Advertisement

அத்தியாயம்-4

நாட்கள் அழகாக செல்ல துவங்கியது.சைந்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னவுடனே குமார் மாப்பிள்ளை பார்க்கும் வேலையை ஜரூர் ஆக்கினார்.

மஞ்சுளா ராதிகா இருவரும் நல்ல தோழிகள். பக்கத்து வீடு என்பதால் வீட்டு விஷயங்களை கூட இருவரும் பகிர்ந்து கொள்வர். அப்படி பேசி கொண்டு இருக்கும்போதுதான் திருமணம்பற்றிய சைந்துவின் விருப்பம்பற்றி சொல்ல, ராதிகாவின் முகம் வாடி போனது. இருந்தாலும் தோழிக்கு தெரியாமல் உடனே தன்னை சமாளித்து கொண்டவர் “பொண்ணு விருப்பம்தான் முக்கியம் மஞ்சு.அவ விருப்பபடியே மாப்பிள்ளை பாருங்க”என்றுவிட,

மஞ்சு, “ஆமாங்க அவருக்கூட அப்படிதான் சொன்னாரு”என்க, சற்று நேரம் இருவரும் பேசி கொண்டிருந்துவிட்டு அவரவர் வீட்டிற்குள் சென்றனர்.

சூர்யாவிற்கு இரவு பத்து மணி போல் துறை முகத்தில் போதை பொருள் கை மாற்றப்படுவதாக தகவல் வர உடனே தன் போர்ஸ்சுடன் கிளம்பிவிட்டான்.அங்கு இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் தன்னுடன் வந்தவர்களை ஒழிந்து கொள்ள சொன்னவன். போதை பொருள் கும்பல் வருவதற்காக காத்திருக்க துவங்கினர்.

சற்று நேரத்திலேயே அவர்கள் எதிர் பார்த்த ஆட்கள் வந்துவிட அவர்களை பிடிக்க சென்றனர் காவலர்கள்.போலீஸ் வந்ததை கண்டு அதிர்ந்த அந்த கும்பலும் தப்பிக்க கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட துவங்க. சூர்யாவும் தன் வாக்கி டாக்கி மூலம் அவர்களை சுட உத்தரவு வழங்கினான்.சற்று நேரத்திற்கு துப்பாக்கி சத்தம் மட்டுமே அங்கு கேட்டது.

கிரிமினல்களில் பாதி பேரை சுட்டும், மீதி பேரை குற்றுயிரும் கொலை உயிருமாக அர்ரெஸ்ட் செய்தனர் போலீசார்.அவர்களை சீக்கிரம் தங்கள் இடத்திற்கு அழைத்து போக சொல்லி கொண்டிருந்த சூர்யாவின் கூர் விழிகளில் அங்கு இருட்டாக இருந்த ஒரு படகின் பின்னால் யாரோ ஒழிந்து இருப்பது போல் தெரிய, வந்த போதை மருந்து ஆசாமிகளில் ஒருவனாக இருக்குமோ என்று சந்தேகம் கொண்டவன் மற்றவர்களை அனுப்பிவிட்டு மகாலிங்கத்திடம் வண்டியை எடுத்து வருமாறு சொன்னான்.

அனைவரும் அங்கிருந்து கிளம்பிய பின் அவர்கள் சென்றுவிட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட சூர்யா மெதுவாக அந்த படகின் பக்கம் சென்று மறைந்திருந்த உருவம் சுதாரிப்பதற்குள் அதன் கையை பிடித்து இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் மோத வந்த உருவத்திடம் இருந்து விலகி கொண்டவன் அப்போதுதான் கவனித்தான் அது பெண் என்று.

“பொண்ணா……”என்று அதிர்ச்சியில் வாய்விட்டு சொன்னவன் அவளை இழுத்து கொண்டு வெளிச்சம் இருந்த பக்கம் வர,தன் கைகளை அவன் பிடியில் இருந்து உருவியபடி அங்கு நின்றிருந்தாள் பவி.

சூர்யா,“நீயா……” என்று முதலில் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தவன் பின் கோபமாக “உனக்கு இங்க என்ன வேலை” என்று கேட்க, அவளோ சாதாரணமாக நியூஸ் கலெக்ட்பண்ணதான் காக்கி. ஒரு ரிப்போர்ட்டர் வேற எதுக்கு வருவேன் என்று கேட்க, அவனுக்கோ கோபம்தான் அதிகமானது.

“ஹேய் அறிவு இருக்கா உனக்கு. எங்களுக்கே நியூஸ் ரொம்ப சீக்ரட்டாதான் வந்துச்சு. அதுக்குள்ள உனக்கு எப்படி தெரிஞ்சுது.நீப்பாட்டுக்கு தனியா இங்க வந்துருக்கியே உனக்கு எதாவது ஆனா உன் வீட்டுக்கு யார் பதில் சொல்றது”என்று கேட்க, “அப்படி ஒரு கேள்வி வந்தா பதில் சொல்லதான் என்னை கூட்டிட்டு வந்து கொடுமை படுத்துறா சார். இந்த பேய்”என்று சோடா புட்டி கண்ணாடியோடு வந்து நின்றான் ஒருவன்.

பவி, “டேய் சோடாபுட்டி நானா உன்னை கூட வான்னு சொன்னேன். நீதானே உங்களுக்கு அசிஸ்டன்ட்டா இருக்கேன். நானும் பெரிய ரிப்போர்ட்டர் ஆக ஹெல்ப்பண்ணுங்கன்னு வந்து நின்ன. இப்போ இப்படி சொல்ற”என்று எகிற, அவனோ “அட போக்கா ஏதோ சினிமா துணுக்கு, பிஸ்னஸ் விஷயம் இது மாதிரி சிம்பிளா எழுதுவனு பார்த்தா…. போலீஸ்கூட கோர்த்துவிட பாக்குற. அவங்க சுட்ட குண்டு என் மேல பட்டிருந்தா என் நிலைமை என்ன ஆகறது. எனக்கு எதாவது ஆனா தமன்னா வாழ்க்கை என்ன ஆகறது”என்று புலம்ப,

அவன் புலம்பலை கேட்டு கடுப்பான பவி “அடேய் சோடாபுட்டி. நான்தான் ஏற்கனவே சொன்னேன்ல. நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னு. நீயாதானே வாலண்டியரா வந்த அப்புறம் என்ன. இனி என்ன ஆனாலும் நீ என்னைவிட்டு போக முடியாது ராசா. எனக்கு ஏத்த டம்மி பீஸ் நீதான். ஆமா உனக்கு எதாவது ஆனா தமன்னா வாழ்க்கைக்கு என்ன ஆக போகுது?”என்று கேட்க, அவனோ தலையை சொரிந்தவாறு “தமன்னாக்கு நான்தான் வாழ்க்கை குடுக்கலாம்னு இருக்கேன். அதைதான் அப்படி சொன்னேன்”என்று வழிசலாக சொல்ல, அவனை கேவலமாக பார்த்த பவி “உனக்கே இது ஓவரா இல்ல….நாம இருக்க நிலைமைக்கு பொம்பள சோக்கு கேட்குதா கோபி….. உனக்கு பொம்பள சோக்கு…”என்று இருவரும் தங்களுக்குள் பேசி கொண்டிருக்க அதில் கடுப்பான சூர்யா “ஜஸ்ட் செட் அப். ரெண்டு பேரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. முதல்ல ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க. இல்ல சந்தேக கேஸ்ல தூக்கி உள்ள போற்றுவேன்”என்றான் கோபமாக.

பவியோ “என்ன சார் சும்மா மிரட்டுறீங்க. காத்து போக முடியாத இடத்துல கூட மீடியாகாரங்க போவோம் உங்களுக்கு இது தெரியாதா. எங்களுக்கு பத்திரிக்கை சுதந்திரம் இருக்கு”என்று கெத்தாக சொல்ல,சோடாபுட்டி போட்டிருந்த கோபியோ மனதில் மிரண்டுதான் போனான்,மேலும் பவிஅவன் கண்களை ஆழ்ந்து பார்த்து “என்ன காக்கி பயமுறுத்த பாக்குறியா. நான் அதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். நீ எப்போ எனக்கு ஓகே சொல்ல போற”என்று கேட்க, அவள் கேள்வியில் திகைத்தவன் “என்ன…”என்று கேட்டான் எதுவும் புரியாதது போல்.

பவி, “ஹோ……காக்கி சட்டைக்கு மறந்து போச்சா. நான் உனக்கு ப்ரொபோஸ்பண்ணி பத்து நாள் பன்னிரண்டு மணி நேரம் முப்பது நாழிகை ஆகியிருக்கு. இப்போ நியாபகம் வந்ததா”என்று கேட்க, அவனோ அசால்ட்டாக தோள் குலுக்கி “எனக்கு அது எல்லாம் நியாபகம் இல்லை. என் வேலை பிசில மறந்துட்டேன் சரி வெட்டியா இங்க நின்னு பேசிட்டு இருக்காம கிளம்பு”என்றவன் திரும்பி தன் ஜீப் நோக்கி நடந்தவனின் இதழ்களில் மென் புன்னகை தோன்றியது.

“ஹலோ….. மறந்தா பரவால்ல. இப்போ நியாபகபடுத்திக்கோ எப்போ எனக்கு ஓகே சொல்ல போற. பதில் சொல்லிட்டு போ மேன்”என்று கத்த, அவனோ அவள் வார்த்தைகளை கேட்டு சிரித்து கொண்டாலும் கண்டு கொள்ளாமல் சென்று ஜீப்பில் அமர்ந்தான்.

பவி தன்னவனுடன் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்த நினைத்து “காக்கி சார் இப்படி வயசு புள்ளைய தனியா விட்டுட்டு போறீங்களே காக்கி சார். வண்டி வேற ரிப்பேர்”என்று அவனை நோக்கி வேகமாக நடந்து கொண்டே சொல்ல, கோபியோ ‘இது எப்போ நேத்துதானே வண்டி சர்வீஸ்க்குவிட்டு எடுத்துட்டு வந்தேன்’என்று நினைத்து கொண்டு இருக்கும்போதே அவன் கையையும் பிடித்து இழுத்து வந்தவள் “சார் லிப்ட் ப்ளீஸ்……”என்று பாவம் போல் கேட்க,

மகாலிங்கம் சூர்யாவை பார்த்தார் ‘இவ என்ன பிளான் வச்சுட்டு வண்டில ஏற போறான்னு தெரியலையே’என்று நினைத்தவன் பின் ‘சரி எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்….’என்ற முடிவோடு “ஏறுங்க. மகாலிங்கம் அவங்களை ட்ரோப்பண்ணிட்டு அப்புறம் நாம போகலாம்”என்றவன் சொல்ல, பவியும், கோபியும் வேகமாக வண்டியில் ஏறி கொண்டனர்.

ஜீப் கிளம்பி சென்று கொண்டிருக்க கோபி மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தான் “என்ன ஆச்சு சோடாபுட்டி ஏன் மூஞ்ச ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி வச்சுருக்க”என்று கேட்க, அவனோ “என் வண்டிய அப்படியே விட்டுட்டு வந்தாச்சு. நேத்துதான் சர்வீஸ்பண்ணி வாங்கிட்டு வந்தேன்”என்று சொல்ல, அவன் வாயை வேகமாக மூடினாள் பவி. ஆனால் அதற்குள் அவன் வார்த்தை சூர்யா காதிலும் விழுந்திருந்தது.

‘பிராடு வண்டி ரிப்பேர்னு சொல்லி ஏமாத்திட்டாளே’என்று நினைத்து கொண்டிருக்க பவியோ “சரி விடு நாளைக்கு உனக்கு பிரியாணி வாங்கி தரேன் அப்புறம் மிஸ் யூ ரத்தன்னு ஸ்டேட்டஸ் வைக்கறேன் போதுமா”என்று கேட்க, அப்போதும் அவன் முகம் சோர்வாகவே இருந்தது “சரி கூட தந்தூரியும் வாங்கி தரேன்”என்று சொல்ல, இப்போது அவன் முகம் பிரகாசமானது.ரத்தன் அவன் வண்டியின் பெயர்.

ஒருவழியாக கோபியை அவள் சமாளிக்க இவை அனைத்தும் சூர்யா காதில் விழதான் செய்தது.’சரியான ஆளு எப்படி சமாளிக்கறா பாரு’என்றவனின் மனதில் சிரித்து கொண்டாலும் வெளியில் அமைதியாகவே இருந்தான்.

பவி அடுத்ததாக சூர்யாவை வம்பிலுக்கும் பொருட்டு “கான்ஸ்டபிள் சார் நீங்க லவ் மேரேஜா, அரேஞ்ஜ் மேரேஜா” என்று சூர்யாவை ஓர கண்ணால் பார்த்து கொண்டே கேட்க, அவரோ “லவ் எங்கம்மா நான் பண்ண அரேஞ்ஜ் மேரேஜ்தான் ஏன்மா?”

பவி, “இல்ல சார் காக்கி சட்டை போட்ருக்கவங்கக்குள்ள லவ் எப்பவுமே ஓவர் புளோவா இருக்குமாம். ஆனா லவ்வே இல்லாத மாதிரி வெறப்பா முறைச்சுட்டே சுத்துவாங்களாம். நான் சொல்லல ட்ரெஸோதெரப்பி சொல்லுது. நீங்ககூட உங்க வைப்ப ரொம்ப லவ் பண்ணுவீங்களே”என்று சூர்யாவை ஓர கண்ணால் பார்த்து கொண்டே கேட்க, மகாலிங்கமோ ‘ம்கூம்….. வாங்குற அடிக்கு அவளை நான் லவ் பண்ணிட்டாலும்’என்று மனதில் நினைத்து நைட்டு வாங்கிய அடியில் வீங்கிய கன்னத்தை அவர் தடவி கொடுக்க, அதை கவனித்த சூர்யாவிற்கு சிரிப்பு பீறிட்டு கொண்டு எழ, அதை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான்.

“அப்புறம் கான்ஸ்டபில் சார். சிரிப்பு வந்தா உடனே சிரிச்சிடணுமாம் இல்லைனா நம்ம ஆயுள்ள ஒரு மாசம் குறைஞ்சு போகுமாம்”என்று வாயில் வந்ததை எல்லாம் அடித்துவிட, கோபியோ “அம்மா தாயே பாத்து பதமா உருட்டும்மா. நீ பொண்ணு ஓடிருவ. என்னைய பிடிச்சாங்க பிதுக்கி எடுத்துருவாங்க. இவங்க எல்லாம் போலீஸ் நியாபகம் வச்சு எதா இருந்தாலும் பண்ணுமா”என்று சொல்ல, பவியோ “சும்மா இருடா. நொய் நொய்ன்னுட்டு”என்று இருவரும் குசுகுசுத்து கொண்டே பயணம் செய்தனர்.

சூர்யா, “உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க”என்றான் கம்பீர குரலில், அதை கேட்டு நெஞ்சில் கைவைத்த பவி ‘அடப்பாவி ஊர்ல இருக்கிற,எல்லா கிரிமினல்ஸ் பத்தியும் தெரிஞ்சு இருக்கு. பக்கத்து வீட்ல இருக்க என்னை தெரியல, இவனை எல்லாம் என்னத்த சொல்ல’ என்று தலையில் அடித்து கொண்டவள் பின் ‘சரிநம்ம காக்கிக்குதான் தெரியலையே கொஞ்சம் விளையாண்டு பாப்போம்’என்று நினைத்தவள் அவர்கள் தெருவின் பின்பக்கம் இருக்கும் தெருவில் நிறுத்த சொல்லி இறங்கி கொண்டாள்.

பவி, “ரொம்ப நன்றி சார்”என்று மகாலிங்கத்திடம் சொன்னவள் சூர்யா பக்கம் வந்து “ஓகே காக்கி பாய். நான் கிளம்பறேன். இன்னைக்கும் பதில் சொல்லாம ஏமாத்திட்ட.ஆனா நெக்ஸ்ட் மீட்பண்ணும்போது கண்டிப்பா எனக்கு பதில் வேணும். இப்போ போங்க நைட் கனவுல வர்றேன்” என்றுவிட்டு செல்ல, கோபியோ பாய் சார் என்றுவிட்டு சென்றான்.

சூர்யா அவள் சொல்வதை கேட்டு திகைத்தவன் பின் ‘வாயாடி. எப்படிதான் நான் போற இடம் எல்லாம் இவளுக்கு தெரியுதோ’என்று தனக்குள் சொல்லி கொண்டவன் மனம் இவளை போல் ஒரு பெண் உன் வாழ்க்கையில் வந்தாள் நன்றாகதான் இருக்கும் என்று சொல்ல, அதை கேட்டு யோசனையில் ஆழ்ந்தவனின் முகம் இறுதியில் மலர்ந்துதான் போனது.

மகாலிங்கம், “சார் வீடு வந்துடுச்சு…”என்று சொல்ல, “ஓகே நீங்க கிளம்புங்க”என்றுவிட்டு தன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டான்.

இரவு தாமதமாக வந்த பவிக்கு பசி எடுக்க, சரி குளிச்சுட்டு வந்து சாப்பிடலாம் என்று குளியல் அறைக்குள் நுழைந்து, குளித்துவிட்டு வெளியில் வர கையில் தோசையுடன் உள்ளே வந்தாள் சைந்தவி.

பவி, “ஹேய் சைந்து நீ இன்னும் தூங்கலையா?”

சைந்து, “ம்ம்…. தூங்கிட்டுதான் இருந்தேன். பேய் மாதிரி இப்படி அர்த்தராத்திரில வந்து கதவு திறந்தா, தூக்கம் கலையாம என்ன பண்ணும். அதான் எழுந்தாச்சு. சரி சாப்பிடலாம்னு தோசை ஊத்தி எடுத்துட்டு வந்தேன்”என்றவாறு, தோசையை பிய்த்து தன் வாயில் வைக்க போக, அதை பிடித்து தன் வாயில் வைத்து கொண்டவள் “போ போய் இன்னும் ரெண்டு தோசை நெய் தூக்கலா போட்டு எடுத்துட்டு வா”என்றுவிட்டு தட்டை பிடுங்கி கொண்டு சாப்பிட அமர,அவளை முறைப்பது போல் பாவ்லா செய்த சைந்து “முடியாது போடி…”என்று சொன்னாலும் தோசை ஊத்த கிச்சன் நோக்கி சென்றுவிட்டாள்.செல்லும் தன் அக்காவை பார்த்தவள் மனம் அவள் பாசத்தை கண்டு நெகிழ்ந்துதான் போனது. தனக்காகதான் அவள் தோசை ஊத்தி வந்தாள் ஆனால் வேண்டுமென்றே வம்பிலுக்கிறாள் என்று புரிந்து சிரித்து கொண்டாள்.

இரண்டு வாரம் கடந்த நிலையில் ரகுபதிபற்றிய அனைத்து உண்மைகளும் வெளியே வர, எதிர் கட்சிகாரர்கள் இப்படி ஒரு எம்எல் ஏவா என்று பிரச்சாரம் செய்து ஆளுங்கட்சியை கிலி கிலியென்று கிலிக்க, இது எல்லாம் தவறான செய்தி என்று அப்போதும் ஒரு சில அறிவு ஜீவிகள் போர் கொடி தூக்க, எதையும் கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்த்து கொண்டிருந்தான் சூர்யா.

பல மாப்பிள்ளைகளை அலசி ஆராய்ந்து, ஒருவழியாக பிஸ்னஸ் மேன் ஒருவரை தன் மகள் சைந்தவிக்கு வரனாக பார்த்தார் குமார். சைந்துவிடம் கேட்ட போதும் உங்கள் விருப்பம் என்றுவிட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் துரிதமாக நடக்க துவங்கியது. ராதிகாவும் தன்னால் ஆனா எல்லா உதவிகளையும் மஞ்சுளாவிற்கு செய்வார்.

இந்த நிலையில்தான் ஒரு ஞாயிறு ராதிகா மஞ்சுளா இருவரும் சைந்து திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கோவிலுக்கு கிளம்பினர். சைந்து ஹாலில் அமர்ந்து ஷின்ஷான் பார்த்து கொண்டிருக்க, பவி வேலைவிஷயமாக வெளியில் சென்றவள் காலை ஏழு மணி போல்தான் வீட்டிற்கு வந்தாள். அதற்க்கு மஞ்சுவிடம் திட்டு வாங்கிவிட்டு தூங்க துவங்கிவிட்டாள்.

குமார் கடைக்கு சென்றுவிட, சைந்து கதவை சாற்றிவிட்டு டிவி பார்த்து கொண்டிருந்தாள். அப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.’யார் அது இந்த நேரத்துக்கு’என்று யோசித்தவள் கதவில் தெரிந்த லென்ஸ் வழியாக எட்டி பார்க்க, வெளியே ஒரு காக்கி சட்டை தெரிந்தது.

‘ஹையோ பூச்சாண்டி…….’என்று அரண்டவள் மீண்டும் ஓடி போய் டிவியில் ஷின்சான் சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு கதவை கண்டு கொள்ளாமல் முறுக்கை சாப்பிட்டு கொண்டே பார்க்க, மீண்டும்…. மீண்டும் ஓயாமல் காலிங்பெல் அடித்து கொண்டே இருந்தது.

வீட்டின் வெளியே நின்ற சூர்யா ‘கடவுளே என்ன இது. இவ்ளோ நேரம் காலிங் பெல் அடிக்கறோம். ஒருத்தரையும் காணோம். இந்த அம்மா இப்போதான் கோவிலுக்கு போகணுமா. வீட்ல சின்ன குழந்தைதான் இருக்கும் போல கார்ட்டூன் ஓடற சவுண்டு கேட்குது’ என்று புலம்பி கொண்டு நின்றான்.

ஆம், சூர்யா பிரகாஷ்தான் வெளியில் நின்றது. முக்கியமான பைல் ஒன்றை அவன் வீட்டில் வைத்துவிட்டு சென்றுவிட, எடுக்க வந்தவன், வீடு பூட்டி இருக்கவும் தாய்க்கு போன் செய்து கேட்க, அவரோ கோவிலுக்கு சென்றிருப்பதாகவும், வீட்டு சாவி பக்கத்து வீட்டில் இருப்பதாகவும் சொல்ல, வேறு வழியில்லாமல் அதை வாங்கதான் வந்திருந்தான்.

ஓயாமல் காலிங் பெல் அடிக்கவும் கடுப்பான பவி ‘இந்த வீட்ல இருக்கவங்க எல்லாம் எங்க போய்ட்டாங்க. கதவை கூட திறக்காம’என்று நினைத்து கொண்டு தூக்க கலக்கத்துடன் எழுந்து வெளியில் வந்தாள். ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த சைந்துவை கண்டு கடுப்பானாள்.

“அடியே சைத்தான் அந்த கதவை திறந்தா என்னடி. எவ்ளோ நேரம் காலிங் பெல் அடிக்குது”என்று கத்த, வெளியில் இருந்த சூர்யாவோ ‘ஹப்பாடா ஒரு வழியா அந்த குழந்தையோட அம்மா வந்திட்டாங்க போல’என்று ஆசுவாசம் ஆன மறு நிமிடம், ஒரு மெதுவான மென்மையான குரல் காதில் விழ திகைத்து போனவன் குனிந்து தன்னை பார்த்து ‘அப்படியா இருக்கோம்….’என்று ஷாக் ஆனான்.

ஆம், பவி கேள்விக்கு சைந்து மெதுவாக “வெளிய பூச்சாண்டி…” என்று சொல்வதை கேட்டுதான் சூர்யா ஷாக் ஆனான்.

பவி, “எதே….. பூச்சாண்டியா”என்று திகைத்தவள். பின் “லூசு மாதிரி உளறாதடி” என்றுவிட்டு போய் கதவை திறக்க, வெளியில் நின்றிருந்தவனை கண்டு பவி அதிர்ந்து போனாள்.

சூர்யாவும் கதவு திறந்தவளை கண்டு திகைத்துதான் போனான்.இரவு உடையில் தலை கலைந்து கண்கள் தூக்கத்தில் இருக்க நின்றவளை கண்டு கண்களை திருப்பி கொண்டான்.

பவி சற்று நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டவள் “என்ன காக்கி ஓகே சொல்ல, வீட்டுக்கே வந்துட்டீங்க போல”என்று கேட்க, அவனோ ‘என்னை ஏமாத்திட்டல்ல’ என்ற பார்வை பார்த்துவிட்டு, “வீட்டு சாவி இங்க இருக்கறதா அம்மா சொன்னாங்க சாவி எடுத்து குடு”என்று சொல்ல, அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவள் “என்ன காக்கி இப்படி ஒரு சூப்பர் பொண்ணு பக்கத்து வீட்ல இருக்கறது கூட தெரியாம தத்தியா இருந்துட்டோமேனு நினைக்கறீங்களா”என்று கேட்க, அவளை முறைத்தவன் “சாவி…”என்க,

“அட என்ன காக்கி சந்தைக்கு போகணும், ஆத்தா வையும்ங்கற மாதிரி சாவி சாவினு சொல்லிட்டு இருக்கீங்க. இருங்க வரேன்”என்று உள்ளே வந்தவள்,அவன் முன் அவ்வளவு நேரம் சாதாரணமாக தன்னை காட்டி கொள்ள, இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டு ‘ஹையோ இப்படியே போய் நின்னுட்டோமே. என்ன நினைச்சுருப்பான்’என்று தலையில்அடித்து கொண்டு, தலையை ஓரளவு சரி செய்து முகம் கழுவிவிட்டு சைந்துவிடம் கேட்டு சாவியை எடுத்து கொண்டு வந்து கொடுத்தாள்.

சூர்யா சாவியை வாங்கி கொண்டு தன் பாக்கெட்டில் இருந்த ஒரு டேரி மில்க் சாக்லேட்டை எடுத்தவன் “உள்ள டிவி பாக்குற குட்டி பொண்ணுக்கு இதை குடுத்துரு”என்றுவிட்டு போக, பவியோ “எதே….. குட்டி பொண்ணா….”என்று விழிக்க, அவனும் நடந்து கொண்டே “ஆமாம் கார்ட்டூன் பாக்குற குழந்தைக்கு. அப்புறம் நான் பூச்சாண்டி எல்லாம் இல்லைனு சொல்லு”என்றவாறே செல்ல, பவிக்கு அப்போதுதான் புரிந்தது அவன் தன் அக்காவைதான் சொல்கிறான் என்று.

காதலுக்கு அடையாளமாக அந்த இனிப்பை தந்து சென்றானோ…

Advertisement