“இப்ப ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க?” என்றாள் வேதா புரியாமல். விஜயோ வாயைத் திறந்தான் இல்லை. அவளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாய் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான்.
“உங்களைத்தான் கேட்குறேன்” என்றாள் மீண்டும்.
“ஏன்னு உனக்குத் தெரியாது?” என்றான் கோபத்துடன்.
“தெரியாததுனால தானே கேட்குறேன்?”
“கிளாஸ் ரூம்ல அந்த லயா பொண்ணுகிட்ட என்னடி பேசிட்டு இருந்த?” என்றான்.
“என்ன பேசிட்டு இருந்தேன்?” என்று யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏன் இல்லைன்னா கடன் தர போறிங்களா? அவ என்னை கடுப்பேத்திட்டே இருந்தா. நானும் எத்தனை தடவை தான் அமைதியா போறது. அதான் பிடிச்சு கத்தினேன்” என்றவள்,
“ஹோ.. சார் அதனால தான் நீங்க மேரிட்ன்னு சொன்னிங்களோ. இல்லைன்னா இன்னும் சிங்கிள்ன்னு மெயின்டேயின் பண்ணியிருப்பிங்க” என்றாள் நக்கலாய்.
“ஜஸ்ட் ஸ்டாப் இட் வேதா. அந்த பொண்ணு மனசுல நினைக்கிறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது. இன்னைக்கு இந்த இஷ்யூ நடக்கலைன்னாலும் நான் சொல்லியிருப்பேன்” என்றான்.
“அப்படி என்ன அவசியம் வந்தது?” என்றாள்.
“அந்த பொண்ணோட அப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடியே என்கிட்டே பேசுனார். நான் அப்பவே மேரிட்ன்னு அவர்கிட்ட தெளிவா சொல்லிட்டேன்” என்றான்.
“நான் என்கரேஜ் பண்ணதை நீ பார்த்தியா? ஜஸ்ட் இதெல்லாம் அந்தந்த ஏஜ்ல வர்ற இன்பாக்ஷுவேஷன். அதை அப்படியே கடந்து போயிடனும். ஆனா, இவ்வளவு சீரியஸா அந்த பொண்ணு எடுத்துட்டு போவான்னு நான் நினைக்கலை” என்றான்.
“வேற எப்படி எடுத்துட்டு போவான்னு நினைச்சிங்க?உங்களுக்கு மேரேஜ் ஆனதே அவளுக்கு ஷாக். இதுல நான் தான் உங்க வொய்ப்னு தெரிஞ்சா என்ன ஆட்டம் ஆடுவாளோ?நல்ல காலத்துலயே மேடம்க்கு என்னை கண்டா ஆகாது” என்றவள்,
“நல்ல மைன்ட்செட்ல வந்தேன். எல்லாத்தையும் ஆப் பண்ணி விட்டுட்டிங்க” என்றாள் கடுப்புடன்.
“மேடம் அப்படி என்ன மைன்ட் செட்ல வந்திங்க?” என்றான் சற்று தணிந்த குரலில்.
அவனின் தோளில் லாவகமாய் சாய்ந்து கொண்டவள்,
“அது..” என்று அவன் சட்டையை திருக,
“என்னடி ஒரு தினுசா இருக்க? இந்த சட்டைக்கு இன்னைக்கு நேரம் சரியில்லை போலவே” என்றான் உல்லாச மனநிலையுடன்.
“இப்பல்லாம் யாராவது உங்களை சைட் அடிச்சா எனக்கு கோபம் வருது” என்றாள்.
“நோட் பண்ண வேண்டிய விஷயம் தான். அப்பறம்” என்றான் சிரிப்பை அடக்கியபடி.
“நான் என்ன கதையா சொல்றேன்” என்றவள் அவளை முறைக்க,
“சரி சரி அப்பறம்”
“யாராவது பார்த்தா கோபமா வருது.” என்றாள்.
“சரி”
“இப்படியெல்லாம் எனக்கு ஏன் தோணுதுன்னு யோசிச்சுட்டு இருந்தேனா? நீங்களும் சரியா மேரிட் சொல்லி எல்லாத்துக்கும் புல்ஸ்டாப் வச்சிங்களா. அந்த நிமிஷம் எப்படி பீல் பண்ணேன் தெரியுமா?” என்றாள்.
“எப்படி பீல் பண்ணிங்க?” என்றான் மந்தகாசமாய்.
“அப்படியே ஓடி வந்து”
“ஓடி வந்து” என்று அவன் எடுத்துக் கொடுக்க,
“ம்ம்..! கட்டிபிடிச்சு முத்தமா குடுக்கணும்னு நினைச்சேன். அதான் தேவையில்லாததை எல்லாம் பேசி என்னை மூட் ஆப் பண்ணிட்டிங்களே” என்றாள் குறையாய்.
“மேடம் எப்படி? கடைசி வரைக்கும் முத்தம் மட்டும் குடுத்தே வாழ்க்கையை ஓட்டிடலாம்னு நினைச்சுருக்கிங்களா?” என்றான் நமட்டு சிரிப்புடன்.
அவனின் கேள்வியில் விழித்தவள்,
“வாத்தியார் சரியில்லைன்னா, ஸ்டூடன்ட் எல்லாம் மக்காத்தான் இருப்பாங்க” என்றாள் வெட்கம் கலந்த குரலில்.
“என்ன பண்றது மேடம்? சிலபஸ் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கே?ப்ரீ வொர்க் பண்ணி, ப்ரிப்பேர் பண்ண கொஞ்சம் லேட் ஆகுது” என்றான் வாய்விட்ட சிரிப்புடன். அவனின் பேச்சில் முகம் சிவந்தவள்,
“உங்களை” என்று அவனைக் கிள்ள, அவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டான்.
“என்ன பண்றது? என் பொண்டாட்டி படிப்பை முடிக்க ஒரு வருஷம் ஆகும். வயித்த தள்ளிட்டு காலேஜ் வர முடியாது. அவ ஹெல்த் கண்டிஷன் பார்க்கணும். இப்படி நிறைய ப்ரீ வொர்க் இருக்கே” என்றான் சன்ன சிரிப்புடன்.
சட்டென்று அவனிடமிருந்து அவள் விலக,
“என்னாச்சு வேதா?” என்றான்.
“யோவ் போயா? ஏதாவது சொல்லிட போறேன்” என்றாள் கடுப்புடன். அவளின் கடுப்பில் அவனுக்கு சிரிப்பு வர, அந்த சிரிப்பு வேதாவையும் தொற்றிக் கொண்டது.
அவர்கள் வீட்டிற்கு வந்து சேரும் போது வேதாவின் மொத்த குடும்பமும் வந்து இறங்கியிருந்தது. காரை விட்டு இறங்கியது தான் மாயம்,
“அப்பா..!” என்று ஓடியிருந்தாள் வேதா.
“இவளை” என்று பல்லைக் கடித்தவன்,
“வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி” என்றான் அனைவரையும் பொதுவாய்.