ஜீவனற்ற புன்னகை சிந்தியவன் “உனக்கு தெரியாது துவா எனக்கு ஒண்ணுன்னா வீட்டுல எல்லாரும் துடிச்சு போயிருவாங்க,எவ்ளோ அன்பான குடும்பம் அன்பை தவிர வேற எதையும் யாருக்கும் கொடுத்ததில்ல அந்த குடும்பத்தோட சந்தோஷத்தை கலைக்க சொல்றியா!, அவங்கள விடு வைத்தி!, அவ தாங்குவாளா நான்னா அவளுக்கு உயிரு அவள கஷ்டப்படுத்த எனக்கு மனசு வரலடா ஏற்கனவே அவ மனச சுக்கு நூறா உடைச்சிட்டேன் இருக்குற வரைக்குமாவது அவளுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க வேணாம்ன்னு நினைக்கிறேன், என்னால அவபட்ட அவமானம் போதும் அவளுக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாதுடா” என்றவனின் குரல் கமரியது
“இப்போ மட்டும் அவ சந்தோஷமா இருக்குறான்னு நினைக்கிறயா?”
“இல்ல அவ சந்தோஷமா இல்லன்னு எனக்கு தெரியும்! ஆனா.. இப்போ தான் நடந்ததை கொஞ்சம் கொஞ்சமா மறந்து அதுல இருந்து வெளிய வந்துருக்கா கண்டிப்பா! அவ மனசு மாறும் அவளுக்கு ஒரு வாழ்க்கைய ஏற்படுத்தி கொடுத்த பிறகு தான் எனக்கு நிம்மதியான சா…” என்று முடிக்கும் முன்பே சட்டென வாகனத்தை நிறுத்தியவன்
“தயவுசெய்து அந்த மாதிரி சொல்லதடா உனக்கு ஒன்னும் ஆகாது நம்பிக்கையா இரு” என்று படபடப்புடன் கூற
“நம்பிக்கையா! அது எப்பவோ என்ன விட்டு போயிருச்சு எதுவும் பேசாம வண்டிய எடு போகலாம்” என்று விரக்தியின் உச்சத்தில் பேசியவனை கண்டு மனதில் சொல்லாவென துயரம் ஏற்பட்டது, அமைதியாக வாகனத்தை கிளப்பி கொண்டு வீடு வந்து சேர
புன்னகையுடன் அவனை வரவேற்றார் துவராகவின் தாய் விசாலட்சி, கருணை ததும்பும் முகம் அன்பு என்றால் என்னவென்று புன்னகையாலேயே விளக்கி விடுவார் அதட்டி பேசாத ஜீவன் “வாப்பா விஷ்ணு தம்பி சொன்னான் நீ இன்னைக்கு வரேன்னு எப்டி இருக்க வீட்டுல எல்லாரும் சௌக்யம் தானே” என்று நலம் விசரித்தவர் “கைகழுவிட்டு வாப்பா சாப்பிடலாம்” என்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் சென்றுவிட
“ம்ஹுஹும்..” என்று மறுப்பாய் தலையாட்டியவன்“நான் தான் அம்மா மாதிரிஅவங்க பையன் எந்த நேரத்துல எப்டி பேசனும்னு எனக்கு தெரியாம இருக்குமா?” என்று விஷ்ணுவின் தோளில் கைவைத்து“என்னால நீ மனசு கஷ்டப்படுறத அனுமதிக்க முடியாது அத என்னால தாங்கிக்கவும் முடியது விஷ்ணு” என்றவன் “சரி உக்காந்து சாப்பிடு நா வந்துடுறேன்” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொள்ள, இவர்கள் இருவரின் பின்னே இரு ஜோடி கண்கள் நோட்டமிட்டு கொண்டே வருவதை இருவரும் அறியவில்லை
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவனை சாந்தபடுத்த முயன்று கொண்டிருந்தார் மூர்த்தி “விடுடா மகனே அதான் அவன் கல்யாணத்தை நிறுத்தி அவன தலையில தூக்கி வச்சு கொண்டாடுன குடும்பத்துல இருந்து மொத்தமா பிரிச்சு அவன் வாயலாயே ட்ரான்ஸ்பர் வேணும்னு கேக்க வச்சு ஊர விட்டே காலி பண்ணியாச்சில்ல அப்றம் ஏண்டா மகனே இப்டி டென்ஷனா இருக்க கவலைய விடுடா” என்று பழிவாங்கிவிட்ட மிகுதியில் தகப்பன்சாமியானவர் கூற
“லூசு மாதிரி பேசாதா ப்பா அவனுக்கு இதெல்லாம் சாதாரணம் இது பத்தாது இன்னும் நிறைய… அனுபவிக்கனும்! அவன் இங்க இருக்குற குடும்பத்த விட்டு பிரிஞ்சு போயிருக்குறது மட்டும் தானே உனக்கு தெரியும் இப்போ அவன் எங்க இருக்கான்னு தெரியுமா?” என்று கர்ஜித்தவன் “சென்னையில அவனோட அத்தை வீட்டுல இருக்கான் கூடவே என்னை அறைஞ்சு அவமான படுத்துனாலே அந்த கழுதையும் அங்க தான் இருக்கா விட கூடாது ப்பா நா பட்ட வேதனையையும் அவமானத்தையும் அவங்க ரெண்டு பேரும் அனுபவிக்கனும் சாதாரண வேதனையா இருக்க கூடாது நரக வேதனைய அனுபவிக்கனும் அப்ப தான் எனக்கு நிம்மதி” என்று குரோதம் கொப்பளிக்க கண்களில் அனல் பறக்கும் ரௌத்திரத்துடன் கூறியவன் கையிலிருந்த மது பாட்டிலை ஓங்கி வீச நாலாபுறமும் சில்லுசில்லாகா நொறுங்கி சிதறியது
“அவன் நிமிர நிமிர குனிய வச்சு குத்தனும் ப்பா ஒரு மூலையில அடங்கி உக்கார வைக்கணும் காக்கி சட்டை போட்ட திமிருல தான ஆட்டம் போட்டான் அந்த காக்கி சட்டைய வெறுத்து அந்த வேலையே வேணான்னு அவன் வாயால சொல்லணும், இப்போ அவன் உயிரா நேசிச்ச பொண்ணு அவனுக்கு இல்ல, அதே மாதிரி அவன் இன்னொரு உயிரா நேசிக்கிற போலீஸ் வேலையும் அவன விட்டு போகணும் அப்ப தான் எனக்கு நிம்மதி அதுக்கான வேலைய ஆரம்பிச்சுட்டேன்” என்று கூறி வெறிக் கொண்டவன் போல சிரித்தவனை கண்டு மூர்த்திக்கே உடல் நடுங்கியது
இரவு வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த விஷ்ணு ஜெகநாதனை எழுப்ப மனமில்லாமல் தயங்கி கொண்டே வைதேகிக்கு அழைப்பு விடுக்க முதல் அழைப்பு முழுவதும் சென்று நின்று போகவே மீண்டும் அழைப்பு விடுவத்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து பார்க்க
உறக்கம் வராமல் அவன் வருகையை எதிர்பார்த்திருந்தவள் போல கதவை திறந்தவளிடம் “சாரி.., மாமா இந்நேரம் தூங்கிருப்பாரு அதான்.. உன்ன எழுப்புனேன் என்னால உன்னோட தூக்கம் போயிருச்சு” என்று மன்னிப்பு வேண்ட
“நினைச்சு பாத்த வாழ்க்கையே போச்சு சாதாரண தூக்கம் தானே! போனா போகுது” என்று கூறியதும்இதயத்தில் ஊசிக்கொண்டு தைத்தார் போல சுருக்கென்று வலி ஏற்பட அசையாமல் நின்றான் விஷ்ணு
“உள்ள வாங்க விணு கதவ மூடனும்” என்றதும் உள்ளே வந்தவன் அவளிடம் பேச வேண்டி தயங்கி நிற்க “ப்ரஷப் ஆகிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”
“இல்ல எனக்கு வேணாம் நா வெளிய சாப்டேன்” என்று கூறியவனை உணர்ச்சியற்று பார்த்தவள் “இப்போல்லாம் சாதரணமா பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க போல, நீங்க கிளம்பும் போதே துவா அண்ணா எனக்கு போன் பண்ணி சொல்லிட்டாரு நா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்க வாங்க” என்று விட்டு சமையலறைகுள் சென்று விட
அறைக்கு சென்று உடைமாற்றி கொண்டு வந்தவன் “நீ சாப்டயா தேவிம்மா..”, அவன் குரலில் அத்தனை கனிவு
எத்தனை முறை அழைத்தாலும் தெவிட்டாத வார்த்தை அவனின் தேவி என்ற அழைப்பு ஆனால் இப்போது! கேட்க மனம் இடம் கொடுக்கவில்லை பரிமாறி கொண்டே “என்னோட பேர் வைதேகி”, தணிவான குரல் என்றாலும் அதில் அழுத்தம் நிறைந்திருந்தது “சரி நீ சாப்டயா” என்று மீண்டும் கேட்க
பதில் பேசாமல் சமையலறை செல்ல முற்பட்டவளின் கைபிடித்து நிறுத்தியவன்“சாப்ட்டயான்னு கேட்டேன்”
“ம்” என்று ஒற்றை முணுங்களை பதிலாக அளித்து விட்டு கிச்சனுக்குள் சென்று தஞ்சம் புகுந்து கொள்ள கடமைக்கு உண்டுவிட்டு எழுந்தவனை அறைக்குள் இருந்தவாறே பார்த்து கொண்டிருந்தவள் “என்னை சோதிக்கனும்ன்னே இருக்கீங்களா விணு நா அங்க இருந்தா சரியா சாப்பிட மாட்டீங்கன்னு தான் உள்ள வந்தேன் இப்டி பண்ணா நா என்ன பண்ண!” என்று கவலையுடன் நினைத்து கொண்டவள் அடுப்பில் பாலை காய்ச்ச தொடங்கினாள்
விஷ்ணு அறைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே பின்னோடு வந்து”பால்” என்று நீட்டியவள்,அவன் கையில் இருந்த மாத்திரைகளை கண்டு “அது என்ன மாத்திரை?” என்று கேட்க
“இது.. இது.. சாதரண தலைவலி மாத்திரை வேற ஒன்னுமில்ல” என்று பதட்டத்துடன் கூறியவன் வேகமாக மாத்திரைகளை விழுங்கி விட்டு “நா பால் கேக்கலையே?”
“சாதாரண மாத்திரை தானே அதுக்கு ஏ விணு இப்டி ரியாக்ட் பண்றிங்க” என்றவள் “நீங்க சரியாவே சாப்பிடல அதான் பால் கொண்டு வந்தேன் யாரும் அறைக்குறையா சாப்பிடுறது என்னோட மாமாக்கு பிடிக்காது இத குடிச்சுட்டு படுத்துக்கோங்க” என்று டம்ளரை டேபிள் மேல் வைத்துவிட்டு நகர முற்பட்டவளை
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வைத்தி ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம்” என்று இறைஞ்சுவது போல கேட்கவும் எதுவும் பேசாமல் உத்தரவுக்கு கட்டுப்பட்டவள் போல அமைதியாக நிற்க
“என்மேல கோபமா?”,என்று குற்றவுணர்ச்சியில் வார்த்தைகள் தயங்கி வெளி வந்தன
மெலிதான புன்னகை உதிர்த்தவள் “உங்க மேல கோபப்படுறதுக்கு நா யாரு? எனக்கு என்ன உரிமை இருக்கு! உரிமை உள்ளவங்க மேல தான் கோபம் வரும் அதான் எந்த உறவும் இல்லன்னு அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி செயல்ல கட்டிட்டு போனீங்களே” என்றவளின் குரல் கமரியது
“கோபமெல்லாம் இல்ல விணு, கூட்டி கழிச்சு நா ஒரு ஆன்சர் கொண்டு வந்தேன் ஆனா.. அது தப்பு நா போட்டது தான் சரின்னு நீங்க தப்பா ஒரு ஆன்சர கொண்டு வந்து சரின்னு நிரூபிச்சிட்டீங்க” என்றவளின் வதனத்தில் வேதனையின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது
அவள் வார்த்தைகள் அத்தனையும் உண்மை தானே என்றெண்ணியவன் “கணக்கு டீச்சர் கணக்கு பண்ணி தத்துவம் பேசுறீங்க, அப்றம் ஏ என்கிட்ட முன்ன மாதிரி பேச மாட்டிங்கிற? நா பண்ணது தப்பு தான் ஆனா.. நா எது பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்ன்னு உனக்கு தெரியாதா?, மத்தவங்க தான் என்ன புரிஞ்சுக்கல சரி, நீ கூடவா என்ன புரிஞ்சிக்கில! நா ஏ அந்த மாதிரி பண்ணேன்னு இப்போ என்னால சொல்ல முடியாது வைத்தி, ஆனா நா பண்ணது சரின்னு ஒரு நாள் கண்டிப்பா எல்லாரும் புரிஞ்சுப்பிங்க தயவு செஞ்சு நீ மட்டும் என்கூட பேசாம இருக்காத அத என்னால தாங்க முடியாதுடி” என்று வலியோடு வார்த்தைகளை வெளியிட
“நீங்க என்ன தான் காரணம் சொன்னாலும் அத என்னால ஏத்துக்க முடியாது விணு, காரணம் இருக்குன்னு இப்போ சொல்றிங்க! ஆனா என்ன காரணம்னுஎன்கிட்டயாவது அன்னைக்கு சொல்லிருக்கலாமே! உங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசவா போறேன், இது வரைக்கும் உங்க கிட்ட நா எந்த விஷயத்தையும் மறைச்சதில்ல ஏ தெரியுமா! என்னைக்காவது யோசிச்சிருக்கிங்களா, உங்களுக்கு நா எப்டின்னு தெரியல ஆனா.. எனக்குள்ள பாதி நீங்க! அந்த அளவுக்கு இப்பவும் உங்கள நேசிக்கிறேன்”
“இது பெரியவங்களா கூடி நமக்குள்ள உறவை ஏற்படுத்த முயற்சி பண்ணாங்களே அப்ப ஏற்பட்ட நேசம் இல்ல விணு சின்ன வயசுல உங்கள பாக்கும் போதெல்லாம் காரணமே இல்லமா வருமே ஒரு சந்தோஷம் அப்ப ஆரம்பிச்சது, அது காதல்ன்னு அப்ப எனக்கு புரியல! ஆனா.. அது தான் காதல்ன்னு புரிஞ்சப்ப என் மனச கொன்னுட்டிங்க அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது, என்ன பாத்து யாரும் வருத்தப்பட கூடாதுன்னு தான் நடந்து முடிஞ்சத மறந்த மாதிரி காட்டிட்டு இருக்கேன் ஆனா மனசுகுள்ள!”,
“உங்களுக்கு அதெல்லலாம் சொன்னா புரியாது விணு இப்போ கூட உங்க மேல எனக்கு கோபம் இல்ல வருத்தம் தான்! நா உங்க நம்பிக்கைக்குறியவளா இல்லாம போய்ட்டேனேன்னு, ஒருவேளை என்மேல நம்பிக்கை இருந்திருந்தா விஷயம் என்னன்னு என்கிட்ட சொல்லிருப்பிங்கல்ல” என்று பேசியவளின் விழிகளில் தானாக கண்ணீர் சொரிய முடிந்த மட்டு அழுகையை அடக்கியவளுக்கு தொண்டையில் வலி ஏற்படவே ஒருகட்டத்திற்குமேல் தாங்காது “எனக்கு தூக்கம் வருது நா போறேன்” என்று கூறிவிட்டு விறுவிறுவென சென்று விட்டாள்
அவள் பேசிய ஒவ்வொரு வரிகளும் கல்லில் செதுக்கும் உளியாய் நெஞ்சை பதம் பார்க்க ஊமையாய் கண்கள் கலங்கியவாறு நின்றிருந்தவன் “என்னால உன்ன மாதிரி மனச திறந்து எதையும் சொல்ல முடியாது தேவிம்மா உன்னோட மனசு எனக்கு தெரியும் தெரிஞ்சதுனால தான் ஒவ்வொரு நிமிஷமும் செத்துட்டு இருக்கேன், எனக்கு ஒண்ணுன்னா நீ தாங்க மாட்ட அப்டி இருக்குறப்போ எப்டி டா என்னால உண்மையான காரணத்தை சொல்ல முடியும், உண்மை தெரியும் போது நா உன்ன விட்டு ரொம்ப தூரம் போயிருப்பேன்” என்று நினைத்து கொண்டவன் துவாரகா கொடுத்த நீலநிற பைல் கண்ணில் பட கவனத்தை திசை திருப்ப வேண்டி பைலை பிரித்து படிக்க ஆரம்பித்தவனுக்கு அதில் இருந்த ஒவ்வொரு செய்தியும் திகைப்பில் ஆழ்த்தியது.
தொடரும்…
உண்மையில் நான் ஒரு கடிகாரம் ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல் சுத்துதுமா இங்கு என் வாழ்வும்
உண்மையில் என் மனம் மெழுகாகும் சில இருட்டுக்குதான் அது ஒளி வீசும் கடைசி வரை தனியாய் உருகும்
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி அதற்கு முகம் ஒன்றும் இல்லை அந்த கண்ணாடி நான்தானே முகமே இல்லை என்னிடம் தான்