அத்தியாயம் 8

நீ என்னுள்

தொலையாத வரை

எனக்குள் தேடல் என்று

எதுவுமே இல்லை!!!

 

வைத்தியர் சென்றதும் “இப்போது எப்படி இருக்கிறது மகளே?”, என்று கேட்டார் மகாராஜா.

“வலி எடுக்க தான் செய்கிறது தந்தையே”, என்று சிறு குரலில் கூறியவள் ரகசியமாக அவனை பார்த்தாள்.

அவள் பார்வையை கண்டு கண் சிமிட்டினான் நரேந்திரவர்மன். கள்வன் என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவன் செய்கையை ரசித்தாள்.

“அவள் சிறு வலி  என்றாலும் இருக்கும் நாட்டில் உள்ளவர்களை எல்லாம் அழைப்பாள். நீங்கள் அதிகமாக ஒன்றும் கொஞ்ச வேண்டாம். ஏய் வான்மதி எழுந்து அறைக்கு சென்று ஓய்வெடு “, என்று கட்டளை இட்டாள் அருந்ததி தேவி.

“பாருங்கள் தந்தையே, எப்போதுமே அன்னை என்னை கடிந்து கொள்கிறார்கள்”, என்று கொஞ்சும் குரலில் கோள் மூட்டினாள் வான்மதி.

“அருந்ததி, நீ கொஞ்சம் அமைதியாக இரு. அவளே வலியில் முகம் சுழிக்கிறாள். நீ அவளை குறை கூறி கொண்டிருக்கிறாய். அமைதியாக சொன்னால் வான்மதி கேப்பாள். மகளே வான்மதி”, என்று அழைத்தார் மகாராஜா.

“கூறுங்கள் தந்தையே”

“உன்னால் நடக்க இயலுமா?”

“முயற்சி செய்கிறேன் தந்தையே”, என்று சொல்லி கொண்டே ஒரு காலை அழுத்தி ஊன்றி எழுந்தாள் வான்மதி. ஆனால் அடுத்த காலை அவளால் எடுத்து வைக்க இயல வில்லை. பாவம் போல் தந்தையை பார்த்தாள்.

“பார்த்தாயா அருந்ததி? அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயல வில்லை. அது மட்டும் இல்லாமல் வைத்தியர் கட்டிய கட்டுடன் எப்படி அவளால் நடக்க இயலும்? நீ அவளை குறை கூறி கொண்டிருக்கிறாய்”, என்று அருந்ததியை திட்டிய மகாராஜா “நான் உன்னை தூக்கி கொள்கிறேன் வான்மதி”, என்று அருகில் சென்றார்.

“கொஞ்சம் பொறுங்கள் மகாராஜா. நீங்கள் சிரம பட வேண்டாம். இளவரசியை என் மகனே தூக்கி செல்லட்டும். நமக்கு தான் வயதாகி விட்டதே. இனி நாம்  ஓய்வு தான் எடுக்க வேண்டும். தாங்கள் இளவரசியை தூக்கி உடம்பில் எங்காவது பிடித்து கொண்டால் போரில் யார் வீரர்களை வழி நடத்துவது?”, என்றார் வராக சித்தர். நரேந்திரவர்மன் மனம் துள்ளியது.

“இளவரசரை எதுக்கு சங்கட படுத்த வேண்டும் சித்தரே?”, என்று தயக்கத்துடன் வினவினார் மகாராஜா.

“இதில் தயக்கம் கொள்ள ஒன்றுமே இல்லை மகாராஜா. நந்தவனத்தில் இருந்து நான் தானே இளவரசியாரை தூக்கி வந்தேன். இங்கே இருக்கும் மஞ்சத்துக்கு தூக்கி செல்வது சிரமமா என்ன?”, என்று கூறினான் நரேந்திரவர்மன்.

“சரி அவ்வாறே ஆகட்டும்”, என்று கூறிய மகாராஜா “மகாராணி”, என்று அழைத்தார்.

“கூறுங்கள் மகாராஜா”, என்றாள் அருந்ததி தேவி.

“இளவரசருக்கு வான்மதியின் அறையை காட்டு”

“சரி, என்னுடன் வாருங்கள்”, என்று முன்னே நடந்தாள் அருந்ததி.

முகத்தில் ஒரு வித ஒளியுடன் வான்மதி அருகில் சென்ற நரேந்திரவர்மன் அவளை கைகளில் அள்ளி கொண்டான்.

அவன் முகத்தையே வெட்கத்துடன் பார்த்து கொண்டு, அவன் கைகளில் இருந்தாள் வான்மதி. சிறிது தூரம் சென்றதும் “வான்மதி இளவரசருக்கு உன் அறையை காட்டு. நான் உனக்கு ஒத்தடம் கொடுக்க வெந்நீர் ஏற்பாடு செய்து வருகிறேன்”, என்று கூறி விட்டு சென்று விட்டாள் அருந்ததி.

அன்னை சென்றதும் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்தாள் வான்மதி. ஆனால் அவனோ அதை கண்டு கொள்ளாமல் ஏதோ யோசனையிலே நடந்தான். அதை உணர்ந்தவள் “இளவரசர் இப்போது கனவில் மிதக்க காரணம் என்னவோ?”, என்று கேட்டாள்.

அவள் குரலில் நடப்புக்கு வந்தவன் “யாது உரைத்தாய் தேவி?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

“நான் உங்கள் கழுத்தில் கரங்களை போட்டதை கூட உணராமல் எங்கோ இருக்கிறது உங்கள் சிந்தனை”

“ஆம் தேவி. ஒரு யோசனையில் தான் இருந்தேன்”

“அது என்ன யோசனை?”

“இல்லை, என் காதலுக்கு பல வித உதவிகளை செய்கிறார் என் பெரிய தந்தை. அவர் எப்படி  சந்நியாசியாக ஆனார் என்று சிந்தித்து கொண்டு வந்தேன்”

“என்ன? நம் காதலை பற்றி அறிவாரா?”

“அறிவாரா? அவருக்கு தெரியாதது எதுவுமே இல்லை. முதல் நாளே என் மனதை படித்து விட்டார்”

“என்னை பத்தி எதுவும் தவறாக எண்ணுவாரா?”

“தவறாகவா? அவர் உன்னை எங்கள் வீட்டு பெண்ணாக தான் பார்க்கிறார்? எப்போது திருமணம் செய்து வைக்கட்டும் என்று கேட்டார் தெரியுமா? நான் தான் போருக்கு பிறகு என்று கூறி விட்டேன்”

“நல்லது. பேசி கொண்டே என் அறைக்கு வந்து விட்டோம். இதுவே என் அறை”, என்று அறையை காண்பித்தாள்.

அந்த அறைக்குள் சென்றவன், அவளை தூக்கிய படியே அந்த அறையை நோட்டம் விட்டான்.

“எத்தனை நேரம் தான் என்னை இப்படி தூக்கிய படியே இருப்பீர்கள்? தங்கள் கரங்கள் வலிக்க போகிறது. அந்த மஞ்சத்தில் இறக்கி விடுங்கள்”

“உன்னை இப்படியே தூக்கி கொண்டே இருக்க வேண்டும் என்று தான் மனது ஏங்குகிறது. அப்படி இருக்கும் போது கை வலிக்குமா என்ன? ஏதோ பூக்கூடையை தூக்குவது போல இருக்கிறது”

“தாங்கள் கவிஞர் தான் என்று நான் வேண்டுமானாலும் சான்றிதழ் அளிக்கிறேன். தயை கூர்ந்து என்னை இறக்கி விடுங்கள். என் அன்னை எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம்”

“இறக்கி விடுங்கள் என்று உன் உதடு உச்சரித்தாலும் உன் கைகள் என் கழுத்தை வளைத்து கொண்டிருக்கிறது என்று மறக்க வேண்டாம் தேவி”

“ஹ்ம்ம், என்னால் தங்களை பிரிய இயல வில்லை”

“தேவி”, என்ற படியே தன்னுடன் சேர்த்து ஒரு இறுக்கு இறுக்கினான். அதில் அவனுடன்  இன்னும் ஒட்டி கொண்டாள் வான்மதி.

“சரி மணாளன் போருக்கு செல்லும் போது வெற்றி வாகை சூடி வா என்று குங்குமம் இட்டு மனைவி வழி அனுப்புவாள். எனக்கும் ஒரு அச்சாரம் இட்டு வழி அனுப்பி வையேன் தேவி”, என்று புன்னகைத்தான் நரேந்திரவர்மன்.

“இங்கே குங்குமம் இல்லையே”

“நானும் குங்குமத்தை கேட்க வில்லையே. உன் உதடு கொண்டு ஒரு அச்சாரம் இடு”

“நீங்கள் சரியான காரிய காரர். அதனால் தான் என்னை இங்கு தூக்கி கொண்டு வந்தீர்களா? நான் அவ்வாறு செய்ய மாட்டேன். எனக்கு மிகுந்த வெட்கமாக இருக்கிறது”

“ஹா ஹா, சரி நானே அச்சாரத்தை பெற்று கொள்கிறேன்”, என்ற படி அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவள் உதடுகளில் அழுந்த முத்தமிட்டான்.

பின் மெதுவாக அவளை மஞ்சத்தில் இறக்கி விட்டவன் அவள் அருகிலே அமர்ந்தான்.

அவன் நெஞ்சில்  முகம் புதைக்க கடலளவு ஆசை இருந்தாலும் அதை மறைத்து கொண்டு “என் அன்னை எப்போது வேண்டுமானாலும் வரலாம்”, என்றாள்.

“இப்போது நான் போக வேண்டும். அது தானே நீ கூற வருவது? ஏன் என்னை பிரிய இவ்வளவு ஆர்வம்  காட்டுகிறாய் வான்மதி”

“உளறாதீர்கள்? நான் ஆர்வம் காட்டுகிறேனா? உங்களுடன் தனித்திருக்க தவம் இருக்கிறேன். ஆனால் என் அன்னை வந்துவிட்டால்…”

“சரி சரி பயம் கொள்ள வேண்டாம். நான் இப்போது சென்று விடுகிறேன்”, என்று சொல்லி கொண்டே அவளை நெருங்கினான்.

“போகிறேன் என்று கூறி விட்டு அருகில் வருவதன் காரணம் என்ன இளவரசே?”

“ஒரே ஒரு காரணம் தான். நீ வேண்டும் எனக்கே எனக்காக? புத்திக்கு அதற்கான வேளை வர வில்லை என்று புரிந்தாலும் மனதுக்கு அது எட்ட மறுக்கிறது. இன்னும் ஒரே ஒரு அச்சாரம் தேவி”, என்று கூறி கொண்டே அவள் இதழ்களை சிறை செய்தான்.

அவள் கண்கள் அன்னை, சூழ்நிலை என அனைத்தையும் மறந்து மூடி கொண்டன. அவளுடைய சிவந்த அதரங்களை சுவைத்து சுவைத்தே மேலும் சிவக்க வைத்தான்.

அவள் உடல் முழுவதும், அவன் விரல் பயணிக்க ஆர்வம் கொண்டது. ஆனால் அதை செய்ய முடியாமல் தவித்தவன் அவனுடைய கோபத்தையும், வேகத்தையும் அவள் உதடுகளில் காட்டினான்.

முத்தமிட்டே சாகும் வரம் அளிப்பது காதலில் மட்டும் தான் போல? அவனுடைய வேகத்தை தாங்க முடியாமல் மூச்சு காற்றுக்காக ஏங்கினாள் வான்மதி.

மீண்டும் மீண்டும் அவள் உதடுகளை நாடியவன் அவள் உதட்டை விட்டு விலகி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவன்  உதடுகளை அவள் தோள் பட்டை, காதுமடல், கழுத்து என  ஆங்காங்கே படரவிட்டான்.

அவளும் அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவனை இறுக்கி அணைத்து கொண்டாள். அவனும் அவளை விடவே கூடாது என்பது போல அணைத்து கொண்டான்.

அப்போது தான் அவன் காதில் காலடி சத்தம் கேட்டது. யாரோ வருவதை உணர்ந்து அவளிடம் இருந்து விலகி மஞ்சத்தில் இருந்து எழுந்து நின்று விட்டான்.


அருந்ததி தான் பணி பெண்களுடன் வந்தாள். இவனை பார்த்ததும் அழகாக புன்னகைத்தாள் அருந்ததி.

பதிலுக்கு புன்னகைத்த நரேந்திரவர்மன் “நான் வருகிறேன் மகாராணி”, என்றான்

“சென்று வாருங்கள் இளவரசே”, என்று என்று அருந்ததி கூறியவுடன் அவன் கண்கள் வான்மதியை நோக்கின. அவளோ இமைக்க மறந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் அப்படியே அவளுக்குள் புதைய எழுந்த ஆசையை அடக்கியவன் அவளிடம் கண்களால் விடை பெற்றான்.

“இனி எப்போது இவன் வதனத்தை காண்பேன்?”, என்று எண்ணி கொண்டே, போகும் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் வான்மதி.

அவன் சென்றதும் வான்மதிக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுக்க பட்டது. “இளவரசியை கூட இருந்து கவனித்து கொள்ளுங்கள்”, என்று கூறி விட்டு சென்று விட்டாள் மகாராணி.

அப்போது தான் ஒத்தடம் கொடுக்கும் பெண்ணை பார்த்தாள் வான்மதி.

“ஏய் விசாலம் நீயா? நீ எப்போதடி வந்தாய்?”, என்று ஆனந்தத்துடன் வினவினாள் வான்மதி.

கூட இருந்த பணி பெண்ணை “இளவரசியை நான் பார்த்து கொள்கிறேன்”, என்று கூறி வெளியே போக சொன்ன விசாலம், அவள் போன பிறகு “நான் வந்ததை கூட தாங்கள் நோக்காமல் கனவில் சஞ்சரித்து கொண்டிருந்தீர்களே இளவரசி? பின் நான் எப்படி தங்கள் கண்களுக்கு தெரிவேன்”, என்று கேட்டாள்.

“என்னை பெயர் சொல்லி அழை என்று எத்தனை முறை கூறுகிறேன். நீ ஏன் மற்றவர்கள் போல அழைக்கிறாய் விசாலம்? நீ என் தோழி அல்லவா?”

“நான் தங்கள் அந்தரங்க தோழியாக இருக்கலாம். ஆனால் வரை முறை என்று ஒன்று உள்ளதல்லவா? சரி கூறுங்கள் என்ன விசயம்?”

“என்ன? என்ன விசயம்?”

“ஓ இளவரசிக்கு நான் கேட்கும் கேள்வி புரிய வில்லையோ?”

“ஆம் ஆம்”

“நம்பும் படியாக இல்லை இளவரசி? வந்த என்னை கூட கவனிக்காமல், மகாராணியின் வாய் மொழியையும் கவனிக்காமல், போகும் அந்த மேலை நாட்டு  இளவரசரையே வைத்த கண் எடுக்காமல் தாங்கள் நோக்கியதன் காரணம் என்ன?”

“உன் கண்களில் இருந்து எதுவும் தப்பாதா விசாலம்?”

“சிறு வயதில் இருந்து தங்களுடன் வளர்கிறேன் இளவரசி. தங்கள் செய்கைகள் எனக்கு அத்து படி. சரி சரி கூறுங்கள்”

“உன்னிடம் கூறாமல் நான் வேறு யாரிடம் கூறுவேன் விசாலம். என் தந்தைக்கு உதவ வந்த இளவரசர் என் மனதை கொள்ளை இட்டு சென்று விட்டார்”, என்று கவலையுடன் உரைத்தாள் வான்மதி.

“அவர் தங்கள் மனதை மட்டுமா  கொள்ளை இட்டு சென்று விட்டார்?  அவர் மனதையும்  தங்களிடம் ஒப்படைத்து விட்டு தானே சென்றிருக்கிறார். பிறகு என்ன கவலை?”, என்றாள் விசாலம்.

“அவர் என்னை விரும்புவது உனக்கு எப்படி தெரியும் விசாலம்?”

“இது தெரியாதா என்ன? தங்களையே விழுங்கி விடுவதை போல் பார்த்து கொண்டு அவர் போனதே எனக்கு புரிந்தது. கூடுதலாக இருக்கும் உங்க அதர சிகப்பு புரியாதவற்றையும் புரிய வைத்து விட்டது”

“விசாலம்”, என்று சிணுங்கி கொண்டே வெட்க பட்டாள் வான்மதி.