Advertisement

ஏதேதோ நினைத்து அமர்ந்து இருந்தவனுக்கு, ஏனோ தன் வீட்டிற்கு எதிரே இருக்கும் காவலர்களில் சிறு மாற்றம் தென்படவும், அதுவும் அடிக்கடி அவர்களுக்கு கைபேசி அழைப்புகள் வருவதும், அதனால் அவர்கள் பதறுவதும், பின் தங்களுக்குள் பேசி கொள்வதும்என்ன அவர்களுக்குள் நிலவும் பதற்றமே, எதோ சரி இல்லை என்பதை சூர்யாவிற்கு சொல்லாமல் சொல்லி இருந்தது

இதுவரை எங்கெங்கோ பயணித்த அவனின் மனம், ஒருநிலை பட்டு தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனிக்க துவங்கி இருந்தது.. அவன் மனதிலும் பல கேள்விகள் எழுந்து இருக்க, அவை அனைத்திற்கும் பதிலாய் ஒலித்தது அவனின் கைபேசி

“சார் நீங்க எங்க இருக்கீங்க? ” எடுத்த எடுப்பில் பதட்டமாய் ஒலித்தது ஒரு குரல், அது அந்த ஊரில் இன்ஸ்பெக்டரின் குரல் என்பதை அறிந்து கொள்ளவும் அதிக நேரம் எடுத்து கொள்ளவில்லை சூர்யா

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.. என்ன ஆச்சு? ஏதாவது ப்ரோப்லமா?” என்றான் சூர்யா

“சார் ஒரு பேட் நியூஸ்.. அதை சொல்ல தான் உங்களுக்கு கால் பண்ணேன்”

“என்ன விஷயம்.. சொல்லுங்க” என்றான் சூர்யா குரலில் கம்பீரம் மாறாமல்

“சார், அந்த நாட்டாமை ஜெயில்ல இருந்து தப்பிச்சிட்டான்.. இன்னைக்கு மதியம் வரை அவனை ஜெயில்ல தான் இருந்து இருக்கான்.. அதுக்கு அப்புறம் அவனை யாருமே பாக்கல.. சிசிடிவி செக் பண்ண அப்போ தான் அவன் தப்பிச்சி போனது உறுதி ஆகி இருக்கு..

“ஒ அப்படியா?” என்றான் சூர்யா, அவனுக்கும் கூட இது அதிர்ச்சி தான்

“அவன் அடுத்து உங்களை பாக்க தான் வருவான் சார்.. அதனால உங்க வீட்டுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு போட்டு இருக்கோம் சார்.. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க” என்றவன் வைத்து விட

நாட்டாமை தப்பித்தான் என்றான் அது தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் பெரிய ஆபத்தையே உண்டாகும் என்பதை உணர்ந்தவன், தானும் கவனமாக செயல் பட வேண்டும் என்ற முடிவெடுத்தவன் தனக்கான சில யுக்திகளை கையாளவும் செய்தான்

இரவு வீடு திரும்பிய வெற்றி, பார்வையால் ஸ்வாதியை தேட, வெண்பாவுடன் அமர்ந்து எதையோ அவள் செய்து கொண்டு இருந்தவள், இவன் வருகை அறிந்தும் கூட இவனை கண்டு கொள்ளவே இல்லை

அதுவும், “அவன் வேறு ஒருத்தியை விரும்புகிறான்” என்ற செய்தி ஏனோ அவளுள் இனிமையை தரவே இல்லை.. எதோ ஒரு நெருடல் அவளை போட்டு உள்ளூர வாட்டி வதைத்து கொண்டு தான் இருந்தது

அதனாலேயே வெற்றி வந்தும் கூட அவன் புறம் திரும்பாமல் இருந்தாள் ஸ்வாதி.. இடையில் ஸ்வாதியின் தாயும் கூட,

“ஸ்வாதி, ஆதிக்கு போன் பண்ணி பேசுனியா? உங்க நிச்சயத்துக்கு என்ன டிரஸ் போட முடிவு பண்ணி இருக்கீங்க ரெண்டு பெரும்.. ஆதி கிட்ட பேசிட்டு சீக்கிரம் சொல்லுமா.. அப்போ தானே மத்த வேலைகள் பாக்க வசதியா இருக்கும்” எங்க

வெற்றியை சீண்ட எண்ணியவள்

“இதோ இப்போவே கால் பண்றேன்மா.. ரெண்டு பேரும் ப்ளூ கலர்ல டிரஸ் போடலாம்னு இருக்கோம்.. நான் பேசிட்டு சொல்றேன்” என்றவள் தன் கைபேசியுடன் தன் அறைக்கும் சென்று விட்டாள்

நிச்சயத்திற்கு அவள் தயார் ஆவதும், உற்சாகமாய் அதில் ஈடுபடுவதும் வெற்றியை பதறவே வைத்தது.. அதுவும் வந்ததில் இருந்து தன்னை ஏறெடுத்தும் கூட பார்க்காமல் அவள் போக்கில் அவள் இருந்தது மேலும் வெற்றியை குழம்பவே செய்தது

“ஆதியே வேணாம்னு சொன்னாலும் இவளே போய் தாலி காட்டுனு நிப்பா போலவே.. இதை இப்படியே விட்டா சரி வராது” என்று எண்ணியவன் அடுத்து அழைத்தது சூர்யாவை தான்

தன் திட்டங்களை கட்சிதமாக தீட்டி கொண்டு இருந்த சூர்யாவிற்கு வெற்றியிடம் அதுவும் இந்த இரவு வேளையில் அழைப்பு வர, அதுவும் நாட்டாமை விடுதலையான இந்த நேரத்தில் வரவும் பதறியவன், அழைப்பை எடுக்க

“டேய்.. எரும.. என்னடா நெனச்சுக்கிட்டு இருக்க நீயும்.. நான் எப்போல இருந்து காத்திக்கிட்டு இருக்கேன்.. நீ காதுலயே வாங்க மாட்டேங்குற” என்றான் வெற்றி எடுத்த எடுப்பில்

“என்னடா ஆச்சு.. ஒழுங்கா விஷயத்தை சொல்லுடா.. எடுத்த உடனே கத்தாதே.. என்ன ஆச்சு இப்போ” சலித்து கொண்டான் சூர்யா

“என்ன ஆச்சா? டேய் அந்த பொண்ணு ஸ்வாதி, நிச்சயத்துக்கு ரெடி ஆகுறாடா.. டிரஸ் எல்லாம் எடுக்குறா” என்றான் பதட்டமாக

“ஓ உன் காதல் பிரச்னையா?” மனதுக்குள் சிரித்து கொண்டவன்

“அவ நிச்சயத்துக்கு அவ டிரஸ் எடுக்குறா.. உனக்கு என்னடா வந்துது.. நீ எதுக்கு கொந்தளிக்குற” வம்பிழுத்தான் சூர்யா

“என்னடா இவ்வளவு கூலா கேக்குற.. இந்த நிச்சயம் நடக்க கூடாதுடா” என்றான் மறுப்பாக

“ஏன் நடக்க கூடாது.. ஆமாம் நீ டிரஸ் எடுத்துட்டியாடா. என்ன கலர்ல எடுத்த..நான் இன்னும் எடுக்கவே இல்லடா” என்றான் மேலும் அவனை சீண்டும் வகையில்

“டேய் நீ எல்லாம் மனுஷனாடா.. நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கேன்.. நீ டிரஸ் பத்தி பேசுறே” என்றான் உண்மையான கோவத்தில்

“இப்போ எதுக்கு பிபி வந்த கொரங்கு மாதிரி கதறிக்கிட்டு இருக்க.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.. இப்போ மூடிக்கிட்டு தூங்கு” என்றான் சூர்யா, மேலும் வெற்றியை சீண்டும் எண்ணம் இல்லாமல்

“எத்தனை மணிக்கு.. உனக்கு நாளைக்கு வேலை வேற இருக்கும்ல.. சரி அப்போ காலைல ஏழு மணிக்கே நம்ப மலை முருகர் கோவிலுக்கு வந்துடு” என்றவன் அதே வேகத்தில் வைத்தும் விட்டான்

“இந்த காதல் வந்தா எப்படி பட்டவனும் மாறிடுவான் போலயே.. காலைல பதினோரு மணிக்கு முன்னாடி எந்திரிக்காத நாயி இன்னைக்கு பாரு.. காலைல ஏழு மணிக்கே கோவிலுக்கு வர சொல்லுது.. பொறி வெக்காமலே எலி வந்து தானா சிக்கிடும் போலயே” என்றெண்ணியவனுக்கு ஏனோ அந்த கைபேசி பெண்ணின் நினைவு வந்தது

காலையில் இருந்து கிட்ட தட்ட ஐம்பது மெசேஜ்கள் வந்து விட்டது.. அனைத்தையும் பார்த்தானே தவிர எதற்குமே பதில் அனுப்பவில்லை சூர்யா

அதிலும் கூட ஒரு செய்தியில்,

“உண்மையா நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நான் எப்படி வாழ போறேன்னு தெரியல.. உன் பக்கத்துலயே இருந்துட்டு உன்னை வேறு ஒரு பெண்ணோடு பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.. அப்படி ஒரு நிலை வந்தால் கண்டிப்பா நான் இந்த உலகத்துல இருக்க மாட்டேன்” என்று வந்தது அவளின் அந்த கடைசி செய்தி

கிட்டத்தட்ட பத்து முறையாவது அந்த செய்தியை படித்து அதை புரிந்து கொள்ள முயற்சித்து கொண்டு இருந்தான் சூர்யா.. அது முதலில் மிரட்டும் செய்தி போல் தோன்ற.. தெளிவாய் படித்த பின்பு தான் அதில் நிறைந்து இருக்கும் காதலும், அவளின் உணர்ச்சிகளுமே சரியாக புரிந்தது சூர்யாவிற்கு

“எனக்காக ஒரு பொண்ணு இவ்வளவு உருகுகிறாளா என்பதே ஆச்சர்யமாக தான் இருந்தது சூர்யாவிற்கு.. ஏனோ அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் போனது..

முயன்று மனதை கட்டு படுத்தியவன்.. மனமே இல்லாத போதிலும், ஜாதி மற்று திருமணத்தை ஏற்று கொள்ளாத இந்த சமூகத்தின் நீதிகளுக்கு பலியான அனுபவத்தினால், அதே நிகழ்வுகள் மறுபடியும் தொடர வேண்டாம் என்று எண்ணியவன், அந்த எண்ணை பிளாக்கும் செய்து விட்டான்

மன நெருடலுடன் படுத்தவனுக்கு உறக்கம் துளியும் வராமல் போக, காலை நான்கு மணி போல எதோ உறங்கியவனை சரியாக ஆறு மணிக்கே எழுப்பி விட்டான் வெற்றி

அவனை அழைத்தவன்,

“இன்னுமாடா தூங்குற.. ஏழு மணிக்கு கோவிலுக்கு வரேன்னு சொல்லிட்டு இன்னும் தூங்குறியேடா.. சீக்கிரம் எழுந்திரு” அவசர படுத்தினான் வெற்றி

“டூர் போகணும்னா மட்டும் மாடு மாதிரி தூங்கி என் உயிரை வாங்குவான்.. இப்போ மட்டும் நேரத்துக்கு முன்னாடியே போன் பண்ணி மனுஷனை தூங்க விடாம சாகடிக்குறான்.. என்ன பண்ணுறது.. இவன் லவ் பண்றதுக்கு எல்லாம் நாம அவஸ்தை பட வேண்டி இருக்கு” தலையில் அடித்து கொள்ளாத குறையாக சலித்து கொள்ள, வேறு வழி இன்று காலை ஏழு மணிக்கு சொன்னதை போல் மலை முருகர் கோவிலை அடைந்து இருந்தான் சூர்யா

அவன் வரும் முன்பே கோவில் நிழற்குடை அருகே நின்று கொண்டு இருந்தான் வெற்றி

“என்னடா, எப்போ வந்தே..எனக்கு முன்னாடியே இங்க வந்து நின்னுகிட்டு இருக்க” என்றான் சூர்யா சாவகாசமாக

“டேய் எவ்ளோ பெரிய பிரச்சனை போய்ட்டு இருக்கு.. நீ என்னடானா இவ்ளோ ஜாலியா சுத்திகிட்டு இருக்க” எகிறினான் வெற்றி

“இப்போ என்ன ஆயிடுச்சுன்னு வந்ததும் வராததுமா இப்டி கத்துற.. வா மொத இங்க வந்து உக்காரு” என்றவன் முதலில் சென்று அமர்ந்தும் கொண்டான்

“நீ எல்லாம் மனுஷனாடா.. எதுவுமே நடக்காத மாதிரி உக்காந்து இருக்க.. அவ என்னடானா நிச்சயத்துக்கு டிரஸ் எடுக்கணும், இந்த கடைல நகை எடுக்கணும்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கா” என்றான் வெற்றி கோவமாக

“எடுக்கட்டுமேடா அதுல உனக்கு என்ன வந்துது” என்றான் சூர்யா அப்போதும் சாதாரணமாக

“எனக்கு என்னவா? நான் தான்டா கேப்பேன்.. எனக்கு உரிமை இருக்கு

..கண்டிப்பா இந்த நிச்சயத்தை நடக்க விட மாட்டேன். கண்டிப்பா நிறுத்துவேன்” என்றான் அதிக கோவத்தில்

“ஏன் நிறுத்துவ..ஸ்வாதி யாரை கல்யாணம் பணிகிட்டா உனக்கு என்னடா.. அந்த கல்யாணத்தை நிறுத்துரத்துலயே ஏன் குறியா இருக்க?” என்றான் சூர்யா லேசாக குரலை உயர்த்திய படி

“அது.. அது.. வந்து.. நம்ப அஞ்சலி வாழ்க்கை இதுல சமந்த பட்டு இருக்குல்ல.. அப்போ நாம தானே கேக்கணும்”என்றான் வெற்றி தடுமாறிய படி

“இன்னும் நடிக்குறான் பாரு.. இன்னைக்கு உன் வாயாலேயே உண்மையை சொல்ல வைக்காமா விட மாட்டேன்டா” மனதில் நினைத்த சூர்யா

“அதெலாம் அஞ்சலிக்கு இதுல எந்த பிரச்னையும் இல்லையாம்.. நேத்தே அவ கிட்ட பேசிட்டேன்.. ஆதியை கண்ணார பார்த்துகிட்டே வாழ்ந்துடுறேன்.. ஸ்வாதியை ஆதி கல்யாணம் பண்ணிக்குறதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்லனு சொல்லிட்டா” என்றவனை முடிக்கவும் விடாமல்

“ஆனா எனக்கு பிரச்சனை இருக்குடா.. ஸ்வாதி எனக்கு சொந்தமானவ..அவ எனக்காக பிறந்தவ..அவ எப்படி ஆதியை கல்யாணம் பண்ணிக்க முடியும்.. ஸ்வாதி என்னோட உயிர்டா.. என் உயிர் இன்னோருத்தரோட போறதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றான் வெற்றி இறுதியாக தன் மனதில் இருப்பதை போட்டுடைத்த படி

“அப்படி வாடா வழிக்கு.. இந்த வார்த்தையை உன் வாயில இருந்து வரவழைக்க எவ்வளவு கஷ்ட பட வேண்டி இருக்கு.. இப்போவாவது நீயே எல்லாத்தையும் ஒத்துக்கிட்டியே” என்றான் சூர்யா மன திருப்தியுடன்

“அது நான் அப்படி சொல்ல வரல.. வந்து… அவ.. ” ஏதேதோ பேசி தடுமாறினான் வெற்றி

“போதும்டா.. இப்போவாச்சு உண்மையை ஏத்துக்கோ.. எத்தனை நாள் இப்டி மறச்சி மரச்சே வாழ போறே” என்றான் சூர்யா ஆறுதலாக வெற்றியின் தோல் பற்றியபடி

“ஸ்வாதிக்கும் இதுல விருப்பம் இருக்கணும்ல.. நான் தானே அவளை விரும்புறேன்.. அவளுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லையே..அவ ஜாலியா நிச்சயத்துக்கு ரெடி ஆகிட்டு இருக்கா” என்றான் வெற்றி முக வாட்டத்தோடு

“ஸ்வாதிக்கு உன் மேல இஷ்டம் இல்லனு யார் சொன்னது.. அவளும் உன்னை விரும்புறாடா மடையா” என்றான் சூர்யா லேசாக வெற்றியின் தலையில் தட்டியபடி

“அப்டியா” நிமிடத்தில் மின்னியது வெற்றியின் கண்கள்,

“உனக்கு எப்படி தெரியும்? அவளே சொன்னாலா?” வினவினான் வெற்றி

“அவ எதுவும் சொல்லல” என்றவன் அன்று கோவிலில் நடந்த அனைத்தையும் கூற, ஸ்வாதியின் மனம் இன்று தான் முழுவதும் புரிந்தது வெற்றிக்கு

அதன் பின், தனக்கு காதலி இருக்கிறாள் என்று கூறிய பின்னர் முக வாடி போய் நின்ற அவளின் முகம் வெற்றி கண் முன் வர, அதில் லேசாய் சிரித்தவன்

“கள்ளி, உன்னை வந்து வெச்சிக்குறேன்” மனதில் பேசியவனுக்கு எதோ தோன்ற

“அப்போ ஆதிக்கு இதெல்லாம் தெரியுமாடா?” என்றான் சந்தேகமாக

“அவனுக்கு எதுவும் தெரியாதுடா..அவனே பாவம் அஞ்சலி இது எதுலயும் பாதிக்க படக்கூடாதுனு ரொம்பவே குழம்பி போய் சுத்திகிட்டு இருக்கான்” என்றான் சூர்யா உண்மையான வருத்தத்துடன்

“இப்போ இந்த விஷயம் அவனுக்கு தெரிஞ்சா என்னை தப்பா நெனச்சிப்பானோ” குழம்பினான் வெற்றி

“அடேய், உங்க காதல் விஷ்யம் மட்டும் ஆதிக்கு தெரிஞ்சது, அவனோட மொத்த பிரச்னையும் ஒரே நிமிஷத்துல சரியான மாதிரி ரொம்பவே சந்தோசமா படுவான்டா அவன்” என்றான் சூர்யா, அதோடு நில்லாமல்

“வா இப்போவே நாம அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லுவோம்.. விஷயம் தெரிஞ்சா அவன் ரொம்ப சந்தோச படுவான்” என்ற சூர்யா வெற்றியுடன் கிளம்ப, இதற்காகவே காத்திருந்தது போல் இரண்டு ஜோடி கண்கள் மனதுக்குள் சிரித்து கொண்டது.

Advertisement