Advertisement

வெளியில் சொல்ல முடியாத வேதனையில் மருகி கொண்டு இருந்தான் வெற்றி.

அதற்கு காரணம் ஸ்வாதி அவனை வம்பிழுக்க செய்த செயல் மட்டும் இல்லை, எத்தனையோ ஆசையுடன் தன் எலி குட்டிக்காக வெற்றி காத்திருக்க, வந்து இறங்கிய ஸ்வாதியின் தோரணை அவனுக்கு ஏமாற்றத்தையே தந்து இருந்தது.

 இவை எதையும் வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளுக்குள் வைத்து மருகும் அவனை கவனிக்க தவறவில்லை போலீஸ் விழிகள். அவன் அருகில் சென்று விசாரிக்க எத்தனித்த நேரம்,

“என்னடா அண்ணா. இதுக்கே இப்டி அழுதா எப்படி? இன்னும் எவ்வளவோ அழ வேண்டி இருக்கு” என்றபடி கையில் தின்பண்டங்கள் கொஞ்சம் எடுத்து கொண்டு வந்தாள் வெண்பா, அவளின் பின்னால் வந்தனர் அஞ்சலியும், சிவகாமியும்.

“ஏய்ய்ய். உனக்கு கொழுப்பு ஆயிடுச்சி. ஆமா நீ உன் ஃபிரண்ட் வீட்டுக்கு தானே போறேன்னு சொன்ன. இங்க வந்து இருக்க” வெண்பா காதை ஒரு கையில் பிடித்த படி கேட்டான் வெற்றி.

“என்னோட ஃபிரண்டுக்கு எதோ ஒரு வேலை வந்துடுச்சாம். அதான் அவ வெளிய போய்ட்டா. சரி அண்ணியவாச்சும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றாள் வெண்பா.

“உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வேலையா பிஸியா இருகாங்க. நீ மட்டும் தான் வெட்டியா இருக்க?” தீவிரமாக யோசித்த படி கூறியவனை, தொடையில் கிள்ளியவள்,

“ஆமா நீ எப்போ வீட்டுக்கு போக போறே. நானும் உன் கூட வந்துடுறேன். என்னையும் கூட்டிட்டு போ” என்றாள் வெண்பா இயல்பாக.

“நான் இனி அந்த வீட்டுக்கு வர மாட்டேன்பா. அந்த குட்டி பிசாசு அங்க இருந்து போற வரைக்கும் நான் அங்க வர மாட்டேன்” என்றான் பதறி மறுத்த படி.

அவனின் அந்த திணறல் அனைவருக்கும் சிரிப்பை வரவழைக்க,

“வெற்றியவே பயமுறுத்தி வெச்சி இருக்கானா அவ பெரிய ஆளு தான்டா” வேண்டும் என்றே பேசினான் சூர்யா.

அதில் அவ்விடம் இருந்த அனைவரும் சிரித்து கிடக்க, அமைதியாய் இருந்த அஞ்சலி புறம் திரும்பியவன்,

“நீ மட்டும் ஏன்மா சும்மா இருக்க. நீயும் ஏதாவது சொல்லி சிரிச்சிக்கோ. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்” இல்லாத மீசையை வருடியபடி கம்பீரமாய் அவன் பேச, “கொல்” என சிரித்து விட்டாள் அஞ்சலி.

அதை எதிர் பாராதவன், “சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிடலாம்..” என்ற படி நெஞ்சில் குத்தி கொண்டு அழுவது போல் பாசாங்கு செய்ய,

அதில் மேலும் சிரித்த அஞ்சலி,

“நீங்க ஸ்வாதி குடும்பம் வரங்கனு சொன்னதும் அவுங்க எதோ நாப்பது அம்பது வயசு இருக்கவங்க போலன்னு நெனச்சேன். ஆனா அவுங்க நம்ப வயசுன்னு சுத்தமா எதிர்பார்களை அண்ணா.

அதுவும் கம்பீரமான எதுக்கும் கலங்காம இருக்க உங்களையே விழி புதுங்க வெச்ச அந்த தெய்வத்தை நான் உடனே பாக்கணுமே” என்றாள் இவள் பங்கிற்கு சினிமா வசனம் பேசிய படி.

“நீ ஒருத்தி தான் இந்த அண்ணனுக்கு துணையா இருப்ப, அடக்க ஒடுக்கமான பொண்ணா இருப்ப, உன்னை எப்படி பேச வெக்குறதுனு யோசிச்சேன், ஆனா நீ என்னை வெச்சி ரொம்ப நல்லா செய்யுறமா. உன்ன பாக்கவே பெருமையா இருக்கு” என்றவன் மேலும் நடிக்க,

“டேய் நிறுத்துங்கடா. உங்க பாசமலர் ஃபீலிங்க பாக்க முடியல. கண்ணு வேர்க்குது” என்ற ஆதிக்கு ஏனோ இந்த தருணம் நிம்மதியை தான் அதிகம் தந்தது.

யாரிடமும் ஒட்டாமல் ஒதுங்கி அமைதியாய் அஞ்சலி இருந்து விடுவாளோ என்ற பயம் அவனுக்கு முதலில் இருந்தே இருந்தது உண்மை தான், ஆனால் இன்று.

வெண்பாவிடம் அவள் பழகும் விதத்தை பார்த்ததும், சலனமே இன்றி இயல்பாய் வெற்றியை குறும்பாய் பேசி வம்பிழுத்து, தங்களுள் ஒருத்தியாய் மகிழ்ந்ததை கண்டவனுக்கு முன்பு இருந்த பயம் விலகி, என்னோ நிம்மதியே பெருகியது.

மறுபுறம், எதிர்பாரா நிமிடம், எதிர்பாரா நபருடன் நடந்தேறிய தங்களின் இந்த திருமணத்தால் பிரச்சனைகள் வரும் என்பது அஞ்சலி அறிந்த ஒன்று தான்.

ஆனால் ஒட்டு உறவே இல்லாமல் இருக்கும் தந்தை மகனின் உறவு அவளுக்கும் புதிதாய் தான் இருந்தது. அதிலும் இவர்களுடன் நம்மால் ஒன்றிணைந்து வாழ முடியுமா? இவர்கள் நம்மை ஏற்பார்களா? என்ற சந்தேகங்கள் அதிகம் இருந்த அவளின் மனதிற்கு, வெற்றியின் வார்த்தைகள் மருந்தாக அமைத்து விட, அவள் மனதில் கூட இந்த நொடி ஒரு நிம்மதியையே தந்தது.

அனைத்து அரட்டைகளும் சிறப்பாக நடந்து கொண்டு இருந்த வேளையில்,

“அடேய் வீணா போனவனுகளா!! இவ்ளோ பேசுறீங்களே நான் சாப்பிட்டேனான்னு யாராச்சும் கேட்டீங்களா? ஏமா தங்கச்சி நீயும் சாப்பிட சொல்லி ஒரு வார்த்தை கூட சொல்லல” என்றவன் மறுபடியும் வருந்துவது போல் நடிக்க, நொடியில் முகம் மாறி போனது அஞ்சலிக்கு.

அதை சரியாக கவனித்தான் ஆதி,

“அவன் சும்மா சொல்லுறன்மா. இப்போ கூட ஒரு தட்டு புல்லா சாப்பாடு வெச்சாலும் நாயி சாப்பிடும். பேச்சுக்கு தான் இப்டி பேசுறான். நீ எதையும் தப்பா எடுத்துக்காத” என்றான் அவன்.

“தப்பா எல்லாம் எடுத்துக்கல. உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்ன்னு இருந்தேன். அது இப்போதான் நியாபகம் வந்துது. அதான் எப்படி.. ” என்று இழுத்தவளை கவனித்த சூர்யா,

“டேய் உள்ள கூட்டிட்டு போய் என்னனு கேளு. ஏதாச்சும் தேவைன்னா என்னனு பாரு” என்றான் அவன்.

“அவ்வளவு பெரிய ரகசியம் எல்லாம் இல்லணா. ஒன்னு கேக்கணும். அதான் நீங்க எப்படி நெனச்சிப்பீங்களோன்னு கொஞ்சம் தயக்கமா இருக்கு” என்றாள் அஞ்சலி.

“எதுக்குமா தயங்குற. எல்லாம் நம்ப ஆளுங்க தான். சும்மா சொல்லு” என்றான் சூர்யா, அடுத்து நேர போகும் விபரீதம் புரியாமல்.

இருந்தும் தயங்கிய படி ஆதி முகத்தை அஞ்சலி பார்த்து நிற்க,

“எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லுமா” என்றவனின் வார்த்தைக்கு பிறகு,

“இந்த வீட்டுக்கு எதிர்க்க ஒரு சாப்பாடு கடை இருக்குல்ல. அது எதுக்கு இருக்கு. அங்க யாரும் வந்து சாப்புடுற மாதிரி நான் பாக்கல. அது இல்லாம இந்த ஊர்ல ஸ்கூல் காலேஜ் எல்லாம் எதுவும் இருக்க மாதிரி தெரியல.

ஆனா அந்த கடை மட்டும் பொழுதன்னைக்கும் இங்கயே தான் இருக்கு. இதுல ராத்திரியும் அந்த கடை இருக்கு. யாருமே இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்தூராகனே தெரியல.. அவுங்க யாரு?” அப்பாவியாய் முடித்தவளை ஆச்சர்யமாக பார்த்தான் சூர்யா.

எதிர்ச்சியாக பார்வையை திருப்ப தீ கக்கும் பார்வையில் அவனை எரித்து கொண்டு இருந்தான் ஆதி.

“ஆத்தி, இது எதோ அப்பாவி பிள்ளைன்னு பாத்தா. மிலிட்டரி மேன் பொண்ணுன்னு நிரூபிக்குறாளே. இதுவரைக்கும் எங்க அப்பா அம்மாக்கு கூட சந்தேகம் வராம பார்த்து பத்திரமா நடந்தா, வந்த ரெண்டே நாள்ள எல்லாத்தையும் போட்டு உடைச்சுட்டாளே. ஆதி வேற கோவமா பாக்குறானே. அவன் கிட்ட இருந்து என்னை காப்பாத்த யாருமே இல்லையா?” புலம்புயவனின் புலம்பலுக்கு பதிலாக ஒலித்தது அவனின் கைபேசி.

“ஹப்பாடா. தப்பிச்சோம்டா” என்று எண்ணியவன், விட்டால் போதும் என்று அவ்விடத்தை விட்டு ஓடி விட,

கேள்வி கேட்டவள், பதிலுக்கு காத்திருக்க, அங்கிருக்கும் அனைவரும் கூட பதிலுக்கு காத்திருக்க, அந்த நேரத்தை சமாளிக்க முயன்ற ஆதி,

“அது ஒன்னும் இல்ல. அது திருவிழா நேரம்ன்றதால யாராவது தொழில் காரங்க வந்து இருப்பாங்க. திருவிழா முடிஞ்சதும் போய்டுவாங்க” என்றவனின் பதிலை அனைவரும் ஏற்று கொண்டு அமைதியாகி விட,

ஏனோ இந்த பதில் திருப்தியை அளிக்கவில்லை அஞ்சலிக்கு, குழப்பத்துடன் இருந்தவன் அடுத்த கேள்வியை கேட்க எத்தனித்தவளை, கண்ணாலேயே தடுத்தவன்,

“பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று சைகையும் காட்ட. சரி என்று தலையாட்டியவள் விஷயத்தின் வீரியத்தையும் கொஞ்சம் புரிந்தே கொண்டாள்.

பின் உணவு உண்பது, அரட்டை அடிப்பது என்று அன்றைய நான் இனிதே கழிய,

இதுவரை முப்பது முறை ஆதியை அழைத்து விட்டார் ரகுநாத். அதை கவனித்தவன் சளைக்காமல் இருக்க, பின் வெற்றிக்கு சில முறை அழைத்தவருக்கு,

எந்த சாதகமான பதிலும் கிடைக்காமல் போக, தன் திட்டம் நிறைவேறாமல் போது விடுமோ என்ற பயம் முதல் முறை தோன்ற, இயன்ற வரை விரைவில் அனைத்தையும் முடிக்க முடிவு செய்தார் ரகுநாத்.

நாள் பொழுதும் அஞ்சலியுடன் கழித்தும் கூட, அது போதாமல் போக, நாளை வருவதாக கூறி பிரியா விடை பெற்றான் ஆதி.

அதே போல் வெற்றியும், வெண்பாவும் கிளம்பி விட, இன்னும் துல்லியமாக செயல் பட வேண்டும். தன் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று எண்ணிய சூர்யாவிற்கு அடுத்த நாள் ஒரு பொன் விடியலாகவே அமைந்து போனது.

மனதின் நிலையை சொல்ல முடியாமல், உணர முடியாமல் தவித்த ஸ்வாதி ஒரு வழியாக தூங்கி போய் இருக்க, அந்த நேரம் வீட்டிற்கு வந்த வெற்றிக்கு இது நிம்மதியையே தந்தது.

இரவு முழுவதும் தான் சேர்த்த ஆவணங்களை சரி பார்த்து கொண்டும், சில பல கைபேசி அழைப்புகளிலும் மூழ்கி போய், எதையோ அவசரமாக செய்து கொண்டு இருந்தான் சூர்யா.

என்னோ இன்றே உலகம் முடிந்து விடும் என்ற அவசரம் அவனின் செயலில் அப்பட்டமாக தெரிந்தது.

சில பல குறுந்செய்திகளை சரி பார்த்து கொண்டு இருந்தவனுக்கு, நடுநிசி இரண்டு மணி இருக்கும் போது வந்த குறுந்செய்தியில் சற்றே குழம்பி தான் போனான் சூர்யா.

அதில் “ஐ லவ் யூ ” என்று மட்டும் ஒரு செய்தி வந்தது. முதலில் குழம்பியவன்,

“யாரோ மாத்தி அனுப்பிட்டாங்க போல. நமக்கு போய் யார் இப்டி எல்லாம் அனுப்ப போறா!!” என்றெண்ணியவன் காலை ஆறு மணி வரை வேலை பார்த்தவன், உறக்கம், உணவு என்று அனைத்தையும் தவிர்த்து எங்கோ அவசரமாக கிளம்பியும் விட்டான்.

காலை கண் விழிக்கும் போதே, “குட் மார்னிங்” என்று இரண்டு கண்ணில் இதயத்தை ஏந்தும் பொம்மையும், ஒரு இதய பொம்மையும் இனிதே வந்து சேர்ந்து அஞ்சலியின் கைபேசிக்கு. அனுப்பியதும் ஆதி தான்.

அதை பார்த்தவளின் முகம் பூவாய் மலர, அவளும் பதிலுக்கு “ஹாப்பி மார்னிங்” என்ற பதிலுடன் ஒரு இதய பொம்மையையும் சேர்த்து அனுப்ப, அது அவளின் இதயமாகவே கருதியவன் அதை பெற்று பத்திர படுத்திக்கொள்ளவும் மறக்கவில்லை.

 ஆயிரம் கதை பேச துடிக்கும் ஆதியின் இதயத்திற்கு, என்ன பேசுவது என்ற குழப்பமும் வரவே, மாட்டேன் என்று அடம் பிடிக்கும் வார்த்தைகளும் சற்று கடுப்பை தான் உண்டாக்கியது.

“சும்மா இருக்க அப்போ ஓயாம பேசுற வாய்க்கு, தேவைன்னு வரும் போது மட்டும் எப்படி தான் வார்த்தைகள் காணாம போய்டுதோ தெரியல” தன்னையே நொந்து கொண்டவன்.

“நேத்து எதோ பெரிய இவன் மாதிரி நம்பர் வாங்குனேன், அதுவும் சண்டை போட்டு. இப்போ என்ன பேசுறதுனு தெரியல. ஒரு வேள என் மனசும் அவ முன்னாடி தடுமாற ஆரம்பிச்சிடுச்சோ” எண்ணியவன் அதே குழப்பத்தில் ஹால் சோபாவில் வந்து அமர்ந்தவனின் காதில் வந்து இசைத்தது அந்த இனிய கானம்.

“அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி

பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.

பாடல் துவக்கத்தில் அதனின் இசைக்கும், வரிகளுக்குள்ளும் தொலைந்தவன், பாடலில் மூழ்கி போய் கிடக்க, பாடலின் இறுதியில் ஆதியின் மனமும் சிந்தையும் தன் மனைவி அஞ்சலியின் நினைவுகளில் ததும்பி கிடக்க, நேற்று அவளுடன் கழித்த பொழுதுகள் அனைத்தும் அவன் கண் முன் படமாய் ஓடி கொண்டு இருக்க,

“சோதிக்காதீங்கடா என்னைய. நானே பாவம். ரொம்ப இம்சை பண்றீங்கடா என்னை” சலித்து கொண்டவன், கோவத்தில் சேனல் மற்ற, செய்திகள் போய்க்கொண்டு இருந்த அந்த சேனலில் வந்த செய்தியை கேட்டவன் அதிர்ந்தே விட்டான்.

“மடக்கான்பட்டி என்ற கிராமத்தின் தலைவராக இருந்து, சட்டத்திற்கு புறம்பான பல தில்லுமுல்லுகளை செய்து வந்த அந்த ஊர் நாட்டாமை, இறுதியாக தக்க ஆதாரத்துடன், இன்று காலை அவரின் கிராமத்தில் வைத்தே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக சென்னை அழைத்து செல்ல பட்டார்”.

என்ற செய்தி ஆதியை உலுக்க, சூர்யாவின் பங்கு இதில் நிச்சயம் இருக்கும் என்பதை நம்பிய ஆதி, உடனே அவனை சந்திக்கவும் அவசரம் காட்டவே செய்தான்.

“இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. திண்டுக்கல்ல இருந்து வர அப்போவே சொன்னேன், தேவை இல்லாம பிரச்சனைல மாட்டிக்காதேன்னு. இப்போ அந்த நாட்டாமை வேற அர்ரெஸ்ட் ஆகி இருக்கான். பழி வாங்க எதுவும் பண்ணாம இருந்தா சரி” மனதுக்குள் புலம்பியவன், விடிந்தும் விடியாமலும் சூர்யாவின் வீட்டை அடைந்தான் ஆதி.

“உள்ளே நுழைந்தவன், அத்தை சூர்யா எங்கே? வீட்ல தானே இருக்கான்?” வினவியவன், தன் பார்வையாலேயே வீட்டை அலச, வீட்டின் எந்த மூலையிலும் சூர்யாவின் தடமோ, அவனின் காலணிகளோ எதுவும் தென் படாமல் போக, பதறியவன், தன் பதற்றத்தை வெளி காட்டாமல், நிதானமாக பேசினான் ஆதி.

“இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தான் ஆதி. அஞ்சலி கூப்டான்னு மேல போயிருக்கான்” என்றவரின் அடுத்த வார்த்தைக்கு கூட காத்திருக்காமல், விறுவிறுவென படி ஏறியவன்,

பால்கனி அருகே அஞ்சலியுடன் பேசி கொண்டு இருக்கும் சூர்யாவை கண்ட உடன் தான் நிம்மதி அடைந்தவன்,

தரையில் பாவமாய் கிடந்த கால்பந்தை எடுத்தவன், இருந்த பயம் அத்தனையையும் கோவமாக மாற்றி, அதை அந்த பந்தில் புகுத்தி, சூர்யா நோக்கி அடிக்க,

அது அவன் நெஞ்சில் பட்டு எதிரே இருக்கும் சுவற்றில் மோதி கீழே விழுந்தும் விட்டது. அந்த பந்து தன்னை தாக்கிய அந்த வேகத்தினால் நெஞ்சை பிடித்தபடி, அது இவ பட்ட திசை நோக்கியாவன், அங்கு ருத்ர ரூபத்தில் நின்று கொண்டு இருக்கும் ஆதியை கண்டவனுக்கு அனைத்தும் நொடியில் விளங்கியே போனது.

“ஆத்தி இவன் பெரிய கோவ காரனாச்சே. இவன் கிட்ட சிக்குனோம் அவ்வளவு தான். இப்போ எஸ்கேப் ஆகவும் வழி இல்லாம சிக்கிட்டியேடா சூர்யா” தனக்குள் அவன் புலம்பி கொண்டு இருந்தவன் சுதாரிக்கும் முன்பே அவனை நெருங்கி இருந்தான் ஆதி

கடைசி நொடியில் சுதாரித்தவன் அருகில் நிற்கும் அஞ்சலி பின்னால் சென்று பதுங்க முயற்சிக்க, அவனை எளிதாய் எட்டி பிடித்தான் ஆதி.

தன் சார்பில் நான்கு அடிகளை பரிசாக தந்தவன், அப்போதும் கோவம் அடங்காமல் சூர்யாவை தாக்க முயன்றவனை தடுத்த அஞ்சலி,

“ஹையோ நிறுத்துங்க ரெண்டு பெரும். இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம ரெண்டு பெரும் அடிச்சி விளையாடிகிட்டு இருக்கீங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா … ” ஆதியிடம் எதையோ கூற வாயெடுத்தவளை தடுத்த சூர்யா.

“எல்லாம் தெரிஞ்சதால தான்மா அவன் இங்க வந்து என்னை புரட்டி எடுக்குறான். எதுல ஒத்துமையா இருக்கீங்களோ இல்லையோ என்னை அடிக்குறதுக்கு மட்டும் புருஷனும் பொண்டாட்டியும் ஒன்னு சேர்ந்துடுறீங்க” என்றவன் இளைப்பாற அருகில் இருக்கும் கட்டிலில் அமர்ந்தவன்,

“நீ பண்ணி இருக்க வேலைக்கு உன்னை கொன்னே போட்டு இருக்கனும். என்னடா பண்ணி வெச்சி இருக்க. அந்த நாட்டாமை எவ்வளவு பெரிய அயோக்கியன்னு நீயே சொல்லி இருக்கல. அவனை போய் அரெஸ்ட் பண்ண ஆதாரம் எல்லாம் குடுத்து இருக்க. பழி வாங்க அவன் என்ன வேணா செய்வான் தெரியும்ல.

அதுல உனக்கு ஏதாவது ஆனா நாங்க என்னடா பண்ணுவோம். அத்தை, மாமாவை பத்தி நெனச்சி பார்த்தியா?” நிறுத்தாமல் பொரிந்து தள்ளினான் ஆதி.

“எனக்கு ஆபத்து இருக்குனு தெரிஞ்ச உனக்கே இவ்வளவு பயமும் கோவமும் வருதே. பெத்த புள்ளையை கம்பத்துல கட்டி வெச்சி அடிச்சி உதைச்சி, பெத்தவங்க கண் முன்னாடியே அவனை எரிச்சி சாம்பல் ஆக்குன அவுங்களுக்கு எவ்வளவு கோவமும், ஆத்திரமும் வரும். அதுக்கு யாராவது மருந்து போடனும்ல. அத தான் நான் பண்ணேன்” என்றான் சூர்யா நிதானமாக.

அவனின் கூற்று புரியாத ஆதி அஞ்சலியை கேள்வியாக பார்க்க, மேலும் பேச துவங்கினாள் அவள்.

“எங்க ஊருல நாட்டாமையோட வலது கையா ஒருத்தன் இருந்தான். அவன் பேரு வளவன், அவனுக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான். வீட்டை விட்டு வெளிய கூட அனுப்பாமல் அவ்வளவு பாசத்தோட, வெயில் கூட படமா பொத்தி பொத்தி வளத்தாரு அந்த பொண்ணை.

ஆனா அவளுக்கு வெளி ஊர் போய் நல்லா படிச்சி, பெரிய கம்பெனில வேலை பாக்கணும்னு ஆசை. அது நிறைவேறாமலே போனதால அதோட ஏக்கம் அவளுக்குள்ள அதிகமாவே இருந்தது.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஊர் திருவிழா ஒன்னு வந்த அப்போ தான் விக்ரமை முதல் முதல்ல பார்த்தா அவ. ஜாதியில குறைச்சலா இருந்தாலும், படிப்புல தனக்குனு ஒரு பெரிய இடத்தை தக்கவெச்சிகிட்டு, எங்க ஊர் அரசு மருத்துவமனைக்கே டாக்டரா வந்தான்.

அவனின் படிப்பும், அவனின் கம்பீரமும் பிடிச்சி போக, சில நாள் பழக்கம் நட்பா மாற ஆரம்பிச்சி, அந்த நட்பும் காதலாய் மலர துவங்குச்சு இருவருக்குள்ளும்.

கடைசியா தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்னு வளவன் முடிவு பண்ணி ஏற்பாடுகள் செய்யும் போது தான், இவங்க ரெண்டு பெரும் ஓடி போக முடிவு பண்ணி ஊரை விட்டே போய்ட்டாங்க.

வளவனுக்கு இது எல்லாமே லேட்டா தான் தெறிய வந்துது.

“முன்னவே தெரிஞ்சி இருந்தா நானே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சி இருப்பேனேன்னு” அவரும் ரொம்பவே புலம்பி அழுதாரு. இந்த சோகத்துனாலேயே அவரோட மனைவியும் கூட இறந்து போக, தனி மரமான அவரு, தன் மகளுடைய ஆசை படி இருக்கட்டும்னு நெனச்சி அதை விட்டுட்டாரு.

ஆனா இதை எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருந்த நாட்டாமைக்கு நம்ப ஜாதி ரத்தம் அசிங்கத்துல கலக்குறதான்ற கோவத்துல ஓடி போன ரெண்டு பேரையும் கண்டு பிடிச்சி விக்ரம் அப்பா அம்மா கண் முன்னாடியே அவுங்க ரெண்டு பேரையும் எரிச்சி கொன்னுட்டு, சாம்பல் கூட மிச்சம் இல்லாத அளவுக்கு செஞ்சிட்டான்.

கூறும் போதே குரலில் நடுக்கம் தெரிந்தது அஞ்சலிக்கு. கூறியவை அனைத்தும் கண் முன் கட்சியாக மாற, கண் கலங்க, உடல் நடுங்க நின்றவளை ஆதரவாய் தோளோடு அணைத்த ஆதி, சூர்யாவின் பக்கம் காதை கூர்மையாக்க, தொடர்ந்தான் சூர்யா.

“இதை விசாரிக்க தான் என்னை திண்டுக்கல் போக சொல்லி சொன்னாங்க. அன்னைக்கு ராத்திரில நான் ஒரு வேலையா போனேன் நியாபகம் இருக்கா, உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட்..”

“ஆம்” என்பதை போல் ஆதி யோசனையுடன் தலையசைக்க,

“அன்னைக்கு நான் போனது இந்த எல்லா விஷயத்தையும் பத்தி தெரிஞ்சிக்கிட்டு, ஆதாரம் சேர்க்க தான்.

அந்த வளவன் தான் இது எல்லாத்தையும் ஏன் கிட்ட சொல்லி, இதையே ஒரு ஆதாரமா பயன் படுத்திக்க சொன்னான்.

உண்மையா காதலிச்சத விட வேற எந்த தப்புமே பண்ணாத என் பொண்ணுக்கு நீயாவது நியாயம் வாங்கிதாபான்னு அவர் ஏன் கால்ல விழுந்து கெஞ்சினாருடா. அதை எல்லாத்தையும் பார்த்துகிட்டு எனக்கென்னன்னு வாழ நான் ஒன்னும் மருதநாயகமும் இல்ல அவர் பேரன் ஆதியும் இல்ல” என்றவனின் பேச்சில்,

“என்னோட அம்மாவையும் கூட இப்டி தானேடா தனியா தவிக்க விட்டுடீங்க” என்ற குற்றச்சாட்டு சாடல் அதிகமாகவே இருந்தது.

“அதுக்காக அவரை அர்ஸ்ட் எல்லாம் பண்ணிட்டியேடா. அவர் சும்மா இருப்பாருனு நெனைக்குரியா? உன்னையே இல்லை உன்னோட குடும்பத்தையே தாக்குறது தான் அவரோட அடுத்த திட்டமாகவே இருக்கும்” என்றவனின் பேச்சிற்கு சிரித்தவன்.

“தீயில கைவெக்குறவனுக்கு இதெல்லாம் தெரியாதாடா அதோ பார்..” என்றவன் தன் வீட்டிற்கு எதிரே இருக்கும் அந்த சாப்பாடு கடையை காட்டியவன்,

அவுங்க சாதாரண வியாபாரிகள் இல்ல. என்னோட வீட்டை காவல் காத்துகிட்டு இருக்குற போலீஸ். பகல்ல ஒரு குரூப்பும் நைட்ல ஒரு குரூப்பும் கண்காணிச்சிக்கிட்டே இருப்பாங்க. இது மட்டும் இல்ல.

உன் வீட்டுக்கு எதிர்க்கவும், வெற்றி வீட்டுக்கு எதிர்க்கவும் கூட இதே போல ஒரு குரூப்பை நியமிச்சி தான் இருக்கேன். எங்க எது நடந்தாலும் உங்களுக்கு முன்னாடி எனக்கு நியூஸ் வந்துடும்” என்றவனின் பேச்சில் தெரிந்த நம்பிக்கையே ஆதியை வாயடைக்க செய்தது, அஞ்சலியும் கூட.

“அதான் அண்ணா இவ்வளவு சொல்லுறாருல. நாமலும் கொஞ்சம் பொறுத்து இருந்து தான் பாக்கலாமே” என்க, சரி என்றவன்,

எதற்கும் சூர்யாவை கண்காணித்து கொண்டே தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவன், அதோடு வேறு எதையுமே பேச வில்லை..

Advertisement