யுகம் சுகம் தானே 21

“கந்தண்ணே.. கிரீன் டீ..”  உதய் அவனின் ஜிம்  ரூமில் இருந்து கூப்பிட்டு சொல்ல, இரண்டு கப் கிரீன் டீ வள்ளி மூலம் மேலே சென்றது. யோகா முடித்த உதய், ஷா இருவரும்  கையில் கிரீன் டீயுடன் அமர்ந்திருந்தனர்

இன்னிக்கு என்னென்ன மீட்டிங்..?” உதய் மனைவியின் டே ஷெடியூலை எப்போதும் போல கேட்டு தெரிந்து கொண்டவன், அவனின் இன்றயை வேலைகளையும் அவளுக்கு சொல்லி முடித்தான்

ஷா உதய் வீடு வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. உதய்யின்  பூர்வீக வீட்டில் ஒரு வாரம் போல இருந்த கணவனும், மனைவியும், அங்கிருந்து முதலில் உதய் வீடு தான் வந்தனர். அனிதா அடுத்த இரண்டு நாளில்  லண்டன் செல்வதால்  ஷா அவர்களுடன் இருக்க முடிவெடுத்து கணவன் வீடு வந்தாள்

அதில் உண்மையில் மிகவும் மகிழ்ந்தது ராம் தான். மகள் இப்படி என்று சொல்லவும், “ரொம்ப சந்தோஷம் ஷா, அனிதா கூட டைம் ஸ்பென்ட் பண்ணு, முடிஞ்சா இன்னிக்கு நைட் எல்லோரும் நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வாங்க, நானும் முறையா எல்லாரையும் கூப்பிடுறேன்..” என, ஷா அதை ஏற்றுகொண்டாள்

ஷாக்க்ஷி இருந்திருந்தால் கண்டிப்பாக அவளின் புகுந்த வீட்டு ஆட்களை, அனிதாவை எல்லாம் கூப்பிட்டு விருந்து வைத்திருப்பார், அதை மனதில் வைத்தே ராம் மகளின் குடும்பத்தை விருந்துக்கு அழைத்தார்.  

அவர்களுடன் மரியாதையுடன் கூடிய சுமூக உறவு வேண்டும் என்று அவர் மிகவும் விரும்ப, புரிந்து கொண்ட கண்ணம்மா, உதய்யும் அதுக்கு உறுதுணையாக இருந்தனர். பெண் இல்லாத வீடு என்பதோடு, ராமின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டுகணபதி, கண்ணம்மா இருவரும் எந்த முறையும் எதிர்பார்க்கவில்லை

அவர்களின் அந்த புரிதல் ராமின் மனதை குளிர்வித்தாலும், அவரின் கடமையையும் நினைவில் நிறுத்த, முதல் படியாக அவர்களை விருந்துக்கு அழைத்தார். மகள் புகுந்த வீட்டு ஆட்களுடன்  காரில் வந்து இறங்க, ராமிற்கு அப்படி ஒரு நெகிழ்ச்சி

கணவனுடன் வந்த மகளின் முகத்தில் தெரிந்த அந்த உள்ளார்ந்த மகிழ்ச்சி, அவளின் பிரிவு துயரத்தை மறைத்து மனதை நிறைத்தது

ப்பா..”  மகள் வந்து அவரின் கை பிடித்து கொள்ள, தட்டி கொடுத்தவர்

வாங்க சம்மந்தி, வாங்கம்மாவாங்க தம்பி.. வாங்க மாப்பிள்ளை, வாங்க குட்டீஸ்..” என்று ஒவ்வொருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

ஜோதி மருமகளுடன் சேர்ந்து முதலில் எல்லோருக்கும் தண்ணீர் கொடுக்க, ஷாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். “நீ உட்காருடி.. அவங்க பார்த்துப்பாங்க..” உதய் சொல்ல, ஷா உட்காரவில்லை

கிட்சன் சென்று என்னென்ன இருக்கிறது என்று பார்த்து, கூட என்னென்ன செய்ய வேண்டும் என்று சமையல் செய்யும் குக்கிடம் சொல்லிவிட்டு, ஜோதியுடன் சேர்ந்து காபி, பலகார தட்டுடன் வந்தாள்

நீ உட்காரும்மா.. ஜோதி பார்த்துப்பாங்க..” ராம் சொல்ல, மகள் அவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். கணவன் பக்கத்தில் இல்லாமல் தன் பக்கத்தில் மகள் உட்கார்ந்தது சங்கடத்தை கொடுத்தாலும், அவரும் அதை விரும்பவே செய்தார். உதய்க்கு அவர்களின் மனநிலை உணர, புரிதலாக  சிரித்தான்

தாத்தா.. நாங்க வீட்டை சுத்தி பாக்கலாமா..?” அனிதா பிள்ளைகள் ராமிடம் கேட்க, அவரின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி. முதல் முறையாக அவரை தாத்தா என்று அழைக்கும் குழந்தைகள்

தாராளமா வீட்டை சுத்தி பாருங்க, ஆனா இந்த தாத்தா மட்டும் வேண்டாம், போன நெஞ்சு வலி திரும்ப வந்திரும் போலிருக்கு..” என்றுவிட

ப்பா..” என்று மகள் அதட்டவே செய்தாள்

ஜஸ்ட் பன்னுக்கு தான் ஷாம்மா..”  மகளிடம் சமாதானமாக சொல்ல

எதுக்காக இருந்தாலும்  இன்னொருமுறை இப்படி சொல்லாதீங்கப்பா..” 

ஆமாண்ணா.. உங்களுக்காக உங்க பொண்ணு எப்படி தவிச்சான்னு நேர்ல பார்ததுனால சொல்றேன், சும்மாக்காக கூட இனி இப்படி பேசாதீங்க, சில வார்த்தை தேவர்களால்  ஆசீர்வதிக்கபட்டுடும்..” கண்ணம்மா சொல்ல,  ராம் மகளிடம்  மன்னிப்புடன் ஏற்றுக்கொண்டார்

இப்போ நாங்க வீட்டை பார்க்க  போறதா இல்லையா..?” அனிதா பிள்ளைகள் கோரஸாக கேட்க, எல்லார்  முகத்திலும் சிரிப்பு

வாங்க.. வாங்க நாம போலாம்..”  ஜித்தன் அவர்களை தன்னிடம் கூப்பிட்டு கொண்டு செல்ல

ஷாம்மா.. அனிதா, ராகுல் தம்பிய கூப்பிட்டு போய் வீட்டை காட்டும்மா..” என்றார் ராம்

அண்ணா, அண்ணி.. போலாமா..?”  ஷா கேட்டபடி எழுந்தாள். ராகுலை அண்ணா என்று கூப்பிடும் போது  அனிதாவையும் அண்ணி என்று கூப்பிட ஷா விரும்ப, அனிதா மறுக்கவில்லை

உங்களுக்கு அப்படி கூப்பிட பிடிச்சா கூப்பிட்டுக்கோங்க அண்ணி..”  என்றுவிட்டாள்.

எல்லோரும் வீட்டை சுற்றி பார்த்து வர, ராம் உதய், கணபதி, கண்ணம்மாவிடம் பேசி கொண்டிருந்தார்

சாப்பிட போலாமா..? பசங்களுக்கு பசிச்சிருக்கும்..” ஷா சொல்ல, எல்லோரும் உணவுண்ண டைனிங் டேபிள் சென்றனர். மிக பலமான விருந்து தான், ஸ்வீட்டே நான்கைந்து வகை இருக்க, சைவம், அசைவம் டிசர்ட் என்று அந்த பெரிய டேபிள் நிறைந்து போனது

ஷா சாப்பிட உட்காராமல் எல்லோருக்கும் பரிமாற செய்ய, “ஷா நீயும் உட்காரு..” உதய் மனைவியை அவனுடன் உணவுண்ண கூப்பிட்டான்

நான் அப்பறம் சாப்பிடுகிறேன் ப்ளீஸ்..”  அவனின் அருகில் வந்து மெல்ல சொல்லி செல்ல, விட்டுவிட்டான். எல்லோருக்கும் என்னென்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்தாள். ராமிற்கு எப்போதும் போல பத்திய உணவு தான் என்றாலும் சில விலக்குகளும் இருந்தது

ஜித்தன்  சாப்பிட்டு முடித்த பிள்ளைகளை கூட்டி கொண்டு தோட்டம் செல்ல, ஜின்னா எப்போதும் போல அங்கேயே இருந்தான். “பவ்யா.. போதும், நீயும் உட்காரு..”  கண்ணம்மா மாமியாராக சொல்ல, ஷா மறுக்காமல் உதய் பக்கத்தில் அமர்ந்தாள்

என்ன இருந்தாலும் மாமியார் மாமியார் தான் போல..” உதய் மனைவியை சீண்டியபடி சாப்பிட்டு முடித்தான்

நாமும் தோட்டத்துக்கு போலாமா..?” உணவு முடித்து ராகுல் கேட்க, எல்லோரும் அங்கு சென்றனர். சுற்றிலும் லைட் இருக்க, மிகவும் வெளிச்சமாக இருந்தது தோட்டம்

ஆன்ட்டி.. நீங்க சாப்பிடுங்க..” ஷா ஜோதி குடும்பத்திற்கு உணவு எடுத்து வைக்க, அவர்களும் மறுக்காமல் உணவுண்ண அமர்ந்தனர்.  

டிசர்ட் அங்கேயே எடுத்துட்டு போயிடலாம்..”  ஷா சொல்ல, எல்லோருக்கும் டிசர்ட் தோட்டத்துக்கே சென்றது

ஏன் இவ்வளவு டென்சன் எடுத்துகிற..? உனக்கு தெரியாதா நம்ம வீட்ல யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்கன்னு, எப்போவும் போல இரு..”  உதய் மனைவியிடம் கேட்க

இல்லைங்க.. நம்ம கடமைன்னு வரும் போது கண்டிப்பா செய்ய தான் வேணும், அம்மா இருந்தா வேற, இல்லைன்னும் போது நான் முன்ன செய்றது தான் முறை. அண்ட் அப்பா அடிக்கடி சொல்வார் யாரும் பார்க்கிறதுக்காகவோ, சொல்றதுக்காகவோ நாம எதுவும் செய்ய கூடாதுன்னு..”  மனைவி சொல்ல, அவளே அவளின் பொறுப்பை உணர, உதய் வெறும் பார்வையாளன் மட்டுமே.

“ரொம்ப லேட் ஆச்சு கிளம்பலாமா..?” கணபதி சொல்ல, எல்லோரும் விடைபெற்றனர்

அண்ணி.. தாம்பூலம் வாங்கிக்கோங்க..” ஷா அனிதாவை  வீட்டிற்குள் அழைத்து சென்றாள். செல்லும் மகளை பார்த்த ராம், உதய் குடும்பத்திடம் பொதுவாக

ஷா எப்படி..? உங்களோட செட் ஆயிட்டாளா..? தனியா வளர்ந்த பொண்ணு, ம்ம்.. அவ எதுவும்..” என்று அடுத்து எப்படி பேச என்று திணற, உதய் திரும்பி கண்ணம்மாவை பார்த்தான்

ண்ணா.. நீங்க சொல்றது புரியுது, பவ்யா உண்மையிலே நல்ல பொண்ணு தான், அவளை பத்தி நீங்க கவலைப்படுற மாதிரி நடந்துக்க மாட்டா..”

ரொம்ப சந்தோசம்மா.. அவ எதுவும் தெரியாம..”

ண்ணா.. நாலு பேர் இருக்கிற வீட்டுக்குள்ள மனஸ்தாபம், பிரச்சனை, சண்டை வராம இருக்காது, அப்பா, மகன், அம்மா,மகள்க்கே பல நேரம் ஒத்து போகாது, சண்டை வரும், அப்படி இருக்க மருமகளோட கஷ்டம் வராம இருக்குமா..?”

ஆனா அதை அப்படியே நீட்டிக்க விட மாட்டோம் நானும் தான், பவ்யாவும் தான். அவளுக்கும் உறவுகளோட மதிப்பு தெரியும், அதோட உங்க மருமகன் ஒன்னும் சாதாரண ஆள் இல்லை. யாரை எப்படி பேசி கவுக்கணும்ன்னு அவனுக்கு நல்லா  தெரியும், பொண்டாட்டியை கண்டிப்பா நல்லா வச்சுப்பான்..”

யார் கண்டா நாளைக்கு அண்ணான்னு நான் தான் உங்க மருமகன் மேல பஞ்சாயத்து எடுத்து வருவேனோ என்னவோ..”  மகனை வாரியே முடித்தார் கண்ணம்மா.

“ஹாஹா..” ராம் சிரித்துவிட, பார்த்து கொண்டே வந்த மகள் முகத்திலும் மகிழ்ச்சி. அதே நிறைவுடன் மகளும், மகள் குடும்பமும் விடைபெற்றனர். அடுத்த இரண்டு நாட்களில் அனிதா குடும்பம் லண்டன் கிளம்பியது. அதற்கு முன் தினம் ஷா அனிதா பிள்ளைகளை அழைத்து கொண்டு மால் சென்றாள்

உதய் ஆபிஸ் செல்ல, ஜித்தன், ஜின்னா துணையுடன் பிள்ளைகளை மாலில் விளையாட வைத்து, அவர்களுக்கு அனிதாவிற்கு, ராகுலுக்கு உடை, கிப்ட் என்று வாங்கி வந்தாள். அனிதாவிற்கு அண்ணியின் செயலில் நெகிழ்ச்சி

பிறந்த வீடு நமக்கு எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கை வர, கிளம்பும் போது ஷாவை அணைத்து விடை பெற்றாள்மகள் கிளம்பிய அன்றிரவு கண்ணம்மா சோர்ந்த முகத்துடன் வலம் வர, உதய்யின்  இரவு நேர காபி அவரின் மனநிலையை கொஞ்சம் மாற்றியது

அடுத்த இரண்டு நாளில் ராமின் செக் அப் இருக்க ஷா காலையிலே தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டாள். அன்று முழுவதும் எல்லா டெஸ்டும் எடுத்து, ரிப்போர்ட் நல்லபடியாக வர, அப்பா, மகளுக்கு நிம்மதி. அடுத்த வாரத்தில் இருந்தே ராம் ஆபிஸ் வரவும் ஆரம்பித்துவிட்டார்.

“இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுங்க..” என்று ஷா எவ்வளவு சொல்லியும் ராம் கேட்கவில்லை

போதும் போதுங்கிற அளவு ரெஸ்ட்ல இருந்தாச்சு ஷாம்மா, இனியும் முடியாது..”  என்றுவிட, மகளும் அவரின் விருப்பத்திற்கேற்ப விட்டுவிட்டாள். அதோடு அவளுக்கும் அப்பாவுடன் ஆபிசில் நேரம் செலவழிப்பது, அவரை தினமும் பார்ப்பது என்று அவரை பிரியும் துயர் இல்லை.

இப்படியே மூன்று மாதம் சென்றிருக்க, ஷா புதிதாக ஷாக்க்ஷியின் கம்பெனியில் அவள் ப்ராஜெக்டை ஆரம்பித்தாள். அன்று போர்ட் மீட்டிங்கில் சொன்னது போல, ராம், உதய் இருவரும் அவளின் ப்ராஜெக்டில் இன்வெஸ்ட் செய்தனர். மற்றவர்களும் இன்வெஸ்ட் செய்ய ஆர்வம் காட்ட, ஷா ஆட்களை பார்த்தே தேர்வு செய்தாள்

அவள் என்ன செய்ய போகிறாள் என்று கேள்விப்பட்ட மீடியா திறப்பு விழா அன்று அங்கு சூழ்ந்து கொண்டது. மின்சாரத்தில்  டூ வீலர் தயாரிப்பது தான் அது. இந்தியாவில் இன்னும் பெரிதாக ரீச் ஆகாத, கொஞ்சம் சவாலான விஷயமும் என்பதால் பலகேள்விகள், பல இடையூறுகள். அரசாங்கமும் மிகவும் பார்த்தே தான் அப்ரூவ் கொடுத்தனர்

ஷா அவளின் முடிவில் உறுதியாக நின்றவள், ஒரு வெளிநாட்டு கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டு வெற்றிகரமாக கம்பெனியை ஆரம்பித்தும் விட்டாள். அடுத்த ஓர் ஆண்டிற்குள் அவர்கள் வண்டி மார்க்கெட்டில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவளின் முழு பங்களிப்பை கொடுத்தாள்

ராம், உதய் இருவரும் அவளுக்கு மிகவும் பக்க துணையாக இருக்க, முடியாது என்ற எண்ணமே அவளின் மனதில் உதிக்கவில்லைஇதில் எப்போதும் போல பிரசாத் அவனின் வேலையை காட்டாமல் இருக்கவில்லை. அவனால் முடிந்தவரை பல தொல்லைகள் கொடுக்க, ஷா அவனை புறந்தள்ளியே அவளின் வேலைகளை பார்த்தாள்

உதய்க்கு அவனின் செயல் கோவத்தை கொடுக்க, மனைவியின் வேண்டுகோளுக்காக அவனை விட்டுவைத்தான். அப்படியும் அவனின் பொறுமை முழுதும் இழக்கும் நாளும் வந்தது.

அன்றய யோகாவும், கிரீன் டீயும் முடிய, கணவனும் மனைவியும் அவரவர் வேலை பார்க்க கிளம்பினர். முதலில் ஷா சென்று குளித்து வர, அதுவரை நியூஸ் பேப்பர் படித்து கொண்டிருந்த உதய் அடுத்து  சென்று குளித்து வந்தான்

நான் கீழே போறேன் வாங்க..” ஷா கிளம்பி கீழே சென்றாள். கண்ணம்மா கணவனுடன் சோபாவில் அமர்ந்திருக்க, குட் மார்னிங்குடன் மாமனார், மாமியாரிடம் வந்தாள்.  

உதய் கிளம்பிட்டானா பவ்யா..?” கண்ணம்மா மருமகளிடம்  கேட்க

கிளம்பிட்டே இருக்கார், வந்துடுவார்த்தை..” என

சரி நாம சாப்பிட போலாம்.. அவன் வரட்டும்.. வாங்க..” மூவரும் டேபிள் சென்றனர். வள்ளி சமைத்த உணவை எடுத்த வைக்க, உதய் டேபிளுக்கு வந்து சேர்ந்தான்

கண்ணு.. எப்போவும் மகனை விட்டு சாப்பிடுறதே உனக்கு வேலை..” அம்மாவை வம்புக்கு இழுத்தபடி சாப்பிட அமர

ஆமா இவன் கைக்குழந்தை ஊட்டிவிட்டு நாங்க சாப்பிட..”  கண்ணம்மா திருப்பி கொடுத்தார்