அத்தியாயம் 10

காலையில் கார்த்திகாவுக்கும் தகவல் சென்றது.

பின் ஆகாஷ் பாட்டி எடுத்து கூறி அனைவரும் தூத்துக்குடிக்கு தனி விமானம் மூலம் வந்து கொண்டிருந்தனர்.

இந்த விஷயம் சரணுக்குத் தெரிந்திருந்தது.

அவன் கரணிடம்,

“கொஞ்சம் வேலை இருக்கு. தீபிகா வந்தவுடன் அவளை கூட்டிட்டு வந்து இந்த வேலையை முடிச்சிடு. இருபது நிமிஷம் ஆகும்,” என்றான்.

பின்னர் ஆகாஷைப் பார்த்து,

“மாப்பிள்ளை, வாங்க. நாம தனியா பேசலாம்,” என்றான்.

கார்த்தி, அவன் மனைவி, சுபா, அவளுடைய கணவன், நீலிமா ஆகியோர் கேரவனுக்குள் சென்றனர்.

சரண் நேராக ஆகாஷிடம் பேசத் தொடங்கினான்.

“ஆகாஷ்… உங்களுக்கு நாளைக்கு தீபிகாவுடன் கல்யாணம் என்பது தெரிந்திருக்கும். உங்க பாட்டி ஏற்பாடு. அதைப் பற்றி ஏதாவது சொல்லும் முன்…”

ஆகாஷ் அவனை நிறுத்தினான்.

“எனக்கு அதில் விருப்பம்தான். அப்பா, அம்மா, பெரியம்மா, பெரியப்பா, பாட்டி வராதது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா அவங்க முன்னாடி எனக்கு கல்யாணம் நடக்கணும்னு ஆசை. அது இல்லாம போயிடாது அதனால பரவாயில்லை.”

சரண் கார்த்தியைப் பார்த்தான்.

பின்னர் ஆகாஷை நோக்கி,

“உங்க அண்ணன் சொன்னது உங்களை மனசுக்குள் உறுத்தும்,” என்றான்.

ஆகாஷ் அமைதியாகப் பார்த்தான்.

“தீபிகா என் சொந்தத் தங்கை முறை. என் சித்தப்பா ராம் முதல் மனைவி அமுதாவின் பொண்ணு.”

அவன் இதுவரை மறைத்து வைத்திருந்த அனைத்தையும் வெளிப்படையாகச் சொன்னான்.

“ஆகாஷ், நீங்க எங்க குடும்பத்தை வெளியிலிருந்து பார்க்கிறீங்க. பெரிய குடும்பம். வசதி. செல்வாக்கு. எல்லாமே நல்லா தெரியும். ஆனா எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையம் இருக்கு.

சின்ன வயசிலிருந்து யாரிடம் பழகணும், யாரிடம் பேசணும், எவ்வளவு சிரிக்கணும்… எல்லாத்துக்கும் ஒரு கட்டுப்பாடு. சில நேரம் அது நம்ம இயல்பையே செயற்கையாக்கிடும்.

தீபிகாவுக்கு அது இன்னும் அதிகம்.”

ஆகாஷ் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“அவளுக்கு பதின்மூன்று வயசிலேயே மனசுக்குள் இருந்த வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும். அம்மா இல்லை. அப்பா இல்லை. அதுக்கு மேல குடும்ப கௌரவம், அந்தஸ்து, கட்டுப்பாடு.

அதை உடைக்க அவள் புத்தி மட்டும் உதவல. எங்க அம்மாவும், அவளோட தாத்தாவும் அவங்களுக்குத் தெரியாம அவளுக்கு உதவி பண்ணினாங்க. சின்ன வயசிலேயே இந்தத் தொழில் வட்டத்துக்குள் அவள் மட்டும் இல்லாமல் அவளோட தோழிகளையும் கொண்டு வந்தாங்க.

அவளோட இயந்திர வாழ்க்கைக்கு இந்தக் கட்டுப்பாடுகளும் காரணம்.”

சரண் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“நாங்க வாழ்ந்து கெட்ட குடும்பம். ஒரு கட்டத்தில் எங்க பாட்டி சிவகாமி எங்களை ஒரு பெரிய நிலைக்கு கொண்டு வந்தாங்க. அடுத்த கட்டத்தை எங்க தாத்தாவும், அப்பாவும், சித்தப்பாவும் எடுத்து செல்ல முடியல.

பெரிய தொழிற்சாலை. நிர்வாகம். செலவு. ஊழியர்களோட சம்பளம். ஓய்வூதியம்… எல்லாமே மலையளவு சுமையாகி, எங்க செல்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிச்சது.

ஆனா எங்க குடும்ப கௌரவத்தைப் பிடிச்சுக்கிட்டு இருந்த தாத்தா, தன் பேத்தியை மகனுக்கு மகளாகவும், எங்களுக்கு தங்கையாகவும் இருக்க விடாமல் ஆக்கிட்டார்.”

அவன் ஆழமாக மூச்சை விட்டான்.

“பாட்டியோட அத்தனை அறிவும் தீபிகாவிடம் இருந்தது. அவள் வளர்ந்ததும் எங்க குடும்ப செல்வாக்கை சிகரம் தொட வைத்துட்டா.

ஆனா ஆரம்பத்தில் நாங்க அவளுக்கு முன்னுரிமை கிடைக்கிறதைக் கொஞ்சம் பொறாமையோட பார்த்தோம். ஆண்களுக்கான மனோபாவம் எங்களிடமும் இருந்தது.

பின்னாடி ஒரு கட்டத்தில் அவளுடைய தலைமையின் கீழ் எல்லாமே அவள் கையில் வந்தது.

வேல்ஸ் சாம்ராஜ்ஜியம் அவளுக்கு எங்க தாத்தா கொடுத்தது கிடையாது.

அவள் தானாக உருவாக்கினாள்.

அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது.

செல்வாக்கு கூடும்போது வெளியுலக மரியாதையும் கூடும். நம்ம நிலை கொஞ்சம் சறுக்கும்போது, நம்மைச் சுற்றியிருந்தவர்கள் காட்டும் முகம் நம்மையே கொன்றுவிடும்.

அதை விடாமல் காப்பாற்றியவள் தீபிகா.”

சரண் ஆகாஷை நேராகப் பார்த்தான்.

“இன்று எங்க நிலைமை நிதர்சனம் எங்களுக்கு புரியுது. ஒருவர் எதை விட்டுக்கொடுக்காமல் பிடித்துக்கொண்டிருக்கிறார் தெரியுமா?”

ஆகாஷ் அமைதியாகப் பார்த்தான்.

“அம்மாவின் அன்பு.”

அவன் குரல் சற்றே உடைந்தது.

“எனக்கும் கரணுக்கும் அது இரண்டாம் பட்சம்தான். எங்களை கவனித்தது சித்தி தமயந்திதான். தீபிகா பிறந்த நாளிலிருந்து எங்க அம்மா, எங்களுக்கான அம்மாவை விட, தீபிகாவின் அம்மாவாக மாறிட்டாங்க.”

சுபா ஏதோ சொல்ல வர, சரண் கையால் தடுத்தான்.

“எல்லோருக்குள்ளும் சுயநலம் என்ற சாத்தான் இருக்கும். எங்களுக்குள்ளும் இருந்தது.

நாங்க இங்கே வந்தபோது தீபிகா மேல ஒரு கோபம் இருந்தது. அவளோட தோழிகள் எங்களுக்குக் கண்ணில் பட்டதும் அவர்களையும் அவளிடமிருந்து பிரிக்கணும்னு நினைச்சோம்.

ஆனா நாங்க உண்மையைத்தான் காதலித்து கல்யாணம் செய்தோம். ஆரம்பத்தில் அதில் சுயநலம் இருந்திருக்கலாம். ஆனா நாங்க நெருங்க நெருங்க, அவள் எங்களுக்கு தங்கை இல்லைன்னு நினைத்த ஒவ்வொரு தருணத்துக்கும் ரத்தக் கண்ணீர் விடாத குறைதான்.”

சுபா மெதுவாகக் கேட்டாள்.

“அப்போ உண்மையிலேயே காதலிக்கலையா?”

சரண் சிரித்தான்.

“நாங்க உண்மையைத்தான் காதலித்தோம்.”

சில நொடிகள் அமைதி நிலவியது.

பின்னர் சரண் சுபாவைப் பார்த்தான்.

“தீபிகா இந்த ட்ரிப்புக்குக் காட்டுற ஆர்வம் கடந்த மூணு வருடமா இருந்ததா?”

சுபா யோசித்தாள்.

“கடந்த மூணு வருடமா இவங்க இங்கே வந்த பிறகு பலமுறை ட்ரிப் ஏற்பாடு பண்ணுவாங்க. ஆனா தீபிகா வந்தாலும் இருப்பாள். அவங்களோட ஊட்டி, கொடைக்கானல் காட்டேஜ்களில் ரூமுக்குள்ள இருந்துக்கிட்டு வேலைதான் செய்வாள். வெளியே வந்து கொஞ்ச நேரம் இருப்பாள். மீண்டும் வேலை.

சுபா யோசித்தாள் கல்யாணத்துக்கு முன்னாடி கூட அவளுக்காக இரண்டு முறை போயிருக்கோம்.

ஆனா இப்போ அவள் முகத்தில இருக்கிற சந்தோஷம் வேற.”

கார்த்தி மெதுவாகத் தலையசைத்தான்.

சரண் ஆகாஷைப் பார்த்தான்.

“உனக்கு இப்ப இருக்கிற தீபிகா தெரியும். ஆனா ஒரு பொம்மை தீபிகா எப்படி இருந்தாள்னு உனக்குத் தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

சாவி கொடுத்தால் அசையும் பொம்மை மாதிரி அவள் இருந்த வாழ்க்கை யாருக்கும் சந்தோஷம் கொடுக்காது.

சிறுவயதிலிருந்து நாங்க ஒன்றாக இருந்திருந்தா, அவளை மீட்டிருக்கலாம். ஆனா எல்லாமே கடந்து போயிடுச்சு.

நீங்க வந்த பிறகுதான் அவளுக்குள்ள ஒரு மாற்றம் வந்திருக்கு.

எங்களை அவளே கூப்பிடுற அளவுக்கு.”

அவன் சிரித்தான்.

“அவளே அவளைப் பார்த்துக்க மாட்டா. இப்போ உன்னை விழுந்து விழுந்து பார்த்துக்கிறா. எங்களுக்கு கொஞ்சம் பொறாமைதான்.

கல்யாணம் ஆகாம தங்கச்சியை அவள் பிடிச்சவனோட இப்படி அருகில் பார்க்கறது அண்ணன்களுக்குப் பிடிக்குமா?”

ஆகாஷ் சிரிக்க முடியாமல் அமைதியாக இருந்தான்.

“நாங்க சொல்ல முடியாது. ஆனா தீபிகா முகத்துல சந்தோஷம் இருக்கிறதைப் பார்த்ததும் எங்களுக்கு இருந்த கோபமெல்லாம் போயிடுச்சு. தங்கைக்கு முன்னாடியே நாங்க கல்யாணம் செய்துட்டோம்னு இருந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம போயிடுச்சு.”

அந்த நேரத்தில் ஜாஸ்மின் அழைத்தாள்.

சரண் ஆகாஷிடம் சில விவரங்களை வாசுகி அவனைப் பற்றி கொடுத்திருந்ததாகச் சொல்லி, “நீங்க என் தங்கச்சிக்கிட்ட நெருங்குற நேரத்திலேயே என் சித்தி உன்னைப் பற்றி விசாரிச்சிருக்காங்க,” என்றான்.

“ஒரு பெண் எங்க பாட்டி உருவாக்கலைன்னா இந்த ராஜ்ஜியம் இருந்திருக்காது. அதே பெண் என் தங்கை இல்லன்னா இந்த சாம்ராஜ்ஜியம் இப்படி வளர்ந்திருக்காது.

வளர்ச்சி என்பது செல்வத்தில் மட்டும் இல்லை. நம்மை நம்பி வாழ்கிற எத்தனையோ குடும்பங்கள் இருக்காங்க. நம்ம நிறுவனத்தோட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களோட வாழ்க்கை அதுக்குள்ள இருக்கு. அந்த வளர்ச்சி உருவாக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும் சொந்தமில்லை.

இதுதான் எங்க தாத்தா எங்களிடம் சொன்னது.”

அவன் எழுந்து சென்றான்.

சுபா, ஆகாஷைப் பார்த்தாள்.

“உன்னை முதன்முதலில் பார்த்தபோதே தீபிகா உன்னை அவள் வட்டத்துக்குள் விட்டுட்டா. அப்பவே எனக்குத் தெரியும். இதுதான் நடக்கும்னு.

நான் இங்கே இருந்த வரை அவளை உன்னிடம் நெருங்க விடல. அதையும் மீறி நடந்துடுச்சு. அது நீ தான் காரணம்.

அது தவறு என்று நான் சொல்லல. ஆனா முன்னே போயிட்டா திரும்பிப் போக முடியாது.”

அவள் எழுந்தாள்.

நீலிமாவை மட்டும் அங்கே விட்டுவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.

நீலிமா ஆகாஷிடம் மெதுவாக,

“நீ எங்களுக்காகப் பார்க்கிறேன்னா அது தவறு. எல்லோருக்குமாகப் பாரு. அதில் தீபிகாவையும் சேர்த்துப் பாரு. நல்லதா இருக்கும்,” என்றாள்.

ஆகாஷுக்கு அந்த வார்த்தைகள் புரிந்தன.

தீபிகா வேறு, தன் குடும்பம் வேறு என்று இனி பிரிக்க வேண்டியதில்லை.

அவள் தன் குடும்பத்தில் ஒருத்தி.

அவ்வளவுதான்.

அவன் சிரித்தபடி தங்கையைப் பார்த்தான்.

“ரொம்ப நாளா இந்த அருவி எல்லாம் பார்க்கணும்னு சொன்னியே. வா. நாம என்ஜாய் பண்ணலாம்.”

*

அங்கே தீபிகா ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஆகாஷ் அவளருகில் வந்து,

“என்னப்பா… இங்கே வந்துட்டும் வேலைதானா? சீக்கிரம் வாங்க. மேல மலைமேல ஒரு அருவி இருக்காம். மேனேஜர் சொன்னாரு. அதைப் பார்க்கலாம்,” என்றான்.

கரண் அப்போது அங்கே வந்தான்.

“தீபிகா சீக்கிரம் முடிச்சிடுவாளா? இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”

தீபிகா சைகையில்,

“நாம போலாம். பத்து நிமிஷத்தில் முடிச்சிடுவேன்,” என்றாள்.

அதைக் கேட்ட சரண் உடனே,

“அதெல்லாம் ரிஸ்க். அங்கே போகணும்னா நடக்கணும்,” என்றான்.

தீபிகா அவனைப் பார்த்தாள்.

அவன் அவள் பார்வையைத் தவிர்த்து மேலே எதோ சொல்ல ஆரம்பித்தான்.

ஜாஸ்மின், “தீபிகா உங்களிடம் ஏதோ சொல்ல வரா,” என்றாள்.

சரண் திரும்பிப் பார்த்தான்.

தீபிகா சைகையில்,

“அண்ணா… நான் நடப்பேன். பிரச்சனை இல்லை. அருவி இருக்குன்னா பார்க்கலாமே,” என்றாள்.

அண்ணனாக மறுக்க முடியாமல்,

“சரி,” என்றான்.

அங்கே செல்ல அனுமதி தேவையா என்று கார்த்தியைப் பார்த்தான்.

“எனக்கு அதைப் பற்றி அவ்வளவா தெரியாது. சுபா மாப்பிளைக்குத்தான் தெரியும்,” என்றான்.

சுபாவின் கணவர்,

“அதுக்கு வனத்துறை பெர்மிஷன் வேணும். நண்பர் மேனேஜர் அவனுக்கு எல்லாம் தெரியும் ,” என்றான்.

அந்த நேரத்தில் ரிசார்ட் மேனேஜரும் வந்து,

“சார், நான் பெர்மிஷன் வாங்கிடுறேன். காலையிலேயே ரேஞ்சர் டீம் அங்கே போயிருக்காங்க. பிரச்சனை இல்லன்னா லோக்கல் ரேஞ்சர் கூட்டிக்கிட்டு ட்ரெக்கிங் மாதிரி அழைத்துச் செல்வாங்க. மழையும் அவ்வளவா இல்லை. பேசிட்டு வரேன்,” என்றார்.

“சரி. அப்போ போகலாம்,” என்றான் சரண்.

அந்த நேரத்தில் சரண் தன் அம்மாவுக்கு அழைத்தான்.

அவர்கள் தென்காசியை நெருங்கிக் கொண்டிருந்தனர். சுபாவின் குடும்பமும் அவர்களுடன் இருந்தது.

“இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே வந்துடுவோம். நானும் அப்பாவும் வர்றோம்,” என்றார் கார்த்திகா.

சிறிது நேரத்தில் அவர்கள் வந்து சேர்ந்தனர்.

சுபா தனது நாத்தனாரையும் அவளுடைய தோழியையும் அழைத்துக்கொண்டு அருவி நோக்கிச் சென்றாள்.

கார்த்திகா, அருளுடன் வந்தாள்.

அவளைப் பார்த்ததும் தீபிகா ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதாள்.

கார்த்திகா அவளைத் தேற்றினாள்.

“அம்மா… நான் சொல்லாம கிளம்பி வந்துட்டேன் சாரி,” என்று தீபிகா சைகையில் சொல்ல முயன்றாள்.

கார்த்திகா அவளுடைய வாயைப் பொத்தி,

“நானும் சாரி,” என்றாள்.

பின்னர் ஆகாஷைப் பார்த்து புன்னகைத்தாள்.

“உங்க அப்பா அம்மா வர முடியாதது காலையில்தான் தெரிஞ்சது.”

அவள் தீபிகாவிடம் பொதுவாக வீட்டில் பேசிய விஷயங்களைச் சொன்னாள்.

“நாளைக்கு உனக்கும் ஆகாஷுக்கும் கல்யாணம்.”

தீபிகா அதிர்ந்து ஆகாஷைப் பார்த்தாள்.

அவன் சிரித்தான்.

“இவ்வளவு சீக்கிரமா?” என்று தீபிகா சைகையில் கேட்டாள்.

“பாட்டி விருப்பம். நமக்கும் சரின்னுதான் படுது,” என்றான் ஆகாஷ்.

“எல்லாருக்கும் சம்மதமா?” என்று தீபிகா கார்த்திகாவைப் பார்த்தாள்.

கார்த்திகாவுக்கு அந்தக் கேள்வி புரியாமல் இருந்தது.

ஜாஸ்மின் உடனே,

“அத்தை… அவ தாத்தா பாட்டியைப் பற்றிக் கேட்கிறா,” என்றாள்.

கார்த்திகா சிரித்தாள்.