Advertisement

அத்தியாயம் -2

அக்கா தங்கை இருவரும் உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட, என்றவாறு முகத்தை அஷ்ட கோணலாக மாற்றி தாயை பார்க்க, அவரோ ‘நான் உங்களுக்கு அம்மாடி’என்னும் பார்வையை செலுத்திவிட்டு திரும்பி கொண்டார்.

அம்மாவிற்கு சந்தேகம் வராதது போல் கொஞ்சமாக இருவரும் கொரித்துவிட்டு எழ, “என்னங்க ஹாட் பாக்ஸ்ல இருக்க உப்புமா காலி ஆகலைனா. நைட்டுக்கும் அதுதான்”என்ற குரல் வர, சகோதரிகள் இருவரும் இரத்த கண்ணீர் வடித்தவாறு திரும்பி வந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

குமாரோ ‘உப்புமா கிண்ட சொன்னா. புண்ணாக்கு கட்டிய செஞ்சு வச்சிருக்கா, இவங்க சண்டைல என் வயிற காய போடறாங்களே’என்று புலம்ப, அவர் மகள்களோ யாருக்கும் தெரியாமல் அங்கு செல்பில் இருந்த டப்பாவை எடுத்து அதில் உப்புமா அனைத்தையும் கொட்டி பேக் செய்து தங்கள் பேக்கில் போட்டு கொண்டு, தந்தையின் அருகில் வந்து கிளம்புவதாக சொல்லி திரும்ப அவர்களை நிறுத்தினார் குமார்.மஞ்சுவும் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து கொள்ள, பெண்கள் இருவரும் குழம்பி போயினர்.

சைந்தவி, “என்னப்பா?” என்று புரியாமல் பார்த்த மகளை வாஞ்சையாக பார்த்தவர். “உனக்கு ஒரு வரன் வந்துருக்குடா. என் பிரண்டோட பையன்தான்.போலீசா இருக்கான். நேர்மையானவன். ரொம்ப நல்லவன். நீ சரினு சொன்னா மேற் கொண்டு பேசலாம்”என்ற தந்தையை அதிர்ச்சியாக பார்த்தாள் பெரியவள்.

“ஹையா……வீட்ல கல்யாணம். சூப்பர். அப்பா…எனக்கு பத்து டிரஸ் வேணும். ஒவ்வொரு நாளும் புது டிரஸ்தான் போடுவேன்.

மஞ்சு, “ஆமா. நூறு டிரஸ் எடுத்தாலும், ஆம்பள பையன் மாதிரி பேண்ட் சட்டைலதான் அலைவ. அதுக்கு எதுக்கு அத்தன டிரஸ். ரெண்டு பேண்ட், ரெண்டு சட்டை எடுத்து தரேன் அதை மாத்தி மாத்தி போட்டுக்கோ போதும்”என்று சொல்ல கேட்ட பவியின் முகம் அஷ்டகோணலாணது.

தங்கையின் முகம் போன போக்கை கண்டு பக்கென்று சிரித்தாள் சைந்தவி. உடனே அக்காவை முறைத்த பவி “அம்மா……”என்று கத்த, அவரோ அசால்ட்டாக “அம்மாதான் போடி. ஏங்க பேச வேண்டியதை பேசுங்க” என்றார்.

குமார் மகளை பார்த்து “சொல்லுடா. உன் விருப்பம் என்ன?” என்க,

தந்தையை தயக்கமாக பார்த்த சைந்தவி “அ…அது….. அதுப்பா…. வந்து….”

குமார், “தயங்காம சொல்லும்மா. உன் விருப்பம்தான் முக்கியம்”

மஞ்சு, “ஆமா சைந்தும்மா. நாங்க உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் பண்ணமாட்டோம். எதா இருந்தாலும் சொல்லு. எதுக்கு இந்த தயக்கம்”.என்று கேட்க இருவரையும் நன்றியோடு பார்த்தவள் தெளிவாக தன் விருப்பத்தை சொல்ல துவங்கினாள்.

சைந்து, “அம்மா…. அப்பா…. நான் சொல்றது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம். ஆனா இதுதான் என் விருப்பம். நான் விரும்பறது அமைதியான அன்பான குடும்பத்தைதான் அதுக்கு போலீஸ் வேலைல இருக்கவர் சுத்தமா செட் ஆகமாட்டார்”

குமார், “ஏன்டா அப்படி சொல்ற அந்த பையன் நேர்மையானவன்டா. அதுவுமில்லாம….”

சைந்து, “இல்லப்பா. நான் இன்னும் பேசி முடிக்கல பேசிடறேன்”என்க. மஞ்சு கணவரை அமைதியாக இருக்கும்படி சைகை செய்து மகளை பேச சொன்னார்.

சைந்து, “நேர்மையா இருக்க போலீஸ் எந்த அளவுக்கு பாதிக்கபடறாங்கன்னு எனக்கு தெரியும். அதுமட்டும் இல்லாம வெளிய போயிட்டு வர்ற நான் சந்திக்கற போலீஸ் யாரும் எனக்கு நல்லவங்களா தெரியல.அதனால அந்த வேலைல இருக்க மாப்பிள்ளை கணவனா என் வாழ்க்கை முழுக்க எனக்கு வேண்டாம். நான் விரும்பறது அமைதியான லைப் அது போலீசை கல்யாணம் செய்துங்கிட்டா எனக்கு கிடைக்காதுன்னு தோணுது”என்று பிடிவாதமாக சொல்ல, மகளின் எண்ணம் சிறுபிள்ளைதனமாக இருப்பதாக தோன்றினாலும் அவள் வாழ்க்கை அவள் விருப்பம் என்று அமைதியாக இருந்தனர் பெற்றோர்கள்.

பவி அக்கா பேச்சை கேட்டு வேகமாக “ஹேய் என்ன இப்படி சொல்லிட்ட. போலீஸ் வேலை எவ்ளோ மாஸான வேலை தெரியுமா.நீ பார்த்த மாதிரி ஒன்னு ரெண்டு போலீஸ் தப்பானவங்களா இருக்கலாம். ஆனா நாட்டுக்காக உண்மையா வேலை செய்யறவங்களும் இருக்காங்க.ஒருத்தர் ரெண்டு பேரை வச்சு மொத்த டிபார்ட்மென்ட்டையும் தப்பு சொல்லாதா…” என்று முறுக்கி கொண்டு வர தங்கயை கடுப்பாக பார்த்தவள் “போதும் உன் பிரசங்கத்தை நிறுத்தறியா. நான் என் லைப்ல போலீசை அலோவ்பண்ணமாட்டேன். அப்பா உங்க விருப்பம் போல நான் கண்டிப்பா கல்யாணம் செய்துக்கறேன். ஆனா மாப்பிள்ளை டீச்சர், பிஸ்னஸ் மேன் ஏன் என்னை மாதிரி டாக்டரா இருந்தாகூட எனக்கு ஓகேதான். ஆனா கண்டிப்பா போலீஸ் வேண்டாம்”என்றவள் “நான் கிளம்பறேன்ப்பா. டைம் ஆச்சு”என்றுவிட்டு தங்கை புறம் திரும்பி “கிளம்பலாமா…”என்க,அவளோ அக்காவை ஆராய்ச்சியாக பார்த்தவள் பின் தோள்களை குலுக்கி கொண்டு அமைதியாக “ஓகே……” என்றுவிட்டு பெற்றோரிடம் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.சைந்தவி ஓடி போய் வண்டியில் அமர்ந்து கொண்டவள் கேட்டை தாண்டி செல்லும் வரை பெற்றோருக்கு கை அசைத்து கொண்டே சென்றாள்.

சைந்து ஹாஸ்பிடல் கடந்துதான் பவி ஆபிஸ் வரும் ஆதலால் அக்காவை ஹாஸ்பிடலில் ட்ரோப் செய்த பின்பே பவி அவள் அலுவலம் செல்வாள்.மாலையும் அவளே சென்று அக்காவை அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்வாள். வேலை விஷயமாக பவி வெளியே செல்ல வேண்டி இருந்தால் மட்டும் குமார் வந்து சைந்துவை அழைத்து செல்வார்.

தங்கள் இரு மகள்கள் செல்வதை விழி நிறைய பார்த்த பெற்றோர் இருவருக்கும் மகளின் பதில் ஏமாற்றத்தை தந்தாலும் அவள் மனதை புரிந்து கொண்ட திருப்தியில் இருந்தனர்.

பவி அமைதியாக ஸ்கூட்டியை ஓட்ட அவள் எதாவது பேசுவாள் என்று பொறுமையாக இருந்த சைந்தவி தங்கை பேசாமல் இருக்கவும் தன் மேல் எதுவும் கோபத்தில் இருப்பாளோ என்று எண்ணி பேச்சு கொடுக்க துவங்கினாள்.

“என்ன பவி என் மேல கோபமா”என்று கேட்க, அவளோ “கோபமா. உன் மேலையா…ஏன்?எதுக்கு?”என்று புரியாமல் கேட்க, சைந்துவோ “இல்ல போலீஸ்னா உனக்கு ரொம்ப புடிக்கும்.எப்போவும் அவங்கள நீ பிரமிப்பா பார்ப்ப. ஆனா நான் அவங்கள புடிக்கலைன்னு சொன்னதால கோபமா இருக்கியா”.

பவி, “இங்க பாருக்கா ஒருத்தங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்குதுனா….அது அவங்களோட விருப்பம். எனக்கு ஒரு விஷயம் பிடிச்சியிருக்குங்கறதுக்காக உனக்கும் அது பிடிக்கணும்னு அவசியம் இல்ல.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம். உன்னோட லைப் புல்லா உன்னோட வாழ போறவரு எப்படி இருக்கணும். என்னவா இருக்கனுங்கறது எல்லாம் உன்னோட முடிவு. எனக்கு உன்னோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்.இதுல நான் கோவிச்சுக்க என்ன இருக்கு”என்று சொன்ன தங்கையை அணைத்து கொண்டவள் “தேங்க்ஸ்டி என்னை புரிஞ்சுகிட்டத்துக்கு”என்றாள்.

பவி, “உன்னோட தேங்க்ஸ் யாருக்கு வேணும். அதை நீயே வச்சுக்க. அதை வச்சு ஒரு டீ கூட வாங்க முடியாது.பாரி வள்ளல் பரம்பரை மாதிரி அள்ளி விடுவா தேங்க்ஸ்…சாரினு அம்மஞ்சலிக்கு பிரயோஜனம் இருக்கா அதால”என்றவள் அப்போதுதான் நினைவு வந்தவளாக “ஹேய்….ஆமா அப்பாகிட்ட டாக்டரா இருந்தாலும் ஓகேன்னு சொன்னியே,அப்ப ஏதோ ஒரு டாக்டர நீ ஹாஸ்பிடல பார்த்து வச்சுட்ட அப்படிதானே?ஒழுங்கா அது யாருன்னு சொல்லிடு”என்று அக்கா ஒரு டம்மி பீஸ் என்று தெரிந்தும் ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்க, அவளோ “ஈஸ்வரா…..” என்று காதில் கை வைத்தாள்.

சைந்து, “லூசு….லூசு.நான் எந்த அர்த்தத்துல சொன்னேன். நீ என்ன அர்த்தம்பண்ணிக்கிட்ட.டீச்சரா இருந்தாலும் ஓகேனு கூடாதான் சொன்னேன்.அதுக்காக…நான் போற இடத்துல எல்லாம் யாரையாவது சைட் அடிப்பேன்னு எப்படிடி நீ சொல்லலாம்.என்னை என்ன உன்ன மாதிரி நினைச்சியா” என்று கடுப்பாக கேட்டாள்.

பவி, “ச்ச…. சரியான தத்திடி நீ. உன்னபத்தி தெரிஞ்சும் கேட்ட என்னை……”

சைந்து, “ம்ம்ம்….. சொல்லு சொல்லு….”என்று ஆர்வமாக கேட்க,அக்காவை முறைத்தவள் “எதுக்கு இந்த ஆர்வம். நீ நினைக்கற மாதிரி எல்லாம் இல்ல….. மயில் இறகுல அடிச்சுக்கணும்”என்று சொல்லி அக்காவை நக்கலாக பார்த்துவிட்டு பின் “ஏன்டி இப்படி இருக்க.சைட் அடிக்கிறதுல என்ன தப்பு”.

சைந்து, “தப்புன்னு நான் சொல்லலடி ஆனா…..எனக்கு ஏனோ அது பிடிக்கல.எனக்குன்னு ஒருத்தன் வருவான்,அவனை ஆசையா சைட் அடிப்பேன்…. ரசிப்பேன்….லவ் பண்ணுவேன்…..” என்று கண்கள் மின்ன சொல்ல,பவியோ அவளை கேவலமாக ஒரு லுக்கு விட்டுவிட்டு ஏதோ முணு முணுத்து கொண்டே வர, “என்னடி முனகல்”என்று சைந்தவி கேட்டு கொண்டிருக்கும் நேரம் அவர்கள் வண்டியின் குறுக்காக திடீரென்று ஒருவன் வந்து நின்றான்.

வண்டியின் குறுக்காக யாரும் வர கூடும் என்று எதிர்பார்க்காத பவி சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி “மஞ்ச மாக்கான்….நீ சாக என் வண்டிதான் கிடைச்சுதா”என்று திட்ட ஆரம்பிக்க,அவனோ “வணக்கம பாஸ்” என்று அப்பாவியாக முகம் வைத்து இடை வரை குனிந்தான்.

சைந்தவி அவனை ஆவென்று பார்த்துக் கொண்டிருக்க,பவியோ “வணக்கம்….வணக்கம்…. நான் சொன்னதெல்லாம் வாங்கியாச்சா?”.

“எல்லாமே வாங்கியாச்சு பாஸ்……… நல்ல சூடா இருக்கு.உங்களுக்காகதான் வெயிட்டிங் இந்தாங்க”என்று அவள் கையில் ஒரு பார்சலை கொடுக்க சைந்தவியோ புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்சலை வாங்கிய பவி “சரி…சரி… நீ போ. இனி நான் பாத்துக்குறேன்”என்று சொல்ல, அவனும் ஓகே பாஸ் என்றுவிட்டு ஓடிவிட்டான்.இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சைந்தவி “என்னடி நடக்குது இங்க.ஒண்ணுமே புரியல…..”,

பவி, “வசனமா முக்கியம்.கைல இருக்க பார்சல்தான் முக்கியம். வா போய் உன் பிரண்டு அந்த கோண மூக்கி கப்பேல போய் திருப்தியா சாப்பிட்டு அப்புறம் ஹாஸ்பிடல் போலாம். அப்படியே போற வழில தெருல உட்கார்ந்து இருங்கவங்ககிட்ட மஞ்சுவோட உப்புமாவ தள்ளிட்டு போய்டலாம் சரியா”என்றவாறு வண்டியை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட துவங்கினாள்.

“எதே….. மஞ்சு உப்புமா அவங்களுக்கா. ஏன்டி இந்த கொலை வெறி. பேசாம அதை நாய்க்கு போட்டுரு”.

பவி, “என்ன நாய்க்கா. நான் அதுக்கு குடுக்கறதை எவனாவது பார்த்து ப்ளூ கிராஸ்க்கு கம்பளைண்ட் பண்ணி. என்னை உள்ள தூக்கி போடவா. போடி…”

சைந்து, “அப்போ மனுஷங்களுக்கு எதுவும் ஆனா பரவால்லையா”என்று கோபமாக கேட்க,

“அதைப்பத்தி நீ கவலைப்படாத செல்லம். அப்பா சாப்பிட்டு நல்லாதான் இருக்காரு. சோ அவங்களுக்கு எதுவும் ஆகாது. இப்படியே நீ கேள்வி கேட்டுட்டு இருந்த இந்த உப்புமாவ நீதான் சாப்பிடணும்”என்று சொல்ல, உடனே அதிர்ந்து போன சைந்தவி “நான் ரொம்ப ஸ்ட்ரெந்த்தானவதான் உடன் பிறப்பே ஆனா…. அம்மா உப்புமா சாப்பிடற அளவுக்கு ஸ்ட்ரெந்த் இல்ல அதனால அவங்களுக்கே கொடுப்போம்”என்றுவிட்டு ‘இனி வாய திறந்தா என்னை ஏன்னு கேளுடி. கொஞ்ச நேரத்துல கொலைபண்ண பார்த்துட்டாளே’ என்று அமைதியானள்.

மெயின் ரோட்டிற்கு வந்தவர்கள் சாலையோரம் இருந்தவர்களிடம் கையில் இருந்த டப்பாவை கொடுத்துவிட்டு சைந்து தோழியின் கபேவை நோக்கி சென்றனர்.

கோபிகா, சைந்தவியின் பள்ளி தோழி கல்லூரியில் சேரும்போது சைந்து மெடிக்கல் எடுக்க அதில் எனக்கு ஆர்வம் இல்லை என்றவள் டிகிரி எடுத்து படித்து அடுத்ததாக எம்பிஏ படித்து கொண்டே அவர்களது கப்பேவை பார்த்து கொள்கிறாள்.ஆனாலும் அவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .

ஸ்கூட்டியை நிறுத்திய பவி, பார்சலை எடுத்து கொண்டு கப்பேயின் உள்ளே செல்ல அவர்களை வரவேற்றாள் கோபிகா, அவளை ஓடி சென்று அணைத்து கொண்ட சைந்து “நண்பா என்னை மறந்துட்டியா….
தோழா என்னை மறந்துட்டியா…
மச்சா என்னை மறந்துட்டியா….
மாமா என்ன மறந்துட்டியா….” என்று பாட, தலையில் கை வைத்து கொண்ட பவி ‘ம்கூம்…இதுங்க ரீல் எப்போ அந்து போகுமோ தெரியல. ரெண்டு நாள் முன்னாடிதான் இங்க வந்து காபி குடிச்சுட்டு போனோம். இப்போ என்னமோ பார்த்து வருஷம் ஆன மாதிரி இம்புட்டு அக்கபோரு முடியல இதுங்களோட’ என்று புளு புளுத்து கொண்டு இருக்க இப்போது கோபிகா பாட ஆரம்பித்தாள்.

“நண்பா உன்னை மறக்கலடா….
தோழா உன்னை மறக்கலடா….
மச்சி உன்னை மறப்பேனாடா…
மாமு உன்னை மறப்பேனாடா…” என்று பாடா, கடுப்பின் உச்சிக்கு சென்ற பவி “அட ச்சி நிறுத்துங்க.காதுல இரத்தம் வருது ஏற்கனவே பசில காது எல்லாம் அடைக்குது. இந்த லட்சனத்துல பாடுறேங்கற பேர்ல நீங்க ரெண்டு பேரும் என்னை கொடுமைபண்ணி கொல்ல பாக்குறீங்களா”என்று கத்தியவள் சைந்தவியை பார்த்து “நான் சாப்பிட போறேன் வர்றியா இல்லையா”என்று கேட்க, கோபிகாவோ பாவமாக முகத்தை வைத்து கொண்டு “நானும் இன்னும் சாப்பிடல”என்றாள்.

கோபிகாவின் முகத்தை பார்த்த பவி “தயவு செஞ்சு மூஞ்சை இப்படி பச்சபுள்ள மாதிரி வச்சு நடிக்காத. சாப்பாடுதானே வேணும் வாரும்…. வந்து தொலையும்…”என்றுவிட்டு அவள் அறை நோக்கி சென்றாள். கோபி ஒற்றை பெண்ணாய் இருக்க தோழியின் தங்கை என வந்த பவியை அவளுக்கும் ஏனோ பிடித்து போனது. மரியாதை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பவியிடம் அவர்கள் அக்கா என்ற அழைப்பை எதிர்பார்க்கவில்லை. எதிர் பார்த்தாலும் கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும்.அதனாலேயே அக்கா தங்கை என்ற உறவு முறை தாண்டி மூவரும் நண்பர்களாக சுற்றி வருவர்.

பவி,“ஆமா…. எனக்கு ஒரு டவுட்”என்றாள் கோபிகாவை பார்த்து.‘என்ன ‘என்பது போல் பார்த்தவளை நக்கலாக பார்த்த பவி “நீயெல்லாம் எப்படி பிஸ்னஸ் வுமன் ஆன?”

கோபிகா, “இப்போ அதுவா முக்கியம். சோறுதான் முக்கியம். சாப்பிடற நேரத்துல அன்னத்துக்காக வாய திறப்பனே தவிர வேறு எதுக்கும் திறக்க மாட்டேன்”என்றுவிட்டு பார்சலை பிரித்து கொண்டிருந்த சைந்து பக்கத்தில் அமர,அவளோ பார்சலில் இருந்த ஐட்டங்களை கண்டு வாயை பிளந்தாள்.”என்னடி இவ்ளோ வாங்கி இருக்கான். ஆனாலும் நீ பண்றது ஓவர்டி. நான் உன்னைதானே வாங்கி தர சொன்னேன்.. நீ எவனையோ வாங்கிட்டு வர சொல்லியிருக்க. இது எல்லாம் நல்லா இல்ல ஆமா சொல்லிட்டேன்”என்று முகத்தை தூக்க, தங்கையோ அதை எல்லாம் கண்டு கொள்ளாது “நல்லா இல்லன்னா போ. எல்லாத்தையும் நானே சாப்பிட்டுக்கறேன்” என்று அனைத்தையும் தன் பக்கம் இழுத்து கொள்ள,

“அது எல்லாம் முடியாது. எனக்கு வேணும்”என்று இருவரும் அடிபிடி போட்டு சாப்பிட,துவங்கினர். மூவரும் பேசி கொண்டே சாப்பிட, அப்போது பவி அக்காவின் மனதை அறியும் பொருட்டு கோபிகாவிடம் “ஏன் கோபி உங்க அப்பா போலீஸ்தானே. லைப் எப்படி போகுது உனக்கு”என்று கேட்க, அவளோ “என்னத்த போகுது. நேர்மையா இருக்கறது ஒரு குத்தம்னு ஒவ்வொரு ஸ்டேட்டுக்கா மாத்திட்டு இருக்காங்க. நான் அப்பாக்கூட தொடர்ந்து மூணு மாசம் இருக்கறதே அபூர்வம்தான். அதோட அப்பப்ப கொலை மிரட்டல் எல்லாம் வரும். நீ கேட்டியே லைப் எப்படி போகுதுனு சேசிங்கு, பைட்டிங்கு, மிரட்டலிங்கு, சோதனையிங்குன்னு போகுது.அதனால நல்லா யோசிச்சு நான் ஒரு முடிவெடுத்து வச்சிருக்கேன்”என்று சொன்னவள் சகோதரிகள் இருவரையும் பார்த்து “என்னன்னு கேளுங்கடி”என்று சொல்ல, அவளை கண்களாலேயே எரித்து கொண்டிருந்த பவியும், இது எனக்கு தெரிந்த விஷயம்தான் இருந்தாலும் பரவால்ல நீ மறுபடி சொல்லு. நான் கேட்கறேன் என்று நினைத்த சைந்துவும் ஒரே நேரத்தில் “என்ன?” என்று கேட்க,

கோபியோ “நான்லாம் கண்டிப்பா போலீசை கல்யாணம் செய்துக்கவே மாட்டேன்ப்பா”என்று சொல்ல,

சைந்து தங்கையை அர்த்தமாக பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் சாப்பிட,பவியோ மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள்.‘இது என்னடா போலீஸுக்கு வந்த சோதனை. இதுங்க பேசறதை இன்னும் கொஞ்ச நேரம் நான் கேட்டேன்னா என்னையும் இவங்க லிஸ்ட்ல சேர்த்துருவாங்க போலயே…, நல்லா சேர்ந்துதுங்க பாரு ரெண்டும் ஏர்ல பூட்டுன எருது மாதிரி’என்று அவர்கள் இருவரையும் கழுவி ஊற்றியவள் மனதில் அவளவன் காக்கி உடையில் வந்து சிரிக்க, அவளோ ‘நீ கவலைப்படாதே போலீஸ்கார் நான் உனக்கு வாழ்க்கை கொடுக்கறேன். என் செல்லக்குட்டி என்று கொஞ்சி கொண்டிருந்தாள். அப்போது அவள் தோளில் கை வைத்து உளுக்கிய கோபி “என்னடி குட்டி சாத்தான் அமைதியா இருக்க.என்ன ஆச்சு”என்று கேட்க, அவளோ அவளவனை கொஞ்சி கொண்டிருக்கும் போது நந்தியாக வந்து தொல்லை செய்த கோபியை முறைத்து “ உன்னுடைய தொலை நோக்கு பார்வை அலாதி…. அற்புதம்….. அபாரம்…..”என்று கிண்டலாக சொல்ல,அதை புரிந்து கொள்ளாத இரண்டு தோழிகளும் அவள் ஏதோ மெடல் குடுப்பது போல்சந்தோஷமாக சிரித்து கேட்டு கொண்டிருந்தனர்.

சாப்பிட்டு முடித்த மூவரும் சற்று நேரம் பேசி கொண்டிருந்தனர். அப்போது மணியை பார்த்த சைந்து “அடியே….. மணியாச்சு…. வா…. வா…”என்று ஓடி கொண்டே கோபியிடம் விடைபெற்று ஹாஸ்பிடல் நோக்கி சென்றனர்.

அணைக்கும்…….

Advertisement