யுகம் சுகம் தானே 21 2 17508 “பிள்ளைங்க எத்தனை வயசானாலும் அம்மாக்கு குழந்தைங்க தான்னு கேள்விப்பட்டது இல்லையா..? அது சரி அவங்க எல்லாம் தெய்வ தாயா இருக்கும்..” “அப்போ என்னை பேய் தாய் சொல்றியா..?” கண்ணம்மா மாரியம்மா அவதாரம் எடுக்க, ஷா, கணபதி இருவரும் சிரித்து கொண்டனர். கணபதிக்கு இது முன்னமே பழக்கம் என்றால் மருமகளுக்கு இந்த மூன்று மாதத்தில் பழக்கமாகி போனது. “பவ்யா.. போலாமா..?” ஜின்னா வர, எப்போதும் போல அவனுக்கு காபி கொடுக்கப்பட்டது. அவனும் மறுக்காமல் குடித்து முடிக்க, “வரேன் மாமா, வரேன் அத்தை.. வரேங்க..” என்று மூவருக்கும் சொல்லி கொண்டு அவளின் காரில் ஜின்னாவுடன் புறப்பட்டாள். “ப்பா.. வீட்ல ரொம்ப இம்சையா இருக்கு, ஆபிஸ் வரேன்னு கேட்டிருந்தீங்க இல்லை, வாங்க போலாம்..” தானும் ஆபிஸ் கிளம்பிய உதய் கணபதியை கூப்பிட, “ஏங்க அப்படியா சொன்னீங்க அவன்கிட்ட..?” கண்ணம்மா கணவரிடம் பாய்ந்தார். “கண்ணு.. அவன் பேச்சை நம்புறியா..? இந்த ஒருவாரம் மட்டும் ஆபிஸ் பாருங்கன்னு அவன்தான் நேத்து ரொம்ப கெஞ்சி கேட்டான், இப்போ மாத்தி பேசுறான்..”அவர் மகனை கோர்த்துவிட்டு கிளம்ப, “எடுக்கிறது பிச்சை, இதுல கௌரவம் வேற..” கண்ணம்மா சீண்டலாக சொன்னார். “ஒரு மகன்னும் பார்க்காம.. உன்னை வந்து பேசிக்கிறேன்.. இப்போ சண்டை போட நேரமில்லை..” அப்பாவுடன் ஆபிஸ் கிளம்பிய மகன், முதலில் கணபதியை சென்று கன்ஸ்டரக்ஷன் ஆபிசில் விட்டவன் நேரே கன்சல்டன்சி சென்றான். கைவசம் இரண்டு பெரிய ப்ராஜெக்ட்கள் இருக்க, ஆட்கள் ஆபிசில் அதிகம் ஆகினர். அவன் இருப்பதும் வாடகை பில்ட்டிங்கில் தான். அவனுக்கென சொந்த ஆபிஸ் வேண்டும் என்று போன மாதம் தான் வேளச்சேரியில் இடம் வாங்கி ஆபிஸ் கட்ட ஆரம்பித்திருந்தான். இன்னும் ஆறு மாதத்தில் முடிந்து விடும். அவனின் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்க, உதய் இன்னும் இன்னும் ஓட ஆரம்பித்தான். அடுத்த லெவலுக்கு செல்வதற்கு வேறு தன்னை தயார் படுத்தி கொண்டிருந்தவன் அதற்கான வேலையில் மூழ்கியிருக்க, அவனின் போன் ஒலித்தது. சிட்டு அண்ணா கூப்பிட்டிருக்க, இவர் ஏன் என்று யோசித்து போன் எடுத்தான். “தம்பி.. ஆபிஸ் கட்டிட வேலையை நிறுத்திட்டாங்க..” என்றார் அவர். அவரின் மேற்பார்வையில் தான் விட்டிருந்தான். “என்னண்ணா சொல்றீங்க..? ஏன்..?” “இந்த இடம் அவங்களதுன்னு யாரோ கோர்ட்ல கேஸ் போட்டு ஸ்டே வாங்கியிருக்காங்க, விசாரிச்சுதுல பிரசாத் பண்ண வேலை தான் இது..” “இவனை..” பல்லை கடித்தவன், “நான் பார்க்கிறேன் இருங்கண்ணா..” போன் வைத்தவன் ஷாவிற்கு அழைத்தான். “என்னங்க..” அவன் போன் செய்வது மிகவும் அரிது என்பதால் ஷா உடனே போன் எடுத்தாள். அவள் அந்நேரம் ராமுடன் டிஸ்கஷனில் இருக்க, உதய் சொன்ன விஷயம் அவருக்கும் தெரிய வந்தது. “இப்போ நான் என்ன செய்ய..? எப்போ பாரு விட்டுடுங்க, விட்டுடுங்கன்னு என்னை கண்ட்ரோல் பண்ண இல்லை, இப்போ பாரு என்ன ஆச்சுன்னு..” மனைவியிடம் எகிறினான். “சாரிங்க.. என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கலாம்..” “நீ ஒன்னும் பார்க்க தேவையில்லை, என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியும், நீ இடையில வராம இருந்தாலே போதும்..” போனை வைத்துவிட்டான். “என்னம்மா உதய்க்கு ரொம்ப கோவமா..?” “இல்லாமல் இருக்குமாப்பா, நாம சொன்னோம்ன்னு தான் அவர் அவனை கண்டுக்காம இருந்தார்..” “என்னம்மா செய்ய, முகுந்தன் அவனோட கடைசி நாட்கள்ல இருக்கான்..” நண்பனை நினைத்து துக்கம் கொண்டார் ராம். உதய் அந்த மாதம் முழுதும் மிகவும் தீவிரமாக அவனின் இடத்தை மீட்கும் முயற்சியில் இறங்கினான். மனைவியிடம் பெரிதாக பேச்சு வார்த்தை இல்லை. எந்நேரமும் முகம் இறுக்கமாகவே இருந்தது. இரவுகளிலும் லேட்டாக வர, ஷாவிற்கு வருத்தம். அன்றிரவும் சோபாவில் கணவனுக்காக காத்திருந்தாள். கண்ணம்மா அவரின் ரூமில் மகனின் கார் சத்தத்தை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார். மனைவி வந்த பிறகு வெளியே ஒதுங்கி கொண்டாலும், உள்ளுக்குள் எப்போதும் போல தான் இருந்தார் அவர். நடு இரவு ஆகிவிட, உதய் வரவில்லை. கண்ணம்மா எழுந்து வெளியே வர, ஷா மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தாள். “பவ்யா.. போன் பண்ணி பாரும்மா..” என, “பண்ணேன் அத்தை.. எடுக்கலை..” “ஓஹ்..” கிச்சன் சென்ற கண்ணம்மா கையில் காபியுடன் மருமகளிடம் வந்தார். நிமிர்ந்து பார்த்த ஷா கண்களில் ஆனந்த அதிர்ச்சி. “அத்தை..” “வாங்கிக்கோ பவ்யா..” அவரும் கையில் காபியுடன் அமர்ந்தார். இருவரும் அமைதியாக குடித்து முடிக்க, “ரொம்ப நன்றி.. அண்ட் சாரித்தை..” “எதுக்கு சாரி..” “நான் இங்க வந்தப்போவே உங்ககிட்ட பேசணும் நினச்சேன் அத்தை, ஆனா ஏனோ ஒரு தயக்கம், இவர் எல்லாம் சொன்னார், பிரசாத் இப்படின்னு நான் நினைக்கல, அப்போ உங்ககிட்ட பேசி பிரச்சனை பண்ண நினைச்சான், இப்போ இப்படி பண்றான்..” “ம்ப்ச்.. அதுவா..? ஒன்னு சொல்லவா பவ்யா நம்ம மேலயும் தப்பு இருக்கு, நாம முதல்லே ஒரு புரிதலுக்கு வந்திருந்தா யார் என்ன சொன்னாலும் அது பெருசா நம்மை பாதிச்சிருக்காது..” “புரியுதுத்தை.. நான் கொஞ்சம் விலகியே இருந்துட்டேன், என்னால் சட்டுன்னு நெருங்க முடியல.. அதோட அப்போ நான் வீட்டோட மாப்பிள்ளை நினைச்சதும் தப்பு தானே, நான் என் அப்பா கூட இருக்கனும்ன்னு அவரை அவர் குடும்பத்துகிட்ட இருந்து பிரிக்க நினைச்சேன், அதுவும் அம்மா இல்லாத கொடுமையை அனுபவிச்சிட்டு இருக்கும் போதும் இப்படி நினைச்சது என்னோட உச்சகட்ட சுயநலம்..” “நீ உங்க அப்பாக்காகன்னு நினைச்சது ஒரு விதத்துல சரிதான் பவ்யா, ஆனா செலக்ட் பண்ண ஆளு தான் சரியில்லை. அவன் சரியான ராங்கி பிடிச்சவன்..” “ஆமா அவனோட அம்மாவும் சரியான அராஜகமான ஆளு தான்..” என்று வந்தான் உதய். “யாரு நானு அராஜகமா..?” “அப்போ நான் ராங்கி பிடிச்சவனா..?” பாய்ந்தவன் பார்வையில் காபி கப் விழுக, இருவரையும் ஆச்சரியமாக பார்த்தான். முகம் தெளிந்திருக்க இடத்தை மீட்டுவிட்டான் என்று புரிந்தது. ஆனால் அவர்களுக்கு தெரியாதது அவன் பிரசாத்தையும் எழ முடியாத அளவு கீழே தள்ளியிருந்தான் என்று. ஆம் கலாதரன் பிரசாத் ஹோட்டலில் அவனுக்கே தெரியாமல் ட்ரக்ஸ் சப்ளை செய்திருக்க, கண்டுபிடித்த உதய் தகவல் கொடுத்து ரைட் வரவைத்து அவனை அரெஸ்ட் வரை கொண்டு சென்றுவிட்டான் என்று. “என்னடி அம்மா, மருமகளும் காபி எல்லாம் குடிக்கிறீங்க..?” ரூமிற்க்கு வந்தவன் மனைவியை அணைத்து கேட்டான். “ஒன்னும் வேண்டாம் போங்க, இத்தனை நாள் என்னை கண்டுக்காம இருந்திட்டு இப்போ மட்டும் என்ன..?” மனைவி பிகு செய்தாள். “சரி நான் போறேன், எனக்கு ஒரு பொண்ணு மட்டும் பெத்து கொடுத்துடு, என் ஏஞ்சலோட நான் இருந்துகிறேன்..” அவளை அணைத்தவன், “காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்.. கானகுயிலுக்கு வெயில் பிடிக்கும்.. ஆனிவேர்க்கு மண் பிடிக்கும்.. ஏய் அப்பனுக்கு பெண் பிடிக்கும்..” ஆழ்ந்த குரலில் அவளின் காதில் பாட, ஷா எப்போதும் போல மயங்கி தான் போனாள். உதய் ஆசைப்பட்டது போல அடுத்த வருடம் அவர்களின் பெண் உதய்யின் கையில் தவழ்ந்தாள். மூன்று வருடங்களுக்கு பிறகு.. “எல்லாரும் வந்துட்டாங்களா..?” ராம் கேட்க, “வந்துட்டாங்கப்பா..” என்றாள் ஷா தயாராக. அன்று தான் RK குரூப்ஸின் போர்ட் மீட்டிங். “உதய்..” மருமகனை கேட்டார். “பக்கத்துல வந்துட்டேன் சொன்னார்ப்பா.. வந்துடுவார்..” “ஓகே.. அப்புறம் ஷா நான் கேட்டரிங் பேசிட்டேன், இரண்டு இடத்திலும் செய்யணும் சொல்லி லிஸ்ட் கொடுத்திட்டேன், மெனு உங்களுக்கு அனுப்பியிருக்கேன், கண்ணம்மாகிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணு..” “சரிப்பா.. நான் அத்தைகிட்ட கேட்டு சொல்றேன்.. அப்பறம் லேபர்ஸ்க்கு கிப்ட் பார்த்திருக்கேன்ப்பா..” என்று மொபைலில் இருந்ததை காட்ட, உதய் வரும் வரை பேச்சு சென்றது. “மாமா..” உதய் வரவும், “காபி உதய்..” கேட்டார் மாமனார். “வேண்டாம் மாமா.. கிளையண்ட் மீட்டிங்கில் குடிச்சிட்டு தான் வந்தேன்..” என, மூவரும் மீட்டிங் ஹாலுக்கு சென்றனர். பிரசாத் வேண்டா வெறுப்பாக அமர்ந்திருக்க, போர்ட் மெம்பர்ஸ் குறைந்திருந்தனர். ராமின் அதிரடியை தாங்கமுடியா பிரசாத்தின் ஆட்கள் ஷேரை ராமிற்கே கொடுத்து ஓடியிருந்தனர். கலாதரன் இருந்த இடம் தெரியாமல் பதுங்கி கொண்டார். அட்லீஸ்ட் இருப்பதையாவது காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று தான் இந்த ஒதுக்கம். ராம் அந்தளவு அவரை அடித்திருந்தார். அதுவும் இந்த மூன்று மாதமாக தான். ராம் அவர்களை விட்டு வைத்ததே முகுந்தனுக்காக தான். அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் மறைந்திருந்தார். பிரசாத்தின் கெட்ட நேரம் ஆரம்பித்ததும் அப்போது தான். முகுந்தன் இறந்த இரண்டாம் வாரம் உயில் வாசிக்கப்பட, RK குரூப் கம்பெனியில் இருந்த அவரின் ஷேர் முழுதும் ராமிற்கு என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. ராமும் வரவைக்க பட்டிருக்க, நண்பர் நினைவில் கண் கலங்கினார். மகனை புரிந்து முகுந்தன் செய்திருப்பது அப்படி ஒரு கனமான உணர்வை கொடுத்தது. உண்மையான நட்பின் அடையாளமாக முகுந்தன் இருந்தார். பிரசாத் இதை நம்ப முடியாமல் இருளடைந்த முகத்துடன் நின்றான். சொந்த தந்தையே தன்னை வெறுத்திருக்கிறார் என்று அந்த நொடி தான் அவனுக்கு புரிந்தது. அதை தொடர்ந்து அவனின் ஷேர் RK குரூப்ஸில் ஐந்து பர்சன்ட் மட்டுமே. மேஜர் ஷேர் ஷோல்டர் என்று கெத்து காட்டி கொண்டு ஷாவை தொல்லை கொடுத்து கொண்டிருந்தவனை வெத்து ஆக்கியிருந்தனர் ராம், உதய் இருவரும் சேர்ந்து. ராம் கம்பெனிக்குள் அடிக்க, உதய் அவனை வெளியில் அடித்தான். மூன்று வருடங்களுக்கு முன் உதய் அவனை டிரக் கேசில் சிக்க வைத்திருக்க, அதிலிருந்து மீண்டு வரவே வருடம் ஆகிவிட்டது. அதை தொடர்ந்து அவனின் அடிதடி கொஞ்சம் அடங்கியிருக்க, முகுந்தனும் உடலும் மிகவும் கவலை கிடமாகி இல்லாமலே போனார். இதோ இன்று அவனுக்காக கட்டம் கட்டி போர்ட் மீட்டிங் நடக்க ஆரம்பித்தது. முதலில் ப்ரெசிடெண்ட் பேச, அடுத்து ஷா பேசினாள். அந்த வருடத்திற்கான கணக்கு, லாபம், டார்கெட், மார்க்கெட், அடுத்த வருடத்திற்கான திட்டம், நிதி நிலை எல்லாம் சமர்ப்பித்து முடிக்க, பிரேக் நேரம். ராம் ரூமில் மூவருக்கும் டீ முடிய, அடுத்த செஷன் ஆரம்பித்தது. ராம் எழுந்தார் பேச. அவரின் பார்வை பிரசாத்தை கூர்மையாக தொட்டு மீள, அவனுக்கு புரிந்து போனது. ராம் முதலில் எல்லோரையும் வரவேற்று, அவரின் உரையை முடித்தவர், இறுதியில் தான் பேச நினைத்ததை பேசினார். “RK குரூப்ஸ்ல நான் இல்லாதப்போ என்னென்ன நடந்ததுன்னு எனக்கு எல்லாம் தெரியும், என் பொண்ணு பவ்யஷாரா எந்தளவு எல்லோரையும் கண்ட்ரோல் பண்ணி கொண்டு போனான்னும் எனக்கு தெரியும், அவளோட அந்த பொறுமை, நிதானம் எல்லாம் அவளோட அம்மாகிட்ட இருந்து வந்திருக்கணும்..” “ஆனா அவளோட அந்த தைரியம், துணிச்சல், அசராம நிக்கிறது எல்லாம் என்கிட்ட இருந்து தான் வந்திருக்கும், ஏன்னா உங்களுக்கே தெரியும் எந்த சூழ்நிலையிலும் நான் எதுக்கும் யாருக்கும் பின் வாங்குனதில்லை. அதே நேரம் என்னை அடிக்க நினைச்சவங்களை நான் திருப்பி அடிக்காம இருந்ததில்லைன்னு.” “பவ்யஷாராக்கும் அப்படி அடிக்க தெரியும்ன்னாலும் என் பொண்ணு அப்படி இருக்கிறதுல எனக்கு விருப்பமில்லை. அவ அவளா தான் இருக்கணும், இந்த பிஸ்னஸ் என் பொண்ணை கல் மனுஷியா மாத்துறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அவளுக்கு எதாவதுன்னா அவளே திருப்பி கொடுப்பா தான்..” “ ஆனாலும் நான் இருக்கும் போது அவளுக்கு அந்த அவசியம் இல்லை. எனக்கு அப்பறமும் அவளுக்கு அந்த அவசியம் வராது. ஏன்னா அவளோட ஹஸ்பண்ட், என் மருமகன் உதய் இருக்கார். என்னை விட அடிவரை போய் அடிப்பார். அதை நானே நேர்ல பார்த்துட்டேன்..” அவரின் பார்வை பிரசாத்தை தொட்டு மீள மற்றவரக்ளுக்கும் புரிந்தது. “சோ.. பொண்ணு தானே, என்ன செஞ்சிடுவான்னு இனியும் யாரும் என் பொண்ணுகிட்ட வரமாட்டீங்கன்னு நினைக்கிறேன், வந்தாலும் நோ இஷியூஸ், வாங்கிக்க ரெடியா வாங்க..” முடித்தவர், எல்லோரும் லஞ்சுக்கு வெளியேற, “பிரசாத்..” என்று அவனை மட்டும் நிறுத்தினார். “உன்கிட்ட இருக்கிற அந்த அஞ்சு பர்சன்ட் ஷேரும் நான் விட்டு வைக்கிறது என் உயிர் நண்பன் முகுந்தனுக்காக, உன் அம்மாக்காக மட்டும் தான், என் கம்பனில அவன் என்னிக்கும் இருக்கனும்ங்கிற என்னோட ஆசை தான் உன்னை RK குரூப்ஸ்க்குள்ள வச்சிருக்கு, மறந்துடாத..” எச்சரித்து அனுப்ப, பிரசாத் உதய்யை கீழ் கண்ணால் பார்த்து வெளியேறினான். அவனுக்கு இன்னமும் உதய்யிடம் தோற்றது தாங்க முடியவில்லை. ஆனாலும் அவனால் செய்ய முடிவதும் எதுவும் இல்லை. எல்லோரும் அவனை விட்டு ஓடியிருக்க, பணத்தாலும் பலம் குறைந்து போக, அடங்கி இருப்பது தான் ஒரே வழி. அவனுக்கு நேர் எதிர் உதய் வளர்ச்சி. உழைப்பும், நேர்மையும் ஒருவனை எந்தளவு உயர்த்தும் என்பதற்கு உதய் உதாரணமாகி போனான். அவனின் கன்சல்டன்சி அடுத்த கட்டத்துக்கு முன்னேற, அதன் இன்னொரு கிளையும் பெங்களூரில் ஆரம்பித்தான். அதே நேரம் அவர்களின் கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி வருமானத்தையும் பல மடங்கு உயர்த்தி, மிகவும் பிரபலமான கட்டுமான கம்பெனியாக மாற்றினான். அவனின் மனம் முழுதும் அடுத்து என்ன என்று யோசிக்க, அடுத்த அவனின் பிஸ்னஸை தேடி ஓடினான். கணவன் இப்படி இருக்க மனைவியும் அவளின் ப்ராஜெக்டை வெற்றிகரமாக மார்க்கெட்டில் விட்டிருந்தாள். மின்சார வண்டிகளின் மார்கெட்டிற்கே நிறைய உழைக்க வேண்டியிருந்தது. முதல் சில மாதங்கள் கொஞ்சம் மந்தமாக சென்றாலும், அடுத்த ஆறு மாதம் சேல்ஸ் சொல்லும் கொள்ளும் அளவு உயர்ந்தது.