அவள் அழுகை அடங்கும் வரை தலையை பரிவாக தடவிவிட்டவனிடம்“எப்டிடா உன்னால மட்டும் இப்டி இருக்க முடியுது யார்கிட்டயும் எதுவும் சொல்லாம இப்டி மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு!, எங்ககிட்ட சொல்லிருக்கலாமே ஏண்டா இப்டி பண்ண?” என்று ஆற்றாமையில் வெடிக்க
“பிழைக்கிற நிலைமையில இருந்தா சொல்லலாம் ஆனா முடியாதே சொல்லி என்ன பிரயோஜனம் என்னோட உயிர் போறது போறது தானே! என்னோட நிலையை சொல்லி உங்கள வருத்தப்பட வைக்க எனக்கு விருப்பமில்ல வைசு அதான் சொல்லலை”
“எப்டி ஆச்சு நல்லா தானே இருந்த உனக்கு போய் எப்டிடா என்னால இன்னும் நம்ப முடியல”
“நம்பி தானே ஆகணும் கையில ஆதாரத்தை வச்சுக்கிட்டு இப்டி சொன்னா எப்டிம்மா என்று இயல்பாக பேசியவன் ட்ரைனிங் பீரியட் ஞாபகம் இருக்கா” என்று கேட்க
“ம் அதுக்கு என்ன நல்லாவே ஞாபகம் இருக்கு நீயும் அந்த குரங்கு துவாரகாவும் பண்ண அலப்பறைய மறக்க முடியுமா?, ஆனா… அதுக்கும்.. இதுக்கும்.. என்னடா சம்பந்தம்!”
“சம்பந்தம் இருக்கு அங்க ஆரம்பிச்ச பிரச்சனை தான் இப்போ இந்த அளவுக்கு வந்து நிக்கிது! சாதாரண அடின்னு கேர்ளஸா இருந்துட்டேன்!, பின் தலையில அடிப்பட்டதுனால அப்பவே பாத்திருந்தா எந்த பிரச்சனையும் வந்துருக்காது, ட்ரீட்மெண்ட் எடுக்காம விட்டத்தால அடிபட்ட இடத்துல ப்ளட் சர்குலேஷன் ஸ்டாப் ஆகி முக்கியமான நரம்புல வீக்கம் ஏற்பட்டு இப்போ டேஞ்சர் லெவல்ல இருக்கு ரொம்ப நாள் கழிச்சு தான் எனக்கே தெரியும்!, அதுவும் கல்யாணத்துக்கு முதல் நாள் ஈவ்னிங் தான் டாக்டர் எனக்கு கால் பண்ணி சொன்னாரு” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறியவன்
“எனக்கு ஆக்சிடன்ட் ஆனது உனக்கு தெரியும் தானே?” என்று கேட்க
“ம் தெரியும் அப்போ அங்க தானே இருந்தேன்” என்றாள் கவலை தேய்ந்த குரலில்
“அப்போ தலையில அடிபட்டதுனால ஸ்கேன் பண்ணி பாத்துருக்காங்க அப்ப தான் தெரிஞ்சது இந்த மாதிரின்னு என்கிட்ட சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல வைசு அந்த நிமிஷமே என்னோட உயிர் போயிர கூடாதான்னு.. இருந்துச்சு! என்ன நம்பி ஒருத்தி காத்திட்டு இருக்காளே அவளுக்கு என்ன பதில் சொல்லறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்
யோசிக்க கூட டைம் இல்ல! கல்யாணத்த நிறுத்த சொல்லி நேரா போய் அப்பாகிட்ட சொன்னேன் ஆனா அவரு கேக்கல கல்யாணம் சொன்னபடி நடக்கணும்னு அழுத்தம் திருத்தமா சொல்லிட்டாரு, சரி வைத்திகிட்ட எடுத்து சொல்லி எப்டியாவது நிறுத்திறலாம்னு அவகிட்ட பேச போனா அவள பாக்கவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க, நீங்க முணுபேரும் கல்யாணத்துக்கு வரல அந்த சமயத்துல என்ன பண்றதுன்னு தெரியாமா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தேன் அதனால தான் நானே கல்யாணத்தை நிறுத்த வேண்டியதா போச்சு அந்த நேரத்துல வைத்தியோட முகத்தை பாக்கணுமே அந்த பார்வை இப்போவும் என்னக்கு குற்றவுணர்ச்சிய கொடுக்குது” என்று அன்று நடந்த நிகழ்வு அத்தனையும் கண் முன் நிழற்படமாய் விவரித்து கூற
“நா என்னடா பண்றது அம்மாவுக்கு ரொம்ப முடியல அதனால அப்பாவ மட்டும் அனுப்பி வச்சுட்டு நா அம்மா கூட இருக்க வேண்டியதா போச்சு, விஜியால வர முடியல ரொம்ப முக்கியமான கேஸ்ல தீவிரமா இருந்தான், துவாரகேஷ் அவனுக்கும் அதே தான் லீவ் தரலன்னு சொல்லிட்டான், ஆனா இப்டி ஒரு நிலமைன்னு சொல்லிருந்தா கண்டிப்பா நானாவது வந்துருப்பேன்டா” என்று இயலமையுடன் கூறினாள்
“ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் வைசு என்ன மாதிரி நிலைமை யாருக்கும் வர கூடாது சொந்த குடும்பமே என்ன விரோதி மாதிரி பாக்குறாங்க, தேவிம்மா என்னடான்னா துரோகம் பண்ணவன் மாதிரி பேசுறா! அத்தை சொல்லவே தேவையில்ல சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் வர்த்தையாலேயே காயபடுத்துறாங்க! கல்யாணத்த நிறுத்துனத்துக்கு காரணம் என்னன்னு அவ கேக்கிறா? எப்டி சொல்லுவேன்! என்னோட நிலைமைய?
இப்போதைக்கு எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் மாமா மட்டும் தான்! அவர் தான் என்ன நம்புறாரு, ஏதாவது காரணம் இருக்கும் காரணமில்லாம எதுவும் செய்ய மாட்டேன்னு என்மேல முழுசா நம்பிக்கை வச்சுருக்காரு நா இங்க ட்ரான்ஸ்பர் ஆன விஷயத்தை சொன்னதும் வீட்டுல வந்து தங்க சொன்னதே அவர் தான்
அத்தைக்கு எதுவும் தெரியாது அவங்க கோபம் கொஞ்சமாவது குறையும்ன்னு அவரு நினைச்சிறுக்காரு ஆனா! அவரு நினைச்சத்துக்கு நேர்மாற அத்தை நடந்துகிறாங்க அத தான் என்னால தாங்கிக்க முடியல சொந்தம் பந்தம்ன்னு எல்லாரும் இருந்தும் அனாதை மாதிரி இருக்குறேன் சில சமயம் நமக்கு யாரும் இல்லயேன்னு தோணும் அந்த நேரத்துல மனசு ரொம்ப வலிக்கும் வைசு” என்றவனின் குரல் உடைந்து உடல் குலுங்கியது
எத்தனை கம்பிரமாக வலம் வருபவன் எதற்கும் கலங்கியது இல்லை ஆனால் இன்று என எண்ணி மருகியவள் “ஏண்டா இப்படியெல்லாம் பேசுற! உனக்கு நாங்க இருக்கோம் இன்னொரு முறை அனாதைன்னு சொல்லாதடா ரொம்ப கஷ்டமா இருக்கு நீதான் என்னோட ரோல் மாடல் தெரியுமா? அப்பா அம்மாகிட்ட அடிக்கடி சொல்லுவேன் விஷ்ணு மாதிரி தைரியமா கெத்தா இருக்கணும் யாருக்கும் எந்த சூழ்நிலையிலயும் பணிஞ்சு போக கூடாதுன்னு பெருமையா சொல்லுவேன், இப்போ நீயே இப்டி பேசுற!” என்றவள் அவனது கண்ணீரை துடைத்து விட்டு தன் விழி நீரையும் துடைத்து கொண்டு
“நீ சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்ல நாளைக்கு நாம வேற டாக்டர் கிட்ட போலாம் எனக்கு தெரிஞ்சவரு தான் அப்பாவோட பிரெண்ட் அவருக்கிட்ட கன்ஸிடர் பண்ணலாம்” என்று கூற
“அதெல்லாம் வேணாம் வைசு இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்புறோம் சோ அங்க போய் பாத்துக்கலாம் நானே டாக்டர பாத்து பேச வேண்டியது இருக்கு! என்றான் சாவதீனமாக
“விஜிக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று தயங்கி கொண்டே கேட்க
“இல்ல தெரியாது! துவாரகாவுக்கு மட்டும் தான் தெரியும் வைத்திக்கிட்ட சொல்லிருன்னு சொன்னான் ஆனா.. என்னால தான் சொல்ல முடியல, சொன்னா என்ன நடக்கும்னு நினைச்சு பாக்கவே பயமா இருக்கு வைசு நா இருக்கும் போது அவ வேதனைபடுறத என்னால பாக்க முடியாது” என்றவன் “எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும் பண்ணுவயா?” என்று கெஞ்சலாக கேட்க
“சொல்லு என்ன பண்ணனும்!”
“தேவிம்மாவ நீ தான் கன்வைன்ஸ் பண்ணனும் கல்யாணத்துக்கு, அப்பா என்னையும் வர சொல்லிருக்காரு எம்மேல அவருக்கு கோபம் இருந்தாலும் என்ன வர சொல்லிருக்காருன்னா.. கண்டிப்பா கல்யாணத்துக்கு அவள ஒத்துக்க வைக்கிற விஷயமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்?, சோ உன்னோட உதவியும் எனக்கு இதுல தேவை அவளுக்கும் குடும்பத்துல இருக்குறவங்களுக்கும் நா ஏமாத்துனவனாவே இருந்துட்டு போறேன்” என்று கசங்கிய முகத்துடன் கூற
வருத்தம் கொண்டு அவனை பார்த்தவள் “சரி எப்ப ஊருக்கு போற!”
“போற இல்ல போறோம் எல்லாரும் தான்! நீ நான் விஜி துவா அப்றம் சஞ்சு எல்லாரும் கண்டிப்பா வரணும் இந்த வருஷம் சித்திரை திருவிழா மறக்க முடியாத ஒன்னா இருக்கணும் எல்லாரும் சேர்ந்து இருந்தா எனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன், நாளைக்கு டிக்கெட் புக் பண்ணிருவேன் சோ பேக் பண்ணி ரெடியா இருங்க நாளைக்கு ஈவ்னிங் நானே எல்லார்கிட்டயும் சொல்லிக்கிறேன்” என்றவன் சற்று தணிவான குரலில் “அப்றம் நாம ரெண்டுபேரும் பேசினதா யார்கிட்டயும் சொல்லிடாத வைசு ரகசியம் ரகசியமாவே இருக்கணும்” என்று திண்ணமாய் கூறிக்கொண்டிருக்கும் போதே வெளியில் சென்ற விஜயன் அறைக்குள் நுழைய இருவரும் அவசரமாக கண்களை துடைத்து கொண்டு இயல்பாக இருப்பது போல அவனிடம் காட்டி கொள்ள முற்பட்டனர்
இருவரின் செயலையும் கண்டு புரியாத பார்வை பார்த்த விஜயன்”எனக்கு தெரியும் நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருந்திங்கன்னு” என்றதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து விழிக்க விஷ்ணுவின் இதய துடிப்போ பன்மடங்கு அதிகரித்து திக்திக்கென்று அடித்து கொண்டு முகத்தில் வியர்வை நாளங்கள் சன்னமாக நீரை சொட்டின.