Advertisement

நாட்கள் செல்ல செல்ல அவருக்கு பயம் அதிகமாக அதனாலேயே மகளிடம் திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி பிடிவாதம் பிடித்து கொண்டிருந்தார்.

ராதிகாவை சூர்யாவிடம் பேச சொல்லி மஞ்சு சொல்லியிருக்க, முதலில் மறுத்தவர் பின் மகனின் மாற்றத்தை கண்டு வருந்தி சரி பேசி பார்ப்போம் என்று எண்ணி மகனுக்காக காத்திருந்தார்.

இரவு சோர்ந்து போய் தாமதமாக வந்த மகனை கண்டு ராதி கண்கள் கலங்க பார்த்தார். எப்போதும் மாத்திரை போட்டுவிட்டு படுத்துவிடும் தாய் இன்று விழித்திருப்பதை கண்ட சூர்யா “என்னம்மா தூங்காம இருக்கீங்க. என்கிட்ட எதாவது பேசணுமா”,

ராதிகா “உன்னை பார்க்கவே இவ்வளவு நேரம் விழிச்சிருக்க வேண்டியிருக்குப்பா. நீதான் காலைல சீக்கிரம் கிளம்பிடுறியே” என்று குற்றம் சாட்டும் குரலில் கூற, அவனோ மெல்லிய சிரிப்புடன் “கொஞ்சம் வேலை டென்ஷன்மா அதான் லேட் ஆகுது. அதுக்காக தூங்காம இருப்பீங்களா போய் தூங்குங்க. காலைல நான் லேட்டா போனா போதும். அப்போ பேசலாம்” என்று சொல்ல,

மகனின் முகத்தில் இருந்த சோர்வை கண்டு அவரும் “சரிப்பா. காலைல பேசலாம். நீயும் போய் ரெஸ்ட் எடு”என்றுவிட்டு சென்றுவிட்டார்.

சூர்யாவிற்கு தாய் எதைப்பற்றி பேச போகிறார் என்ற யூகம் இருந்தாலும், அதைப்பற்றி யோசிக்க முடியாமல் தூக்கத்திற்கு அவன் கண்கள் கெஞ்ச அப்படியே உறங்கி போனான்.

அடுத்த நாள் காலை எழுந்து வந்த ராதிகா, மகன் சோபாவிலேயே உறங்குவதை கண்டு அதிர்ந்து வேகமாக அவனிடம் சென்று எழுப்ப, அவனோ அவனவளின் நினைப்பில் மூழ்கி விடியற்காலை வேலையில்தான் உறங்க துவங்கியதால், நல்ல உறக்கத்தில் இருந்தான்.

சற்று நேரம் கடந்து தாயின் உளுக்கலில் தூக்கம் கலைந்தவன் “என்னம்மா” என்று புரியாமல் கேட்க,

“ஏன்ப்பா ரூம்ல போய் தூங்காம இங்க படுத்திருக்க” என்றார் கவலையான முகத்தோடு.

“ஒன்னும் இல்லமா கேஸ் சம்பந்தமா ஒரு போன் வந்துச்சு, அவங்ககிட்ட பேசிட்டு இருந்தேன், அப்படியே தூங்கிட்டேன் வேற ஒன்னும் இல்ல. நீங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்கல்ல, பைவ் மினிட்ஸ் நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்று விட்டு தன் அறை நோக்கி சென்று விட்டான்.அவன் செல்வதையே பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராதிகா.

அதே நேரம் சென்னையின் மற்றொரு ஓரத்தில் தன் முன் நின்றிருந்தவனிடன் “அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு ஃபுல்லா ஞாபகம் இல்ல. ஆனா ஒன்னு ரெண்டு விஷயம் ஞாபகம் இருக்கு. உன்கிட்ட வந்து நான் அந்த ரூம்லதான் இருக்கேன்னு சொன்னது யாருனு விசாரிங்க. தெரியலைன்னா அங்க இருக்க சிசிடிவி ஃபுட்டேஜ் எல்லாத்தையும் செக் பண்ணுங்க, எனக்கு கூடிய சீக்கிரம் அந்த ஆள் யாருங்கற விஷயம் தெரிஞ்சாகனும்” என்று அந்த உருவம் கட்டளையிட, அதற்கு எதிரில் நின்றிருந்தவன் ‘சரி’ என்னும் விதமாக தலையாட்டினான்.

மேலும் அவன் தன் முன் நின்ற உருவத்திடம் “ஆனா…. பாஸ் நீங்க இப்போதான் நினைவு திரும்பி ஊருக்கு வந்துருக்கீங்க. அதுக்குள்ள…..”

“ஷட் அப்….. எதை எப்போ பண்ணனும்னு எனக்கு தெரியும். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். நான் சொன்னதை முதல்ல செய்” என்றவன் குரலில் இருந்த கோபத்தில் எதிரில் இருந்தவன் அமைதியாக சென்றுவிட்டான்.

அவன் சென்றவுடன் அமர்ந்திருந்த உருவம் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் மெதுவாக எழுந்து நடக்க துவங்கியது.

தன் அறைக்கு சென்ற அந்த உருவம் படுக்கையில் படுத்து கண்களை மூட, அதன் காதுகளில் ஒரு சில வார்த்தைகள் கிசு கிசுப்பாக கேட்டது. அதில் காது மடல் சிவந்து போக, உடனே கண்களை திறந்தவன் “நீ யாருன்னு கண்டுபிடிக்காம விடமாட்டேன்” என்ற அந்த உருவத்தின் கண்களில் என்ன இருந்தது?அது அவனுக்கே வெளிச்சம்.

சூர்யா குளித்து தயாராகி வந்தவன் “ம்மா என்ன பேசணும் சொல்லுங்க”

“அது…. அ…அதுப்பா……” என்ற தாயை ஆழ்ந்து பார்த்தவன் “ம்மா….. இதுக்கு முன்னாடி என்கிட்ட பேச இது மாதிரி தயங்கி இருக்கீங்களா”என்று கேட்டான்.

அவரோ தான் பேச வந்த விஷயத்தை நினைத்து கொண்டு இருந்தவர், மகன் கேள்வியில் அவனை புரியாமல் பார்க்க, அவனோ பதில் சொல்லுங்க என்பது போல் அமர்ந்திருந்தான்.

“இல்லப்பா….” என்றவரை அழுத்தமாக பார்த்தவன் “அப்படினா இப்போ ஏன் தயங்குறீங்க. நீங்க சொல்ல போற விஷயம் தப்பு, அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்னு உங்களுக்கு தெரிஞ்சதாலதானே” என்க, அவரோ அமைதியாக இருந்தார்.

“ம்மா…. உங்க மருமகதான் லூசு மாதிரி ஏதோ எழுதி வச்சுட்டு போயிருக்கானா, நீங்களும் ஏன் இப்படி பண்றீங்க. எனக்கு இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் தேவி மட்டும்தான். வேற யாரையும் அந்த இடத்துல நினைச்சு பார்த்தாலே அருவறுப்பா இருக்கு. கண்டதை யோசிக்காம உங்க மருமக வந்தவுடனே அவளை எப்படி எப்படி கொடுமைபடுத்தலாம்னு யோசிங்க” என்ற மகனை ஆச்சர்யமாக பார்த்தார் ராதிகா.

“என்னப்பா சொல்ற மருமக இருக்க இடத்தை கண்டுபிடிச்சுட்டியா”.

“ம்ம்…. கிட்டதட்ட லாஸ்டா சிங்கப்பூர் போற பிளைட் ஏறுனதா தகவல் வந்துச்சு அங்கேயும் ஆள் வச்சு தேட சொல்லியிருக்கேன். அவ மட்டும் என் முன்னாடி வரட்டும் அப்போ இருக்கு அவளுக்கு…” என்று பல்லை கடித்தவனை கண்டு பயந்து போன ராதிகா,

“கண்ணா அவ சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பண்ணியிருப்பா. அவ மேல ரொம்ப கோவப்படாத கண்ணா. அவளோட நிலமையையும் நாம யோசிச்சு பார்க்கணும்ல்ல”

“நம்ம நிலமையை அவ யோசிக்கலல்லம்மா அப்புறம் நான் மட்டும் ஏன் யோசிக்கணும். சரி நான் கிளம்பறேன். உங்களுக்கான பதில் கிடைச்சுருக்கும்னு நினைக்கறேன்” என்றுவிட்டு வெளியில் வர, பவி அங்கு நின்றிருந்தாள்.

“வாங்க மிஸ் பவித்ரா. அம்மாட்ட பேசணுமா உள்ளதான் இருக்காங்க போங்க” என்றுவிட்டு அவளை கடந்து செல்ல,

அவளோ “இல்ல…இல்ல…. நான் உங்ககிட்டதான் பேச வந்தேன்”

“என்கிட்டயா….” என்று ஆச்சர்யமாக பார்த்தவன் “என்ன” என்று கேட்க, அவளோ காலை மஞ்சு பேசிய அனைத்தையும் சொன்னாள். பின் அதனால……” என்று இழுத்தவளை கண்டு அவனுக்கு எரிச்சல்தான் அதிகமானது.

“லுக் மிஸ் பவித்ரா. எனக்கு என் பொண்டாட்டி இருக்கா. உங்களுக்கு வேற ஆள பாருங்க. பொண்டாட்டி போன உடனே புது மாப்பிள்ளை ஆகறவன் நான் இல்லை. வேற எதுவும் இல்லைனா நான் கிளம்பறேன்” என்றுவிட்டு திரும்பியும் பாராமல் விடு விடுவென செல்பவனை வலி நிறைந்த விழிகளோடு பார்த்திருந்தாள் பவித்ரா.

அதே நேரம் ஜெர்மனியில் இருந்த அந்த மருத்துவமனையில் இருந்து வேக வேகமாக ஓடி வந்தது அந்த உருவம். அது நேரே சென்று நின்றது வேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகளைவிட்டு செல்லும் க்ரஷில்தான். உள்ளே ஓடிய அந்த உருவம் அங்கிருந்த பெண்ணிடம் சங்கடமாக சிரித்து “சாரி மேம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று சொல்ல,

அந்த க்ரஷில் இருந்த பெண்ணோ “பரவால்லங்க. சரியான வாலு உங்க பொண்ணு.ஒரு இடத்துல நிற்காம ஓடிட்டே இருக்கா.நீங்க பார்க்க அமைதியாதான் தெரியறீங்க. அப்புறம் எப்படி பொண்ணு இவ்ளோ சுட்டியா இருக்கா. ஒருவேலை பாப்பா அவங்க அப்பா போலன்னு நினைக்கறேன் கரெக்ட்டா” என்று கேட்க,

புன்னகை முகத்துடன் ஆமாம் என்று தலையசைத்தவள் தன் ஒரு வயது மகளை அழைத்து கொண்டு தங்கள் வீட்டை நோக்கி நடந்தது அந்த உருவம்.

அந்த உருவம் வேறு யாரும் இல்லை , சைந்தவியேதான் சூர்யாவை பிரிந்து வந்த பிறகுதான் அவளுக்கு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயமே தெரிந்தது. யாரும் தனக்கு இல்லை என்று நினைத்தவளுக்கு அவளவன் கொடுத்த பரிசை நினைத்து மகிழ்ந்து, குழந்தையை ஆசை ஆசையாக பெற்று வளர்த்து வருகிறாள் அவளது தோழி உதவியுடன்.

சூர்யாவிற்கு குழந்தை விஷயம் தெரிந்தால் என்ன செய்வான். பவி சூர்யாவை மணக்க விரும்புகிறாளா அதனால்தான் அவனுடன் பேச செல்கிறாளா அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்..

அணைப்பாள்…..

Advertisement