Advertisement

அத்தியாயம் 13

 எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் விஐபி கண்மணி கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

 இருவர் முகத்திலும் இருந்த பூரிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை..

 சபையில் கூடியிருந்த பெரியவர்கள் பெற்றோர்கள் அனைவரிடமும் இருவரும் ஆசி பெற்றுக் கொண்டார்கள்..

 அவள் தனக்கு கிடைப்பாளா?.. என அவனும் விஐபி தனக்கு மணவாளனாக வருவானா?.. என அவளும் ஏங்கித் தவித்த நாட்கள் பல..

 ஏக்கங்கள் காதலாக மாறி அந்த காதல் உண்மை காதலை சேர்த்து வைத்துவிட்டது..

 அடுத்தடுத்து நடைபெறும் சடங்குகளை முடித்துக் கொண்டு இருவரும் தனித்தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்..

 மதிய உணவை இருவரும் ஒருவருக்கு ஒருவர் கூட்டிக்கொள்ள அதை புகைப்படக் கலைஞர் அழகாக பதிவு செய்து கொண்டார்..

 இவர்களது இந்த விமர்சையான திருமணத்தை பார்த்து ராமின் மனதில் சில ஏக்கங்கள் வந்தது என்னவோ உண்மைதான்..

 சீதாவும் அவனும் காதலித்து இப்படி ஒரு மனதாக சம்மதித்து திருமணம் செய்து கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்..

 ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு மாதிரியான வாழ்க்கை தானே அமையும்..

 விஐபியின் மனதில் தன் மனைவியை நினைத்து இருக்கும் வலியை ராம் அறிந்து கொண்டால் அவர்களுக்கு இந்த ஆடம்பரமான திருமண வாழ்க்கை வேண்டாம் என நினைத்திருப்பான்..

 ராம் சீதாவிற்கு திருமணம் ஆடம்பரமாக அவர்களது செலவில் நடைபெறவில்லை என்றாலும் போகப்போக அவர்களது வாழ்க்கை வளமாகும் என்று ஒரு நம்பிக்கை அவனுக்கு உள்ளது..

எப்போது ஆயுள் காலம் முடியும் என தெரியாத ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் விஐபியின் நிலை தான் மிகவும் மோசமானது..

 நேரம் மதியத்தை நெருங்கியது.. இனி சற்று நேரம் அவர்கள் ஓய்வு எடுத்து விட்டு ரிசப்ஷனுக்கு தயாராக வேண்டும்..

 திருமண அலைச்சலினால் அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் அவர்களது அறையிலும் சிலர் ஒரே அறையிலும் உறங்கினார்கள்..

 இங்கு சீதாவோ அவளது தோழிகளிடம் இருந்து வரும் அழைப்பை தவிர்ப்பதற்காக கைபேசியை அனைத்து வைத்துவிட்டு சோகமாக மாலை வரும் அவர்களை எப்படி சமாளிப்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்..

 எப்பொழுதுமே முகத்தில் முல்லைக் கட்டிக் கொண்டு தான் சீதா இருப்பாள்.. அதே போல் இன்றும் திருமண அலைச்சல் அதனால் மனைவியின் முகம் வாடி இருக்கிறது என நினைத்து ராமும் அறைக்கு வந்து ஒரு பக்கம் கட்டிலில் படுத்து விட்டான்..

அவள் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் தன் அருகில் ஒட்டி உரசி நின்று இப்பொழுது தன் நண்பர்களுக்கு தெரிந்ததை எண்ணி கவலை கொண்டிருக்கும் பொழுது இவன் எந்த கவலையும் இல்லாமல் உறங்க தயாராக அதை பார்த்து தலையணை எடுத்து அவன் மீது வீசினாள் சீதா ..

 சரி வேதாளம் ரிட்டன்ஸ் என நினைத்துக் கொண்டான் ராம்..

“ டேய் உன்னத்தான்.. ” எவ்வளவு சொல்லியிருப்பேன்.. நான் திருமணம் ஆனவன்னு என் ஃபரண்ட்ஸ்க்கு தெரியக்கூடாது கொஞ்சம் தள்ளி நில்லுனு.. ஆனா நீ நல்லா இது தான் சான்ஸ்ன்னு ஒட்டி உரசி நின்னு அவங்களுக்கு லைவ் டெலிகாஸ்ட் மூலம் நீயே காட்டி கொடுத்துட்ட… உன்னை என்ன பண்ணலாம்?.. நான் தான் எங்க பேச்சிலேயே கடைசியாக கல்யாணம் பண்ணுவேன்னு அவர்களிடம் சேலஞ்ச் பண்ணி இருந்தேன்.. அதுக்கு எதிர்மறையா நான் தான் ஃபர்ஸ்ட் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ரிஷபனுக்கு வரும் பொழுது எல்லாரும் என்ன வச்சி ஓட்ட போறாளுங்க..” என்று அவனது அருகில் வந்து அவனை தலையணையால் அடி மொத்தினாள்..

அவள் அடித்த அடி ஒன்றும் அவனுக்கு மசாஜ் செய்தது போன்று இருந்ததோ என்னவோ சிரித்துக்கொண்டே அதையும் வாங்கினான்..

 அடித்து கலைத்துப் போய் அவளும் அவனது அருகே படுத்து உறங்கிப் போனாள்..

அவள் உணவு சாப்பிட்ட தட்டையே கழுவி வைக்காத சீதா இன்று ஒரு திருமணத்தை பொறுப்பாக நடத்தி கொடுத்திருக்கிறாள் என்றால் அது சாதாரண விடயமா என்ன?.. அப்படி ஒரு வேலைப்பளு அதனால் உடல் சோர்வு மற்றும் களைப்பினால் அவளை அறியாமலே அவனை அணைத்துக் கொண்டு உறங்கி விட்டாள்..

 அவனும் அவள் தலையைத் தூக்கி அவனது தோள் வளைவில் வைத்துக் கொண்டு அணைத்துக் கொண்டே உறங்கினான்..

 இந்த திருமணம் ஆன இடைப்பட்ட நாட்களில் அவளை அறியாமலே அவனை அணைத்துக் கொள்வது மட்டும்தான் அவனுக்கு ஒரே ஆறுதல்..

 எந்த காரணத்திற்காகவும் இப்படி தானாக அமையும் சந்தர்ப்பத்தை ராம் தவற விட மாட்டான்..

 இப்படியே நேரம் யாருக்கும் காத்திருக்காமல் சென்று மாலை நெருங்கியது..

 மணபெண் மணமகன் இருவரும் மாலை ரிசப்ஷனுக்கு தயாராகினார்கள்..

 இங்கு சீதாவும் ராமும் தயாராக்கினார்கள்..

 வரவேற்பையும் அவர்கள் தான் முன் நின்று நடத்துகிறார்கள்.. அனைவரையும் வரவேற்று அமர வைத்து அவர்கள் குடிப்பதற்கு உண்பதற்கு என பார்த்து பார்த்து அவர்களை கவனித்து அனுப்ப வேண்டும் இதுதான் தற்பொழுது அவர்களது பொறுப்பு..

இதையும் சிறப்பாக முடித்து விட்டார்கள் என்றால் அவர்களுக்கு எதிர்பாராத பெரிய பரிசு ஒன்று காத்திருக்கிறது..

 அதை பற்றி இன்னும் மீரா அவர்களிடம் கூறிக் கொள்ளவில்லை..

 முன்பே மீரா கூறி இருந்தால் அந்த பரிசை பெறுவதற்காக ஓடி ஓடி வேலை செய்ததாக ஆகிவிடும்..

 ஒரு தர்ம சங்கடத்தை அவர்களுக்கு கொடுக்க விரும்பாமல் தன் மகனின் திருமணத்தை எந்த குளறுபடியும் இல்லாமல் நல்லபடியாக முடித்து தந்தால் அவர்களுக்கு ஒரு பரிசை வழங்குவதாக அவர் மனதினுள் நினைத்துக் கொண்டார்..

 அதற்குரிய ஏற்ப்பாட்டையும் மீரா செய்துவிட்டார்..

 மாலை 7 மணி ஆகியது புது ஜோடி முதல் மேடை ஏறினார்கள்..

 வரவேற்பிற்கு வந்த அனைவரையும் வரவேற்று அமர வைத்து அவர்களுக்குரிய வேலைகளை இருவரும் பம்பரமாக சுழன்று செய்து கொண்டிருந்தார்கள்..

  எதிர்பாராத விதமாக ஊரில் வைத்து ராம் சீதா திருமணம் நடைபெற்றது.. அந்த திருமணத்தையும் இன்று அறிவித்து இத்துடன் சேர்த்து அவர்களுக்கும் வரவேற்பு வைத்துக் கொள்ள நினைத்திருந்தார்கள்.. மீராவும் யசோதாவும்.. அதை சீதாவிடம் முன்பே சொல்லி இருந்தால் அவள் அதற்கு சம்மத்திருக்க மாட்டாள்..

அவள் குணம் தெரிந்து கொண்டு தான் யசோதாவும் மீராவும் அமைதியாக இருந்து கொண்டார்கள்..

 சீதாவும் ராமும் செய்த வேலைகளை யசோதாவும் மீராவும் செய்ய பொறுப்பெடுத்துக் கொண்டு அவர்களையும் மேடை ஏற்றி விட்டார்கள்..

 வந்தவர்கள் அனைவரும் அவர்களுக்கும் பரிசு கொடுத்து வாழ்த்துவதைப் பார்த்து சீதாவும் ராமும் யோசனைக்கு உள்ளானார்கள் எப்படி இது சாத்தியம் என்று..

 சீதாவுக்கே தெரியாமல் அவர்களுக்கும் சேர்த்து தான் பத்திரிகை அடித்திருந்தார்கள்..

 இருவரும் ஜோடியாக மாலை அணிந்து மணமேடையில் நின்றதை பார்த்து கணேசனுக்கு மனம் நிறைந்து போனது..

 ஆனந்தத்தில் அவர் கண்ணும் கலங்கியது..

 ராமிற்கும் மனம் நிறைந்து போனது..

 சீதா தான் இந்த திருமணம் ஊருக்கே தெரிந்து விட்டது என்று மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள்..

 அவள் முகத்தை பார்த்ததுமே ராமிற்கு தெரிந்து விட்டது இன்று அதற்கும் சேர்த்து இரவு அவனுக்கு தர்ம அடி உண்டு என்று..

 எவ்வளவோ பார்த்துவிட்டோம்.. இதையும் சேர்த்து பார்த்துடுவோம்.. என நினைத்துக் கொண்டு அமைதியாக சிரித்த முகத்தோடு அவர்களுக்கு பரிசு கொடுப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தான்..

 இப்படியே அழகான தருணங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு இரு ஜோடிகளும் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்..

 நேரம் நள்ளிரவு 11 மணியை நெருங்கவும் அனைத்தையும் முடித்துக் கொண்டு அவரவர் கார்களில் வீட்டிற்கு சென்றார்கள்..

 விஐபியும் கண்மணியும் அவன் வீட்டிற்கு சென்றார்கள்..

 துர்கா ஜோடி மீரா என மற்றவர்கள் அனைவரும் சீதாவின் வீட்டில் தாங்கிக் கொண்டார்கள்..

 மீரா கண்மணிக்கு சொல்லித்தான் அனுப்பினார்.. சமையல் அறையில் பாதாம் பால் காய்ச்சி வைத்திருப்பதையும் வீட்டிற்கு சென்றவுடன் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு அந்த பாலை எடுத்துக்கொண்டு விஐபி அறைக்கு செல்லும்படி..

 இருவரையும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்ததும் நேராக பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வைத்துவிட்டு அங்கிருந்து நேராக சமையல் அறைக்கு சென்றார்கள்..

 அவள் கையில் பால் சொம்பை எடுத்துக் கொண்டதும் அவளையும் அழைத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றான் விஐபி..

குளிரூட்டப்பட்ட ஏசி அறை என்று அவள் கேள்விப்பட்டிருக்கிறாளே தவிர அந்த அறையை அவள் இது வரை பயன்படுத்தியதோ உறங்கியதோ இல்லை..

 மூன்று மாத காதலில் 

 ஒருவர் மீது ஒருவர் வைத்த தீராத காதலின் அடிப்படையில் இதோ இருவீட்டார் சம்மதத்தோடு பத்தே நாட்களில் ஓரளவுக்கு விமர்சையாகவே அவர்களது திருமணம் அந்த கோவிலில் நடைபெற்றது..

 அனைத்து சடங்குகளும் முடிந்து அன்றைய நாளின் விசேஷ சடங்காக முதலிரவு சடங்கிற்கும் குளிரூட்டப்பட்ட அறை விசேஷமாக தயார் படுத்தப்பட்டிருந்தது..

 இருவரும் மனதார காதலித்து மணமொத்த தம்பதிகளாக திருமணம் முடித்ததால் அவர்களுக்குள் எந்த ஒரு சங்கடமும் தயக்கமும் இல்லை..

 அவள் பால் கொடுக்க அவனும் அதை வாங்கி குடித்து அவளுக்கும் கொடுத்துவிட்டு அவனது காலில் விழுந்து அவள் ஆசி வாங்கியதும்..

தயக்கம் சிறிதும் இன்றி மயக்கத்துடன் மடியில் அவளை கை பிடித்து அமர்த்தி கொண்டான்.. 

 அவள் எந்த மையல் பார்வையை பார்த்து அவனில் மயங்கினாளோ அதே மையல் பார்வையை பார்த்து அவன் நாவினால் அவன் இதழை வருடி ஈரமாக்கிக் கொண்டே அவள் இதழை நோக்கி குனிந்தான் விஐபி..

“ இதழில் கதை எழுதும் நேரம் இது.

இதழில் கதை எழுதும் நேரம் இது.

 இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே 

 இரு கரம் துடிக்குது. தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது.

இதழில் கதை எழுதும் நேரம் இது.”

 என்று அவளை மையலாக பார்த்து பாடிக்கொண்டே அவள் இதழில் ஆழ்ந்து முதல் இதழ் முத்தம் பகிர்ந்து கொண்டான்..

 

 புதிதாக ஏசி அறையில் முதல் முறை இருப்பதால் அவளால் அந்த ஏசி குளிரை தாங்கிக் கொள்ள முடியவில்லை…

 “ சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு..

வெலக்கு வெலக்கு வெட்கம் வந்தா வெலக்கு வெலக்கு

 உனக்கு குளிருன்னா என்ன எடுத்து போர்த்திகோ..

 மாமன் தோளில் மச்சம் போல ஒட்டிக்கோ..

 அடடா அல்வா துண்டு இடுப்பு உன் இடுப்பு..

 அழகா பத்திக்கிச்சு நெருப்பு தூள் கெலப்பு

 விளக்கு அணைஞ்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சது என்ன..

அடடா அல்வா துண்டு இடுப்பு உன் இடுப்பு..”

 ஏசியை குறைத்து வைத்துவிட்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்..

 அந்தப் பாவை அவளுக்கோ அவன் இறுகிய அணைப்பில் குளிர்ந்த தேகம் திடீரென முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது..

“ காதல் சூட்டிலே மாமன் ஏங்கிற.

 சேலை காட்டுல மூச்சு வாங்குற

 மாறப்பில விசிறி விசிறோனும்..

 கிட்ட கிட்ட வா தேனை கொட்டவா அள்ளி கட்டவா .. மேளம் கொட்டவா சூடு ஏறுது எனக்கு ஒன்னு வேணும்..”

“ கன்னி பொண்ணித்து ரொம்ப சின்னது

நெஞ்சை கிள்ளுது வெட்கம் திண்ணுது போதாதடி எனக்கு இன்னும் வேணும்.

 மெதுவா தந்தி அடிச்சானே உன் மச்சானே எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே.. என்று பாடிக்கொண்டே அவளது வெட்கத்தை ரசித்தான்..”

 அவளோ அவனுக்கு கேட்கும் படி

“ மச்சான் ஆளான நாள் முதலா யாரையுமே நினைச்சது இல்லை மாமா நான் உங்களுக்கு வாக்க பட ஆசைப்பட்டேன் வேணாம்னு சொல்லுறீகளே. சும்மா வெறும் வாய மெல்லுரிகளே.. ” 

 என்று பாடிக் கொண்டே அவள் கண்ணடித்தாள்

“ ஏய் இருடி இப்ப வரேன்.. பாவமே சின்ன பொண்ணு ஸ்டெப் பை ஸ்டெப்பா போகலாமேன்னு விட்டு பிடிச்சா?.. நீ எனக்கே ஓவரா பேசுறியா?.. ” என்று வம்பு பேசிக்கொண்டே மடியில் இருந்தவளை பூ குவியல் போல கையில் ஏந்தி அருகே இருந்த கட்டிலில் சரித்து அவள் மேல் முழு பாரத்தையும் போட்டான்..

 சிறிது நேரத்தில் அவளது வெட்கம் அவனை அழைக்க அவனது கண்கள் அவளை மேய இருவருக்கும் அழகான ஒரு இனிய கூடல் முடிந்தது..

“ என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்ச போது..”

அவளோ “ நம் கூடலினால் ஏற்பட்ட சுக வலியால் குத்தால சாரல் அது கண்ணோரம் ஊறி வர ஒன்ன நெனச்சேன்.. எந்த போர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்..

“ உன் கண்ண குழி முத்தம் வச்சேன் என்ன நினைச்ச?.. “

“ என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேட்க நினைச்சேன்..”

“ என் பேராசை நூறாச கேட்கையில் அடித்தேன் மல்லி நீ என்ன நெனச்சடி.. “

“ ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நினைச்சேன்..

 கட்டிலுக்கு கால் வலிச்சா கட்டான் தரை படுக்கதான்.. வாழ்நாள் முழுவதும் உன்னை எனக்கே எனக்காக ஒட்டுமொத்த குத்தகைக்கு அல்ல நினைச்சேன்.. “

“ மெத்தைக்கு மேல உன்னோட சேலை என் கையில் சிக்கும் வேலை என்ன நினைச்ச?.. “

“ என் வாழ்க்கையின் முதல் கட்ட சொர்க்கம் ஆரம்பம் ஆச்சிதுன்னு நினைச்சேன்.. “

“ உன் மேனியில் நான் கொடுத்த காதல் காயத்தை பார்க்கும் வேலை என்ன நினைச்ச.. “

“ தினமும் இரவு வேலைகளில் காயம் வேணும்னு நினைச்சேன்.. “

“ காதலோடு நாம் ஒன்னோடு ஒன்னாக கலக்கும் நேரத்தில் உன் பொன்மேனி தாங்கும்ன்னு நினைச்சியா?. “

“ மனசு பூரா உன்ன சுமந்து கல்யாண சொர்க்கத்தில் கச்சேரி நேரமின்னு நான் கட்டிப்புடிச்சேன்.. உன்ன என் நெஞ்சுக்குழி மீது சாச்சி கிட்டேன்.. ” என்று அவள் பாடி முடித்ததும் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது..

 அவள் கண்ணீரை அவன் இதழ்களால் ஒற்றி எடுத்துக்விட்டு “ கண்ணுமணி ஏண்டி இப்ப அழுகை வருது உனக்கு.. என் வாழ்நாளில் நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம்.. ” என்று கூறி அவளது தலையை வருடி அவனது பறந்து விரிந்த மார்பில் சாய்த்துக் கொண்டு அவள் உறங்குவதற்கு தட்டி கொடுத்தான்..

 அவளும் அவனுடன் சேர்ந்து வாழ்க்கை ஆரம்பித்து அவள் பிறவி பலனை அடைந்த சந்தோஷத்தில் அப்படியே கண் உறங்கினாள்..

 யோசியர் கூறியதை விஐபி தற்பொழுது அதை நினைக்க அவனது கண்ணில் குற்றால சாரல் வழிந்தது..

 அவன் ஒரு பாடகனாக இருக்கும் பலனை தினமும் இரவு வேளையில் காதலால் பாடல் மூலம் அர்ச்சனை செய்து கண்ணுமணியை பூஜீப்பான்…

 அவளுக்கு இறைவன் கொடுத்த ஆயுள் காலம் முடியும் வரைக்கும் அவளது காதல் காலம் காதல் மன்னனால் தொடர்ந்து கொண்டே இருக்கும்..

Advertisement