கு போறேன்” என்றவள் அவர்களின் பதிலுக்கும் காத்திருக்காமல் வாடிய முகத்துடன் அவ்விடம் விட்டு சென்றும் விட்டாள்.

பாவம் வெற்றிக்கு தான் எதோ போல் இருந்தது. அவனின் நோக்கம் அவளைப் பதற வைப்பது இல்லை. அந்த மீன் பார்க்க பச்சை நிறத்தில், நீல கண்ணுடன் வித்யாசமாகவும், அழகாகவும் இருக்க,

அதை கொண்டு வந்து அஞ்சலிடம் கொடுத்தாள், பெண்களிற்கே இருக்கும் அந்த ரசிக்கும் அழகைப் பார்க்க எண்ணி தான் அவள் கையில் கொடுத்து இருந்தான் வெற்றி.

நடந்தது அனைத்தும் அவனுக்கு மாறாக போக, அவனுக்கும் முகம் வாடி தான் போனது.

தன்னால் யாருக்கும் கஷ்டம் வர கூடாது என்றே எப்போதும் நினைப்பான் வெற்றி. முடிந்த வரை மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்க கூடாது என்ற எண்ணம் அவனுக்கு. இதற்கு அவன் கடவுளின் பெயரைக் கொடுத்தாலும், அவனின் எண்ணம் மேம்பட்டது தானே.

அவனின் குணம் அறிந்த சூர்யா,

“வீட்டுக்கு போகலாம் வாங்கடா. சட்டை எல்லாம் நெனஞ்சி போச்சு. மொதல்ல போய் துணி மாத்தணும்” என்றான். வீட்டுற்கு சென்று கைபேசியை எடுத்தால் வெற்றியின் மனம் திசை திரும்பும் என்று எண்ணி கொண்டு.

சரி என்ற படி மூவரும் கிளம்ப, அப்போது பார்த்து வானம் கருத்து கொண்டு வர, சூரியன் வானை விட்டு மேகத்தில் தன்னை மறைத்து கொள்ள, மேகம் தான் இத்தனை நாள் தான் சேர்த்து வைத்த நீரை எல்லாம் பூமிக்கு திரும்பி தர தயாராகி கருத்து கிடந்தது.

மூவரும் வீடு திரும்பி, குளித்து முடிக்கவும், தாயம்மாள் உணவு கொடுத்து அனுபவும் சரியாக இருக்க, அதை உண்டு, உண்ட களிப்பில் கொஞ்சம் உறங்கி என்று இவர்கள் மாலை ஆறு மணி போல் தான் வீட்டை விட்டே வெளியே வந்தனர்.

“என்னடா இன்னுமா மழை பெய்யாம கருத்து கிட்டே இருக்கு. இத நம்பி நாம வெளிய கூட போக முடியாதேடா” மேகத்தின் சூழலைப் பார்த்து வெற்றி புலம்ப,

“மேகம் சரி ஆனாலும் இப்போ நாம வெளிய போக முடியாது ராஜா. அந்த நாட்டாமை சொன்னது மறந்து போச்சா. ஆறு மணிக்கு மேல வெளிய வர கூடாதாம்” நினைவு படுத்தினான் ஆதி.

“ஆமாம்டா. அது வேற இருக்குல. நான் எழுந்துக்கவே பதினொன்னு ஆகும், இதுல ஆறு மணிக்கு வெளிய போக கூடாதுனா எப்பிடிடா. இதுக்கு பேர் தான் டூரா? என்றான் கடுகடுத்த படி.

“நீ தூங்குனா நாங்க என்னடா பண்ண முடியும். ஆமா ஆறு மணிக்கு மேல ஏன் வெளிய வர கூடாது. அப்போ இந்த ஊர்ல தண்ணி எல்லாம் அடிக்க மாட்டாங்களா?” என்றான் ஆதி அசந்த படி.

“ஏன் அடிக்க மாட்டாங்க. ஆறு மணிக்கு அப்பறம் ஊற அமைதி ஆக்குறதே காய்ச்சின கள்ள சாராயத்தை வெளிய அனுப்பவும், மத்த மொள்ளமாரி தனம் பண்ணவும் தான்” என்றான் சூர்யா கையில் புளியையும், உப்பையும் சேர்த்து நாவில் வைத்து சப்பு கொட்டிய படி.

“என்னடா சொல்லுறே. கள்ள சாரயமா. இந்த ஊர்லயா. கட்டுப்பாடு, கட்டாத பாடுன்னுலாம் வாய் பேசுனாங்க” கேட்டான் வெற்றி புரியாமல்.

“இவனுங்க எல்லாம் அப்டி தான்டா. இத்தனைக்கும் அந்த நாட்டாமை இவ்ளோ அயோக்கிய தனம் பண்றது இங்க இருக்க யாருக்குமே தெரியாது. ராத்திரில கடத்தல் பண்ணிட்டு, பகல்ல ஊருக்கு உதவுறேன்னு நல்லவனா சுத்துறான். அதனால ஊர் மக்களுக்கு இவன் மேல சந்தேகமே வராது” என்று சூர்யா விளக்கிக் கொண்டு இருக்கும் போதே,

அவர்களின் வாசலிற்கு நேர் எதிரே, திடிரென நால்வர் வந்து, சில பல பொருட்களை அங்கும் இங்கும் வைத்து, இரண்டே நிமிடத்தில் ஒரு டீ கடை அங்கு உருவாக்க பட்டு, செயல் படவும் ஆரம்பித்தது.

“என்னடா. பார்த்துட்டே இருக்கும் போது டீ கடைய போட்டுட்டாங்க. மாய மந்திரம் செய்ற குரூப்பா இருக்குமோ” வியந்தான் வெற்றி.

“இது டீ கடை இல்லடா. அந்த நாட்டாமைக்கு தகவல் சொல்லுற மையம். இதுக்கு அப்பறம் தானே அவுங்க வேலைய ஆரம்பிப்பாங்க. ஒரு பாதுகாப்புக்காக ஆறு மணி ஆச்சுன்னா இவங்க இங்க ஆஜர் ஆகிடுவாங்க” என்றான் சூர்யா.

சிறிது நேரம் திண்ணையில் அமர்ந்து அந்த டீ கடையின் செயல்பாட்டை பார்த்தவர்கள்,

“வாங்கடா ஒரு டீயாச்சும் குடிப்போம். இந்த கிளைமேட்க்கு சூடா ஒரு டீ குடிக்கலாம்” என்றான் வெற்றி.

“அதற்கு ஒரு மர்ம புன்னகை உதித்தவன், வாங்கடா” என்று அந்த டீ கடையை நெருங்க,

மூவருக்கும் பிளாஸ்டிக் டம்ளரில் டீ பரிமாற பட, அதற்கான தொகையை செலுத்தி விட்டு தங்கள் திண்ணையில் அமர்ந்து அந்த அழகிய மாலை பொழுதை ரசித்த படி இருந்தனர் அந்த மூவரும்.

ஆனால் ஆதிக்கு மட்டும் அந்த டீ கடையில் எதோ ஒன்று உறுத்த, அங்கேயே தன் கவனம் மொத்தத்தையும் வைத்த படி பார்த்து கொண்டு இருந்தான் அவன். அதை கவனித்த சூர்யா,

“என்னடா அங்கேயே பார்த்துகிட்டு இருக்க. டீயை குடி. ஆறிட போகுது” என்றான் தன் டீயைப் பருகிய படி.

“அந்த கடை எதோ வித்யாசமா இருக்குடா. நாம போன அப்போ அந்த டீ கடை காரன் நம்மள ஒரு மாதிரி மேலயும் கீழயும் பார்த்தான். பார்த்துட்டு பிளாஸ்டிக் டம்ளர்ல டீ குடுத்தான்.

சரி கிளாஸ் டம்ளர் இல்ல போலனு நானும் நெனச்சுக்கிட்டு விட்டுட்டேன். அடுத்து அந்த வெள்ளை சட்டை காரர் வந்தாரு. எதுவுமே கேக்காம உள்ள இருந்து கிளாஸ் டம்ளர்ல அவருக்கு டீ குடுத்தான்.

சரி நாம வெளி ஊர்ன்றதால அப்டி செஞ்சான்னு பார்த்தா, அதோ அந்த கைல கலப்பையோட மேல் சட்டை இல்லாம ஒருத்தன் தரையில உக்காந்து இருக்கான் பாரு, அவன் வந்த அப்போ கேவலமா ஒரு பார்வை பார்த்துட்டு,

அவன் கையில இருந்த கொட்டாங்குச்சில டீ ஊத்தி, அதுவும் அவன் கிட்ட இருந்து தூர நின்னுக்கிட்டு, எதோ நாய்க்கு பிஸ்கட் போடுற மாதிரி குடுத்தான். அதான் எனக்கு ஒன்னுமே புரியல.

சரி அவன் கிட்ட கிளாஸ் இல்ல போலனு நெனச்சா கூட, நமக்கு குடுத்த மாதிரி பிளாஸ்டிக் டம்ளர்ல குடுத்து இருக்கலாம்ல. அவனுக்கு மட்டும் எதுக்கு கொட்டாங்குச்சி. மருத்துவ குணம் ஏதாச்சும் இருக்குமோனு யோசிக்குறேன்” என்றான் ஆதி தன் சிகையை கையில் கோதிய படி.

“ஹா ஹா” சத்தமாகவே சிரித்து விட்டான் சூர்யா, மற்ற இருவரும் அவனை விசித்திரமாக பார்க்க.

“தீண்டாமை, இத கேள்வி பட்டு இருக்கீங்களாடா?” என்றான் பொறுமையாக.

“அதான் காந்தி காலத்துலயே அழிச்சிட்டங்களேடா. சட்டம் எல்லாம் கூட இருக்கே, தீண்டாமை பாவ செயல்னு தமிழ் புக்லலாம் கூட போட்டு இருப்பார்களே” என்றான் வெற்றி ஆர்வமாக.

“யார்டா சொன்னது. அதெல்லாம் ஒழியல. இதோ உன் கண் முன்னாடியே நடக்குது பாரு” என்றான் டீ கடையைக் காட்டிய படி.

புரியாத பார்வையை இருவருமே பார்க்க, விளக்க துவங்கினான் சூர்யா.

“இந்த ஊர் எதுக்கு பெயர் போனது தெரியுமா? ஜாதி கலவரத்துக்கு, ஆணவ கொலைகளுக்கும் தான்.. வாரதுக்கு ஒரு ஜாதி சண்டை நடக்கும் இங்க அதையே சாக்கா வெச்சிக்கிட்டு, கீழ் ஜாதி காரங்களை அடிச்சி கொடுமை பண்ணுவாங்க.

இதோ இப்போ கூட அந்த டீ கடையில, அந்த வெள்ளை வெட்டி சட்டை போட்டவறு மேல் ஜாதியாம், அவருக்கு கிளாஸ் டம்ளர். சுத்தமா கழுவி, பால்ல டீ போட்டு தருவாங்க. காசும் வாங்க மாட்டாங்க”.

அதோ அந்த தரையில உக்காந்து இருக்காரே, கலப்பையை வெச்சிக்கிட்டு, அவரு கீழ் ஜாதியாம், அவுங்களுக்கு டம்ளர்லாம் கிடையாது. அவுங்களே கொட்டாங்குச்சியைக் கொண்டு வரணும். அதுல தூரமா நின்னு தான் அவன் டீ ஊத்துவான், அதுவும் பால் சுத்தமா கலக்கமா டிகாக்ஷன் மட்டும் தான். அதுவும் ரெட்டை விலைல”

இதுல வேடிக்கை என்னனா. தினமும் காலைல இந்த டீ கடைக்காரனுக்கு பால் சப்ளை பண்றதே அந்த கலப்பை வெச்சி இருக்கவன் தான். ஏன்னா அவன் தான் உழவு பார்த்து, மாடு கண்ணு எல்லாம் மெய்ச்சி பாதுகாக்குறவன். அவனுக்கே பால் இல்லாத டீ தான். அதுவும் கொட்டாங்குச்சில” என்றான் சூர்யா.

“அப்போ நமக்கு பிளாஸ்டிக் டம்ளர் எதுக்குடா. நாம எந்த ஜாதினு தான் அவுங்களுக்கு தெரியுமா” வினவினான் ஆதி.

“அங்க தான் அவுங்க மூளையை நீ பாராட்டணும். ஊருக்கு புதுசா வந்த ஒருத்தர் கிட்ட நீங்க எந்த ஜாதின்னு கேக்க முடியாதுல. அதனால வெளி ஊர் கரங்களுக்கு யூஸ் அன்ட் த்ரோவ் கிளாஸ். அதுவும் அந்த கடைக்கு பக்கத்துல எங்கயும் போட கூடாது. கடைக்கு தீட்டாகிடுமாம்” ஏளன சிரிப்பில் முடித்தான் சூர்யா.

“என்னடா. எதோ அந்த காலத்து பிளாக் அன்ட் வைட் படம் பாக்குற மாதிரி இருக்கு. அப்போ பெரியார், அம்பேத்கார், காந்தி இவங்க போராடுனது எல்லாம் வேஸ்ட்டா” வெறுப்புடன் கேட்டான் ஆதி.

“இந்த மாதிரி ஊர் தமிழ்நாட்டுல நெறைய இருக்குடா. ஊருக்குள்ள நடக்குற நெறைய விஷயம் வெளிய தெரியவே தெரியாது. தெரியாதா மாதிரி பார்த்துக்குவாங்க அந்த ஊரோட பெரிய தலைங்க. அதனால நாமலும் தீண்டாமை ஒழிஞ்சி போச்சு, பேர்ல ஜாதிய தூக்கிட்டா நாட்டுல இருந்து ஜாதி ஒழிஞ்சிடுச்சினு நெனச்சுக்கிட்டு இருக்கோம்.

அது எல்லாமே ஒரு மாயை தான். பணம் இருக்கும் உயர் ஜாதி செஞ்சி வெச்சி இருக்க மாயை. வெளி வராத கருப்பு பக்கங்கள் நெறைய இருக்கு” கூறியவன் பேச்சில் வருத்தம் அளவுக்கு அதிகமாவே இருந்தது.

“இது எல்லாம் உனக்கு எப்படிடா தெரியும். இதுக்கு முன்னவே இங்க வந்து இருக்கியா என்ன?” கேட்டான் வெற்றி.

“இல்லடா. எனக்குமே இதெல்லாம் புதுசு தான். கமிஷனர் தான் இதெல்லாம் எனக்கு சொன்னாரு. இந்த நாட்டாமயோட வெளிவராத இன்னொரு முகத்தை சாட்சியோட கண்டு பிடிக்க தான் என்ன இங்க அனுப்பி இருகாங்க” என்றான் தான் இங்கு வந்ததின் உண்மை காரணத்தைக் கூறிய படி.

“அடப்பாவி. இந்த விஷயம் ஊர் மக்களுக்கும் அந்த பாழாப்போன நாட்டாமைக்கு தெரிஞ்சா என்னடா ஆகுறது?” வெற்றி பேச்சில் உண்மையான பயம் தெரியவே செய்தது.

“தெரியாம தான்டா இத்தனை நாள் பார்த்துகிட்டு இருக்கோம். இன்னைக்கு ஒரு நாள் நைட் மட்டும் தான் வேலை. இன்னையோட அந்த நாட்டாமைக் கதை முடிஞ்சுது” என்றவன் கண்ணில் தெரிந்த கோவத் தீ, ஆதியைக் கூட மிரளவே செய்தது.

“எது செய்யுறதா இருந்தாலும் ஜாக்கிரதை சூர்யா. இவங்கள பார்த்தா ஜாதி வெறி பிடிச்சவங்க மாதிரி தெரியுது. ஏது செய்யுறதுக்கு முன்னாடியும் பல தடவை யோசிச்சி பண்ணு” எச்சரித்தான் ஆதி.

அதற்கு பதில் அளிக்க வாயைத் திறக்கும் முன்பே சூர்யாவின் கைபேசி சிணுங்க, அதை எடுத்து பார்த்தவன் முகம் இருக,

“கொஞ்சம் வேலை இருக்குடா. நான் கிளம்பனும். நைட் வருவேனா இல்லையானு தெரியல. எனக்கு கால் எதுவும் பண்ணாதீங்கடா” என்றவன் அதே அவசரத்தில் கையில் எதோ ஒரு பைலை எடுத்து கொண்டு கிளம்பியும் விட்டான்.

செல்லும் அவனையே பார்த்தவர் கொண்டு இருந்தவர்களுக்கு கவலை அதிகமாக இருந்தாலும்,

“போலீஸ் ஆச்சே பார்த்துக்குவான்” என்ற நம்பிக்கையில் அவர்களும் அமைதியாயினர்.

அடுத்த நாள் காலை, சூரியன் பளீர் என்று வானில் தோன்றி, தன் ஒளி கதிர்களை பூமியில் படர விட்டு இருக்க, தன் காரியத்தில் வெற்றி கண்ட சூர்யா வெற்றி களிப்பில், மலர்ந்த முகத்துடன் வந்து நிற்க,

ஊர் நடுவில் ஒரு பெரும் திரள் கூட்டம் கூடி இருக்க,

 “என்னவோ” என்று எண்ணியவன் கூட்டத்தில் புகுந்து பார்க்க,

கண்ட காட்சியில் மிரண்டே விட்டான் சூர்யா.

இரண்டு கம்பத்தில் வெற்றியும் ஆதியும் கட்ட பட்டு இருக்க, இருவரின் முகத்திலும் உடலிலும் காயங்கள் பல இருக்க,

ஒரு ஓரத்தில் அஞ்சலி அமர்ந்து கொண்டு அழுது கொண்டு இருக்க, அவளுக்கு ஆதரவாக தாயம்மாள் அவளை அரவணைத்த படி இருக்க,

இவை அனைத்திற்கும் நடுவே, தன்னை நால்வர் சூழ்ந்த படி நாற்காலியில் கால் மேல் கால் போட்ட படி அமர்ந்து இருந்த நாட்டாமை.

“என்ன போலீஸ். உன்னையே மிரள வெச்சிட்டேனா” என்றான் வஞ்சக சிரிப்பு அவன் இதழில் சிந்திய படி.

Advertisement