குழந்தை சோபாவில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தவள், நேராக குழந்தையிடம் சென்று,
“வா பிரஸ் பண்ணிட்டு, குளிக்கலாம்”, என்று சொல்லி அவளைத் தூக்கினாள்.
அவளோ “கீழே தோட்டத்தில் குளிக்கலாமே” என்றது மழலை குரல் மாறாமல்.,
குழந்தையை தூக்கிக்கொண்டு பின்புறம் தோட்டத்திற்கு சென்றாள்.
பின்பு கீழே இருந்த பேஸ்ட் எடுத்து கையை வைத்து குழந்தைக்கு பல் விலக்கி, அவளை குளிக்க வைத்து உடைமாற்றியவள்.,
“சமத்தா உட்கார்ந்து சாப்பிடு, அம்மா ஈர டிரஸ் மாற்றிட்டு வந்துடறேன்”, என்று சொன்னாள்.
சரண் அம்மா தான், “சாப்பிட்டு போயேன் மா” என்று சொன்னார்.
அவளோ “இல்ல நீங்க நிலாக்கு குடுங்க, நான் டிரஸ் எல்லாம் மாத்திட்டு வரேன், எனக்கு இப்ப பசிக்கல, கொஞ்ச நேரம் ஆகட்டும் அப்புறம் சாப்பிட்டுகிறேன்”, என்று சொல்லி விட்டு மாடிக்கு சென்றாள்.
அவரும் சரணை பார்த்து “கோபப்படாதடா, போ போய் பேசி சமாதானப்படுத்து., நாளைக்கு தீபாவளி வச்சிட்டு இன்னும் இப்படி இருந்தா எப்படி”, என்றார்.
அவனோ சிவாவிடம், “எங்கடா போனீங்க”, என்று கேட்டான்.
“யாருக்கு தெரியும் வானு கூப்ட்டா, ஒரு இடத்துல இறங்குனா, என்ன விட்டுட்டு அவ மட்டும் விறு விறுன்னு நடந்து போனா, திரும்பி வந்து வா போவோம் ன்னு சொன்னா, வந்தேன்”, என்றான்.
“கோயிலுக்கு ஏதும் போனாளா”, என்று கேட்டான்.
“கோவிலுக்கு எல்லாம் இல்ல, ஆத்தங்கரை பக்கம் இருக்க பார்க்குல போய் நின்னுட்டு இருந்தா, நான் வெளிய நின்னுட்டு இருந்தேன். அவ உள்ள நடந்துகிட்டு இருந்தா, என்ன டென்ஷனோ வீட்ல நடக்கறதுக்கு இடம் இல்ல ன்னு அங்கே போய் நடந்து இருக்கா”, என்று சொன்னவன்,
‘அப்பாடி அவ சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லிட்டேன்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
வண்டியில் வரும் போது அவளோ, “டேய் நான் சொல்றத ஒழுங்கா கேளு, உங்க அண்ணன் கண்டிப்பா கேப்பாரு, எங்க போனா, ஏது போனான்னு, நான் சொல்ற மாதிரியே சொல்லணும்”, என்று சொல்லிக் கொடுத்து தான் கூட்டி வந்து இருந்தாள்.
“நீ போய் சாப்பிடு” என்று சொன்னவன் எழுந்து நிற்க,
அவன் அம்மா, “இன்னொரு காபி தரவா”, என்று கேட்டார்.
“நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன், முதல்ல உங்க மருமகள் கிட்ட போய் பேசி பார்க்கிறேன், மலை இறங்கலைன்னா என்ன பண்ண ன்னு எனக்கே புரியல போறேன்”, என்று சொல்ல,
இங்கிருந்து சிவாவோ “பேசாம கால்ல விழுந்துடேன், அது நல்ல ஐடியாவா இருக்கும்”, என்று சொன்னான்.
அவனைத் திரும்பி பார்த்து முறைத்தவன், “நான் உனக்கு சாபம் விடுறேன் டா., பாரு உனக்கு வரப்போற பொண்டாட்டி கிட்ட, நீ அப்பப்ப காலில் விழலையாக்கும், வேணா பாரு”, என்று சொல்லி விட்டு சென்றான்.
இவனும் ‘நந்தினி காலில் விழ வைப்பாளா’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.,
‘அப்படிலாம் ஆகாது’, என்று யோசித்தவன், ‘ஆத்தாடி அவளும் கொஞ்சம் டெரர் பீஸ்தான, சரி பாப்போம் சமாளிக்கலாம்., அண்ணணையே சமாளிச்சுட்டோம், இதெல்லாம் ஜூஜிபி’ என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
குழந்தைக்கு அவன் அம்மா ஊட்டிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு குழந்தைக்கு அருகில் உட்கார்ந்து அவனும் உணவை எடுத்துக் கொள்ள தொடங்கினான்.
அறைக்கு வந்த சரணோ, ‘பேசாம இவ கால்ல விழுந்துற வேண்டியது தான் சிவா சொன்ன மாதிரி’ என்று நினைத்தான்.
‘சேச்சே,இவ அந்தளவுக்கு டெரர் கிடையாது, ஒரு தடவ பேசி பார்ப்போம்’ என்று நினைத்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தான்.
அவளோ உடையை மாற்றி விட்டு, ஈர உடையும், இருந்த அழுக்கு எல்லாம் எடுத்து மிஷினில் போட்டுக் கொண்டிருந்தாள்.
மிஷின் ஆன் பண்ணிக் கொண்டிருக்க வந்தவன்., அவளை பின்புறம் நின்றபடி வேகமாக அணைத்துக் கொண்டான்.
மெதுவாக அணைக்காமல் இறுக்கமாக அணைத்தவன், அவள் தோளில் தன் முகத்தை சாய்த்தபடி, “மது ப்ளீஸ் டா, நான் வேணும்னே சொல்லல, ஒருவேளை அம்மா அப்பா க்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கலாம் அப்படின்னு தான் சொன்னேன்,
அம்மா அப்பா ஒன்னும் அந்த. பொண்ணு எடுக்கறதுக்கோ இல்ல, அந்த பொண்ண கல்யாணம் பண்ணதுக்கோ, எதிர்ப்பு தெரிவிக்கிறவங்க இல்ல, உனக்கு தெரியும்ல”, என்று சொன்னவன்.
“அது மட்டும் இல்லாம லைஃப்ங்கிறது, அவங்க அவங்களுக்கு பிடிச்சு வாழனும், அப்படின்னா தான் விட்டுக் கொடுத்துப் போக முடியும், உன்ன கம்பெல் பண்ணி தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இல்லன்னு சொல்லல, ஆனா எனக்கு ரொம்ப புடிச்சி இருந்ததுனால தான் என்னால உன்கிட்ட எந்த அளவுக்குனாலும் விட்டுக் கொடுத்து போக முடியும்,
இப்ப சொன்னா காலில் கூட விழுந்துருவேன்”, என்று சொன்னாள்.
அவனை திரும்பிப் பார்த்து அவன் முகத்தையே பார்க்க, அவனும் “நிஜமா மது” என்று சொன்னான்.
வாய்க்குள் முணுமுணுத்த படி திரும்பிக்கொண்டாள்.
“இப்ப தோப்புக்கரணம் போடவா”,என்று கேட்டான் .
தலையை மட்டும் திருப்பியவள்.,
அவன் கைகளுக்குள் இருந்து நகன்று செல்ல முயன்றாள், அவளால் முடியவில்லை,
அவனும் அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்தான்.
‘பரவாயில்லையே இந்த பஞ்சாயத்து தலைவருக்கு இந்த அளவுக்கு கொஞ்ச தெரியுதே, இந்த மனுஷன் நம்மள எப்படி கொஞ்சினதே கிடையாதே, சரி கொஞ்சட்டும் கொஞ்ச நேரத்துக்கு’, என்று அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனும் அவளை மடியில் அமர்த்தியபடி, அங்கிருந்த இருக்கையிலே அமர்ந்தான்.
பின்பு கொஞ்சலும் மிஞ்சலும் ஆக, கெஞ்சி கொஞ்சி மிஞ்சி அவளை சமாதானம் செய்து, பின்பு குளித்து உடைமாற்றி கீழே வர நேரம் பத்தரையை கடந்து இருந்தது,
அப்போதும் யோசனைகளோடு சுத்தி கொண்டிருந்தாள். ஆனால் கோபம் எல்லாம் இல்லை, என்பது அவள் முகத்திலே தெரிந்தது.
அதையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டவன், கீழே வந்து அவளைப் பிடித்து வைத்து அவளுக்கும் உணவு வைத்துக் கொடுத்து, தானும் உணவு உண்டான்.
சரணின் அம்மா தான், ‘இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாகிருவா’, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
‘இவனும் வாயை வச்சுட்டு சும்மா இருந்தா தானே’ என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே கிச்சனுக்குள் சென்றார்.
சரணின் அப்பாவும் சென்று, “என்ன சரியாயிட்டாங்களா” என்று கேட்டார்.
“இல்லை இல்லை இப்பதான் உங்க புள்ள கால்ல விழுந்திருப்பான் ன்னு நினைக்கிறேன், கொஞ்சம் மாறி இருக்கா, இன்னும் முழுசா வரணும், இன்னும் ரெண்டு தடவை போய் கால்ல விழுந்துட்டா சரியாகிருவா” என்று சொன்னார்.
“இவனுக்கும் வாய் கொஞ்சம் ஜாஸ்தி தான். அப்படி என்ன கோவம் , அப்படி என்ன பேச்சு”, என்று சொன்னவர்.
” சரி சரி, சரியாகிட்டா சரி, நாளைக்கு தீபாவளியை தீபாவளி மாதிரி கொண்டாடணும்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
சரணின் அம்மாவோ, “மது வீட்டுக்கு சொல்லிருங்க, மது அம்மா இன்னும் இரண்டும் பிரச்சனைல இருக்குன்னு நினைச்சிட்டு இருப்பாங்க”, என்று சொன்னார்.
“சரி சரி சொல்லிடறேன்”, என்று சொல்லிவிட்டு அவர் வெளியே கிளம்பி சென்றார்.