Advertisement

அதற்கு சரியான நேரம் வந்தது..

 சீதா ஹோட்டலி இருந்து வீட்டுக்கு சென்றாள்..

பின் வழியாக அவனும் வீட்டுக்கு வர சீதா சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்தாள்..

 அப்போது ராம் அவளுக்கு பின் வந்து அவள் இடையை சேர்த்து அணைத்து கொண்டு கழுத்தில் முகம் புதைத்து

“ நீயும் யமுனாவும் என்னடி பாப்பா, அத்தை அப்படின்னு ஏதோ பேசுனீங்க ஏதும் குட் நியூஸா?..” என்றான்..

 கணவன் பண்ணும் சேட்டையில் கூச்சம் வந்தாலும் அதை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு “ ஏங்க முத்து.. என்ன வேலை இது?. திடீர்னு யமுனா யாராவது வந்துட போறாங்க.. கொஞ்சம் விலகி நில்லுங்க ப்ளீஸ்..” என்றாள்..

 கண் பார்வை தெரியாவிட்டாலும் தந்தையும் தங்கையும் வீட்டில் இருப்பதை நினைத்து அவனும் விலகி நின்று கொண்டான்..

 அவள் சொன்னதும் விலகி நின்ற கணவனை பார்த்து கன்னத்தை பிடித்து இழுத்து கொஞ்சி “ எப்பவுமே என் முத்து சமத்து பாப்பா தான்.. தினமும் என் புருஷனோட வீரதீர உழைப்பாள் கூடிய சீக்கிரமே பாப்பா வரலைன்னாதான் ஆச்சர்யம்..” என்று கூறிவிட்டு யமுனா கேட்டதையும் சேர்த்து கூறினாள்..

“ அதுக்கு என்னடி இன்னும் அதிகமாக உழைத்து பாப்பாவை வர வச்சு தங்கச்சியோட ஆசையை நிறைவேத்திடுவோம்..” என்று கூறிவிட்டு மனைவியின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு வேகமாக வெளியேறிவிட்டான்..

 கணவனின் முத்தத்தில் நெகிழ்ந்து போய் அவளும் வந்த வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு சென்று விட்டாள்..

 ஏழாவது மாதத்தில் கண்மணிக்கு வளைகாப்பு செய்வதாக ஏற்பாடு பண்ணினார்கள்..

 ஆனால் அதற்குரிய நாள் இல்லாததால் ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு வைப்பதாக திட்டமிட்டு இருந்தார்கள்..

 துரதிஷ்டவசமாக ஒன்பதாவது மாதத்தில் அந்த வளைகாப்பை அனுபவிப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு..

 இதற்கு மேல் முடியாது என்னும் கட்டத்தில் எட்டாவது மாதத்திலேயே கண்மணிக்கு பிபி,சுகர் வந்து அதனால் கை கால் முகம் அதிக வீக்கம் கொண்டது..

 விஐபிக்கு கண்மணியை பார்க்க பயமாக இருந்தது அப்படி இருந்தாள்..

 நாளுக்கு நாள் கால் வீக்கம் அதிகமாகிக் கொண்டே போக பயந்து போய் உடனடியாக அவளை மருத்துவமனையில் சேர்த்தார்கள்..

கண்மணியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதே மீரா ராமுக்கு அழைத்து விஷயத்தை கூறிவிட்டார்..

 உடனே ஹோட்டலை நண்பன் மற்றும் துர்கா கணவனின் பொறுப்பில் விட்டுவிட்டு வேகமாக தயாராகி காரில் ஏறினான் முத்து..

“ ஏங்க சீக்கிரம் சென்னைக்கு மூன்று பிளைட் டிக்கெட் போடுங்க..” என்றாள் சீதா..

“ என்னது பிளைட் டிக்கெட்டா?.. யாருடா மூணு பேர்.. ” என்றான்..

“ நீங்க, நான், அம்மா,.. அங்க கிரிடிக்கல் சிட்டுவேஷன்.. அத்தை சொன்னாங்க.. நம்ம இங்க ஆறுதலா கார்ல அவ்வளவு தூரம் போக டைம் இல்லங்க.. இப்பதான் அவங்களுக்கு நம்ம சப்போர்ட் தேவைப்படும்.. என்னை பற்றி யோசிக்காதீங்க.. இப்ப எனக்கு தான் பக்கத்துல நீங்க இருக்கீங்களே.. இப்படி ரொம்ப எமர்ஜென்சின்னா பிளைட்ல போவோம் மத்தபடி நம்ம கார் தான்..” என்றாள்..

காதல் அவளின் இயலாமையும் கையால வைத்தது..

 சூழ்நிலையை புரிந்து கொண்டு அவள் செயல்பட்டதை பார்த்து சந்தோஷப்பட்டான் ராம்…

 ராம் சீதாவுடன் பேசுவதை வைத்து அவன் எந்த மூடில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்..

 என்னடி என்று கேட்டால் அவன் காதல் கணவன் மூடில் இருக்கிறான் என்று அர்த்தம் ..

 அதுவே என்னடா, என்னமா. என்று கேட்டால் அவன் அக்கறையாக பாசமாக இருக்கிறான் என்று அர்த்தம்..

போக போக சீதாவும் அவன் அழைப்பை புரிந்து கொண்டாள்..

 வேகமாக மூன்று பிளைட் டிக்கெட் போட்டுவிட்டு நண்பன் உதவியோடு காரில் ஏர்போர்ட் சென்றார்கள்..

சென்னையில் — மருத்துவமனை

அந்த நேரம் பார்த்து ஆரம்பத்தில் இருந்து கண்மணிக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் செமினார் ஒன்றிற்காக அமெரிக்கா சென்று இருந்தார்..

 அவளை தற்போது பரிசோதித்த டாக்டர் அவளது ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார்..

 கொஞ்சமும் கண்மணியாள் குழந்தையை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை..

அதை தெரிந்து கொண்டு இந்த டாக்டர் ஏன் இப்படி செய்தார் என்று குழப்பமாக இருந்தது..

 உடனடியாக கண்மணிக்கு முக்கியமாக செய்ய வேண்டிய மருத்துவத்தை செய்து விட்டு உடனடியாக சீப் டாக்டரை சந்தித்து ரிப்போர்டை காட்டி விஷயத்தை கூறினார்..

“ சார் அந்த பொண்ணு இப்ப ரொம்ப வீக்கா இருக்காங்க.. சீசர் பண்ணி குழந்தையை வெளியே எடுத்தாலும் குழந்தை பிழைகிறதுக்கு வாய்ப்பு இருக்கான்னு எனக்கு தெரியாது.. அந்த சீசர் தாங்க கூடிய அளவு சக்தி அந்த பொண்ணோட உடம்புக்கு இருக்கானு எனக்கே சந்தேகமா இருக்கு.. எவ்வளவு முயற்சி செஞ்சாலும் ஏதாவது ஒரு உயிரைத் தான் காப்பாற்றலாம்.. சீசர் பண்ணி அந்த குழந்தையைக்கு ஆபதுன்னா குழந்தை வெளியே எடுத்துட்டு கர்ப்பப்பை அகற்ற கூடிய சூழ்நிலை வரும்..

 அப்படி இல்லைன்னா அவங்களுக்கு ஏதும் ஆபத்துனா பாதுகாப்பா குழந்தையை மட்டும் வெளியே எடுக்கலாம்..

 நமக்கு இரண்டு உயிருமே உயிர்தான்.. இரண்டு உயிரும் முக்கியம்.. எந்த உயிரை காப்பாற்றுவது இந்த உயிரை கைவிடுவதுனே தெரியல சார்..

 இந்த டாக்டர் ஏன் இப்படி பண்ணினாங்க?.. ஆரம்பத்திலே இதை தெரிஞ்சுக்கிட்டவங்க உடனே அந்த குழந்தையை அபார்ஷன் பண்ணி இருந்தா இந்த பிரச்சினையே வந்து இருக்காது..

 இப்ப அவங்களும் இல்ல நமக்கு தான் சிக்கல்.. ” என்று கூறிவிட்டு அவள் ரிப்போர்ட் எடுத்துக்கொண்டு அங்கே சென்றுவிட்டாள்..

 அந்த டாக்டருக்கு அழைத்து என்ன நடந்தது என்று கேட்போம் என்று முயற்சி செய்தார்கள் ஆனால் அதுவும் முடியவில்லை..

 சரி வருவது வரட்டும் இனி தாமதிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விஐபி அழைத்து டாக்டர் பேசினார்..

“ ஏன் சார் உங்களுக்கு உங்க வைஃபை விட உங்க குழந்தை தான் முக்கியமா?..

 படித்தவர் பெரிய செலிபிரிட்டி.. ஆனா நீங்களே இப்படி இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை சார்..

 ஆரம்பத்திலேயே இந்த குழந்தையை அழிச்சிட்டு அவங்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளித்து அவங்க கர்ப்பப்பை பலப்படுத்திட்டு அப்புறம் குழந்தையை பெற்று இருக்கலாம்..

அப்படியும் முடியலைன்னா இப்ப குழந்தை பெற எவ்வளவோ வசதிகள் வந்துருச்சு..

 வாடகை தாய் மூலமா குழந்தை பெத்து இருக்கலாமே..

 இப்ப எங்களுக்கு என்ன பண்ணுறதுனே தெரியாத க்ரிட்டிக்கல் சிட்டுவேஷன்ல கொண்டுவந்து நிப்பாட்டி இருக்கீங்க.. என்ன சார் இதெல்லாம் நங்க இப்ப என்ன பண்ணுறது?.. ” என்றாள் அதில் கோவம் தான் அதிகம் இருந்தது..

“ மேம் ப்ளீஸ் இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல.. திடிர்னு கண்மணிக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு கூட தெரியல?.. நானே அந்த டென்ஷன்ல இருக்கும்போது நீங்க என்ன என்னமோ சொல்றீங்க.. சொல்றதை கொஞ்சம் புரியும் படி விளக்கமா சொல்லுங்க மேம்..” என்றான்..

 குழந்தை உண்டான நாளிலிருந்து அவள் படும் கஷ்டத்தை பார்த்து பார்த்து அவனால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை..

 அவனே ஏன் இந்த குழந்தை உண்டானது என்று நினைத்துக் கவலைப்பட்டான்..

மனைவியை நினைத்து நொந்து போய் இருப்பவனிடம் என்ன விஷயம் என்று தெளிவாக கூறாமல் அவனை என்னவோ சொல்லி திட்டினால் அவனுக்கும் கோபம் வரத்தானே செய்யும்..

ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் கூறிவிட்டு தற்பொழுது கண்மணியின் உடல்நிலை பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார்..

 அதைக் கேட்டு விஐபி ஆடிப் போய்விட்டான்..

“ மேம் ப்ளீஸ் முதல் நான் சொல்றதை கேளுங்க.. எனக்கு இந்த விஷயம் எதுவுமே தெரியாது.. அந்த டாக்டரோ கண்மணியோ யாருமே என்கிட்ட இதைப் பற்றி சொல்லலை.. ஆரம்பத்திலேயே இது எனக்கு தெரிஞ்சிருந்தா நானே இந்த குழந்தையை அபார்ஷன் பண்ண சொல்லிட்டு என் மனைவியை சந்தோஷமா பார்த்து இருந்து இருப்பேன்..

 என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க.. என் மனைவிக்கு தெரிஞ்சி ஏன் மறைச்சாங்கன்னு எனக்கு தெரியாது.. இப்ப அவங்க மேல தப்பு சொல்லி அவங்களை போய் கேட்டுக் சண்டை பிடிக்கவும் முடியாது.. அவங்க இப்ப அந்த நிலைமையிலும் இல்லை..

 நீங்க தான் ட்ரீட்மென்ட் பண்ணணும்.. எனக்கு என் வைஃப் முக்கியம் மேடம்..

இரண்டு உயிரில் ஒரு உயிர்தான் பிழைக்கும் எனும் முடிவு வந்தால் எனக்கு என் வைஃப் திருப்பி கொடுத்துடுங்க.. அவ போதும் குழந்தை பற்றி நாங்க அப்புறம் பார்த்துப்போம்.. இதுதான் என் முடிவு..” என்று கூறினான்..

 அவனுக்கு தானே மரணித்தால் என்ன என்று தோன்றும் அளவு வேதனை அவனை வாட்டியது..

 அவ்வளவு உடல் உபாதையிலும் ஒவ்வொரு மாதமும் கடக்கும் போதும் குழந்தையின் வளர்ச்சி குழந்தையின் அசைவு என பார்த்து பார்த்து பூரித்து போவாள் கண்மணி..

 அவன் காதல் ஆருயிர் மனைவி ஒரு பக்கம். ஒரு பக்கம் அவன் உயிர் நீரில் ஜனித்த குழந்தை, இதில் அவன் எதை விடுவான்..

 அவன் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது என இறைவனை வேண்டிக் கொண்டான்..

 மருத்துவமனையை ஒட்டி இருந்த கோவிலுக்கு சென்றான்..

 அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது போன்று ஓர் அடியார் அவன் அருகே வந்தார்..

“ நீ இங்கே இருக்க வேண்டியவன் இல்ல.. உன் மனைவி கிட்ட போ.. நீ இங்க வந்தாலும் ஆகப்போறது எதுவும் இல்ல.. ஈசன் எழுத்தை யாராலும் மாற்ற முடியாது.. உன் வீட்டு விளக்கு அணைந்து போறது உறுதி.. இறுதியாக உன் கிட்ட பேச வேண்டிய பேச்சுக்காக உன்னை பார்த்து தவிக்குது ஒரு ஜீவன்..

 இன்னும் ஒரு ஜீவனோ உன்னைப்போல் ஒரு காதலன், அன்பு கணவன் தனக்கும் கிடைக்க மாட்டானா? என்று ஏங்கி தவிக்கிறது..

 போ போ இங்க நிக்காத வேகமா போ..”

என்று கோவில் வாசல் படியை கூட அவனை மிதிக்க விடாமல் அந்த அடியார் அவனை வேகமாக அனுப்பி வைத்தார்..

அவனும் அவர் கூறியது பாதி புரிந்தும் புரியாத நிலையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்தான்..

 அவனையே எதிர்பார்த்திருந்தது போல் மருத்துவர் வேகமாக அவன் அருகில் வந்தார்..

“ எங்க சார் போய்டிங்க?.. உங்க வைஃப் எங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க இல்லை சார்..உங்களை தான் அழைச்சிட்டு வர சொல்லுறாங்க. முக்கியமா உங்க கிட்ட பேசணுமாம்..சீக்கிரம் வாங்க சார்.. தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அவங்களுக்கு ஆபத்து..” என்று கூறிவிட்டு கண்மணி இருந்த அறைக்குள் சென்றார் மருத்துவர்..

 அவருக்கு அடுத்து வேகமாக விஐபி உள்ளே வந்தான்..

இங்கு வெளியே மீரா கண்மணியின் தாயை ஆறுதல் படுத்துவார்.. கண்மணியின் தாய் மீராவை ஆறுதல் படுத்துவார்.. இப்படியே அவர்கள் ரெண்டு பேரும் கவலையோடு காத்திருந்தார்கள்..

 அப்போது யசோதா சீதாராம் மூவரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்..

 கணவன் வருகையை எதிர்பார்த்தது போல் வாசலையே பார்த்திருந்தாள் கண்மணி..

“ என்னடி உன் பிரச்சினை.. மனுஷனை நிம்மதியா இருக்க விட மாட்டியா?.. ஏன் சப்போர்ட் பண்ண மாட்டேங்குற?. நான் உனக்கு வேணாமா?.. சீக்கிரம் போய் பாப்பாவ பெத்துட்டு வாடி.. நீயும் துடிச்சு என்னையும் துடிக்க வைக்கிற.. எனக்கு தெரியாம நீ மறச்சதெல்லாம் எனக்கு தெரியும்.. பாப்பாவ பெத்துட்டு வா அப்புறம் இருக்கு உனக்கு..” என்று கூறி அவள் கையை பிடித்துக் கொண்டு அவள் காய்ந்திருந்த இதழில் முத்தமிட்டு விட்டு அவளையே பார்த்தான்..

 மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் காட்சி அளித்தாள்..

 பார்ப்பதற்கு வெளியே திடகாத்திரமாக இருந்தாலும் அவன் உள்ளே ஒரு குரல் அழுது கொண்டே இருந்தது..

அவனும் சாதாரண மனிதன் தானே காதல் மனைவி இப்படி துடிப்பதை எப்படி தாங்க முடியும்..

 முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்கை கழட்டி விட்டு “ காய்ந்த உதட்டை ஈரம் படுத்திக் கொண்டு.. மாமா விஜய் மாமா..” என்றாள்..

 அவர்கள் கூடலின் போது எத்தனையோ முறை அவன் மாமா என்று சொல்லுடி என்று ஆசையாக கேட்டிருக்கிறான்

Advertisement