Advertisement

“பாஸ் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே காத்துகிட்டு இருக்குறது.. போலீஸ் வேற நம்மளை தேடுது.. இன்னும் நாம இப்படியே காத்துகிட்டு இருந்தா நம்மளை பார்த்த உடனே சுட்டு தள்ள ஆர்டர் குடுத்துடுவாங்க.. எதுவா இருந்தாலும் சீக்கிரம் செய்யணும்” வெற்றி வீட்டின் எதிரே மாறு வேடத்தில் இருந்த நாட்டாமையும் அவனின் கூட்டாளியும் பேசி கொள்ள

“அவனுங்க மூணு பேரையும் அடிக்குறத விட, அவனுங்களுக்கு உயிரா இருக்க பொருளை அவனுங்க கிட்ட இருந்து தூக்கி, அவனுங்கள உயிரோட சாகடிக்கும்டா.. போது தான் என் கோவம் அடங்கும்” கோவத்தில் பேசியவர் இதழில் ஏதோ கோர சிரிப்பும், மனதில் எதோ ஒரு திட்டமும் இருக்கவே செய்தது

மறுபுறம், “ஸ்வாதி ஒரு நிமிஷம் நான் சொல்லுறதை கேளேன்.. ஒரே ஒரு தடவை நில்லேன்.. என் மனசுல இருக்குறத சொல்லிடுறேன்.. ஒரே ஒரு தடவை மட்டும் கேளு” பிடி கொடுக்காமல் ஓடி கொண்டு இருந்த ஸ்வாதியை துரத்தி கெஞ்சி கொண்டு இருந்தான் வெற்றி

“உன் மனசுல இருக்குறது தான் நேத்தே நான் தெரிஞ்சிகிட்டேனே.. என்னை எவ்வளவு அழ விட்டு இருப்ப.. நீயும் கொஞ்ச நேரம் அழு ராஜா.. நாளைக்கு உன் கிட்ட என்னோட காதலை சொல்லுறேன்” இந்த எண்ணத்தில் வெற்றியிடம் இருந்து தப்பி ஓடி கொண்டு இருந்தாள் ஸ்வாதி

“என்னடி இப்படி பண்ணுற.. உன் கிட்ட என்னோட காதலை எப்படி தான் சொல்ல போறேனோ” தலையில் அடித்து கொள்ளாத குறையாக புலம்பினான் வெற்றி

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்? வீட்டுக்கு வர முடியுமா?  நான்காவது முறையாக வெண்பாவிற்கு மெசேஜ் செய்தவன் அவள் பதிலுக்காக காத்திருக்க,

அவளோ அவனின் மெசேஜ் அனைத்தயும் படித்து விட்டு, பதில் எதுவுமே தராமல் மௌனம் சந்தித்த படியே தான் இருந்தாள் வெண்பா

“நீ எனக்கு வேணாம்.. உன் மேல எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் இல்லனு உன்னோட வாயால என்னால கேக்க முடியாது.. அதுக்கு நான் இப்டி தள்ளி இருக்குறதே நல்லது” என்று எண்ணியவள், சூர்யா என்ன கூற வருகிறான் என்பதை கூட கேட்க விரும்பவில்லை

மறுபுறம், “தாத்தா இப்போ என்ன பண்ணுறது.. ஏதாவது யோசிச்சி சொல்லுறேன்னு சொல்லி ஒரு நாள் முடிய போகுது.. இன்னும் நீங்க இப்டி அமைதியா இருந்தா எப்படி?” மருதநாயகத்தை படுத்தி எடுத்து கொண்டு இருந்தான் ஆதி

“நீ பண்ணி இருக்க வேலை என்ன அவ்ளோ சாதாரணமான வேலையா? அதுவும் உங்கள் அப்பனை சமாளிக்குறது அவ்வளவு ஈசி இல்ல.. இப்டி அவசர படுத்துனா நான் என்ன பண்ண முடியும்.. கொஞ்சம் பொறுடா ஆதி” என்றவருக்கும் கூட, ரகுநாத்தை எப்படி சமாளிப்பது என்பது சுத்தமாக புரியாத ஒன்றாக தான் இருந்தது

“இது எல்லாம் சரி ஆகணும்னா திடீர்னு ஏதாவது அதிசயம் ஒன்னு நடந்தா தான் உண்டு” அவருக்குள்லேயே புலம்பியவர்,

“பேசாம நம்ப மருமக கிட்ட சொல்லி ரகுநாத்தை சமாளிக்க சொல்லுவோமா” என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நொடியே,

“பாவம் அதுவே வாயில்லா பூச்சி.. தேவை இல்லாம அவளையும் இதுல மாட்டி விட வேணாம்” என்று அவரே பதிலும் அளித்து கொண்டு குழம்பி தான் கிடந்தார் மருதநாயகம்

அடுத்த நாள் விடியல் ஏனோ ஒரு நெருடலை தந்து இருந்தது சூர்யாவின் மனதில்

அதனாலேயே முதல் வேலையாக வெண்பாவை அழைத்து, தன் மனதை பேச வேண்டும் என்று எண்ணினான் சூர்யா..

காலை எழுந்த உடனே,

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.. முக்கியமான விஷயம்.. ஒரு முறை மட்டும் நான் சொல்லுறதை கேளு.. ப்ளீஸ்” என்று கைபேசியில் வெண்பாவிற்கு மெசேஜ் அனுப்பியவன் அவள் பதிலுக்கு காத்திருக்க,

இம்முறையும் பதில் எதுவும் வராமல், மென்னமே பதிலாகி போய் இருந்தது.. வேறு வழி இல்லை என்பதை புரிந்து கொண்டவன், அவளை சந்தித்தே தீருவேன் என்ற முடிவில் காலையிலேயே அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தான் சூர்யா

ஏதோ வேலையாக இருந்த அஞ்சலி, எதர்ச்சியாக தன் பார்வையை திருப்ப, அப்போது தான் வீட்டின் எதிரே இருக்கும் அந்த சாப்பாடு கடையை கவனித்து பார்த்தவளுக்கு, அங்கு எப்போதும் இருக்கும் ஆட்கள் மாறி, புதிதாய் சிலர் இருப்பதை உணர்ந்தவள்,

“இப்டி புதுசா மாத்துனா சூர்யா அண்ணா நம்ப கிட்ட சொல்லி இருப்பங்களே.. சொல்லாம கொள்ளாம எப்படி இப்டி மாத்திட்டாக” யோசித்தவள்

“அண்ணா கிட்டயே இத பத்தி விசாரிப்போம்” என்று எண்ணியவள் சூர்யாவை தேட, அவனோ வாசலில் அமர்ந்த படி ஷூகளை அணிந்து கொண்டு இருந்தான்

அவனிடம் இதை பற்றி கேட்க எத்தனித்த நேரம், வீட்டின் வாசலில்  புழுதியை கிளப்பி கொண்டு வந்து  நின்றது சில கார்கள்

“என்னவோ” கவனத்தை வாசலின் பக்கம் திருப்பியவள் பார்வைக்கு சில ஆண்கள் சாதாரண போர்மல் உடையில், படு கம்பீரமாய் அனுமதியும் கேட்காமல் வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே வருவது தெரியவும், சற்றே பதற தான் செய்தாள் அஞ்சலி

“யாரு அண்ணா இவங்க? உங்க டிபார்ட்மென்ட் ஆளுங்களா? கேக்காம கொள்ளாம இப்டி உள்ள வராங்க?” சூர்யாவை வினவியவள், ஒன்றும் புரியாமல் நிற்க

“எனக்கு யாருன்னு தெரியலமா.. இவங்கள இதுக்கு முன்னாடி நான் பாத்ததும் இல்லை.. யாருன்னு தெரியலையே” சூர்யாவிற்கு கூட நடப்பது எதுவுமே விளங்க வில்லை

அதற்குள் வந்தவர்கள் சூர்யாவை நெருங்கி இருக்க, அவனும் கூட அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்று கொண்டான். வந்தவர்கள்,

“நீங்க தானே மிஸ்டர். சூர்யா?” என்றார் அந்த கூட்டத்தில் முதலில் நின்ற ஒருவர்

“ஆமாம் சார்..நீங்க யாரு? என்னை எதுக்கு தேடி வந்து இருக்கீங்க?” என்றான் சூர்யா தன் கம்பீர குரலில்

“நான் சரவணன், நாற்காட்டிக்ஸ் பீரோல இருந்து வரோம்.. அதாவது போதைப்பொருள் தடுப்பு பிரிவு.. உங்க வீட்டை சோதனை போடனும்” என்றார் அவரும் கொஞ்சமும் சளைக்காமல்

“என் வீட்டை சோதனை போடணுமா? நானும் இந்த நகரத்தில் ஏ.சி.பி தான் சார்.. என் வீட்டை எதுக்கு நீங்க சோதனை போடணும்” புரியாமல் கேட்டான் சூர்யா

“நீங்க சட்ட விரோதமா போதை பொருள் கடத்துறதா எங்களுக்கு தகவல் வந்து இருக்கு.. அதனால் உங்க வீட்டை நாங்க சோதனை பண்ணனும்.. எங்களுக்கு நீங்க எந்த இடைஞ்சலும் பண்ண மாடீங்கனு நினைக்குறேன்” என்றவரின் கண் அசைவிற்கு, சரசரவென ஒரு படையே வீட்டிற்குள் நுழைந்து ஒரு இடம் விடாமல் தேடி கொண்டு இருக்க, அவை அனைத்தையுமே சூர்யா அமைதியாய் நின்று வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருந்தான்

அதற்குள் அவ்விடம் வந்த சிவகாமியும் சந்தானமும் கூட, என்ன நடக்கிறது என்பது புரியாமல் கிடக்க,

“தம்பி இங்க என்ன நடக்குது? யார் இவங்க எல்லாம்..நம்ப வீட்ல அப்படி என்ன தேடுறாங்க?” என்றார் சந்தானம்

“போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்தவங்க அப்பா இவங்க.. ஏதோ நம்ப வீட்ல போதை பொருளை மறச்சி வெச்சி இருக்கறதா தகவல் வந்து இருக்காம்.. அதான் சோதனை போடுறாங்க” என்றவனுக்கு கூட கொஞ்சம் குழப்பமாகவே தான் இருந்தது

“நம்ப வீட்டுல எப்படிபா போதை பொருள் எல்லாம்” சந்தானம் கேட்டு கொண்டு இருக்கும் போதே

“சார் இங்க மேல வாங்க சார்.. இங்க ஏதோ இருக்கு” மேல் இருக்கும் அறையில் இருந்து குரல் வர, அனைவருமே அவ்விடம் விரைந்து செல்ல,

அங்கு இருக்கும் அலமாரி ஒன்றில் துணிகளுக்கு இடையில் ஒரு வெள்ளை போடலாம் ஒன்று இருப்பதை பார்க்க, அங்கு இருக்கும் அனைவருக்குமே அதிர்ச்சி தான்

சரவணன் முன்னே சென்று, அந்த பாக்கெடை பிரித்து நுகர்ந்து அது போதை பொருள் தான் என்பதையும் உறுதி படுத்தவே செய்தார்

“இது எப்படி சூர்யா இங்க வந்தது.. அது இல்லாம இது யாரோட ரூம்?” என்றார் அவர்

அதற்கு பதில் அளிக்க முயன்ற அஞ்சலியை தடுத்தவன்,

“இது என்னோட ரூம் தான்” என்றான் சூர்யா

“இதனால நாங்க உங்களை அரெஸ்ட் போறோம்.. இதற்கான விசாரணையும் உங்க மேல நாங்க ஆரம்பிக்குறோம்.. வாங்க எங்க கூட” என்றவர்கள் சூர்யாவை விலங்கிட்டு கீழே அழைத்து செல்ல

இவை அனைத்தும் நடக்கும் போது கூட சூர்யாவின் முகத்தில் கலக்கமோ, குழப்பமோ எதுவுமே இல்லை.. மாறாக ஒரு தெளிவு இருக்கவே செய்தது

வீட்டின் வாசலை நெருங்கும் போது, எதையோ யோசித்தவனாய்,

“எனக்கு ஒரு நிமிடம் மட்டும் டைம் தர முடியுமா?” என்றான் அவசரமாய்

அதற்கு சற்றே யோசித்த சரவணன், “பாருங்க சூர்யா.. இப்டி அரெஸ்ட் பண்ண அப்புறம் யார் கிட்டயும் பேச அனுமதிக்க கூடாது என்பது ரூல்ஸ்.. இது உங்களுக்கே தெரியும்..

“பட் நான் உங்களை பத்தியும், உங்களோட நேர்மை பத்தியும் அதிகம் கேள்வி பட்டு இருக்கேன்.. இது ஏதோ உங்களுக்கு எதிரா நடந்த சதியா தான் எனக்கு தெரியுது.. அதனால் முடிந்த வரை சீக்கிரம் பேசிட்டு வாங்க.. உங்களை கண்காணிக்க யார் எங்க பதுங்கி இருக்காங்கனு தெரியல.. சோ மேக் இட் பாஸ்ட்” என்ற சரவணனுக்கு பார்வையால் நன்றியை தெரிவித்தவன், அவசரமாக வீட்டிற்குள் விரைந்தான் சூர்யா

சென்றவன் அஞ்சலியை தனியே அழைத்து,

“எனக்கென்னவோ இதெல்லாம் அந்த நாட்டாமையோட வேலையா இருக்குமோனு தோணுது.. இது மட்டும் அவனோட வேலையா இருந்தா கண்டிப்பா இன்னேரம் ஆதி, வெற்றி ரெண்டு பேரையும் கூட அரெஸ்ட் பண்ற மாதிரி செட் பண்ணி இருப்பான்” என்றவரிடம்

“அந்த பாக்கெட் என் ரூம்க்கு எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியாது அண்ணா.. இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்றாள் அஞ்சலி பதறிய படி

“எனக்கு தெரியும் அஞ்சலி.. நம்ப நாளு பேரையும் ஒன்னா மாட்டி விட தான் அந்த  நாட்டாமை இப்டி பண்ணி இருக்கான்.. நான் எப்படியாவது பேசி ஒரு நாள் டைம் வாங்குறேன்.. அதுக்குள்ள நான் நிரபராதினு ப்ரூவ் பண்ணியே ஆகணும்.

“அப்படி ப்ரூவ் பண்ணாம போனா, குறைஞ்சது நாளு வருஷமாச்சும் ஜெயில்ல போட்டுடுவாங்க.. அது இல்லாம போதைப்பொருள் கடத்தல்ல கைது ஆனா ஜாமீனும் கிடையாது.. அதோட நான் இத்தனை நாள் கஷ்ட பட்டு வாங்கின போலீஸ் வேலையும் என் கிட்ட இருந்து ஒரேடியா போய்டும்.. இதுக்காக தான் அந்த நாட்டாமை இப்டி ஒரு பிளான் பண்ணி இருக்கான்

இதுக்கான ஆதாரம் எல்லாம் அந்த பெ…” அவன் பேசும் போதே அவ்விடம் வந்த சரவணன்,

“சூர்யா உங்களோட டைம் முடிஞ்சி போச்சு.. இதுக்கு அப்புறம் உங்களை நான் பேச அனுமதிக்க முடியாது.. நீங்களே எங்களோட வந்துடுங்க” என்றார் கொஞ்சம் பணிவாக

சரி என்ற படி, மறுபடியும் கையில் விலங்குகள் பூட்ட, நடந்தவன், நான்கடி முன்னே சென்றவன் எதையோ யோசித்து, பின் அஞ்சலி புறம் திரும்பியவன்

தன் இரு கைகளை இதய வடிவில் வைத்து சைகை காட்டியவன், அந்த வடிவத்தை பல முறை அவளுக்கு கட்டிய படியே நடந்து சென்றான் சூர்யா, சிறையை நோக்கி.

Advertisement