வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-81
164
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 81.
அர்ஜூன் மருத்துவனைக்குள் நுழைத்தான்.அங்கே தருணின் அப்பாவும், பிரதீப்பும் இருக்க, அர்ஜூன் அவரருகே வந்து,
அப்பா தருணுக்கு ஒன்றுமில்லை என்று சமாதானப்படுத்த, அவர் தலையில் அடித்துக் கொண்டு எங்க குடும்பத்துக்கே இப்படி தான் எழுதி இருக்கு போல..அழுதார்.
அழாதீங்கப்பா என்று அவனும், பிரதீப்பும் அவரை சமாதானப்படுத்த, என் பிள்ளைய இந்த நிலையிலா பார்க்கணும் என்று மீண்டும் அழுதார்.
மருத்துவர் வெளியே வந்து, இது பேசண்ட் கையில் இருந்தது என்று செயினை தருண் அப்பா கையில் கொடுத்தார். அதை வாங்கி விட்டு, என் பையன் எப்படி இருக்கான் சார்? அவனுக்கு ஒன்றுமில்லை தானே! கேட்டார்.
நல்ல வேலை சீக்கிரம் அழைத்து வந்தீர்கள் இல்லையென்றால் பார்த்திருக்கவே முடியாது. ஆனால் இப்பொழுது காப்பாற்றி விட்டோம்.ஆனால் நாளை விழித்தவுடன் தான் அனைத்தும் தெரியும் என்று நர்ஸிடம் பேசண்ட் விழித்ததும் கூறுங்கள் என்று அவர் சென்றார்.
நாங்க உள்ளே சென்று பார்க்கலாமா? பிரதீப் கேட்க, நோ..சார். அவர் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். ரொம்ப பெயின் இருக்கும். அவர் எழுந்தவுடன் சொல்லுங்கள் என்று அவரும் கிளம்பினார்.
தருண் அப்பா அவனை வெளியிருந்து பார்த்துக் கொண்டிருக்க,மற்றவர்களும் முன் வந்தனர். இதயா பின்னே நின்று கொண்டிருந்தாள் தயங்கிக் கொண்டே. அதை பார்த்து அர்ஜூன், அவளை இழுத்து தருண் அப்பாவிற்கு அருகே நிற்க வைத்தான். அவர் கலங்கிய நிலையில் இருக்க, இதயாவிற்கு அவனை இந்நிலையில் கண்டு அழுகை தாங்காமல் அழுது கொண்டே அங்கிருந்து சென்றாள். அவர் கவனம் அவள் மீது திரும்பியது.
நில்லு இதயா என்று இன்பா பின்னே ஓடி வர, அவர்களது அம்மாவும் பின் சென்றார்.அப்பொழுது தான் கையிலிருந்த செயினை கவனித்தார். பார்த்தாலே தெரிந்தது அது ஒரு பொண்ணோடது என்று.
அவர் அர்ஜூனை பார்த்தார். அபி முன் வந்து, அப்பா இது இதயாவுடையது.
அழுது கொண்டே சென்றாலே அந்த பொண்ணா? கேட்டார்.
அவன் தலையசைத்தான் பயந்தவாறு. தருண் அப்பா கொஞ்சம் கண்டிப்புடையவர்.
அவர் இதயா சென்ற திசை நோக்கி செல்ல, அபி அவரிடம் நான் கொடுத்து விடுகிறேன் அப்பா என்று கேட்க, அவனுக்கு அந்த பொண்ண பிடிக்குமா? கேட்டார்.
அப்பா, அது வந்து..என்று தயங்கிக் கொண்டே அவனது மாமாவை பார்த்தான். பிரதீப் கண்ணசைக்க, ஆமாப்பா என்றான்.
நானே பேசிட்டு கொடுத்துட்டு வாரேன் என்றார்.
நான் கொடுத்திடுறேன் அப்பா என்று அபி மீண்டும் முன் வர, நான் தான் சொல்றேன்ல..அவனை முறைத்துக் கொண்டே அவர் செல்ல, பிரதீப்பை பார்த்தான் அபி.
அவர் பேசட்டும்.
இல்ல மாமா. அவங்க ஏற்கனவே கஷ்டத்துல இருக்காங்க என்றான் அபி.
ஆமா, அவங்கள பத்தி நீ ரொம்ப கவலைப்படுற மாதிரி தெரியுதே!
அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா.
இங்க வா என்று அபியை தனியே அழைத்து சென்று, எனக்கு தெரியும்டா என்றார்.
மாமா..அதிர்ந்தான்.
சொல்லிட்டியாடா?
அவன் தலையை கவிழ்ந்து கொண்டே, அவங்க எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.
என்ன சொன்னாங்க?
எதுவுமே சொல்லல மாமா.
ஓ.கே விடு. வேற பொண்ணு பார்ப்போம்.
என்ன மாமா சொல்றீங்க? ஜானு என்றான்.
நீ அவளை காதலிக்கவில்லை என்று எனக்கு முன்பே தெரியும் என்றார்.
ஆனால் அவளை எப்படி மாமா சமாளிப்பது?
நான் பார்த்துக் கொள்கிறேன்.நீ அவளை பற்றி கவலைப்படாதே! பிரதீப் கூறிக் கொண்டிருக்க,அங்கே இன்பாவும் அவளது அம்மாவும் வந்தனர்.
அவர்களை பார்த்து இதயா? கேட்டான் அபி.
இன்பா கை காட்ட, அங்கே இதயாவும் தருண் அப்பாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அவர் கோபமா இருக்காரா? அபி கேட்டான்.
இல்லையே. நன்றாக தான் பேசினார்.
ஆன்ட்டி, உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையா? கேட்டான் அபி.
எனக்கு இன்று இருவரும் வீட்டிற்கு வந்த போதே புரிந்தது. இருவருக்கும் பிடித்திருக்கிறது என்று.
நீங்க என்ன சொல்றீங்க? அவர் தனியா பேசுறார்? அபி பதட்டமாக.
உனக்கு என்னடா பிரச்சனை? இரண்டு பேரும் ஒரே வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் பேசட்டும் என்றாள் சாதாரணமாக.
மேம் என்று அபி பேச வந்தான். பிரதீப் தடுத்து,வா..முதலில் உனக்கான பதிலை அவங்க அம்மாகிட்ட கேளு என்றார்.
இப்பவா?
இல்லை. இப்பொழுது வேண்டாம். நீங்க தனியா இருப்பது போல் சந்தர்ப்பம் அமைந்தால் கேட்டு விடு. அவர்களுக்கு தருணை பிடித்ததால் தான் இதயாவை தைரியமாக பேச விட்டிருக்கிறார்கள்.
நீ தான் முதற்படி எடுத்து வைக்கணும் என்று அபியை ஊக்கினார்.
இதயா அமைதியாக இருக்க, தருண் அப்பா அவளிடம் பேச ஆரம்பித்தார்.
உனக்கு என் மகனை பிடிக்குமா?
அவள் அவரை நிமிர்ந்து பார்த்து, ரொம்ப பிடிக்கும் என்றாள்.
எதற்காக பிடிக்கும்?
அவன் எப்பொழுதும் குடும்பத்தை பற்றி தான் சிந்திப்பான். அவன் அதிகமாக சாப்பிட மாட்டான். அவனுக்கு அவன் அம்மாவை ரொம்ப பிடிக்கும். அவனுக்கு கூட எதுவும் வாங்காமல் புவிக்கு தான் வாங்கித் தருவான். அவனுக்கு பிடிச்சவங்கள விட்டுக் கொடுக்கவும் மாட்டான். உங்களுக்கு கூட ஏதோ வாங்கப் போவதாக அபியிடம் பேசினான் என்று அழுதாள்.
அவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். மூக்கை உறிஞ்சி விட்டு கண்ணை துடைத்தவாறு அவனுக்கு வெள்ளை நிற ஆடை மிகவும் அழகாக இருக்கும். அவனுக்கு கோபம் அதிகமாக வரும். அவனுக்கு அகிலை பிடிக்காது. ஆனால் அர்ஜூனை மிகவும் பிடிக்கும். ஒரு பிரச்சனையிலிருந்து கூட அவன் என்னை காப்பாற்றினான். எனக்கு சில விசயங்களை புரிய வைத்தான்.
எங்க அப்பா இருந்த போது கொஞ்சம் வசதி தான். அவர் இறந்த பின் தான் எங்கள் நிலை மாறியது. அக்கா தான் படிக்க வைக்கிறாள். அவள் சம்பாத்தியத்தில் தான் குடும்பத்தையே நடத்துகிறோம். ஆனாலும் பழைய நிலையிலிருந்து நான் வெளியே வரவில்லை. அக்காவை வைத்து தான் அதிலிருந்து வெளியே வந்தேன்.பின் தான் அவனை பார்த்தேன்.
நாங்கள் இருவரும் காதலை கூட பரிமாறிக் கொள்ளவில்லை. அவனுக்கு என்னை பிடிக்குமான்னு கூட எனக்கு தெரியல. ஆனா எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.
அபி உங்க ஃபேமிலியை பத்தி சொல்லி, அவனை மறக்க சொன்னான். ஆனால் நான் இதுவரை எந்த விசயத்திலும் கஷ்டப்பட்டதே இல்லை. ஆனால் அவனுக்காக இன்று காலையிலிருந்து சாப்பிடவே இல்லை. தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தேன். ஆனால் என் உடலுக்கு சேரவில்லை. மயங்கி விட்டேன்.சாப்பிட கூட அவன் தான் வாங்கித் தந்தான். ஆனால் இப்பொழுது அவன்..என்று தேம்பினாள்.
அவள் பேசியதை கேட்டுக் கொண்டே,அவளது தலையை மெதுவாக வருடி. உன்னை அவனுக்கு பிடிக்கும் என்றார்.
நிஜமாகவே அவனுக்கு என்னை பிடிக்குமா?அவனை போல் நான் எந்த வேலையும் பார்த்ததே இல்லை. அவனுக்கு அதுவும் தெரியும்? அப்புறம் எப்படி அங்கிள் அவனுக்கு என்னை பிடிக்கும்?
பிடித்திருக்கிறதே! அவனுக்கு உடல் சரியில்லை என்றால் அவன் அம்மாவை நகரவே விட மாட்டான். அவளது பொருள் ஏதாவது அவன் கையில் இருந்தால் தான் விடுவான். இன்று அவன் கையில் இது தான் இருந்தது என்று அவளது செயினை இதயா கையில் வைத்தார். இது உன்னுடையது என்று அபி சொன்ன போதே அவனுக்கு உன்னை பிடித்துள்ளது என்று தெரிந்து தான் பேச வந்தேன்.
நீ அவனுக்காக தான் சாப்பிடாமல் இருந்தாய் என்று தெரிந்தால் கண்டிப்பாக கோபப்படுவான். அவனிடம் அதை கூறி விடாதே! அவனுக்காக நீ மாற வேண்டாம். சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டாலே போதும்மா. அவனுக்காக சாப்பிடாமல் இருக்க தேவை இருக்காது. அவன் நிலை மாறிய பின் தான் திருமணத்தை பற்றி யோசிப்பான்.
நீ ஒன்றை மட்டும் விட்டு விட்டாய்மா? அவன் பிடிவாதக்காரனும் கூட என்று சிரித்துக் கொண்டே எழுந்தார்.
அங்கிள்,என்னை உங்கள் அனைவருக்கும் பிடிக்குமா?
அவனுக்கு பிடித்து விட்டது தானே! எனக்கும் பிடித்து விட்டது.அவர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று கூறி விட்டு சென்றார்.
அங்கிள், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று காலில் விழுந்தான்.
அவனோட வாழ்நாள் முழுவதும் சந்தோசமா இருப்ப என்றார். அவள் அழுது கொண்டே, அம்மாவிடம் செல்ல
இதயா, என்னாச்சு? அபி வேகமாக அவளிடம் வர, என்னடா செய்ற? அவனை முறைத்தாள் இன்பா. அவன் அமைதியாக,
இதயா அம்மாவிடம், அம்மா..அவனுக்கு என்னை பிடிக்குமாம்.அங்கிள் சொன்னார்.
அவரா சொன்னார்? என்று அவரை பார்த்தான் அபி.அவரும் அவனை பார்த்துக் கொண்டே சென்றார்.
இதயா, அவரிடம் என்னை பத்தி ஏதும் சொன்னாயா?
ம்ம்..என்றாள்.
என்ன சொன்ன? போச்சு என்றான்.
நீ ஏன்டா பதட்டப்படுற? இன்பா கேட்க, அவர் ரொம்ப கோபப்படுவார் என்றார் சிறு பையன் போல்.
சந்துரூ சொன்னது சரிதான். அப்படியே சின்ன பையன் போல் பேசுகிறாய்?
சின்ன பையனா? இல்லை என்று கோபமாக உள்ளே சென்றான்.இதயா அவளது அம்மா மடியில் படுத்துக் கொண்டு, அம்மா எனக்கு தருணை பிடிக்கும்மா என்றாள்.
தெரியும்மா. எனக்கு இரண்டு பசங்களும் ஓ.கே தான் என்றார்.
இதயா இன்பாவை பார்க்க, அவள் அமைதியாக இருந்தாள்.
அக்கா உனக்கு அவனை பிடிக்கவில்லையா?
இன்பா அம்மாவிடம், அவன் என்னை விட சிறு வயதுடையவன். அவன் செய்வதை பார்த்தீர்கள் தானே! உங்களுக்கு அவனை எப்படி பிடித்தது?
அவன் சிறியவன் தான். ஆனால் பிரச்சனை என்றால் சரியாக சிந்திக்கிறான்.அழகாக இருக்கிறான்.அறிவான பையன் கூட.உன்னை மாதிரி பட்டென எதையும் செய்ய மாட்டான். அன்று அவன் சீற்றமான பேச்சிற்கு எதிர் கேள்வி கேட்காமல் அமைதியானாய். அவனை உனக்கு பிடித்துள்ளது. ஒத்துக் கொள்ள தான் உனக்கு விருப்பமில்லை என்று விட்டு,
உன்னை விட அந்த பையனுக்கு,உங்க துரை மாமா பொண்ணு வினு சரியா இருப்பான்னு நினைக்கிறேன் அவர் கூற, அம்மா என்று கோபமாக எழுந்தாள் அவளையும் மீறி இன்பா.