யுகம் சுகம் தானே 20 PREFINAL 1 18685 யுகம் சுகம் தானே 20 PREFINAL நடுவானில் நிலா ஒளிர்ந்து கொண்டிருக்க, உதய், ஷா இருவரும் கையில் பாலுடன் சேரில் அமர்ந்திருந்தனர். சுற்றலிலும் மெல்லிய வெளிச்சம், குளிர்ந்த காற்று, ஜாதி மல்லியின் வாசம் என்று அந்த நடுஇரவு உதய்க்கு ஏகாந்த மனநிலையை கொடுத்தது. இளம் சூட்டில் இருந்த பாலை குடித்தபடி மனைவியை பார்த்தான். கலைத்திருந்தவளின் முகம் அவனுக்கு அவ்வளவு அழகாக தெரிய, ரசித்து பார்த்தான். அவனின் பார்வை ஷாவை சென்றடையவில்லை போல. எங்கேயோ பார்த்த படி கையில் பால் டம்ளருடன் அமர்ந்திருந்தாள். உதய் தன் பாலை காலி செய்து டம்ளரை டீப்பாயில் வைத்தவன், எழுந்து அப்படியே மனைவியை கையில் அள்ளி கொண்டான். “ஏங்க பால்..” ஷா டம்ளரை இறுக்கமாக பிடித்து கொள்ள, உதய் மனைவியை மடியில் தாங்கி சேரில் அமர்ந்தான். “ச்சு.. இப்படியா திடீர்ன்னு தூக்குவீங்க..” ஷா கையில் இருந்த பாலை டீப்பாயில் வைத்துவிட்டு அவனை பார்த்தபடி பக்கவாட்டாக அமர்ந்தாள். “புருஷன் நம்மளை சைட் அடிக்கிறது கூட தெரியாம அப்படியென்ன யோசனை..?” “இல்லைங்க.. அத்தையை பத்தி யோசிச்சேன், அவங்க இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆவாங்கன்னு நான் யோசிக்கல, அவங்க கோவத்துல உண்மையாவே பயந்துட்டேன்..” “ஏன் பயப்படணும்..? அம்மா எப்போவும் அண்டர்ஸ்டேண்டிங் கேரக்டர், நான் இல்லை நீயே அவங்ககிட்ட உட்கார்ந்து பொறுமையா பேசியிருந்தாலே அவங்க புரிஞ்சிருந்திருப்பாங்க, இப்போ பாரு நான் நைட் உட்கார்ந்து பேசவும் என்னன்னு முழுசா சொல்லிட்டாங்க, அந்த பிரசாத் பண்ண வேலை தான் எல்லாம்..” “என்னங்க சொல்றீங்க, அவனா..?” “ஆமா.. நம்ம ரிசப்ஷன் அன்னிக்கி என்ன ஆச்சுன்னு உனக்கு நான் சொல்லலை இல்லை, மாமா தான் நம்ம கல்யாணத்துல அவன் ஏதோ பிரச்சனை பண்ண போறான்னு தெரிஞ்சு அவனை தூக்கிட்டார் இல்லை, அது யாருன்னு தேடிட்டு இருந்தான், அவனுக்கு என் மேல தான் சந்தேகம், நானும் அதை தூண்டிவிட நான்னு முடிவே பண்ணிட்டான், ரிசப்ஷன் வரேன் இருன்னு என்கிட்டயே பேசுறான், அதான் லைட்டா ஒரு காட்டு காட்டிட்டேன்..” “என்ன செஞ்சிங்க..?” “ஒன்னும் பெருசா இல்லை, அவனோட பேவைரட் தியேட்டர்ல பவர் ஷார்ட்டெஜ் மட்டும் தான், ரொம்ப டென்சன் ஆயிட்டான் பையபுள்ள..” “ஓஹ்.. அதான் அமைதியா வந்து அமைதியா போனாரா..?” “ம்ஹூம்.. அவன் அமைதியா போகல, அம்மாகிட்ட போய் கண்டதையும் சொல்லியிருக்கான்..” அவன் சொன்னதை எல்லாம் சொல்ல அவளுக்கு அதிர்ச்சி, கோவம். “என்னங்க இப்படி செஞ்சிருக்கான், அவன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல..” “இத்தனைக்கும் ராம் மாமா அந்த கலாதரனை கூப்பிட்டு வார்ன் செஞ்சிருக்கார், அப்படியும் அவன் அடங்கலை, ஆனா அந்த கலாதரன் உஷாரா ஆள் அப்ஸ்காண்ட்..” “அவர் மட்டும் தாங்க பிரசாத்தை கெடுக்கிறதே, முன்ன எல்லாம் அவன் இப்படி இல்லைங்க, இவர் தான் அவனை இப்படி பண்ணதே..” “இருக்கலாம் ஷா, ஆனாலும் நம்ம குணநலன்னு ஒன்னு இருக்கே, நல்லதுக்கு தூபம் போட்டா நல்லது, கெட்டதுக்கு தூபம் போட்டா கெட்டது, அவ்வளவு தான்..” “ம்ம்.. புரியுதுங்க, முகுந்தன் அங்கிள், ஆன்டிக்காகவாது அவன் மாறினா சந்தோஷம், அவங்களுக்காக மட்டும் தான் அவனை பொறுத்து போக வேண்டியிருக்கு..” “வாய்ப்பு கம்மி தான் ஷா, ஒரு பையங்கிற செல்லம், ம்ஹூம்.. அதுக்கான பெனிபிட்டை எடுத்துகிறான், பார்ப்போம், அவனை இனியும் இப்படியே விட முடியாது..” “அத்தைக்கு என்மேல இருந்த கோவம் போயிருக்கும் இல்லைங்க..” “அவங்களுக்கு கோவம் கொஞ்சம் தான் ஷா, வருத்தம் ஏமாற்றம் அதிகம், உன்மேல அவங்களுக்கு ஒரு நல்ல அபிமானம், நம்பிக்கை, அதனால தான் அவ்வளவு டென்சன்..” “புரியுதுங்க.. ஊருக்கு போனதுக்கு அப்பறம் நானே அவங்ககிட்ட பேசுறேன்..” “பேசு, பேசி தீர்த்துக்க முடியாத பிரச்சனை இல்லை, அதுவும் நல்ல உறவுகள் கிட்ட..” “ம்ம்..” என்றவளை இழுத்து நெருக்கமாக அணைத்தவன், “என்னோட ரொம்ப வருஷத்து ஆசை இது..?” என்றபடி அவளின் கன்னத்தில் மிக அழுத்தமான, நீண்ட இதழ் முத்தம் பதித்தான். அவனின் முத்தத்தில் ஷா முகம் மலர்ந்தாலும், “நம்பிட்டேன்..” என்றாள் கண் சுருக்கி. “இதுல நம்பாம இருக்க என்ன இருக்கு, நான் இங்க வரும் போதெல்லாம் உன்னை நினைச்சு தான் இங்க உட்கார்ந்திருப்பேன், நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் உன்கூட இங்க இப்படி இருக்கணும்ன்னு அவ்வளவு ஆசை..” மேலும் அவளை அணைத்தான். “சும்மா சொல்லாதீங்க..” ஷா இன்னும் நம்பவில்லை. இத்தனை வருடங்களில் அவள் பார்த்தது எல்லாம் அவளை சிறிதும் கண்டு கொள்ளாத உதய்யை தானே..? “என்ன சும்மா சொல்லாதீங்க..? சிவனேன்னு இருந்த பையனை ஓரக்கண்ணாலே பார்த்து மயக்கிட்டு பேச்சை பாரு, மோகினி..” “நீங்களா சொன்னா தான் தெரியும் நீங்க என்கிட்ட மயங்கி இருக்கிறது..” “ஏன் உனக்கு புரியாதா..?” “எல்லாமே புரியும்ன்னா எதுக்கு பேச்சு..?” “இப்போ உனக்கு என்கிட்ட என்ன பேசணும்..?” “பேசணுங்கிறதை விட நிறைய கேட்கணும், சொல்லணும்..” கணவன் முகம் பார்த்தாள். “பர்ஸ்ட் உனக்கு என்கிட்ட என்ன கேட்கணுமா கேட்டுடு..” “ஏன் நீங்க இத்தனை வருஷம் என்கிட்ட வரல..?” உதய் புருவன் தூக்கினான். “நீங்க நம்ம கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னதுக்கு அப்பறமும் நான் உங்களை எதிர்பார்த்தேன், என்கிட்ட ஏதாவது பேச ட்ரை பண்ணுவீங்க, என்னை பார்க்க வருவீங்கன்னு, ஆனா நீங்க வரவே இல்லை..” “ஒரு ஸ்டேஜ்ல நானே நீங்க போற பங்க்ஷனுக்கு வர மாதிரி பார்த்துப்பேன், ஆனா அப்படியும் நீங்க என்கிட்ட நெருங்கலை.. தூரத்துல இருந்து பார்க்க மட்டும் செய்வீங்க, அதுவும் ரொம்ப இல்லை, கொஞ்சம் தான் பார்ப்பீங்க..” உதய் உதடுகள் விரிந்தது. “சிரிக்காதீங்க.. நான் அப்போ எல்லாம் எவ்வளவு வருத்தப்பட்டிருக்கேன் தெரியுமா..? உங்ககிட்டேயும் என்னால பேச முடியாம, மத்த யார்கிட்டேயும் என்னோட பீலிங்க்ஸை ஷேர் பண்ண முடியாம, ரொம்ப கஷ்டமா இருந்தது..” “பர்ஸ்ட் பர்ஸ்ட் அப்பா இப்படின்னு சொல்லி உங்க போட்டோவை கொடுத்தப்போ எனக்கு பெருசா எதுவும் தோணல, அப்பாக்கு ஓகே, எனக்கும் ஓகேன்னு தான் சம்மதம் சொன்னேன், ஆனா உங்களை போட்டோல பார்க்க பார்க்க ஒரு ஈர்ப்பு, ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுது..” “நேர்ல பார்க்கணும்ன்னு ஆசையில தான் அன்னிக்கு குணா அங்கிள் கொலு பங்க்ஷனுக்கு வந்தேன், நான் பார்க்கும் போது முகில் அண்ணாகிட்ட எதோ சொல்லி சிரிச்சிட்டு இருந்தீங்க, அவ்வளவு பிடிச்சது, என்னாலே என்னை கண்ட்ரோல் பண்ண முடியாம தான் உங்களை பார்த்துட்டு இருந்தேன்..” “என் பார்வையை வச்சு நீங்க என்னை பாத்துட்டிங்க, அப்பறம் நீங்களும் என்னை பார்க்க, உங்க பார்வையிலே உங்களுக்கு என்னை பிடிச்சது தெரிஞ்சது, அப்படியும் கலாதரன் அங்கிள் நம்ம கல்யாணத்துக்கு கேட்டப்போ முடியாது சொல்லிட்டிங்க..” “அப்போ இவ்வளவு நேரம் சும்மா டைம் பாஸ்க்கு என்னை சைட் அடிச்சிட்டு இருந்தீங்களான்னு கோவம், ஏமாற்றம். வீட்டுக்கு போய் நைட் அழ கூட செஞ்சேன் தெரியுமா..? ஆனா மறுநாள் குணா அங்கிள் சொல்லவும் தான் கலாதரன் அங்கிள் உங்ககிட்ட தப்பா பேசினது தெரிஞ்சது..” “அப்பாக்கு அவ்வளவு வருத்தமா போச்சு, உங்களை கன்வின்ஸ் பண்ண முடியுமான்னு பார்த்தா, நீங்க உங்க கேரியர்ல அச்சீவ் பண்ணனும் நினைக்கிறீங்க, அதுவும் உங்க நேம்லன்னு குணா அங்கிள் சொன்னாரு..” “எனக்கும் உங்ககிட்ட திரும்ப பேசுறதுல இஷ்டம் இல்லை, யார் என்ன சொன்னா என்ன..? என்கிட்ட பேசியிருக்கலாம்ன்னு தோணிச்சு..” “கொஞ்ச நாள் இப்படியே போக அப்பாக்கு நம்ம விஷயமும், பிஸினஸும் ஸ்ட்ரெஸ் கொடுக்குதுன்னு தெரிய, அவருக்காக பிஸ்னஸ் பார்த்துக்க ஆரம்பிச்சேன், போக போக எனக்கே அது பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு, என்ன இருந்தாலும் அப்பா ஜீன் எனக்குள்ளும் இருக்கும் இல்லை..” “என்னால முடிஞ்சவரை கத்துக்கிட்டு அப்பாக்கு ரெஸ்ட் கொடுத்தேன், அப்போ தான் அவருக்கு ஹார்ட் ஆப்பரேஷன் செய்ய முடியும். சோ அதுலே வருஷங்கள் ஓடி போச்சு, நீங்களும் உங்க கனவை அடையற முயற்சில பர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வச்சிருந்தீங்க..” “இடையில் பிரசாத் வேற கலாதரன் அங்கிள் தூண்டுதல்ல என்னை கல்யாணம் செய்ய சொல்லி தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சான், நான் முடியவே முடியாதுன்னு உறுதியா சொல்லவும், அவனோட அந்த கோவம் உங்க மேல திரும்பிடுச்சு, அவனோட அந்த ஈகோக்கு எப்போவும் போல கலாதரன் அங்கிள் தீனி போட்டார்..” “அட்லாஸ்ட் அவனோட அந்த கிறுக்கு தனத்தால தான் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டீங்க, இல்லை எப்போவும் போல என்னை கண்டுக்காம எனக்கென்னனு தான் இருந்திருப்பீங்க..” “நானும் உங்களை நினைச்சே பாட்டியாகி இருப்பேன், நீங்களும் சாதிக்கிறேன்ற பேர்ல ஓடிட்டே இருந்திருப்பீங்க.. உங்களை லவ் பண்ணதுக்காக பிள்ளை குட்டி எல்லாம் எனக்கு கனவுல மட்டும் தான் நடந்திருக்கும்..” ஆதங்கத்துடன் முடித்தாள் மனைவி.