“மைண்ட் யுவர் வோர்ட்ஸ்” என்றாள் லயா கோபமாக.

“என்னடி மைண்ட் யுவர் வோர்ட்ஸ்? எப்பப் பார்த்தாலும் வந்து அவனைப் பார்க்காத இவனைப் பார்க்காதன்னுட்டு. எனக்கு வேற வேலை இல்லை பாரு. உனக்கு அந்த விஜய் சாரை சைட் அடிக்கனுமா அடி. கல்யாணம் கட்டனுமா? கட்டிட்டு போ. அதைவிட்டுட்டு இனிமேல் அவரைப்  பார்க்காத, இவரைப் பார்க்காத அப்படி இப்படின்னு மிரட்டிகிட்டு வந்த, காலேஜ்ன்னு எல்லாம் பார்க்க மாட்டேன். பல்லைத் தட்டி கையில கொடுத்துடுவேன். ஜஸ்ட் ஸ்டே அவே ப்ரம் மீ” என்றாள் வேதா கோபமாய். அவள் அந்த கல்லூரி வந்த இத்தனை நாட்களில் இவ்வளவு கோபமாய் அவளை அவர்கள் பார்த்ததில்லை.

“மச்சான் காம் டௌன். என்னாச்சு? ஏன் இவ்வளவு டென்ஷன்?” என்றான் ஆனந்த்.

“வேதா டார்லிங் கோபப்படாதடா” என்றான் தருண்.

“டேய் விளக்கெண்ணெய்.பேசா போய்டு. இல்லைன்னா மானாவாரியா பேசுவேன்” என்றாள் வேதா.

“வேதா மச்சான், நீ மானாவாரியா பேசுனாலும் மானமே இல்லாம திரும்ப பேசுவான் நம்ம தருண். இல்லையாடா?” என்றான் ஒருவன்.

“வேதா டார்லிங். நீ பேசுடா? என்னைய நீ பேசாம வேற யார் பேசுவா?உனக்கில்லாத உரிமையா?” என்றான் தருண்.

“அவ்வளவு நல்லவனாடா நீ” என்று ரம்யா கேட்க,

“லைட்டா” என்றான் சிரிப்புடன்.

“எல்லாரும் பேசி முடிச்சாசுன்னா கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா?” என்ற விஜயின் குரலில் கிளாஸ் ரூமே அமைதியாக, உள்ளே வந்தவனின் பார்வை வேதாவையும், லயாவையும் தீர்க்கமாய் பார்த்து வைத்தது.

“சார் இப்போ விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்” என்று மாணவர்கள் முனுமுனுக்க,

“டுடே அவங்க லீவ். சோ ஐ டேக் திஸ் பீரியட்.” என்றவன் கையிலிருந்த ஸ்பைரலை புரட்டிக் கொண்டிருக்க,

“போன செம் டிஸ்க்ரீட்மேத்ஸ்  எடுத்தாரு. இந்த செம் டேட்டா சயன்ஸ் எடுக்குறாரு. அடுத்த செம்மும் நமக்கு வருவாரோ?” என்றாள் ரம்யா.

“பைனல் இயர்க்கு கிளாஸ் இன்சார்ஜே அவர்தான்” என்றான் ஆனந்த்.

“என்னடா சொல்ற? என் காலேஜ் வாழ்க்கையே நாசமா போச்சு” என்று ரம்யா புலம்ப,

“ஏன் நீதான் அவரை சைட் அடிச்சு என்ஜாய் பண்ணிட்டு இருக்கியே. அப்பறம் என்ன?” என்றாள் வேதா.

“அட நீ வேறடி. அதுக்காக,இவரை எல்லா வருஷமும் கூடவே வச்சுக்கிட்டு சுத்த முடியுமா? பைனல் இயரையும் என்ஜாய் பண்ண முடியாம போய்டும்” என்றாள் பாவமாய்.

“அதெல்லாம் ப்ராஜெக்ட் கேம்பஸ்னு போய்டும். ஓவரா பீல் பண்ணாத. இப்போ கிளாஸ் கவனி” என்றாள் வேதா.

“அதுவும் சரித்தான்” என்ற ரம்யா,

“இன்னைக்கு கவனிச்சியா? அவரும் மஞ்சள், நீயும் மஞ்சள்” என்றாள்.

“அவர் லைட் யெல்லோ, நான் டார்க் யெல்லோ” என்றாள்.

“எல்லாம் மஞ்சள் பேமிலி தான” என்றாள் ரம்யா.

“உனக்கு வெளிய போகணும்னா சொல்லு. சார்கிட்ட திட்டு வாங்காம இப்பவே எழுந்து போய்டலாம்” என்ற வேதா முறைக்க,

“சரி சரி கோபப்படாத”  என்றாள்.

ஐந்து நிமிடங்கள் இருக்கும் போதே வகுப்பை முடித்துவிட்டான்.

“எனி ஒன் ஹேவ் எனி டவுட்ஸ்?” என்றான். அனைவரும் இல்லை என்பதைப் போலவே அமர்ந்திருந்தனர்.

“சார்” என்றான் தருண்.

“எஸ்”

“உங்க சேர்ட்ல சம்திங்க ஏதோ ஸ்டெயின் மாதிரி இருக்கு” என்றான் கொஞ்சம் தயக்கத்துடன்.

அப்போது தான் கவனித்தான் விஜய். காலையில் வேதா அழுத போது, கண்ணீர் கரையும், அவள் நெற்றியில் இருந்த சந்தனம் குங்குமம் லேசாக கறையாக ஒட்டியிருந்தது. காலேஜ் வரும் அவசரத்தில் அதை கவனிக்க மறந்திருந்தான் விஜய்.

“இதையெப்படி கவனிக்காம வந்தேன்” என்று யோசித்துக் கொண்டு நிமிர, கறை எதனால் வந்தது என்று தெரிந்த வேதா தலையில் கைவைத்து விட்டாள்.

“தேங்க்ஸ் தருண். ஐ டிட்ண்ட் நோட்டிஸ் திஸ்” என்றான் விஜய்.

“சார் கறை நல்லது. அதுலயும் சந்தன குங்கும கறை ரொம்ப நல்லது” என்று குறும்புக்கார மாணவன் ஒருவன் சொல்ல, அவனைப் பார்த்து சிரித்த விஜய்,

“எஸ் நல்லது தான். மார்னிங் என் வொய்ப் கொஞ்சம் எமோஷ்னல் ஆகிட்டா, அதான்” என்று சொல்ல, அவனின் பதிலில் வேதா அதிர்ந்து விழித்தாள். கிளாஸ் ரூமே அதிர்ச்சியில் இருந்தது.

“என்னது வொய்பா? சார் நீங்க மேரிடா” என்ற மாணவிகளின் குரலில் ஏகத்துக்கும் அதிர்வலைகள். மாணவர்களின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். லயாவோ அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள்.

“அப்கோர்ஸ், நான் மேரிட் தான்” என்றவன்,

“வொய் ஆர் யு ஸ்டேன்டிங் லயா?” என்றான்.

 “நத்திங்க சார்” என்றவள் அதே அதிர்ச்சியுடன் தடுமாறி அமர,

“லயா, கன்ட்ரோல் யுவர் செல்ப்” என்று ஹரிணி அவளை அடக்கினாள். லயாவின் கண்கள் கலங்கிப் போயிருக்க, அதைப் பார்த்த வேதாவிற்கு கூட ஒரு நிமிடம் அவள் மேல் பரிதாபம் வந்தது.

ரம்யாவோ நெஞ்சில் கைவைத்துவிட்டாள்.

“என்னடி ரம்ஸ் ஆச்சு?” என்றாள் வேதா.

“சைட் அடிக்க ஆரம்பிச்சு ஒரு வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட வச்சிட்டார் மச்சி” என்றாள் ரம்யா.

“நான் தான் அப்பவே சொன்னேன்ல. அண்ணனை எல்லாம் சைட் அடிக்கக் கூடாதுன்னு” என்றாள் வேதா நக்கலாய்.

“மச்சான் நான் அவைலபிள் தான். பொறுப்பா உன்னை பார்த்துப்பேன்” என்றான் ஆனந்த் சிரிப்புடன்.

“செருப்பு பிஞ்சிடும் பரவாயில்லையா?” என்றாள் சிரிக்காமல்.

“நோ வயலன்ஸ்” என்று ஜகா வாங்கிவிட்டான் ஆனந்த்.

“நீங்க மேரிட்னு சொல்லி எங்க வயித்துல பீரை வார்த்திங்க சார்” என்றான் தருண்.

“மச்சான் அது பாலை வார்த்திங்கன்னு தான வரும்” என்றான் ஆனந்த்.

“இப்ப ரொம்ப முக்கியம்?” என்றாள் ரம்யா.

“எனக்கு மேரேஜ் ஆனதுல உங்களுக்கு என்னடா இவ்வளவு ஹேப்பி” என்றான் விஜய் புரியாமல்.

“பின்ன இருக்காதா சார், நாங்களும் பைனல் இயர் போக போறோம். இன்னும் ஒரு பிகர் கூட செட்டாகலை. எல்லாரும் உங்களை சைட் அடிச்சா எங்களை யாரு சார் பார்க்குறது? இப்ப பாருங்க நீங்க கமிட் ஆகி, எங்க வாழ்க்கையில ஒளியேத்தி வச்சுட்டிங்க” என்றான் தருண் சிரிக்காமல்.

“நீ இவ்வளவு பேசுவியா தருண்?” என்றான் விஜய் சிரிப்புடன்.

“நீங்க இன்னைக்குத் தான சார் பேச விட்டிருக்கிங்க” என்றான்.

“அது சரி. கிளாஸ் ஓவர். கேரி ஆன்” என்றவள் வெளியே செல்ல, அவன் சென்ற அடுத்த நிமிடம்,

“வேதா டார்லிங்” என்றான் தருண்.

“மச்சான் சொல்லுடா” என்றாள்.

“நேத்து நைட் புல்லா நான் தூங்காம நடந்துகிட்டே இருந்தேன்”

“ஏன் உனக்கு தூக்கத்துல நடக்குற வியாதியா?” என்றாள் சிரித்தபடி.

“உடைச்ச இதயத்தை எத்தனை தடவை தான் உடைப்ப வேதா” என்று அவன் இதயத்தைப் பிடித்தபடி சொல்ல,

“செருப்படி தான்னு தெரிஞ்சும் எத்தனை தடவை தான் நீயும் வாங்குவ மச்சான்” என்றான் ஆனந்த் சிரிப்புடன். அவர்கள் கேங்கே சிரித்து வைக்க,

“நான் மனசு வெறுத்து பேசிட்டு இருக்கேன் மச்சான்” என்றான் தருண்.

“விடு மச்சான். வா உனக்கு பப்ஸ் வாங்கித் தரேன்” என்றாள் வேதா.

“ரெண்டு வாங்கித் தருவேன்னா தான் வருவேன்” என்றான்.

“அட மானங்கெட்டவனே” என்று ரம்யா சிரிக்க, அந்த கும்பலே கேண்டீன் சென்றது.

லயா அமைதியாய் இருக்க, அவளைப் பார்த்த ஹரிணிக்கு தான் பாவமாய் இருந்தது.

“லயா விட்டுத் தள்ளு. இவரை விட உனக்கு பெட்டர் பெர்சன் கிடைப்பாங்க” என்றாள் ஹரிணி.

“என்னால இதை அக்சப்ட் பண்ணிக்கவே முடியலை ஹரிணி. எல்லாரும் என்னை கேவலமா பார்க்குற மாதிரி இருக்கு. அதுலயும் அந்த வேதா” என்று பல்லைக் கடிக்க,

“ஹேய் அவ உன்னை அப்படி பார்க்கவே இல்லை. அவ வேற ஏதோ யோசனையில் தான் இருந்தா. நீயா கற்பனை பண்ணாத லயா” என்று அதட்டினாள் ஹரிணி.

“உனக்கு இப்போல்லாம் அவ செய்றது தான் சரி” என்றாள் கோபமாக.

“லுக் லயா, நான் சொல்றேன்னு கோபப்படாத. உனக்கு விஜய் சாரை பிடிச்சிருந்தது. ஓகே தான்.நானும் சப்போர்ட் பண்ணேன்.பட் அவர் கமிட்டேட்ன்னு சொன்னா நீ அடுத்த வழியை பார்த்துட்டு போறது தான் நல்லது. இது ஒன்னும் சினிமா கிடையாது. வெஞ்சன்ஸ் வச்சு பழிவாங்க.

பார்த்த தானே, அவங்க எவ்வளவு  ஹேப்பியா போறாங்கன்னு. நாம ரெண்டு பேர் மட்டும் தான் இங்க இருக்கோம். உனக்கு புரியுதா இல்லையா லயா?” என்ற ஹரிணி, தான் ஒரு நல்ல தோழி என்பதை நிரூபித்தாள்.

கேண்டீனில் அமர்ந்திருந்த வேதா எப்படி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை. அவளின் அனைத்து சஞ்சலங்களையும் ஒரே வார்த்தையில் தீர்த்து வைத்திருந்தான் விஜய்.

அவனை இப்போதே அணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டு கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்று தோன்ற, முதன் முறையாக உணர்வுகளில் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தவள் மீள வழி தெரியாமல் இருந்தாள்.