அவனும் “மது சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காத மது, அவங்க எல்லாம் பயப்படுறாங்க, பெயின் எதுவும் வந்து விடக்கூடாது ன்னு பயப்படுறாங்க, நீ அங்க தனியா வேற இருக்கனும் யோசிச்சு பாரு”, என்று சொன்னான்.
இவள் பதில் அப்போதும் எதுவும் சொல்லாமல் இருக்க “மது” என்று அழுத்தி அழைக்க, எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
அவனும் எவ்வளவோ பேசி பார்த்தும் அவளிடமிருந்து ஒரு வார்த்தை கூட பதில் வரவில்லை,
பின்பு எதுவுமே சொல்லாமல் அமைதியாக படுத்திருந்தவன், “காலையில் நீ என்கூட கெளம்பு, நீ இங்க சரி வர மாட்ட, சொன்ன பேச்சு கேட்க மாட்ட, நீ கிளம்பி என்கூட வர்ற”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
மெதுவாக சிரித்துக் கொண்டவள் அப்போதும் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டாள்.
அவனுக்கு தான் ‘இவ கோவத்துல மலையேறி இருக்காலே, இவளை எப்படி மலை இறக்க” என்று யோசனையோடு அருகில் இருந்தவன் சற்று நேரத்தில் அதை யோசனையோடு கண்ணுறங்கி விட்டான்.
அவளும் உறங்கிவிட காலையில் இவள் எழுந்து செல்வதற்கு சற்று தாமதமாகியது, ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் “கண்டிப்பாக போக வேண்டுமா”, என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
மதுவின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் காலையிலேயே தகவல் சொல்லப்பட அவர்களும் வந்து அமர்ந்திருந்தனர்.
இவனோ “இங்க ஓவர் செல்லம், மது தெரியாமல் நிறைய வேலை பார்ப்பா, இது செட் ஆகாது, நான் அங்கு கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
வேறு வழி இன்றி அனைவரும் சரி என்று சொல்லி இருந்தனர்.
அவள் எழுந்து வரும்போது இவன் குளித்துக் கிளம்பி ரெடியாக இருந்தான்.
இவளோ எதுவும் சொல்லாமல் கிச்சனுக்கு சென்றவள், தனக்கென காப்பியை கலக்கி கொண்டு வந்து ஹாலில் ல் அமரந்தான்.
அவனும் “சீக்கிரம் குடிச்சிட்டு கிளம்பு போலாம்”, என்று சொன்னான் .
இவளோ “நான் வரல” என்று அவனிடம் பிகு செய்து கொண்டிருந்தாள்.
அதே நேரம் அதிகாலையிலேயே கோச்சிங் கிளாஸில் பரிட்சைக்கு சென்றிருந்த சிவா வந்து சேர,
அவனிடம் வேறு விசாரணை நடந்தது. “ஏன்டா ஐஸ்கிரீம் கேட்டா வாங்கி கொடுக்கிற”, என்று கேட்டான் .
“ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரலன்னா பேச மாட்டா, பேபிக்கு ஆசைப்பட்டதெல்லாம் சாப்பிடாட்டி, அது பிறக்கும் போது காதுல நீர் வடியும் ன்னு சொல்லும் போது என்ன செய்ய, அதனால வாங்கி கொடுத்தேன், ஏன் என்ன ஆச்சு”,என்று கேட்டான் .
அவனும் “அவ மிட்நைட் ஐஸ்கிரீம் சாப்பிட்டாரா, இதெல்லாம் நல்லது இல்லை என்று சொன்னால் மூஞ்சியை தூக்கிட்டு உட்கார்ந்து இருக்கா, இப்ப வரைக்கும் பேச மாட்டேங்குறா”, என்று சொன்னான்.
சிவா இவள் முகத்தை பார்க்க இவளோ லேசான சிரிப்போடு அமர்ந்திருந்தாள், “நீ தானே ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணின, அப்ப நீ தான் கஷ்டப்படனும், நான் என்ன பண்ண முடியும்”,என்று சொல்லிவிட்டு சிவா போக,
“டேய் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்க மாட்டேன் ன்னு சொல்லு”, என்றான்.
“அதெல்லாம் கிடையாது, அவ எது கேட்டாலும் வாங்கி கொடுப்பேன்”, என்று சொல்லிவிட்டு போனான்.
“இது இரண்டையும் திருத்தவே முடியாது டா” என்று சரணின் அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
மதுவின் அம்மாவும் “அதேதான்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அதே நேரம் அவன் “இங்க பாரு மது, எனக்கு போய் வொர்க் இருக்கு கிளம்பு”,என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவளோ “ஒரு 2000 ருபீஸ் தாங்க”, என்றாள்.
“எதுக்கு” என்று கேட்டான்.
“தாங்கன்னு சொன்னா தரணும்”, என்று கேட்க,
மதுவின் அப்பாவோ, “நான் தர்றேன் மது, நீ கிளம்பு”,என்றார்.
“இருக்கட்டும் மாமா “, என்று சொன்னவன்,
அவனும் தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தான்.
அவளோ சிவா என்று அழைத்தால், “நான் சொன்ன மாதிரியே நீ ஐஸ்கிரீம் வாங்கி தந்ததால், உனக்கு ஐஸ்கிரீம் காசு போக, வட்டியும் போட்டு தந்துட்டேன் எப்படி, சரி தானா”,என்று கொடுத்துவிட்டு இவள் கிளம்புவதற்காக சென்றாள்.
சரணோ “அடிப்பாவி” என்று சொல்லிவிட்டு, “டேய் என்னடா பண்ணிட்டு இருக்க”, என்றான்.
“எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்தா, நான் உனக்கு வட்டியும் முதலுமா காசு தருவேன்னு சொன்னா, அதைத்தான் இப்ப தந்துட்டு போறா, அவ கேட்டு நான் வாங்கி கொடுக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன், அவ கேட்கிறது வாங்கி கொடுப்பேன், நீ வேற மது சாப்பிடறதே கண்ணு வைக்காத, கேட்குறத வாங்கி கொடு”, என்று சொன்னான்.
‘அடப்பாவி’ என்ற எண்ணத்தோடு இவன் வாயில் கை வைக்காத குறையாக சிவாவை பார்த்துக் கொண்டிருந்தான்.
“நல்லா பாத்துக்கோ, ஒழுங்கா பாத்துக்கோ”, என்று தன் அண்ணனுக்கு அறிவுரை சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தான்.
மதுவும் மனதிற்குள் குதூகலமாக இருந்தாள், ‘எப்படியோ ஒரு வழியா இவனை அடிச்சு புடிச்சு கிளம்பி இங்க வந்து சேர்ந்தாச்சு’ என்று எண்ணத்தோடு,
அங்கிருந்து வந்த பிறகு, அவ்வப்போது சிவா போன் செய்து “அவ கேட்குறத வாங்கி கொடுக்கிறீயா, இல்ல சாப்பிட கூடாது ன்னு கண்டிஷன் போடுறீயா”, என்பான்.
“3வயசுல இருந்தே நாங்க ப்ரண்ட்ஸ், நீ நல்ல பார்த்துப்ப ன்னு நினைச்சு தான், அவ கிட்ட சண்டை போட்டு, அடி வாங்கி எல்லாம் உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்கு, பத்திரமா பார்த்துக்கோ”என்றான்.
இவர்களது நட்பை பார்த்து சிறிய பொறாமை கூட வந்தது.
அவன் சொன்னது போலவே ஒன்பதாவது மாதம் ஆரம்பத்திலேயே கொண்டு போய் அம்மா வீட்டில் விட்டு விட்டான்.
இரண்டு வீடும் பக்கம் என்பதால் எந்த வீட்டில் அவளுக்கு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வீட்டில் இருக்கட்டும் என்று சொல்லிவிட,
பகல் முழுவதும் சரண் வீட்டில் அரட்டை அடித்துக் கொண்டு சிவாவின் படிப்பை பார்த்துக் கொண்டிருப்பவள்,
மாலை நேரத்திற்கு மேல் அம்மா வீட்டுக்கு சென்று விடுவாள், மறுபடியும் காலையில் வருவாள்.
இப்படியே நாட்களை கடத்த, டாக்டர் கொடுத்த நாளுக்கு பத்து நாளைக்கு முன்பே சரணின் மகள் வந்து பிறந்தாள்.
அதன் பிறகு இரு வீட்டிற்கும் அவளை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.
மதுவின் வீட்டில் இருந்ததால், பகலில் சிவா அங்கு போய் குழந்தையை பார்த்து வருவான்.
அவன் எப்போதெல்லாம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் சென்று பார்த்துவிட்டு வருவது சிவாவின் வழக்கமாக இருந்தது.
சரணும் வந்திருந்து பார்த்து விட்டு அதன் பிறகு தான் தன்னிடம் சென்றான்.
மூன்று மாதங்கள் நன்றாக கவனித்து , அவளுக்கும் குழந்தையை கவனிக்கும் முறையை பழகிவிட்டனர்.
அதன் பிறகு அவள் அங்கிருந்து கிளம்பி அவன் வேலை செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.
அங்கு வந்த பிறகு அவளுக்கு ஆளாளுக்கு குழந்தையை பார்த்துக் கொள்ள உதவி செய்தாலும்., வீட்டினரும் அவ்வப்போது வந்து உதவி செய்ய தவறுவதில்லை.
நாம் வாழும் வீட்டில் எத்தனை
வசதி இருக்கின்றது என்பதை விட
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம்
என்பதே முக்கியம்..!