Advertisement

உண்மைய ஓபனா சொல்லனும்னா அன்னைக்கு நீ பேசுன ஒன்னு ரெண்டு வார்த்தைகள் என்னை தூங்க விடாம, வேலை செய்ய விடாம டார்ச்சர் பண்ணிட்டே இருந்துச்சு. அதுல நீ சொன்ன முக்கியமான விஷயம் ‘உன்ன காப்பத்ததான் வந்தேன். நீ யாருனு தெரியாம வந்துட்டேன் என்னை விடுடான்னு சொன்னது. அந்த வார்த்தை என்னை எவ்வளவு தொல்லை பண்ணுச்சுனு உனக்கு தெரியாது ”

யாருனு தெரியாத ஒருத்தருக்கு உதவனும்னு நினைச்ச உன்னோட அந்த குணம் என்னை உன்கிட்ட இழுத்துச்சு.

எனக்குதான் உன்னை தெரியாது. ஆனா.. உனக்கு என்னை நல்லா தெரியும். நீ நினைச்சிருந்தா என் முன்னாடி வந்து நின்னு கேள்வி கேட்டிருக்கலாம். ஆனா…வரல. உன்னோட அந்த சுய கவுரவம் எனக்கு பிடிச்சது.

ஆஃப்கோர்ஸ் நமக்குள்ள நடந்த விஷயங்கள் இந்த கல்யாணத்துக்கு ஒரு காரணம்தானே தவிர, அது மட்டுமே காரணம் இல்ல.

என்ன? எப்படி? எங்க? அப்படினு பல கேள்விகளுக்கு பதில் கிடைப்பது இல்லை. அதுமாதிரிதான் என் வாழ்க்கைல நீ வந்துட்ட. இனி நான் விடறதா இல்லை. நீயே நினைச்சாலும். யோசிச்சு சொல்லு” என்க,

பவியோ அவனையே திகைத்து போய் பார்த்திருந்தாள். என்ன மாதிரியான மனிதன் இவன் என்று.

“பப்ளி கண்ணாலயே மாமாவை சாப்பிடற. நாம வேணா மேல ரூம்க்கு போகலாமா” என்று வேண்டுமென்றே அவள் மனநிலையை மாற்ற வேண்டுமென்று கூற,

பவி அவனை முறைக்க சும்மா பேசதான்மா எதுக்கு முறைக்கற. சரி வேண்டான்னா விடு” என்று விளையாட்டாக பேச,

இப்போது பவி பேச ஆரம்பித்தாள். நீங்க சொல்ல வேண்டியதை சொல்லி முடிச்சுட்டீங்க. இப்போ நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன் என்று சூர்யா மீதான தன் கல்லூரி கால காதல். பிறகும் அவனிடம் காதலை சொன்னது. சைந்து, சூர்யா திருமணம் என அனைத்தையும் கூறியவள்.

மாமாவ என்னால ஈஸியா அக்கா கணவரா ஏத்துக்க முடியாம இருந்துச்சு. ஆனா அது எல்லாம் இங்க இருக்க வரைதான். காஷ்மீர் போன பிறகு நானே கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்திக்கிட்டேன். இ…இ…இப்போ என் மனசுல அவர் இல்ல. இதை நீங்க நம்புறீங்களா” என்று கேட்க,

வருணோ “ஏன் பவி உன்னோட அக்கா. உங்களை பிரிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சுனு சொன்னாங்க. அந்த நாட்கல்ல என்னைக்காவது. ஒரு நொடி ஒரு நிமிஷம் அவரை கல்யாணம் செய்துக்கலாம்னு உனக்கு தோணியிருக்கா” என்று கேட்க,

அவளோ அஷ்ட கோணலாக முகத்தை மாற்றியவள் “என்ன பேசுறீங்க வருண் அவர் என் அக்கா கணவர்”

“ஹோ….. அப்படியா சரி. இப்போ பதில் சொல்லுங்க. உங்க அக்கா கல்யாணத்துக்கு முன்னாடி. நீ லவ் பண்ணுனதா சொல்றப்ப, நாம ரெண்டு பேர் இருந்த நெருக்கம் மாதிரி என்னைக்காவது அவரை நினைச்சு பார்த்திருகீயா”

“ஷட் அப்…”வருண் அசிங்கமா பேசாதீங்க.

“என்னமா நீ. காதலுக்கு அப்புறம் கல்யாணம்னா, கல்யாணத்துக்கு அப்புறம் காமமும் ஒரு பார்ட்மா. மேரேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் பொம்மை மாதிரி உட்கார வச்சு பார்த்துட்டு மட்டும் இருக்க முடியுமா” என்று கேட்க,

பவி பேச்சற்று அமர்ந்திருந்தாள். காக்கி உடையில் ஹைட்டும், வெயிட்டுமாக தன் கண் எதிரில் இருப்பவனை பார்த்து வந்த ஈர்ப்பை கல்லூரி காலத்தில் இருந்த பவி காதல் என்று நினைத்து. திருமணம் வரை யோசித்தவள் அதன் பின் யோசிக்கவில்லை.

வருண் சொன்னது போல், சூர்யாவை நான் உண்மையாக நேசிக்கவில்லையோ என்ற குழப்பமே பவிக்கு வந்துவிட்டது.

பவி மனம் கலங்கிய குட்டையாக இருக்க, வருண் பேசி பேசியே அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டான்.

“நாம கல்யாணம் செய்துக்கலாம். ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்று கேட்க,

வருணும் “தாராளமா எடுத்துக்கோ எப்படியும், நாம மேரேஜ் நடக்க ரெண்டு வாரம் கேப் இருக்கு. நல்லா பொறுமையா யோசி. இப்போ நாம கிளம்பலாமா” என்று எழுந்தான்.

அப்போது அவர்கள் டேபிளுக்கு ஒரு பில் வர, வருணோ அந்த சர்வரிடம் “சார் நாங்க ஒன்னுமே சாப்பிடல. உங்க ஹோட்டல்ல வந்து சும்மா உட்கார்ந்தா கூடவா பில் போடுவீங்க” என்க,

சர்வரோ,“இல்ல சார். இது நீங்க சாப்பிட்டதுக்கான பில் இல்ல. அதோ அங்க இருக்காருல்ல,அவரு சாப்பிட்ட பில்லு. அப்புறம் அவங்க சாப்பிட்ட பில்லு எல்லாத்தையும் உங்ககிட்டதான் குடுக்க சொன்னாங்க”என்றான்.

வருணோ கடுப்பாகி “எவன்டா அது என் தலைல மிளகாய் அரைக்கிறது” என்றவாறு எட்டி பார்க்க,

ரகு ஒரு பக்கம் பெரிய ஏப்பம் விட்டவாறு நின்றிருக்க, சூர்யாவும், சைந்துவும் ஒரு பக்கம் நின்றிருந்தனர். அவர்களை பார்த்து தலையை இரு பக்கமும் ஆட்டியவன் “அவரு கடமையை கண்டு நான் வியக்கேன். உன்னை என்ன நான் முழுங்கிடுவனா என்ன. இப்படி பின்னாடியே வந்துட்டாரு” என்று கேட்க ,

பவி சிரித்தாள். அவளுக்கு தெரியும் சைந்தவிதான் சூர்யாவை இங்கு அழைத்து வந்திருப்பாள் என்று.

ரகு, “பாஸ் உங்க கல்யாண ட்ரீட் செம்ம. தேங்க் யூ பாஸ்” என்று சிரிக்க, அவனை முறைத்த வருண் “டேய் பட்டர் ட்ரீட்னா நான் வைக்கணும். நீயா வாங்கி கொட்டிக்கிட்டு என்கிட்ட பில்ல தள்றது இல்ல”.

“ஹோ…. இப்போ அப்படி மாத்திட்டாங்களா. சரி பாஸ் நீங்க வருத்தபடாதீங்க. நாளைக்கு நீங்க வாங்கி தாங்க நான் சாப்பிடறேன்” என்று சொல்ல, வருண் பல்லை கடித்தான்.

“ரகு இங்க வாயேன்”

“இல்ல பாஸ். பரவால்ல இருக்கட்டும். அங்க இருந்தே சொல்லுங்க” என்றவன் பம்மியவாறு சொல்ல,

“உஷார் ஆகிட்ட…வீட்டுக்கு வா உனக்கு இருக்கு” என்று சொல்லி கொண்டிருக்க, அவர்கள் அருகில் வந்தான் சூர்யா.

“என்ன வருண் பேச வேண்டியது எல்லாம் பேசிட்டீங்களா. நாங்க இப்போ கிளம்பறோம்” என்றுவிட்டு சைந்தவிக்கு கண்ணை காட்டிவிட்டு முன்னால் செல்ல,

பவி வருணிடம் தலையசைத்து கிளம்பிவிட்டான். சைந்துவும் “வரேங்க….” என்று சாம்பிரதாயமாக சொல்ல,

வருணோ கிண்டலாக “வாங்க. எங்க போகலாம்”என்க,

சைந்துவோ என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.

“ஏங்க ஹாஸ்பிடல்ல நான் வரும்போது. தாலி கட்ட சொன்னீங்களே. ஏங்க என்கிட்டே குடுக்கவே இல்ல. நான் கட்டறேன்னு சொன்னேன்ல” என்று அப்பாவி போல் முகம் வைத்து கேட்க,

“நான்கூட லாடம் நல்லா கட்டுவேன் மிஸ்டர் வருண். வர்றீங்களா” என்றவாறு வந்தான் சூர்யா.

“இதோ வந்துட்டாருல்ல பாடிகாட்டு. ஏன் சார் என்ன இருந்தாலும் அவங்க என் கொழுந்தியா. அவங்ககிட்ட நான் பேச கூடாதா”.

“கூடாது. ஷி இஸ் மைன்” என்றவன், அவள் கை பிடித்து அழைத்து சென்றுவிட்டான். அவனது பொறாமை கூட அழகுதான்.

மஞ்சு ஆப்பரேசன் நல்லபடியாக நடக்க, வருண், பவி திருமணம் சிம்பிளாக திருப்பதி கோவிலில் வைத்துவிட்டு,ரிசப்ஷன் பெரிதாக சென்னையில் வைத்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி வேலைகள் ஒருபக்கம் நடக்க, சூர்யா, சைந்து வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.

சூர்யா காலை எழுந்தவுடன் மகளை கொஞ்சி, அவளையும் தூக்கி வைத்து கொண்டே, ஜாக்கிங் செல்வான். மனைவி என்றொருவள் இருப்பதையே மறந்தது போல் நடந்து கொள்ள துவங்கினான்.

காலை வேலைக்கு செல்வது. திருமண வேலைகளை மாலை பார்ப்பது. இரவு மகளை தூக்கி வைத்து கொண்டே இருப்பது என்று அவன் நாட்கள் செல்ல, சைந்தவிக்குதான் அவனது பாரமுகம் மனதை வலிக்க செய்ய, இவளே வழிய சென்று எதாவது பேசினாலும் கண்டு கொள்ளாமல் சென்றுவிடுவான்.

பொறுத்து பொறுத்து போன பவி கணவனின் செய்கையில் கடுப்பாகி இன்னைக்கு வரட்டும் பேசிக்கறேன் என்ற முடிவோடு, மகளை விரைவில் தூங்க வைத்தவள், கணவனின் வருகைக்கு காத்திருக்க துவங்கினாள்.

சைந்து என்ன கேட்க போகிறாள். அதற்கு சூர்யாவின் பதில் என்னவாக இருக்கும். பவி, வருண் திருமணம் நடக்குமா அனைத்தையும் அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.

Advertisement