இந்த அளவு அவ உன்னை மன்னிச்சதே பெருசு.. மூடிகிட்டு இரு.
மனசாட்சி எடுத்துச் சொல்ல அவனும் குளித்துவிட்டு கீழே வந்தான். ஏற்கனவே மகள் முகத்தில் இருந்த தெளிவு பெற்றவர்களின் மனதை குளிரச் செய்ய அவர்களிடம் சசி சாதாரணமாக பேச ஆரம்பிக்க கவலை முழுவதுமாக அகன்றது.
பம்பரமாக சுழன்று வேலை பார்த்தார் வாசுகி. பிள்ளைகள் இருவரும் எழ கீழே தந்தையின் குரல் கேட்டதும் பூங்கொடி விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள்.
“ம்மா என்ன அப்பா வாய்ஸ்.. அப்பா இங்க வந்திருக்காரா..”
“ம்ம்ம்”
” நான் போய் அவர்கிட்ட பேசவா.. ” தன்னுடைய அனுமதிக்காக காத்து நின்ற பூங்குழலியை ஆதுரமாக நோக்கிய தென்றல்
” உனக்கு அடுத்து தான் மா எனக்கு அப்பா.. ” மகளின் அன்பில் கண்களை கரித்து கொண்டு வந்தது.
“போடி..” அவளை முத்தமிட குழலியும் சசியை தேடி சென்றாள். அங்கே கொடி அவன் மடியில் அமர்ந்து கதைகள் பல பேசிக் கொண்டிருக்க பெரிய மகளை கண்டதும் சசியின் கண்கள் பாசத்தில் விரிந்தன.
“ப்பா” அவளையும் கட்டி அணைத்து முத்தமிட்டு நலம் விசாரித்தான் சசி.
அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறியவள் தாயைப் போலவே நேர் பார்வை பார்த்து
“ப்பா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா”
அவளின் ஜாடையில் அப்படியே தென்றலைக் கண்டான் சசி.
“கேளுடா”
” எது நடந்தாலும் நீங்க எங்க கூடயே இருப்பீங்களா.. அம்மாவ விட்டுட்டு போயிருவீங்களா.. ” தன்னுடைய மடத்தனம் எந்த அளவிற்கு குழந்தையின் மனதை பாதித்திருக்கிறது என்பதை அவன் அறிந்து கொண்டான். வேதனை நெஞ்சை பிளந்தது.
” இனிமே என்ன நடந்தாலும் அப்பா உங்க கூட தான் இருப்பேன். என் உயிர் போனாலும் உங்க அம்மா கூட தான். சாரிடா” அடி மனதிலிருந்து மகளிடம் மன்னிப்பு கேட்க பூங்குழலியின் முகம் பூவாய் மலர்ந்தது.
பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்க்க இறைவனுக்கு நன்றி கூறினார்கள்.
வாசுகி உடனே மாதவிக்கு அழைத்த இங்கே நடந்ததை கூறினார்.
” எப்படியோ இனிமே தென்றல் நல்லாருந்தா போதும் அண்ணி.. இந்த பொண்ணு ஊமை மாதிரி இருந்தே காரியத்தை சாதிச்சிட்டா..” அவருக்கும் மகிழ்ச்சியே.
அன்றைய மாலை சசி பிள்ளைகளை விட்டு அகலவில்லை.. பிள்ளைகள் அவனை விடவில்லை என்பதுதான் உண்மை. அதிலும் பூங்கொடி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு திரிந்தாள்.
என்னதான் பிள்ளைகள் அம்மாவிடம் பாசமாக இருந்தாலும், ஒரு தந்தையின் பாசத்தை அவனைத் தவிர வேறு யாராலும் தர முடியாது என்பதை தென்றலும் புரிந்து கொண்டாள். மதிய விருந்து அமர்க்களப்பட்டது.
இரவு சசி மீண்டும் சென்னை திரும்புவதாக இருந்தான்.. மற்றவர்களை விட குழலியிடம் தான் அதற்கான அதிர்வு அதிகமாக இருந்தது..
தென்றல் அர்த்த பார்வை பார்க்க சசிக்கு மகளின் பயம் கலந்த பார்வை ஆழமாக பாதித்தது..
தென்றல் பரசுராமின் காரை எடுத்துக் கொண்டு சசியை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வந்தாள்.
” உன் முடிவுல மாற்றம் இல்லையா தென்றல்.. ” இறுதியாக கேட்டான் சசி.
” என் பிள்ளைங்க நல்லபடியா வளரனும்னா என் முடிவுல கண்டிப்பா மாற்றமில்ல. நான் எந்த விதத்திலையும் உங்கள போர்ஸ் பண்ணல சசி. இந்த நிலையை அடையறதுக்கு நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டீங்கன்னு என்னை விட இன்னொரு ஆளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது ஈஸியா எல்லாத்தையும் தூக்கி போடுங்கன்னு என்னால எப்படி சொல்ல முடியும்.. இது உங்களோட கனவு. எல்லோருக்கும் இது அமையாது.. அதையும் பார்த்துகிட்டு இதையும் பாத்துக்க உங்களால முடியும்.. நீங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க. இன்னும் ரெண்டு நாள்ல பிள்ளைங்களுக்கு இங்க ஸ்கூல்ல அட்மிஷன் வாங்கிடுவேன்.” தென்றலை கட்டியணைத்து முத்தமிட்டு கிளம்பினான் சசி மித்ரன்.
அவன் மனதில் பல திட்டங்கள். சென்னைக்கு சென்றதும் தென்றலுக்கு அழைத்துக் கூறினான்.. அதற்கிடையே அவன் பல ஏற்பாடுகளை செய்தான்..
அன்று இரவு மீண்டும் தென்றலுக்கு அழைத்து
“செல்லம் அட்மிஷன் வாங்கிறாத நானும் வரேன்..” அவனுடைய மனதில் என்ன ஓடுகிறது என்றே அவளுக்கு புரியவில்லை..
சொன்னதைப் போலவே அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வந்தான்..
தென்றல் பெரியவர்களை வைத்துக்கொண்டு தன்னுடைய முடிவை பற்றி சொல்ல தொடங்கினான் சசி மித்ரன்.
” படம் எங்க இருந்தாலும் பண்ணலாம். கொஞ்ச நாள் நான் எல்லாத்துக்கும் பிரேக் விடலாம்னு இருக்கேன். போதும் இத்தனை வருஷமா என்னோட கனவை கட்டிக்கிட்டு அழுதாச்சு. இனிமே குடும்பத்தை பார்க்கலாம்னு இருக்கேன். ஊட்டி கான்வென்ட் ஸ்கூல்ல பிள்ளைங்க படிக்க ஏற்பாடு பண்ணிட்டேன்.. நாளைக்கு போய் அட்மிஷன் போட்றலாம்..
சிவக்குமார்னு என்னோட ஃப்ரெண்ட். கனடால இருக்கானே..உனக்கு கூட தெரியுமே தென்றல். அவனுக்கு அங்க ஒரு எஸ்டேட் இருக்கு. போன வருஷத்துல இருந்து கேட்டுட்டு இருக்கான்.. எஸ்டேட் விக்க போறேன் வாங்குறியான்னு. இப்போ அந்த ஐடியால தான் நான் இருக்கேன். அந்த எஸ்டேட் கூட சேர்ந்து அவனோட பெரிய பங்களா.. எல்லாத்தையும் வித்துட்டு அவன் ஒரேடியா ஃபாரின்ல செட்டிலாக பிளான் பண்ணிட்டான்..” அவன் சொல்ல வருவது புரிந்து பெரியவர்கள் இருவருக்கும் ஆச்சரியம்.
” இது சரியா வருமா சசி.. எங்களுக்காக நீங்க எதுக்கு எல்லாத்தையும் விட்டுட்டு வரணும்.. இங்க நான் பாத்துக்குறேன்.. நீங்க போயிட்டு போயிட்டு வாங்க.. ” தென்றலுக்கு மனம் பொறுக்கவில்லை.
” அது சரியா வராது டி.. இப்போ நம்ம கிட்ட எல்லாமே இருக்கு. படம் எங்க போக போகுது. நல்ல டைரக்டர்னு பேர் எடுத்துட்டேன். கொஞ்ச நாள் பிரேக் விடுவோம்.. அங்க போயிட்டு எல்லாம் செட்டில் ஆயிட்டு திரும்ப கதை எழுத ஆரம்பிப்பேன். கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நல்ல படமா திரும்ப எடுப்பேன். உனக்கும் இந்த பிரஷரான வாழ்க்கையிலிருந்து ஒரு மாற்றம் வேணும் இல்லையா..” தென்றல் புரிந்ததாக தலையாட்டினாள்.
” மாப்ள.. நீங்க எடுத்த முடிவு நல்ல முடிவுன்னு நான் சொல்லுவேன். சம்பாதிச்சிட்டீங்க. பேர் எடுத்துட்டீங்க. இதுக்கு மேல உங்க தனிப்பட்ட வாழ்க்கையை பாக்குறது தான் நல்லது” பரசுராம் அவருடைய கருத்தை தெரிவித்தார்.
” மாமா.. நீங்களும் அத்தையும் இங்க தனியா இருந்து என்ன பண்ண போறீங்க.. எங்க அப்பா அம்மா கிட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத பாசம் உங்ககிட்ட இருந்து தான் கிடைக்குது. உங்களுக்கும் பசங்க இல்லை. நாளைக்கு உங்களுக்கு எல்லாம் நல்லது கெட்டதும் நானும் அகிலனும் செய்யணும்.. அந்த பங்களா ரொம்ப பெருசு. கிட்டத்தட்ட எட்டு ரூம் இருக்கு. இங்க தனியா இருந்து எதுக்கு கஷ்டப்படுறீங்க எங்க கூட வந்துருங்க.. ” அவன் சொன்னதைக் கேட்டு பரசுராம் வாசுகி இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தென்றல் கூட ஆடி போனாள்.
சசி தன் அன்னைக்கு நடந்ததை சொல்லி ” அப்பா ரொம்ப நொடிஞ்சிட்டாரு.. அம்மாவ விட்டுட்டு வர மாட்டாரு..”
” கேட்கவே மனசு கஷ்டமா இருக்கு சீக்கிரம் அம்மாவுக்கு சரியாயிடும்.. நீங்க இப்ப போங்க.. அங்கே எல்லாம் செட் பண்ணுங்க. எங்களுக்கு யார் இருக்கா கடைசி காலத்துல நீங்க தானே.. கொஞ்ச நாள் போகட்டும் ப்பா” நாசுக்காக பரசுராம் தவிர்த்து விட்டார். அதற்கு மேல் அவரை வற்புறுத்தவில்லை சசி.