Advertisement

ரெஸ்ட் ரூமின் ஓரமாக இருட்டாக இருந்த ஒரு இடத்தில் இருவர் ரகசிய குரலில் பேசி கொண்டிருப்பதை கவனித்தவள் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை நெருங்கி கவனிக்க துவங்கினாள் .

“ஆமா. இங்கயாவது ஒழுங்கா வேலைய முடிங்கடானு பாஸ் நம்மள கழுவி ஊத்தராரு. அந்த வருண் தங்கியிருக்க ரூம்கிட்ட இருக்க சிசிடிவி எல்லாம் நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி கட்பண்ண சொல்லிட்டேன். கடத்தும் போது அமைதியா இருக்க, பால்ல போதை மருந்து கலக்க சொல்லிட்டேன் சோ போறோம் தூக்கறோம். கவனம்” என்று பேசி கொண்டே அவன் இருக்கும் அறையின் எண், கடத்தும் நேரம் அனைத்தும் பேசி கொண்டிருந்தனர்.

பவிக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. இருந்தாலும் யார் என்றே தெரியாத அந்த நபரை காப்பாற்ற எண்ணி தள்ளாடி கொண்டே வெளியில் வர, அவளுக்கு மருந்து கொடுத்த இருவரும் வந்து அவளை பிடித்தனர்.

பவியோ சிரமப்பட்டு தன்னை சமாளித்து கராத்தேயில் கற்று கொண்ட மொத்த வித்தையையும் அவர்களிடம் காட்ட, வலி தாங்க முடியாமல் அவர்கள் ஓடிவிட்டனர்.

ஒருவழியாக அவர்களை சமாளித்து அந்த கடத்தல்காரர்கள் சொன்ன அறை எண்ணை கண்டுபிடித்து உள்ளே செல்ல அங்கு இருந்த வருணை கண்டு அதிர்ந்து போனாள்.

‘இவனா…. இவனுக்கு யாரு எதிரிங்க’என்று யோசித்தவள் பின் அவனிடமே கேட்க எண்ணி அருகில் சென்று அழைக்க, அசைவே இல்லாமல் படுத்திருந்தான்.

‘என்ன வர்ற ஆபத்து தெரியாம இப்படி தூங்கறான்’ என்று நினைத்தவள் ஆணவன் தோள்களை பிடித்து அசைக்க, அவனோ ஏதோ உளறி கொண்டும் காற்றில் எதையோ தேடி கைகளை அலையவிட்டு கொண்டும் இருந்தான்.

‘என்ன இவன் இப்படி இருக்கான்’ என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது அவனுக்கு போதை மருந்து கொடுத்திருப்பதாக அவர்கள் சொன்ன விஷயம். இவருக்கு மருந்தை குடுத்துட்டாங்கன்னா அவங்க எப்போ வேணா இங்க வரலாம். முதல்ல இந்த இடத்தில் இருந்து அவரை கூட்டிட்டு போய் வேற ரூம்ல படுக்க போட்டுடு நாம நம்ம ரூம்க்கு போய்டலாம் என்று நினைத்தவள் அவனை எழுப்ப பார்க்க முடியவில்லை.

‘சுத்தம் இவரை அசைக்க கூட முடியல. நம்மாலையும் முடியல அநேகமா அடி வாங்கிட்டு போன நாய்ங்க ஜூஸ்ல ஏதோ கலந்திருப்பான்க போல, நல்ல வேலை அதை முழுசா குடிக்கல என்று நினைத்தவாறே வருணை இழுத்து, அவன் கைகளை தூக்கி தன் தோளில் போட்டவள் தடுமாறியபடி நடக்க ஆரம்பித்தாள்.

வருண் தங்கியிருந்த அறையைவிட்டு வெளியில் வந்த பவி அந்த காரிடாரை சுற்றி கண்களை ஓட விட, அவர்கள் நிற்கும் அறையில் இருந்து மூன்று அறை தள்ளி இருந்த ரூமை சுத்தம் செய்துவிட்டு சர்வண்ட்ஸ் செல்வதை பார்த்து அங்கு அவனை தங்க வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அந்த அறை நோக்கி சென்றாள்.

வருண்,“ஹேய் பப்ளிமாஸ் யாருடி நீ. என்ன எங்க கூட்டி போற. ஏன் தடுமாறி நடக்கற சரக்கடுச்சிருக்கியா? பொண்ணுங்க எல்லாம் குடிக்க கூடாது தப்பு” என்க,

ஏற்கனவே அவனை இழுக்க முடியாமல் இழுத்து சென்ற பவிக்கு அது கோபத்தை உருவாக்கியது. “என்ன ஆக்டர் சார் குடிக்கறதே தப்புதான். இதுல பொண்ணு குடிச்சா என்ன பையன் குடிச்சா என்ன” என்று வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு செல்வது போல் கேட்க,

அவனோ “சரிதான் யாரு குடிச்சாலும் தப்புதான். ஆமா இப்போ நாம எங்க போறோம். ஏன் பாதைய வலைஞ்சு வலைஞ்சு கட்டியிருக்காங்க” என்று பேசி கொண்டே வர, பவிக்கு அவள் குடித்த மருந்து வேலையை காட்ட துவங்கியது.

‘ஹையோ நடக்கவே முடியல இந்த அமுல் பேபி வேற நொய் நொய்னு பேசி டார்ச்சர் பண்றானே’ என்று நினைத்து கொண்டே நடந்தாள்.

ஒருவழியாக அந்த அறையின் அருகில் வந்து நின்றவள் அங்கிருந்த சிஸ்டமேட்டிக் டோரை கண்டு நிம்மதி மூச்சுவிட்டவள். தன் போனை எடுத்து ஹோட்டல் சர்வரை ஹேக் செய்து டோரை ஓபன் செய்தவள் அறையின் உள்ளே வந்து மீண்டும் லாக் செய்தாள்.

பவிக்குமே மயக்கம் அதோ இதோ என்று வந்துவிட,பெட்டில் அவனுடன் சேர்ந்து விழுந்தாள். பெட்டில் பவி கீழும் அவன் மேலும் என்ற நிலையில் விழுந்து கிடக்க, பெண்ணவள் எச்சரிக்கை உணர்வோடு அவனை விலக்க பார்க்க, அவனோ முதன் முதலில் கண்ட பெண் உடலில் தன்னை மறந்து மயங்கி பேதையவளினுள் மூழ்க துவங்கினான்.

வருண் போதையின் பிடியில் பெண் உடலில் அத்துமீற, மயக்க நிலையிலும் அவன் கைகளை தட்டிவிட்டாள் பவி. ஆனால் ஆணவனின் வேகமும், மோகமும் அதிகமாக அவளால் அவன் செய்கைகளை தடுக்க முடியவில்லை இருந்தாலும் புலம்பலாக அவள் எண்ணத்தை மெதுவான குரலில் வெளிப்படுத்தினாள்.

“டேய் அமுல்பேபி ப்ளீஸ் என்னை விட்டுடுடா. உன்னை காப்பத்ததானே வந்தேன். நான் வரலைனா உன்னை கடத்திட்டு போய் இருப்பாங்க. அவங்க பேசினதை கேட்டுதான் வந்தேன். என்னை விடு…. விடுடா….” என்று புலம்ப. அவை எதுவும் வருணின் காதில் ஏறவில்லை.

ஆணவனின் கரங்கள் அவள் பெண்மையை களவாட துவங்க, பவி மயக்கத்திலேயே தவித்து புலம்பி தன் பெண்மையை காப்பாற்ற முடியாமல் கண்ணீர்விட்டாள்.

“ஹக்……. டேய் தாடிமாடு வலிக்குது…. விடுடா….” என்றவள் குரலில் மயங்கியவன் “ஐ நோ பட் ஐ கான்ட்” என்று முழுவதுமாக அவளை கொள்ளையடித்தவன், இரவு பல முறை அவளை நாடினான்.

காலை வெகுநேரம் கடந்து மயக்கம் கலைந்து எழுந்த பவிக்கு வயிற்றில் சுளிர் என்ற வலி எழ முகத்தை சுருக்கினாள்.‘என்ன இப்படி வலிக்குது’ என்றவள் உடலும் வலிக்க ‘என்னாச்சு எனக்கு’ என்று கண்களை தேய்த்தவாறு விழித்தவள் தான் இருக்கும் நிலை கண்டு திகைத்து போனாள்.

“ஹோ…காட்….” என்று தலையில் அடித்து கொண்டவள் போர்வையை இழுத்து தன்னை நன்றாக மூடி கொண்டு, அருகில் பார்க்க, வருண் கிருஷ்ணா நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தான்.

இரவு என்ன நடந்தது என்று யோசித்தவளுக்கு அறைக்கு வரும் வரை நடந்தவை அனைத்தும் தெளிவாகவும், அதற்கு பின் நடந்த நிகழ்வுகள் கலங்களாகவும் நினைவு வர, அதிர்ந்து போனாள்.

பவிக்கு ஏற்கனவே வருணைபற்றி தெரியும். பெண்கள் எப்போதும் அவன் பின்னாடி சுற்றி வருவதால், அவர்களை மதிக்கவே மாட்டான். இப்போது அவனோடு தான் இருந்த விஷயத்தை எப்படி வேண்டுமென்றாலும் சொல்வான். அவ்வளவு ஏன் அவனோடு இருப்பதற்காக பவிதான் போதை மருந்து கொடுத்தாள் என்று கூட சொல்வான் என்று பயந்தவள். வேகமாக எழுந்து தன் உடைகளை பொருக்கி எடுத்து குளியலறை சென்று குளித்துவிட்டு தன் போனை மறக்காமல் எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள்.

வேகமாக வெளியில் வந்தவள் அந்த ஹோட்டலே பர பரப்பாக இருப்பதை பார்த்து புருவம் சுருக்கி என்னவென்று விசாரிக்க, அறையில் இருந்த வருணை காணவில்லை என்றனர். இதுவே இப்போதான் உங்களுக்கு தெரியுதா. உங்க வேகத்தை கண்டு வியக்கேன் என்று தனக்குள் சொல்லி கொண்டவள் முகத்தை தான் அணிந்திருந்த ஷாலால் நன்றாக மூடி கொண்டு ரிசப்ஷன் பக்கம் வர, ரகு யாருடனோ கத்தி கொண்டிருந்தான்.

“ என்ன சார் இது. உங்க ஹோட்டல் ரொம்ப சேப்டினுதான் இங்க வந்தோம். இப்போ ரூம்ல தூங்க போன மனுஷன காணோம்னா என்ன அர்த்தம். சொல்லுங்க. இன்னும் அஞ்சு நிமிஷத்தில சிசிடிவில என்ன பிரச்சனைனு பார்த்து அதை சரிபண்ணுங்க. உங்க சர்வன்ட்ஸ்கிட்ட சொல்லி எல்லா இடத்துலேயும் அவரை தேட சொல்லுங்க” என்றுவிட்டு திரும்ப, கண்கள் மட்டும் தெரிய பவி அங்கு நின்றிருந்தாள்.

ரகு,“யாரும்மா நீ”

பவி, “சார் நீங்க வருண் கிருஷ்ணா சாரை தேடுறீங்களா”என்று கேட்க, அவனும் “ஆமாம்” என்க,

“சார் அவர் ரூம் நம்பர் 206 -ல இருக்காரு. போய் பாருங்க” என்றுவிட்டு நிற்காமல் சென்றுவிட, ரகு உடனே அந்த அறை நோக்கி ஓடினான்.

அறைக்கு சென்று பார்த்தவன் அங்கு வருண் இருந்த நிலை கண்டு திகைத்து அவனை எழுப்ப, பப்ளி என்று முணகி கொண்டே ரகு கையை பிடித்து இழுக்க, அவனோ “ஐயோ…. சார்.. நா…நான்…. ரகு சார்…. நான் அந்த மாதிரி பையன் இல்ல சார். என்னை விட்றுங்க” என்று அலற,

வருண் அப்போதுதான் நன்றாக கண் விழித்து பார்த்தவன் ச்சீ…என்று சொல்லி அவனை உதைத்து தள்ளி “எங்கடா அவ”என்க,

தலையை சொரிந்தவன் “எவ சார்” என்றான்.

உடனே வேகமாக எழுந்தவன் போர்வையை இடுப்பில் சுற்றி கொண்டு அறை முழுதும் தேட, யாரும் இல்லை.

கட்டிலுக்கு அருகில் பவி குளிருக்காக போட்டு வந்த குல்லா மட்டுமே கிடந்தது. அதை எடுத்து பப்ளி என்று மென்மையாக இதழ் பதித்தான். தன் உடலில் அவள் விட்டு சென்ற நக கீரல்களையும், பல் தடத்தையும் கண்டு ரசனையாக சிரித்தவனுக்கு பிறகு அவள் சொன்ன அனைத்தும் நினைவு வர முகம் இறுகியது.

ரகுவிடம் பவி சொன்ன விஷயங்களை சொல்லி . “யார் என்னை கடத்த ட்ரை பண்ணுனாங்கன்னு கண்டுபிடி” என்றுவிட்டு, குளித்து சூட்டிங்க்கு தனியாக கிளம்பியவன் நினைவு முழுதும் இரவு பேதையவள் பேசிய வார்த்தைகளில் சுழன்று கொண்டு இருந்தது. அதே நினைவுகளோடு சென்றவன் எதிரில் வந்த லாரியை கவனிக்காமல் மோத, காற்றில் பறந்து சுழன்று விழுந்த வண்டியில் இருந்து முகம் முழுதும் இரத்தத்துடன் விழுந்தவன் மயங்கும் தருவாயில் இறுதியாக சொன்ன வார்த்தை “லவ் யூ பப்ளி” என்பதே.

வருணை கடத்த சொன்னது யார்? வருண் உயிர் பிழைத்து வந்து அவர்களை கண்டுபிடித்து தண்டிப்பானா?பவி திருமணம் நடக்குமா…சூர்யா சைந்தவியை மன்னிப்பானா அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.

அணைப்பாள்……

Advertisement