Advertisement

 அத்தியாயம் 12..

 பொண்ணு பார்த்து விட்டு வந்த அடுத்த நாளே வரும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் என முடிவு செய்தார்கள்..

 அந்த முகூர்த்த நாளுக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது..

 எதிர்பாராத விதமாக திடீரென வந்த அந்த கல்யாண ஏற்பாட்டால் அவர்கள் பொட்டிகில் அவசர உடை கொடுக்கும் கட்டாயத்தில் இருப்பதால் அதற்குரிய முக்கியமான வேலைகளை 

 கண்மணியின் அம்மா அவளை வீட்டில் இருந்தே வேலைகளைப் பார்க்க சொல்லி விட்டு அவர் கல்யாணத்துக்குரிய வேலைகளில் ஈடுபட்டார்..

 திருமணத்திற்கு உரிய முகூர்த்த நாள் தெரிந்ததும்.. பத்திரிக்கை அடிப்பது முகூர்த்த புடவை எடுப்பது மற்றவர்களுக்கான உடை எடுப்பது போன்ற அனைத்து வேலைகளும் விஐபி வீட்டிலேயே செய்தார்கள்..

கண்மணி வீட்டில் ஆண் துணை இல்லாததால் அவர்களை எந்த ஒரு வேலையும் கொடுத்து கஷ்டப்படுத்தவில்லை..

 இரண்டு நாளில் தேவையான பத்திரிகைகள் வந்துவிடும்.. அதை கண்மணியின் அம்மா அவர்களின் தெரிந்தவர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதும்..

 அவர்களுக்கு நம்பகமான புடவை கடையில் இருந்து புடவைகள் அனைத்தும் விஐபி வீட்டிற்கே வந்தது..

 விஐபி கண்மணிக்கு அழகாக இருக்கும் என நினைத்து 25 புடவைகளை செலக்ட் பண்ணி வைத்தான்..

 இதை அப்படியே கண்மணியின் வீட்டில் கொடுக்கும்படி கூறிவிட்டு அவன் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்…

 சீதா மீரா யசோதா துர்கா என நால்வரும் அவர்களுக்கான புடவையை தெரிவு செய்தார்கள்..

யமுனாவிற்கு லெகங்கா 3 வகையான கலரில் வரவைத்து கொடுத்தார் மீரா..

 ஆண்களுக்கான உடைகள் எடுக்க விஐபி ராம் அவன் நண்பன் மூவரும் போய் துர்கா கணவன் மற்றும் கணேசுக்கு என அனைவருக்கும் உடை எடுத்து வந்தார்கள்..

 விஐபி கண்மணிக்கு அனுப்பிய புடவையில் தாயின் கண்முன்னே அவள் திருமணத்திற்கான முகூர்த்த புடவை மற்றும் சில புடவைகளையும் தெரிவு செய்து அதற்கான பிளவுஸ் அவளே தைக்க தயாரானாள்..

 இப்படி ஆளுக்கு ஒரு வேலையாக திருமணத்தில் ஆர்வமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது..

திருமண பத்திரிக்கை வந்து சேர்ந்தது..

 கண்மணி வீட்டில் கொடுக்க வேண்டிய பத்திரிகைகளை கொடுத்துவிட்டு இங்கே மீரா வெளியூரில் இருக்கும் அனைவருக்கும் கொரியரில் அனுப்பிவைத்துவிட்டு உள்ளூரில் முக்கியமானவர்களுக்கு பத்திரிகையை கொடுக்க யசோதாவும் மீராவும் சென்றார்கள்..

 இப்படியாக நாட்கள் சென்று திருமண நாள் வர இன்னும் இரண்டு நாட்களே இருந்தது..

 நலங்கு வைத்ததும் பொண்ணும் மாப்பிள்ளையும் சந்திக்கக் கூடாது என்னும் கட்டாயத்தினால் விஐபி எவ்வளவு முயற்சி செய்தும் கண்மணியை சந்தித்து அவன்தான் விஐபி என சொல்ல முடியாமல் போனது..

 அவள் சொன்னது போன்று திருமணத்தன்று எதுவும் தவறான முடிவு எடுத்து விடுவாளோ எனும் பயமே அவனை வாட்டியது..

 பத்திரிக்கை மற்றும் டிவி சேனல் நிருபர்களுக்கு மிகவும் முக்கியமான நியூஸ் கிடைத்தது போன்று விஐபி திருமணத்தை அவர்களே ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தார்கள்..

 அவளுக்கு பெரிதாக டிவி பார்க்கும் ஆர்வம் இல்லாததால் அந்த நியூஸ் அவளுக்கு சென்றடையவில்லை..

 பார்த்திருந்தால் திருமண நாள் இருவருக்கும் ஒன்று என தெரிந்து ஏதாவது ஒன்றை அவளே யூகித்திருக்க கூடும்..

 பிடிக்காத திருமணம் என்பதால் அவள் எதிலும் நாட்டம் காட்ட வில்லை.. அதனால் அவளுக்கு அது தெரியாமலே போனது..

 நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் திருமணத்திற்கு முதல் நாள் மாலை இருவீட்டாரும் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள்..

 அவர்களுக்கு பின்பு பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்களும் விஐபியின் திருமண நியூஸிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்…

நாளை நடக்கும் விஐபி திருமண நிகழ்வை லைவாக ஒளிபரப்பு செய்வதாக இருந்தது..

 இன்னும் மாப்பிள்ளை விஐபி என்று சொல்லாததால் அவள் முகம் வாடி இருந்ததை அவனும் பார்த்தான்.. நிச்சயதார்த்தம் மெஹந்தி பங்க்ஷன் என எதுவும் செய்து அவளை தொந்தரவு செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை..

அதனால் அன்று மாலை பெரிதாக எந்த ஒரு நிகழ்ச்சியும் வைக்கவில்லை..

 இந்த இரவு முடிந்து விடுவதற்குள் அவன் விஐபி என்று கண்மணிக்கு தெரிய வேண்டும்.. அப்படி இல்லை என்றால் அவள் சந்தோசமாக திருமணத்துக்கு தயாராகவும் மாட்டாள்.. ஏதாவது விபரீதமாக முடிவெடுத்து விடுவாள்..

 அதனால் ராமின் உதவியை நாடினான் விஐபி..

 பொண்ணு பார்த்துவிட்டு வந்த நாளிலிருந்து ராம் சீதாவுக்கு இடையே இன்னும் அவர்களது உறவு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருந்தது..

சீதாக்கு ராம் ஒரு புடவை அவன் காசில் எடுத்து கொடுத்தான்.. ஆனால் அவள் அதை வாங்கி கூட பார்க்காமல் உதாசீனப்படுத்தி விட்டாள்..

அவன் அந்த புடவையை பத்திரமாக எடுத்து வைத்தான்..

என்றாவது ஒரு நாள் அவளுக்கு அந்த புடவை அவன் கையால் கொடுப்பான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது..

நம்பிக்கை தானே வாழ்கை வண்டியின் அச்சானி..

 எதற்கெடுத்தாலும் ராமை குறை சொல்லிக் கொண்டே இருந்தாள் சீதா..

 அவன் இயல்பு போன்று மனைவியின் தொல்லைகளை தாங்கிக் கொண்டிருந்தான்..

 திருமண வேலை என்பதால் அனைத்திலும் யமுனா

யசோதா மற்றும் மீராவுடன் இருந்து அனைத்தையும் தெரிந்து கற்றுக் கொண்டாள்..

அவர்கள் போகும் இடமெல்லாம் அவளையும் அழைத்துக் கொண்டு சென்று அனைத்தையும் சுற்றி காட்டினார்கள் நேரம் கிடைக்கும் போது..

ராம் விஐபியின் 

அறைக்குள் வந்ததும் கண்மணியை பார்க்க ஏதாவது ஒரு வழி சொல்லும்படி உதவி கேட்டான்..

 ராம் அவன் உற்ற நண்பனை தவிர வேறு யாரிடமும் சகஜமாக பேசவே மாட்டான்..

 அப்படிப்பட்டவன் இதற்கு முதல் சந்திப்பில் அனைத்திலும் முறைத்துக் கொண்டிருந்த விஐபி இன்று அவனை அழைத்த காரணம் தெரியாமல் வந்து நின்றான்..

“ ப்ளீஸ் எனக்கு கண்மணியோட கொஞ்சம் பர்சனலா பேசணும்.. நீ ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா?..” என்றான் விஐபி 

 என்னதான் இருவரும் முறைத்துக் கொண்டு சுற்றினாலும் இனி ஒருவருடைய உதவி ஒருவருக்கு கட்டாயம் தேவை.. அதனால் விஐபியுடன் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தான் ராம்.

“ இது என்ன வம்பா போச்சு.. உனக்கு என்கிட்ட கேக்குறதுக்கு வேற உதவி இல்லையா என்ன?.. ஒரு பொண்ணு கிட்ட போய் பேச சொல்ற?.. இது எல்லாம் என்னால முடியாது.. வேற ஏதாவது வேணும்னா கேளு பண்ணி தரலாம்.. இல்லான்னா சீதாவை கூப்பிட்டு வர்றேன் அவ கிட்ட சொல்லு…” என்றான் ராம்..

 தாய் மற்றும் யமுனா சீதா மூவரை தவிர அவன் அதிகமாக பெண்கள் யாரிடமும் பேசியது இல்லை..

 அப்படிப்பட்டவனை புதிதாக பார்த்த பெண்ணிடம் போய் பேச சொன்னால் என்ன தான் செய்வான்..

“ ராம் ப்ளீஸ் என்னோட நிலைமை கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. இன்னும் நான் விஐபி என்று கண்மணிக்கு தெரியாது.. விஐபியை தான் புடிச்சிருக்கு உங்கள பிடிக்கல.. கல்யாணத்தை நிப்பாட்டிடுங்க.. இல்லாட்டி கல்யாணம் அன்னைக்கு பொணத்துக்கு தான் தாலி கட்டுவிங்கன்னு அவ என்கிட்ட சொன்னா.. அதுக்கப்புறம் நான் எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்தேன்.. ஆனா எதுக்குமே எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. அவ வீட்டுக்கு கூட நேரடியா நானே அவங்க அம்மா இல்லாத நேரமா போயிட்டேன்.. அவ என்ன பார்க்குறதுக்கு சம்மதிக்கலை.. பைத்தியக்காரி நான் வேற யாரோன்னு நினைச்சு ஏதாவது தவறான முடிவை எடுத்துடுவாளோன்னு பயமா இருக்கு எனக்கு… என்னோட சூழ்நிலை புரிஞ்சி எனக்கு இந்த உதவி செய்.. எப்படியாவது என்னை அவ கிட்ட பேச வை ப்ளீஸ்… ” என்றான்..

காதல் அவன் நிலையை விட்டு இறங்கி போராட வைத்தது..

 விஐபி இப்படி சொன்னதும்.. ராம் அவன் மனைவியை தீவிரமாக காதலிப்பவன்.. அப்படி இருக்கும் போது.. ஏன் இன்னொரு தீவிர காதலுக்கு உதவி செய்ய மறுக்க போகிறான்.. உடனடியாக அவனே சென்று கண்மணியிடம் பேசுவதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றான்..

“ ராம் அப்புறம் இன்னொரு விஷயம்.. கண்மணி உன்னோட பேச சம்மதிக்காட்டி விஐபி உன்னோட பேசணும்னு சொல்லி இந்த போன அவகிட்ட கொடு.. அப்புறம் பார் தன்னால இந்த போன்ல பேசுவா..” என்று கூறி கைப்பேசி ஒன்றை ராமிடம் கொடுத்தான் விஐபி..

 யசோதா சீதாவை திருத்த விஐபி என்னும் மந்திரத்தை பயன்படுத்தினார் ஆனால் அது வேலைக்காகவில்லை..

 இப்போது கண்மணியின் காதலை அடைவதற்காக விஐபி என்னும் மந்திரத்தை அவனே பயன்படுத்துகிறான்..

 விஐபி என்னும் செலிபிரிட்டியின் அந்த பெயரில் இருக்கும் மேஜிக் தனித்துவமான ஒன்றுதான்..

 ராமும் விஐபி கொடுத்த கைபேசியை வாங்கிக் கொண்டு கண்மணி அறைக்கு சென்றான்..

 அவர்கள் நல்ல நேரம் கண்மணியின் தாய் மற்றும் மீரா யசோதா மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்..

கண்மணி மட்டுமே அறையில் தனியாக இருந்தாள்..

 தாய்க்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த விஐபி போட்டோவை எடுத்து பார்த்துக்கொண்டு கண்களில் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தாள்..

 வாயால் அவனது பெயரை சொன்னால் கூட எங்கு தாய்க்கு தெரிந்து பிரச்சினை எதுவும் பண்ணி விடுவாரோ என்று மௌனமாகவே இருந்தாள்..

 அப்போதுதான் அவள் சிந்தனை கலையும்படி ராம் கதவை தட்டினான்..

 தாய் தானோ என்று நினைத்து பதறி கண்ணீரை துடைத்து போட்டோவை மறைத்து வைத்துவிட்டு வந்து கதவை திறந்தாள்..

 வெளியே ராம் நிற்பதை பார்த்து அவன் மாப்பிள்ளையின் சொந்தம் என தெரியும்.. ஆனால் அவன் பெயர் யார்?.. என்று எதுவும் அவளுக்கு தெரியாது..

“ ஏங்க நான் ராம்.. மாப்பிள்ளைக்கு நெருங்கின சொந்தம்.. ப்ளீஸ் நான் சொல்றதை ஒரு முறை கேளுங்க.. நேரம் இல்ல.. நான் சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லிட்டு போயிடுவேன்.. மாப்பிள்ளை விஜய் உங்களோட கொஞ்சம் பேசணுமாம் உங்களை மொட்டை மாடிக்கு வரச் சொன்னான்..” என்றான்..

“ சார் ப்ளீஸ் இப்ப யாரையும் சந்தித்து பேசுற மனநிலையில் நான் இல்லை… அதைவிட கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை பொண்ணும் பார்த்துக்கிறது எங்க வழக்கத்துல இல்ல.. எங்க அம்மா பார்த்தா தப்பா நினைப்பாங்க.. ப்ளீஸ் நீங்க அவங்க வர்றதுக்கு முன்னாடி போயிடுங்க..” என்றாள்..

“ சரி ஓகே மா.. மாப்பிள்ளை விஜய் கூட தான் பேச உனக்கு மனநிலை சரியில்ல.. ஆனால் விஐபி கூட பேசலாம் தானே.. ”

“ என்னது வி ஐ பி யா?.. நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியலையே!.. நான் ஏன் விஐபி கூட பேசணும்?.. ”

“ அம்மா கல்யாண பொண்ணு கண்மணி.. எல்லாமே தெரிஞ்சுதான் வந்து இருக்கேன்.. இந்த போன்ல விஐபி லைன்ல இருக்கான் பேசுங்க..”

விஐபி அழைத்திருப்பதை சொன்னதும் உடனே கைபேசியை வாங்கி அங்கிருந்து அறைக்குள் சென்று விட்டாள்..

 கைபேசியை காதில் வைத்து “ ஹலோ..” என்றாள்..

“ கண்மணி நான் விஐபி.. உன்னோட கொஞ்சம் பேசணும்.. ராம் சொன்ன மாதிரி சீக்கிரம் மொட்டை மாடிக்கு வா..”

“ என்னங்க விஐபி சார் பேரை சொன்னால் நான் ஓடி வருவேன்னு கதை விடுறிங்களா என்ன?..”

“ சொன்னா புரிஞ்சுக்கோ கண்மணி.. உனக்கு விஐபி பார்க்கணும்னு ஆசை இருந்தா நீ இப்போ வந்தா கட்டாயம் அவனை பார்க்கலாம்.. நான் ஏன் உன் கிட்ட பொய் சொல்ல போறேன்?.. சும்மா ஆர்க்யூ பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாத..” என்று அதற்கு மேல் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து விட்டான்..

 ஒரு நிமிடம் தான் கண்மணி யோசித்தாள்.. வருவது வரட்டும் என முடிவெடுத்து ஒரு வேலை விஐபியாக இருந்தால் என்னும் ஒரு ஆசையில் ராமுடன் சென்று விட்டாள்..

 அவள் அங்கே சென்றதும் அவளுக்கு எதிர்பக்கம் மீண்டும் மாஸ்க் அணிந்து விஜய் நின்றான்..

 அவள் “ க்க்கும்.. க்க்கும்.. ” என்று போட்ட சத்தம் கேட்டு திரும்பினான்..

 அவன் மீது மீண்டும் அவளுக்கு அதிர்ச்சியும் வெறுப்பும் கூடியது..

 விஜய் என்று கூறினால் வரமாட்டால் என்று தெரிந்து விஐபி என்று இந்த முறையும் பொய் கூறி இருக்கிறான் என்று நினைத்து விட்டாள்..

“ ஏங்க நீங்க திருந்தவே மாட்டீங்களா?.. நான் எத்தனை தடவை சொல்லிட்டேன் எனக்கு உங்களை பிடிக்கல.. இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. அப்படி இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு தெளிவா உங்களுக்கு சொல்லிட்டேன்.. திரும்பத் திரும்ப வி ஐ பி.வி ஐ பி னு அந்த மனுஷன் பேரை சொல்லி ஏன் என்னை போட்டு டார்ச்சர் பண்றீங்க.. உங்களுக்கு மரியாதை வேணும்னா நீங்க நான் சொன்ன மாதிரி பண்ணுங்க.. இல்லன்னா என் முடிவை நான் கட்டாயம் எடுப்பேன்..” என்று எப்போதும் கோபப்படாதவளையும் கோபமாக பேச வைத்தான்..

 கோவமாக பேசிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தவளின் கையை பற்றி இனியும் தாமதிக்க வேண்டாம் என நினைத்தவன் முகத்தில் அணிந்திருந்த மாஸ்க் கழட்டி அவனைப் பார்க்க வைத்தான்..

 அவன் முகத்தை பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்து சிலையாக நின்றாள் பெண்..

 விவரம் தெரிந்த வயதிலிருந்து அவள் பார்க்க ஆசைப்பட்ட ஒரே முகம்..

 எதிர்பாராத விதமாக அவள் கண்ணெதிரே மிகவும் நெருக்கத்தில்..

ஆனால் இது கனவா? நினைவா? என அவளால் நம்ப முடியவில்லை..

 அவள் திகைப்பை போக்குவதற்காக அவன் கைக்குள் அவள் கையை எடுத்து பொத்தி வைத்துக்கொண்டான்..

“ அடி மண்டு பொண்ணே.. அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான் தான் உன்ன ஃபாலோ பண்றேன்.. கடிதம் தந்ததும் நான் தான்.. அந்த பொக்கேயும் கிபிட் தந்தது நான்தான்.. கோயில் குளத்தில் உன்னை மீட் பண்ணியதும் நான்தான்.. எப்ப எல்லாம் நீ என்னை திட்டி அனுப்பினியோ அந்த இடத்துல இருந்தது எல்லாமே நீ ஆசைப்பட்ட விஐபி தாண்டி தங்கமே.. இப்ப சொல்லு நீ சொன்ன அதே முடிவை எடுக்க போறியா?.. ” என்றான்..

 நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஒரு பொருள் எதிர்பாராத விதமாக கிடைத்தால் வரும் ஆனந்ததை அனுபவித்து கொண்டிருந்தாள் கண்மணி..

 ஆனந்தத்தில் நிற்காமல் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது..

 தாய் நீண்ட நாட்களுக்கு பின் பார்க்கும் தன் பிள்ளையை தொட்டு தடவி உச்சி முகர்வது போல்.. ஆசை காதலன் விஐபி கண்ணெதிரே நிற்பதை நம்பவும் முடியாமல். நம்பாமல் இருக்கவும் முடியாமல் அவன் முகத்தை தொட்டு அவன்தானா என உறுதிப்படுத்த நினைத்தால்

“ ஹேய்.. தங்கமே நானே தான்டி.. இன்னும் சந்தேகமா என்ன?..”

 அவன் தன்னிடம் தான் கேட்கிறான் என உணர்ந்ததும் கண்ணீரை வேகமாக கையால் துடைத்துவிட்டு இல்லை என தலையாட்டினாள்..

“ உனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்ன்றதுக்காகத்தான் விஐபி விஜய்னு சொன்னேன்.. அதுக்கு நீ எனக்கு ரொம்ப பெரிய தண்டனை கொடுத்துட்ட.. ” என்றான்.. அவள் வாய் வார்த்தையாக கூறிவிட்டால் ஆனால் அதை அனுபவித்த அவனுக்குத்தான் அதன் வேதனை தெரியும்..

அந்த வேதனை அவன் குரலில் வெளிப்பட்டது.. 

“ ரியலி சாரி.. உங்களையே மனசுல நினைச்சுகிட்டு ஆனா உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லி உங்கள ரொம்ப வேதனை படுத்திட்டேன் என்னை மன்னிச்சுக்கோங்க… நீங்க என் கண் முன்னால நிக்கிறத என்னால நம்ப முடியல.. இந்த கனவு களஞ்சிடுமோன்னு பயமா இருக்கு..” என்றாள்..

“ இனி அந்த பயம் எல்லாம் உனக்கு வேணாம்.. உன் வி ஐ பி உன்ன தேடி சரியான நேரத்துக்கு வந்துட்டேன் தங்கம்.. உன்னோடதும் என்னோடதும் உண்மையான காதல்.. அந்த காதல் ரெண்டு பேரையுமே சேர்த்து வச்சுடுச்சு.. நேரம் ஆகுது அத்தை வந்து ரூம்ல உன்ன காணாம தேடுவாங்க.. மிச்சத்தை எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்.. உன்னை பார்த்து உண்மைய சொல்லத்தான் ரொம்ப தேடினேன்.. ஆனா நீ பேசுற நிலைமையில் இல்லை.. அந்த அளவுக்கு அம்மணிக்கு விஐபி மேல காதல்.. நம்முடைய வாழ்க்கையில நடக்க போற மிக முக்கியமான பொக்கிஷ நிகழ்வு நாளைக்கு அதனால நீ ரொம்ப சந்தோஷமான மன நிலையோட முகத்தில் நிறைந்த புன்னகையோடு மணமேடைக்கு வரணும்.. அதுக்காக நான் உண்மையை சொல்லிட்டேன்.. இப்ப போய் அமைதியா தூங்கி எழுந்து காலையில ஃப்ரஷா ரெடியாகி வா..” என அவளை கையை பிடித்து அழைத்து அவளது அறையில் பத்திரமாக விட்டு விட்டு ராமுடன் அவன் அறைக்கு சென்று விட்டான் விஐபி..

 இதோ லைஃப் டெலிகாஸ்ட் மூலம் காலை அழகாக விஐபி கண்மணியின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது..

 சீதாவும் ராமும் நிறைவாக அவர்களது திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார்கள்..

 சீதா எது நடக்க கூடாது என நினைத்தாளோ அந்த லைவ் டெலிகாஸ்ட் மூலம் சீதா ராம் திருமணம் ஆனவர்கள் என்பதை அவள் நண்பர்கள் தெரிந்து கொண்டார்கள்..

 அவளுக்கு அழைப்பிற்கு மேல் அழைப்பு வந்து கொண்டிருந்தது அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவள் கைபேசியை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்…

சீதாவின் வாழ்க்கையை யசோதா எதிர்பார்த்த அளவு பக்குவப்படுத்த அவளுக்கு சோதனை காலம் ஆரம்பித்துவிட்டது..

 

Advertisement