எது.. இந்த காஞ்சி போன ரோல், சமோசாக்கு  முந்நூறா..? பகல் கொள்ளை..”  இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டிருக்க, மேலே எப்போதும் போல சிசிடிவி பார்த்து கொண்டிருந்த ஷா கண்களில் சிக்கினர்

பார்த்தவள் அப்படியே வைத்துவிட்டாள். அடுத்து போகவில்லை. கணவன் முகத்தில் தெரிந்த அந்த சிரிப்பு , மலர்வு கண்ணம்மா மேல் கொண்ட அவனின் பாசத்தை சொன்னது.

“மேம்.. டாய்ஸ் வந்திடுச்சு..” ஜின்னா சொல்ல, ஷா எழுந்து சென்று அனிதா பிள்ளைகளுக்கு செலக்ட் செய்து கையில் எடுத்து கொண்டாள். உதய், கண்ணம்மா வம்பு வளர்த்த படியே வருவதற்குள்அனிதா பிள்ளைகளுக்கு எடுத்திருந்தாள்

ம்மா.. உனக்கு மட்டும் தான்..” மகள் சொல்ல, நேரம் பார்த்தார். கோவிலுக்கு வேற செல்ல வேண்டும்.

சரி இன்னொரு நாளைக்கு பார்த்துகிறேன், இப்போ கிளம்பலாம்..” என, ஷா வந்தவள் பிள்ளைகளுக்கு  டாய்ஸை கொடுக்க, சந்தோஷமாக வாங்கி கொண்டனர்

நீங்க எப்படி கோவிலுக்கு வரமுடியுமா..? வேலை இருந்தா பரவாயில்லைபாருங்க..” கண்ணம்மா இருவரிடமும் கேட்க, ஷா முழிக்கவே செய்தாள். உதய் தான் அவளிடம் சொல்லவே இல்லையே

திரும்பி கணவனை பார்க்க, “சாரிடி.. மறந்துட்டேன்.. அம்மா நேத்தே கேட்டாங்க..”  என்றான் அவன்

என்ன பவ்யா உனக்கு சொல்லலையா இவன்..?” கண்ணம்மா புரிந்து கேட்டவர், “சரி நீ பாரு, ஒன்னும் பிரச்சனை இல்லை, அனிதா இங்க வரும் போது எல்லாம் வடபழனி போகாம இருந்தது இல்லை.. நாங்க போய்ட்டு போறோம்..” கண்ணம்மா சொல்லிவிட, என்னமோ ஷாவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது

அவளால் இன்னும் புகுந்த வீட்டில் ஓட்ட முடியவில்லையோ, இல்லை தான் இன்னும் பொறுப்பாக இருக்க வேண்டுமோ என்று பல சிந்தனை உள்ளுக்குள். ராம் கூட இந்த ஒரு வாரத்தில் பலமுறை சொல்லிவிட்டார், “உன் வீட்டுக்கு போய்ட்டு வா, அனிதா திரும்ப லண்டன் போயிடுவா இல்லை, அவளுக்கும் அண்ணி கூட இருக்கனும்ன்னு ஆசை இருக்கும் இல்லை..” என்று.

ஷாவும் முயன்று பார்த்துவிட்டாள் ஆனால் நேரம் வாய்க்கவில்லை. ராமின் செக் அப், ஆப்பரேஷனுக்கான அரேஞ்சமென்ட்ஸ், ரிசப்ஷன் வேலை.. என்று ஓடி கொண்டு தான் இருக்கிறாள். இதில் ராமின் ஆப்ரேஷனுக்குள் எல்லா வேலைகளையும் பிரித்து கொடுத்துவிட்டு அவருடன் சில நாட்கள் இருந்து பார்த்து கொள்ள வேண்டும் என்று வேறு ஏற்பாடு செய்து கொண்டிருக்க, புகுந்த வீடு செல்வதற்கான நேரம் கிடைப்பது என்பது அரிதாகி போனது.

கணவனும், “ஒன்னும் பிரச்சனை இல்லைடி, நான் அனிதாகிட்ட சொல்லிக்கிறேன்..” என்றிருக்க, ஷா அப்போது அமைதியாகிவிட்டாள். ஆனால் அதுவே இப்போது அவளுக்கு ஒரு குத்தலை கொடுத்தது

நேரம் ஆச்சு கிளம்பலாமா..?” ராகுல் சொல்ல, உதய் நானும் வரேன்.. என்றான். யாராவது ஒருத்தர் சென்றால் தான் நன்றாக இருக்கும் என்று அவன் கிளம்ப, ஷாவிற்கு கணவன் மேல் கோவம் வந்தது

நாங்க வரோம்..” என்று எல்லோரும் அவளிடம் சொல்லி கொண்டு கிளம்ப,  “மீட்டிங் இருக்குன்னு நேத்து சொல்லிட்டிருந்த இல்லை, அதை பாரு, நான் போய்ட்டு வந்துடுறேன்..” என்ற உதய் அவர்களுடன்  கிளம்பிவிட்டான்

கணபதி நேரே கோவிலுக்கு வர, இவர்கள் சென்று அங்கு சேர்ந்து கொண்டனர். “பவ்யா வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..”  குடும்பத்தில் எல்லாம் இருக்க, மருமகள் மட்டும் இல்லாததில்  கண்ணம்மா வாய் திறந்து சொல்லியே விட்டார்

ஷா போல அவருக்கும் மருமகள் இன்னும் தங்களுடன் ஓட்டவில்லையே என்ற ஆதங்கம்  இருக்க தான் செய்தது. என்ன தான் அவளின் நிலை புரிந்தாலும், வருத்தம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை

ம்மா.. தப்பு என் மேல தான், நான் அவகிட்ட இப்படின்னு சொல்லலை..”  உதய் சொல்ல

அதனால தான் அவளை கம்பெல் பண்ணல..” என்றுவிட்டார் கண்ணம்மா. பொறுப்பும், கடமையும் கூடுவது தெரிய, இனி கவனமாக இருக்க வேண்டும் என்று உதய் உறுதி எடுத்து கொண்டான்

தரிசனம் முடித்து இரவு உணவு அவர்களின் வழக்கம் போல ஹோட்டலில் முடித்து கொண்டனர். “நீங்க என்னோட வாங்க..” பெண்களை, பிள்ளகைகளை தன் காரில் கூப்பிட்டான் உதய்

எதுக்கு..? நேரம் ஆச்சு, நீ கிளம்பு.. பவ்யா, அண்ணா எல்லாம் உனக்காக காத்துகிட்டு இருப்பாங்க, நாங்க போயிக்கிறோம்..” என்றார் கண்ணம்மா

நான் போன் பண்ணி சொல்லிக்கிறேன்.. வாங்க..” உதய் விடாமல் அவர்களை சென்று வீட்டில் விட்டு சிறிது நேரம் இருந்தே மாமனார் வீடு வந்தான். ராம் தூங்க சென்றிருக்க, ஷா மட்டும் ஹாலில் அமர்ந்தபடி வேலை பார்த்து கொண்டிருந்தாள்

வாங்க.. தண்ணீ எடுத்து வரவா..? “ கேட்க

வேண்டாம்..” என்றவன் பாக்கெட்டில் இருந்த சாமி திருநீறு, குங்குமத்தை மனைவி நெற்றியில் வைத்தான்

இருங்க..” என்றவள் கொஞ்சம் எடுத்து தாலியில் வைத்து கொள்ள, நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா..? கேட்டு கொண்டவன், “லேட் ஆகுமா..?” கேட்டான்

ஆமா..”  ஷா சொல்ல

சரி வந்து ரூம்ல பாரேன்..”  கையில் பைல்களை எடுத்து கொள்ள, ஷா லேப் எடுத்து கொண்டாள். உதய் ரெப்ரெஷ் செய்து கொண்டு படுக்கையில் விழுக, ஷா கட்டிலுக்கே வரவில்லை. டேபிளில் இருந்து கொண்டாள். இருக்கும் அலுப்பில் உதய் சில நொடிகளில் உறங்கிவிட, மனைவிக்கு தான் தூக்கம் வருவேனா என்றது.

என்னதான் இருவரும் கணவனும், மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டாலும் எதோ ஒரு இடைவெளி. உதய் அதை உணர்ந்தானோ தெரியவில்லை ஷா நிச்சயமாக உணர்ந்தாள்

இன்று நடந்ததே போதும் அதற்கு, அவர்களின் சொந்த மாலில் கணவனும், கணவன் குடும்பமும் பணம் கட்டி வாங்குகின்றனர். ஷா முன்னமே கணவனிடம் இதை பற்றி பேச போக, 

“மால் மட்டும் தான் உங்களுது ஷா, கடை எல்லாம் அவங்களுது, உன் பேர் சொல்லி வாங்க எனக்கு பிடிக்கல.. இது பத்தி பேசாத..”  என்றுவிட, ஷாவால் மேலும் பேச முடியவில்லை. அவளுக்கான உரிமை, சலுகை, அதிகாரம் இருந்தாலும் உதய் அதை பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிந்தது. 

“அப்படியென்ன..?” என்று வீணான ஒரு கோவம் கணவன் மேல். அதன் விளைவு அவளாகவே அமைதியாகி போனாள். முன் போல உதய்யிடம் பேச முடியவில்லை. மறுநாள் ரிசப்ஷன் என்பதால் அவளின் அமைதி உதய்க்கு தெரியவில்லை

மறுநாள் இருவரும் ஆபிஸ் செல்லவில்லைமதியம் போல உதய் குடும்பம் ராம் வீட்டிற்கு வந்துவிட, ஷா இந்த முறை மருமகளாக அவர்களை நன்றாகாவே கவனித்து கொண்டாள். அவர்களுக்கு தேவையானதை  எல்லாம் உடன் இருந்து பார்த்து  பார்த்து செய்தாள்

பவ்யா.. நீ முதல்ல போய் குளிச்சிட்டு கிளம்பு.. பார்லர்ல இருந்து வந்துட்டாங்க பாரு.. எங்களுக்கு ஏதாவது தேவைன்னா ஜோதிகிட்ட கேட்டுகிறோம்..”  கண்ணம்மாவே சொல்லும் அளவு இவர்கள் பின்னே சுற்றி கொண்டிருந்தாள்

அதன் பின்னே இவள் கிளம்ப, உதய் தனி ரூமில் கிளம்பினான். ராம் முன்னமே சென்றுவிட, கண்ணம்மா குடும்பம் இருவரையும் கூட்டி செல்ல காத்திருந்தனர். முதலில் உதய் வந்தான். ப்ளூ கோர்ட் சூட்டில் மிகவும் பார்முலாக தான் தயாராகி இருந்தான். வரும் ஆட்கள் அப்படி என்பதால்

அடுத்து ஷா வர எல்லோர் பார்வையும் அவள் மேலே. டார்க் பிங்க் கலர் லெஹங்கா, அதற்கான நெட் ஹால்ப் சேரியை புடவை போல் பின் செய்திருக்க, பிளவுஸ் முழுதும் ஸ்டோன் ஒர்க் செய்யப்பட்டு, வைர கம்மல், வைர வளையல், பீட் முடி அலங்காரம், என்று  மிகவும் கிராண்டாக அதே சமயம் அவளுக்கு எடுப்பாகவும் இருந்தது

உதய்க்கு மனைவியை பார்க்கும் போது ஜிவ்வென்று இருக்க, பார்வையாலே பாட்டு படித்தான். ஷாவிற்கு அவன் பார்வை சிலிர்ப்பை கொடுக்க, அவன் பக்கமே திரும்ப கூடாது என்று முடிவெடுத்து கொண்டாள்

கழுத்துக்கு எதுவும் போடலையா..? வெறும் தாலி, கூட ஒரு சின்ன செயின் மட்டும் போட்டிருக்க..?” அவளின் பெரியம்மா கேட்க

பிளவுஸ் ஒர்க் ஹெவிங்கிறதால  இது  தான்  நல்லா இருக்கும் ஆன்ட்டி..”  என்றனர் பார்லர் பெண்கள்

என்னமோ போங்க.. கழுத்து நிறைய நகை போடாம..” அவர் முணுமுணுத்து கொண்டு செல்ல

ரொம்ப அழகா இருக்க பவ்யா..”  கண்ணம்மா மருமகள் காதோரம் திருஷ்டி பொட்டு வைத்தார்அதற்குள்   ராம் பலமுறை போன் செய்துவிட எல்லாம் ரிசப்ஷன் நடக்கும் இடம் சென்றனர். ஒரு பெரிய மைதானத்தையே டென்ட் போட்டு, லைட்டால் ஜொலிக்க வைத்திருந்தனர்

இவர்கள் அங்கு செல்லும் நேரமே கூட்டம் அலை மோதி கொண்டிருக்க, மணமக்கள் நேரே மேடைக்கு சென்றனர். முதலில் அரசியல் தலைவர்கள், மினிஸ்டர்கள் எல்லாம் பார்த்து கிளம்ப, அடுத்து பிஸ்னஸ் ஆட்கள் மேடையேறினர்

அடுத்து அரசு அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் என்று வந்து கொண்டே இருக்க, மணமக்கள் முகம் கோணாமல் சிரித்த முகத்துடன் நின்றிருந்தனர். நடுநடுவே ஜுஸ், சில நொடிகள் உட்காரும் படியும் உதய்  பார்த்து கொண்டான்

ஒரு நிமிஷம்..” ராம் இடையில் இவர்களை சற்று தள்ளி அழைத்து சென்றார். அங்கும் ஒரு மேடை போட்டிருக்க, அவரின் கம்பெனியில் வேலை செய்யும் ஆட்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். அவர்களுக்கு முறையாக உதய்யை அறிமுகம் செய்ய, உதய்யும் இரண்டொரு வார்த்தை பேசினான். திரும்பவும் அதே மேடைக்கு வர, ஆட்கள் குறையாமல் நின்றிருந்தனர்

மாமா.. ஒரு பைவ் மினிட்ஸ்..” உதய் கீழேயே நின்றுவிட்டவன், உடன் இருந்த முகில் மூலம் இட்லி மட்டும் எடுத்து வரச்செய்து, ஷாவை சாப்பிட வைத்தான். அவன் ஒரு ஜுஸ் மட்டும் குடித்து கொண்டான்

எதுக்கு இவ்வளவு வெய்ட் லெஹங்கா..” அவள் மேடை மேல் ஏற கொஞ்சம் திணறவும் கை கொடுத்து உதவியவன் கேட்க, ஷா பதில் சொல்லவில்லை. ஆட்கள் வர ஆரம்பித்திருக்க, அவர்கள் கவனம் அதில் சென்றது.  

லேட்டாக வந்த பிரசாத், மிகவும் பார்முலாக விஷ் செய்து, கிப்ட் கொடுத்து கிளம்ப, உதய் உதட்டோரம் லேசாக சிரிப்பு மின்னியது. கீழிறங்கிய பிரசாத்தோ கண்ணம்மாவை தேடி சென்று சில நிமிடங்கள் பேசிவிட்டே சென்றான்.

நடுஇரவு ஆனது ரிசப்ஷன் முடிய. கணபதி குடும்பம் அங்கிருந்து அப்படியே அவர்கள் வீடு கிளம்பிவிட, இவர்கள் இப்படியே வந்துவிட்டனர். விட்டால் போதும் என்று உடைமாற்றி அப்படி ஒரு தூக்கம் மொத்த குடும்பத்திற்கும். மறுநாள் இரண்டு பக்க ஆபிஸிற்கும் விடுமுறை என்பதால் எழுந்ததே லேட்

மதிய உணவு முடித்து திரும்ப ஒரு தூக்கம். மாலை போல் தான் கொஞ்சம் தெளிந்தனர். ராம், உதய், ஷா மூவரும்  ஹாலில் அமர்ந்தனர். நடந்து முடிந்த ரிசப்ஷன் பற்றி பேச்சு, அடுத்து நடக்க இருக்கும்  ராமின் ஆப்பரேஷன் பற்றி பேச்சு என்று இரவு உணவு முடியும் வரை பேச்சு சென்றது

சரி.. நான் தூங்க போறேன்.. குட் நைட்..” ராம் தூங்க சென்றுவிட, கணவன் மனைவி மட்டுமே ஹாலில். அதுவரை சாதாரணமாக இருந்த ஷா இப்போது மொபைலில் தலை புதைத்தாள். உதய் வீட்டிற்கு பேசியவன், ஷாவிட கொடுக்க அவளும் பேசி வைத்தாள்

ஜோதி இருவருக்கும் பால் கொடுத்து கிளம்ப, மொபைலை பார்த்தபடி ஷா  பாலை குடிக்க, உதய்யோ அங்கும் இங்கும் பார்த்து இறுதியாக மனைவியை பார்த்தான்

திருமணம் முடிந்ததில் இருந்து ஷா  வீட்டில் இருக்கும் இரவு நேரம் எல்லாம் புடவை, ஜாதி மல்லி பூ தான். ஜோதியின் வேலை என்பது உதய்க்கு புரிந்தது. என்ன இருந்தாலும் புடவை, பூ கொடுக்கிற  அழகே வேற

பார்வை அவளை முழுதும் மேய, ஷா நெளியவே செய்தாள். புது மாப்பிள்ளையின் லட்சணத்தோடு அமர்ந்திருந்தவன் பாட்டும் அப்படியே தான் இருந்தது.

“ம்ப்ச்.. என்ன இது..” ஷா வரக்கூடாது என்று கட்டு படுத்தி வைத்த வெட்கத்தை பார்வையாலே வரவைத்து விட்ட கணவனிடம் பாய்ந்தாள்

என் பொண்டாட்டி அப்படியே அள்ளுறா என்னைநான் என்ன செய்ய..?” என்றவன் கண்கள் எங்கெங்கோ செல்ல, ஷா அவனை முறைத்தாள். மனைவியை பார்த்து கண் சிமிட்டியவன்

ஒத்தைக்கு ஒத்தை அழைக்கும் அழகு.. 

ஒத்தை பக்கம் ஒதுங்கும் பொழுது..

புத்திக்குள்ள அடைக்குது.. 

நெஞ்சுக்குள்ள துடிக்குது.. 

கிறங்கி போய் பாட, புரிந்த ஷா உடம்பு முழுதும் குப்பென்ற சிவந்து போக, புடவையை சரி செய்தபடி எழுந்து ரூமிற்கே ஓடினாள்.  

{அடேய் ஆடி மாசம் விரதம்டா.. என்னை என்ன எல்லாம் எழுத வைக்கிற.. அவ்வ்}

 விட்டேனா என்று பின்னாலே வந்து மனைவியை தூக்கியவன்

நீ தேயாத நாட்டுக்கட்டை..

தெரியாம மாட்டிகிட்டேன்..

 என் ராசி என்றும் மன்மதனே.. அவளின் காதோரம் பாடி கொண்டே கட்டிலுக்கு செல்ல, ஷாவின் கோவம், வருத்தம் எல்லாம் அந்த நேரம் மறந்து தான் போனது.