Advertisement

அத்தியாயம் -28

அதிகாலை வேலை பறவைகள் கீச்…. கீச்…. என்று கத்தி கொண்டு இருக்க, வானமகள் தன்னவனான வெய்யோன் வர போவதை அறிந்து நாணத்தில் சிவக்கும் அதிகாலை வேலை. அந்த மண்டபமே அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

டாப் ஹீரோ வருண் கிருஷ்ணா கல்யாணம் என்றால் சாதாரணமா, மண்டபமே தேவலோகம் போல் மின் விளக்குகளால் மின்ன, வாசமிகு பூக்கள் அங்கங்கு வைத்திருப்பதால் மண்டபம் முழுவதும் மணம் பரப்பி கொண்டிருந்தது. சமையல் வேலை ஒரு பக்கம் பரபரப்பாக நடக்க, மாப்பிள்ளையான வருண் கிருஷ்ணாவோ சூட்டிங் சென்றுவிட்டு முதல் நாள்தான் வந்ததால். தன்னவளை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தோடு அமர்ந்திருந்தான்.
ரகு, “பாஸ். நான் ஒன்னு கேட்கவா” என்றவனை கடுப்பாக பார்த்த வருண் “வேண்டான்னா விட போறியா” என்க,

அவனோ இல்லை என்னும்விதமாக மறுப்பாக தலையசைத்தான். அதை பார்த்து முறைத்தவன் “அப்புறம் ஏன்டா பர்மிசன் கேட்குற. நான் ஒன்னு சொல்றேன் கேளுங்கன்னு ஆரம்பிக்க வேண்டியதுதானே. சொல்லும்…. சொல்லி தொலையும்”

“இல்ல எள்ளுதான் எண்ணெய்க்கு காயனும், எலி புழுக்க எதுக்கு காயனும்”

“இதுல யாரு எள்ளு….. யாரு எலி புழுக்க”

“பாஸ் பழமொழி சொன்னா அக்சப்ட் பண்ணிக்கணும், ஆராய கூடாது. உங்க ஆள பார்க்க முடியலங்கற பீலிங்ல நீங்க தூங்கல, என்னையும் ஏன் தூங்க விட ஆஆஆஆ……” என்று கொட்டாவி விட்டு கொண்டே பேசியவன் தலையில் கொட்டிய வருண்.

“ராமருக்கு அனுமார் உதவி செஞ்ச மாதிரி எதாவது ஹெல்ப் பண்ணுவோம்னு இல்லாம…எப்போ பாரு சோறு…. இல்ல தூக்கம்…. நீயெல்லாம் மனுஷனாடா ” என்று திட்டி கொண்டிருக்க,

ரகுவோ அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டே போர்வையை முக்காடு போல் தலையில் போட்டு கொண்டு, தூங்கி போனான்.அதை கண்டு கோபமானவன் அவனை ஒரு உதைவிட்டு “போடா போய் கட்டுல்ல படுத்து தூங்கு” என்க, அவனும் விட்டால் போதும் என்று ஓடி சென்று படுத்து கொண்டான்.

வருண் ரகுவிடம் எப்போதும் நண்பன் போல்தான் பழகுவான். அவனும் தேவையில்லா இடத்தில் ஒதுங்கியும், தேவையான இடத்தில் நண்பனாக தோள் கொடுத்தும் அவன் கூடவே இருப்பான்.

ரகு உறங்குவதை கண்டு தலையை இரு பக்கமும் மறுப்பாக ஆட்டியவன் ‘இந்த டம்மி பீச நம்பி யூஸ் இல்ல. நாமே களத்துல இறங்கிற வேண்டியதுதான்’ என்று நினைத்து கொண்டு கதவை திறக்க, அங்கு அவனது சித்தி நின்று கொண்டிருந்தார்.

“வருண் எழுந்துட்டியா. சித்தப்பா முகூர்த்த நேரத்துக்குதான் வருவாராம். நேரம் ஆச்சு நீ குளி, குளிச்சுட்டு கிளம்புனா சரியா இருக்கும். உன் தங்கச்சி எங்க போனானே தெரில வயசு புள்ளையா லட்சணமா இருக்காளா, சின்ன புள்ளைங்க கூட சேர்ந்து கற்கண்டு திருடி தின்னுட்டு இருக்கா” என்று புலம்ப,

தங்கையை நினைத்து சிரித்து கொண்டவன் “அதெல்லாம் அவ பத்திரமா இருப்பா. நீங்க கவலைப்படாம போங்க” என்றுவிட்டு, அறை உள்ளே சென்றவன் தூங்கி கொண்டிருந்த ரகுவை ஒரு எத்துவிட்டு “எழுந்துவாடா கிளம்பனும் விடுஞ்சுருச்சு” என்க,

ரகுவோ திகைத்து போய் “எதே…. அதுக்குள்ள விடிஞ்சுருச்சா…” என்று கத்த,

“டேய் நான் எப்ப விடியும்னு சுத்திட்டு இருந்தா. நீ அதுக்குள்ள விடிஞ்சுருச்சான்னா கேட்குற. உன் வாயில வெடி போடறேன் இருடி.ஒழுங்கா போய் குளிச்சு ரெடி ஆகுற வழிய பாரு. இல்ல. சித்தப்புக்கு அசிஸ்டன்ட்டா உன்னை அனுப்பிடுவேன்” என்றுவிட்டு பாத்ரூமினுள் புகுந்து கொண்டான்.

ரகுவோ ‘எது…. சித்தப்புக்கூடவா…. இங்க இருந்தாலே நம்ம மூஞ்சிக்கு ஒரு ஆள் செட் ஆக மாட்டிகிது. அங்க போனேன் கருகி போய்தான் வருவேன். அப்புறம் என் ஆத்தா, அப்பாவுக்கே என்னை அடையாளம் தெரியாம போய்டும் எதுக்கு வம்பு குளிக்கதானே போறோம். குளிச்சுட்டு வருவோம்’ என்று தனக்குள் புலம்பி கொண்டே மற்றொரு அறைக்கு குளிக்க சென்றான்.

சூர்யா வீட்டில் பரபரப்பாக கிளம்பி கொண்டு இருந்தான். வீட்டின் மூத்த மாப்பிள்ளையாக இல்லாமல் மகனாக எல்லா வேலைகளையும் செய்தான். மண்டபத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு விடியற்காலை வேலையில்தான் வீட்டிற்க்கே வந்தான். அவனது சோர்ந்த தோற்றத்தை கண்டு கவலையான சைந்து “கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ல. நைட்டாவது வீட்டுக்கு வந்திருக்கலாம். பாப்பா உங்கள கேட்டுட்டே இருந்தா” என்று சொல்ல, அவளை அணைத்து தோள் வளைவில் முகம் புதைத்தவன் “எல்லாம் எதுக்கு பண்றேன் காரணமாதான்”

“காரணமாவா…. என்ன காரணம்” என்றவள் மூக்கை பிடித்து ஆட்டியவன்,

“வேற எதுக்கு மாமியார் வீட்டை கவனிச்சா, மக என்னை கவனிப்பா அந்த சுய நலம்தான்” என்று சொல்லி கண்ணடிக்க, அவளோ “மோசமான பையன் போலிஸ்கார் நீங்க” என்று சொல்லி கணவனை தானும் அணைத்து கொண்டாள் .

பின் சூர்யாவை விலக்கி நிறுத்தி “சரி நீங்க அடுத்த ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க. பாப்பா எழுந்தா உங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும். கொஞ்ச நேரம் தூங்குங்க. நான் குளிச்சு ரெடி ஆகிட்டு வந்து உங்களை எழுப்பறேன். அப்புறம் லேட் ஆகிடும்” என்று அணிவதற்கான புடவையை எடுத்து வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள்.

சற்று நேரத்தில் குளித்து முடித்தவள் புடவையை வெளியே சென்று கட்டி கொள்ளலாம், என்று டவலை உடலில் சுற்றி கொண்டு வந்தாள். அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பியிருக்க, யார் வரப்போகிறார்கள் என்று கதவை தாளிடாமல் இருந்தவள், எடுத்து வைத்த உடையை காணாமல் அதிர்ந்து போனாள்.

‘இங்கதானே வச்சேன் எங்க போச்சு’ என்று தேடி கொண்டிருந்த சமயம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திகைத்து ‘யார்’ என்று பார்க்க சூர்யாதான் வெள்ளை வேஷ்டி சட்டையில் மயக்கும் புன்னகையோடு நின்றிருந்தான்.

கணவனை அப்போது எதிர்பாராதவள் அப்படியே நின்றிருக்க, டவல் அவள் உடலைவிட்டு நழுவி விழ போக, டக்கென்று அதை பிடித்தவள் வேகமாக மீண்டும் பாத்ரூமிற்குள் ஓட போக, அதற்குள் வேகமாக அவள் முன் வந்து நின்றான் சூர்யா.

“என்ன டாக்டரே காலைலயே இப்படி தரிசனம் தர்ற. கல்யாணத்துக்கு நாம போகலையா” என்று கேட்டவரே ஷர்ட் பட்டனை கழட்ட,

“ஏங்க சும்மா விளையாடாதீங்க. நானே சேரிய காணம்னு கவலைல இருக்கேன். நீங்க வேற நிலைமை புரியாம விளையாடிட்டு. ஆமா…. நீங்க தூங்கலையா”

“என்ன டாக்டரே பேச்சை மாத்துரியா. எனக்கு தூக்கம் வரல. அதுமட்டும் இல்லாம நீ இப்படி நின்னு என்னை டெம்ப்ட் பண்ணிட்ட, சோ….. “

சைந்து, “சோ……”

சூர்யா, “சோ மாமாவை நீ கவனிப்பியாம். அப்புறமா கிளம்பி நாம போவோமாம்” என்றவாறு அவளை நெருங்க,

பெண்ணவளோ உடலில் இருந்த டவலை இறுக்கி பிடித்தவாறு “நோ….. போலிஸ்கார் சொன்னா கேளுங்க”.

“முடியாதுடி என் போலி டாக்டரே…” என்று டவலை உறுவியவன், அவளோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தான். அதன்பின் சீண்டல் சத்தமும் , அவள் கொலுசின் சிணுங்கல் சத்தமும் மட்டுமே அந்த அறையை நிறைத்தது. அனைத்தும் முடிந்து மூச்சு வாங்க வேர்த்து போய் படுத்திருந்தவன் மார்பில் அடித்த சைந்து “மொரட்டு போலிஸ்கார். பாருங்க நேரம் ஆச்சு. இப்போ நான் மறுபடியும் குளிக்கணும்” என்று திட்டி கொண்டே போர்வையோடு எழ, அவள் அணிந்திருந்த டவல் அவன் உடலை சுற்றி இருந்தது. கணவனின் சேட்டைகளை ரசித்து சிரித்து கொண்டவள் மீண்டும் குளித்து வர,

சூர்யாவும் அப்போது மற்றொரு அறையில் சென்று குளித்து தயாராகி நின்றிருந்தான். வெளியில் வந்த சைந்து மீண்டும் புடவையை தேட அவள் முன் ஒரு புடவை பெட்டியை நீட்டினான் அவள் கணவன்.

சைந்து அவனை ஆச்சர்யமாக பார்த்து கொண்டே அதை வாங்கி பிரிக்க, தளிர் இலை நிற பச்சையும், தாமரை நிற பார்டரும் கொண்ட அழகிய பட்டு புடவை அதில் இருந்தது. அதை அவள் ஆசையாக தொட்டு பார்க்க,

உனக்காக நான் அன்னைக்கே வாங்கிட்டேன். நீதான் கவனிக்காம சோக கீதம் வாசிச்சுட்டு இருந்த” என்று சொல்ல, அவளோ அவனை செல்லமாக முறைத்தாள்.

“சரி சரி லேட் ஆகிடுச்சு புடவையை கட்டு சீக்கிரம்…” என்றவன் அவளை அவசரப்படுத்த அவளோ “சீக்கிரம்…. சீக்கிரம்னா…. எப்படி கட்டுறதாம் வெளிய போங்க” என்று சொல்ல,

அவனோ “ரொம்ப பண்ணாத டாக்டரே… நான் பார்க்காத எதுவும் உன்கிட்ட இல்ல. ஒழுங்கா கட்டு” என்று கால் மேல் கால் போட்டு அமர, அவளோ முணு முணுத்து கொண்டே புடவையை கட்டி முடித்தாள்.

ஒருவாரு மூவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து மண்டபத்துக்கு வந்தனர்.

கணவனோடு வரும் மகள் முகத்தில் இருக்கும் பூரிப்பையும், சந்தோஷத்தையும் கண்டு வரவேற்பில் நின்றிருந்த மஞ்சு, குமார் இருவருக்கும் மனம் நிறைந்தது. அந்த சந்தோஷத்தில் குமார் “வாங்க மாப்பிள்ளை” என்று வாய் நிறைய பல்லாக கூப்பிட, அவரிடம் “ஈஈஈ….” என்று இளித்து வைத்தவன் மனைவியிடம் “அந்த மனுஷனுக்கு இப்போதான் நான் மாப்பிள்ளைன்னு தெரியுதா. ரெண்டு வருஷமா வெரச்சுட்டு சுத்துனாரு” என்று கோபமாக சொல்ல,

சைந்துவோ “அது உங்க மேலான கோபம் இல்ல. என் மேலான பாசம். சும்மா அவரை குறை சொல்லாதீங்க”

“இதுக்கும் சேர்த்து சிறப்பா கவனிக்கணும் புரிஞ்சுதா. நைட்டு பாப்பாவ சீக்கிரம் தூங்க வச்சிடு” என்க, முகம் சிவந்தவள் “போங்க போலிஸ்கார் போய் வருண் ரெடி ஆகிட்டாரா பாருங்க. என் பின்னாடியே சுத்தாதீங்க. யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க” என்று கூற,

“யாரு என்ன நினைப்பா. என் பொண்டாட்டி பின்னாடி நான் சுத்துறேன். எவன் கேட்பானு நான் பாக்குறேன்” என்று சட்டை கையை மடித்துவிட்டவனை ஓரமாக தள்ளி சென்றவள் அவன் இதழில் மென்மையாக தன் இதழை ஒத்தி எடுத்து “நல்ல போலீஸ்கார்ல. இப்போ போய் வேற வேலை இருந்தா பாப்பீங்கல்லாம். நைட்டு உங்க பொண்டாட்டி உங்கள கவனிப்பாளாம் ம்ம்ம்….” என்று நாணத்தில் தலை குனிந்தவாறு கேட்க,

அவனும் “ம்ம்ம்ம்ம்……” என்று கேட்டவாறு குனிந்திருந்தவள் முகத்தை தானும் சிரிப்புடன் குனிந்து பார்க்க, அவளோ “ச்சீ…. போங்க போலிஸ்கார்…” என்றுவிட்டு ஓடிவிட்டாள்.

வருண் வெள்ளை வேஷ்டி சட்டையில் ஆணழகனாக மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்ல, அவன் கண்களோ அவனவளை ஆவலாக எதிர் பார்த்து கொண்டிருந்தது.

தாமரை நிற பட்டில் ஒயிலாக நடந்து வந்தவளின் அழகில் சொக்கி போனவன் அவளையே பார்த்திருக்க, அவன் தங்கை வந்து அவன் முகத்தில் இருக்கும் வியர்வையை துடைப்பது போல் “டேய் அண்ணா க்ளோஸ் த டோர்டா. மானத்தை வாங்காத”என்று சொல்ல,

தங்கையிடம் “ஈஈஈஈ…” என்று இளித்தவன் பவி பக்கத்தில் அமர்ந்தவுடன் அவள் புறம் சாய்ந்து “செம்மையா இருக்கடி பப்ளி அப்படியே உன் கன்னத்தை கடிக்கணும் போல இருக்கு” என்று சொல்ல, அவளோ வெட்கத்தில் நிமிற முடியாமல் தலை குனிந்து கொண்டாள்.

இரு மகள்களின் முகத்தில் இருக்கும் சிரிப்பு, பெற்றோருக்கு அளவில்லாத ஆனந்தத்தை கொடுக்க நிம்மதியாக உணர்ந்தனர்.

நல்ல சுபமுகூர்த்த நேரத்தில் வருண் பவி கழுத்தில் மங்கள நாணை பூட்டி தன்னவளாக மாற்றி கொண்டான். அப்போதே யாரையும் கருத்தில் கொள்ளாமல் அவள் கன்னத்தில் கணவனாக தன் முதல் முத்திரையை பதிக்க, அங்கிருந்த இளவட்டங்கள் அனைத்தும் “ஹோ….” என்று கத்தி ஆரப்பரித்தனர்.

சைந்து அப்போது கணவனை நிமிர்ந்து பார்க்க, அவனும் அவளைதான் பார்த்து கொண்டிருந்தான். இவர்களது திருமணத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நினைவில் வர, கண்கள் கலங்கி போனது. அதை பார்த்த சூர்யா வேகமாக மனைவி அருகில் சென்று நின்று கொண்டு அப்போது மணமேடையில் எப்படி கைகளை அழுத்தி தைரியம் கொடுத்தானோ, இப்போதும் அதே போல செய்ய, அவன் தோளில் தானாக சாய்ந்து கொண்டாள் அவன் மனைவி.

திருமணம் முடிந்து சடங்குகள் அனைத்தும் முடிய, மண மக்கள் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். பால், பழம் சாப்பிடுவது என அனைத்து சம்பிரதாயங்கலும் முடிந்து அன்றைய இரவும் அழகாக வந்து சேர்ந்தது.

Advertisement