நடந்த எதையுமே அறியாத வெற்றி,உண்மையிலேயே ஆதிக்கும், ஸ்வாதிக்கும் நிச்சயம் நடந்தே விட்டது என்று எண்ணியவன்,ஏனோ இந்த மன துயரை போக்கி கொள்ள குடியை நாடி இருந்தான் வெற்றி
அந்த குடியின் நாத்தம் தங்க முடியாதவன், எதோ லேசாக குடிக்க, அதுவே அவனை அதிக போதையாக்கிட, எங்கு செல்கிறோம் என்பதும் கூட புரியாமல், எங்கோ இருந்த வெற்றியை அழைத்தான் சூர்யா
“டேய்ய். எங்க இருக்க? உன்ன உங்க அம்மா தேடுறாங்க..நான் என்ன சொல்லட்டும்..எப்போ வர நீ?” என்றான் சூர்யா
“அம்மா தான் தேடுனாங்களா? அவ தேடலயா? அது சரி இனி அவ எதுக்கு என்ன தேட போறா.. இனி அவ ஆதிய தானே தேடுவா.. சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிடலாம்” போதையில் படி கொண்டு இருந்தகவனின் நிலையை இப்போது தான் உணர்ந்தான் சூர்யா
“என்ன நடந்து இருக்கும்.. ஸ்வாதியும் ஆதியும் நிச்சயம் பண்ணி உன் கால்ல விழுந்து இருக்காங்க.. நீயும் வெட்கமே இல்லாம பதினாறும் பெற்று வாழுங்கனு ஆசீர்வாதம் பண்ணி இருப்ப” சலித்து கொண்டு பேசினான் வெற்றி
எதையோ பேச வாயெடுத்த சூர்யாவின் முன் காட்சியளித்தாள் ஸ்வாதி.. சூர்யா வெற்றியிடம் தான் பேசுகிறாள் என்பதை உறுதி படுத்தியவள்,
தான் அருகில் இருப்பதை சொல்ல வேண்டாம் என்று சைகையால் சூர்யாவிற்கு உணர்த்தியவள்,
‘வெற்றி எங்கு இருக்கிறான்’என்பதை கேட்கும் படி சைகை காட்ட, அப்படியே கேட்டான் சூர்யா
“வெற்றி இப்போ நீ எங்க இருக்க? ஒழுங்கா சொல்லு.. இல்லாட்டி உன்னோட அப்பா கிட்ட எல்லாத்தயும் சொல்லிடுவேன்” இறுதியாய் மிரட்டி அவன் இருக்கும் இடம் அறிய விரும்பியவனின் இந்த முயற்சி வெற்றி தான்
“அவர் கிட்ட எல்லாம் சொல்லிடாதடா.. அவருக்கு எதுவும் தெரிய வேணாம்.. நான் இதோ எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்க மாந்தோப்புல தான் இருக்கேன்” என்றான் வெற்றி சிறு பதட்டத்துடன்
அதற்கு மேல் ஒரு நிமிடமும் தாமதிக்காமல் வெற்றியை தேடி ஓடினாள் ஸ்வாதி.. சூர்யாவும் கூட இருவரும் பேசி தீர்த்து கொள்ளட்டும்.. தான் தலையிட வேண்டாம் என்று எண்ணியவன், கீழே சென்றான் ஏதோ ஒரு வேலையாக
வெற்றி கூறிய அந்த இடத்தை அடைந்த ஸ்வாதி, அவனை நெருங்கியவள்,
தரையில் அறை போதையில் கிடக்கும் வெற்றியை கண்டதும் ஏனோ மனது வலித்தது ஸ்வாதிக்கு.. நண்பனாய் மட்டுமே இருந்த போதே வெற்றிக்காக வருந்தியவள், இன்று தன் மனதை ஆட்கொண்டவனாய் மாறி இருக்கும் வெற்றியை கண்டு மனம் வருந்தவே செய்தாள்
அவனை நெடுங்கியவள்,
“என்ன வெற்றி இது புது பழக்கம்.. அப்படி என்ன நடந்து போச்சுன்னு நீ இப்டி குடிக்க ஆரம்பிச்சி இருக்க?” என்றாள் நேரடியாக
“வாம்மா கல்யாண பொண்ணு..உன்னால தான் எனக்கு இந்த நிலைமை.. ஆனா இப்போ நீயே வந்து ஏன் இப்டி பன்றேன்னு கேக்குறியே?” என்றான் விரக்தியாய்
“என்னாலயா? நான் என்ன பண்ணேன்.. சும்மா எல்லாத்துக்கும் என்னை குறை சொல்லாதே” என்றாள் ஸ்வாதி காட்டமாய்
“ஆமாடி நீ தான் காரணம்.. உன்னோட கல்யாணம் தான் காரணம்” ஏகிறினான் வெற்றி
“ஏன் நீயும் கல்யாணம் பண்ணிக்கோ.. அதான் உன்னோட லவர் ஜெர்ரி இருக்கால.. அவளை கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள் ஸ்வாதிக்கு பதிலுக்கு
“என்ன ஜெர்ரியை கல்யாணம் பண்ணிக்கவா? இனி அது எப்படி முடியும்.. அதான் எல்லாம் கைமீறி போச்சே” என்றான் வெற்றி
“ஏன்.. அப்படி என்ன ஆச்சு” கேட்டாள் ஸ்வாதி
அதற்கு பதிலாய் ஸ்வாதியை மேலும் கீழுமாக பார்த்த வெற்றி பதிலேதும் தராமல் வேறு திசை பார்த்த படி அமர்ந்து இருக்க, அதில் ஒன்றும் புரியாத ஸ்வாதி
“இப்டி பாத்தா என்ன அர்த்தம்? என்ன ஆச்சுன்னு இப்போவே எனக்கு தெரிஞ்சாகணும்” என்றாள் பிடிவாதமாக
அதற்கும் பதில் தராத வெற்றியை தோல் தொட்டு உலுக்கியவள்,
“சொல்லு சொல்லு.. இப்போவே சொல்லு வெற்றி” என்றாள் கொஞ்சம் அவசரமாக
“ஏன்னா அந்த ஜெர்ரி நீ தான்.. உன்னோட டாம் நானா இருக்குனு.. கடைசி வரைக்கும் ரெண்டு பேரும் பிரியவே கூடாதுனு தான் உனக்கு அந்த பேரை வெச்சேன்.. ஆனா நீ தான் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க போறியே” என்றான் வேதனையுடன்
ஏனோ இந்த வார்த்தையை கேட்டதும் பறப்பது போன்று இருந்தது ஸ்வாதிக்கு.. இறுதியாய் தான் விரும்புபவனின் மனதிலும் கூட தானே இருப்பதை அறிந்தவளும் இப்போதே தன் மனதை வெற்றியிடம் கூற நினைக்க,
“இவன் இப்போ இருக்க நிலமைல எதுவும் சொல்ல வேணாம்.. மொதல்ல இவனை வீட்டுக்கு கூட்டிட்டு போய் சேர்ப்போம்.. இவனோட அம்மாவும் இவனை காணோம்னு ரொம்பவே கவலை பட்டாங்க” முடிவெடுத்தவள், யாரும் அறியாத வண்ணன் வெற்றியை பத்திரமாக அவனின் அறையில் கொண்டு சேர்ந்தவள், அவன் குடித்த விஷயம் வெளியே தெரியாமலும் பார்த்து கொண்டாள்
அடுத்த நாள் விடியல் வெற்றியின் பெயரில் இருக்க, அவனை நன்கு வெறுப்பேத்தி விளையாடி கொண்டு இருந்தாள் ஸ்வாதி
காலை எழுந்ததில் இருந்தே தலை வலி உயிர் போக, கண் விழிக்கும் போதே கையில் ஒரு டம்ளருடன் நின்று இருந்தாள் ஸ்வாதி.. அவளை பார்த்ததும் திடுக்கித்தவன்,
“என் ரூம்ல நீ என்ன பன்றே? உன்ன யார் இங்க வர சொன்னது?” என்றான் வெற்றி எடுத்த எடுப்பில்
“நான் ஒன்னும் சும்மா வரல, நேத்து நீ குடிச்சிட்டு மட்டயானது யாருக்கும் தெரிய கூடாதுனு தான், இப்போ ஜூஸ் போட்டு கொண்டு வந்தேன்” என்றாள் கொஞ்சம் மிடுக்காக
“என்ன நான் குடிச்சேனா?” யோசித்தவனுக்கு அப்போது தான் நேற்றின் நினைவுகள் நினைவிற்கு வர, உடனே பதறியவன்
“நான் குடிச்சத வீட்ல சொல்லிட்டியா? யார் யார்க்கு தெரியும்? ஏதாவது ரகளை பண்ணுனேனா?” என்றான் கொஞ்சம் பயத்துடன்
“ரொம்ப பயப்படாத.. யாருக்கும் தெரியாது.. யாரும் கவனிக்காம நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்துட்டேன்” என்றவளின் கூற்றை கேட்ட பின் தான் கொஞ்சம் நிம்மதி அடைந்தான் வெற்றி
காலை விடிந்ததுமே அஞ்சலியை அழைத்த ஆதி, தயாராக இருக்கும் படி கூறி இருக்க, அவளை அழைத்து கொண்டு எங்கோ சென்றான் ஆதி
நேற்றைய பொழுது ஏனோ இருவரின் வாழ்வில் இனிமையான நாளாக இருந்து இருக்க, அந்த களிப்பில்
காலையிலேயே அஞ்சலி உதட்டில் தேன் எடுத்து கொண்டு இருந்தான் ஆதி.. மூச்சு திணறி அஞ்சலி சுவாசத்திற்கு ஏங்க, அதையும் பொருட்படுத்தாதவன் தன் பணியை செவ்வனே செய்து கொண்டு தான் இருந்தான்
அவளே முயன்று அவனை தள்ளிய போதும் கூட, அசரதவனுக்கு எதோ காலடிகளின் சத்தம் கேட்க, அஞ்சலியை விட்டு விளங்கியவன் வாசலை நோக்கி பார்க்க, அவ்விடம் அதிர்ச்சியில் நின்று இருந்தார் மருதநாயகம்
“ஆதி என்ன இதெல்லாம்? நீ பொறுப்பானவன்னு நம்பி தானே இத்தனை பொறுப்பையும் உன் கிட்ட குடுத்து இருக்கேன்.. நீயே இப்டி… சீய்ய்ய்.. அந்த அப்பாவி பொண்ணு கிட்ட இப்டி நடந்துக்க உனக்கு எவ்வளவு தைரியம்” என்றவர் அதே கோவத்தில் ஆதியை அடிக்க கை ஒங்க,
வாழ்வில் முதல் முறை தன்னை அடிக்க கை ஓங்கும் அவரை சிலையென நின்று பார்க்க, அவன் மேல் அடி ஏதும் படாமல் இருக்க அஞ்சலி முன் வந்து அவரை தடுக்க, அதற்குள் சுதாரித்த ஆதி,
“தாத்தா நான் சொல்லுறதை ஒரு நிமிஷம் கேளுங்க.. நீங்க நெனைக்குற மாதிரி இது யாரோ ஒருத்தி இல்லை” என்றான் அவன்
“யாரோ ஒருத்தி இல்லனா, உன் பொஞ்சாதினு சொல்ல போறியா?” கோவத்தில் பேசினார் மருதநாயகம்
“ஆமாம் என்னோட பொண்டாட்டி தான்” உரக்க உரைத்தான் ஆதி
அவனின் இந்த திடீர் பதிலில் திடுக்கித்த அஞ்சலி, ஆதியை விழி அசைக்காமல் பார்க்க
“என்ன ஆதி சொல்லுறே?” நீ சொல்லுற வார்த்தைக்கான அர்த்தம் உனக்கு புரியுதா? இது உன்னை மட்டும் இல்லை இந்த பொண்ணையும் அசிங்க மடுத்துற மாதிரி ஆகிடாதா.. யோசிச்சு பேசு ஆதி” என்றார் பேச்சில் சிறு தடுமாற்றத்தோடு
“நான் உண்மையை தான் தாத்தா சொல்லுறேன்” என்றவன் தனக்கும் அஞ்சலிக்கும் நடந்த அந்த திருமணத்தை பற்றி கூற, மருதநாயகத்திற்கு ஏனோ தலையே சுற்றியது
அவ்விடம் இருந்த சேர் ஒன்றின் மீது அமர்ந்தவர், ஏதோ யோசனையில் மூழ்கி இருக்க, அவரை நெருங்கிய ஆதி,
“அட போட அறிவில்லாதவனே, நானே ஒரு பொண்ணை தேடி இருந்தாலும் இப்டி ஒரு பொண்ணை கண்டு பிடிச்சி இருக்க முடியாது.. நான் யோசிக்குறது எல்லாம் உங்க அப்பனை பத்தி தான்..
“நேத்து ஸ்வாதி வேணான்னு சொன்னதும் வேற ஒரு பணக்கார பொண்ணை உனக்கு கட்டி வெக்க யோசிக்க ஆரம்பிச்சி இருப்பான்.. அவனை எப்படி சமளிக்குறதுனு தான் எனக்கு தெரியல” என்றார் சற்றே யோசனையுடன்
“நீ எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்னு நம்புறவன் ஆதி நான்.. அதுவும் அஞ்சலி போல ஒரு பொண்ணை வேணாம்னு சொல்லுவேனா?” என்றவர் அஞ்சலியின் தலை மேல் தன் கையை வைத்து அவளை ஆசீர்வதிக்க, ஆதிக்கும் கூட அதில் மன நிறைவு அதிகமே கிடைத்தது.
இதே போல் தான் தந்தையும் தங்கள் திருமணத்தை ஏற்று கொண்டால் சந்தோசமாக இருக்கும் என்று எண்ணியவனுக்கு, பெருமூச்சே வெளி வர, அவனின் புலம்பல் கேட்ட காலமும் அவனுக்கு பதில் அளிக்க தயாராக தான் இருந்தது
ஏதோ வேலையாக கீழே வந்த சூர்யா கண்ணிற்கு சோபாவில் அனாதையாக கிடக்கும் கைபேசி கண்ணில் பட,
“யாரோடது இது? என்று யோசித்தவன் அதை கையில் எடுத்து பார்த்து கொண்டு இருந்த நேரம் அவ்விடம் வந்த சிவகாமியை கண்டவன்
“அம்மா இது யாரோட போன்.. நம்ப வீட்டுல யார் கிட்டயும் இந்த மாதிரி மாடல் இல்லையே.. பின்ன யாரோடது?” என்றான் கேள்வியாக
“அதுவாப்பா.. நேத்து நிச்சயம் பண்ண எல்லாரும் வந்து இருந்தாகல.. அப்போ வெண்பா தான் இங்கயே மறந்து அவசரத்துல விட்டுட்டு போய்ட்டாளாம்..வீட்டுக்கு போய்ட்டு தான் நியாபகம் வந்ததாம்.. வெற்றியும் வீட்டுல இல்லாததால காலைல வந்து எடுத்துக்குறேனு சொன்னா.. என்னவோ முக்கியமான விஷயம் இதுல இருக்காம்.. அதனால பத்திரமா பாத்துக்க சொல்லி சொன்னா” என்றவர் அவ்விடத்தை சுத்தம் செய்யயும் வேளையில் இறங்கியும் விட்டார்
அந்த கைப்பேசியையே சில நிமிடம் பார்த்து கொண்டு இருந்தவனுக்கு, திடீரென ஏதோ தோன்ற, அதை தன் பாக்கெட்டில் போட்டவன்,
“அம்மா இந்த போனை நான் வெச்சி இருக்கேன்” என்றவன் விறுவிறுவென தன் அறை புகுந்தான் சூர்யா
தன் கைபேசியை எடுத்தவன் வாட்சப்பில் தனக்கு மெசேஜ் செய்யும் என்னை அழைக்க அடுத்த நொடி அலறியது வெண்பாவின் கைபேசி
அந்த அலறலில் சூர்யா மனதை குடைந்து கொண்டு இருந்த குழப்பம் எல்லாம் நீங்கி, வெண்பா தான் அந்த பெண் என்று உறுதியான சாட்சியும் கிடைக்கவே செய்தது
அடுத்த பல வினாடிகள், வெண்பா தனக்கு முதன் முதலில் அனுப்பிய மெசேஜ், நேரில் தன்னிடம் வம்பிழுத்து சேட்டை செய்யும் விதம் என்று மனம் முழுக்க வெண்பாவின் நினைவையே நாடி செல்ல, அதற்குள் கேட்டது சிவகாமியின் குரல்
“சூர்யா, வெண்பா வந்து இருக்கா பாரு.. அவளோட போன் வாங்கிக்க வந்து இருக்கா.. கீழ வந்து குடுத்துட்டு போப்பா” என்றார் அவர்
“அம்மா அவளை மேல வந்து வாங்கிக்க சொல்லுங்க.. எனக்கு கால் லேசா வலிக்குது.. கீழ இறங்க முடியாது” தன் காயத்தை காரணம் காட்டியவன், வெண்பாவை தன் அறைக்கு வரவும் வைத்து விட்டான்
வாசல் வரை வந்தவள், ‘ஹ்ம்ம்ம்’ தொண்டையை செருமி அவனை அழைக்க,
அப்போது தான் பேப்பர் படிப்பது போல் பாவனை செய்து கொண்டு இருந்தவன், அவளை கண்டு கொள்ளவே இல்லை
அடுத்து அறையின் கதவை அவள் தட்ட, அதற்குள் எந்த அசைவும் இல்லாமல் போக,
“என்னோட போன் வாங்கிட்டு போக வந்தேன்.. எங்க இருக்கு?” என்றாள் தயங்கிய படி
“கேக்கல” என்றான் இம்முறை சூர்யா மிடுக்காக
“அந்த போன்…” இழுத்தவளை, நோக்கியவன்
“நீ எப்பவும் என்னை எப்படி கூப்பிடுவியோ எப்படி கூப்பிடு.. அப்போ தரேன்” என்றான் தன் இடத்தை விட்டு எழுந்து வாசலை நோக்கி நடந்த படி
“எப்படி கூப்பிடுவேன்.. எனக்கு ஏதும் புரியல” என்றவள் நிலம் நோக்கி குனிந்து கொண்டே தான் பதிலும் அளித்தாள்
“சரி இந்தா என்றபடி ஒரு கையில் இருக்கும் அவளின் போனை நீட்டியவள், அவள் அதை வாங்கும் இடைவெளியில் தன் எண்ணில் இருந்து அவளுக்கு அழைக்க, உடனே அலறியது அவளின் கைபேசி
அதுவும் திரையில் சிரித்த படி இருக்கும் சூர்யா படத்திற்கு நேரே, மாம்ஸ் என்ற பெயர் திரையில் ஒளிர,
“இந்த பேரை சொன்னேன்” என்றான் நான் கண்டுபிடித்து விட்டேன்” என்பதை சொல்லாமல் சொன்ன படி
அதில் திடுக்கிதவள்,
“அது.. இது.. நான்.. வந்து.. ” ஏதேதோ பிதற்றியவளின் கையை பிடித்தவன், அவள் சுதாரிக்கும் முன்பே அவளை தன் வசம் பிடித்து இழுத்தவன், ஒரே சுழற்றில் தன் மார்பின் மீது மோதி நிற்கும் படி செய்தான் அவன்
அவனின் இந்த திடீர் செயலில் மிரண்டவள்,
“அவனை விட்டு தள்ளி நின்று, என்ன பண்றீங்க? பைத்தியம் பிடிச்சிடுச்சா? என் போனை குடுங்க.. நான் போகணும்” என்றாள் கட்டமாக
“அப்போ அந்த பொண்ணு நீ தான்னு சொல்லு.. நான் கொடுக்குறேன்” என்றான் இவனும் சரி சமமாய்
“என்ன சொல்லணும்.. எனக்கு ஏதும் தெரியாது.. மொதல்ல என் போனை தங்க” என்றாள் தன் காரியத்தில் கண்ணாய்
“அப்படியா, இரு வெற்றிக்கு கால் பண்றேன். அவன் சொல்லுவான் எந்த விஷயத்தை பத்தி நான் பேசுறேன்னு” என்றான் கள்ள சிரிப்புடன்
“ஆமா நான்தான் உங்களுக்கு மெசேஜ் பண்ண பொண்ணு.. இப்போ என்ன அதுக்கு.. உண்மை தெரிஞ்சதும் என்னை கட்டிக்க போறீங்களா.. இல்லை தானே..
கட்டிக்குறதை தாண்டி, மொதல்ல உங்களுக்கு என் மேல விருப்பம் இருக்கனும். அதுவே இல்லாத இங்க கிட்ட நான் உண்மையை சொன்னா என்ன சொல்லாமல் இருந்தா என்ன..மொதல்ல குடுங்க அதை” என்றான் வெறுப்பாய்
“இல்ல வெண்பா, அது வந்து.. நான் உன்னை.. அது.. எப்படி.. இல்லை” உலறும் முறை சூர்யாவினுடைத்தாகி போனது
“போதும், உங்களுக்கு என் மேல விருப்பம் இல்லனு தெரியும்.. நீங்க மட்டும் என்னை பிடிச்சி இருக்குனு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, உங்களுக்காக எல்லாத்தயும் தூக்கி போட்டுட்டு வந்து இருப்பேன்.. உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும்.. ஆனா அப்படி எதுவும் உங்க மனசுல இல்லைன்னு எனக்கு தெரியும்” சென்றவள் கண்ணில் வடியும் கண்ணீரை துடைத்து கொண்டு, சூர்யா அசந்த நேரம் அவன் கையில் இருக்கும் போனை பிடுங்கியவள், அதே வேகத்தில் சென்றும் விட்டாள்
அவளின் பேச்சு ஆணியை போல் மாத்தில் இறங்கி, வலியை உண்டாக்க, ஏனோ இன்று தான் காதலை முழுமையாய் முதல் முறை உணர்ந்தான் சூர்யா
“உனக்கு எப்படி என்னோட நிலைமையை சொல்லி புரிய வைப்பேன்.. சொன்னாலும் நீ புரிஞ்சிப்பியான்னு தெரியல” மனதுக்குள் நினைத்தவன் ஏனோ தகுந்த காலத்திற்கு காத்திருந்தவனின் காதல் வெளி வர போகும் அந்த வினோத தருணத்தை அவனும் கூட எதிர் பார்க்கவில்லை