Advertisement

ஆதியை சந்தித்து, வெற்றி ஸ்வாதி காதலை கூறி, அவனின் பாரத்தை குறைக்க நினைத்தான் சூர்யா.. இந்த  திருமண செய்தி வந்ததில் இருந்தே ஆதி,  அஞ்சலி இருவருக்குள்ளும் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது சூர்யாவால்.

இருந்த பிரச்சனைகள் அனைத்திற்குமே ஒரு தீர்வு வந்ததை போன்ற உணர்வு சூர்யாவிற்கு.

மறுபுறம் வெற்றிக்கு ஸ்வாதி தன்னை விரும்புகிறாள் என்பதே நம்பியும் நம்பமுடியாத உண்மையாகி போனது.. உச்சாகமும் சந்தோஷமும் சேர ஆதியை காண சென்ற இருவரும், அவனுக்கு அழைத்து அவன் இருக்கும் இடம் கேட்க,

ஆதியோ வேலை விஷயமாக ஸ்கூல் வந்து இருப்பதாக கூறி இருந்தான்

சரி இன்னும் இருபது நிமிடத்தில் அவ்விடம் இருப்பதாக கூறியவர்கள், அதிக வேகம் இல்லாமல் தம்முள் பேசி சிரித்த படி காரை செலுத்தினர்

“எப்படியோடா இன்னையோட எல்லா பிரச்சனையும் முடிய போகுது.. இனியாச்சும் அஞ்சலி ஆதி சந்தோசமா இருந்தா சரி” நிம்மதி பெருமூச்சுடன் கூறினான் சூர்யா

“அது சரி.. நீ யாரையாவது விரும்புரியாடா.. நீ ஒருத்தன் மட்டும் தான் சிங்கிளா இருக்க.. அதான் நீயும் ஒரு பொண்ணை பார்த்துட்டா மூணு பேரும் ஒரே மேடைல கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் வெற்றி

ஜாதி பிரிவினைகள் ஊருக்குள் அதிகம் இருந்தாலும், நட்புக்குள் அவை எதுவுமே சுத்தமாக இல்லை என்பதை பல முறை சூர்யாவிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உணர்த்த தவறவில்லை ஆதியும் வெற்றியும்.. இம்முறையும் கூட பிரிவை வார்த்தையில் கூட காட்ட விரும்பாத நண்பர்களை நினைத்து மெச்சி கொண்டான் சூர்யா

சிரித்தவன், எதையோ பேச வாய் எடுக்க, காதை கிழிக்கும் சத்தத்துடன் வெற்றி கத்த, என்ன என்று பார்க்கும் முன்பே தனக்கு கீய்ய் என்ற சத்தம் காதில் கேட்க,

எதோ வானில் பார்ப்பது  போன்று உணர்ந்தவர்கள், நடந்ததை உணரும் முன்பே கண்ணை இருள் சூழ,தாங்கி கொள்ள முடியாத வலி தலை எங்கும் பரவி கிடக்க, நடப்பது எதையுமே உணராமல் கண் மூடினார் இருவருமே

எத்துணை நேரம் அவ்விடம் கிடந்தனரோ தெரியவில்லை, சிறிது நேரத்தில் காலில் எதோ ஒரு பெரிய சுமை இருப்பதை போல உணர்ந்த சூர்யா, கண் திறக்க முயற்சிக்க, கோந்து போட்டு ஓட்டியதை போல் திறக்க சிரம பட்டு கிடந்த தருணம்,

“டேய்.. சூர்யா” என்று வெற்றி அழைக்கும் சத்தம் மட்டும் காதிற்கு மிக அருகில், அதுவும் எதோ கிணற்றில் இருந்து பேசுவதை போல் மங்கி போய் ஒளிக்க, அதை கிரகிக்கும் முன்பே கேட்டது ஒரு பரீட்சைய குரல்

“ஹையோ.. வெற்றி என்னப்பா ஆச்சு” பதறிய படி ஒலித்தது அந்த குரல்

“யாராவது இருந்தா வாங்களேன்.. இங்க அச்சிடேன்ட் நடந்துடுச்சி.. வந்து இவங்களை காப்பாத்துங்களேன்” என்றவரின் குரல் சற்று தோய்ந்து ஒளிக்க, பின் சலசலவென சத்தங்கள் கேட்க, அதில் ஒருவன்

“சார், இங்க வந்து பாருங்க..இந்த பக்கம் ஒருத்தன் இருக்கான்.. இவரு யார்னு தெரியுதான்னு பாருங்க” எங்க, அடுத்து இரண்டு நொடிகளில்

“ஹையோ சூர்யா.. என்னப்பா இப்டி கெடக்குற” பதறியவர்

“இவன் என் மாப்பிளை தான் சார்.. இவனையும் தூக்குங்க.. என்னோட தங்கச்சி பையன இந்த நிலமைலயா நான் பாக்கணும்.. அப்பா சூர்யா எழுத்துருப்பா.. உன்ன இப்டி பார்த்தா உங்க அம்மா தாங்க மாட்டா.. உசுர விட்டுடுவாப்பா” புலம்பியவரின் அழுகுரலில் தான் தங்களுக்கு விபத்து நேர்ந்து இருக்கிறது என்பதையே உணர்ந்தான் சூர்யா

ஆனால் அதையும் தாண்டி இத்தனை நாள் அவன் ஏங்கி கிடந்த அவனின் மாமனின் பாச குரலை கேட்ட நிம்மதி தான் அவனுள் அதிகமாகவே இருந்தது.. அவன் இத்தனை நாள் ஏங்கி தவித்த அந்த அங்கீகாரம் இன்று ஏனோ அவனை வந்து அடைந்த நிம்மதி அவனுள்.. அதே நிம்மதியுடன் கண் மூடினான் சூர்யா

எதோ ஒரு அழைப்பு குரல், அந்த குரலின் இனிமையே மனதை மயிலிறகாய் வருடி செல்ல, இடை இடையே எதோ நீர் துளிகள் போன்று கண்ணீரின் துளிகள் அவனின் தேகத்தை சிலிர்ப்பிக்க, உடல் எங்கும் வலிபரவி, கண்ணை திறக்க அவன் சிரம பட்டு கிடந்த நேரத்தில் தான் அவளின் குரல் துல்லியமாக அவனின் காதுகளை அடைய துவங்கியது

“மாம்ஸ் எத்தனை நாள் இப்படியே படுத்து இருக்க போறே? எழுந்துக்கோ மாம்ஸ்.. இனி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.

ஏதாவது ஒன்னை இழந்தா தான் இன்னொன்னு கிடைக்குமாம்.. நான் உனக்காக என்னோட காதலை கூட இழக்க தயாரா இருக்கேன் மாம்ஸ்.. நீ கண் முழிச்ச அடுத்த நாள்ள இருந்து உன் முன்னாடியே வர மாட்டேன்.. நீ பழைய படி குணமாகி வந்தா மட்டும் போதும் எனக்கு

உன்னை இப்டி எங்க யாராலையுமே பாக்க முடியல.. சிவா ஆண்ட்டி எல்லாம் எவ்வளவு அழுகுறாங்க தெரியுமா? நீ மறுபடியும் பழைய மாதிரி வரணும்.. அது தான் எங்களுக்கு வேணும்”

ஏனோ நான் காதல் சொன்ன நேரம் சரி இல்லை போல.. உனக்கும் உன்னோட அன்புக்கும் நான் தகுதியானவ இல்லை..இனி இந்த தகுதியற்ற காதல் உன் கிட்ட கூட வராது.. ப்ளீஸ் எழுந்துக்கோ.. நீ நல்லா இருக்கறதை பார்த்தே நான் வாழ்ந்துடுவேன்..உன் நினைவுகள் மட்டுமே எனக்கு போதும்.. உன் பக்கத்துலயேயே இருந்து உன்னை பார்த்தே என் காலத்தை வாழ்த்துடுவேன். ஆனா இப்டி படுத்து இருந்து என்னை ஆணு அணுவாய் கொள்ளாதே” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கி கொள்ள, கண்ணில் நீர் அதிகமாய் பெருக்கெடுக்க, அதற்கு மேல் அவ்விடம் நிற்க முடியாதவள்

சூர்யா முகத்தை கடைசியாய் ஒரு முறை தன் விரல்களால் வருடியவள், எதையோ பேச எத்தனிக்க, அந்த நேரம் பார்த்து யாரோ அந்த அறையை நெருங்குவதை போல் உணர்ந்தவள், அவசரமாக சூர்யாவை ஒரு முறை தன் பார்வையால் மனதில் நிறைத்து கொண்டவள், அதே வேகத்தில் அவ்வுடம் விட்டு சென்றும் விட்டாள்

அவள் தன்னை பிரிகிறாள் என்பதை மயக்கத்திலேயே உணர்ந்த சூர்யாவின் உடல் உறுப்புகளும் லேசாக அசைவை காண்பிக்க, அவள் அழுது, மன்றாடி பேசிய வார்த்தைகள் அனைத்துமே அவனின் மூளையை எட்டியே இருந்தது.. அதன் விளைவாய் கண்ணின் ஓரம் லேசாக கண்ணீர் கசிய, அடுத்து யாரோ அந்த அறை கதவை திறந்து கொண்டு வருவதை உணர்ந்தான் சூர்யா

வந்தவர், அவனின் முகத்தை வருடி விட்டு.. நெற்றியில் எதையோ தடவுவதை போன்ற உணர்வு அவனுள்.. அந்த சபரிசத்தில் தாய்மை நித்தம் மிஞ்சி கிடக்க, அது தன் தாய் சிவகாமி தான் என்பதை நொடியில் புரிந்து கொண்டவன், படு சிரம பட்டு கண்ணை திறந்தவன் கண்ணிற்கு எதிரே

கண்ணில் பொங்கும் நீரை துடைத்த படி, அவனை வருடி விடும் தாயின் முகம் மங்கலாய் தெரிய, படு சிரமத்தில் கை கால்களை அசைத்தவன், அதற்கு மேல் எதையும் செய்ய இயலாதவனாய், கண்ணை சிரம பட்டு சிமிட்டி பார்வையை தெளிவாக்க முயற்சித்து கொண்டு இருந்தான் சூர்யா

“அண்ணா, இங்க வாயேன்.. இவன் கையை அசைக்குறான் வந்து பாரு.. யாராவது வாங்களேன்.. சூர்யா.. சூர்யா.. இங்க பாருப்பா.. அம்மாவ பாருப்பா” செய்வதறியாது திகைத்து போய் நின்றார் சிவகாமி

அவரின் அலறல் கேட்டு முதல் ஆளாய் உளேன் பதறி கொண்டு வந்தார் ரகுநாத்,

“என்னமா ஆச்சும்மா? எதுக்கு இப்டி கத்துற?” பதறிய படி வந்தார் ரகுநாத்

“அண்ணா, சூர்யா கண்ணு திறக்குறான் பாருங்க.. கை கால் எல்லாம் கூட அசைக்குறான்” என்றார் உட்சகமாக

அவை அனைத்தையும் கவனித்த ரகுநாத், அடுத்த வேலையாக டாக்டரை அழைத்து விட, கிட்ட தட்ட அரைமணி நேரம் சூர்யாவை பரிசோதித்தனர் ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழு. சோதனை முடித்து வெளியே வந்த அவர்கள்

“இப்போ அவர் நார்மலா தான் இருக்காரு.. இதுக்கு அப்பறம் எதுவும் பயம் இல்லை.. ஆனால் காலில் செஞ்சி இருக்க ஆபரேஷன் மட்டும் அவருக்கு சொல்லிடுங்க.. அடுத்த இரண்டு மாசத்துக்கு அவர் ரெஸ்ட் தான் எடுக்கணும்.. எங்கேயும் வெளிய போகாமல் பார்த்துக்கோங்க” என்றவர்கள் சென்றும் விட்டனர்

“அம்மா சிவா.. இப்போ சூர்யா கிட்ட நடந்ததை எப்படி சொல்லுறதுனு தெரியலையேம்மா.. ரெண்டு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னா அவன் கேப்பானான்னு தெரியலையே” குழம்பினார் ரகுநாத்

“எப்படி ஆனாலும் சொல்லி தானேண்ணா ஆகணும்.. வாங்க மொதல்ல உள்ள போய் பாக்கலாம். ஏதாவது செஞ்சி சமாளிப்போம்” என்றவர் தைரியத்தை வரவழைத்து கொண்டு உள்ளே சென்றனர் சிவகாமியும், ரகுநாத்தும்

இதுவரை தான் கண்டிடாதா அதிசயம் கண் முன் ஈடேற ஸதம்பிது தான் போனான் சூர்யா. அண்ணனையும் தங்கையையும் ஒன்றாய்  காண்பதில் அதிர்ச்சி ஒரு புறம் என்றால், தன் தாயின் முகத்தில் தெரியும் அந்த நிறைவின் திருப்தி மறு புறம் அவனை அடைய,

தான் படுத்து இருக்கும் இடமோ நிலையோ, தான் இருக்கும் இடமோ எதுவுமே அவனின் கவனத்தை ஈர்க்காமல், காலின் வலியும் கூட மறந்து போகும் அளவிற்கு தன் தாயின் திருப்தியும், தன் மாமனின் பாசத்திலும் திளைத்து கொண்டு இருந்தான் சூர்யா

அவனை நெருங்கிய சிவகாமியும், ரகுநாத்தும்,

“இப்போ எப்படிப்பா இருக்கு? தலை வலி எதுவும் இருக்கா? காலில் வலி பரவாஇல்லையா?” சூர்யா தலையை வருடி பாசமாக கேட்டார் ரகுநாத்

இதுவரை அவரின் இந்த பாச கோணத்தை கண்டிறாதவன், மெய் மறந்து அவரின் முகம் பார்த்து திகைத்து கிடக்க,

“என்ன சூர்யா? ஏதும் கஷ்டமா இருக்கா? என்ன பண்ணுதுப்பா? டாக்டரை வர சொல்லவா?” என்றார் சிவகாமி பதறிய படி

“எனக்கு என்ன? நான் நல்லா தானே இருக்கேன்” மனதுக்குள் எண்ணியவன், பார்வையை சுழற்ற,

அப்போது தான் தான் இருக்கும் இடத்தை உணர்ந்தான் சூர்யா

“நான் எப்படி ஹாஸ்பிடல் வந்தேன்.. என்ன ஆச்சு எனக்கு?” யோசித்தவனுக்கு எதோ வெளியே சொல்லல முடியாத பலத்த வலி ஒன்று கால்களில் பரவ, அவ்விடம் பார்வையை சுழற்ற,

அவனின் வலது கால் முழுவதும் வெள்ளை பிளாஸ்திரி சுத்த பட்டு, அதை மேல் நோக்கி உயர்த்தி ஒரு வெள்ளை துணியால் அங்கு இருக்கும் ஜன்னல் கம்பியில் தொங்க விட பட்டு இருந்தது

“டேய்.. என்னடா இது.. என் கால் சுத்தி கயிறும் கட்டையா இருக்கு? என்னடா பண்ணி வெச்சி இருக்கீங்க?” பதறியவனை கண்ட, சிவகாமிக்கு சிரிப்பதா, அழுவதா என்பது புரியால் தான் இருந்தது

அதன் விளைவாய் அவன் தலையில் லேசாக வலிக்காமல் தட்டியவர், கண்ணில் கூட நீர் சுரக்கவே செய்தது..

“என்ன தான்ம்மா ஆச்சு? நான் எப்படி இங்க?” என்றான் இம்முறை விளையாட்டு தனம் மாறி. இனியும் மறைக்க முடியாது என்று உணர்த்த சிவகாமி நடந்தவைகளை கூறும் போதே ஏனோ குரல் கனக்கவே செய்தது

ஆதியை காண புறப்பட வெற்றியும், சூர்யாவும் லேசாக அசந்த நேரத்தில் எதிரே வந்த லாரி ஒன்று அவர்களை இடித்து, காரை தரம் புரள செய்து, பின் அவ்விடம் விட்டு வேகமாக சென்றும் விட்டது

அடுத்த இருபது நிமிடங்கள் அவ்விடம் கவனிக்க ஆள் இன்றி கிடந்தவர்களை கவனித்தது ரகுநாத் தான். தங்கள் ஸ்கூலில் எதோ வேலையாக சென்றவர் முடித்து விட்டு வரும் வழியில் தான், பரிச்சயமான கார் ஒன்று தடம் புரண்டு இருப்பதை கண்டவர் பதறி போய், காரின் அருகே செல்லும் போது தான்,

அறை மயக்கத்தில் வெற்றி அவரிடம் எதையோ கூற எத்தனிக்கை, வாயில் இருந்து காத்து மட்டுமே வந்தது, கை கால்களை அசைக்க முயற்சித்தவனுக்கு அதிலும் தோல்வியே கிடைக்க, எதுவும் செய்ய இயலாதவனாய் அவ்விடமே மயங்கி விட்டான் வெற்றி

வெற்றியை உலுக்கி அவனை எழுப்ப முயற்சித்த ரகுநாத்தின் பார்வை காரின் மறுபுறம் செல்ல, அவ்விடம் தலையில் ரத்தம் வடிய, ஒரு கால் காரின் அடியில் மாட்டிக்கொண்ட நிலையில் மயங்கி கிடந்தான் சூர்யா

அவனை கண்டவர் வெற்றியை விடுத்து சூர்யாவை நெருங்கி, அக்கம் பக்கம் உதவி கேட்டு எப்படியோ தன் காரில் இருவரையும் மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்த போது இருவரின் நிலையுமே கவலைக்கிடம் தான்

இருவருக்குமே காயங்கள் அதிகம் இருந்து, ரத்த அதிகம் கசிந்து இருந்ததால், உடனே ரத்தம் தேவை படும் நிலை வர, அப்போதும் தயங்காமல் சூர்யாவிற்கு ரத்தம் கொடுத்து அவனை காப்பாற்றியது ரகுநாத் தான்

அவரின் ரத்தம் சூர்யா உடம்பில் கலந்த நொடியில் ஏனோ அவருள் இருந்த அந்த பிரிவினை முற்றிலும் அகன்று, தன் தங்கை மகன் சூர்யாவை ஏற்றே கொண்டது ரகுநாத்தின் மனது

அனைத்தையும் அறிந்தவன் ரகுணத்திற்கு நன்றி கூற முயல, ஆனால் அவனின் உடல் நிலை அவனுக்கு துணை நில்லாமல், அவன் சிரம பட, அதை காண முடியாத ரகுநாத் அவனை ஆர தழுவி, நெற்றியில் முத்தமிட்டவரிடம் தான் இத்தனை நாள் தேடிய தாய் மாமன் என்ற உறவு மிதம் மிஞ்சி வெளியே வர, அதில் திளைத்து கிடந்தான் சூர்யா

அடுத்த இரு தினங்கள் போலீஸ் உயர் அதிகாரிகள் இவனை வந்து கண்டு செல்வதும், வாழ்த்துக்கள் வருவதும், உடல் தேறுவதும் என்று அவனின் நாட்கள் வேகமா பயணிக்க,

எத்தனை முயற்சித்தும் அந்த  பெண்ணின் அழுகையும் அவளின் காதலையும் மறக்கமுடியவில்லை சூர்யாவால்.. தனக்காக அவள் அழுது பேசிய போது எத்தனை காதலும், அன்பும், அக்கறையும் அவள் பேச்சில்.. காதலியாக ஒரு சமயம், தாயாய் சில நொடிகள் என்று அவளின் பேச்சின் தெரிந்த அக்கறை பாசம் ஏனோ சூர்யாவை ஈர்க்கவே செய்தது

முதல் முறை அவள் யார் என்று காண துடித்தான் சூர்யா.. அவளின் முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனின் மனதை முழுமையாய் ஆக்கிரமித்து கிடக்க, அதற்கான வழி தான்  அவனுக்கு புரியாமலே இருந்தது

ஒரு முறை உடை மற்றும் போது, தன் சட்டை பொத்தனில் பெண்கள் அணியும் பிரேஸிலெட் தொங்கி கொண்டு இருக்கவும், அதை கையில் எடுத்தவன்

“இது யாரோடதுனு தெரியலே? நமக்கு தெரிஞ்சி யாரும் இவ்ளோ மாடர்னா இதை எல்லாம் யூஸ் பண்ண மாட்டாங்க..யாரோடதா இருக்கும்?” எண்ணியவனின் சிந்தையை கலைக்கும் விதமாக உள்ளே வந்தாள் அஞ்சலி

மதிய உணவை எடுத்து வந்தவள் இரவு வரை சூர்யாவுடன் இருந்து அவனை பார்த்து கொள்வதாய் கூறி விட்டு, சிவகாமி, ரகுநாத் என்று அனைவரையும் வீட்டுற்கு அனுப்பியும் வைத்து விட்டாள்

“வாம்மா..வெற்றி எப்படி இருக்கான் இப்போ? காயம் எல்லாம் அறிடுச்சா? நல்லா தானே இருக்கான்” முதலில் வெற்றியை பற்றி விசாரித்தான் சூர்யா

வெற்றிக்கு காயங்கள் இருந்தாலும், அது எதுவும் உயிருக்கு ஆபத்தாக இல்லாமல் போனதால், வீட்டில் வைத்தே அவனை கவனித்து கொள்வதாக அவனை வெற்றிக்கு அழைத்து சென்று விட்டார் அவனின் தந்தை.

“வெற்றி அண்ணா நல்லா தான்ணா இருக்காரு? இன்னைக்கு காலைல இருந்து அவரோட அலப்பறை தாங்க முடியல.. உங்களை வந்து பார்த்தே தீருவேன்னு ஒரே அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு.. எப்டியோ கஷ்ட பட்டு அவரை வீட்ல உக்கார வெச்சிட்டு வந்து இருக்கோம்” என்றவள் பார்வையில் அந்த பிரேஸிலெட் பட, அதை கையில் எடுத்தவள்

“இது எப்படி அண்ணா இங்க வந்துது.. உங்க கிட்ட யார் குடுத்தா? ” குழப்பமாய் வினவினாள் அஞ்சலி

“தெரியலம்மா.. இப்போ தான் கவனிச்சேன்.. என் சட்டையில ஒட்டி இருந்துது.. யாருதுனு தெரியல” என்றான் சூர்யா

“இது வெண்பாவோடது அண்ணா.. இதோ பாருங்க இந்த பிரேஸிலெடை இப்டி திருப்புனா கழுத்துக்கு போடுற நெக்க்லாஸ் மாதிரி மாறிடும்.. இது புது மாடல்.. ஆதி தான் இதை அவளுக்கு கிபிட் பண்ணாராம்.. வெண்பா ஒரு முறை இதை எனக்கு காமிச்சி இருக்கா” என்றால் அஞ்சலி சாதாரணமாக

“பாவம் வெண்பா தான், வெற்றியை கூட கவனிக்காமல் உங்க பக்கத்துலயே தான் இருந்தா..இப்போ தான் ரெண்டு நாளா அவளை காணோம்.. நீங்க முழிக்குற நாளுக்கு முன்னாடி வரைக்கும் இங்கயே சிவகாமி அம்மா கூடவே இருந்தா” என்றவள் தான் கொண்டு வந்த உணவை பரிமாறிய படி பேசினாள்

“என்ன அந்த பிரேஸிலெட் வெண்பாவோடதா!!”அதிர்ந்தவன்,

“அப்போ எனக்கு மெசேஜ் பண்ண பொண்ணும் வெண்பாவா இருக்குமோ” எண்ணியவனுக்கு முதலில் இதை நம்ப முடியாமல் தான் இருந்தான்

பின்னர் நன்கு யோசித்தவனுக்கு, தன்னிடம் அழுது உருகிய அந்த குரலை நினைவு கூர்ந்தவனுக்கு, தொண்ணூறு ஒன்பது சதவிகிதம் அது வெண்பாவின் குரல் தான் என்பது உறுதியானது

“அவ எதுக்கு நமக்கு அப்படி மெசேஜ் பண்ணனும்.. அதுவும் காதலிக்கிறேன்னு அவ சொன்னது உண்மையா? நான் முழிக்கும் போது உருகி உருகி பேசுனது அவளா” என்றவனுக்கு ஆச்சரியம் தான் தாளவில்லை

Advertisement