ஆனால் முகத்தில் இருந்த சந்தோஷத்தை மறைக்கவும் முடியவில்லை.

தீபிகா சைகையில்,

“நாங்க தென்காசி போறோம். அருவிக்கு.”

என்றாள்.

ஆகாஷின் கண்கள் இன்னும் பிரகாசித்தன.

“நானும் வரட்டுமா?”

தீபிகா அவனை முறைத்தாள்.

சுபா உடனே இடைமறித்தாள்.

“முதல்ல சாப்பிடலாம். தீபிகா இன்னும் சாப்பிடவே இல்லை. டிரைவர் இவ்வளவு தூரம் தனியா ஓட்டிட்டு வந்திருக்கார்.”

அவர்கள் அருகிலிருந்த புதிய ஹோட்டலுக்குச் சென்றனர்.

சுபா மூன்று அறைகளின் சாவிகளை வாங்கி வந்தாள்.

ஒன்றை ஆகாஷிடம் கொடுத்தாள்.

மற்றொன்றை டிரைவரிடம் கொடுத்தாள்.

அவன் தயக்கத்துடன்,

“சுபா … இது எதுக்கு?”

என்று கேட்க,

“நான் வாங்கிட்டேன்டா. விடு.”

என்று சுபா முடித்துவிட்டாள்.

ஹோட்டல் மேனேஜர்,

“மேடம், சாப்பிட என்ன வேண்டும் என்று சொன்னீங்கன்னா இருபது நிமிஷத்துல ரெடி பண்ணிடுவோம்.”

என்றார்.

தீபிகா ஆகாஷைப் பார்த்தாள்.

சுபா உடனே,

“நீயே ஆர்டர் பண்ணு. உன் அண்ணன், அண்ணி வந்துட்டு இருக்காங்க. பார்த்துக்கோ.”

என்று சொல்லிவிட்டு தீபிகாவுடன் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து தீபிகா கீழே வந்தபோது ஆகாஷ் அங்கேயே காத்திருந்தான்.

“இன்னும் பத்து நிமிஷம் ஆகும். வா… தோட்டத்துக்குப் போவோம்.”

என்று அவன் அவளது கையைப் பிடித்தான்.

அந்த ஒரு தொடுதலில் தீபிகா வழக்கம்போல் விலகவில்லை.

அவள் முகம் மட்டும் சிவந்தது.

அந்த நேரத்தில் சுபாவின் கைபேசி ஒலித்தது.

கார்த்தி.

அவள் அழைப்பை எடுத்துப் பேசிக்கொண்டே ஹோட்டல் முகப்புக்கு வந்தாள்.

கார்த்தி மனைவியுடன் காரிலிருந்து இறங்கினான்.

“நீ எப்படி இங்கே? மாப்பிளையைப் பார்க்க ஊருக்குப் போறேன்னு சொன்னியே!”

என்று கேட்டபடி சுற்றிப் பார்த்தான்.

அருகிலிருந்த தோட்டத்தில் ஊஞ்சலில் ஒரு இளம் ஜோடி அமர்ந்திருந்தது.

“என்னப்பா… இந்த ஹோட்டல் வாட்ச்மன் உள்ளே விடமாட்டேங்கிறான். அர்த்தராத்திரியில காதல் ஜோடி வெளியே கொஞ்சிக்கிட்டு இருக்கு. ஹோட்டல் சரியில்ல போல. நீ வா, நாம கார்ல போயிடுவோம்.”

என்று சொல்லிக்கொண்டிருந்தவன், சுபா சிரித்ததைப் பார்த்தான்.

“அடேய் அண்ணா… கண்ணைத் திறந்து நல்லா பாரு. அது யாருனு.”

கார்த்தி இரண்டு அடிகள் முன்னால் சென்றான்.

அடுத்த நொடி அவன் முகம் மாறியது.

“தீபிகா…?”

அவனது குரல் நடுங்கியது.

அருகில் இருந்தவன்…

ஆகாஷ்.

தீபிகா அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த முகத்தில் இருந்த வெட்கமும், இதுவரை கார்த்தி பார்த்திராத ஒரு அமைதியான சந்தோஷமும் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுபா அவன் கையைப் பிடித்து,

“அம்மாகிட்ட இருந்து எல்லாம் தெரிஞ்சுட்டுதான் இங்கே வந்திருக்கோம்.”

என்று மெதுவாகச் சொன்னாள்.

அதற்குள் டிரைவர் சங்கடத்துடன் அருகில் வந்தான்.

“தம்பி… நேரம் நைட். இப்படி ஊஞ்சல்ல ஆடிக்கிட்டு இருந்தா எதாவது அடிபட்டுடுச்சுன்னா பெரியவர் என்னைக் கொன்றே விடுவார்.”

என்றான்.

சுபா சிரித்தாள்.

“பாவம்… இவருக்கு பயம் அதிகம்.”

கார்த்தியைச் சுட்டிக்காட்டி,

“இவர் எங்க எல்லாருக்கும் அண்ணன். இவர்கிட்ட சொல்லுங்க.”

டிரைவர் ஒரு பெருமூச்சு விட்டான்.

அந்த நேரத்தில் கார்த்தியின் மனைவி உஷா மெதுவாகச் சொன்னாள்.

“இங்கே பாருங்க… தீபிகா இப்படி சந்தோஷமா இருந்ததை நான் பார்த்ததே இல்ல.”

கார்த்தி அமைதியாக அவளைப் பார்த்தான்.

“உங்க தம்பி பெரிய டாக்டர். பொறுப்பானவன். அவன் பார்த்துக்குவான். நீங்க பயப்படாதீங்க.”

கார்த்தி எதுவும் சொல்லவில்லை.

அவன் பார்வை மீண்டும் தீபிகாவிடமே சென்றது.

அவள் அவனைப் பார்த்ததும் சற்றே சங்கடப்பட்டாள்.

அந்த நேரத்தில் சரணிடமிருந்து அழைப்பு வந்தது.

“நாங்க தனி விமானத்துல கிளம்புறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே வந்துருவோம். தென்காசில தங்குற இடத்தைப் பார்த்துக்கோ. போஸ் இருப்பார். அவரை உன் பக்கத்துல வைச்சுக்கோ. எல்லா ஏற்பாடும் பாதுகாப்பாக இருக்கணும்.”

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“டேக் ஆஃப் ஆகுது. பிறகு பேசுறேன்.”

என்று அழைப்பை முடித்தான்.

கார்த்தி சுபாவிடம் விஷயத்தைச் சொன்னான்.

சுபா உடனே,

“எங்க புருஷன் நண்பன் தான் தனியார் ரிசார்ட் மேனேஜர் . அதற்குப் பின்புறம் அவர்களுக்குச் சொந்தமான இடம் இருக்கு. அதற்கருகிலேயே அருவியும் இருக்கு.”

என்றாள்.

அவள் தனது கணவரை அழைத்து விபரத்தைச் சொன்னாள்.

அவன்,

“ரிசார்ட் மேனேஜர்கிட்ட பேசிட்டு வரேன்.”

என்று கூறினான்.

சிறிது நேரத்தில் அனைவரும் உணவு மேசையில் அமர்ந்தனர்.

தீபிகாவும் ஆகாஷும் மட்டும் தனி உலகத்தில் இருப்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆகாஷ் கார்த்தியைப் பார்த்ததும் சற்றே வெட்கப்பட்டான்.

கார்த்தி சிரித்தபடி,

“டேய்… நீ பண்ணுன வேலை எல்லாம் எனக்குத் தெரியும்.”

என்று சொல்லப் போகும் முன் அவனது கைபேசி தொடர்ந்து ஒலித்தது.

அலுவலகத்தில் மென்பொருளில் ஒரு சிறிய பிரச்சனை இன்னும் சரியாகவில்லை.

“இன்னுமா சரி செய்யல?”

என்று அவன் கோபமாகக் கேட்டான்.

அது ஒரு முக்கியமான நிறுவனத்தின் மென்பொருள்.

சுபா விஷயத்தை அறிந்ததும்,

“என்ன பிரச்சனை?”

என்று கேட்டாள்.

கார்த்தி விளக்கினான்.

அப்போது அவள் தீபிகாவைப் பார்த்தாள்.

தீபிகாவின் கவனம் அங்கே இல்லை.

ஆகாஷின் பார்வையைச் சந்தித்தவள் வெட்கத்தில் முகம் சிவந்திருந்தாள்.

அவளைப் பார்த்த சுபாவுக்கு மனதுக்குள் ஒரு நிம்மதி.

“இவளை இப்படி சந்தோஷமா பார்த்ததே இல்ல.”

என்று சொல்லிக்கொண்டே இருந்தவள், தீபிகாவை அழைக்க அவள் விபரம் கேட்டு,
தீபிகா கார்த்தியின் மடிக்கணினியை எடுத்திருந்தாள்.

பிரச்சனையைப் பார்த்தாள்.

சில நிமிடங்கள்.

அவளது விரல்கள் விசைப்பலகையில் வேகமாக நகர்ந்தன.

பத்து நிமிடங்களுக்குள்,

“சரி.”

என்று மடிக்கணினியை கார்த்தியிடம் கொடுத்தாள்.

கார்த்தி திரையைப் பார்த்தான்.

பிரச்சனை தீர்ந்திருந்தது.

அவன் சிரித்தான்.

“இதுதான் என் முதலாளி.”

ஆகாஷ் அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

“இதை விட பெரிய விஷயம் என்ன இருக்க முடியும்?”

என்று அவன் மனதுக்குள் நினைத்தான்.

அவள் திறமைசாலி என்று தெரியும் ஆனால் இன்று கார்த்திக்கு ஒரு பிரச்சன்னை என்றால் அதை சரி நிமிடங்கள் சரி செய்யும் அவள் அவனுக்குத் புதிதாக தெரிந்தாள் .

ஆனால் அந்த திறமை கூட அவனுக்குப் பிடித்தது, இப்போது அவள் முகத்தில் தெரிந்த அந்தச் சிறிய வெட்கம்.

சாப்பிட்டு முடித்ததும் ஆகாஷ் எழுந்தான்.

“இனி போலாமா?”

என்று கேட்டான்.

சுபா உடனே,

“ஜாஸ்மினும் அணுவும் இங்கே வர்றாங்க.”

என்றாள்.

தீபிகா உடனே,

“சரி…”

என்றாள்.

“தூக்கம் வரல. வெளியே போவோம்.”

என்று ஆகாஷ் துள்ளிக்குதித்தபடி தயாரானான்.

அந்த நேரத்தில் சுபாவின் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது.

“மொத்தம் இருபது ரூம். அதுல ஐந்து தான் காலியா இருக்கு.”

என்று அவர் சொன்னார்.

கார்த்தி அருகில் இருந்தான்.

போஸ் அங்கே வந்ததும் கார்த்தி முழு விஷயத்தையும் விளக்கினான்.

அவர் நேரடியாக சுபாவின் கணவரிடம் பேசினார்.

“மேனேஜர் அருகில இருக்காரா?”

“இருக்கார்.”

“அவர்கிட்ட பேசினார் .”

சிறிது நேரம் பேசிய பிறகு போஸ் தெளிவாகச் சொன்னார்.

“ரிசார்ட் முழுவதும் இப்போ இருந்து நாங்க இங்கிருந்து கிளம்புற வரைக்கும் எங்க கட்டுப்பாட்டுல இருக்கணும். நம்பிக்கையான ஆட்கள் மட்டும் உள்ளே இருக்கணும். வெளியிலிருந்து யாரும் வரக்கூடாது.”

சிறிது இடைவெளி.

“உங்க முதலாளியிடம் பேசிட்டு சொல்லுங்க. இங்க தங்குறவங்க விவரம் வெளியே போகக்கூடாது. பதிவில் கார்த்தி சார் பெயர் மட்டும் இருக்கட்டும். யார் வந்திருக்காங்க, யார் தங்கியிருக்காங்கன்னு உங்களையும், உங்க முதலாளியையும் தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது.”

அவரது குரலில் இருந்த தீவிரம் அனைவருக்கும் புரிந்தது.

சில நேரத்தில் ரிசார்ட் முதலாளியிடமிருந்து சம்மதம் வந்தது.
சரண், கரண் இருவரும் தங்களது ஜோடிகளான ஜாஸ்மின், அணுவுடன் தனி விமானத்தில் மதுரை வந்து இறங்கினர்.

விமான நிலையத்திலேயே டிரைவர் காத்திருந்தான்.

அவர்களைப் பார்த்ததும்,

“வாங்க தம்பி…”

என்று மரியாதையுடன் வரவேற்று, அவர்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு காரை நோக்கி அழைத்துச் சென்றான்.

காரில் ஏறியதும் சரண் அவனைப் பார்த்து,

“அங்கிள்… எல்லாம் சரியா இருக்கா?”

என்று கேட்டான்.

டிரைவர் புன்னகைத்தான்.

“எல்லாம் சரியாத்தான் இருக்கு தம்பி. பாப்பாவுக்கு அந்த தம்பி ஜோடி நல்லா பொருத்தமா இருக்கு.”

சரணும் கரணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

டிரைவர் தொடர்ந்து,

“தம்பி… அதை நீங்க நேர்ல வந்து பார்த்துத்தான் தெரிஞ்சுக்கணும்.”

என்று சொல்லிவிட்டு அமைதியாக காரை ஓட்டத் தொடங்கினான்.

அந்த ஒரு வார்த்தையே சரணின் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

சில நேரத்தில் அவர்கள் ஹோட்டலை அடைந்தனர்.

அனைவரும் உள்ளே நுழைந்தபோது, ஜாஸ்மின் திடீரென நின்றாள்.

முகப்பில் இருந்த கண்ணாடி வழியாக வெளியே பார்த்தவள், சரணின் கையைப் பிடித்து,

“சரண்… அங்கே பாரு.”

என்று மெதுவாகச் சொன்னாள்.

சரண் அவள் காட்டிய திசையில் பார்த்தான்.

அவன் பார்த்த காட்சி அவனையும் ஒரு கணம் பேசாமல் செய்தது.

சற்று தொலைவில் ஆகாஷ் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.

அவனுக்குப் பின்னால்…

தீபிகா அவனைத் துரத்திக் கொண்டிருந்தாள்.

அங்கே வேறு யாரும் இல்லை.

இருவரும் குழந்தைகள் போல ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டிருந்தனர்.

சரணின் புருவம் உயர்ந்தது.

அவன் இதுவரை பார்த்த தீபிகா இதுவல்ல.

அவள் எப்போதும் அமைதியாகவும், அளவாகவும், தன்னைச் சுற்றி ஒரு சுவர் வைத்துக் கொண்டும் இருப்பவள்.

ஆனால் இப்போது?

அவளே ஒருவரைத் துரத்திக் கொண்டு ஓடுகிறாள்.

அதுவும் சிரித்தபடி.

ஜாஸ்மின் சரணைப் பார்த்து மெதுவாகச் சிரித்தாள்.

“இப்ப புரியுதா?”

சரண் பதில் சொல்லவில்லை.

அவன் முகத்தில் மட்டும் ஒரு குறும்புப் புன்னகை.

அந்த நேரத்தில் அணு தீபிகாவை நோக்கி செல்ல முயன்றாள்.

“தீபிகா…”

என்று அழைத்தபடி முன்னேறியவளை, கரண் உடனே கையைப் பிடித்தான்.

“வா… முதல்ல உள்ளே போவோம்.”

“ஆனா தீபிகா—”

“அவளுக்கு இப்ப நம்ம தேவையில்லை.”

என்று கரண் மெதுவாகச் சொல்ல, அணு அவனைப் பார்த்தாள்.

அவன் முகத்தில் இருந்த குறும்பைப் பார்த்ததும் அவளுக்கும் சிரிப்பு வந்தது.

இருவரும் உள்ளே சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து சரணும் ஜாஸ்மினும் உள்ளே வந்தனர்.

அங்கே கார்த்தியும் சுபாவும் அவர்களை வரவேற்றனர்.

“வாங்க… வாங்க…”

என்று சுபா மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றாள்.

ஜாஸ்மின் உடனே சுபாவின் அருகில் சென்று,

“என்னடி இது?”

என்று கேட்டாள்.

சுபா எதுவும் தெரியாதவள் போல,

“என்ன?”

என்றாள்.

ஜாஸ்மின் வெளியே காட்டி,

“அங்கே என்ன நடக்குது?”

என்று கேட்க, சுபா சிரித்தாள்.

“நீயே பார்த்தியே… இன்னும் என்ன கேட்கிற?”

சரண் அருகில் நின்றபடி,

“நம்ம தீபிகாவா அது?”

என்று கேட்டான்.

சுபா சிரித்துக் கொண்டே,

“ஆமாம். நம்ம தீபிகாதான்.”

என்றாள்.

கரண் அணுவுடன் அருகில் வந்து,

“நாங்க வந்ததிலிருந்து இவளை இப்படித்தான் பார்க்கிறோம்.”

என்று சொல்ல, கார்த்தியும் சிரித்தான்.

“நானும் அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன்.”

என்றான்.

ஜாஸ்மின் இன்னும் ஆச்சரியமாக,

“இவளுக்கு என்ன ஆச்சு? நம்மகிட்ட கூட இப்படி ஓடி விளையாட மாட்டாளே.”

என்று கேட்டாள்.

சுபா அவளைப் பார்த்து,

“அதுதான்… அவளுக்கே தெரியாம ஏதோ மாறிட்டு இருக்கா.”

என்று மெதுவாகச் சொன்னாள்.

சரண் அந்த வார்த்தையைக் கேட்டதும் மீண்டும் வெளியே பார்த்தான்.

அங்கே ஆகாஷ் ஓடிக்கொண்டிருந்தான்.

அவனைப் பிடிக்க முடியாமல் தீபிகா சிறிது தூரத்தில் நின்று மூச்சைச் சீராக்கிக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த ஆகாஷ் திரும்பி நின்று சிரித்தான்.

தீபிகா அவனை முறைத்தாள்.

ஆனால் அந்த முறையில் கூட கோபம் இல்லை.

வெட்கம் கலந்த ஒரு குழந்தைத்தனம் இருந்தது.

சரண் மெதுவாக ஜாஸ்மினிடம்,

“இது நம்ம எல்லாருக்கும் தெரியாத தீபிகா.”

என்றான்.

ஜாஸ்மின் தலையசைத்தாள்.

“ஆமாம்… இதுவரைக்கும் அவள் யாருக்காகவும் இப்படி மாறியதே இல்ல.”

அந்த நேரத்தில் சுபா இருவரையும் பார்த்து சிரித்தாள்.

“அவளுக்கு ஆகாஷ் பிடிச்சிருக்கா இல்லையா எனக்கு இங்குவரும் வரை தெரியாது.”

சிறிது இடைவெளிக்குப் பிறகு,

“ஆனா ஆகாஷ் வந்ததிலிருந்து அவளோட உலகம் மட்டும் கொஞ்சம் கொஞ்சமா பெரிசாகுது.”

என்றாள்.

அனைவரும் அமைதியாக அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர் .

அனைவருக்கும் அதுதான் உண்மை என்று தோன்றியது.