சூர்யா வேலை இருக்கிறது என்று சொல்ல, சைந்து மூக்கால் அழுதும் வேலைக்கு ஆகாமல், மகளை தூதுவிட்டு வரவைத்துவிட்டாள். வந்தவன் அவர்களை புடவை எடுக்க சொல்லிவிட்டு போனை எடுத்து கொண்டு அமர்ந்ததோடு சரி, இவர்கள் பக்கம் திரும்பவே இல்லை.
பவி, வருண் இருவரும் சேர்ந்து முகூர்த்த புடவை செலக்ட்பண்ண செல்ல, அவர்களை ஏக்கமாக பார்த்த சைந்து, கணவனை பார்க்க, அவனோ போனை பார்த்து கொண்டிருந்தான்.
‘லூசு பய அதை பார்க்க எதுக்குடா கடைக்கு வரணும், வீட்லயே உட்கார்ந்து பார்க்க வேண்டியதுதானே’ என்று கணவனை திட்டியவள், அவனை முறைத்து கொண்டே இருக்க, அவனோ அவளை கண்டுகொள்ளவே இல்லை. அதில் முகம் வாடி போனவள் தனக்கு புடவை எடுக்காமலேயே வந்துவிட்டாள். சூர்யாவும் கண்டுகொள்ளவில்லை.
சைந்து பலமுறை மன்னிப்பு கேட்டுவிட்டாள், ஆனால் சூர்யா இறங்கி வருவது போல் தெரியவில்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள். அப்போது அவளிடம் வந்த பவி “என்ன சைந்து ஏன் டல்லாவே இருக்க. உன் முகமே சரியில்ல. என்னத்தான்டி உன் பிரச்சனை. சொன்னாதானே தெரியும்.
ஒருவேலை இன்னும் பயம் பயம்னு சொல்லிட்டு இருக்கியா. ஏன் இப்படி இருக்க, போலீஸ்னா ஏன் இப்படி பயந்து சாகுற, அவங்க நாட்டுக்காக ஒரு நாள் கூட லீவ் எடுக்காம உழைக்கறவங்க” என்று மேலும் பேச வந்தவள் முன் கை நீட்டி தடுத்தவள்.
“உன் பிரசங்கத்துக்கு இப்போ அவசியம் இல்ல. உன் மாமாதான் என் மேல கோவப்பட்டுக்கிட்டு முறுக்கிக்கிட்டு இருக்காரு. போய் அவருகிட்ட பேசு. இவ பேசறதை கேட்க ஒரு காது கிடைச்சுருச்சுனு வந்துட்டா.. வரிஞ்சி கட்டிக்கிட்டு போடி” என்றுவிட்டு போக, பவி முகம் யோசனையானது.
இருவருக்கும் என்ன பிரச்சனை என்று யாருக்கும் இன்னும் தெரியவில்லை என்பதால், அக்கா பிரிந்து சென்றதால் சூர்யா கோபமாக இருக்கிறான் என்று நினைத்தவள் அவனிடம் பேச சென்றாள்.
பவியை கண்டு புருவம் உயர்த்திய சூர்யா “என்ன உன் அக்கா தூது அனுப்புனாளா. அது எங்க பிரச்சனை நாங்க பேசிக்கறோம். நீ போ” என்க,
பவி பெரு மூச்சுடன் “உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு எனக்கு தெரியல, ஆனா எதுவா இருந்தாலும் மன்னிச்சிடுங்க. என் அக்கா பாவம் ரொம்ப ஹார்ஷா பேசுனாலே அழுதுடுவா. எப்போவும் ஜாலியா சுத்தி வரவா. இப்போ எல்லாம் ரொம்ப சோகமா இருக்கா. அவளை இப்படி பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு. உங்களுக்கு நான் சொல்லணும்னு இல்ல. பாத்துக்கோங்க” என்று செல்ல,
சூர்யாவோ “என்னடா அக்கா, தங்கச்சி ரெண்டு பேரும் ஒரே டையலாக்க காபி பேஸ்ட் பண்ணிட்டு போறாங்க. இவங்களுக்கு பேச தெரியலையா. இல்ல, இந்த ரைட்டர் எழுத வார்த்தை இல்லாம திண்டாடுதா (ஆமாங்க அதுதாங்க உண்மை. அக்கா, தங்கச்சி ரெண்டும் பாச பயிர் வளக்கறேன்னு என் உசுர எடுக்கறாங்கடா போலீசு) என்று யோசித்தவன் பின் தோள்களை குலுக்கி கொண்டு சென்றுவிட்டான்.
மறுநாள் மஞ்சுவை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று சொல்ல, வருண் வழக்கம் போல் தாடியும், மீசையுமாக ஹாஸ்பிடல் வந்துவிட்டான்.
சைந்து சூர்யாவோடு ஏதோ நினைவாக வர, அவளை ஓர கண்ணால் கவனித்து கொண்டே வந்தான் சூர்யா. அப்போது யாரும் எதிர்பார்க்கா வண்ணம் எங்கிருந்தோ வந்த ஒருவன் சைந்து கழுத்தில் கத்தியை வைத்து நிற்க, அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.
சைந்து பயந்து போய் நின்றிருந்தவள் கணவனை பார்க்க, அவனோ அவர்களைதான் அழுத்தமாக பார்த்து கொண்டு நின்றிருந்தான்.
“இங்க பாரு போலீசு ஒழுங்கா என்னை தப்பிக்கவிட சொல்லு, இல்ல இந்த பொண்ண குத்திடுவேன்” என்றான் அவனை துரத்தி வந்த காவலர்களை பார்த்து.
உலகில் உள்ள அனைவரும் தங்கள் உயிருக்காக பயப்படுவார்கள். ஆனால் தன்னவன் தன்னை விலக்கி வைக்கவும் இனி இந்த உயிர் இருந்தால் என்ன போனால்தான் என்ன என்று நினைத்தவள் கண்கள் அவள் கணவனைவிட்டு நகறவில்லை.
சூர்யா வெளியில் தனக்கு கவலையில்லை என்பது போல் காட்டி கொண்டாலும், மனதில் தன்னவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று வேதனைப்பட்டான். ஆனாலும், அவள் எப்படி தன்னை இன்னொருவளுக்கு விட்டு கொடுத்து செல்லலாம் என்ற கோபம் கவலையை வெளிகாட்ட விடாமல் செய்ய, மனதிலேயே அவளை எப்படி காப்பாற்றுவது என்று யோசித்து கொண்டு இருந்தான்.
அப்போது சைந்து கழுத்தில் கத்தி வைத்திருந்தவனை கண்ட காவல் அதிகாரி ஒருவர் “டேய் ஒழுங்கா அந்த பொண்ண விடு. எதா இருந்தாலும் பேசிக்கலாம். அந்த பொண்ணு யாருனு வேற தெரியல”
“இந்த பொண்ணு யாரா இருந்தா எனக்கென்ன. நான் இப்போ தப்பிக்கணும். அதுக்கு இந்த பொண்ணுதான் வழி. இவளை விட்டுட்டா என்னை ஸ்டேஷன்ல வச்சு மொத்து மொத்துனு மொத்தலாம்னு பார்க்குறீங்களா” என்று சொல்ல,
சைந்துவோ அமைதியாக அவள் கணவனைதான் பார்த்து கொண்டிருந்தாள்.
ரவுடியோ கடுப்பாக “ஏம்மா பொண்ணு. என்ன நீப்பாட்டுக்கு அமைதியா இருக்க. ஒழுங்கா ஐயோ…. அம்மா…. என்ன காப்பாத்துங்க….சார்….என்னை காப்பாத்துங்கனு அழு. அப்போதான் அந்த போலீஸ்காரங்க டக்குனு ஒரு முடிவுக்கு வருவாங்க”என்றான்.
சைந்தவியோ வாழணும்னு ஆசை இருக்கவங்கதான் அழுவாங்க. எனக்கு அப்படி ஆசை இல்லை. நீ என்ன வேணா பண்ணிக்கோ”
“ஏய் பொண்ணு எந்த நேரத்துல தத்துவம் பேசணும்னு உனக்கு விவஸ்தை இல்லை. ஒழுங்கா அழு”
“முடியாது போடா. சார் என்ன சார் பார்த்துட்டு இருக்கீங்க குறைக்கற நாய் கடிக்காது சார். இவன் எல்லாம் என்னை ஒன்னும் செய்யமாட்டான் வாங்க சார்”
“ஏய் பொண்ணு என்ன கொழுப்பா ஆட்டு கழுத்தை அறுக்கற மாதிரி அறுத்து போட்டுருவேன் பார்த்துக்கோ. வாய மூடு”
“ஹோ…. ஆடு வெட்டறவனாடா நீ. கிலோ இப்போ எவ்ளோ போகுது. ஆட்டு கறி வித்தே பணக்காரன் ஆகியிருப்பியே நீ. சார். முதல்ல இவன் வீட்டுக்கு ரெய்டு போங்க சார். நிறைய பணம் வச்சுருப்பான்”
“எம்மா கொஞ்ச நேரம் சும்மா இரும்மா நீ”.
“முடியாதுடா….. நான் ஏன்டா சும்மா இருக்கணும். வாங்க சார் புடிங்க சார் இவன பிடிச்சு உள்ள போடுங்க சார்” என்று கொஞ்சமும் பயம் இல்லாமல் வாயடிக்க,
அவனோ “எம்மா அது வாயா என்ன. கொஞ்ச நேரமாவது வாய மூடற. உன்னை எல்லாம் எவன் கட்டி மேய்க்க போறானோ. அவனை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு” என்று சொல்ல,
அதில் கடுப்பான சைந்து அவன் கையை பிடித்து நன்றாக கடித்து காலை மடக்கி அவன் உயிர் நாடியில் ஒரு எத்து விட, “ஐயோ…. போச்சே….” என்று அலறி மடங்கி கீழே விழுந்தான் அந்த ரவுடி.
ஆமா, என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. இந்த பீஸ்,கத்தி வைக்க ஏத்த பீஸ்னு நெத்தில எழுதி ஒட்டி வச்சுருக்கனா என்ன. ஆளாளுக்கு வந்து என் கழுத்துலயே கத்தி வைக்குறீங்க. இனி எந்த பொண்ணு கழுத்துலயாவது கத்தி வைப்பியா…. வைப்பியா என்று அவன் மர்ம பிரதேசத்தில் மிதிக்க,
ரவுடியோ அங்கிருந்த போலீசை பார்த்து “என்ன சார் பார்த்துட்டு இருக்கீங்க. நீங்களே கூட்டிட்டு போய் அடிங்க. இந்த பொண்ணு அடி தாங்க முடியல காப்பாத்துங்க சார்” என்று அலற,
“அங்க என்னடா பேச்சு. என் கழுத்துல தானே கத்தி வச்ச அப்போ நான்தான் அடிப்பேன்” என்று மேலும் அடிக்க,
சூர்யா சிரிப்புடன் மனைவி அருகில் சென்றவன் “ஏய் போலி டாக்டரே அவனை விடுடி செத்துற போறான். நீ பண்ண வேலைல அவனுக்கு அடுத்த சந்ததி இருக்குமானே டவுட்டு” என்று சொல்ல,
சைந்தவியோ “உங்களுக்கு டவுட்டே வேண்டாம் போலிஸ்கார். கன்பார்ம். இவனோட இவன் சந்ததி முடிஞ்சு” என்றவள் அப்போதுதான் உணர்ந்தாள் சூர்யா பழைய மாதிரி அவளை டாக்டர் என்று அழைத்ததை.
உடனே அந்த ரவுடியை பார்த்து சிரித்தவள் “டேய் ரவுடி உன்னால எனக்கு ஒரு நல்லது நடந்திருக்குடா. அதனால சொல்றேன் கேட்டுக்கோ. சீக்கிரம் ஹாஸ்பிடல் போனா. உனக்கு சந்ததி வர வாய்ப்புண்டு” என்றுவிட்டு சூர்யாவிடம் திரும்பியவள்.
“என்னை மன்னிச்சுட்டீங்களா போலிஸ்கார்” என்க, அவளை இழுத்து அணைத்தவன் “உன்னைவிட்டு என்னாலயும், என்னைவிட்டு உன்னாலயும் இருக்க முடியாதுங்கற விஷயம் இந்த பிரிவுதான் நமக்கு கத்து குடுத்துருக்கு. இனி இதுமாதிரி கேஷோநட் மாதிரி பண்ணாம, எதா இருந்தாலும் என்கிட்ட கேளு. சரியா,
என் மேலயும் தப்பிருக்கு. நான் இந்த விஷயத்தை முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருக்கணும், முடிஞ்சு போனது. எதுக்கு. அதுமட்டும், இல்லாம நான் இதை குடுக்கவே இல்லை. குடுத்திருந்தாதான் ரொம்ப கஷ்டமா ஆகியிருக்கும். தேவையில்லாம ஒரு பொண்ணு மனசுல ஆசைய வளர்த்துட்டோமோனு.
சரி போனது போகட்டும் இனி நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது. எதுவா இருந்தாலும் உட்கார்ந்து பேசி ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பிரச்சனைய சால்வ் பண்ணலாம் ஓகேவா” என்க.