ஆ..” என்ற அலறல் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்த இருவரும் பங்களாவின் பின் பக்கம் செல்ல 

 

சிறு அறையிலிருந்து முனங்கல் சத்தம் வந்தது, உள்ளே குற்றவாளி இருக்க கூடும் என்றெண்ணி துப்பாக்கியை கையில் எடுத்து கொண்டு இருவரும் சுற்றிலும் பார்வையை சுழல விட்டபடி சிறு கூண்டு போல கான்கிரிட்டால் ஆங்காங்கே துளைகள் இட்டு கட்டப்பட்டிருந்த ஜன்னல் வழியே பார்வையால் அலசி ஆராய்ந்து விஷ்ணு வேகமாக கதவை திறந்து உள்ளே செல்ல அவனை பின்தொடர்ந்து வந்தான் துவாரகேஷ்

 

நாற்காலியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத அளவிற்கு பரட்டையான தலை முடியும் முகம் முழுதும் தாடியும் வளர்ந்து புதர் போல படர்ந்திருந்தது அந்த நபருக்கு, அறையில் வேறு யாரேனும் இருக்கின்றார்களா என்று நோட்டமிட்டு கொண்டே வந்த விஷ்ணு நாற்காலியில்  முணங்கி கொண்டு இருந்தவரை கண்டு வேகமாக சென்று கயிற்றை அவிழ்த்து விட பின் பக்கம் நோட்டமிட சென்ற துவாரகேஷ் யாருமில்லை என்றதும் விஷ்ணுவின் அருகில் வந்தவன்

 

அடையாளம் தெரியாத நபரின் முகத்தை உற்று பார்த்தான் பரிச்சயமான முகம் போல தோன்றவும் தீவிர யோசனையில் இறங்கியவன் எண்ணத்தில் சட்டென பொறி தட்ட யார் என்று கண்டு கொண்டவன் “விஷ்ணு இவரு காணாம போய்ட்டாருன்னு நினைச்ச கருணாகரன் சார் டா” என்று திகைப்புடன் கூற

 

என்ன சொல்ற நிஜமாவே அவர் தானா!” என்று சந்தேகம் கொண்டு விஷ்ணு கேட்க

 

ஆமா அவரே தான் ஏதோ சொல்ல வராரு ஆனா ஒன்னும் புரியல” என்றவன் “சார்! சார்!” என்று அவர் கன்னத்தை தட்டி சுயநினைவை கொண்டுவர முயன்றவன் “நீங்க எப்டி இங்க வந்திங்க உங்கள  கடத்துனாவங்க யாரு என்னாச்சு உங்களுக்கு இவ்ளோ நாள் எங்க இருந்திங்க” என்று பதட்டத்துடன் கேட்க

 

மூச்சு வாங்க பேச முயற்சித்தவர் முடியாமல் போகவே கையால் சமிக்ஞை செய்ய முயன்றவருக்கு கைகால்கள் மரத்து போனது போன்ற உணர்வு எழுந்தது மிரச்சியுடன் பார்வையை சுவற்றில் பதித்தவர் பார்வையாலே பின்னால் திரும்பி பார்க்குமாறு  ஜாடை செய்தார், கருணாகரனின் பார்வையை தொடர்ந்து இருவரும் திரும்பி பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போயினர் சுவரில் வரைந்த லோகோவை காண்பித்து விட்டு தன் வேலை முடிந்தது என்ற திருப்தியில் மயக்கம் அடைந்து விட  

 

அதே லோகோ துவராக நீ இவர பாத்துக்கோ நா இதோ வந்துடுறேன்” என்றவன் வேறு எவரேனும் வந்து போனதற்கான தடயம் இருக்கின்றதா என்ற ஆராய்ச்சியை தொடர 

 

விஷ்ணு விஷ்ணு இங்க சீக்கிரம் வா” என்று பதட்டத்துடன் துவாரகேஷ் அழைக்கவும்

 

என்ன துவாரக என்னாச்சு!” 

 

இவர உடனே ஹாஸ்பிடல் கொண்டு போகணும் ரொம்ப சீரியஸா இருக்காரு வாயில இருந்து ரத்தம் வருது” என்று கூற உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர் 

 

கருணாகரனை பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர் “சாரி சார் எங்களால அவர காப்பாத்த முடியாது ஹெவி பாய்சன் கொடுத்துருகாங்க அதுமட்டுமில்ல ட்ரக்ஸ் கடந்த ரெண்டு வாரமா அவருக்கு கொடுத்துட்டு இருந்துருக்காங்கன்னு ரிபோர்டுல காட்டுது அதுவும் அளவுக்கு மீறி! அவரோட உடம்புல இருக்கிற ஸ்பார்ஸ்ட்ஸ் எல்லாமே டேமேஜ் ஆகிருச்சு எங்களாலா ஒன்னும் பண்ண முடியாது வெரிசாரி சார்” என்று ஏமாற்றம் நிறைந்த முகத்துடன் கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட

 

தலையை கைகளால் தாங்கியபடி சோர்ந்து போய் அமர்ந்தான் விஷ்ணு “எங்கிருந்து எப்படி தொடங்குவது? யாரிடமிருந்து விசாரிக்க தொடங்குவது? எந்த வழியில் தொடங்குவது?” என்று ஆரம்ப கட்ட கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்து பூதகாரமாய் தெரிய அவன் அலைபேசி சிணுங்கியது, திரையில் மின்னிய புதிய எண்ணை கண்டு துவாரகாவை குழப்பத்துடன் பார்த்தான் விஷ்ணு “என்னடா யார் போன்ல?” 

 

தெரியல ஏதோ புது நம்பரா இருக்கு!”

 

எடுத்து பேசு ஏதாவது முக்கியமான விஷயமா கூட இருக்கும்” என்று கூற

 

உயிர்ப்பித்து காதில் வைத்ததும் மறுமுனையில் வெற்றி களிப்பில் நகைத்தவன் “என்ன விஷ்ணு எப்டி இருக்க” என்றுவிட்டு வேகமாக “சாரி சாரி உன்னோட மனநிலை என்னன்னு தெரியாம கேட்டுட்டேன் வடை போச்சேன்ற அளவுக்கு ஃபீல் பண்ணிட்டு இருப்ப கூடவே கோபமும் இருக்கும் உன்னோட நட்புக்கிட்ட சொல்லி ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வர சொல்லி குடி ஏன்னா நா சொல்ல போறத கேட்டுட்டு இன்னும் டென்ஷன் ஆக கூடாது இல்லையா?”என்று எள்ளி நகையாடியவன்

 

நீ என்ன தான் முயற்சி பண்ணாலும் உனக்கு எந்த எவிடன்ஸ்சும் கிடைக்காது அந்த அளவுக்கு பக்காவா பிளான் பண்ணிருக்கேன்! என்ன யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது விஷ்ணு, இவ்ளோ தூரம் ஒரு விஷயத்துல இறங்குறேனா அதுல எந்த அளவுக்கு தைரியம் இருக்கும்னு உனக்கு புரிஞ்சிருக்கும் இது நீ நினைக்கிற மாதிரி சின்ன பசங்க விளையாட்டு இல்ல என்னோட ட்ரிம் நா யாருன்னு ப்ரூப் பண்ணறதுக்கு எனக்கு கிடைச்ச சான்ஸ் இத நா மிஸ் பண்ண மாட்டேன்” என்று திமிர் கலந்த குரலில் வெறியுடன் கூறியவன்

 

எப்டியோ எங்க விஷயத்தை மோப்பம் பிடிச்சு எங்களுக்கு எதிரான ஆதாரத்தை எல்லாம் கலெக்ட் பண்ணி கேஸ் பைல் பண்றேன்னு திமிரா என்கிட்டயே சொன்னாரு, நானும் எவ்ளவோ… சொல்லி பாத்தேன் மனுஷன் கேக்கவே இல்ல ப்ச் அதான் தேவையில்லாம அவரையும் அவரால அந்த குடும்பத்தையும் தூக்க வேண்டியதா போச்சு”  

 

மிஸ்டர் கருணாகரன தூக்கின அன்னைக்கே அவர் கதைய முடிச்சிருப்பேன் ஆனா.. என்ன பத்தின எவிடன்ஸ் என் கைக்கு வரட்டும்னு தான் இதுவரைக்கும் அவர உயிரோட வச்சுருந்தேன் அப்றம் தான் எனக்கு புரிஞ்சது அந்த மனுஷன்கிட்ட கேட்டு எந்த பிரயோஜனமும் இல்லன்னு, கடைசி வரைக்கும் எவிடன்ஸ் எங்க வச்சுறுகேன்னு சொல்லவே இல்ல, அதான்! இந்த மாதிரி பண்ண வேண்டியதா போச்சு” என்று குரலில் வருத்தம் இளையோட கூறியவன் “அப்றம் இன்னோரு முக்கியமான விஷயம் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தான் உன்னோட ஆபீசர் கருணாகரன் உயிரோட இருப்பாரு கேஸ் பத்தி ஏதாவது கேக்கணும்னா கேட்டுக்கோ அப்றம் நா பொறுப்பு கிடையாது” என்று கவலையுடன் கூற

 

போனை கையால் மறைத்து கொண்டு “டேய் கருணாகரன் சார் கிட்ட ஏதாவது கேஸ் பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண முடியுமான்னு பாரு சீக்கிரம் போ” என்று துவாரகாவிடம் அவசரமாக கூறி அனுப்பிவிட்டு தன்னிடம் பேசுவது யார் என்று தெரிந்து கொள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வேறு அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்து தனக்கு வந்த மொபைல் எண்ணை பின்தொடர சொல்லிவிட்டு அவனிடம் பேச்சை தொடர்ந்தான் ஐந்து நிமிட இடைவெளியில் அனைத்தையும் செய்து முடித்தவன்

 

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் அத மறந்துறாத உன்னால ஒரு அளவுக்கு மேல எங்கயும் ஓடி ஒளிய முடியாது நிச்சயம் நீ என்கிட்ட மாட்டுவ” என்று பல்லை கடித்தபடி கர்ஜிக்க

 

மறுமுனையில் உரக்க சிரித்தவன் “ரொம்ப நல்லாவே பேசுற விஷ்ணு கேள்விபட்டேன் நீ மதுரையில பண்ண விஷயத்தை, அந்த முட்டாள் மாதிரி நானும் அசால்டா இருப்பேன் கைது பண்ணி உள்ள போட்டுறலாம்னு நினைக்காத, இப்போ தானே சென்னை வந்துருக்க உன்னோட வேலை ஏதோ அத மட்டும் தான் பாக்கணும் தேவையில்லாத விஷயத்தையெல்லாம் பெருச்சாளி மாதிரி தோண்டி துழாவா கூடாது உன்னோட நல்லத்துக்கு தான் சொல்றேன் பிழைச்சுப்பேன்னு நினைக்கிறேன் பாத்து பக்குவமா நடத்துக்கோ” 

 

அப்றம் உன்னோட மாமா இன்னும் வீட்டுக்கு வந்துருக்க மாட்டாரே ஏன்னு போன் பண்ணி கேட்டயா! அவரு போன் எடுத்தாருன்னா பத்திரமா வீடு வந்து சேர சொல்லு” என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுக்க 

 

மாமாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னோட உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, என்ன பத்தி குறைச்சு எடை போடாதா அப்றம் இந்த கேஸ் பத்தின சின்ன எவிடன்ஸ் கிடைச்சிருக்கு கூடிய சீக்கிரமே நீ யாருன்னு கண்டுபிடிச்சு உனக்கு யார் உதவி பண்றாங்கன்றத்தையும் கண்டுபிடிச்சு கைது பண்ணல…!” என்று கோபத்தை அடக்கி கொண்டு கூற

 

என்கிட்ட பொய் சொல்லறேன்னு நல்லாவே தெரியிது, உன்ன கண்டுபிடிக்க விட்டுருவேனா அந்த அளவுக்கு நா முட்டாள் இல்ல ஒரு தடவை அஜாக்கிறதயா இருந்தேன்!, இனி இருக்க மாட்டேன் அதுவுமில்லாம நமக்குள்ள தீக்க வேண்டிய பழைய கடன் பாக்கி இருக்கு நீ வேணா அத மறந்துருக்கலாம் ஆனா நா! எதையும் மறக்கல மறக்கவும் முடியாது எதுக்கும் பாத்து இரு இந்த கேஸ்ல நீ தலையிடாத ரொம்ப பெரிய ஆபத்துகளை சந்திக்க வேண்டிவரும் நீயும் உன்னோட குடும்பமும்” என்று மிரட்டிவிட்டு போனை அணைத்து விட கோபத்துடன் அலைபேசியை வெறித்து கொண்டிருந்தான் விஷ்ணு

 

சட்டென நினைவு வந்து ஜெகநாதனுக்கு அழைப்பு விடுக்க சுவிட்ச் ஆப் என்று வந்தது மறுநொடியே சாவித்ரியின் எண்ணிற்கு அழைப்பு விடுத்து பொறுமையுடன் அழைப்பை ஏற்கும் வரை காத்து கொண்டிருந்தவனுக்கு அழைப்பு ஒலி முழுதும் சென்று அடங்கி போக வைதேகிக்கு அழைப்பு விடுத்தான் விஷ்ணு உயிர்ப்பித்ததுமே “என்ன வேணும் விணு?” என்று எரிச்சலை காட்ட

 

மாமா வீட்டுக்கு வந்துட்டாரா?” என்று முடிந்த அளவு பதட்டத்தை மறைத்து கொண்டு சாதரணமாக கேட்க

 

சித்தப்பா இன்னும் வரல வர லேட் ஆகும்னு சொன்னாரு ஏன் கேக்குரிங்க!”

 

இல்ல அவருக்கு போன் பண்ணேன்! சுவிட்ச் ஆப்ன்னு வந்துச்சு அதான்… வீட்டுக்கு வந்துட்டாரா இல்லையான்னு கேட்டேன் வேற ஒன்னுமில்ல” 

 

சித்தப்பா போன்ல சார்ஜ் இல்ல விணு”  

 

சரி எதுக்கும் பார்த்து இருங்க மாமா வந்ததும் எனக்கு கால் பண்ணு நா வச்சுடுறேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டு எழுந்து அறைக்குள் சென்றான் விஷ்ணு

 

என்னடா ஏதாவது சொன்னாரா?” 

 

இல்ல அவரு இறந்துட்டாரு விஷ்ணு நா உள்ள வரும் போதே அவரோட உயிர் போயிருச்சு” என்றவன் அதற்கு மேல் பேசவில்லை அடுத்து என்ன செய்வது எந்த இடத்தில் இருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி கண் முன் தோன்றி கலக்கத்தை உண்டு பண்ண தலையை அழுந்த கோதினான் விஷ்ணு, அவருக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை செய்துவிட்டு இருவரும் கமிஷ்னர் கைலாசத்தை சந்திக்க விரைந்தனர்