Advertisement

‘பவிம்மா….அவர் எப்போ என்ன செய்வாருன்னு முதல் கொண்டு தெரிஞ்சு வச்சிருக்க, அவரை எந்த அளவு கவனிச்சு, ஒவ்வொரு செய்கையையும் மனசுல பல ஆசைகளோட பதிய வச்சிருப்ப. நான்தான்…நான்தான் உங்களுக்கு இடைல தேவையில்லாம வந்து உங்க காதலை பிரிச்சிட்டேன். நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ கனவுகளோட லவ் பண்ணியிருப்பீங்க ’ என்று நினைக்க நினைக்க அவளுக்குள் கோபம், ஏமாற்றம் என்று இரு உணர்வுகளும் போட்டி போட்டு எழ அப்படியே இறுகி போனாள்.

“என்ன சைந்து ஏன் இப்படி இருக்க. பதில் சொல்லு”.

“நானும்தான் உன்கிட்ட பல முறை கேட்டேன். ஏன் நீ இப்படி எதையோ தொலைச்ச மாதிரி இருக்கன்னு பதில் சொன்னியா”.

“சைந்து…. என்ன உளறுர அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் நார்மலாதான் இருக்கேன். நீயா எதையாவது கற்பனைபண்ணிட்டு பேசாத” என்க,

பவியை இகழ்ச்சியாக பார்த்தவள் நக்கல் கலந்த குரலில் “சரி நீ ல…. ல….. ம்கூம்….நீ லவ் பண்ணுனவரு பேர் சொல்லு”

“சைந்து உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா. நீ ஏன் அழறன்னு கேட்கிறேன். நீ ஏதேதோ பேசிட்டு இருக்க. நான் இப்போ ஹாஸ்பிடல்தான் போறேன் வரியா எப்படி. உன்னை கூட்டி போகதான் வந்தேன். வேற தேவையில்லாத எதையும் பேசாத. அது முடிஞ்சு போச்சுன்னு சொல்லிட்டேன்” என்று கடுப்பாக கத்தியவள் அவர்கள் வீட்டிற்கு வண்டி எடுக்க சென்றுவிட்டாள்.

‘ம்ம்ம்…. ஆமா முடிஞ்சு போச்சு எல்லாமே முடிஞ்சு போச்சு. அன்னைக்கு கூட கேட்டல்ல யாரா இருந்தாலும் எனக்காக பேசுவியான்னு. பேசுவேன். நான் பேசறேன். உனக்காக அவருகிட்ட நானே பேசறேன்.

தேவையில்லாம உங்க வாழ்க்கைக்கு இடைல நான் வந்துட்டேன். அதை நானே சரிபண்றேன்’ என்று கண்களை துடைத்தவள் ஒரு முடிவோடு அவள் எடுத்த கிரீட்டிங் கார்டை அதே இடத்தில் வைத்து பூட்டிவிட்டு பவியுடன் மருத்துவமனை கிளம்பினாள்.

பவி அமைதியாக வண்டி ஓட்டி கொண்டு இருந்தாலும் மனதில் பல கேள்விகள் எழுந்து அவளை குழப்பி கொண்டே இருந்தது.

‘சைந்து ஏன் திடீர்னு லவ் பண்ற பையன் பேரை கேட்டா, அவ முகம் வேற சரியில்ல. எதையாவது நம்மகிட்ட மறைக்கறாளா’ என்று யோசித்தவள் அவளிடம் பேச எண்ணி, அவர்கள் எப்போதும் அமர்ந்து பேசும் பார்க்கின் ஓரம் வண்டியை நிறுத்த தங்கையின் எண்ணத்தை புரிந்து கொண்ட சைந்து “நேரம் ஆச்சு பவி. நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது. சீக்கிரம் போகலைன்னா அம்மா காத்துவாங்க. அ…. அ…. ம்கூம்…அவரும் எ…என்னை தேடுவாரு . எதா இருந்தாலும் அப்புறம் பொறுமையா பேசலாம்”என்று அழுகையில் அடைத்த தொண்டையை சரி செய்து கொண்டு பேச, பவி வேறு வழி இல்லாமல் மீண்டும் வண்டியை ஓட்ட துவங்கினாள்.

ஹாஸ்பிடலில் இன்னும் சில ரிப்போர்டர்கள் இருக்க, சைந்துவின் அழுது வடிந்த முகத்தை வீடியோ எடுத்து லைவ்வாக போட்டு கொண்டிருந்தனர். தன் அறையில் அமர்ந்து செய்திகளை பார்த்து கொண்டிருந்த சூர்யாவும் அதை பார்த்து புருவம் சுருக்கினான்.

டாக்டர் அவர்களது பிளான்படி அனைத்தையும் செய்ய, சைந்து ஓரமாக அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள்.இதை பார்த்த மஞ்சுவிற்கும் மனது பாரமாக அவள் அருகில் போய் அமர்ந்தவர் “சைந்து ரொம்ப பயந்துட்டியாடா. அழாதடா” என்று ஆறுதல் சொல்ல, அவரை தாவி அணைத்து கொண்டவள் வாய்விட்டு கதறி அழுதாள்.

சூர்யா அதை கவனித்து அவன் நண்பனிடம் சொல்லி, சைந்துவை அறைக்கு அழைத்து வர சொல்ல, அவனை முறைத்தவன் “டேய் நான் டாக்டர்டா……” என்க,

சூர்யாவோ, “அதுக்கு முன்னாடி நீ என் நண்பேன்டா போ. பாவம் ரொம்ப அழறா. என்னன்னு கேட்போம். அவ முகமே சரியில்ல” என்று சொல்ல, அவனும் வேறு வழியில்லாமல் போய் சைந்துவிடம் “மேடம் சைந்தவி யாரு” என்று கேட்க,

மஞ்சு வேகமாக அவன் அருகில் சென்றவர் “என் பொண்ணுதான் டாக்டர் சொல்லுங்க “

“அவரு அவங்க பேரையே சொல்லிட்டு இருக்காரு. சோ…. உள்ள போய் அவங்கள பேச சொல்லுங்க. அவர் கண் விழிக்க கூட வாய்ப்பு இருக்கு” என்று சொல்ல, அனைவரும் மகிழ்ந்து போயினர். சைந்துவை தவிர,

கணவனை பார்க்க செல்ல மாட்டேன். என்றவள் பிடிவாதம் பிடிக்க, மஞ்சு அவளை திட்டி போக சொல்ல, அவளோ முடியாது என்று நின்றுவிட்டாள். யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் அவள் இல்லை. தனக்குள் ஒடுங்கி போய் இருந்தாள்.

அடுத்து என்ன…என்ற கேள்வி பூதகரமாக எழ, அப்போதிலிருந்து சூர்யாவிடம் இருந்து விலக ஆரம்பித்தாள். அவன் பேச வந்தாலும் போனை எடுத்து கொண்டு வெளியில் சென்றுவிடுவாள். நார்மல் வார்டிற்கு அவனை கொண்டு வரும் நாடகமும் நடக்க, சைந்து எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுள்ளேயே மூழ்கி போய் இருந்தாள்.

சைந்து ஒரு பக்கம் அமைதியாக, தனக்குள் சுருண்டு கொள்ள,பவி ஒரு பக்கம் தனக்குள் முடங்கி போக, அந்த வீட்டில் மகிழ்ச்சி என்பது முற்றிலும் தொலைந்து போனது.

மஞ்சு குமார் இருவரும் மகள்களின் முகத்தை பார்த்தே வாழ்ந்து வந்தவர்கள் . இப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் இருள். வீட்டையும் சூழ்ந்துவிட்டது போல் உணர்ந்து, மகள்களிடம் பேச, நீடித்த அமைதியே அவர்களுக்கு பதிலாக கிடைத்தது. ஓரளவிற்கு மேல் கேட்பதை நிறுத்தியவர்கள் நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

சைந்துவிற்கு அக்காவாக ஒரு மனம் விட்டு கொடுக்க சொல்லி போராட, மனைவியாக ஒரு மனம் அவன் உன் கணவன் அவனை தாரை வார்க்க போகிறாயா என்ற கேள்வியை எழுப்ப, இரு மனதுடனும் போராடி சோர்ந்துதான் போனாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல சூர்யாவிடம் இருந்து சைந்து விலகியே இருந்தாள். அவனை வீட்டிற்கு அழைத்து வந்த பின்பும் சூர்யாவிடம் எந்த அளவு விலக முடியுமோ, அவ்வளவு விலகியே இருந்தாள்.

காலை விரைவில் கிளம்புவது. இரவு அதிக நேரம் மருத்துவமனையில் இருப்பது என்று அதிகவேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்தாள். சூர்யா மீண்டும் வேலையில் சேர்ந்துவிட, சிலை கடத்தல் சம்மந்தமான கேஸ் அவனிடம் வந்தது. வேலை என்றவுடன் அனைத்தையும் மறந்தவன் அதில் தன் முழு கவனத்தையும் செலுத்தினான்.

சூர்யா பல முறை சைந்துவிடம் பேச முயற்சிக்க, அவளோ பிடி கொடுக்காமல் சென்றாள். ஒரு நாள் பிடிவாதமாக அவளை பிடித்து அமர வைத்து அவள் விலகளுக்கான காரணத்தை கேட்க, அவளிடம் இருந்து கண்ணீரே பதிலாக வந்தது. அது அவன் மனதை காயப்படுத்த, அமைதியாகி போனான். அதன் பின்பும் பல முறை முயன்று அவளது கண்ணீர் ஏற்படுத்தும் வலியை தாங்க முடியாதவள் பின் அவளின் செய்கைகளை அமைதியாக ஆழ்ந்து கவனிக்க துவங்கினான்.

சைந்து தன் மன போராட்டத்திற்கு முடிவு கொண்டுவர எண்ணியவளாக ஒரு தெளிவான யோசனையை தேர்ந்தெடுத்தாள். அதன்படி ஒரு ஞாயிறு அன்று அனைவரும் இருக்கும் போது அந்த விஷயத்தை சொல்ல துவங்கினாள்.

“ப்பா….. என்னோட பிரண்ட் பேரு பிரவீன் டாக்டராதான் இருக்கான். அவனுக்கு நம்ம பவிய ரொம்ப பிடிச்சு போச்சாம். மேரேஜ்க்கு கேட்கறான் என்ன பதில் சொல்லட்டும்” என்று சூர்யா, பவி இருவரின் முகத்தை பார்த்து கொண்டே சொல்ல,

சூர்யா முகத்தில் எந்த பாவனையும் தோன்றவில்லை. இன்னும் சொல்ல போனாள். “நல்ல பையனா இருந்தா முடிக்கலாமே” என்று அவன்தான் முதலில் சொன்னான்.இதை கேட்டு சைந்து குழம்பி போனாள். ‘என்ன இவரு உடனே இப்படி சொல்றாரு. அப்போ பவியை மறந்துட்டாரா’ என்று குதூகலிக்கும் மனதுடன் பவியை பார்க்க, அவள் முகம் கோபத்தில் சிவந்து போய் இருந்தது. அதை கண்டு திகைத்து போனாவள். அப்படியே நின்றிருக்க,

பவி,“எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம். நான் யாரையும் மேரேஜ் பண்ணிக்க மாட்டேன். இப்போ உங்ககிட்ட வந்து நான் கேட்டேனா கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி” என்று கத்தியவள் பின் சைந்து புறம் திரும்பி “உன்னை யாரு இந்த வேலை எல்லாம் பார்க்க சொல்றா. வேலைக்கு போனா எதுக்கு போறோமோ அதை மட்டும் பண்ணி பழகு. எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். இனி ஒரு முறை இந்த பேச்சை எடுத்தீங்க…. எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை. கடைசிவரை உங்ககூட உங்க பொண்ணா இருந்து நான் சாதிக்க நினைக்கறதை சாதிப்பேன்.இதுக்கு மேல கல்யாண பேச்சை வீட்டில் எடுத்தீங்க, நான் வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போய்டுவேன். ” என்று அழுத்தமாக சொன்னவள், சூர்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட, சைந்துவின் மனைவி என்னும் உள்ளம் உடைந்து போனது.

சைந்து கடைசி முயற்சியாகதான் இதை செய்தாள். ஒருவேலை தங்கை திருமணத்திற்கு சம்மதித்துவிட்டால் என்றால் அவரை மறந்து விட்டாள் என்ற முடிவிற்கு வந்துவிடலாம். இல்லை என்றால் அடுத்து தான் எடுத்து வைத்த முடிவை செயல்படுத்தலாம் என்று நினைத்திருந்தவளுக்கு தங்கையின் பேச்சு பெருத்த ஏமாற்றத்தை கொடுக்க, பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு அவர்கள் அறைக்குள் ஓடினாள்.

சூர்யா பவியின் பேச்சை கேட்டு யோசனையானவன்.’இவ ஏன் இப்படி சொல்றா. ஒரு வேலை பழசை நினைச்சுட்டு கல்யாணமே வேண்டாம்னு முடிவெடுத்துட்டாளோ. இது நல்லதுக்கு இல்லையே. இல்ல இதைபத்தி கண்டிப்பா நாம பேசி ஆகணும்’ என்று முடிவெடுத்து கொண்டான்.

பவி இப்படி பேசுவாள் என்று எதிர்பார்க்காத பெற்றோரும் அதிர்ந்து போய்தான் இருந்தனர்.

சூர்யா அழுது கொண்டே ஓடிய மனைவியை சமாதானம் செய்ய வர, அவளோ “நான் கொஞ்சம் தனியா இருக்கணும் ப்ளீஸ்ங்க” என்று அழுகையோடு சொல்ல,

மனைவியை ஆழ்ந்து பார்த்தவன் “கொஞ்ச நாளா நீ தனியாதான் இருக்க தேவி. என்ன ஆச்சு உனக்கு” ,

கணவனின் கேள்வியில் விசுக்கென்று திரும்பி பார்த்தவள் பார்த்தவள். அவன் கேள்வியான பார்வைக்கு பதில் அழிக்க முடியாமல் தலை குனிய, அவனோ “தேவி எதுவும் பிரச்சனையா? எதா இருந்தாலும் சொல்லு. சரிபண்ணிடலாம். ஆனா…. என்கிட்ட இருந்து விலகி மட்டும் போகாதடி என்னால தாங்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. இது மாதிரி நான் பீல்பண்ணுனதே இல்லை” என்று சொல்ல, அவளிடம் எந்த பதிலும் இல்லை.

மனைவி எதாவது பேசுவாள் என்று சற்று நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்தவன். அவள் பேசாமல் இருக்கவும் பெரு மூச்சு விட்டவாறு அங்கிருந்து சென்றான்.

செல்லும் அவன் முதுகை வெறித்தவள் ‘கல்யாணம் செய்துகிட்டோம்னு கஷ்டப்பட்டு இனி என்கூட நீங்க வாழ வேண்டாம். உங்க காதல் கூடவே வாழுங்க. நான் இனி உங்களுக்கு இடைல வர மாட்டேன்’ என்று தனக்குள் சொல்லி கொண்டவள். கணவனுக்கும், தாயிக்கும் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு யாரும் அறியாமல் சென்னையிலிருந்து கிளம்பிவிட்டாள்.

தங்கை காதலை சேர்க்க எண்ணி…. தன் காதலை, தன் திருமண பந்தத்தைவிட்டு செல்லும் சைந்துவின் நிலை இனி என்ன? பவிக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன செய்வாள்? சூர்யா மனைவி சென்றதை எண்ணி கோவம் கொள்வானா? மீண்டும் அவளை பார்க்கும்போது அவனது செயல் என்னவாக இருக்கும்.அவன் கோபம் கொண்டாள் அதை எப்படி சமாளிப்பாள் இவை அனைத்தையும் அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.

அணைப்பாள்…..

Advertisement