Advertisement

பவி கைகளை பிசைந்தவாறு பயந்துடன் அமர்ந்திருக்க, அவளைகவனித்த சைந்து “பவி உனக்கு நான் சொல்லணும்னு அவசியம் இல்ல. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன். என்னைவிட நீதான் பயங்கர மெச்சுர். யாருகிட்ட எப்படி பேசணும். எங்க எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியும். அதே மாதிரி எந்த பிரச்சனையா இருந்தாலும் நீ தனியா எந்த முடிவும் அவசரமா எடுக்காத, உட்கார்ந்து ரெண்டு பேரும் பேசுங்க. பேசி சேர்ந்து பிரச்சனைய சால்வ் பண்ணுங்க. இதை நான் அனுபவபூர்வமா உணர்ந்து சொல்றேன்.

வருணும் நல்லவராதான் தெரியுறாரு பார்த்துக்கோ” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே, கணைப்பு சத்தம் இருவரையும் கலைத்தது.

யார் என்று இரு சகோதரிகளும் திரும்பி பார்க்க,சூர்யாதான் அங்கு நின்று கொண்டு இருந்தான். சைந்துவை போனில் அழைத்து அழைத்து பார்த்து கடுப்பாகி போனவன் அவளை அழைத்து செல்ல நேரிலேயே வந்துவிட்டான்.

கணவனை அங்கு கண்டவுடன் சைந்துவுக்கு ‘ஹையோ….’ என்று ஆனது.

“சரி பவி பாத்துக்கோ நான் காலைல வரேன்” என்றுவிட்டு கணவனை முறைத்து கொண்டே வந்தவள் “வாங்க….” என்று வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு முன்னால் செல்ல, சூர்யாவும் பவியை பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு மனைவி பின்னோடு சென்றான்.

சைந்து அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், கணவனை திட்ட எண்ணி திரும்ப, அவள் கணவனோ அவள் முன் வந்து நின்றவன் அடாவடியாக அவளை தூக்கி கொண்டு மாடி நோக்கி நடக்க, அவளோ அவன் கைகளில் அடங்காமல் துள்ளி குதிக்க முனைய, அவள் இடையில் தன் கரங்களை அழுத்தமாக பதித்தவன் “பேசாம வா டாக்டரே. காலைல ட்ரையல் பார்த்ததோட விட பார்க்குறியா. இன்னைக்கு செம்மையா கவனிக்கறேன்னு சொல்லிட்டு அங்க உன் பாச மலர்கூட இருந்தா என்னடி அர்த்தம்”என்றவாறே அறையின் உள்ளே வந்தவன், மேலும் அவள் எதுவும் பேசும் முன் தன் மனையாளை அவன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

அழகான காதலின் அடுத்த நிலை அங்கு அரங்கேற ஆரம்பித்தது. (என்ன ஒன்னுமே தெரியல. கதவை மூடிட்டாங்களா. இருந்தாலும் போலிஸ்கார் ரொம்ப கவனமா இருக்காருப்பா. சரி நாம அடுத்த ஜோடிய பார்க்கலாம்)

வருணை வெகுநேரம் காத்திருக்க வைத்து ஒருவழியாக வந்து சேர்ந்தாள் பவி. எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலும் சாதாரணமாக எதிர் கொள்ள முடியாத கடினமான தருணம் இது.

மனையாளின் அழகில் மயங்கி போய் அமர்ந்திருந்த வருண், அவள் முகத்தில் இருக்கும் படபடப்பை கண்டு தனக்குள் சிரித்து கொண்டான். பின் அவளை சீண்ட எண்ணி,

“யாரும்மா நீ. திறந்த ரூம்க்குள்ள ஏதோ நுழையற மாதிரி, நீ பாட்டுக்கு வந்துட்ட. வெளிய போமா. என் பொண்டாட்டி வர நேரம். இப்போ நீ இங்க இருக்கறதை அவ மட்டும் பார்த்தா உனக்கு மட்டும் இல்லாம எனக்கும் சேர்த்து பேயோட்டிருவா” என்று சொல்ல,

வெடுக்கென்று நிமிர்ந்து அவனை முறைத்தவள் “டேய் அமுல் பேபி இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல”

“அட…. என் பொண்டாட்டிதான் இது. நான் கூட அமைதியா இருக்கவும் வேற பொண்ணு வந்துடுச்சோனு நினைச்சிட்டேன்” என்று சொல்ல,

பவி அவனை செல்லமாக முறைத்து பின் முடியாமல் சிரித்துவிட, அதையே தனக்கான சிக்னலாக எடுத்து கொண்டவன், அவளை நெருங்கி அமர, அவள் விலகி அமர என நகர்ந்து நகர்ந்து பெட்டின் நுனிக்கு வந்தவள் அதற்கு மேல் நகற முடியாமல் திணறி தடுமாற்றத்துடன் அவனை பார்க்க, அவனும் குறும்பு புன்னகையுடன் அவளைதான் பார்த்து கொண்டிருந்தான்.

“என்ன பப்ளி சுய நினைவு இல்லாம நமக்குள்ள நடந்த சம்பவத்தை இப்போ ரெண்டு பேரும் காதலோட நடத்தலாமா” என்று கண்ணடித்து கேட்க, அவளோ என்ன சொல்வது என்று விழிக்க, அவளது விழி மொழியில் வீழ்ந்தவன் “இந்த கண்ணும் அந்த நேரத்தில் நீ பேசிய வார்த்தைகளும்தான்டி பொண்டாட்டி என்னை மயக்கி, உன்னை நாய் மாதிரி தேட வச்சுது” என்றவன் அவள் மென் இதழை தன் முரட்டு இதழால் சிறை செய்ய, பெண்ணவள் முதலில் திகைத்து பின் அவனுக்கு இயைந்து கொடுக்க, அவளுள் மூழ்க துவங்கினான் அவள் கணவன்.

நீண்ட நெடிய முத்த யுத்தத்திற்கு பின் அவளிடம் இருந்து விலகியவன், அவள் நெற்றியில் மென் முத்தம் பதிக்க, பவி மனதில் ஆழி பேரலையாய் உணர்வுகள் எழுந்து ஆர்ப்பரித்தது.உதடுகள் நடுங்க கண்களை இறுக மூடி இருந்தவளின் உதடுகளை கரங்களில் பிடித்து அதன் நடுக்கத்தை நிறுத்தியவனின் மற்றொரு கரமோ அவள் இடையில் அழுத்தமாக பதிய, அவன் தொடுகையில் பெண்ணவள் மெழுகாய் உருகிதான் போனாள்.

மெதுவாக அவள் காதருகில் சென்றவன் “ஹோ…. மை காட் பப்ளி…இஇ இ இ…ஐ…காண்ட் கண்ட்ரோல்……” என்று கிறக்கமாக சொல்ல,அவளோ கண்களை இன்னும் இறுக்கமாக மூடினாள்.

“ஹேய் பப்ளி.. இ…. இ….. இ….” என்று உணர்ச்சி மிகுதியில் கர கரப்பான குரலில் அழைத்தவனுக்கு பதிலாக,

“ம்ம்ம்……” என்றவளின் குரலும் கிறக்கமாகவே வந்தது.

“கண்ணை திறந்து என்னை பாருடி” என்றவனின் வசிய வார்த்தைகளுக்கு மயங்கிய பேதை, கண்களை திறக்க,

அவளது அழைப்புறும் கருவிழிகளை ஆழ்ந்து பார்த்தவன் ‘உனக்கு சம்மதமா’ என்பது போல் கண்களாலேயே கேட்க,

நாணம் மேலிடம் கணவனை பார்த்தவள் ‘சரி’ என்பது போல் கண் சிமிட்டி தன் சம்மதத்தை தெரிவித்து, பின் அவன் மார்பிலேயே தஞ்சமடைந்தாள்.

அளவில்லாத காதல் மனதில் எழ, அவளை ஆசையாக அள்ளி தன் காதலை செலுத்த, உன் காதலுக்கு நான் குறைவில்லை என்பது போல் போட்டி போட்டு அவளும் காதலோடு இன்பமாக சேர, அங்கு காதல் வென்று காமமும் வென்று புது உலகத்திற்கே சென்று வந்தனர் இருவரும்.

ஆணவன் எல்லை கோடு தாண்டி வேங்கையாக வேகம் கொள்ள, பெண்ணவள் துவண்டுதான் போனாள், அவன் ஆக்கிரமிப்பில், தன் பெண்மையை உணர செய்தவன் தோள்களில், முணங்கி கரம் பதித்தவளின் காதுகளில் அந்தரங்கம் பேசியவனின் செயலில் முகம் சிவந்தவள் அவன் மார்பிலேயே முகம் புதைத்து கொண்டாள்.

அங்கு அன்பான இல்லறம் அழகாக துவங்கியது.

அடுத்த நாள் காலை குளித்து முடித்து வருண் கீழே வர, சூர்யா அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தான். அவன் அருகில் வந்தவன் “என்ன பாடிகாட் தனியா இருக்கீங்க” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே சைந்து காபியோடு அங்கு வந்து சேர்ந்தாள்.

சூர்யா காபி எடுக்க போக, அவனை தாண்டி சென்றவள் “புது மாப்பிளைக்குதான் பர்ஸ்ட்” என்று அவனிடம் கொடுத்துவிட்டு அடுத்து சூர்யாவிடம் நீட்ட, வருணோ அவனை நக்கலாக பார்த்து கொண்டே காபியை குடித்தான்.

அதில் கடுப்பான சூர்யா சைந்து இடையில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு, அவள் இதழை ஒரு கடி கடித்துவிட்டு டக்கென்று விலக, வருணுக்கு குடித்த காபி புரை ஏற வாய்க்குள் இருந்த காபியை துப்பியவன் இறுமியவாறே ‘இப்போ இங்க என்ன நடந்தது’ என்பது போல் கண்கள் கலங்க பார்த்து கொண்டிருக்க,

சைந்துவோ கணவனின் சேட்டையால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் ஓடிவிட்டாள்.

சூர்யாவோ ஒன்றும் நடக்காதது போல் அமைதியாக பேப்பரை பார்த்து கொண்டே காபியை குடிக்க துவங்க, திகைத்து போய் அமர்ந்திருந்த வருணோ “அண்ணா…. ஏனுங்ணா….. இப்போ இங்க என்ன நடந்துச்சு”

“ஒன்னும் நடக்கலையே”

“ண்ணா…. இன்னைக்கு நான்தாங்க புது மாப்பிள்ளை இந்த சேட்டை எல்லாம் நான்தாங்க செய்யணும். ஆரம்பத்துல இருந்து நீங்களே ஸ்கோர் பண்ணுனீங்கனா அப்புறம், கடைசில வந்த எனக்கு அதுவும் சாக்லேட் பாய் ஹீரோக்கு என்னங்கண்ணா மரியாதை”

“ஹேய் நிறுத்து நீ என்ன வார்த்தைக்கு வார்த்த என்னை அண்ணாங்கற. நீ காலேஜ் படிக்கும்போது ரேகிங்ற பேர்ல ஒரு பொண்ண உன்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ண சொல்லி உன் பிரண்ட்ஸ்ங்ககிட்ட மிரட்ட சொன்னியே அது யாரு தெரியுமா. என் கிளாஸ்மெட்தான் . சும்மா பிரண்ட பார்க்க வந்த புள்ளைக்கிட்ட வம்பிழுத்துருக்கீங்க.நானும் அப்போ அதே காலேஜ், நீ படிச்ச இயர்தான் படிச்சேன்.

என்ன நீ மெடிசின் படிச்ச, நான் எஞ்ஜினியரிங் படிச்சேன் வேற எந்த டிப்ரண்ட்டும் இல்ல. ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிடு. நடிகன்னா உனக்கு என்ன வயசு குறைஞ்சுட்டே போகுமா என்ன” என்று கேட்க,

அதற்கு வருண் பேச வருவதற்குள், “ஹோ…. சார் அவரே ஒரு பொண்ணை செலக்ட்பண்ணி ப்ரொபோஸ் பண்ணலாம் வச்சிருக்காரா” என்ற கோபமான குரல் கேட்டு இருவரும் திரும்ப அங்கு பவி கோபமாக நின்றிருந்தாள்.

சூர்யா நமுட்டு சிரிப்புடன் அமர்ந்திருக்க, வருணோ என்ன சொல்லி சமாளிப்பது என்று விழித்து கொண்டிருந்தான்.

“ஏன் பாஸ்….” என்பது போல் வருண் சூர்யாவை பார்க்க,

‘அது எப்படிடா என் பொண்டாட்டி உன்னை நல்லவன்னு சொல்லலாம். அதுக்குதான் இது’ என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு காபியை குடித்தவன் முகத்தில் பரம திருப்தி.

பவி கணவனிடம் “சொல்லுங்க இது மாதிரி இன்னும் என்னென்ன பண்ணி இருக்கீங்க” என்று கேட்க,
அவனோ என்ன சொல்வது என்று புரியாமல் திணறி “இல்லம்மா அது காலேஜ் டேஸ்ல…. சும்மா டைம் பாஸ்க்கு……” என்று ஒருவாராக காலில் விழாத குறையாக கெஞ்சி சமாளித்து வைத்தான்.

பின் சூர்யாவை பார்த்து “ஐயா ராசா. இனி நீ இருக்க பக்கமே நான் வர மாட்டேன். குதூகலமா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சுட்டு போய்றாதப்பா” என்றுவிட்டு திரும்பி அமர்ந்து கொண்டான்.

சைந்து அப்போது மூவரையும் சாப்பிட வர சொல்ல, அங்கு வந்து சேர்ந்தாள்.

பவி அப்போதுதான் நினைவு வந்தவளாக “ஆமா நீங்க என்ன படிச்சுருக்கீங்க” என்று கேட்க,

வருணோ “எம் பி பி எஸ்” என்று சொல்ல,

பவி, “எதே……” என்று அதிர்ச்சியாக,

வருண், “ஆமாம்மா நான் ஒரு டாக்டர். ஆனா நடிப்புல இன்ட்ரெஸ்ட் இருந்ததால அந்த பக்கம் போய்ட்டேன்” என்று சொல்ல,

சைந்து அதிர்ந்து போய் பவியை பார்க்க அவளோ புடவையை இழுத்து சொருகியவாறு சகோதரியை முறைத்தாள்.

“ஹேய் பாவி சொன்னா…. கேளு…நான் சும்மா…ஏதோ ஒரு புளோவுல சொன்னேன். அது நடந்துருச்சுன்னா. நான் பொறுப்பில்லை” என்றவாறு பின்னால் போக,

“சைத்தான் அப்போவே சொன்னேன். உன் ஊத்த வாய வைக்காதன்னு கேட்டியா. இப்போ பாரு இவரு டாக்டராம் உன்னை……” என்று அவளை துரத்தி கொண்டு ஓடினாள்.

(அடி ஆத்தி இந்த பவி புள்ளைக்கு டாக்டரே பிடிக்காது. அவங்க மேல மருந்து வாட வரும்னு சொல்லிட்டு திரியும். கடைசில இவளுக்கு புருஷன் டாக்டரா. அதுவும் சைந்து சொன்ன வாய் முகூர்த்தம் அமோகம்)

சகோதரிகள் இருவரும் ஓடி கொண்டே “அம்மா….. அம்மா……” என்று ஏலம் விட, ஹாலில் ரெண்டு ஜீவன் புரியாமல் விழிக்க, மகள்கள் சத்தத்தில் அங்கு வந்த மஞ்சு மருமகன்களிடம் நடந்ததை கேட்டு, அவர்களிடம் சைந்து சொன்னதை சொல்லி, அவர்களின் குழப்பத்தை போக்கியவர்,

சத்தமாக “இப்போ ரெண்டு பேரும் அமைதியா சாப்பிட வரல, காலை டிபன் என்ன இருக்கும்னு உங்களுக்கே தெரியும்” என்க,

இருவரும் அப்படியே அமைதியாகி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, தலை எல்லாம் கலைந்து கீழே வர அவர்களை பார்த்து மொத்த குடும்பமும் சிரித்தது.

இரு சகோதரிகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ‘நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குது’ என்று உதட்டை பிதுக்கி கொண்டு சாப்பிட சென்றனர்.

மாப்பிள்ளை விருந்து ராதிகா, மஞ்சு இருவரும் சேர்ந்து சமைத்திருந்தனர்.இரண்டு மகள்களும் அவரவர் கணவன்மாருடன் அமர்ந்து சாப்பிடுவதை கண்டு பெற்றோர் உள்ளம் குளிர்ந்து ‘கடவுளே என் குழந்தைகளுக்கு இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க ஆசிர்வாதம் செய்ப்பா’ என்று வேண்டி கொண்டனர்.

நல்லவராக இருந்தாலும் சரி கேட்டவராக இருந்தாலும் தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பெற்ற உள்ளம் என்றும் எண்ணும். தன் குழந்தைகள் சிரித்தால் தானும் சிரித்து, அவர்கள் அழுதால் தானும் அழுது என்று தன் வாழ்க்கையை அவர்களுக்காகவே வாழ்பவர்கள் பெற்றோர்கள் நம்மை அவர்கள் பார்த்து கொண்டது போல் யாராலும் எப்போதும் பார்த்து கொள்ள முடியாது.

அம்மா மடியில் படுக்கும்போதும், அப்பா தோளில் சாய்ந்து கொள்ளும்போதும் கிடைக்கும் தைரியமும், மன அமைதியும் வேறு எங்கும் கிடைக்காது.

மஞ்சு, ராதிகா, குமார் போல் எத்தனையோ பெற்றோர் குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாமும் இவர்களின் இந்த மகிழ்ச்சி வாழ்நாள் முழுதும் நிலைக்கட்டும் என்ற வேண்டுதலோடு அவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.

ஆருயிராய் அணைத்துவிட்டாள்…..

தன் அன்பால் உங்களையும்……
நன்றி……

Advertisement