“நீதான வேதா அனுப்பறேன்னு சொல்லிட்டு அனுப்பலை. நான் ஏதோ அவசர அவசரமா எதையோ எழுதிட்டு வந்திருக்கேன். விஜய் சார் பார்த்துட்டு என்ன சொல்ல போறாரோ?” என்றான் பாவமாய்.
“டேய் என்னடா ஆளாளாலுக்கு ஓவரா பண்றிங்க. இது காலேஜ்டா. ஏதோ ஸ்கூல் ரேஞ்சுக்கு பயப்படுறிங்க?விடு மச்சான் பார்த்துக்கலாம்.” என்றாள்.
“அப்போ நீ நிஜமாவே எழுதலையா?” என்றான்.
“யார் சொன்னா? அதெல்லாம் எழுதியாச்சு?” என்றாள்.
“அப்பறம் ஏன் என்கிட்டே பொய் சொன்ன வேதா?” என்றான் கோபமாய்.
‘இவனொருத்தன் நான் எங்கடா எழுதுனேன்.?’ என்று நினைத்தவள்,
“எருமை, நல்லா பாரு நான் வயலட். அவர் புளு ஷேர்ட்.” என்றாள்.
“எல்லாம் புளு கலர் பேமிலி தான” என்றாள் ரம்யா.
“மூடிட்டு எழுதுடி. இன்னைக்கெல்லாம் வெளிய போய் நிக்க தெம்பில்லை” என்ற வேதா பாடத்தை கவனிக்க, அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான் விஜய்.
‘இந்த ஆரம்பிச்சுட்டார். என்னவோ நான் மட்டும் தான் இங்க பேசுற மாதிரி. என்னைய தவிர யாரையும் கண்ணுக்குத் தெரியாது போல’ என்று சலித்துக் கொண்டவள், அவன் முறைப்பது தெரிந்தும் தெரியாதவள் போல் காட்டிக் கொண்டாள்.
அதற்கடுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.
விஜயின் திருமணம் எதனால் நின்று போனது என்ற கேள்வி மட்டும் அவ்வப்போது அவளுக்குள் தோன்றிக் கொண்டே இருக்கும். நேரம் வரும் போது கேட்டுக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு விட்டுவிடுவாள்.
வேதாவுக்கும், அகரனுக்கும் செமஸ்டர் தேர்வுகள் நடந்து முடிந்திருந்தது. அவளின் முழு கவனமும் படிப்பில் செல்ல, தேர்வுகள் அனைத்தையும் நல்ல முறையில் எழுதியிருந்தாள்.
சந்தியாவிற்கு ஏழாம் மாதம் நடந்து கொண்டிருந்தது. ஒன்பதாவது மாதம் வளைகாப்பு செய்வது என்று ஏற்பாடு செய்திருந்தனர்.
கனிக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. சரண்-கீர்த்தனாவுடன் இடையில் ஒரு நாள் ஊருக்கு சென்று பார்த்துவிட்டு வந்திருந்தாள் வேதா.
அன்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து வெளியே வந்தவள் பார்த்தது, அவளுக்காக காத்திருந்த நந்த குமாரைத் தான்.
“ஹாய் வேதா..! ஹவ் ஆர் யு?” என்றான் நந்தகுமார்.
“பைன், நீங்க என்ன திடீர்ன்னு?” என்றாள் புரியாமல்.
“எனக்கு உன்கூட கொஞ்சம் பேசணும். வெளிய போய் பேசலாமா?” என்றான்.
“எதைப் பத்தி பேசணும்?” என்றாள் நிதானமாய்.
“உனக்கு நடந்த மேரேஜ் பத்தி அம்மா- அப்பா சொன்னாங்க. எனக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது. ஐ ஆம் சாரி” என்றான்.
“இட்ஸ் ஓகேங்க!” என்றாள்.
“நான் உங்க சிஸ்டர் வளைகாப்பு பங்க்ஷன்லயே வந்து பேச ட்ரைப் பண்ணேன். பட் முடியலை.” என்றான் நந்தகுமார்.
“சோ..!” என்றாள் யோசனையாய்.
“நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும் என் மனசை மாத்திக்க முடியலை வேதா” என்றான்.
“இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறிங்க?” என்றாள் நிதானமாய்.
“ஏதாவது காபி ஷாப்பில் போய் பேசலாமா? மிஸ்டர் விஜய்க்கு இந்த மேரேஜ்ல இன்ரெஸ்ட் இல்லைன்னு சொன்னாங்க” என்றான்.
“இதோ அவரே வந்துட்டார்” என்று விஜயை காட்ட,
“என்ன?” என்பதைப் போல் பார்த்து வைத்தான் விஜய்.
“ஹெலோ மிஸ்டர் விஜய்” என்று நந்தகுமார் கைகொடுக்க, விஜய்யும் பதிலுக்கு கை கொடுத்தான்.
“எனிதிங்க் இம்பார்டன்ட்?” என்றான் கேள்வியாய்.
“இந்த மேரேஜ்ல உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு தெரிஞ்சு எனக்கு வாழ்க்கை குடுக்க வந்திருப்பாருன்னு நினைக்கிறேன். ஐ ஆம் கரெக்ட்” என்ற வேதா விஜயை முறைத்தாள்.
“நீ கார்ல வெயிட் பண்ணு” என்று கீயை அவளிடம் தர, அதை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு சென்றாள்.
“வேதா” என்று நந்தகுமார் ஏதோ பேச முற்பட,
“இங்க பாருங்க மிஸ்டர் நந்தகுமார். உங்களை ஹெர்ட் பண்றது என் நோக்கமில்லை. பட் ஒரு விஷயம் நீங்க தெளிவா புரிஞ்சுக்கனும். ஷி இஸ் மை வொய்ப். என் முழு மனசோட, விருப்பத்தோட தான் அவளை மேரேஜ் பண்ணேன். அன்ட் ஐ லவ் ஹெர் சோ மச். உங்ககிட்ட யாரோ தப்பா கன்வே பண்ணியிருக்காங்க. நீங்க அவளை பார்க்க வர்றது இதுவே கடைசியா இருக்கட்டும்.” என்றான் விஜய் தெளிவாக.
அவனின் பேச்சில் உண்மை தெரிந்து உணர்ந்திருந்தான் நந்தகுமார்.
“ஐ ஆம் சாரி” என்று புன்னகைக்க முயன்றவனின் முகத்தில் மருந்துக்கும் புன்னகையில்லை. வேகமாய் காரை கிளப்பிக் கொண்டு சென்றவனின் மனநிலையை விஜய்யால் தெளிவாக உணர முடிந்தது.
‘இப்ப தான் கொஞ்சம் சகஜமா மலையிறங்கி வந்தா. அதுக்குள்ள வந்து மறுபடியும் மலையேத்தி விட்டுட்டானுக. மறுபடியும் முதல்ல இருந்தா. உனக்கு நேரமே சரியில்லை விஜய்’ என்று புலம்பிக் கொண்டு சென்று காரை செலுத்திக் கொண்டிருந்தவனை நெருப்பாய் முறைத்தாள் வேதா.
‘என்ன இந்த முறை முறைக்கிறா? இவளுக்கு வர வர என் மேல பயமே இல்லாம போய்டுச்சு. இவளை சாப்ட்டா ஹேண்டில் பண்ணவே கூடாது’ என்று நினைத்தவன்,
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?” என்றான் கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“இப்ப உங்களுக்கு சந்தோஷமா? போறவன் வர்றவன் எல்லாம் வாழ்க்கை குடுக்குறேன்னு வந்து நிக்க நான் என்ன பப்ளிக் பிராப்பர்ட்டியா?” என்றாள் கோபமாய்.
“இனிமேல் வர மாட்டான். தெளிவா சொல்லிட்டேன்” என்றான்.
“என்னன்னு?” என்றாள் கோபமாய்.
காரை ஓரமாய் நிறுத்தியவன், அவளைப் பார்க்க,
“நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டு முடிப்பதற்குள் அவளை இழுத்து அணைத்த விஜய், அவளின் இதழ்களை சிறை செய்திருந்தான்.
முதல் இதழ் முத்தம். மொத்த ஜென்ம ஏக்கத்தையும் முடித்து வைத்த முத்தம். அவனின் மொத்த காதலையும் முத்தத்தின் வழியாக கடத்திக் கொண்டிருந்தான். இமைகள் மூடி,இதயம் அதிர்ந்து,குருதி சூடேறி உணர்வில் கலந்து உயிரில் உருகி நின்றாள் பெண்ணவள்.
இதழ் சிறையை விடுவிக்க தோன்றவில்லை அவனுக்கு. விடுபடும் எண்ணமும் இல்லை அவளுக்கு. அந்த முத்தத்தின் சந்தத்தில் லயித்திருந்தவர்களுக்கு சுற்றுப் புறம் உறைக்கவில்லை.அருகில் சென்ற வாகனத்தின் ஹாரன் ஒலியில் முதலில் மீண்டவன் அவன் தான். மீண்டவன் அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான். அவள் மலங்க மலங்க விழிக்க,