Advertisement

“யாரா இருக்கும் இந்த புள்ள? பில்டப் எல்லாம் அதிகமா பண்ணாங்களே அந்த பாட்டி, என்னவா இருக்கும்” என்ற கேள்வியே மூவர் மனதிற்கும் ஓட துவங்கியது.

எதையும் அதிகம் கண்டு கொள்ளாத வெற்றி மனதில் கூட, ‘பல சோகங்கள் இவள் வாழ்வில் உண்டு’ என்று கூறவும்,

சூர்யா துன்பத்தை எல்லாம் நேரில் இருந்து கண்டவன் தானே தன் வீட்டிற்கு உள் அனுமதிக்காமல், வீட்டு வாசலோடு நிறுத்தும் விதமும். சொந்தம் தான், ஆனாலும் தூர நிறுத்தி வைக்கும் ரகுநாத்தும், கண்ணால் பார்ப்பதே பாவம் என்று நினைக்கும் ஊர் மக்களும், போலீஸ் ஆதலால் அவன் முன் ஒன்றும் புறம் ஒன்றும் பேசும் ஊராரையும் கண்டவனுக்கு, சூர்யாவின் துயரம் தெரியாமல் இல்லை.

அதன் வலி அவனுக்கும் தெரியும் ஆதலால், சிரித்த படியே குறும்புடன் உலா வரும் அஞ்சலியைப் பற்றி தெரிந்து கொள்ள அவனும் விருப்பம் கொள்ள தான் செய்தான்.

அதிலும் மொட்டையாக ‘துயரத்தை கடந்து வந்தவள்’ என்று வேறு கூற, எதேதோ தோன்ற பயம் கொள்ளவே செய்தது வெற்றிக்கு.

நான் ஊரில் பெண்களின் பாதுகாப்பு பற்றி அறிந்தவன், அண்ணனாக தன் தங்கையைப் பாதுகாத்து வந்தவனுக்கு, அஞ்சலியைப் பற்றிய கவலையே அதிகம் தோன்ற செய்தது.

“சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டின்ற மாதிரி, சும்மா இருந்த நமக்கு ட்ரைலர் மட்டும் காமிச்சிட்டு போயிடுச்சி அந்த பாட்டி. இப்போ நமக்கு தான் மண்டை காயுது” மனதில் தாயம்மாளை வசை பாடினாலும், அவருக்காக காத்து இருந்தனர் மூவருமே.

இரவு உணவை எடுத்து கொண்டு ஆர அமர பொறுமையாக வந்து இறங்கினார் தாயம்மாள்.

வந்தவரை அவசரமாக உள்ளே அழைத்து அமர வைத்தவர்கள்,

“பாட்டி அஞ்சலி பத்தி இப்போவாச்சு சொல்லுங்க. சஸ்பென்ஸ் தாங்கல. மண்டையே வெடிச்சிடும் போல” என்றபடி தாயம்மாளை சூழ்ந்தனர் மூவருமே.

“அந்த புள்ளையா தம்பிகளா?” என்றவர் அடுத்து நிறுத்தம் எதுவும் இல்லாமல், அஞ்சலியை பற்றி மொத்தமாக கூற துவங்கினர்.

1999 ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்தில் இந்திய படைகளை வழி நடத்திய தளபதி அமித் மெஹ்ரா, மூன்று வார கடும் போட்டியில், எதிரி படைகளை மொத்தமாக அழித்து இந்திய படையைக் காக்கும் அரணாக இருந்தார்.

இறுதி நாள் போரில், இந்தியா வெற்றி பெற்றது என்ற செய்தியும் கூட வந்து விட, இறுதியாய் மூன்று வார யுத்த முடிவில் கார்கிலை கைப் பற்றியது இந்தியா.

அமித் மெஹ்ரா உடன் துணை தளபதியாக இருந்து ஆளுமை புரிந்தவர்கள், இந்த ஊரை சேர்ந்த கிருஷ்ணசாமி. சாமி என்று அழைப்பார்கள் அவரை.

இறுதி நாளில் வெற்றி பெற்ற திளைப்பில், ஆரவாரத்துடன் கார்கிலில் நம் நாட்டு கொடியை நட்டு வைத்து அதற்குரிய வீர வணக்கத்தைத் தெரிவித்து விட்டு,

சாமியையும் மற்றும் சில வீரர்களை முதலில் அனுப்பி வைத்து, கொடி நாட்ட பட்டதாக கூறும் படி அனுப்பி வைத்து விட்டு, அமித்தும் இதர படை வீரர்களும் அடுத்த வண்டியில் ஆடி பாடிய படி வந்து கொண்டு இருந்த வேளையில்,

குறுகிய வளைவு ஒன்றில் வண்டியைத் திருப்பும் போது, வண்டி திசை திரும்பி பனி சரிவில் விழுந்து விட,

இந்த திடீர் தாக்கத்தால், பனி சரிவு மேலும் ஆட்டம் கண்டு சரிய துவங்க, வண்டியில் இருந்த அத்துணை பேரையும் தன்னுள் மொத்தமாக முழுங்கி அவர்களின் தடமும் கூட இல்லாமல் செய்து விட்டது அந்த பனி சறுக்கு.

மகிழ்ச்சியில் திளைத்த அந்த தருணத்தில், அனைவரையும் வந்து அடைந்தது இந்த செய்தி. அதுவே அனைவரையும் சோகக் கடலில் மூழ்க செய்தது.

சாமிக்கு தான் இதில் பெரிய இழப்பு. இத்துணை நாள் இடது கையாக, அதிகாரிக்கு அதிகாரியாக, நண்பனுக்கு நண்பனாக இருந்த தன் மித்ரன் அமித் இறந்ததை ஏற்று கொள்ளவே முடியவில்லை.

தன்னோடு அழைத்து வந்து இருந்தால், இந்த துயரத்தில் இருந்து அவர் தப்பித்து இருப்பார் என்ற எண்ணமே அவரை வாட்ட செய்தது. அதற்கு பரிகாரம் தேடும் நாளும் இனிதே வந்தது.

கார்கில் யுத்தத்தில் இறந்தவர்களின் இறுதி சடங்கை ஏற்பாடு செய்து இருந்தது இந்தியா.

வென்றும் தோற்று போன அந்த விபத்தில் உயிர் விட்டவர்களுக்கும் சேர்த்தே சடங்குகள் நடத்த பட, துக்கம் சூழ்ந்த அந்த இடத்தில், உயிரைப் பிரியும் வலியை உணர்ந்தார் சாமி.

அதைத் தொடர்ந்து, கார்கில் யுத்தத்தில் சிறப்பாக பணிபுரிந்த வீரர்களுக்கும், உயிர் துறந்த தியாகிகளுக்கு பட்டம் அளிக்கும் விழாவும் ஏற்பாடு செய்து இருக்க, வீரர்களின் குடும்பங்களும் அதில் கலந்து கொண்டது.

அப்போது அமித் குடும்பத்தில் இருந்து, ஐந்து வயது மகளாக அஞ்சலி வந்தது சாமியை வாட்டவே செய்தது.

தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், அதுவும் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் வீட்டினர் உதவியோ, ஆதரவோ இன்று வரை கிடைக்க வில்லை.

அதன் கவலையிலேயே அஞ்சலியை பெற்ற உடனே அவரின் மனைவி இறந்து விட, வேலை பெண்களை வைத்து அஞ்சலியைப் பார்த்து கொள்வதாக பேச்சு வாக்கில் அமித் ஒரு முறை கூறிய நினைவு வந்தது சாமிக்கு.

இப்போதும் கூட, ஒரு வயதான பெண்மணி அஞ்சலியைத் தூக்கி வந்து விருதை வாங்க, ஒன்றும் புரியாத அந்த பிஞ்சு மனத்திற்கோ, தந்தையை இழந்ததற்கு இறுதியாய் கொடுக்க படும் விருது என்பது புரியாமல்,

தனக்கு எதோ தருகிறார்கள் என்று எண்ணிய அந்த குழந்தை மனது, அதை வாங்கும் போது கைகளை தட்டி, சிரித்து கூச்சலிட்டு குஷியாவதைக் கண்ட அங்கு இருக்கும் அனைவருக்குமே மனதை துப்பாக்கியால் துளைத்த வருத்தம் ஏற்பட்டது.

அதுவும் சாமிக்கு தான் அந்த பிஞ்சு முகம் மனதில் ஓட்டிக் கொண்டு அவரை வாட்டி எடுக்க, அதில் இருந்து மீள முடிவெடுத்தார், அஞ்சலியை தன் மகளாகவே தத்தெடுக்கவும் முடிவு செய்தார்.

அதை அவர் தன் மனைவியிடம் கூற, அவரோ.

“நமக்கு பையன் மட்டும் தான் இருக்கு, ஒரு பொண்ணு இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்னு யோசிச்சி இருக்கேன். இப்போ அஞ்சலி மூலமா ஒரு பொண்ணு கிடைக்குறது சந்தோசம் தானே” என்று அவரும் ஆர்வத்துடன் ஏற்று கொள்ள,

ராணுவத்தை விட்டு ஊர் திரும்பும் போது, தனக்கு பிறந்த மகள் தான் அஞ்சலி என்று ஊராருக்கு கூறி விட,

“ராணுவத்துல இருந்த அப்போ பொறந்து இருக்கும். ஊருக்கு வர போக இல்லல. அதான் நமக்கு தெரியல” என்று அனைவரும் ஏற்று கொள்ள. வேறு ஏதும் பிரச்னைகள் இல்லாமல் சுமுகமாக அனைத்தும் நடந்து வந்தது.

பாலைவனமாய் இருக்க வேண்டிய அஞ்சலி வாழ்க்கையும், சோலைவனமாக மாறி கிடக்க,

படிப்பில் படு தீவிரமாக இருந்த அஞ்சலிக்கு, மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தும் கூட, வீட்டை விட்டு பிரிந்து இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே, அதை வேண்டாம் என்றவள், அருகில் இருக்கும் கல்லூரியில் பிஸ்சி கெமிஸ்ட்ரி சேர்ந்தவள், அதிலும் கோல்ட் மெடல் வாங்க, அடுத்து எம்.ஸ்.சி செய்ய முடிவெடுத்து இருந்த நேரத்தில்,

சுற்றுலா செல்ல குடும்பத்தோடு சென்ற போது, அவர்கள் சென்ற கார் விபத்துக்குள் ஆகி விட, துரதிஷ்ட வசமாக அஞ்சலி மட்டும் உயிர் பிழைத்து வந்து விட்டாள்.

ஊரில் இருக்கும் சமீன்தார் வாரிசான கிருஷ்ணசாமிக்கு சொத்துக்கள் அதிகம் இருக்க, அவரின் மறைவிற்கு பின்னர் அதை சூறையாட சொந்தங்கள் கழுகு போல் சூழ்ந்து கொள்ள,

“வளர்ப்பு மகளான அஞ்சலிக்கு சொத்துக்கள் சேர முடியாது”, என்று இந்த பிரெச்சனை நீதி மன்றம் வரை செல்ல,

அஞ்சலி தான் பாவம், மாதத்திற்கு ஒரு முறை மதுரைக்கும், திண்டுகள்ளுக்கும் போவதும் வருவதுமாகவே இருக்கிறாள்.

இது போதாது என்று, அவளைத் திருமணம் செய்ய, இல்லாத சொந்தத்தில் இருந்து மாமன் ஒருவன் திடீரென தோன்றி அவளை இம்சித்து கொண்டு இருக்க,

வயது பெண் தனி ஆளாக அந்த வீட்டில் இருப்பது அவளுக்கு பாதுகாப்பு இல்லை என்று தாயம்மாள் தான் அஞ்சலியைத் தன் பாதுகாப்பில் வைத்து வருகிறார்.

இருந்தாலும் மாதத்திற்கு ஒரு முறை அவளின் அந்த திடீர் மாமன் வந்து குடித்து ரகளை செய்வதும், இவள் பயந்து அடுத்து மூன்று நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பதுங்கி இருப்பதும் வழக்கமாகி போக,

“எப்படியாச்சும் ஒரு நல்ல இடத்துல இந்த புள்ளைய கட்டி வெச்சி, மேல் படிப்பு படிக்க எங்கயாச்சும் சேர்த்து விட்டுட்டா, எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். இவ பேர் பின்னால இப்போ எந்த பேரும் இல்லாம போனதால தான். நேத்து பெய்ஞ்ச மழையில மொளச்ச காளான் எல்லாம் இப்போ மாலுக்கு வந்து நிக்குது. எல்லாத்துக்கும் அந்த ஆத்தா தான் துணை நிக்கணும்” என்றார் கண்ணில் தேங்கும் நீரை துடைத்த படி.

“சரி கண்ணுகளா. நான் ஏதேதோ பேசிகிட்டு இருக்கேன் பாருங்க. ராவுக்கு சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன். சூடு ஆரூரத்துக்கு முன்னாடி சாப்டுடுங்க” என்றவர் அமைதியாக எழுந்து சென்று விட்டார்.

அவர் சென்ற பின் உணவை உண்டவர்களுக்கு நினைவு மொத்தமும் அஞ்சலி மேல் தான் இருந்தது.

“சாப்பாடு ருசி பாக்காம பட்டினியா இருந்தவனுக்கு, பசி புதுசு இல்ல. ஆனா நித்தமும் மூணு வேலை ராஜ போகம் சாப்பிட்டவனுக்கு பசியைப் போல கொடுமையான விஷயம் எதுவும் இல்லை.

அதுவும் அஞ்சலி வாழ்க்கைல, இரண்டாவது தடவையா இந்த சந்தோஷ பட்டினியைப் பார்க்கிறா. பாவம் இல்ல அவளும்” என்ற எண்ணம் மூவருக்குமே வர, வெளியில் இதை பேசி கொள்ளவில்லை மூவருமே.

இரவு உறங்குவோம் என்று மூவரும் முடிவெடுக்க, “ஆளுக்கு ஒரு ரூம்ல படுக்கலாம்” என்று ஆதி கூற,

“ஏது ஆளுக்கு ஒரு ரூம்லயா. அந்த வீர சாகசம் எல்லாம் ஒன்னும் வேணாம். எல்லாரும் இதோ இங்கயே படுத்துக்கலாம், வாங்க” என்றான் வெற்றி பதறிய படி.

“ஒன்னா படுக்கணுமா? ஏன் அய்யாவால தனியா தூங்க முடியாதோ. உங்க வீட்டுல தனியா தானே நாயே தூங்குறே. இங்க மட்டும் என்னவாம்” எகிறினான் சூர்யா, ஒன்றாக தூங்கினால் தன் வேலை தடை படும் என்ற ஆதங்கத்தில்.

“டேய் இந்த வீடே சரி இல்ல. அதுவும் இல்லாம நாம இங்க வந்ததுல இருந்தே எதோ தப்பவே தோணுது எனக்கு. இந்த இடமே சரி இல்லை. என்னால எல்லாம் தனியா படுக்க முடியாதுபா” என்றவன் இருவரின் பதிலுக்கும் காத்திருக்காமல், தலையணையை அங்கேயே போட்டு படுத்தும் கொண்டான்.

“சரியான இம்சைடா இவனோட. பாரு மாடு மாதிரி நாடு ஹால்ல படுத்துட்டான்” என்ற படி சூர்யா கடுப்பாக.

“விடுடா. இன்னைக்கு பௌர்ணமி நிலவு எவ்வளவு அழகா இருக்கு பாரு. வா நிலவு வெளிச்சத்துல படுப்போம். புது எக்ஸ்பிஎரிஎன்ஸ்ஸா இருக்கும்” என்று ஆதியும் தனக்கென போர்வையும், தலையணையும் கொண்டு வந்து வெற்றி அருகில் படுத்து விட,

“சரியான கரடி. என் புஜைய கெடுக்குறதுக்குனே பொறந்து இருக்கான். இவனை… ” என்று அவனை தாண்ட கால் தூக்க.

வெற்றியோ தன்னை தான் மிதிக்க முயற்சிக்கிறான் என்று எண்ணியவன், மூடி இருந்த கண்களை திறந்து பதறி கொண்டு,

“அம்ம்மா..” என்று அலற,

“ஒன்னும் இல்லடா. தண்டுறேன் அவ்ளோ தான். மூடிக்கிட்டு படு” என்றவன் தனக்கான தலையணையும், போர்வையுடன் வந்தான்.

எதோ குண்டு போடுவது போன்று “தொப்” என்று தலையணையை தரையில் போட்டான் சூர்யா.

“பொறுமையாடா. பழைய வீடு. இடிஞ்சிட போகுது” என்றான் வெற்றி.

“ஆமாம். இடிஞ்சி உன் மேல தான் விழ போகுது. நானே நீ தூங்கும் போது பெரிய கல்லா பார்த்து தலைமேல போடுறேன் இரு” என்றவன் அதே கடுப்பில் படுத்தும் கொண்டான், கவனமாக தன் கைபேசியை சைலன்டில் போட்ட படி.

“சண்டாளா. பண்ணாலும் பண்ணுவடா நீயு” என்றவன் எழுந்து ஆதி அருகில் படுத்து கொண்டவன், அடுத்த சில நொடிகளில் உறங்கியும் போனான்.

ஆதியோ, அஞ்சலி பற்றிய நினைவுகளே மனதில் ஓட வீட்ட படி நிலவைப் பார்வையால் ரசித்த படி இருந்தான். முதன் முதலில் அவளைப் பார்த்த போது, அவளின் கண்ணில் இருந்த குறும்புத் தனத்திற்கு பின்னால் இத்துணை விஷயம் மறைந்து இருக்கும் என்று அவன் கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை.

“நாம ஊருக்கு போனதும் அவளுக்கு ஒரு நல்ல காலேஜ்ல சீட் வாங்கி குடுக்கணும். முடிஞ்சா அவளோட படிப்பு செலவைக் கூட நாமளே ஏத்துக்கணும்” என்று எண்ணியவன்,

“நாளைக்கே தாத்தா கிட்ட இத பத்தி பேசலாம்” என்று எண்ணியவன், எப்போது உறங்கினானோ அவனுக்கே தெரியாமல் உறங்கியும் விட்டான்.

மறு புறம் சூர்யா தான், ஆந்தை போல் கொட்ட கொட்ட முழித்து கொண்டு இருந்தான் கழுகு போல், “இருவரும் தூங்கி விட்டார்களா இல்லையா” என்று நோட்டம் விட்ட படி அவன் இருக்க. அப்போது பார்த்து அலறியது அவனின் கைபேசி.

“நல்ல வேலை. போனை சைலன்டில் போட்டேன். இல்லனா என்ன எதுன்னு ஆதி நோண்டி விஷயத்தைக் கரந்து இருப்பான்” என்று எண்ணியவன், பூனை போல் கைபேசியைத் தூக்கி கொண்டு, வீட்டின் பின் புறம் சென்று விட்டான் சூர்யா.

கிட்ட தட்ட இரண்டு மணிநேரம் ஆன பின், எதோ சலசலப்பு சத்தம் கேட்பது போல உணர,

புது இடம் என்பதால் தூக்கம் சரியாக வராமல் ஆதியின் காதில் அது விழ,

“என்ன சத்தமா இருக்கும்?” என்று யோசித்தவன் எழுந்து சுற்றிமுற்றி பார்க்க, அங்கு சூர்யா தன் இடத்தில் இல்லாமல் போனதை உணர்ந்தவன்.

“தண்ணி குடிக்க எதுவும் போய் இருப்பானோ!!!” என்ற சந்தேகம் வர, அப்போது எதோ ஒரு உருவம் பின் பக்கம் வழியாக உள்ளே வருவதை கண்டவன், எழுந்து மறைவாக நின்றுகொண்டவன், ‘யார் அது? ‘என்று கவனிக்க.

பூனை போல் பதுங்கிய படி உள்ளே வந்தான் சூர்யா. வந்தவன் முகத்தில் வடியும் வேர்வையைத் துடைத்த படி,

“நல்ல வேல யாரும் பார்க்கல” என்று தன்னை ஆசுவாச படுத்தி கொண்டவன், ஆதி இடத்தில் இல்லை என்பதை கவனிக்க தவறி, படுத்தும் விட்டான்.

அவன் படுத்த சில வினாடிகள் கழித்து தண்ணீர் பாட்டிலுடன் வந்த ஆதி, அசையாமல் தூங்குவதை போல் பாவுலா காட்டிய சூர்யாவை ஒரு வினாடி நின்று ஆராய்ந்த பின்னரே தன் இடத்தில் சென்று படுத்தும் கொண்டான்.

“இவன் எதோ பன்றான். கேட்டா மட்டும், என்னை எதுவும் கேக்காத. இப்போ எதுவும் சொல்ல முடியாது, ஆஃபிஸியல்னு சொல்லுவான். இருக்கட்டும் அவனைக் கவனிச்சிக்குறேன்” என்று எண்ணியவன் தூங்கியும் போனான்.

அடுத்த நாள் காலை சூரியன் உதித்து சில பல நேரம் கழித்தே முழித்தான் ஆதி. முழித்தவன் எழுந்து அமர,

தன் அருகே தூங்குகிறேன் என்று படுத்த வெற்றி, உருண்டு உருண்டு நடு முற்றத்தில் கோணலாக படுத்து கொண்டு, கை ஒரு புறம் கால் ஒரு புறம் என்று அவன் தூங்குவதை பார்க்கவே சிரிப்பாக இருந்தது ஆதிக்கு.

புன்னைகைத்த படி தன் பார்வையை திருப்ப, சூர்யா அவன் இடத்தில் இல்லாமல் அவனின் தலையணையும், போர்வையும் மட்டும் அவ்விடம் இருக்க,

“என்ன தான் திட்டத்துல இருக்கான் இவன். அப்போ அப்போ காணாம போய்டுறானே” என்று எண்ணியவன் எழுந்து, குளிக்கவும் சென்று விட்டான்.

அவன் குளித்து முடித்து வரவும், சூர்யா முன் வாசல் வழியாக வரவும் சரியாக போக,

“ஹய்யையோ இவன் கிட்டயா மாட்டனும். கேள்வி கேட்டே கொன்னுடுவானே. இவன்கிட்ட பொய் கூட சொல்ல முடியாதே” என்று அவன் எண்ணி கொண்டு இருக்கும் போதே.

“தம்பி, உங்களை தாயம்மா குளிச்சிட்டு சாப்பிட வர சொன்னாங்கபா” தூதுவனாக வந்தான் ஒருவன்.

“சரிங்க நீங்க போங்க. நாங்க வரோம்” என்றவன் துண்டுடன் குளியல் அறை புகுந்து கொண்டான் சூர்யா.

“ஹப்பாடா, எப்டியோ இப்போ தப்பிச்சாச்சு. இனி கொஞ்சம் ஜாக்குரதையா இருக்கனும்” என்று எண்ணியவன் குளித்து முடித்து வர.

அப்போதும் கும்பகர்ணன் தூங்கி கொண்டு தான் இருந்தான் வெற்றி.

“இவனை என்னடா செய்யுறது. இப்போதைக்கு இவன் எந்திரிக்க மாட்டான். எப்படியும் பதினோரு மணி ஆகும்” என்று இருவரும் யோசிக்க.

“இவன் எந்திரிகரதுக்குள்ள சாப்பிட்டுட்டு வந்துடுவோம் வாடா. அப்டியே இவனுக்கும் சாப்பாடு கொண்டு வந்துடுவோம்” என்றான் ஆதி.

‘சரி தான்’ என்று எண்ணிய சூர்யா, தன் அறையை மட்டும் கவனமாக பூட்டிக்கொண்டு, வீட்டின் வாசல் கதவை லேசாக சாத்தி சென்றான்.

இவர்கள் சென்றதுமே, சுட சுட இட்லியும் கரிகுழம்பும் பரிமாற பட,

அதன் சுவையில் தன்னை மறந்தவர்கள் இரண்டு இட்லி கூட வைத்து சாப்பிட்டு பின்னரே எழுந்தனர்.

சாப்பிட்டு முடிக்கும் போது, ஆதியின் கைபேசி அலற, அதை எடுக்க,

“டேய் எங்கடா போனீங்க ரெண்டு பேரும். வீட்ல யாரையுமே காணோம். என்னை தனியா விட்டுட்டு நீங்க என்னடா பண்ணுறீங்க?” என்றான் வெற்றி, பயம் கலந்த பதட்டத்தில்.

“உனக்கு சாப்பாடு வாங்க தான்டா வந்து இருக்கோம். நீ குளிச்சிட்டு ரெடி ஆகு. நாங்க சாப்பாட்டோட வரோம்” என்றவன் வெற்றிக்கும் உணவை எடுத்து கொண்டே தான் சென்றனர்.

வெற்றி உணவு அருந்தி கொண்டு இருக்கும் நேரம்,

எங்கு இருந்தோ மூச்சிரைக்க ஓடி வந்தான் ஆள் ஒருவன்.

வந்தவன், “நாட்டாமை ஐயா வராரு. ஐயா வராரு” என்றான் இம்மூவரைப் பார்த்து.

“எந்த கொய்யால வராரு?” சலிப்புடன் சூர்யா கேட்க,

அதற்குள் தன் புல்லட் வண்டியில், அதற்கே உரிய இரைச்சலுடன் வந்து இறங்கினர் அந்த ஊர் நாட்டாமை.

அளவான மீசை, வடிவான முகம், கழுத்தை நெறிக்கும் தங்க சங்கிலி இல்லாமல், அழகாய் வாரிய கேசத்துடன் வந்தார் நாட்டாமை 2.0 அப்கிரேடட் வர்ஷ்ன்.

“இவர பார்த்த நாட்டாமை பீலிங்கே வரலியேடா. எதோ ஆட்ட் ஷூட்டிங் வந்த மாடல் மாதிரி இருக்காரு” என்றான் வெற்றி.

“சும்மா இருடா. பாக்க தான் சாது பீஸ். பண்ற வேலை எல்லாம் ஐயோகிய தனம் தான். இந்த ஊர்ல உக்காந்துகிட்டு வெளிநாட்டுக்கு கஞ்சா, சரக்கு எல்லாம் கடத்துறான்னு சொன்னா நம்புவியா? இவன் கேடிக்கு எல்லாம் கேடி” என்றான் சூர்யா நாட்டாமையின் புகழ் பாடிய படி.

“என்னடா பில்லா ரேஞ்சுக்கு பில்டப் தர” என்றான் வெற்றி.

அதற்குள் நாட்டாமை உள்ளே வந்து விட, “யாரப்பா நீங்க எல்லாம்? இங்க எதுக்கு வந்து இருக்கீங்க? நேத்துல இருந்து ஊருக்குள்ள சுத்துறதா பசங்க சொன்னாங்க? என்ன விஷயம்?” என்றான் கரகரத்த கன்றாவியான குரலில்.

“என்னடா, நீ குடுத்தா பில்டபுக்கு, மாஸ் வில்லனா இருப்பான்னு பார்த்தா, இவன் குரலே ‘அவன் இவன்’ விஷால் மாதிரி இருக்கு” என்றான் வெற்றி அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“அது தான்டா அவனோட பிளஸ்சே. இந்த குரல் இருக்கவனா அயோக்கிய தனம் பண்ணுவான் அப்படின்ற போர்வையில தான் எல்லா வேலையும் செய்யுறான். ஒரே ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லாமல்” என்றான் சூர்யா.

அதற்குள் வந்த நாட்டாமையின் கூர் விழி அவர்களைத் துளைப்பதை உணர்ந்த ஆதி,

“நாங்க டூர் வந்து இருக்கோம் சார். ஒரு வாரம் இங்க இருந்து பக்கத்துல இருக்க இடம் எல்லாம் சுத்தி பாக்க வந்து இருக்கோம். இத பத்தி சண்முகம் கிட்ட சொல்லிட்டேனே” என்றான் ஆதி.

“ஓ சண்முகம் சொன்ன பசங்க நீங்க தானா. சரிதா. நான் கூட யாரோன்னு விவரம் கேட்கலாம்னு வந்துட்டேன்” என்றவர் மூவரையும் ஆராயும் பார்வைப் பார்க்க தவறவில்லை.

“ஊர் சுத்துற வேலைய மட்டும் பார்த்துட்டு போகணும் தம்பி. வேற வம்பு வழக்கு எல்லாம் வெச்சிக்க கூடாது. ஒரு வாரத்துல கிளம்பிடனும். சாயங்காலம் ஆறு மணிக்கு எல்லாம் வீட்டுக்குள்ள வந்துடனும். நாங்க ரொம்பவே கட்டுப் பாடான மனுஷங்க புரிஞ்சிதா?” என்றவர் சூர்யாவை மட்டும் தன் கூர் விழிகளால் நன்கு ஆராய்ந்து விட்டு.

அவன் மேல் சந்தேக பார்வைப் பதித்து விட்டு,

“சரி தம்பி நான் கிளம்புறேன்” என்றவர் தன் கைகூப்பி வணக்கம் வைத்து விட்டு,

சூர்யாவை மறுமுறைப் பார்த்து விட்டே அவ்விடம் விட்டு சென்றான்.

“என்னடா அவன். எதோ பொண்ணா பாக்குற மாதிரி உன்னை அந்த பார்வை பார்த்துட்டு போறன்” என்றான் வெற்றி, தடைபட்ட தன் உணவை அருந்த அமர்ந்த படி,

வெற்றியின் கேள்விக்கு வன்மமாக புன்னகைத்தவன் மனதிலும் கண்ணிலும் தெரிந்த அந்த அழிவை உண்டாக்கும் தீயை ஆதியும் கண்டு கொள்ள தவறவில்லை.

“என்ன தான் திட்டத்துல இருக்கான் இவன்” என்று ஆதிக்கு தோன்ற. குழப்பதிலே தொடர்ந்தது அவர்களின் தேடலும்.

Advertisement