Advertisement

கதவு தட்டும் சத்தத்தில் விழித்த சைந்து, ராதிகா அழைக்கவும் அப்படியே செல்ல முடியாது என்பதை உணர்ந்து, அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொள்ள,அதற்குள் உறக்கம் கலைந்து எழுந்த சூர்யா தன் சார்ட்ஸ் எடுத்து அணிந்து கொண்டு சென்று கதவை திறக்க, ராதிகா அங்கு பதட்டமாக நின்றிருந்தார்.மகன் நின்றிருந்த கோலத்தை கண்டு திகைத்தவர் பின் சொல்ல வந்த விஷயத்தின் முக்கியதுவம் உணர்ந்து “கண்ணா…நார்த் சைட்ல ஏதோ அமைச்சர சுட்டுட்டாங்கலாம். அதனால இங்க கலவரம் நடக்குது. உனக்கு போன் போட்டு போட்டு பார்த்தங்கலாம் எடுக்கலையாம் கீழ உன்னை பார்க்க வந்திருக்காங்க”என்றவர் சொல்ல, உடனே கீழே ஓட போனவனை தடுத்தவர் “குளிச்சுட்டு போப்பா”என்றுவிட்டு செல்ல, அவரை புரியாமல் பார்த்தவன் பின் சரியென்னும் விதமாக தலையாட்டி உள்ளே செல்ல அதே நேரம் சைந்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.

டவலுடன் வந்தவளின் அழகை கூட ரசிக்காமல் வேகமாக கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தவன் தலையில் அடித்து கொண்டான். ஏனென்றால் சைந்து குங்குமம் அவன் முகத்தில் அங்கங்கு ஒட்டி இருக்க, அவள் தோளில் உணர்ச்சி வேகத்தில் சைந்து கடித்து வைத்த இடம் கருப்பாக கண்ணி போய் இருந்தது. சைந்தவியும் அதை கண்டு திகைத்து “இப்படியேவா போய் அத்தைய பார்த்தீங்க”என்று கேட்க, அவனும் “ஆமாம்…”என்று தலையசைத்துவிட்டு “சீக்கிரம் என்னோட யூனிபார்ம அயர்ன் பண்ணி வை”என்றுவிட்டு வேகமாக குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள ‘என்ன ஆச்சு இவருக்கு.இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தாரு’என்று குழப்பமாக யோசித்தவள் பின்
உடை மாற்றிவிட்டு, கணவனின் யூனிபார்மை அயன் செய்து வைத்து விட்டு கீழே சென்றாள்.

அங்கு ஹால் சோபாவில் இரண்டு போலிஸ்காரர்கள் அமர்ந்திருந்தனர். அவளை கண்டு மரியாதை நிமித்தம் அவர்கள் சிரிக்க,அவளும் மென்மையாக சிரித்துவிட்டு மாமியாரை தேடி செல்ல, அவரோ மகனுக்கு காபி போட்டு கொண்டிருந்தவர் மருமகளை கண்டவுடன் “வந்துட்டியாடா இந்தா காபி சூர்யாக்கு கொண்டு போய் குடு.வேலை விஷயமா வெளிய போகப் போறான்.எப்படியும் கால டிபன் சாப்பிட மாட்டான்.இந்த காபியை மட்டுமாவது குடிக்கட்டும் என்று சொல்ல, அவன் சாப்பிடாமல் செல்வதை நினைத்து வருந்தியவள் அவசரமாக இரண்டு தோசை ஊற்றி எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள்.அங்கு சூர்யா அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான்.அவன் பின்னாலேயே சென்று அந்த தோசையை ஊட்டி முடித்தவள் கீழே சென்றுவிட்டாள். மாமியாரிடம் பேசி கொண்டு இருந்தவள் காதில் கணவன் வரும் சத்தம் கேட்க, மாடி படியில் பார்வை செலுத்தினாள்.
அங்கு சூர்யா போலீஸ் உடையில் முக இறுக்கத்துடன் வந்து கொண்டிருந்தான்.அவன் முகத்தை கண்டு சைந்து திகைத்து பின் இரவு முழுவதும் தன்னை கொஞ்சி, கெஞ்சியவன் முகமா இது என்று யோசிக்கும் அளவிற்கு இருந்தது காரணம் அவன் முகம் கடுமையாக மாறியிருந்தது.

சூர்யா வந்தவுடன் எழுந்து நின்றவர்கள் அவனுக்கு சலியூட் அடிக்க, அவர்களுக்கு ஒரு தலைசைப்பை குடுத்தவன் “வாங்க போகலாம்”என்றுவிட்டு நிலைமையின் தீவிரத்தைபற்றி விசாரித்து கொண்டே சென்றான்.

சைந்தவி அன்று மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். கலவரம் நடக்கும் இடத்தை லைவாக காட்ட அதை பார்த்து கொண்டிருந்தவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. காரணம் அவனவளை காட்டியதால், சுற்றி நூறு பேர் தன் கணவனின் கட்டளைக்கு முகம் பார்த்து நிற்பதும், அவன் கண் அசைவில் அவர்களுக்கு ஆணை பிரப்பித்து அந்த பிரச்சனையை சரி செய்வது என அனைத்தையும் பார்த்தவளுக்கு என் கணவன் போலீஸ் என்ற பெருமை வந்தது. பயம் இருந்த இடம் தெரியாமல் போக, தொலைக்காட்சியில் தெரியும் கணவனையே கண் இமைக்காமல் பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள்.கலவரம் செய்பவர்களை சூர்யா கை ஆளும் விதம் அவன் ஆளுமை என அனைத்தையும் பார்த்தவளுக்ககு அவன் மேல் இன்னும் காதல் அதிகமாகியது.

மாலை வரை வீட்டில் இருந்தவளுக்கு கோவிலுக்கு சென்று வரலாம் என்ற எண்ணம் தோன்ற மாமியாரிடம் சொல்ல,அவரோ “வேண்டாம்மா வெளிய பிரச்சனை முடிஞ்சுதா இல்லையானு தெரியல”என்று சொல்லியும் கேட்காமல் சீக்கிரம் சென்று வந்துவிடுவதாக கூறி கிளம்பிவிட்டாள்.

கோவிலில் சாமி தரிசனம் முடிந்து பிரசாதம் வாங்கிய சைந்து, ஐயர் கொடுத்த பூவை வாங்க அது தவறி கீழே விழுந்தது. ஐயரும் “கடவுளே என்ன இது.அபசகுணமா தெரியுதே,அந்த தேவிய நல்லா சேவிச்சுட்டு போமா”என்று சொல்ல, சைந்து மனம் கலவரம் ஆனது. மீண்டும் அம்மனை மனதார வேண்டியவள் மனம் குழம்பிய குட்டையாக மாறி போனது.

அதே யோசனையுடன் வெளியே வந்தவள் கரத்தை ஒருவர்பற்றி இழுக்க, யாரோ என்று பயந்தவள் அங்கு தன்னை அணைத்தவாறு நின்றிருந்த கணவனை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் அவள் கணவனின் முகமோ உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தி கொண்டு இருந்தது. என்ன ஆனது அவருக்கு என்று நினைத்தவள் அப்போதுதான் தன்னை சுற்றி பார்வையை செலுத்தினாள்.

சைந்து சூர்யா கை வளைவில் இருக்க, எதிரில் இருந்தவன் கையில் கத்தி இருந்தது. அதை பார்த்து அவள் அதிர்ந்து நிற்க, அதற்குள் அவனை சுற்றி வளைத்தனர் போலீஸ்காரர்கள்.அடுத்து சூர்யாவின் கட்டளைக்கு அனைவரும் அவனை பார்க்க, அவன் இழுத்து செல்லுமாறு சைகை செய்ய அவர்களும் அவன் சொன்னது போலவே செய்தனர்.

அவர்கள் சென்றவுடன் “வா…”என்று அழுத்தமான குரலில் கூறியவனின் குரலில் இருந்த கடுமை கண்டு அவளுக்கு பயம் எழுந்தது. அமைதியாக அவனது போலீஸ் வண்டியில் ஏறியவள் “அது….. வந்துங்க…” என்று ஏதோ பேச வந்தவள், அவன் கோவமான பார்வையை கண்டு வாயை மூடி கொண்டாள்.

ஜீப் சாலையில் சீறி பாய, அவனது கோபம் அதில் அவளுக்கு தெரிந்தது. வீட்டிற்கு வந்தவன் ராதிகா எதிரில் வருவதை கூட கவனிக்காமல் அவன் அறைக்கு கோவமாக சென்றுவிட, அவன் பின்னால் சைந்து பயந்து கொண்டே வந்தாள்.

“என்ன ஆச்சு”என்று கேட்ட மாமியாரிடம் அவள் நடந்ததை சொல்ல, உடனே பதறியவர் “பார்த்து வர கூடாதாடா. சரியான நேரத்துக்கு சூர்யா வந்தான் இல்லைனா என்ன ஆகறது”என்று புலம்பியவரை சமாளித்து மேலே சாற்றி இருந்த அறையை கண்டவளுக்கு பெரு மூச்சு எழுந்தது.

‘ஹப்பா…. மாமிய சமாளிக்கவே என் பாதி எனர்ஜி போய்டுச்சு. அடுத்த கோட்டா மகன சமாளிக்கணுமா. ஆளு பார்க்க இன்னைக்கு அழகா இருக்கானேன்னு நானே கண்ணு வச்சுட்டேன் போல, அதான் ஆளு கோவமா வந்து எனக்கே ரிவீட் அடிக்குது’என்று முணகியவள் மேலும் ‘அப்பனே முருகா அந்த பூச்சாண்டிய சமாளிக்கற சக்திய எனக்கு குடுப்பா’என்று வேண்டி கொண்டு அவர்கள் அறை நோக்கி சென்றாள்.

அறையில் சூர்யா தன் கைகளை தொடை மீது வைத்து அதில் நாடியை தாங்கியவாறு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்.’என்ன இந்த மனுஷன் ஐயனார் கணக்கா உட்கார்ந்து இருக்காரு’என்று மனதில் அரண்டவள் ‘பயப்படாத சைந்து பயப்படாத நீ தைரியமான பொண்ணு. நம்ம தெரு நாய் எல்லாம் உன்ன பார்த்து எப்படி தெறிச்சு ஓடும்னு மறந்துட்டியா தைரியமா போய் பேசு. என்ன பண்ணிடுவான்’என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள்,அவன் அருகில் தயங்கி தயங்கி சென்று நின்று,அவன் ஏதாவது பேசுவான் என்றவள் அமைதியாக இருக்க, அவனோ அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

‘ஆத்தி….ரொம்ப கோவத்துல இருக்கார் போலயே இந்த மனுஷன்’என்று மனதில் புலம்பியவள் பின் ‘சரி நம்மலே ஏதாவது பிட்ட போட்டு பேசுவோம்.அவரும் கூட சேர்ந்து பேசினா சமாதானம் இல்லன்னா சண்ட’ என்று மனதில் போர்சாக நினைத்தவள் முன் வந்து குதித்த அவள் மனசாட்சி “சண்டையா…யாரு கூட சண்டை” என்று கேட்க, அதை வழிசலாக பார்த்தவள்,’எனக்கு நானே சண்டை போட்டுட்டு போய் படுத்துவேன்.நீ வாய மூடிட்டு போறியா’ என்று சொல்லி துரத்திவிட்டு,அவனிடம் “அ…அது…வந்துங்க….” என்று ஏதோ சொல்ல போக,வேகமாக எழுந்தவன் “வாய மூடு.ஏதாவது பேசின அவ்வளவுதான் சொல்லிட்டேன்.கொஞ்சமாவது அறிவு இருக்காடி உனக்கு.படிச்சு தான் நீ எல்லாம் டாக்டர் ஆனியா”என்று சரமாரியாக அவன் திட்டி கொண்டிருக்க, அவளோ முகத்தை சுருக்கி இதழ்களை அழுவது போல் வைத்துக் கொண்டு பாவமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவ்ளோ திட்றனே ஏதாவது வாய் திறந்து பேசறியா.அப்படி என்ன நினைப்புல தான் நடந்து வந்த ரோட்ல நடக்கும்போது நாலா பக்கமும் பார்த்து போகணும்னு கூட உனக்கு தெரியாதா.ஜஸ்ட் மிஸ்.நான் வரலைன்னா என்ன நடந்திருக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சியா. என்ன நினைச்சுட்டுதான் வந்த சொல்லி தொல”என்றவன் கத்த,அவளோ அவனை பாவமாக பார்த்தவாறு அவனை நோக்கி கையை நீட்டினாள்.

மனைவியின் செயல் புரியாமல் விழித்தவன் கடுப்பாக “வாய திறந்து சொல்லு”என்க, அவளோ “உன் நினைப்புலதான் வந்தேன் போலிஸ்கார். நைட்டெல்லாம் தூங்க விடாம தொல்லை பண்ணுனியா, மதியம் டிவி பார்க்கறேன். நீங்க கலவரகாரங்களை கண்ட்ரோல் பண்ணுனதை லைவா போட்டு காட்டிட்டு இருந்தாங்க. உங்களையே பார்த்து சைட் அடிச்சு, இது சரி வராதுனு முடிவு பண்ணி கோவிலுக்கு போனேன். அங்கேயும் உங்க நியாபகமா வந்துச்சா அதான் அப்படியே வந்தேன்……”என்றவள் இழுக்க, அவனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

சூர்யா பேச முடியாமல் நின்றிருக்க, சைந்து மனதுக்குள் ‘நாங்கல்லாம் யாரு அடங்காத காளையவே பாட்டு பாடி அடக்குறவங்க. எங்ககிட்டயேவா’என்று சொல்லி குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தாள்.

(அட பாவி நீ டெரர் போலீஸ்னு பார்த்தா, இப்படி பொண்டாட்டி சொன்ன ஒரு வார்த்தைல விழுந்துட்டியேடா…. சோகத்த )

அணைப்பாள்…..

Advertisement