Advertisement

அத்தியாயம் 17..

 கணவன் மீது கையை காலை போட்டு நன்றாக ஆழ்ந்து உறங்கிய மனைவியை அவனும் முத்தமிட்டு அவள் உறக்கம் கெடாமல் அணைத்துக் கொண்டு உறங்கினான் ராம்..

 அவன் அவளை அணைத்து இருப்பதை பார்த்தால் பத்திரகாளியாக ஆடி விடுவாள்.. என்று தெரிந்து அவன் வழமை போல் நேரத்திற்கு எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவள் எழுந்து வருவதற்காக காத்திருந்தான்..

 நேற்று போல் இன்றும் அவள் எழுந்து வந்ததும் அவளே காபியை ஊற்றிக் குடித்துவிட்டு அறைக்கு சென்று குளித்துவிட்டு அவன் செய்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு விட்டு இன்றும் அவன் வராமல் இருக்க அவனைத் திரும்பிப் பார்த்தவள் “ இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆகும்.. பிரண்ட்ஸ்க்கு எல்லாம் கல்யாண பார்ட்டி கொடுக்குறேன்னு சொல்லி இருக்கேன்.. அதை கொடுக்கறதுக்கு ராஜ் ஹோட்டல் போறோம்… ” என்று அவனுக்கு தகவல் போல் கூறிவிட்டு அவளே காரை எடுத்துக் கொண்டு காலேஜ் சென்றாள்..

 ஹனிமூன் சென்ற ஜோடி ஒவ்வொரு நாட்களையும் சிறப்பாக சந்தோஷமாக கடந்தார்கள்..

 விஐபி கண்மணியை மிகவும் கவனமாகவும் அன்பாகவும் பார்த்துக் கொண்டான்..

 ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என்பதை கேட்டு கேட்டு இருவரும் சேர்ந்து பர்சேஸ் பண்ணினார்கள்..

 அவர்களும் இன்னும் இரண்டு நாட்களில் நாடு திரும்புவார்கள்..

 ஹனிமூன் செல்வது இருவரும் உடல் தேவையை பரிமாறிக் கொள்வதற்காக அல்ல..

 ஒருவருக்கு ஒருவர் பேசி புரிந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையை திட்டமிட்டு ஒருவருக்கு பிடித்ததை மற்றொருவர் தெரிந்து கொண்டு பிடிக்காததை தெரிந்து கொண்டு ஒதுக்கி வைத்து.. குடும்ப உறுப்பினர்களை பற்றி அவர்கள் குணாதிசயங்களை பற்றி எடுத்துக் கூறி ஒரு ஜோடி இரு குடும்பத்திற்கும் இடையில் பாலமாக இணைந்து இருப்பதே சிறந்தது..

 அந்த வகையில் விஐபி யோ கண்மணியோ சரி நன்றாகவே பேசி பழகி மேலும் அவர்கள் காதலை வளர்த்துக் கொண்டார்கள்..

 இருவருக்கும் தந்தை இல்லை தாய் மட்டுமே.. இருவரும் வீட்டிற்கு ஒரே பிள்ளைகள் அதனால் வேறு பிக்கல் புடுங்கல்கள் எதுவும் இல்லை.. இனி வரும் காலங்களில் அவர்கள் இதே போல் சந்தோஷமாக ஒற்றுமையாகவும் காதலோடு அவர்கள் வாழ்க்கையை வாழ்வார்கள் என்றால் சிறந்த ஜோடி ஆவர்கள்..

 சிறந்த தாய் தந்தை ஆவார்கள்.. அவர்களைப் பின்பற்றி அவர்கள் பிள்ளைகளும் சமூகத்தில் சிறந்தவர்களாக வருவார்கள்..

 நல்ல ஒரு குடும்ப வாழ்க்கையை அமைப்பதற்கு ஹனிமூன் என்பது ஓர் அச்சாணி போல்..

 முதலில் போடும் கோட்டை நேராக போட்டு விட வேண்டும்..

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்கள்..

 நம் மனைவி தானே ஆறுதலாக பேசலாம்.. பார்த்துக் கொள்ளலாம்.. என்று நினைத்து ஆரம்பத்தில் விட்டால் அதற்கு பின் நல்ல வாழ்க்கையை தேடி நீங்க அலையை வேண்டியதுதான்..

 வண்டிலுக்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கணவன் மனைவிக்கும் தனிமை உரையாடல் முக்கியம்..

ஹனிமூன் அவர்கள் வசதிக்கு ஏற்றது போல் அமைத்துக் கொள்ளலாம்..

 ஃபாரினுக்கோ.. ஊட்டி கொடைக்கானல்,பெங்களூர்,, இப்படி பிரதேசங்களுக்கு மட்டும் ஹனிமூன் போக வேண்டும் என்று இல்லை.. அவர்கள் வசதிக்கு ஏற்றது போல் வசிக்கும் ஊரிலேயே ஓர் அழகிய சுற்றுலா தளத்திற்கு அழைத்து சென்று அவர்களை சந்தோஷமாக பார்த்துக் கொண்டாலே போதும்..

 பெரும்பாலான மனைவிகள் கணவனிடம் இதைத்தான் எதிர்பார்ப்பார்கள்.. அவர்களுக்கு என்று கணவனோடு ஒரு தனிமை சூழ்நிலை..

 திருமணம் முடித்த உடன் ஹனிமூன் சென்றால் மட்டும் போதாது.. புது குடும்ப சூழ்நிலை, உறவினர்கள், வேலைப்பளு இப்படி ஒவ்வொரு நாளும் அழுத்தத்தில் இருப்பவர்கள் அதற்கு வடிகாலாக சுற்றுலா சென்று குடும்பத்தோடு குடும்பத்திற்காக ஒரு நாள் செலவழித்து உற்சாகமாக அனைவரும் பேசி சிரித்து அவர்கள் தேவையை கண்டறிந்தாலே வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்..

 அப்படித்தான் நம் நினைத்தால் வருவாயோ அன்பே கதையில் வரும் நாயகர்களும் அவர்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்வார்கள்..

 அன்றைய தினம் காலேஜ் முடிந்ததும் நண்பர்கள் ராஜ் ஹோட்டலுக்கு மாலை நேரம் வந்து சேர்ந்தார்கள்..

 காலேஜ் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஒன்று சேர்ந்தால் அந்த இடத்தில் கலாட்டாவிற்கு பஞ்சமில்லை..

 அப்படித்தான் அவர்கள் இருந்த தடுப்பு பகுதியில் மிகவும் கலாட்டாவோடு கூச்சல் சத்தத்தோடு இருந்தது..

 முதலில் காபி பிரியை சீதா அனைவருக்கும் காபி ஆர்டர் பண்ணினாள்..

 ஒவ்வொருவரையும் பற்றி அவர்கள் எதிர்கால திட்டத்தை பற்றி பேசிக்கொண்டே காபியை குடித்துவிட்டு சற்று நேரத்தில் அவர்களுக்கு தேவையான விருப்பமான உணவு வகைகளையும் ஆர்டர் செய்துவிட்டு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்..

 காலையில் வரும் போதே ராமிடம் இன்று பார்ட்டி இருப்பதாக சொல்லிவிட்டு வந்தாள்..

 அவனையும் ‘ வா..’ என்று அழைக்கவில்லை.. ஆனாலும் கல்யாண பார்ட்டி என்று அழுத்தி சொல்லியிருந்தாள்… அதனால் அவன் கட்டாயம் வருவான்.. என்று எதிர்பார்த்தாள்.. ஆனால் அவன் வரவில்லை..

 ஏனோ மனம் சோர்வாக இருந்தது..

 அனைவரும் சந்தோஷமாக இருக்க அவளால் அங்கே சந்தோஷமாக பார்ட்டி கொடுக்க முடியவில்லை..

 அவள் முகம் சோர்வாக இருந்தால் அவர்களும் பார்ட்டியை அனுபவிக்க மாட்டார்கள்.. என்று தெரிந்து கஷ்டப்பட்டு முகத்தை சிரித்தது போல் வைத்துக் கொண்டாள்..

 நேரம் போய்க்கொண்டிருந்தது அனைவரும் உணவை உண்டு முடித்ததும்.. ஆளுக்கொரு ஜூஸ் ஆர்டர் பண்ணார்கள்..

 அவர்கள் விரும்பி கேட்ட ஜூஸ் வந்ததும் அதையும் குடித்துவிட்டு சற்று நேரத்தில் அனைவரும் அங்கிருந்து விடைபெற்று இந்த லீவ் முடிந்ததும் மீண்டும் சந்திக்கலாம் என கூறிவிட்டு சென்றார்கள்..

 சீதாவிற்கு மனதும் உடலும் ஏதோ சோர்வாக இருந்தபடியால் அவளால் தனியாக கார் ஓட்டி வீட்டுக்கு செல்ல முடியும் என்று தோன்றவில்லை..

 அதனால் அவளே கரணை அழைத்து காரை எடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டாள்..

அவனும் “ சரி.” என்று கூறி அவளை ஏற்றிக்கொண்டு கிளம்பினான்..

 போகும் வழியில் அவனுக்கு கைபேசி அழைப்பு வரும்பொழுது அதை எடுத்துப் போகும் இடத்தை கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்..

 சீதாவுக்கு தலைவலிப்பது போல் இருக்கவும் கார் கண்ணாடியில் தலை சாய்த்து கண்களை முடிக்கொண்டாள்..

 கார் மிகவும் வேகமாக சென்றது அந்த வேகத்தில் கண் முழித்த சீதாவிற்கு போகும் பாதை வித்தியாசமாக தெரியவும்

“ எங்க போறோம் கரண்.. ஏன் வீட்டுக்கு போகாம வேற எங்கேயோ போற?..” என்றாள்..

“ இது உங்க வீட்டுக்கு போறதுக்கு ஷார்ட் கட் சீதா.. கொஞ்சம் சீக்கிரமா போயிடலாம்..”

“ ஏய்..! நீ பொய் சொல்லுற?. இவ்ளோ காலமா சென்னையில இருக்கிற எனக்கு ஷார்ட் கட் எது நேர் வழி எது என்று தெரியாதா கரண்?..”

“ ஹேய் கூல் சீதா.. ஏன் சும்மா டென்ஷன் ஆகுற பேபி..? போக வேண்டிய இடத்துக்கு தான் சரியா போய்ட்டு இருக்கோம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடுவோம்.. நீ சமத்தா கண் மூடி தூங்கு..” என்று கூறி அவள் சோல்டரில் தட்டி விட்டு இன்னும் வேகமாக காரை செலுத்தினான்..

“ ஏய்.. கரண் என்ன பேச்சு ஒரு மாதிரி இருக்கு.. புதுசா கை வைக்கிற?..” எடுடா கைய..” என்றாள்..

“ ஏய் என்னடி வாய் எல்லாம் ரொம்ப நீளுது.. இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு இருக்கு டி உனக்கு..” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு இன்னும் வேகமாக காரை செலுத்தி அவன் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தான்..

 அவன் அங்கே வருவதற்கு முன்பு அலைபேசியில் அழைத்த அவன் நண்பனும் அங்கே வந்திருந்தான்..

“ டேய் தீபன் வாடா..” என்று அவன் அழைக்கவும் அவனும் ஓடிவந்து கார் கதவை திறந்தான்..

 கார் கதவு திறந்ததும் சீதா இறங்காமல் அப்படியே இருக்கவும் அவள் கையை பிடித்து இழுத்து வெளியே நிறுத்தினான் கரண்..

“ டேய் கரண் விடுடா என்னை.. தொடாதடா.. கொன்னுருவேன்டா இடியட்.. பொறுக்கி நாயே.. நீயெல்லாம் ஒரு பிரெண்டா?.. ச்சீ கேவலம் நீ..” என்று அவள் கையை இழுத்தை தட்டி விட்டு அவனுக்கு அடிக்கவும் அவன் அப்படியே அவளை பிடித்து கீழே தள்ளினான்..

“ டேய் கரண் என்னடா இன்னும் அவ மயக்கம் ஆகல..” என்றான் தீபன்..

“ ஆமாண்டா பத்து நிமிஷத்திலயே மயங்கணுமே..! அந்த மருந்து அப்படி வேலை செய்யுமே.. ஆனா அவள் இன்னும் மயங்கல.. சரி விடு இதுவும் நல்லது தான்.. மயங்கி உணர்ச்சி இல்லாமல் கிடக்குறதை விட முழிச்சி இருந்தாதான் நான் பண்ணுறது அவளுக்கு தெரியும்.. இப்ப பாரு அவ கத்துவா, கதறுவா அதெல்லாம் நமக்கு சும்மா ஜிவ்னு தலைக்கு ஏறி இன்னும் அதிகமா மூட் கொடுக்கும்.. செம்மையை என்ஜோய் பண்ணலாம் மச்சி.. சரி நான் ஆரம்பிக்கிறேன்.. அடுத்து நீ ஓகே..” என்று கூறிவிட்டு சீதாவின் அருகே சென்றான்..

 சீதா இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு கண்களில் கண்ணீர் வடிய கீழே விழுந்து கிடந்தாள்..

 ஆம் சீதாவின் வீக் பாயிண்ட்.. அதாவது விமான சத்தம்.. ஏர்போர்ட் அருகே யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கொஞ்சம் தனிமையான இடம்.. விமான சத்தம் அவள் காதில் கேட்டால் அவள் கொஞ்சம் கொஞ்சமாக சுயத்தை இழந்து கத்தி கதறுவாள்..

 அது தெரிந்து தான் அவளால் எதிர் வினையாற்ற முடியாத இடத்தை தேர்வு செய்தான் கரண்..

 ஒருவரை அழிக்கவோ அவர்கள் வாழ்க்கையை சூறையாடவோ வேண்டுமென்றால் அவர்கள் வீக் பாயிண்ட் மற்றும் அதற்குரிய சரியான இடம் என அனைத்தையும் சரியான முறையில் தேர்வு செய்திருக்க வேண்டும்..

அழிக்கத்தானே எந்த இடத்தில் நடந்தால் என்ன என்று நினைத்து விட்டால் நம் காரியம் சாதிக்க முடியாது..

கரணுக்கு இது புதுசு இல்லை.. அதனால் அவன் அனைத்தும் பக்காவாகவே செய்திருந்தான்..

 அவள் கத்திக் கொண்டே “ ஏய் கரண் கிட்ட வராத.. முத்துக்கு மட்டும் இது தெரிஞ்சுச்சுன்னா உன்னை உயிரோடயே விட மாட்டான்..” என்றாள்..

“ ஹா ஹா ஹா.. யாருடி முத்து.. ஓஹோ உன் காட்டன் புருஷனா?.. அவன் தான் ஊர்லயே இல்லையே.. நீதானே அவன் கல்யாணம் முடிஞ்சதும் ஊருக்கு போய்ட்டான்னு சொன்னியே.. திரும்ப வந்துட்டானா?..” என்றான்..

“ டேய் கரண் இப்ப பேச நேரம் இல்லை.. பெஸ்ட் செயல்.. அப்புறம் ஆறுதலா பேசிக்கலாம்.. யாராவது வந்துட போறாங்க..” என்று தீபன் அவசரப்படுத்தினான்..

அவன் சொன்னதை புரிந்து கொண்டு

“ ஏய்.. வாடி பக்கத்துல.. இல்லன்னா அடிவாங்கியே செத்துப்போவ..” என்று கூறிக்கொண்டு அவள் உடை மீது கை வைத்தான் கரண்..

‘ ஆஆஆஆ.. நோ நோ ஓஓஓஓ..’ என்று கத்திக்கொண்டு எழுந்து ஓடினாள்..

சீதா வந்த வேகத்தில் யார் மீதோ மோதினாள்..

யார் என்று நிமிர்ந்து பார்க்கும் மனநிலையில் கூட அவள் இல்லை..

விமான சத்தம் வருவதும் போவதுமாக தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது..

அதனால் அவளால் யோசித்து செயல் பட முடியாமல் தவித்து போனாள் சீதா..

ஒரு கரம் அவளை தன் புறம் பிடித்து இழுத்து நிறுத்தி அவள் விரும்பி கேட்கும் விஐபியின்

 ‘ அன்பே அன்பே நினைத்தால் வருவாயோ.. காதல் மொழி கற்றுத்தருவாயோ.. உன் காதல் இல்லையென்றால் என் உடல் கூட்டில் உயிரேது.. ஓடி வா உன் அன்பு காதலன் அழைக்கிறேன்.. உண்மை காதல் எதுவென அறிவாயோ..’ என்று அவன் காந்த குரலில் சத்தமாக சீதாவின் காதில் பாடல் ஒலித்து..

அந்த பாடல் சத்தம் விமான சத்தத்தை அவள் காதில் கேட்பதை குறைத்து முழுவதும் பாடல் ஒலி மட்டுமே கேட்டு அவள் மனசை அமைதி படுத்தியது..

அப்போதுதான் அவள் நிமிர்ந்து பார்த்தாள்..

ஐயனார் அருவாள் மட்டும் அவன் கையில் இல்லை.. ஆனால் ருத்ர மூர்த்தியாக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவனை பார்த்து அடிக்க கட்டையோடு வந்த கரண் நெஞ்சின் மீதே எட்டி உதைத்தான் சீதாவின் ராம்..

 இதோ அவள் அழைப்பு அவன் காதில் கேட்டதோ.. அவன் காதல் தேவதைக்கு ஒரு கஷ்டம் என்றதும் ஓடிவந்துவிட்டான்..

“ எடுப்பட்ட —- மகனே..! யார் மேலடா கை வைக்கிற?.. அவ என் உயிர்டா.. இந்த கைதானே அவளை தொட்டுது.. இந்த வாய் தானே தவறா பேசுச்சு.. இந்த கண் தானே அவளை தப்பா பார்த்துது..” என்று கேட்டு கேட்டே கையை காலை உடைத்துவிட்டு கண்ணில் ஊசியால் குத்தினான்..

வாயையும் அடித்தே உடைத்தான்..

உதவிக்கு யாரையும் அழைக்க முடியாது.. எழுந்து போகவும் முடியாது..

ராம் வந்த ஆட்டோகாரர் தீபனை அடித்து நொறுக்கினார்..

இருவரையும் அதே இடத்தில் போட்டுவிட்டு சீதா அருகே வந்து அவளை தோளோடு அணைத்துகொண்டு அழைத்து சென்றான்..

அவளும் மறுத்து எதுவும் பேசாமல் அவன் அரவணைப்பு அவளுக்கும் தேவை பட்டது அதை ஏற்றுக்கொண்டாள்..

அவள் காரில் ஏறியதும் ஆட்டோக்காரரிடம் இங்கே வந்ததுக்கு பணம் கொடுத்தான்..

அதை அவர் வாங்க மறுத்து விட்டார்..

“ வேணாம் தம்பி.. எனக்கும் பொண்ணுங்க இருக்காங்க.. ஒரு பொண்ணுக்கு அநீதி செய்ய நினைத்தவனை கோவம் தீரும் மட்டும் என் கையால அடிச்சு துவச்சிட்டேன் அதுவே போதும் எனக்கும்.. உங்க வீட்டு பொண்ணுக்கு ஒண்ணுமே இல்லை.. அவங்களை நீங்க சீக்கிரம் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க.. நீங்க எதுக்கும் பயப்படாதீங்க.. நீங்களும் நம்ம இனம்.. ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவியை செய்வோம்.. இந்த விஷயம் எப்பவும் என்னைதவிர வெளிய போகாது.. போயிட்டு வாங்க.. ” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்து விட்டு அவனுகளை திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்..

 ராம் வீட்டுக்கு போகும் வழியில் எங்கும் காரை நிறுத்தாமல் வீட்டுக்கு வந்து விட்டான்..

 வந்ததும் காரை நிறுத்திவிட்டு கார் கதவை திறந்து சீதாவை கையை பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று சோபாவில் இருக்க வைத்துவிட்டு சமையல் அறைக்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்..

 அவளும் அதை வாங்கி குடித்துவிட்டு தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டாள்..

 நேரம் நன்றாக சென்று இருட்டி விட்டது..

 மீண்டும் சமையலறை சென்று பாலை சூடு பண்ணி எடுத்து வந்து அவளுக்கு கொடுத்தான்..

“ எனக்கு வேணாம்..” என்றாள்..

“ ப்ச். கொஞ்சம் குடிடா லக்ஷ்மி.. பிளீஸ்..” என்று கெஞ்சி அவள் வாய் அருகே கொண்டு வந்தான்..

அதன் பின் அவளே வாங்கி குடித்து விட்டாள்..

“ இது எல்லாத்துக்கும் காரணம் நீதானே டா பாவி.. உன்னாலதானே அவன் அப்படி நடந்துகிட்டான்.. என் கையால் அவனை கொல்லணும்.. அப்பதான் என் ஆத்திரம் அடங்கும்.. இருக்கு அவனுக்கு துரோகி.. இனி இந்த சீதா யார்னு காட்டுறேன்..” என்று கத்திவிட்டு அவள் எழ முடியாமல் தவித்து மீண்டும் முயற்சி செய்து எழுந்து படியில் ஏறி அவர்கள் அறைக்கு சென்றுவிட்டாள்..

‘ என்னடா ராம் இவ சொல்லுறா?.. நானா காரணம்?.. நான் ஒண்ணுமே பண்ணலையே..’ என்று நினைத்து விட்டு அவனும் அறைக்கு சென்று விட்டான்..

ஏன் ராம் காரணம் என்று சீதா சொன்னாள்?..

என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்..

Advertisement