தாராவிற்கும் மாப்பிள்ளைக்கும் நிச்சயம் நடந்தது. தாராவின் சொந்தங்களின் ஊடே சுவேராவும் இருந்தாள். பின் இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்டனர். இருவரும் வெளிநாட்டு இசைப்பேற்ப நடனமாட மற்றவர்களையும் அழைத்தனர்.
அதியா ஆரியனை ஓரப்பார்வை பார்த்தாள். அவன் புருவத்தை உயர்த்த, “ஆரு நாமும்” நடனமாடும் ஜோடியை பார்த்தாள். அவன் கையை நீட்ட, அதியா புன்னகையுடன் அவன் கையை பிடித்துக் கொண்டாள். ஆகர்ஷனாவும் தர்சனும் மகிழ்ச்சியுடன் குதித்தனர்.
ஷ்..என்று உத்தமசீலன் அவர்கள் தன் பக்கம் அமர்த்தினார்.
ஆத்விக் தயக்கமுடன் துருவினி அருகே வந்து அவளை பார்த்தான். அவள் அவனை பார்த்து விட்டு, அவள் தந்தையை பார்த்தாள். அவருக்கு விருப்பம் இருக்குமென்று தான் அவளுக்கு தெரியுமே! அவள் சிந்தனையுடன் ஆத்விக்கை பார்த்தாள்.
ஆத்விக் அவளிடம் கையை நீட்ட, துருவினி கையை அவன் கையில் கொடுக்க புன்னகையுடன் அவளுடன் சென்றான்.
சக்தி அவளுடன் படித்தவன் வந்திருக்க அவனுடன் முன் வந்தாள். லாவண்யா அமைதியாக அமர்ந்திருக்க, அவள் அம்மா சினத்தை விட்டு அவளருகே வந்து அமர்ந்தார். அவள் அவர் எண்ணத்தை புரிந்து அவரை முறைத்து விட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.
புன்னகையுடன் அனைவரையும் கவனித்த விழியானின் கவனம் சங்கர நாராயணனின் மகன்கள் மீது படிந்தது.
எழுந்த விழியான் ஒரு பெண்ணிடம் ஏதோ பேசி மாஸ்க்குடன் நடனமாட உள்ளே வந்தான். லாவண்யா அவன் கண்ணை பார்த்து அவன் தான் என்று கண்டுகொண்டாள். அவன் வேறு பொண்ணுடன் நடனமாட அவளுக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கவினும் அவளை போல சினமுடன் இருந்தான்.
ஒரு பொண்ணு அவளாகவே கவினிடம் வந்தாள். அவன் ஏதும் சொல்லாமல் பெற்றோரையும் எண்ணாது அந்த பொண்ணுடன் நடனமாட சென்றான்.
ஹர்சனும் ஒரு பொண்ணுடன் வந்தான். இசை ஒலிக்கப்பட, அனைவரும் நடனமாடத் தொடங்கினர். மாஸ்க் அணிந்த விழியானை ஆரியன் சந்தேகமுடன் பார்த்தான்.
அவன் கண்கள் ஆரியன் மீது படிய இருவரின் கண்களும் மோத, அர்த்தமுள்ள பார்வையை ஆரியன் மீது வீசினான் விழியான்.
“யார் அவன்? அவன் என்னிடம் ஏதோ சொல்ல வருவது போல இருக்கிறதே!” ஆரியன் அவனை பார்க்க, “ஆரு..நீங்க யாரை பார்க்கிறீங்க?” அதியா கோபமாக கேட்க, அவள் பக்கம் திரும்பிய ஆரியன், அதி இங்க பிரச்சனை இருக்கு. நீ அமைதியாக என்னுடன் இணைந்து மட்டும் நடனமாடு போதும்.
“பிரச்சனையா?” அவள் கேட்க, விழியான் ஆரியனை நெருங்க..ஒருவன் மாஸ்க்குடன் ஆரியன் அருகே வரவும் பயந்து அதியா நின்றாள்.
விழியான் ஆரியனை நெருங்கி, மாம்ஸ் இங்க உங்க மாப்பிள்ளையை மட்டும் கொல்ல ஆள் வரலை. அந்த பொண்ணையும் என்று சுவேராவை பார்த்தான்.
“நீ யாரு?” ஆரியன் கேட்க, அவன் விலகி சென்றான். ஆரியன் அவனை நோக்கி நடனமாட அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்தான். ஹர்சன் நன்றாக ரொமான்ஸூன் ஆடிக் கொண்டிருந்தான். அவனையும் தள்ளி நின்று கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்த ஹர்சனின் அண்ணன் யோகேஷ் மீது பாய்ந்தது.
ஆரியன் அதை பார்த்து விழியானை பார்த்தான்.
லாவண்யா கடுப்புடன் எழ, “நில்லுடி” அவள் அம்மா அழைக்க, அவள் கண்டுகொள்ளாமல் செல்ல, சார்லி பூனைக்குட்டி அவளிடம் வந்தது. விழியானை அவள் பார்க்க, அவன் பார்வை ஆரியனிடம் இருந்தது. ஆனால் அவள் அந்த பொண்ணை தான் பார்க்கிறான் என்று சார்லியிடம், “பாருடா அவரு அந்த பொண்ணோட ரொமான்ஸ் பண்றாரு” திட்டிக் கொண்டே வெளியேறினாள்.
வெளியே இரு தடியங்கள் ஏதோ பேச, மறைந்து நின்றாள் லாவண்யா.
“சார்லி அமைதியா இரு. இவனுக ஒரு மாதிரி தெரியுறானுக” என்று அவர்கள் பேசுவதை கவனிக்க, அவர்கள் சுவேரா, ஆத்விக் பெயரை கூறவும் அதிர்ந்து நின்றாள்.
அவர்கள் நகரவும் வேகமாக உள்ளே சென்று, “சார்லி நீ அவரிடம் போ” அவள் கூற, பாடல் நிறுத்தப்பட்டது. மறுநிமிடம் அங்கே கத்தி பாய்ந்து வந்தது. அறையிலிருந்து வந்த ஆரியனின் நண்பர்கள் கையில் துப்பாக்கியுடன் வந்தனர்.
கத்தி வந்த திசையில் இருந்த சுவேராவை அவனுடன் இழுத்துக் கொண்டு கீழே விழுந்தான் கவின்.
“எல்லாரும் உங்களுக்கு பக்கமிருக்கும் அறைக்குள் போங்க. நடனமாடி நிற்பவர்கள் அப்படியே கீழே அமர்ந்து குனிந்து கொள்ளுங்கள்” ஆரியன் மேடையில் ஏறி சத்தமாக சொன்னான்.
எல்லாரும் குனிந்து விட, கவின், ஆரியன் நண்பர்கள், விழியான், கவினுடன் வேலை செய்யும் இன்பராஜூம் தருணும் கையில் துப்பாக்கியுடன் நின்றனர்.
ஆத்விக் புரியாமல் எழ முயல, அவனை எழ விடாமல் தடுத்துக் கொண்டிருந்தாள் துருவினி.
அந்நேரம் விழியனிடம் செல் என்று சொன்னதால் சார்லி “மியாவ் மியாவ்” சத்தமுடன் அவனை நோக்கி வந்தது. ஏய் போகாத லாவண்யா அதன் பின் ஓடி வர அனைவரும் பயந்து நின்றனர். விழியான் அதிர்ந்து இருவரையும் பார்க்க, “ஏய் லாவா” சுவேரா பதட்டமாக எழுந்தாள்.
அவளை கொல்ல வந்தவர்கள் அவளை நோக்கி செல்ல முற்பட, விஷ்ணு அவர்களில் முன் சென்றவன் காலிலே சுட்டான். அனைவரும் கத்தி, கோடாரி, ஆயுதம் வைத்திருந்தனர். சுவேராவை நோக்கி ஒருவன் இரும்பு கம்பியை வீச, வேகமாக ஓடி மண்டியிட்டு சறுகி வந்த ஆரியன், அந்த இரும்பு கம்பி சுவேராவை தள்ளி விட்டு நின்ற லாவண்யா மீது படும் முன் அதை லாவகமாக பிடித்து, அதை எறிந்தவன் மீதே எறிந்தான்.
“லாவா” சுவேரா லாவண்யாவை அதிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் சார்லியை தேடியது. பயந்து மேசையின் கீழ் மறைந்திருந்தது சார்லி.
“கவின்” ஆத்விக் அருகே வந்து, “எழாத” என்று தலையசைத்தான்.
ஆட்கள் மீண்டும் சுவேராவை நோக்கி வர, ஓரமாக நின்று கொண்டிருந்த யோகேஷை பார்த்த கவின், அவன் நழுவுவதை பார்த்து, ஹர்சன் தலையில் துப்பாக்கியை வைத்து, “ஹர்சா எழுந்திரு” சீற்றமுடன் கத்தினான்.
ஹர்சன் எழுந்து, “ஹே வாட் ஆர் யூ டூயிங்? ஆர் யூ மேடு” கவினிடம் சினமுடன் பேச, ஆரியன் கவினை பார்த்து விட்டு “எல்லாரும் அங்கேயே நில்லுங்க இல்லை ஹர்சன் உயிரோட இருக்க மாட்டான்” சொல்ல, “மாமா” ஆத்விக் அழைத்தான். அதற்குள் யோகேஷ் ஓர் அறைக்குள் சென்று விட்டான்.
எல்லார் கவனமும் அவன் பக்கம் திரும்ப, “ஆது நீ அங்கேயே இரு” அவன் சொல்லிக் கொண்டிருக்க, துப்பாக்கியால் ஒருவன் ஆத்விக்கை குறி வைத்துக் கொண்டிருந்தான்.
அடியாட்கள் நின்று விட, ஆரியனின் பார்வை ஓரிடம் நிலைக்க, லோகேஷ் அவனை பார்த்து தலையசைத்து அவன் பார்வை சென்ற இடத்திற்கு மறைந்து நகர்ந்தான். பிரகாஷ் ஒரு பக்கம் சென்றான்.
மாமா, இவங்க சுவேரா கேட்க, ஆரியன் ஏதும் பேசாமல் ஓர் அறையை பார்த்தான். தருணும் இன்பராஜூம் ஆரியனையும் கவினையும் பார்த்து தலையசைத்து கையில் ஆயுதங்கள் வைத்திருந்தவர்களை பிடித்தனர். உடன் மேலும் இரு போலீஸாரும் வந்தனர்.
ஆத்விக்கை கொல்ல குறி வைத்தவன் சூட் செய்ய, குனிந்திருந்த கூட்டத்திலிருந்து ஒருவன் ஆத்விக்கை தள்ளி விட்டு அவனும் விழுந்தான். குறி தப்பியது. எல்லாரும் தோட்டா வந்த திசையை பார்க்க, லோகேஷ் அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து பிடித்தான்.
ஆரியன் பிரகாஷை பார்த்தான்.
பிரகாஷ் கண்ணசைக்க, ஆரியன் துப்பாக்கியை மேலும் ஓரிடத்தில் சூட் செய்தான். விழியான் எல்லாரையும் ஆழ்ந்து கவனிக்க, பிரகாஷ் முக்கியமானவனை பிடிக்க நிற்கிறான் என்று புரிந்தது அவனுக்கு.
விழியான் ஆரியனை பார்க்க, “யாரு இவன்?” கவின் அவனை பார்த்து கேட்க, “அது நமக்கு முக்கியமில்லை” என்று ஆரியன் தன் நண்பனை பார்த்தான்.
ம்ம்..பிரகாஷ் சத்தம் கொடுக்க, லோகேஷ் பிடித்து வைத்திருந்தவனின் அலைபேசியை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான். அதில் ஒருவன் சூட் செய்வதற்கான இன்ட்ரெக்சன் கொடுத்திருப்பான் போல, “செத்துட்டானா? இல்லையா?” என்ற குரலில் ஹர்சன் அதிர்ந்து கவினை பார்த்தான்.
“அண்ணா” அவன் அழைக்கும் முன் அவன் வாயை பொத்திய கவின் “அமைதியா இரு” என்று குறி வைத்தவனிடம் அலைபேசியை காட்டினான்.
சார், குறி மிஸ் ஆகிடிச்சுச்சி..
தேவா..தேவா..உனக்கு எத்தனை முறை சொன்னேன். இப்பவே அந்த ஆத்விக்கை முடி இல்லை உன்னை கொல்லாமல் விட மாட்டேன் யோகேஷ் கத்தினான்..
நான் சூட் பண்றேன் சார். என்னை ஏதும் செஞ்சிறாதீங்க என்று லோகேஷை அவன் பார்த்து பேசினான். அவன் துப்பாக்கியை அழுத்த..
நோ..தேவா தலையசைத்தான்.
“தேவா, ஏன் ஆட்களை குறைவா அழைச்சிட்டு வந்திருக்க?”
நீங்க அனுப்பிய ஆள் தான சார்?
“இல்லையே! மும்பையில இருந்து நவீனும் ஆட்களை அனுப்பி இருந்தானே! அவனுக யாரையும் காணுமே!” அவன் கேட்க, பிரகாஷ் நின்று கொண்டிருந்த அறையை சூட் செய்தான். தருணும் இன்பராஜூம் அவனுடன் செல்ல, உள்ளே யோகேஷ் மட்டுமல்ல நவீனும் இருந்தான்.
சுவேராவின் எதிரி குடும்பத்தின் வாரிசு “நவீன் பிரதித்வாயா”. மூவரில் யோகேஷை எளிதாக பிரகாஷ் அடித்து தள்ளி மயங்க வைத்து விட்டான். ஆனால் மூவர் சேர்ந்தும் நவீனை ஏதும் செய்ய முடியவில்லை. எல்லாம் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டிருந்தது அங்கிருந்த கேமிராக்களால்..
“அண்ணா” கவின் ஆரியனை அழைக்க, பகையாளியின் ஆட்களை பிடித்து வைந்திருந்ததை பார்த்த விழியான் நவீனை பார்க்கவும் அருகே இருந்த திரைச்சீலையை இழுத்து, அதனை முகம் முழுவதும் மறைத்து வெறியுடன் வேகமாக படியில் ஏறினான்.
“நில்லு” ஆரியன் விழியானிடம் துப்பாக்கியை நீட்ட, அவன் ஆரியனை பார்த்து அவன் முதுகிலிருந்து எடுத்த துப்பாக்கியை ஆரியனிடம் வீசி படியில் ஏறிச் சென்றான்.
“யாரு இவன்?” எல்லாரும் அவனை பார்க்க, சுவேரா அவனை ஆழ்ந்து பார்த்தாள். அவன் கண்கள் மட்டும் தான் தெரிந்தது.
“நான்” என்று ஆத்விக் நகர, “யாரும் அசையக் கூடாது” ஆத்விக் பக்கம் கவின் துப்பாக்கியை நீட்டினான். போலீஸார் அங்கு வர, ஆரியன் வேகமாக மாடியில் ஏறினான்.
அங்கே பிரகாஷூம் கவின் உதவியாளர்களும் அடிபட்டு இருக்க, விழியானுக்கும் நவீனிற்கும் சரியாக சண்டை போய்க் கொண்டிருந்தது. விழியான் அவனை வீழ்த்தும் நேரம் ஆரியன் அங்கே வந்து நவீன் காலில் சுட, விழியான் ஆரியனை பார்த்தான்.
ஆரியன் விழியானை பிடிக்க அவனருகே வந்தான். அதற்குள் அவன் அறையை விட்டு வெளியே குதித்தான். ஆரியன் அவனை விரட்டி வந்தான்.
மாடியிலிருந்து கீழே குதித்து மேலிருந்த ஆரியனை பார்த்தான் விழியான். லாவண்யா அவனை அதிர்ந்து பார்த்தாள். எல்லாரும் பார்த்தும் யாருக்கும் அவனை தெரியவில்லை அவன் வேகமாக ஓட, “கவின் அவனை பிடி” ஆரியன் கத்தினான்.
விழியான் சுவேரா லாவண்யாவை பார்த்து, சுவேராவை இழுத்து அவள் கழுத்தில் கத்தியை வைத்தான்.
கவின் அவனை சூட் செய்ய எண்ண, “அவனை ஏதும் செஞ்சிறாத கவின்” ஆரியன் சத்தமிட்டான்.
சுவேரா..அவன் ஆடையிலிருந்து வந்த நறுமணத்தை முகர்ந்து மெதுவாக நிமிர, அவளை விட்டு வேகமாக வெளியே ஓடி தப்பினான். அவன் பின் போலீஸ் ஆட்கள் செல்ல,
வேண்டாம். அவனும் நமக்கு உதவி இருக்கான் என்று உள்ளே செல்ல, அங்கே நவீன் இல்லை. “செட்” ஆரியன் காலை உதைக்க, விழியான் நவீனை யூகித்து, அவ்விடத்தின் பின் பக்கம் தான் ஓடினான்.
“தேடுங்க” போலீசாரிடம் ஆரியன் சொல்லி விட்டு அவனும் மேலிருந்து குதித்து வெளியே சென்றான். அங்கிருந்த ஆட்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
ஆரியன் வெளியே வந்த சமயம், விழியான் கையில் இரத்தம் வழிய அங்கே நவீனை இழுத்து வந்து போலீஸ் முன் போட்டு விட்டு ஒரு பைக்கை எடுத்து விரட்டினான்.
ஆரியன் அவனை பார்த்து, “இவன் யாராக இருக்கும்?” மேலும் சிந்தனையுடன் நவீனை பார்த்தான். அவன் முகமெங்கும் இரத்தம் வழிய ஆரியனை பார்த்தான்.
நாளை மும்பைல்ல ஹியரிங். நாளைக்கு நான் அங்க இல்லைன்னா இந்த கேஷ் நிற்காது என பக்கமிருந்த போலீஸ் துப்பாக்கியை எடுத்து தள்ளி ஓடி நின்று அவன் நெற்றில் அவனே வைக்க, ஆரியன் பதறினான்.
சாவுடா…ஆதாரம் இல்லைன்னு எவன் சொன்னான்? உன் குடும்பமே மாட்டிய வீடியோ கிடைச்சிருச்சு. எல்லாம் முடிந்தது. இப்பவே நாங்க மும்பை கிளம்புகிறோம் என்று ஆத்விக் சுவேராவுடன் நவீன் முன் வந்தான்.
சுவேரா அவனை பார்த்து, “உன்னோட சண்டை போட்டானே! அவன் யார்? சொல்லு?” சினமுடன் கேட்டாள்.
நவீன் புன்னகையுடன்.. அவன்.. யாருன்னு நான் சொல்ல மாட்டேன். குடும்பம் மாட்டினால் முடிந்ததுன்னு நினைக்கிறீங்களா? அவன் சிரிக்க, “ஏய் எதுக்கு சிரிக்கிற?” கவின் கேட்க, “சொல்ல மாட்டேன்டா” என்று அவனை அவனே சுட்டு உயிரை விட்டான்.
“ஏய்” அனைவரும் அவனருகே ஓடி வந்தனர்.
திடீர்ன்னு என்ன வீடியோ? ஆரியன் கேட்க, அண்ணா நான் சொன்னேன்ல்ல? யாரோ ஒருவன் நேற்றிலிருந்து எனக்கு மேசேஜ் பண்றான்னு என்று அவன் சொல்ல, இவனாக இருக்குமோ? ஆரியன் கேட்க, கவினிடம் வந்த சுவேரா அவன் அலைபேசியை பிடுங்கி அந்த எண்ணையும், மேசேஜையும் ஆர்வமுடன் பார்த்து சோர்ந்து போனாள்.
“என்ன சுவா?” ஆரியன் கேட்க, இன்று காலையிலிருந்து இவளுக்கு ஆரவ் நினைவாகவே இருக்கு மாமா. அதான் அவன் உயிரோட இருந்து விட மாட்டானான்னு ஒரு ஆசை..
“இல்ல, என்னோட அண்ணன் இப்படி மேசேஜ் பண்ண மாட்டான்” அவள் அழ, “ஏத்துக்கோ சுவா. அவன் இல்லை” ஆத்விக் கண்கலங்க சுவேரா கையை பிடித்தான்.
“ஆமா, அவன் இல்லை. அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா.. யாருமில்லை..என்னை விட்டு போயிட்டாங்க” அவள் தலையை பிடித்து அழ, அவளை தன்னுடன் சாய்த்து கொண்ட ஆத்விக் உள்ளே அழைத்து சென்றான்.
எல்லாரும் மறைந்த அறையிலிருந்து வெளியே வந்தனர்.
யோகேஷை போலீஸ் அழைத்து செல்வதை பார்த்த ஹர்சன், ஏன்டா இப்படி பண்ண? அந்தாளு தப்பு பண்ணான். அவனுக்கு தண்டனை கிடைச்சது..
அவளுக்கு உன்னை தான் பிடிக்கும். நான் தான் அவளை கஷ்டப்படுத்திட்டேன். அவங்கள பார்த்துக்கோ. அந்த நவீனோட சேர்ந்து சுவா பாட்டியையும் கொன்னுட்டேன்.
“எல்லாரையும் பார்த்துக்கோ. உன்னையும்” என்று யோகேஷ் கண்கலங்கி சொல்லி சென்றான்.
“ஹர்சா” தாராவிடம் சுவேராவை விட்டு வந்த ஆத்வின் அவனை உலுக்க, இல்ல எனக்கு எதுவும் நிஜமாகவே தெரியாதுடா.
“போ, முதல்ல அவங்கள பாரு” ஆத்விக் சொல்ல, கவின் அவனை முறைத்து பார்த்தான்.
குற்றவாளிகள் அனைவரையும் பிடித்தனர். யோகேஷை மட்டும் தான் குறி வைத்தோம். ஆனால் நவீன் வருவான்னு நினைக்கலை. இப்ப தான் அவனை பற்றி அறிந்திருந்தோம். அவங்க இங்க வந்து சுவாவை கொல்ல எண்ணுவான்னு நினைக்கலை. முகத்தை மறைத்திருந்தவன் யாருன்னு தான் தெரியலை அவர்கள் பேசுவதை கேட்ட லாவண்யா ஏதும் தெரியாதது போல நின்று கொண்டாள்.
லாவண்யாவிற்கும் சார்லிக்கும் மட்டும் தான் விழியானின் முகம் தெரியும். “யார் அவன்? நம்ம சுவேராவின் நண்பனாக இருக்குமோ?”
வாருங்கள் பார்க்கலாம்..
எல்லாரும் கிளம்பி விட லாவண்யா சார்லியை தேடினாள். துருவனி அவளிடம், “என்ன தேடுற?”
ஒன்றுமில்லை என்று அவள் சொல்ல, “லாவா..உன்னை டிராப் பண்ணீட்டு நாங்க கிளம்புகிறோம்” ஆத்விக் சொல்ல, அத்து ஹியரிங்கை ஒத்தி வைக்கட்டும். இவன் நம்ம கஷ்டடியில இருக்கட்டும். நீங்க இப்பொழுது மும்பை செல்ல வேண்டாம் ஆரியன் சொல்ல, “மாமா நீங்க தான அடுத்த ஹியரிங்கில் பிரச்சனையை முடிச்சிறணும்ன்னு சொன்னீங்க?” ஆத்விக் கேட்டான்.
சொன்னேன். ஆனால் இப்பொழுது நிலைமை சரியில்லை அவன் சொல்ல, கவின் அவர்களிடம் வந்தான்.
“நீ ஸ்டேசன் போகலையா?” ஆரியன் கேட்க, போகணும் அண்ணா என்று கவின் சுவேரா அருகே சென்று, அவளை நேராக பார்த்து “உன்னை நிறைய முறை ஹர்ட் பண்ணியிருக்கேன். ஐ அம் சாரி” என்று அவளை பார்த்தான்.
சுவேரா களைப்புடன், “இருக்கட்டும் சார்” என்று கவினை தவிர்த்து ஆத்விக்கை ஏறிட்டு, “அண்ணா வீட்டுக்கு போகலாமா?” கேட்டாள்.
“ரா அம்மா, அப்பாவோட பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” கவின் சொல்ல, “என்ன திடீர்ன்னு?” ஆத்விக் கேட்க, “நான் தான் அவளை கஷ்டப்படுத்திட்டேன். அதான்” அவன் சொல்ல, சுவேரா வேகமாக வந்து ஆத்விக் கையை பிடித்து, “வா போகலாம்” இழுத்தாள்.
ஏய், என்னாச்சு சுவா? ஆரியன் கேட்க, “மாமா..நாங்க வாரோம்” ஆத்விக்கை அவள் இழுத்தாள்.
“சுவா, என்னன்னு சொல்லு?” ஆத்விக் அவள் கையை பிடிக்க, மாலஜ் சுவேராவிடம் வந்து “சாரி சுவா” அவள் கையை பிடிக்க, கண்ணீருடன் அவனை அடித்து விட்டு, “வா போகலாம் அண்ணா” மேலும் ஆத்விக்கை இழுத்தாள்.
“என்னடா பண்ண?” ஆத்விக் மாலஜ் சட்டையை பிடித்தான்.
சார், நீங்க ஒன்றும் அவளோட அண்ணன் இல்லை. ஓவரா சீன் கிரியேட் பண்ணாதீங்க திமிறாக அவன் பேச, தாரா அங்கே வந்து, “மாலஜ் பார்த்து பேசு”
பார்த்து தான் பேசிறேன். யார்கிட்ட பேசுறேன்னு தெரிந்து தான் பேசுகிறேன். இவர் ஒன்றும் சுவேரா உடன் பிறந்த அண்ணன் இல்லை தான. ஆரவ் சாரோட ஜஸ்ட் ப்ரெண்டு தான். அவன் பேச்சு இம்முறை எள்ளலாகவும் வந்தது.
சுவேரா கோபமாக அவனிடம் வரும் முன், அவன் கன்னத்தில் அறைந்த கவின், “இங்க பாரு. நீ யாராக வேண்டுமானாலும் இரு. என்னோட மச்சானிடம் திமிறாகவும் எள்ளலாகவும் பேசாத. அப்புறம் நான் யாருன்னு நீ பார்க்கணும். சுவேரா இப்ப எங்களோட குடும்பத்துல்ல ஒருத்தி. நீ பேச தேவையில்லை” சினமுடன் கூறினான். அவனை எல்லாரும் அதிர்ந்து பார்த்தனர். ஆரியன் புன்னகையுடன் எழுந்து நின்றான்.
“மிடில்கிளாஸ்ன்னா அவ்வளவு கேவலமா உனக்கு? எவ்வளவு திமிர் இருந்தால் என் மச்சானை பற்றி பேசுவ?” ஆத்விக் அவனிடம் சண்டைக்கு செல்ல, “அண்ணா, அவனை விடு” சுவேரா கத்த, “சுவா” ஆத்விக் சினமுடன் அழைத்தான்
ஆத்விக் கையை இறுக பற்றி, என்னை கொல்ல வந்தானுகளே அப்ப என்னடா பண்ண? ஒரு தோழனாக வந்திருக்கலாம். நீயெல்லாம் காதலிக்க கூட அருகதை இல்லாவன். இதுக்கு மேல என்னை தேடி யாரும் வர வேண்டாம்.
என்ன சொன்ன? மிடில்கிளாஸ்..
உன்னோட அப்பாகிட்ட கேளு. உன்னோட அம்மா யாருன்னு. அந்த மிடில்கிளாஸ் கூட அவங்க இல்லை சுவேரா சொல்ல, “சுவா” அவன் கத்தினான்.
பெருமூச்சுடன் தாரா அவனிடம் வந்து, “மாலஜ் நீ கிளம்பு. அவளுக்கு இவங்க தான் இனி எல்லாமே” அவள் சொல்ல, “வாட்? இவங்க” அவன் ஏதோ சொல்ல வந்தான்.
சுகுமார் அவனிடம் வந்து, தம்பி எல்லாருமே வாழ தான் செய்றோம். வாழ்க்கை முடியும் நிலையில் உங்கள் பணம் உங்க கண்முன் வராது. நீங்க வாழ்ந்த வாழ்க்கை. உங்களுடன் பழகியவர்கள் சொந்தங்கள் தான் வருவாங்க. அதனால ஸ்டேட்டஸ் பார்க்காமல் வாழுங்க. இப்ப விட சந்தோசம் அதிகம் கிடைக்கும். ஸ்டேட்டஸை உயர்த்த நிறைய வழிகள் உள்ளது. ஆனால் உறவுகள் உடைந்தால் ஒட்ட வைக்க முடியாது என்று சொல்லி கவினை பார்த்து,
“கவின் நீ கிளம்பு. உனக்கான கடமை காத்திருக்கு” அவர் சொல்ல, அதிவதினி அவனிடம் வந்து, “ரொம்ப நேரம் எடுக்காமல் சீக்கிரம் வந்திரு” என்று அவனை அணைத்துக் கொண்டார்.
“சீக்கிரம் வாரேன்ம்மா. அதான் ஆதாரம் எல்லாம் இருக்கே” என்று சுவேராவையும் ஆத்விக்கையும் பார்த்து விட்டு அவன் பைக்கை எடுத்தான்.
ஆத்விக், அவனது பைக் கீயை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, “நாளை காலை என்னோட வீட்டுக்கு வாடா மச்சான்” அழைக்க, “எப்ப வந்து எப்ப கூப்பிடுற? வாரேன்” என்று அவனை பார்த்து, “சாரிடா..உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்” கவின் மன்னிப்பு கேட்டான்.
“இல்லடா, நீ கிளம்பு” பைக் கீயை வண்டியில் பொருத்தினான் ஆத்விக்.
“மாமா” அதியா கவினிடம் வந்து, வினு சொன்னா. “ஆல் தி பெஸ்ட்..சுவா கன்வின்ஸ் ஆகிடுவான்னு நினைக்கிறேன்” சொல்ல, ஆத்விக் அவளை முறைத்தான்.
கவின் அவள் தலையை ஆட்டி, தலையை களைத்து விட்டு பைக்கில் விரைந்தான்.
“ஏய் மாமா” காலை தரையில் உதைத்து அவள் தலையை சரி செய்ய, ஆத்விக் அதியாவை பார்த்து சிரித்தான்.
அதி, நீ அமைதியா இருந்திருந்தா. உன் அழகான ஹேர்ஸ்டைல் அழிந்திருக்காதே! உனக்கு தேவை தான்.
“அத்து, இப்ப தான் சண்டை போட்டு இருவரும் பேசினீங்க. அதுக்குள்ள இருவரும் சேர்ந்து என்னை அவமானப்படுத்துறீங்க?”
துருவினி அவளிடம் வந்து, “அது அவமானம் இல்லை. இனிய நினைவுகள்” என்றாள்.
“எது? என் தலையை பாரு” அதியா சொல்ல, சுவேரா அவளிடம் வந்து, “இதை சரிசெய்ய எவ்வளவு நேரம் ஆகப் போகுது?” என்று சொல்ல, நீ எனக்கு அக்காவா வேண்டாம். தங்கச்சியா இரு. ரொம்ப டேமேஜ் பண்ணுற அதியா சொல்ல, தங்கச்சியா என்று உதட்டை சுளித்த சுவேரா துருவினியை பார்க்க,
“வேண்டாம் சுவா” துருவினி சொல்ல, கவினை விட தலையை களைத்து விட்டு, “வா அண்ணா, லாவா வா நாம ஓடிறலாம்” இருவரையும் இழுத்து ஓடினாள்.
“ஆரு” அவள் அழைக்க, ஆகர்ஷனாவும் தர்சனும் அவளிடம் வந்து, “அதிம்மா இங்க வாங்க” என்று இருக்கையில் அமர வைத்து கீழுதட்டை மடித்த ஆகர்ஷனா “அதிம்மா நான் வலிக்காமல் எடுத்து விடுறேன்” என்று அவள் எடுக்க, மாலஜ்ஜோ அவர்களை பார்த்துக் கொண்டே நின்றான்.
ஆகர்ஷனாவை தூக்கிய ஆரியன், “வினு” அழைக்க, அவள் பாப்பாவை அவனிடம் வாங்க, அவனது அதியின் கூந்தலில் விழுந்த சிக்கலை எடுத்து விட்டான்.
“என்ன தம்பி, இதை பார்க்க எப்படி இருக்கு?” சுகுமார் மாலஜ் அருகே வந்து கேட்க, ஹா..என்று அவரை பார்த்தான்.
இது தான் வாழ்க்கை. கேலி, கிண்டல், வேடிக்கை, பாசம், விளையாட்டு தனம், எல்லாம் இருக்கும் போது தான் மனம் நிறைவடையும்.
ம்ம்..சாரி அங்கிள் என்று அவன் தாராவிடம் தலையசைத்து சென்றான். எல்லாவற்றையும் மரத்தின் பின் நின்று விழியான் பார்த்தான். சார்லி அவன் கையில் தான் இருந்தான்.
வீட்டிற்கு ஒருவர் நம் சுகுமாரை போல் இருந்தால் பசங்க நல்லவாறு வளர்வார்கள். என்ன சொல்றீங்க ப்ரெண்ட்ஸ்?
அன்றிரவு துருவினி உறங்க முடியாமல் தவித்தாள். ஆத்விக்கும் அவளும் எல்லார் முன்னும் முதலாவதாக நெருங்கிய தருணம்.
ஆத்விக் அழைக்கவும் அவனுடன் நடனமாட சென்றாள் துருவினி. அவன் கவனம் முழுவதும் துருவினி மட்டுமே இருந்தாள்.
தயக்கமுடன் அவளது இடையில் கை வைத்து அவளது கையை கோர்த்திருந்தான். அவளும் அவன் தோளில் அழுத்தமாக கையை பதித்து, அவன் கையை கோர்த்திருந்தாள்.
இசை தொடங்க, இருவரும் மெதுவாக நடனமாட தொடங்கினார்கள். இருவரின் கண்களும் மோதி மீண்டு மீண்டு அவர்களிடமே வந்தது. ஆத்விக் பேசாமல் நடனமாடினாலும் அவனுக்கு அவளின் அருகாமை. அவள் அவனுடன் நடனமாட வந்தது பெரு மகிழ்ச்சியளித்திருந்தது. அதை துருவினியும் கண்டுகொண்டாள். அவனது அந்த பார்வை துருவினியை பெரிதும் பாதித்தது.
தலையணையை கட்டிக் கொண்டு, என்னை தூங்க விடேன்டா புலம்பியவாறு விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். ஆத்விக்கின் குறும்பான பக்கம் அவள் முன் தோன்ற வெட்கமுடன் முகத்தை மூடிக் கொண்டாள்.
மறுநாள் துருவினிக்காகவே விடிந்தது போல உணர்ந்தாள். அவளின் இந்த புதுவிடியல் அவளை வசந்தகாலத்திற்குள் இழுத்து செல்லுமா? பார்க்கலாம்..
ஆத்விக் ஆபிஸில் அனைவரும் வந்திருந்தனர் துருவினியை தவிர. ஆத்விக் யோசனையுடன் உள்ளே வந்து அமர்ந்தான். அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது..
ஒரு மணி நேரம் பர்மிசன் கேட்டிருந்தால் அவன் அவளுக்கு அழைக்க, அவனை பார்த்துக் கொண்டே அபிமன் உள்ளே வந்தான்.
அலைபேசி எடுக்கப்பட்டது.
“மாப்பிள்ள, நாங்க கோவில் வரை வந்திருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல்ல துரு வந்திருவா” உத்தமசீலன் சொல்ல, மாமா எதுக்கு? எங்களிடம் சொல்லவில்லை. “ஆரு மாமா இருக்காங்களா?” ஆத்விக் பதட்டமாக கேட்டான்.
பயமில்லை மாப்பிள்ளை. வந்துருவா. ஆரியன் வந்து விட்ருவான்.
மாமா டியூட்டில்ல ஜாயின் பண்ணனும்ல்ல?
ம்ம் பண்ணீட்டான். அவளை அழைக்க தான் வரப் போறான்.
மாமா, அதி..
எங்களோட தான் இருக்கா மாப்பிள்ள..
“மாமா எதுக்கு? நான் வரவா?” ஆத்விக் கேட்க, “நான் கூட அழைச்சிட்டு வாரேன் மாப்பிள்ள? நீங்க வேலையை பாருங்க” அவர் அலைபேசியை வைக்க, அவன் ஆபிஸ் கேமிராவில் வாயிலை பார்த்தவாறு அமர்ந்தான்.
“சார்” அபிமன் அழைக்க, “சொல்லுங்க” இருவரும் பேச, அவ்வப்போது ஆத்விக் துருவினியை தேடினான். அபிமன் அவன் தேடலை பார்த்து முகம் சுருக்கினான்.
துருவினி புடவையில் தலையில் மல்லிகைசரத்துடன் நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் புன்னகையுடன் வந்தாள்.
சுவேரா புரியாமல் அவளை பார்க்க, ஆத்விக் எழுந்தான்.
அவனுக்கோ..ஆரியன் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பானோ பயமாக இருந்தது. அவனது கலவர முகத்தை பார்த்து, “சார் என்னாச்சு?” அபிமன் கேட்க, ஆத்விக் காதில் ஏறவில்லை.
அவன் துருவினியை பார்க்க, லாவண்யா எழுந்து வந்து துருவினியை அணைத்து கையை கொடுக்க, புன்னகையுடன் அவளிடம் பாக்ஸை கொடுத்தாள். மற்றவர்களும் அவளிடம் கையை கொடுத்து ஏதோ சொல்ல, சுவேராவின் புன்னகையை பார்த்து குழப்பமுடன் அபிமன்னை பார்த்தான்.
சார்..இன்று..அவன் சொல்லும் முன், “எக்ஸ்யூஸ் மீ சார்” துருவினி அழைக்க, “எஸ்” ஆத்விக் சொல்லிக் கொண்டே அபிமன்னை பார்த்தான்.
துருவினி உள்ளே வரவும் அபிமன் அவள் முன் வந்து கையை நீட்டி, “விஸ் யூ ஹாப்பி பர்த்டே துரு” அவன் சொல்ல, அவன் கையை பிடித்து அவள் “தேங்க்ஸ்” சொல்லி விட்டு, “லாவாகிட்ட ஸ்வீட் வாங்கிக்கோ. பாக்ஸ் அவளிடம் இருக்கு” என்று புன்னகையுடன் அபிமன்னை பார்த்தாள்.
“அதுக்கு முன் என்னோட சாரியை ஏத்துக்கோ. ப்ளீஸ்” அபிமன் கேட்க,
“பரவாயில்லை அபி. நைவ் ஐ அம் ஓ.கே” என்று ஆத்விக்கை பார்த்தாள்.
அபிமன் புன்னகையுடன் “சார், நான் ஸ்வீட் எடுத்துட்டு வாரேன்” என்று துருவினி கையிலிருந்த பாக்ஸை பார்த்துக் கொண்டே வெளியேறினான்.
“அத்து” என்று ஆத்விக் அருகே சென்று, பாக்ஸை திறந்து அவள் செய்த கேசரியை கொடுத்தாள்.
“பர்த்டேவா? சொல்லவில்லை. இப்ப என்னிடம்” என்று அவன் அறையை பார்க்க, எனக்கு அதெல்லாம் வேண்டாம் என்று தலையை தாழ்த்தினாள்.
“என்ன வேணும் வினு? என்ன வேண்டுமானாலும் கேளு” ஆத்விக் சொல்ல, “முதல்ல ஸ்வீட் எடுத்துக்கோங்க அத்து” துருவினி சொல்ல, அவன் எடுத்துக் கொண்டு, மீண்டும் எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் மறுப்பு சொல்லாமல் அவன் கையால் அவள் வாயில் வாங்கிக் கொண்டாள்.
என்ன வேணும்? சொல்லு? இப்பவே வாங்கிடலாம் அலைபேசியை எடுத்தான். அவள் கேமிராவை பார்த்தாள். அவளை பார்த்து ஆத்விக்கும் பார்த்தான். சாய் காதில் ஏதோ சொல்லி விட்டு அபிமன் வெளியே சென்றான்.
“எங்கடா போற?” லாவா கேட்க, “போறேன் வந்துருவேன்” என்று சென்றான்.
சாய்யிடம் ஆத்விக் அறைக்குள் யாரும் போக வேண்டாம். இருவரும் பேசட்டும் என்று சென்றான். நிகிதாவும் புரிந்து கொண்டாள்.
“எங்க சொல்லாமல் போறான்? ஆத்விக் எழுந்தான். அவன் மார்பில் கையை வைத்து அவனை அமர வைத்தாள் துருவினி. ஆத்விக் அதிர்ந்து அவளை பார்த்தான்.