தாமரையின் நெஞ்சத்தில் தலை வைத்து படுத்திருந்தாள் மீனா. அவள் ஏதோ யோசித்துக் கொண்டிருக்க “என்ன டி தீவிரமா யோசிக்கிற போல?”, என்று கேட்டான்.
“ஆமா, எனக்கு ஒரு விஷயம் உங்க கிட்ட கேக்கணும்?”
“கண்டிப்பா ஏதாவது விவகாரமா தான் கேப்ப? கேளு டி அழகி”
“இது வரை எப்பவாது தோணிருக்கா? இல்லை இனி தோணுமா?”
“என்னன்னு?”
“வேற நல்ல பொண்ணைக் கட்டியிருக்கலாம்னு”, என்று கேட்க அவளை இமைக்காமல் பார்த்தான். அவன் பார்வையில் அவள் தான் தலையை திருப்ப வேண்டியது இருந்தது.
எங்கோ பார்த்தாலும் அவள் கண்களில் இருந்த அலைப்புறுதல் அவனுக்கு புரிந்தது. இப்போது அவனுக்கு அவள் மீது அளவில்லாத காதலும் நீங்காத நேசமும் இருக்கிறது என்று தெரிந்தாலும் அவ்வப்போது இப்படி கேட்டு அவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வாள்.
“இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கையே வரலையா டி அழகி? என்னைப் பத்தி தெரிஞ்சும் ரொம்ப கஷ்டமா இருக்கு”, என்றான்.
அதைக் கேட்டு அவள் கண்கள் லேசாக கலங்க அவள் அதை துடைக்கும் முன்பே அவன் விரல்கள் அதை துடைத்தது. அவள் இன்னும் நெருக்கமாக அவன் மார்பில் சாய்ந்து கொள்ள அவன் கரங்களும் அவளை அணைத்துக் கொண்டது.
அவள் லேசாக விசும்ப அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் இதழ்களில் முத்தமிட்டு அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பினான். அவளது கடந்த கால ரணம் மிகப் பெரியது என்று அவனுக்கு தெரியும் தான். அதனால் அவளுக்குள்ளே இப்போது கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை உண்மை தானா? இல்லை கனவா? கண்ணைத் திறந்ததும் கனவு கலைந்து விடுவோம் என்றெல்லாம் அடிக்கடி பயம் அவளை ஆக்கிரமிக்கும்.
நல்ல மன நிலையில் இருந்தால் தாமரையும் பொறுமையாக அவளுக்கு எடுத்துச் சொல்வான். வேறு ஏதாவது மனநிலை இருந்தால் நிச்சயம் திட்டி விட்டுச் சென்று விடுவான். பின் அவனே வந்து சமாதானப் படுத்தவும் செய்வான். இன்னும் சில நேரம் ஏதாவது செய்து அவள் கவனத்தை திசை திருப்புவான். இப்போதும் அதை தான் செய்தான்.
லேசாக ஆரம்பித்த முத்தம் தான், ஆனால் இப்போது அவள் இதழ்களை வலிக்கும் படி கடித்து வைத்தான். அவள் பழைய விஷயங்களை பேசினால் அவன் இப்படி தான் செய்வான் என்று தெரிந்தும் வாங்கிக் கொள்வாள். அவளுடைய மனதில் இருந்த கவலைகள் எல்லாம் எங்கோ மாயமாகிப் போனது.
ஏனோ அவன் கொடுத்த வலியில் அவள் நெஞ்சுக்குள் இருந்த கவலை எல்லாம் மறைந்து போக இதழ்கள் தீயாய் எரிந்தாலும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். இப்போது அவன் இதழ்களே அவளுடைய காயத்துக்கு மருந்து போட அவன் செய்கைக்கு இசைந்தாள்.
ஜில்லென்ற இதழ்களின் சங்கமம் அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. அவன் கரங்களும் லேசாக அத்து மீற முழுதாக அவனுக்கு அனுமதித்தாள். சிறிது நேரம் கழித்து அவளை விட்டு விலகியவன் அவள் இதழ்களை வருடியவாரே “வலிக்குதா?”, என்று கேட்டான்.
“கடிச்சு வச்சிட்டு கேள்வியைப் பாரு?”, என்று சொன்னவளுக்கு துளி கூட கோபம் இல்லை.
“அப்படினா நீ தேவையில்லாதது பேசாம இருக்கணும்? நீ கவலைப் பட்டா நான் இப்படி தான் மறக்க வைப்பேன். இனி இப்படி யோசிக்க கூடாது. எத்தனை தடவை சொல்றேன். இது நம்ம வாழ்க்கை. இதுல எதுவுமே மாறாது. என்னை நம்பு டி”, என்று சொல்ல சம்மதமாக தலையசைத்தவள் அவன் மார்பிலே சாய்ந்து கொண்டாள்.
“சரி வதனா கல்யாணம் பத்தி ராஜன் அண்ணா கிட்ட பேசணும்னு சொன்னீங்க? பேசுனீங்களா?”
“அன்னைக்கு பேசலாம்னு நினைச்சு கால் பண்ணுனேன் டி. ஆனா அவன் ஏதோ பொண்ணு பாக்க கிளம்பிட்டு இருக்கோம்ன்னு சொன்னானா? எனக்கு ஒரு மாதிரி ஆகிருச்சு. அப்புறம் பேசலை. பேச கூடாதுன்னு இல்லை. பொண்ணு பாக்க போன விஷயம் என்ன ஆச்சுன்னு கேட்டுருக்கணும். ஏதோ ஒரு தயக்கமா இருந்துச்சு. பேசலை”
“தப்புங்க, பேசிருக்கணும். யாருக்கு யார்ன்னு நம்ம கைல இல்லை தானே? அவருக்கு கல்யாணமே நிச்சயம் ஆகி இருந்தாலும் நாம சந்தோஷம் தான் படணும்? இப்ப கால் பண்ணி பேசுங்க. அன்னைக்கு போனது என்ன ஆச்சுன்னு கேளுங்க”
“சரி”, என்று சொன்னவன் அவனை அழைத்தான். அதை எடுத்த ராஜன் “ஏய் தாமரை சொல்லு டா. எப்படி இருக்க?”, என்று கேட்டான்.
“நல்லா இருக்கேன் டா?”
“மீனா, பாப்பா, அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“இதுல என்ன இருக்கு டா? அப்புறம் நானும் அது ஓகே ஆகிருச்சுனா உன் கிட்ட சொல்லிருக்க மாட்டேனா?”
“என்ன ஆச்சு டா?”
“அது சொந்தக்கார பொண்ணு டா. அவங்க தான் வரச் சொன்னாங்க. ஆனா அந்த பொண்ணுக்கு பிடிக்கலை போல? லவ் பண்ணுது போல? அப்படியே திரும்பி வந்துட்டோம்”
“அடுத்து எங்கயும் போகலையா?”
“எங்க அம்மா விட்டா கூட்டிட்டு தான் போயிருக்கும். ஆனா நான் பயங்கரமா திட்டி விட்டுட்டேன். இனி எதுவா இருந்தாலும் முடிவு பண்ணிட்டு சொல்லுங்க வறேன்னு”
“ஓ”
“சரி அதை விடு, நீ என்ன விஷயமா கால் பண்ணின?”
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்? நேர்ல பேசலாமா?”
“இப்ப கோர்ட்ல இருக்கேன். சாயங்காலமா பேசலாமா?”
“சரி நீ அங்க இருந்து கிளம்பும் போது சொல்லு, நானும் வரேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.
“பார்த்து பேசுங்க”, என்றாள் மீனா.
“சரிங்க மேடம்”, என்று சொல்லி சிரித்தவன் “இன்னைக்கு மேடம்க்கு லீவ்ன்னு ஒட்டிக்கிட்டு இருக்கீங்க? வேலைக்கு போய்ட்டா கண்டுக்கவே மாட்டீங்க?”, என்று சொல்லி வம்பிழுத்தான்.
“ஆமா, சார் மட்டும் வீட்லே இருக்குற மாதிரி தான். நைட் கூட வேலைக்கு போய்றீங்க?”, என்று அவளும் சலித்துக் கொள்ள அவர்கள் நேரம் நல்ல படியாக சென்றது.
அன்று மாலை டீ ஷாப்பில் அமர்ந்திருந்தார்கள் தாமரையும் ராஜனும். “சொல்லு டா மச்சான், ஏதோ சொல்லணும்னு வரச் சொன்ன? அமைதியா இருக்க?”, என்று கேட்டான்.
“இல்லை.. அது வந்து.,..”
“என்ன டா? எதுவும் பிரச்சனையா?”
“சே சே அப்படி எல்லாம் இல்லை”
“அப்புறம் என்ன டா?”
“இல்லை வதனாவுக்கு மாப்பிள்ளை பாக்கலாம்னு இருக்கோம்”, என்று ஆரம்பிக்க சிறு ஏக்கம் ராஜனுக்குள் வந்தது. ஆனால் அவளை கேட்பது பேராசை என்று அவனுக்கே புரிந்தது.
அதனால் “அவளுக்கு எதுக்கு அதுக்குள்ள கல்யாணம்? அவ படிச்சு கூட முடிக்கலையே?”, என்றான்.
“இல்லை தோணுது”
“அப்படியா? சரி எங்க அம்மா என் ஜாதகம் கொடுத்து வச்சிருக்குற இடத்துல கேட்டு பாக்கலாமா?”
“இல்லை வேண்டாம்”
“ஏன் டா? எனக்கு புரியலை”
“இல்லை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் வீட்ல பேசுனோம். உனக்கு உங்க வீட்ல அவசரமா பாக்குறாங்க. அதான் அவ மேரேஜ் முடிச்சிட்டு கூட படிக்கலாம்ல?”, என்று சொல்ல அவன் அகமும் புறமும் மலர்ந்தது.
“டேய் தாமரை நீ நிஜமாவா சொல்ற?”
“இது பொய் சொல்ற விஷயமா? உன்னை மாதிரி மாப்பிள்ளை யாருக்கு கிடைக்கும்? அதான் விட்டுக் கொடுக்க மனசில்லை. உன் விருப்பம் என்ன டா?”
“வதனா கிட்ட கேட்டீங்களா?”
“அவ மறுப்பு சொல்ல மாட்டா? அதுக்கு மேல உன் விருப்பம் என்னன்னு தெரியணும்ல?”
“எனக்கு சம்மதம் தான் டா. ஆனா என் சம்பாத்தியம்….”
“உன் பொண்டாட்டிக்கு சோறு போட முடியாத அளவுக்கு எல்லாம் நீயும் உன் குடும்பமும் இல்லை. இப்ப நீ சொல்லு. எனக்கு உண்மையாவே மச்சானா ஆகிறியா?”
“கேக்க நல்லா தான் இருக்கு. ஆனா நடக்குமா?”, என்று ராஜன் கேட்கும் போதே அவன் ஆசை புரிந்தது.
“நான் உங்க வீட்ல பேசட்டுமா? இல்லை நீயே பேசிட்டு சொல்லுறியா?”
“எனக்கு அம்மா அப்பா கிட்ட சொல்ல ஒரு மாதிரி இருக்கும் டா”, என்று சொல்லும் போதே ராஜன் முகம் சிவக்க நண்பனின் வெட்கத்தை பார்த்து வாய் விட்டு சிரித்தான் தாமரை.