காரில் சென்னையை நோக்கி ஆரோன் மற்றும் அகிலன் அமைதியாக வந்து கொண்டிருக்க, அந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஆரோனின் போன் சத்தம் போட்டது.
“யாருடா அது….. இப்போ தான் ஒன்னு முடிஞ்சிது ன்னு பாத்தா ….மீண்டும்மா…. மொதல்ல இந்த போன கண்டு புடிச்சவன தூக்கி ஜெயில்ல போடணும்”
என்று புலம்பியபடி போனை எடுத்துப் பார்த்தான், திரையில் மின்னியது டெரர் அக்ஷரா என்ற பெயர். அதை கண்டு வேகமாக போனை எடுத்தவன் மிக பவ்வியமான குறளில்
“சொல்லு அக்ஷரா, இந்த அண்ணனுக்கு எதுக்கு கால் பண்ணீங்க டா” என்றவன் குறளில் பதட்டம் அவளுக்கு தெரியவே செய்தது.
பின்ன பயம் இருக்காதா என்ன? வீட்டின் கடைக்குட்டி, அதுவும் இன்றி யாரிடம் எப்படி பேசி அவளுக்கு வேண்டியதை நடத்த முடியும் என்று அனைத்தும் அறிந்த தந்திர மானவள்.
ஆரோனின் ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கிறாள் வேறு, அது வெளி வராமல் இருக்கவே இவன் இத்தனை பவ்வியமாக பேசுகிறான்.
மறுபக்கத்திலிருந்து அக்ஷரா,
“எங்க இருக்கீங்க பெரிய அண்ணா” என்றவளின் பாசமான குரலில் உஷாராகி, இத்தனை ஆண்டில் ஏதோ ஓரளவு அவளை புரிந்தவனாக மிக சாமர்த்தியமாக அவனை நோக்கி வந்த அக்ஷரா அம்மை தம்பி புறம் திருப்பி விட்டான்.
“அது நான் அகிலன் கூட காரில் இருக்கேன், அக்ஷரா. அவன் கூட பேசுறியா? இதோ குடுக்குறேன்” என்று போனை ஸ்பீக்கரில் போட்டு அகிலன் புறம் நீட்டிவிடவும்,
அவனை திரும்பி முறைத்துப் பார்த்தவன்
“ம்ம்ம், சொல்லு அக்ஷரா, என்ன வேணும்?”
என்று நேராக நீ சொல்ல வந்த விஷயம் என்ன என்றவனுக்கு, ஆரோனிடம் பேசியது போல பேசாமல் சாதாரணமான குரலிலேயே,
“வரும்போது நான் ஆர்டர் பண்ணிருந்த சேரியை வாங்கிட்டு வரணும்” என்ற அக்ஷராவிடம் அவளுக்கு ஏற்றாற்போல் பேரம் பேச தொடங்கினாள்
“வாங்கிட்டு வந்தா?” என்றவனின் பேச்சில் அகிலனுக்கு ஏற்றார் போல அக்ஷரா வும் பேச தொடங்கினாள்.
“அக்கா எங்கேஜ்மென்ட் பன்ஷனுக்கு நீ வரவேண்டாம். பெரியப்பா கிட்ட நான் சமாளிச்சி கிறேன் ”
“அப்போ ஓகே டீல்” என்று ஏதோ கம்பெனி டீல் போல லாக் செய்தவனைத் தான் வியந்து போய்ப் பார்த்தான் ஆரோன்.
“ம்ம்ம், ஓகே, பில் ஃபோன்ல சென்ட் பண்ணுறேன்” என்று அக்ஷரா போனை வைத்துவிட்டாள்.
இவர்கள் பேச்சுவார்த்தையைக் கையில் போனைப் பிடித்தபடி பார்த்திருந்த ஆரோன்,
“சரியான ஆளு அவ, யார் கிட்ட எப்படி பேசுனா வேலை ஆகும்னு தெரிஞ்சிட்டு பேசுறா பாரு, அவ புலச்சிப்பா! எனக்குத் தான் இதெல்லாம் தெரிய மாட்டிக்குது” என்று பெருமூச்சி விட்டவனை திரும்பிப் பார்த்துச் சிரித்தவன்,
“அதைத்தான்டா நானும் சொன்னேன். எங்க என் பேச்சைக் கேக்குறீங்க? இந்த வீட்டுல என்ன ஒரு மனுஷனா மதிச்சாதான?”
“ஏன்டா, இப்போ உனக்கு இந்த அரசியல் வேணாமா டா?”
“ஏதோ புதுசா கேக்குற மாதிரி கேக்காதடா. எனக்கு இது வேணான்னு அடம்பிடிச்சு அப்பா கிட்ட மட்டும் இல்லாம பெரிய அப்பா கிட்டயும் திட்டு வாங்கினதை மறந்திட்டியா டா?”
என்பதற்கும் அளவான சிரிப்பைப் பதிலாகக் கொடுத்தவனைப் பார்த்து அலுத்துக் கொண்டவன்.
“அது எப்படிடா ? அண்ணா அரசியல் வேணான்னு கம்ப்யூட்டர் இன்ஜினியர் படிக்கிறேன்னு சொன்னதுக்கும் ஒன்னும் சொல்லல, நீ அண்ணன மாதிரி அதையே படிக்கிறேன்னு வந்து நின்னதுக்கும் ஒன்னும் சொல்லல.
ஆனா நான் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிக்கிறேன்னு வந்து நின்னதுக்கு அத்தனை பேரும் வந்து பேசி மூளைய கழுவி, திட்டி, பாலிடிக்ஸ் படிக்க வச்சிடீங்களே டா?”
என்று புலம்பியவன் தோளில் கை வைத்த அகிலன், “அதுக்குத் தான் ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாதுன்னு சொல்றது” என்றவனை முறைத்தவன், கோபமாக தலையைத் திருப்பிக் கொண்டு மீண்டும் மௌனமாகிவிடவும், அகிலனும் அமைதியாக அக்ஷரா சொன்ன கடைக்கு காரைத் திருப்பினான்.
கார் வேறு சாலைக்குத் திரும்புவதைப் பார்த்த ஆரோன், “இப்போ அக்ஷரா சொன்னதும் செய்றியே டா? ஏன், உனக்கும் அவள பார்த்தா என்ன மாதிரி பயமா?”
என்றவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவன், “இப்பவும் அதையே தான் சொல்றன், பலவீனம்! அது இருந்தா தான் பயம் வரும் ப்ரோ, எனக்கு தான் அப்படி ஒன்னு இல்லையே!” என்றவன் புறம் திரும்பியவன்
“அப்புறம் எதுக்கு அவ கேட்டதும் ஒத்துக்கிட்ட?”
“எனக்கு இந்த ஃபேமிலி பஞ்சாயத்தெல்லாம் ஒத்துக்காது. அங்க போனா பெரியப்பா அப்பா ன்னு அவங்க பேசுறதக் கேட்டு என் டைம் வேஸ்ட் ஆகுறதுக்கு நான் என் கம்பெனில ஜாலியா என் சிஸ்டத்தோட இருந்துருவேன்” என்று தோள்களை உலுக்கியவனை
“அகிலா, அப்போ என்னையும் கூட்டிட்டுப் போய்டுடா. நீயும் இல்லனா என்ன மட்டும் தனியா வச்சி சேஞ்சிருவாங்க டா”
“இதுல என்னால எதுவும் பன்ன முடியாது அண்ணா. எனக்கே அக்ஷரா தான் ஹெல்ப் பண்ண போறா”
என்றவன் பேச்சில் தலையில் கை வைத்தவன், “அப்போ இப்பவும் நான் தான் மாட்டுனேனா?”
என்று பாவம் போல உட்கார்ந்து விடவும், அவனைக் கண்டுகொள்ளாது அந்தப் பெரிய கடையின் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவன்.
காரைத் திறந்து கொண்டு இறங்கி, அவன் பாட்டுக்கு உள்ளே நடக்கத் தொடங்கவும், அவன் பின்னயே வேகமாக ஓடி வந்து இணைந்து கொண்ட ஆரோன்.
“டேய் நில்லு, நானும் வரேன்” என்று இருவருமாக உள்ளே நுழைந்தனர்.
அந்த கடையின் கீழ் தளம் முழுக்க திருமணத்திற்கான பட்டுகளைக் கொண்டு அந்த அறையே தங்கமாக ஜொலித்தது,
அதைச் சுற்றிப் பார்த்தபடி உள்ளே நடந்தவன் பில் கவுன்ட்டரை நோக்கிச் சென்றவன் கண், அங்கு கண்ணாடி முன்னே மயிலென நின்றவளின் அழகில் மயங்கி அப்படியே நின்று விட்டான்.
இவன் அங்கேயே நிற்பதை உணராத ஆரோன், “நான் போய் சாரி வாங்கிட்டு வந்திரேன் டா. நீ இங்கயே நில்லு” என்று தனியாகப் புலம்பி விட்டுச் சென்று விட்டான்.
ஆர்டர் கொடுத்து நெய்து வரும் புடவைகள் மேல் தளம் என்பதால் ஆரோன் அங்கே சென்று விட, அங்கே அகிலன் இருக்கும் இடம் மறந்து, அவன் யார் என்பதையும் மறந்து, அவளின் வதனம் கண்டு மெய்மறந்தே போனான்.
மயிலின் தோகையை மடித்துப் புடவையாக உடுத்தியிருந்தவள், அதன் ஜொலி ஜொலிப்பில் அவள் திருமுகமும் சேர்ந்தே ஜொலித்ததோ என்று ஆராய்ச்சியில் இவன் இறங்கி விட, இப்படி ஒருவன் பார்ப்பது கூட அறியாத செல்லம்.
கண்ணாடியில் அவள் வின்பத்தை ரசித்தபடி இருந்தாள். அவளுக்கு அந்தச் சேலை அத்தனை பாந்தமாகப் பொருந்திப் போயிருப்பதைப் பார்த்த பையனின் அம்மா, அந்தப் கடை பெண்ணிடம்
“புடவை விலை எவ்வளவு மா?” என்று கேட்டதற்கு, அந்தப் பெண் சொன்ன தொகையைக் கேட்டவர், “என்னம்மா, இதுக்கு போய் இத்தன சொல்றீங்க?”
“அது வெள்ளி ஜரிகை வச்சி நெய்ஞ்சதுங்க” என்று சொன்னதைக் கேட்டு அவர், “இல்ல, எங்களுக்கு இதுவேனா வேற காமிங்க” என்று சொல்லி விடவும், அதைக் கேட்டுக் கொண்டிருந்த செல்லம்
கண்ணாடி வழியே அவளின் தாயைக் கண்டு கண்கள் சுருக்கி, “ப்ளீஸ் மா…” என்று இவள் கெஞ்சியதைப் பார்த்துக் கொண்டிருந்த அகிலன் அவளின் குவிந்த உதட்டில் குவியலாக சிதரியே போனான்
அவளை நோக்கி செல்ல துடித்த காலையும் அவளை பிடித்து அனைக்க துடித்த கையையும் கட்டு படுத்தி கையில் வைத்திருந்த போனை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவளை தான் அசையாது பார்த்தான்.
கணினி யை விரும்பி படித்தவன், அதை போலவே உணர்ச்சி இன்றி அவனுக்கு சாதகமான அனைத்து முடிவுகளையும் எடுப்பவன்.
உணர்ச்சிகளை எப்போதும் கட்டுக்குள் வைத்து எதையும் யாரையும் இவன் அருகில் நெருக்கமாக வைத்து கொள்ளாதவன் இன்று அவளிடம் மயங்கி சுற்றம் மறந்து நின்று கொண்டு இருக்கிறான்.
செல்லம் என்ன செய்தும் அந்தப் புடவை அவளுக்கு இல்லை என்று ஆகி விடவும், அதை ஒரு முறை கைகளால் வருடி விட்டுக் கொண்டு வேறு பார்க்கத் தொடங்கினாள்.
அப்போது வெகு நேரமாக யாரோ இவளைப் பார்ப்பது போலவே தோன்றவும், எதார்த்தமாகத் திரும்பிப் பார்த்தவள் அகிலனைக் கண்டு கொண்டாள்.
கையில் போனைப் பிடித்தபடி ஒரு விதமாக ஈர்த்து இவளை விழுங்கி விடுவதை போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனின் பார்வையில் பயந்து விட்டாள்.
“என்ன இப்படிப் பாக்குறாங்க” என்று எண்ணியவள் பயந்து அம்மா அருகே சென்று, அவர் முன்னே பயந்து ஒன்றி நின்று விட்டாள்.
செல்லம் இவனைப் பார்த்து, பின் பயந்து அவள் அம்மா அருகே சென்று நின்றது என்று அனைத்தையும் பார்த்து அதையும் ரசித்தவனாக, கண்கள் சிரிக்க அவள் அருகே மெல்ல எட்டு வைத்து அவளைப் பார்த்தபடியே நடந்து வரவும்
அதில் மேலும் பயந்தவளாக, என்ன செய்ய? அம்மா கிட்ட சொல்லலாமா வேண்டாமா? சொன்னால் பிரச்சனை ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து, புடவை கூடப் பார்க்காது முழித்தபடி திரும்பித் திரும்பி இவனைப் பார்த்தபடி நிற்க
அவளின் பதட்டமான முகத்தை கண்கள் வழியே பருகிய படி அவளின் முகத்தில் மேலும் பதட்டம் தரவே, அவள் அருகே மேலும் நெருங்கி வந்து கொண்டிருந்தான் .
“அச்சோ கடவுளே, யாரு இவன், இப்படி கிட்ட வரானே?” என்று பயந்தவள் என்ன செய்வது என்று புரியாது சேகரை பார்த்தாள். அவன் போனில் ஏதோ வேலையாக பேசிக் கொண்டு இருந்தான்.
அவனை பார்த்தவள் இவனிடம் இருந்து தப்பிக்கவே எண்ணி அவன் புறம் சென்று சிரித்தபடி நின்று கொண்டாள். செல்லம் சென்றதும் சேகரும் போனை அணைத்து வைத்துவிட்டு இவளுடன் பேச தொடங்கிவிடவும், அவனிடம் பேசிய படி செல்லம் மெல்ல அகிலம் புறம் திரும்பி பார்க்க, அவன் அங்கு இல்லை.
“எங்க, இங்க இருந்தவன்?” என்று அவள் வேகமாக தலையை திருப்பி திருப்பி பார்க்க, அவனை காணவில்லை. அதில் பிடித்திருந்த மூச்சை இழுத்து விட்டவளாக சேகர் புறம் திரும்ப, அவன்
“என்ன செல்லம், யாரை தேடுற?” என்றவனுக்கு சிரித்தபடி, “யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்திச்சி” என்று சமாளித்து விட்டு மீண்டும் புடவையை பார்க்க தொடங்கிவிட்டாள்.
பின் புடவை அனைத்தையும் எடுத்து முடித்து வீடு திரும்பியவள் நடு இரவு கண்ட கனவில் அடித்துப் பிடித்து தான் எழுந்தாள்.
முகம் முழுக்க வியர்க்க எழுந்து அமர்ந்தவள் நேரத்தை பார்த்துவிட்டு தண்ணீரை எடுத்து பருகினாள்.
“யாரு அவன், என்ன கனவு இது?” என்று கைகள் நடுங்க அமர்ந்திருந்தாள். பின்ன நடுங்காமல் என்ன செய்வாள், என்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்ற நிலையில் கனவில் மாப்பிள்ளைக்கு பதிலாக அகிலன் வந்து காதல் செய்தால் பயம் வராதா என்ன?
இரு மாதங்களாக மாப்பிள்ளை என்று அரிமுகப்படுத்தி யவனிடம் பேசி பழகியும் சேகரின் முகம் இப்போது வரை மனதில் பதியாமல் இருக்க, ஆனால் ஒரு நாள், அதுவும் நிமிடத்திற்கு குறைவாக பார்த்தவனின் முகம் கனவில் வரும் அளவு பதிந்து போயிருக்கிறது என்றால் அது தவறு தானே.
என்று உள்மனம் குத்த, மனம் வருந்த வேர்க்க அமர்ந்திருந்தாள். என்னும் ஒரு மாதத்தில் திருமணம், அவனின் மனைவி ஆக போகிறாள்.
இந்நிலையில் என்ன இது என்று வருந்தியவளாக இரவு தூங்காமல், தவறு செய்த குழந்தையாக இறைவனிடம் வேண்டி ஒரு நோட்டை எடுத்தவள், அவள் செய்யாத தவறுக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுத தொடங்கினாள்.
கனவில் கண்ட காட்சி மறந்துவிட இவள் எழுத கடவுளே அதை எத்தனை வேகமாக நிஜத்தில் நடத்தி வைக்கும் வேலையில் இறங்கி இருந்தார்.
இப்படி இவள் இங்கு தூங்கா இரவில் தவித்து கொண்டு இருந்த அதே இரவில் தலையை பிடித்து கொண்டு கண்கள் சிவக்க, உக்கிரமாக செல்லம் கட்டி பார்த்த அந்த புடவையை கையில் வைத்து அமர்ந்திருந்தான் அகிலன்.