குமார் வீட்டு வாசலில் வண்டி நிற்க, சைந்து ஓடி வந்து தங்கையை அணைத்து கொண்டாள்.“ஏன்டி இப்படி பண்ணுன. நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா. உன் போன் எங்க”என்று கேட்டு கொண்டிருக்கும்போது அங்கு வந்த சூர்யா “உள்ள போய் பேசு தேவி. ஏன் இப்படி வெளியவே நிக்கறீங்க”என்று கேட்க, கண்ணீரை துடைத்து கொண்ட சைந்து தங்கையை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.
சூர்யா வரவும் மகளை திட்ட முடியாமல் அமைதியாக நின்றார் மஞ்சு. குமார் மகளிடம் விசாரிக்க “ஒன்னும் இல்லப்பா. சும்மா பீச்ல நின்னுட்டு இருந்தேன். டைம் போனதே தெரியல. அப்புறம் டைம் ஆனத கவனிச்சு உங்களுக்கு போன் போடலாம்னு நினைச்சேன் ஆனா போன் சார்ஜ் இல்லாம ஆப் ஆகிடுச்சு.சரி வீட்டுக்கு வந்திடலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள இவரு வந்துட்டாரு“என்று சொன்னவளை கண்டு மஞ்சுவிற்கு கோபம்தான் அதிகமானது.
“என்னடி இது புது பழக்கம். தனியா போய் பீச்ல நிக்கறது. எப்போவும் அக்காகூடதானே போவ. இல்ல கோபிகிட்டயாவது சொல்லிட்டு போக வேண்டியதுதானே, என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு நாங்க பக்கு பக்குனு இருக்க வேண்டியதா இருக்கு”என்று திட்ட பவி அமைதியாக இருந்தாள்.
குமார், “ஏன்டா பவி இப்படி பண்ற. எங்க கண்ணு முன்னாடி இருக்கும்போதே இப்படி இருக்க, காஷ்மீர் போறேன்னு சொல்றியே அங்க போய் தனியா உன்னால மேனேஜ் பண்ண முடியுமா”என்ற தந்தையை அழுத்தமாக பார்த்தவள் “அப்பா நான் ஒன்னு கேட்கறேன் ஆமா இல்லைனு மட்டும் பதில் சொல்லறீங்களா”என்று கேட்க, அவரும் சம்மதமாக தலையசைத்தார்.
பவி, “இப்போ நான் இருக்க சிட்டுவேஷன்ல பையன் உங்க முன்னாடி நின்னா. நீங்க போக சொல்லுவீங்களா, இல்லை வேண்டாம் இங்கயே இருன்னு சொல்லுவீங்களா”என்று கேட்க, சூர்யா ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தான். அவன் அருகில் தயக்கம் இல்லாமல் சென்று அமர்ந்த சைந்து பவி சொன்ன விஷயங்களை சொல்ல, அவன் அமைதியாக கேட்டு கொண்டான்.
பவி, “சொல்லுங்கப்பா ஏன் அமைதியா இருக்கீங்க. பொண்ணுன்னா என்ன பையன்னா என்ன எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணுதான்னு சொல்லுவீங்கல்ல, இப்போ நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க”என்க, அவரிடம் அமைதி மட்டுமே பதிலாக.ஆனால் மஞ்சு “இங்க பாரு பவி. இது எல்லாம் பேச நல்லா இருக்கும். ஆனா நடைமுறைக்கு ஒத்து வராது.எங்க பொண்ணான உன்னை அவ்வளவு தூரம் அனுப்பறதுல எனக்கு விருப்பம் இல்ல”என்று முடித்துவிட, குமார் மகளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார்.
சூர்யா, “அத்த இதுல நான் என்னோட கருத்த சொல்லலாமா” என்று கேட்டான்.
மஞ்சு, “என்ன மாப்பிள்ளை இப்படி கேட்டுட்டீங்க சொல்லுங்க”
சூர்யா, “பவித்ராக்கு அங்க போகணும்னு விருப்பம் இருந்தா போகட்டும் விடுங்க. அவங்க வேலைல முன்னேற ஒரு வாய்ப்பு அமைஞ்சுருக்கு அதை அவங்களை சரியா யூஸ் பண்ணவிடுங்க, வேற எந்த காரணமும் இல்லாம, பொண்ணுங்கற ஒரே காரணத்துக்காக கிடைக்கற வாய்ப்ப தவற விடுறது எனக்கு சரியாப்படல, என்னோட பிரண்ட் ஒருத்தன் அங்க இருக்கான். அவன்கிட்ட சொல்லி பவித்ராவ பார்த்துக்க சொல்றேன். அப்புறம் உங்க விருப்பம் நான் கிளம்பறேன்” என்று எழுந்தவனோடு தானும் எழுந்தவள் “ஆமாம்மா. நம்ம பயத்துக்காக, பவி கனவை நாம பலி ஆக்க கூடாது.அதான் அவ பாத்துக்கறேன்னு சொல்றால்ல அப்புறம் என்ன. யோசிச்சு முடிவெடுங்க”என்றவள் கணவனோடு அவர்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.
மஞ்சுவும், குமாரும் அமைதியாக இருக்க தந்தையின் மடியில் படுத்து கொண்ட பவி “அப்பா என்னோட கனவுப்பா இது. இந்த வேலைய நான் எவ்ளோ பிடிச்சு செலக்ட் பண்ணுனேன்னு உங்களுக்கு தெரியும்ல அப்புறம் ஏன்ப்பா”என்ற மகளின் தலையை வருடியவர் “சரிடா நீ காஷ்மீர் போ. அப்பா எப்பவும் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்”என்று சொல்ல, அவரை தாவி அணைத்து கொண்டாள் மகள். மஞ்சு ஏதோ சொல்ல வந்தவர் மகளின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி யை கண்டு அமைதியானார்.
அங்கு சூர்யா வீட்டிற்கு வந்த இருவரும் அவர்கள் அறைக்கு சென்றனர். அறையின் உள்ளே சென்ற உடன் கணவனின் பின் புறமாக அணைத்து கொண்டாள் சைந்து. சூர்யா தடுமாறி நிற்க, அவளோ “ரொம்ப நன்றிங்க. பவிய காணாம நாங்க ரொம்ப பயந்துட்டோம். நீங்க அவளை கூட்டி வருவீங்கன்னு நம்பிக்கை இருந்துச்சு.ஆனாலும் அவளை நேர்ல பார்க்கற வரை எனக்கு உயிரே இல்ல. உங்களுக்குதான் நன்றி சொல்லணும்.ரொம்ப ரொம்ப நன்றிங்க”என்றவளை தன்னில் இருந்து விலக்கி நிறுத்தினான் சூர்யா.
சைந்து அவனை புரியாமல் பார்க்க, அவளை தன் முன் கொண்டு வந்து நிறுத்தியவன், இடையில் கைவைத்து பக்கத்தில் இழுத்து “நீ போலி டாக்டர்தானே”என்று கேட்க, அவளோ ‘நாம என்ன பேசறோம் இவரு என்ன சொல்றாரு. அதுவும் நான் கஷ்டப்பட்டு படிச்சதை போலினு சொல்றாரு’என்று கோவப்பட்டவளின் மூக்கு நுனி சிவந்தது.
மனைவியின் தோள் மீது கை வைத்து தன் முகம் அருகே அவள் முகத்தை கொண்டு வந்தவன் “புருஷனுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாத மக்கு எல்லாம் எப்படி டாக்டர் ஆகி இருக்க முடியும். இப்போ சொல்லு நீ போலி டாக்டர்தானே என்று அவள் கன்னத்தில் இவன் மூச்சு காற்று தீண்டி செல்லும் தூரத்தில் நின்று கேட்டவனின் கண்கள் சொன்ன சேதியில் நாணம் கொண்டவள் பார்வையை தழைத்து “இது எல்லாம் கூடவா காலேஜ்ல சொல்லி தருவாங்க”என்றாள் வெட்க குரலில்,
சூர்யா, “அப்போ சொல்லி கொடுத்தா காத்துப்பியா”என்றவன் ஹஸ்கி குரலில் காது மடல் சிவக்க நின்றவள் “ம்ம்…”என்று சொல்ல, மனைவியின் சம்மதம் கிடைத்தவுடன் அவன் மேலும் அவள் முகத்தை நெருங்க, அவளோ எழுப்பாத குரலில் “ப…. பயமா…. இருக்கு”என்றாள்.
சூர்யா, “என்ன பயம் நீ எல்லாமே….. தியரியா படிச்சுருப்பதானே”என்று கேட்க, அவள் இதயம் வேகமாக துடிக்க, அவனையே பார்த்திருந்தாள். மனைவியின் விழி அழகில் வீழ்ந்தவன் “உனக்கு பட்டர்பிளை பிடிக்குமா”என்றான். என்ன சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசறான் என்று நினைத்தாலும் “பிடிக்கும்…”என்றவள் சொல்லி முடிக்கும் முன் அவன் மென்மையான இதழ் ஆடவனால் சிறை பிடிக்கப்பட்டது. பயத்தில் அவள் இமைகளை பட படவென திறந்து மூட தன் இமைகளை அவள் இமைகளோடு இணைத்தான். இமைகள் இரண்டும் உரசி செல்வது இரண்டு பட்டாம்பூச்சிகள் தன் இறகுகளை உரசுவது போல் இருக்க, இருவரும் தங்களுடைய முதல் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தனர்.
சிறிது நேரம் கடந்து மனைவியை விட்டு பிரிந்தவன். இதுதான் பட்டர்பிளை கிஸ். இதை குடுத்துதான் புருஷன் கோவமா இருந்தா சமாதானபடுத்தணும், நன்றி சொல்லனும்னாலும் சொல்லணும் புரிஞ்சுதா. இப்போ நன்றி சொல்லு”.
சைந்து, “என்ன மறுபடியுமா……”என்று திகைத்தவள் பின் “இப்போதானே….” என்று இழுத்து அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாற,சூர்யாவோ வேண்டுமென்றே முகத்தை கண்டிப்பாக வைத்து கொண்டு “அது எல்லாம் முடியாது. நான் உனக்கு சொல்லி கொடுத்தேன். அதெல்லாம் கணக்குல வராது. நீ இப்போ நன்றி சொல்லு”என்றவன் அவள் இதழ்களையேஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தான். சைந்தவியோ அவனை பாவமாக பார்த்தாள்.
‘என்ன இந்த போலிஸ்கார் ஒரு மார்க்கமா பார்க்கறாரு. பார்வையே சரி இல்லையே, நன்றி சொல்ல நினைச்சது ஒரு குத்தமா. இப்படி கேட்கறாரு. நான் எப்படி என்று தனக்குள் எண்ணி கொண்டு இருந்தவள்’கைகளை பிசைந்தவாறு நிற்க, சூர்யாவிற்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது, இருந்தாலும் அவள் இதழ் தீண்டலை விரும்பியவன் அவளை சீண்ட துவங்கினான்.
“சரி…. சரி நீ தத்தி ஸ்டுடென்ட்னு எனக்கு புரிஞ்சு போச்சு. ஒருதடவை சொன்னா எல்லாம் உனக்கு புரியாது அப்படிதானே. கிளாஸ்ல நீதானே லாஸ்ட்டு,பரவால்ல விடு, எத்தனை முறைனாலும் நான் பொறுமையா உனக்கு சொல்லித்தரேன். உனக்கு கிடைச்ச டீச்சர் ரொம்ப பொறுமையானவன் சோ கவலைப்படாத”என்றவனை கண்டு முறைத்தவள் கண் முன் அன்று ஹாஸ்பிடலில் அந்த அமைச்சர் வாங்கிய அடி நினைவு வர ‘இவரு பொறுமையான ஆளாம். பாத்துக்கோங்க மக்களே. இவரு வாயினு ஏதேதோ பேசறாரு’என்று முணகியவளுக்கு கணவன் தன்னை தத்தி என்றது நினைவு வர, அவன் அசந்த நேரம் வேகமாக அவன் இதழில் பட்டும் படாமல் தன் இதழை பொருத்தியவள், கண் இமைகளை இமைத்து உடனே விலகி வெளியில் ஓடி விட்டாள்.ஆணவனோ அவள் செயலில் கிறங்கி போய் அப்படியே நின்றுவிட்டான்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தானோ சைந்து மீண்டும் வந்து கதவு தட்டும் போதுதான் தன்னிலை அடைந்தான்.
சைந்து, “வாங்க சாப்பிடலாம். தோசை ஊத்தி வச்சுருக்கேன்”என்று அலைப்புறும் பார்வையுடன் சொன்னவளை கண்டு சிரித்தவன்,”ம்ம்…இதோ குளிச்சுட்டு வரேன்”என்றுவிட்டு குளியலறை நோக்கி சென்றான்.
குளித்து முடித்து வந்தவனுக்கு உணவை மேலே அறைக்கே சைந்து எடுத்து வந்துவிட, தலையை துவட்டி கொண்டே வெளியில் வந்தவன் “இங்கயே கொண்டு வந்தாச்சா”என்று கேட்டவாறு சென்று சார்ட்ஸ் அணிந்து வந்தவன் தோசை சாப்பிட ஆரம்பித்தான்.
சைந்து சூர்யாவை பார்ப்பதும் பின் தோசை சாப்பிடுவதுமாக இருக்க, அதை கண்டும் காணாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தான். ஒரு அளவுக்கு மேல் முடியாதவன் “என்ன போலி டாக்டர் என்னை சைட் அடிக்கறீயா”என்று நமுட்டு சிரிப்புடன் கேட்க, அவனை விதிர்த்து போய் பார்த்தாள் சைந்து.பின் அவன் முகத்தில் இருந்த சிரிப்பை கண்டு ஆசுவாசம் அடைந்தாள்.
“என்ன….”என்று கேட்டவனிடம், “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்”என்றாள். சொல்லு என்பதை போல் பார்த்தவனிடம் “பவி எங்க இருந்தா. அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே. எங்க இருந்து அவளை கூட்டிட்டு வந்தீங்க. ஒரு வேலை அ…. அன்னைக்கு மாதிரி யாரும் அவளை……”என்று நடுங்கிய குரலில் கேட்டவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவன் அவள் அருகில் சென்று ஆறுதலாக அணைத்து “தேவி நீ பயப்படற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. அவ உண்மையாவே பீச்லதான் நின்னுட்டு இருந்தா, ரவுண்ட்ஸ் போன இடத்துல பார்த்து கூட்டிட்டு வந்தேன்”என்றான்.
சைந்து அப்போதுதான் அமைதியானவள் “இப்போதான் நிம்மதியா இருக்கு. உண்மையாவே நான் ரொம்ப பயந்துட்டேன். அன்னைக்கு மாதிரி எதுவும் ஆச்சோனு”என்றவள் மனநிலையை மாற்ற நினைத்தவன் “உன் தங்கச்சி ஒன்னும் உன்னை மாதிரி தத்தி இல்ல, தெறிச்சு ஓட, அவகிட்ட வம்பிலுத்த நாலு பேர அடி வெளுத்து எடுத்துட்டா, அவனுங்க அடி தாங்க முடியாம ஓடிட்டாங்க தெரியுமா. பொண்ணுன்னா அப்படி தைரியமா இருக்கணும். நீயும்தான் இருக்கியே புருஷன பார்த்தே பயந்து ஓடற”என்றவன் அவள் மூக்கை பிடித்து ஆட்ட, அவளோ அவன் கைகளை தட்டிவிட்டு போலியாக முறைத்து, பின் சிரித்துவிட்டாள்.ஆனால் அப்போது அவன் அறியவில்லை,சொன்ன வார்த்தைகள் அவனுக்கே எதிராக திரும்பும் என்று,
சைந்து “உண்மைதாங்க அவ ரொம்ப தைரியசாலி அதனாலதான் நாங்க எவ்ளோவோ தடவை சொல்லியும் கேட்காம ரிப்போர்டராதான் ஆவேன்னு பிடிவாதமா இருந்தா”என்று சொல்ல, இருவரும் தங்களுக்குள் இருக்கும் இடைவெளி மறந்து சாதாரணமாக பேச துவங்கினர்.
வெகு நேரம், பேசி கொண்டு இருந்தவர்களுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள்பற்றி, பின் சுற்றி நடக்கும் விஷயங்கள்பற்றி என அனைத்தையும் பற்றி பேசினர்.
முதலில் மணியை கவனித்தது சைந்துதான் “அச்சச்சோ…..பேசுனதுல டைம் போனதே தெரியலைங்க. மணி ரெண்டாச்சு பாருங்க. வாங்க தூங்கலாம். காலைல வேலைக்கு போகணும்ல”என்று சொல்லி படுக்க, சூர்யாவும் அவள் அருகில் வந்து படுத்து கொண்டான். அவனையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவளை கண்டு “என்ன போலி டாக்டர் இன்னைக்கு அடிக்கடி என்னை சைட் அடிக்கற மாதிரி இருக்கு”என்க,
சூர்யா,”டைம் வரும்போது கேட்கறேன். இப்போ நீ தூங்கு. குட் நைட்”என்றவன் உறங்க துவங்க, அவளும் அவனை பார்த்து கொண்டே உறங்கி போனாள்.
சூர்யா பேசி சென்றபின் குமார், மஞ்சு இருவர் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் ஓடிவிட,மகள் கனவிற்காக பவி காஷ்மீர் செல்ல தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.
பவி காஷ்மிர் கிளம்புவதால் சூர்யா, சைந்து ரிசப்சன் விரைவில் வைக்கலாம் என்று மஞ்சு ஆசைப்பட, பவியோ “ம்மா…எல்லாத்தையும் அவசர அவசரமா உங்க விருப்பத்துக்கு பண்ணனும்னு நினைக்காதீங்க. நான்தான் மேரேஜ் பார்த்துட்டேன்ல அப்புறம் என்ன. ராதிகா ஆண்டி அவங்க பையன் கல்யாணத்தை எப்படி எல்லாம் நடத்தணும்னு ஆசைப்பட்டிருப்பாங்க.ஆனா பாருங்க எப்படி ஆச்சுனு. ரிசப்சன் அவங்க விருப்பம் போல் நடக்கட்டும். நான் இல்லைனா என்ன பரவால்ல விடுங்க”என்றுவிட, அவள் சொல்வதில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்ட மஞ்சுவும் அதன்பின் அமைதியானார்.
ராதிகா ரிசப்சன் சம்மந்தமான வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார். நெருங்கிய சொந்தங்களை எல்லாம் நேரில் சென்றுதான் அழைக்க வேண்டும் என்று மகனிடம் சொன்னவர் அவர்களது கிராமத்திற்கு கிளம்பிவிட்டார். கணவன் மனைவிக்கு அந்த தனிமை இனிமையாகதான் இருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டனர்.
ஒன்றாக இருவரும் காலை நேரம் தோட்டத்தில் நடப்பது. மஞ்சு வீட்டில் சென்று சாப்பிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புவது, மாலை பொழுதில் வெளியே எங்கேயாவது சென்று வருவது என்று இருந்தனர்.பவி காஷ்மீர் செல்லும் நாளும் வந்தது.
சூர்யா விருப்பம் இல்லையென்றாலும் மனைவிக்காக ஏர்போர்ட் செல்ல, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்தது. சூர்யாவை பார்த்தவுடன் சலியூட் அடித்தவர்களிடம் தலையசைத்து ஏற்று கொண்டவன் “எதற்கு இவ்வளவு பாதுகாப்பு” என்று கேட்க, அதற்கு அந்த காவலரோ “டாப் ஆக்டர் வருண் கிருஷ்ணா சூட்டிங்காக காஷ்மீர் போறாரு சார். அவர் பாதுகாப்புக்குதான்”என்றார்,
அவர் சொல்வதை கேட்டு உற்சாகமான சைந்து “என்ன வருண் கிருஷா….. வாவ்.. அவரு எவ்ளோ அழகா நடிப்பாரு. அவர் படம் எல்லாமே எங்களுக்கு பிடிக்கும். ஹேய் பவி வருணும் காஷ்மீர்தான் வர்றாராம் அவரை பார்க்கற சந்தர்ப்பம் கிடைச்சா ஒரு ஆட்டோகிராப் வாங்குடி. போலிஸ்கார் உங்க பவர யூஸ் பண்ணி வருண மீட் பண்ண ஏற்பாடு பண்ணுங்களேன். அவருகிட்ட போய் நீங்க நல்லா நடிக்கறீங்கன்னு சொல்லிட்டு ஒரு போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்திடறேன்” என்று தங்கையிடம் துவங்கி கணவனிடம் முடிக்க, சூர்யா காதில் புகை வர துவங்கியது.
தங்கை முதல் முறை தன்னை பிரிந்து செல்லும் கவலை தெரியாமல் இருக்க,சைந்து பேசி கொண்டே வந்தாள். இடையில் பவியையும் பேச்சிற்குள் இழுத்தாள். “ஹேய் பவி என்னடி அமைதியா இருக்க.உனக்கும் அவரை பிடிக்கும்தானே”என்று ஆர்வமாக கேட்க, சூர்யாவிற்கு நவதுவாரத்திலும் புகை வர ஆரம்பித்தது. தன் மனைவி மற்றொருவனை உயர்வாக பேசுவதை கண்டு,
பவி அக்காவின் முயற்சி புரிந்து கொண்டவள் போல் “ம்கூம்….. எனக்கு பிடிக்கல. அழகா இருக்கோம், நல்லா நடிக்கறோம்னு அவனுக்கு சரியான ஹெட் வெயிட். ஒரு தடவ பிரஸ்மீட்ல ஓவரா பேசினான். அதுல இருந்து அவனை எனக்கு பிடிக்கறதே இல்ல”.
“ஹேய் உனக்கு ஏன்டி அவரை பிடிக்கணும். நீ என்ன கல்யாணமா பண்ண போற”என்று சொல்ல, “சைந்து….”என்று கோபமாக கத்தினாள் பவி.
சைந்து, “சரி…. கோவப்படாத. அவர் ஒரு நடிகர் அவரோட அந்த திறமைய நாம பாராட்டினா போதும். இந்த மாதிரி பேமஸா இருக்கவங்க திமிரா இருக்கறதுல தப்பு இல்லடி”என்று பேசி கொண்டிருக்க, பவியோ ‘நீ என்னவோ பேசு நான் போறேன் என்னும் விதமாக செக் இன் செய்ய போய்விட்டாள்.
தங்கை செல்வதை கண்டு கடுப்பான சைந்து “இங்க பாருங்க போலிஸ்கார் நான் பேசிட்டு இருக்கேன். அவப்பாட்டுக்கு போறா”என்று குற்ற பத்திரிக்கை வாசிக்க, அவனோ அவளை முறைத்து “அந்த ஆக்டர்க்கு புகழாரம் சூட்டி முடிச்சுட்டேன்னே நாம கிளம்பலாமா”என்றவன் கோபமாக கேட்க, அவளோ ‘ஏன் போலிஸ்கார் மூஞ்சு ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி இருக்கு’ என்று யோசித்தவள் பின் அவனிடமே கேட்க எண்ணி “ஏன் போலிஸ்கார் கோவமா இருக்கீங்களா என்ன. ஆனா ஏன்? இப்போ என்ன நடந்தது?”என்று கேட்டு கொண்டே அவன் பின்னால் ஓடினாள்.
ஆம்,அவன் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னோடு அவளால் ஓடதான்முடிந்தது. டக்கென்று தன் நடையை நிறுத்தியவன் அந்த ஏர்போர்ட்டின் ஒதுக்கு புறமான இடத்திற்கு வந்திருந்தான். திடீரென்று நிற்கவும் அதை எதிர் பார்க்காதவள் அவன் முதுகில் இடித்து நின்று “என்னாச்சு போலிஸ்கார்”என்று கேட்க, அவனோ கோபமாக “நீ பேசுன பேச்சுக்கு எதுவும் சொல்லாம அமைதியா வரேனேன்னு சந்தோஷப்படு”என்று சொல்ல,
சைந்தவியோ “இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீங்க இவ்ளோ கோபமா இருக்கீங்க. ஒரு திறமையான ஆளை பாராட்டுனது ஒரு……”என்றவள் மேலும் என்ன சொல்ல வந்தாளோ, அதற்குள் அந்த வார்த்தைகள் சூர்யாவின் இதழ்களால் சிறை செய்யப்பட்டது.