Advertisement

அத்தியாயம் – 6


யாளிகள், ஈரேழு உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில் வாழும் (Mythological Creature) உயிரினங்கள். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு யாளிகள் வேற்று கிரக வாசிகள் (Aliens).

மனிதர்கள் பூமியில் வாழ்வதுப் போல, யாளிகள் யாளி(மஹர்) உலகத்தில் வசிக்கிறார்கள். ஆனால் யாளிகளுக்கு உள்ளார்ந்த ஆன்மீக சக்தி உண்டு(Spiritual Energy).


யாளிகளால் அவற்றின் பூர்வீக உருவத்திலும் இருக்க முடியும் மனித உருவதிற்கு மாற்றமடையவும்(shape shifting) முடியும். முழு சக்தியை உபயோகிக்க வேண்டுமென்றால் மட்டுமே யாளிகள் முழு பூர்வீக உருவத்திற்கு மாறுவர். சாதாரண சமயங்களில் மனித உருவில் இருபர். யாளிகளின் பெயர்களும் அவற்றின் பிரதேக ஆயுதங்களும், கைக்காப்பு முத்தின் நிறமும் கீழே. பிரதேக ஆயுதத்தைக் கையாள்வதில் அந்தந்த வகை யாளிகள் சிறந்தவர்கள். இருந்தப்போதும் யாளிகளால் மற்ற ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது என்று இல்லை.



1. சிம்மயாளி
உருவம் : சிங்கம்
கைக்காப்பின் நிறம்: மஞ்சள் (தங்க நிறம்)
ஆயுதம் : வாள் , கேடயம்


2. பரியாளி ( நம்ம heroin is this type only. She is white horse in her yaali form. Her tool is flute)
உருவம் : குதிரை
நிறம்: வெண்மை
ஆயுதம் : இசைகருவி, வில்

3. மாதங்கயாளி
உருவம் : யானை
நிறம்: சாம்பல்
ஆயுதம் : தண்டாயிதம்

4. மகரயாளி( மேகன் இந்த வகை யாளி.)
உருவம் : ஆடு
நிறம்: வானத்தின் நீலம்
ஆயுதம் : வளரி, உறுமி

5. மனித யாளி
உருவம்: மனிதன்

இந்த ஐந்து வகை யாளிகளில் அதிக பலம் வாய்ந்தது சிம்மயாளி எதிர்மாறாக மனித யாளிகள் எந்தவித மாய சக்தியும் அல்லாத சாதாரண மனிதர்கள். ஆனால் யாளி உலகில் வாழ்பவர்கள். மனித யாளிகள் எந்தவித கைக்காப்பும் அணிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கென்று ஆயுதமும் இல்லை. மற்ற யாளிகளின் பாதுகாப்பில் வாழ்பவர்கள்.

அவந்திகா, ‘பவளன் 400 வருடம் முந்தவனாக இருந்தப் போதும், அவன் கையில் மேகனைப் போல் கைக்காப்பு இல்லாததால், சாதாரண மனிதயாளியாக இருக்க வேண்டும்.’ என்று எண்ணுகிறாள். அதனால் பவளனிடம் அவளுக்கு அச்சம் எதுவும் இல்லை. சாதாரண எச்சரிக்கை உணர்வு மட்டுமே.

இருந்தும் ‘பவளன் மனித யாளியாக இருந்தால் , தன்னிடம் அறிமுகமானதற்கான காரணம் அறிய வேண்டும். அதற்கு அவனை அறிய வேண்டும். அதனாலே மீண்டும் யாளி உலகில் நடந்த நிகழ்வையே இரண்டாவது போட்டியிலும் அவந்திகா வரைய நினைத்தாள்.

எண்ணத்தைச் செயலாக்க யாளி உலகில் இருக்கும் அந்த அழகிய நீரோடையும் அந்த நீரோடையின் நடுவே ஒரு சிறிய மணிக்கோபுரத்தையும் வரைந்தாள் அவந்திகா. அந்த நீரோடையின் சலசலப்பு அந்த ஓவியத்தைப் பார்த்தாலே உணரும் அளவுக்குத் தத்துரூபமாகச் சிறு சிறு மென்னலைகளை ஒன்றையடுத்து ஒன்றாக வரைந்தாள்.

அதனைத் தொடர்ந்து அங்காங்கே சிறிய தாமரை இலைகளும் அதன் நடுவே ஒளிவிடும் அகல் தீபமும் இருக்குமாறு வரைந்தாள். நீரோடையின் கரையில் அடுக்கடுக்காகக் கருங்கற்கலை வெட்டி வடிவமைக்கப்பட்ட படிகளையும் அதன் மீது சிறுவர் முதல் பெரியவர்வரை அங்காங்கே அமர்ந்து வானை நோக்கி வணங்கி அவர்கள் சார்பில் ஒளிதீபத்தை தாமரையிலையில் ஏற்றி நீரோடையில் விடுவதுப் போலவும் வரைந்துமுடித்தாள்.

ஓவியம்வரை ஆரம்பித்தப் போது இருந்த எண்ண ஓட்டம், ஒரு மணி நேரம் முடிந்து பாதி வரைந்து வெளியில் வர நினைத்த அவந்திகாவிற்கு முற்றிலும் மாறியிருந்தது. யாளி உலகில் சுகமாக வாழ்ந்த நினைவலைகளை அந்த வரைப்படம் வரையும்போது அவளுக்கு உண்டாகி அவளையும் அறியாமல் மெய் மறந்து ஒரு மணி நேர முடிவில் பவளன் வேறெதுவும் வரைய வேண்டிய அவசியமே இல்லாமல் விழாவின் எல்லா நிகழ்களையும் அவளே வரைந்துவிட்டிருந்தாள்.

ஒரு மணி நேரம் முடிந்து நிறுத்தற்கடிகாரம் ஒலி எழுப்பியப் போது ஒரு பெருமூச்சுவிட்டு, ‘பவளனைச் சோதிக்கிறேன் என்று முழு படத்தையும் நானே வரைந்துவிட்டேனே. ஒவ்வொரு வருடமும் இந்த விழா எவ்வளவு விமர்சீக கொண்டாடப்படும். தான் அரண்மனையில் யாருக்கும் தெரியாமல் மக்களோடு மக்களாக உடை மாற்றி வந்து தீபம் ஏற்றுவதும் தன் நாட்டு மக்களின் களிப்பும் இப்போது நிகழ்ந்ததுப் போல மனதில் இருக்கிறதே’ என்று யோசித்து அந்த ஓவித்தையே பார்த்துக் கொண்டு சில நொடிகள் நின்றாள்.

பின் ஒரு பெருமூச்சுவிட்டு, ‘ம்ம்.. பரவாயில்லை. எல்லாம் நானே வரைந்தாலும்தான் என்ன. இதுவரை எதுவும் தீயது பவளனால் நிகழவில்லை. அதனால் அவன் யாரென்று உடனடியாக தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை. பவளனுக்கு இந்தக் கலாச்சார விழா தெரிந்திருந்தாலும் அவன் புதிதாக இந்தச் ஓவியத்தில் சேர்ப்பதற்கு ஏதுமில்லை. என்னதான் இந்தமுறை அவன் இந்த ஓவித்தில் சேர்கிறான் என்று பார்ப்போம்’’ என்று மென்னகை மலர அறையை விட்டு வெளியில் வந்து காத்திருப்பவர்கள் இருக்கையில் அமர்ந்தாள் அவந்திகா

வெளியில் கவனமாக போட்டி முடிவுகளுக்காக காத்திருப்பதுப் போல தோன்றினாலும், உண்மையில் அவந்திகாவின் எண்ணங்கள் அவளையும் அறியாமல் மீண்டும் பவளனை படர ‘ இனி அடுத்தப் போட்டிக்குத் தேர்வானால்தான், வேறேதும் யோசித்து அவனைச் சோதிக்க வேண்டும். இல்லை இந்தப் போட்டியில் தோற்றாலும் இவனால் என்ன நிகழவிருக்கிறது என்று யோசித்து அதிக எச்சரிக்கையுடன் இல்லாமல் வணக்கம் சொல்லிச் சுமூகமாக விடைப் பெற்றுக் கொண்டு பிரிவதும் நல்லதே. இவன் யாராக இருந்தால் என்ன. மனித யாளியால் கண்டிப்பாக மனித உலகில் ஊறு விளைவிக்க முடியாது. அதனால் நான் கவலைக் கொள்ள தேவையில்லை.’ என்று நினைத்தாள் அவந்திகா.

இப்படிதான் அவந்திகா நினைத்தாள். ஆனால் அடுத்ததாக உள்ளே சென்ற பவளனின் கைவேலை அவந்திகாவின் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாக அமைந்திருந்தது. அவள் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்துச் சத்தமில்லாத மெல்லிய புன்னகையை உதிர்த்து அதில் ஒரு சிறியப் பகுதியை மட்டும்தான் சேர்த்தான் பவளன். அதனைப் போட்டி முடிவில் பெரிய திரையில் பார்த்த அவந்திகா திகைத்து விழித்தாள். அந்த வரை படத்தில் வன்னியின்(அவந்திகாவின் யாளி உலக பெயர்) உருவம் ஓவியமாக இருந்தது. அதனோடு வன்னியின் உருவத்திற்கு சற்று தொலைவில் அவளையேப் பார்த்திருப்பதுப் போல ஒரு சிறுவனின் ஓவியமும் புதியதாகப் பவளனால் அந்தத் தாமரை இலைத் தீபத்திருநாள் விழாவில் சேர்க்கப்பட்டிருந்தது.

அதில் வன்னி குறைந்தது 13 வயதினளாக இருக்க வேண்டும். இருந்தும் அவளது உருவம்தான் ஓவியமாக வரையப்பட்டிருப்பது என்பது அவந்திகாவிற்கு புரியாமல் இல்லை. அவள் வரைந்த ஓவியத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றொரு உருவமான அந்தச் சிறுவனை அவளால் யாரென்று உணரமுடியவில்லை. வன்னியை விடவும் 5 அங்குலம் வரையும் குள்ளமாக இருந்த அந்தச் சிறுவன் நேசமுடன் வன்னியின் முகத்தையேப் பார்ப்பதுப் போலவும், அதை உணராத வன்னி அங்கு நீரோடையில் அப்போது அனுப்பிய தாமரை இலைத் தீபத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போலவும் தெரிந்தது.

இந்த முறை பவளன் அவன் யாளி உலகத்தைச் சேர்ந்தவன் என்பதை துளியும் மறைக்கும் எண்ணம் இல்லாமல் அவந்திகாவான வன்னிக்குக் காண்பித்துவிட்டான். விழிவிரித்து ஓவியத்தைப் பார்த்திருந்த அவந்திகாவின் ஒவ்வொரு முக அசைவையும் ஆர்வமாக ஒரு ஜோடி கண்கள் விழுங்கிக் கொண்டிருப்பதுக் கூட உணராமல் அவள் நின்றிருந்த விதம் பவளனை என்னென்னமோ செய்தது.

அவள் அருகில் வந்தவன் யாருக்கும் கேட்டுவிடாதப்படி, அவள் காதருகில் குனிந்து, மெல்லிய குரலில், “மன்னித்துவிடுங்க இளவரசி. உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்த நான் இந்த ஓவியத்தில் உங்கள் உருவத்தை வரையவில்லை. என்னையும் அறியாமல் நிகழ்ந்துவிட்டது” என்றான் பவளன்.

அவனது சூடான மூச்சுக்காற்று அவள் காது மடலில் விழுந்து மீள, அது சிலிர்த்து செங்கொழுந்தானது. சட்டென விலகி நின்று சிவந்த தன் காது மடல் இயல்பு நிலை அடையும் வரை காத்திருந்த அவந்திகா, அவனை ஆராய்ந்துக் கவனித்தாள்.

கள்ளமில்லாத சிறு பிள்ளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு பவளனும் அவளது பார்வைக்கு சலிக்காமல் அவள் எதிரே நின்றான். அவனது கண்ணை மறைத்திருந்த அந்தச் சோடபுட்டி அவனுக்கு மேலும் அப்பாவி தோற்றத்தை அவந்திகாவின் உள்ளத்தில் தோற்றுவிக்க, ‘தன்னை அவனுக்கு யாளி என்று எப்படி அடையாளம் தெரிந்தது என்று தெரியாதப் போதும், அவன் தீய எண்ணம் கொண்டவனாகவும் இல்லை.’ என்று பெருமூச்சுவிட்டாள்.

பின், “ம்ம்…உங்களிடம் பேச வேண்டும். போட்டி முடிந்ததும் ஓடிவிட வேண்டாம். சில நிமிடங்கள் காத்திருக்க முடியும் தானே” என்று நேரிடையாகப் பவளனைப் பார்த்துக் கேட்டாள்.

சின்ன சிரிப்பை உதிர்த்த (chuckle) பவளன், “நிச்சயம் இளவரசி!” என்றான்.

Author note:
====================

வாசகர்களுக்கு யாளிகள் உலகம்குறித்து சில கேள்விகள் இருக்கலாம். அதனால் யாளிகளின் உலகம்குறித்து சிறு முன்னுரையை இந்த அத்தியாயத்தின் முதலில் சேர்த்துள்ளேன். இது நீங்கள் கதையினைத் தடை இல்லாமல் கற்பனைச் செய்து என்னுடன் பயணிக்க உதவியாக இருக்கும்.

என்னுடைய முந்தைய கதைகளைப் போல் அல்லாமல் இந்தக் கதை முற்றிலும் மாறுப்பட்டது. இனி நடக்கும் கதையின் எந்தப் பாகமாவது புரியவில்லை என்றாலும் பின்பு வரும் கதை குழப்பமாகி போகும். அதனால் கதையில் ஏதேனும் புரியவில்லையென்றால் தயங்காமல் கேளுங்கள்.

குறிப்பு: ஈரேழு உலகம் என்பது பூமிக்கு மேல் இருக்கும் 7 உலகம், பூமிக்கு கீழே இருக்கும் 7 உலகம். அதில் சத்யலோகம், பாதாளலோகம் போல, மஹர்லோகம் பூமிக்கு மேல் உள்ள உலகங்களில் 4வது உலகம். உண்மையில் இந்த உலகில் மோட்ஷம் அடைந்த முனிவர்கள் வாழ்வார்களாம். அதனால் இந்த உலகை யாளி உலகமாகத் தேர்ந்தெடுத்தேன்.

உண்மையில் பல வகை யாளிகள் நம்முடைய பாரம்பரிய கதைகளிலும் கோவில்களிலும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையில் நாம் பார்க்கக் கூடியது, 5 வகை மட்டுமே. இவையல்லாமல் சர்பயாளியும் இருக்கிறது. இவை தவிர வேறு வகை யாளிகள் இருக்கிறதா என்று என்னைக் கேட்டால் எனக்குத் தெரியவில்லை.

யாளிகள் உண்மையில் வாழ்ந்த உயிரினங்களா? என்று என்னைக் கேட்டால் எனக்கும் தெரியாது. அவற்றைக் கோவில் மதில் சுவரில் பார்த்தப்போது என்னுள்ளும் அவற்றைப் பற்றிய உண்மைக் கதையை அறிந்திட ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அதற்கான எந்தக் குறிப்பும் தேடிக் கிடைக்கவில்லை. யாருக்கேணும் தெரியும் என்றால் தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Advertisement